--2014-05-22 5:49 GMT+02:00 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
...
பசவ புராணம் என்ற பெயரில் தெலுங்கில் பெரிய புராணம் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. திருப்பதி வேங்கடவன் பல்கலைக்கழகப் பேராசிரியர் செயப்பிரகாசர் அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். படி ஒன்று என்னிடம் தந்தார்.உங்கள் தொடர் முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்.பசவ என்பதன் பொருள் என்ன?தெலுங்கிலும் புராணம் என்றேதான் புராணங்களை அழைப்பது வழக்கமா? இது தெலுங்குச் சொல்லா என அறிந்து கொள்ள ஆவல்.சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
1) “கோகழி”
என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது.
இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும்
சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
2) தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3) ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது? திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத ஊரை சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றது என்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.
4) முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும்.
திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள்
அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக்
கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத்
தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது
நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல்
தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள்.
தொண்டியிற் கழிகள் கிடையாது.]
கழியும்
துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான்
கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி
என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக்
கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை
போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும்.
கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.
5) திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை)
கோகழிக்கரசை (பண்டாய நான்மறை)
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன. இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.
6) தங்களின் கூற்று:
“குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில்
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”
எனது கருத்து:
எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?
ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும் இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.
7) தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “
எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”
இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
“சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும். (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே.
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.
8) தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர்
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:
61....புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
62....சிவனென யானுந் தேறினன் காண்க
63....அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
64....குவளைக் கண்ணி கூறன் காண்க
65....அவளுந் தானும் உடனே காண்க
66....பரமா னந்தப் பழங்கட லதுவே
67....கருமா முகிலின் தோன்றித்
68....திருவார் பெருந்துறை வரையி லேறித்
69....திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
70....ஐம்புலப் பந்தனை வாளர விரிய
71....வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
72....நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள். இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார். “கருமா முகிலின் தோன்றி - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.
9) தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
எனது கருத்து:
மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
அன்பு மிகு நாக இளங்கோவன் அவர்களுக்கு,அடிப்படையில் நா ம் பரிமாறிக்கொண்ட மடல்களில்(1)நான் திருவாசக நூலில் வந்துள்ள வரிகளைத்தான் காட்டியுள்ளேன்(2)அதற் கு தமிழ் மொழியில் உள்ள பொருள்களை த்தன் வைத்துள்ளேன்(3)மாணிக்க வசகரைப்ப்ற்றி நான் பலர் வழி அறிந்துள்ள செய்திகளை (புராணக்கதைகள் என சொல்லவில்லை)எதனையும் இணை த்துப்பார்காமல் அதாவது முன் சாய்வு எதுவும் இல்லாமல் உள்சான்று மட்டும் கொண்டு என் அரிவில் நோக்கியது
உங்கள் கருத்தில் உள்ளவை(1)ஐயம்பெல்லாரி மாவட்டம் அற்பன அ ல்லி தாலுக்க வில் உள்ள கோகழி எனும் இடப்பெயரில் உள்ள கடைசி எழுத்து, வரிவடிவத்திற்கும் ஒலி வடி வத்திற்கும் கற்பு நிலை அற்ற ஆ ங்கிலத்தி ல் உள்ளதால் வந்துள்ள ஐயம் மட்டுமே(2) தமிழ் மொழியில் நான் காட்டிய பொருளல்மால் அதே சொற்களுக்கு வேறு உள்ள பொருள் கொள்ளுதல்வரை, மிசை,விற்று ஆண்ட என்பன சில (இதுவும் ஓர் வகையில் ஐயப்பாடே)(3)மாணிக்க வா சகரைப்ப்றி முன்பே அறிந்த செய்திகளை உண்மை எனு ம் அடிப்படையில் நோக்கியவைபொதுவான கருத்துஆய்வு என வந்தால்எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎப்பொருள் எ த்தனமைதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎனும் கருத்தில் ஆய்தலில் தவறொன்றுமில்லை எனக் கொள்கிறேன்ஒர் எடுத்துக்காட்டுசேக்கிழார் மிகப்பெரிய புராண ஆசிரியர் நான் மிகவும் மதிப்பவன் தான்ஆனால் நான் கற்கும் பொது என அறிவுக்குப் சரிய்கப்பட்டதை ஆ னால் அந்த ஆசிரியர் தன் விள க்க ம் தவறா கப்பட்டதை ஏற்க மறுக்கின்றதுகாண்ககலலாடம் மதுரையில் பெரிய கோயிலாம் ஆலவாயில் சுற்றி உள்ள கோயில்களை நிரல் படுத்துகின்றது அதனில் ஒன்று நள்ளாறு(1)வடதிரு ஆலவாய் திருநடு வூர்வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரைபஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்(து) அமைத்தசென்னி மாபுரம் சேரன் திருத்தளி 25கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறைவிண்ணுடைத்துண்ணும்கண்ணிலிஒருத்தன்மறிதிரைக்கடலுள்மாவெனக்கவிழ்ந்தகளவுடற்பிளந்தஒளிகெழுதிருவேல்பணிப்பகைஊர்திஅருட்கொடிஇரண்டுடன் 30முன்னும்பின்னும்முதுக்கொளநிறைந்தஅருவிஅம்சாரல்ஒருபரங்குன்றம்சூழ்கொள இருந்த கூடலம் பெருமான்(2)தேவாரத்தில் அடுத்தடுத்து உள்ள தல ங்களை சேர்த்தே ஓர் பதிக ம் பாடியவை உண்டு1.4 திருப்புகலியும்-திருவீழிமிழலையும்1.6 திருமருகலும்-திருச்செங்காட்டங்குடியும்3.90 திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்6.073 திருவலஞ்சுழியும்-திருக்கொட்டையூர் கோடீச்சரமும்என நான்கு உள்ளன அவ்வழியில்1.7 திருநள்ளாறும்-திருஆலவாயும் அருகருகுள்ள தல ங்களாகும்(3)3.87.திரு நள்ளா ரற்று ப்பதிக கடை11 வது பாடல்சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதருநற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தனகொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறியசொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே 11மிகத்தெளிவாக அரசனின் எதிரில் தீயில் இட இப்பபதிகம் பாடப்பட்டதுஎனவே உள்ளபோதும் ஏனோ சேக்கிழார் காரைக்கால் அருகு உள்ளது நள்ளாறு
அதன் பதிகப்பாடல் சுவடியில் கயிறு சாற்றி வந்ததை வாதத்தில் எரியினில் இட்டார்என ஆவணப் படுத்துகிறார் அவர் காலத்தில் மதுரை நள்ளாறு மறைந்து காரைக்கால் நள்ளாறுதோன்றி உள்ளதிற்காக புராணக்கதை இயற்றப்படுகின்றது ஆ னால் தேவாரப்படி வா தம் நடந்தஇடமே திருநள்ளாறு தான்மற்றொன்றுஇப்போதுதான் பெருந்துறை பற்றி தவல்கள் சேகரித்தேன் அப்போது கண்டது காண்ககலயநல்லூர் தேவார வரி . . . . . ... . . . . .அகிலொடுசந் துந்திவரும் #அரிசிலின்றென் கரைமேல் . . . . . .. . . . . . . .அந்த தேவாரப் பதிப்பில் காணும் அடிக்குறிப்பு#விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல்நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றதுஇதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க. 7.16.6இப்படி பரந்த அறிவு கொள்ளாத பல ஆசிரியர்களளால் மிகச் சாதாரண மக்களு லுக்கவேஇயற்றபட்ட தலபுராணங்கள் பலப்பலதே ள் வழிபட்டது என்றால் அந்த வூரில் அக்கா லறத் தே புற்றில் வாழும் கருந்தேள் மிக்கு இருந்தது அவ்வளவேதலமரம் என்றால் அந்த தளத்தின் நிலா வகு அரியபொபடுகின்ரடஹௌஆ
இளங்கோவன் அவர்களுக்குநான் புராணங்கள் எல்லாம் கற்பனை மிகுந் தது என்றபோது அந்த மாணிக்க வாசகர் பற்றியகதைகளைக் கொண்ட திருவாதவூரர் புராணம் பறித்தான் குறி த்தேன்இருந்தாலும் புராணக்கதைகள் உணர்துவதைத் தான் பார்க்க வேண்டுமே அன்றி அதில் வரும் சொற்களையோ விவரங்களையோ அப்படியே ஏற்கத் ஆய்வாளர்களுக்குத் தேவையில்லை எம்பதுதான் யதார்த்தம் அய்யாஅந்தந்த ஆசிரியர்கள் தனக்குத் தெரிந்தவற்றை எழுதினர் அவ்வளவே அதுதானே எ ப்பொருள் யார்யார் வாய்திரு வள்ளுவர் சமயம் சிலப்பதிகாரம் களப்பிரர் மாணிக்க வாகார் காலம் ஆத்தி சூடி யாரைகே குறிக்கின்றது ஔவையார் எத்தனை போன்றவை எல்லாம் முடிவில்லாத விவாதம் தான் இன்றல்ல் நேற்றல்ல பலகாலம் கடந்துவரும் மெய்ப்பொருளே அய்யா நக்கீரர் சங்கரர பண பத்திரர் வாதிட்டன ர் அருணகிரியார் காளமேகம்முதல் நேற்றைய சாலமன் பாப்பையா பட்டிமன்றம் எல்லாம் தொடர் கதை தானே. இதனில் தவறில்லை சலிபடைன்ய்தால் சீசீ இந்த பழம் புளிக்கும் எனும் தன அறிவு நிலை யில் தேக்கத்தைக் கா ட்டும்எனக்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் எனும் குறு ம்புத் தனம் இல்லை சைவ சித்தாந்த கருத் துப்படி ஆணவம் தன்னுடையது எனக்காட்ட ஆர் வம் அவ்வளவே இது இல்லாமலும் வாழ்க்கை இல்லை என அறிவீர்கள்மடல் நீண்டு விட்டது மேலும் பிறகு பேசுவோம்
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.