FW: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

236 views
Skip to first unread message

N Deiva Sundaram

unread,
Nov 4, 2013, 3:30:36 AM11/4/13
to Tamilmanram



To: kta...@yahoogroups.com; gbin...@yahoogroups.com
From: ndsun...@hotmail.com
Date: Mon, 4 Nov 2013 13:40:40 +0530
Subject: RE: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

 

 //தற்போது, தமிழ் வரிவடிவமே ஆங்கில எழுத்தாக இருந்தால் எதிர்காலத் தலைமுறையினர் தமிழை வாசிப்பது எளிது என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

தமிழகத்தில் அனைத்து தனியார் ஆரம்பப்பள்ளிகளும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்பிக்கின்றன. தற்போது தமிழக அரசும் கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை தொடங்கி நடத்துகிறது. இவைகளில் படித்து வரும் எதிர்காலக் குழந்தைகள் தமிழை ஆங்கில வரிவடிவத்தில்தான் எளிதாக எழுதிப் படிக்க முன்வருவார்கள் என்று நினைப்பது தவறா?//


தமிழ்  வரிவடிவத்தை மட்டும் அல்லாமல், தமிழ்மொழியையே கைவிட்டுவிட்டுவிடலாமே. ஆங்கில எழுத்தில் எழுதி, தமிழை வாசிப்பதைவிட, தமிழையே கைவிட்டுவிட்டு, ஆங்கிலத்தையே வாசிக்கலாமே.


முகத்தின் முன்னால் இரண்டு கண்களுக்குப் பதிலாக, ஒரு கண்ணை முதுகுப் பக்கம் வைத்துக்கொள்ளலாம். இப்படி ஆள் ஆளுக்கு ஒரு கருத்தை முன்வைத்து, தமிழை இல்லாமல் ஆக்கிவிடலாமே. 


தமிழ் வாழ்வதால்தானே பிரச்சினை. இல்லாமல் சாகடித்துவிடலாமே. 


கை வேறு, கால் வேறு என்று வெட்டிக்கொண்டிருக்காமல், ஒரேடியாய்ச் சாகடித்துவிடலாம்.  

மொழிபற்றிய அடிப்படை அறிவோ , உணர்வோ இல்லாமல்  பேசுவதற்கெல்லாம், பதிலளித்துக்கொண்டிருப்பது  தேவையற்றது. இத்தோடு இதை விட்டுவிடலாம். 


அன்புடன்

ந. தெய்வ சுந்தரம்





To: gbin...@yahoogroups.com
CC: kta...@yahoogroups.com
From: valli_s...@vsnl.com
Date: Mon, 4 Nov 2013 12:47:01 +0530
Subject: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

 

இன்றைய ‘‘தி இந்து தமிழ்’’ இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  கட்டுரை கீழே படிக்கவும்.
என்னுடைய குறிப்பு இது!
இது சரியா? முறையா? இப்படியும் எதிர்காலத்தில் நடக்கும் சாத்தியம் தமிழுக்கு ஏற்படுமா?
30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் அச்சுத்துறைகளில் குறிப்பாக நாளிதழ்ப் பணிகளில் ‘டெலிப்பிரிண்டர்’ மூலம் தமிழ் செய்திகள் ஆங்கில எழுத்துரு மூலமே உள்ளீடு செய்துஅனுப்பப்பட்டன.
தமிழ்க் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியிலும்,தற்போதைய பயன்பாட்டிலும் ஆங்கில ஒலி உச்சரிப்பு விசைப்பலகைதான் (PHONETIC KEYBOARD) அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உள்ளீடு செய்யப்பட்ட வரிவடிவம் தமிழாக உள்ளது.
தற்போது, தமிழ் வரிவடிவமே ஆங்கில எழுத்தாக இருந்தால் எதிர்காலத் தலைமுறையினர் தமிழை வாசிப்பது எளிது என்று கட்டுரையாளர் கூறுகிறார்.
தமிழகத்தில் அனைத்து தனியார் ஆரம்பப்பள்ளிகளும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்பிக்கின்றன. தற்போது தமிழக அரசும் கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை தொடங்கி நடத்துகிறது. இவைகளில் படித்து வரும் எதிர்காலக் குழந்தைகள் தமிழை ஆங்கில வரிவடிவத்தில்தான் எளிதாக எழுதிப் படிக்க முன்வருவார்கள் என்று நினைப்பது தவறா?

தமிழ் மொழிக்கு அழகிய வரிவடிவம், ஒருங்குறி எழுத்துரு, டேஸ்16, கையடக்கக் கணினிகளில் விசைப்பலகை, சொல் திருத்தி என்று பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் வேளையில் ஆங்கில எழுத்துருவே தமிழுக்கும் பயன்படுத்தினால் அதனால் தமிழ்கணினித் துறையில் ஏற்படும் சாதக பாதகங்கள், தாக்கங்கள் என்ன?

சொ.ஆனந்தன்.



 

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

 
 

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.

மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.

- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan...@gmail.com



__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (2)
Recent Activity:
.

__,_._,___

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Nov 4, 2013, 4:00:35 AM11/4/13
to tamilmanram kuzhu
பேரா. தெய்வசுந்தரம் அருமையாக விளக்கியும் சாடியும் உள்ளார்.

இந்து இதழ் 1952 இல் இவ்வாறு   உரோமன் எழுத்தில் எழுதலாம் எனப் பரப்புரை செய்தது.  ( ஆங்கில எழுத்து என்று சொல்வது அறியாமை).  பே ராசி ரியர் சி. இலக்குவனார் கடுமையாக எதிருரை செய்து அதனை முறியடித்தார்.

இன்றைக்குத் தெ.சு. முன்னின்று முறியடிக்கலாம்.


2013/11/4 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

iraamaki

unread,
Nov 4, 2013, 4:13:45 AM11/4/13
to tamil...@googlegroups.com
அருமையாகச் சொன்னீர்கள். இப்படியெல்லாம் முயல்வதற்கு மாறாக அரசின் வழி ஆணை போட்டுத் தமிழைக் கொன்று விடலாமே? 
 
எல்லாம் மடிக்குழைப் பள்ளிகளுக்கு ஒப்புதலும், உரிமமும் கொடுத்ததிற்  தொடங்கியது. (வெவ்வேறு முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பள்ளித் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் இன்னோரன்னர்..........) அன்று நடந்ததை இன்னுஞ் சாடாதிருந்தால் எப்படி? திராவிடக் கட்சிகள் காசை வாங்கிக் கொண்டு புற்றீசலாக ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களை இந்த 46 ஆண்டுகளிற் தொடங்கியது இன்று எங்கு கொண்டு விடப் போகிறது?
 
8 கோடி மக்களின் எழுத்தையே மாற்ற செயமோகன் போன்றவர்கள் யோசனை சொல்லுகிறார்கள். இதுவும் நடக்கும், இன்னும் மேலும் நடக்கும். விழித்திருக்க வேண்டிய நேரத்தில் தூங்கிவிட்டோம். இனி அடியோடு சீரழிக்காது விடமாட்டார்கள்.   
 
திராவிடங்களை இன்னும் சீந்திக்கொண்டு கிடக்கிறோமே?
 
இராம.கி.
--

N Deiva Sundaram

unread,
Nov 4, 2013, 4:53:21 AM11/4/13
to Tamilmanram
அன்புள்ள இராம்கி ஐயா அவர்களே, 
தமிழைக் கொல்வதற்கு என்று அரசு ஆணை தேவையா?
ஒருவர் வாழ்வதற்குத் தத்தளிக்கும்போது, அவரைக் கொல்வதற்கு நச்சு கொடுத்தும் சாகடிக்கலாம்.
மாறாக, அவருக்கு ஒன்றுமே கொடுக்காமலேயே சாகடிக்கலாம். இதில் பிரச்சினை இல்லையல்லவா?
இரண்டாவதுதான் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழகத்திலே - தனது மண்ணிலே - தமிழ் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பிறந்த குழந்தைக்கும் ஆங்கிலம்!
வீட்டில் வளர்க்கின்ற  நாய், பூனைக்கும் ஆங்கிலம் ! ஆரம்பப்பள்ளியிலும் ஆங்கிலம்! உயர்கல்வியிலும் ஆங்கிலம்!
அலுவலகத்திலும் ஆங்கிலம்! வணிகத்திலும் ஆங்கிலம்! கணினி விளையாட்டுகளிலும் ஆங்கிலம்!

ஆனாலும் உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!!

தமிழகத்தின் ஆட்சிமொழி தமிழ் !!!

தொல்காப்பியர் .. திருவள்ளுவர்... இளங்கோ ... அனைவருக்கும் கல்லில் நினைவுச் சின்னங்கள்!
தமிழுக்கும் நினைவுச் சின்னம் ......

இது போதாதா? 

உண்மையான - அறிவியல் அடிப்படையிலான - மொழி உணர்வோ இன உணர்வோ இல்லாத ஒரு ' நிர்வாணச் சூழலில் ' 
இராம்கி ஐயா போன்ற ' கோவணம் கட்டிய பைத்தியக்காரர்களை '  பார்த்து சிரிக்கவா அழவா? 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்




From: iraa...@bsnl.in
To: tamil...@googlegroups.com
Subject: Re: [தமிழ் மன்றம்] FW: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்
Date: Mon, 4 Nov 2013 14:43:45 +0530

Pandiyaraja Paramasivam

unread,
Nov 4, 2013, 5:20:53 AM11/4/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
Roman Script என்பது உயிர்மெய் கொண்டது அல்ல. சிலர் தமிழையே உயிர்மெய்யைத் தவிர்த்து phonemic முறையில் தமிழை எழுதலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, மதுரை என்பதை ம் அ த் உ ர் ஐ என்று எழுதலாம் என்பது அவர் கருத்து. மின் தமிழ் என்பது ம்இன் த்அம்இழ் என வரும். இதனைப்பற்றி என்னுடைய Ph.D ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். Word length என்ற தலைப்பில், ஒரே சொல்லைப் பல முறைகளில் எழுதி, அங்கு வரும் குறியீடுகளின் எண்ணிக்கையை word length எனக் குறிப்பிட்டு, ஏறக்குறைய 2,50,000 சொற்களுக்குசொல்நீளம் கண்டு அவற்றை ஒப்பீடு செய்துள்ளேன். இம்முறையில் தொல்காப்பியர் காலத்து முறையே தமிழுக்கு மிகச் சிறந்த முறை என்று நிறுவியுள்ளேன். (அப்போது கொ, கோ போன்றவற்றுக்கு ஒறெ எழுத்துரு தான்) இருப்பினும் இப்போது நாம் பயன்படுத்தும் முறையே இன்றைய சூழலில் மிகச் சிறந்த முறை என்றும், எல்லா முறைகளிலும் phoneme (Roman) முறைதான் ஏற்புடையதல்ல என்பது புள்ளியல் முறையில் நிறுவியுள்ளேன்.
அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு கொடுத்துள்ளேன். இன்னும் விளக்கமுடியும். அவசரமாக மதுரைக்குப் புறப்படவேண்டியிருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜ
  ......................................................................................................................

The phoneme length is calculated on the assumption that every phoneme would require only one symbol to write. The word ‘அகர is taken as அ+க்+அ+ர்+அ to have length 5. This is close to writing this in Roman script as ‘akara’ which also has length 5. People like Thillainayagam (1979:55-75) recommend the Roman script for Tamil. This system requires only one symbol for mey and uyir and two symbols for uyirmeys including akara uyirmey whereas the electronic keyboards require one stroke for akara uyirmey and two strokes for the mey. Since the percentage of akara uyirmey is lower than that of mey forms, all the electronic keyboards will have greater mean length than the phoneme length as can be seen in the tables. The major disadvantage of the Roman script for Tamil is that the symbols for all the netil uyirs require either a diacritic mark like : , writing the letter twice like aa  or the shift key operation if the corresponding upper case letter is used and hence they require two strokes.

மானாமதுரை à ma:na:maturai or maanaamaturai  or mAnAmaturai.

Similar is the case with ங, ஞ, ட, ண, ந, ற, ழ and [ which are to be produced with one basic form and some diacritic mark. So if the Roman script is used, it will greatly increase the word length making it still worse. If they are assigned single forms specially created, then it will be greatly against the claim of making the Tamil script universal. With these general concepts as background for the understanding of the different ways of writing in Tamil, let us go into more details using statistical measures for the comparison of different writing systems.

For immediate comparison the mean and standard deviation (s.d) and the coefficient of variation (cv) for the different word lengths for the different sets are given below.

           

Mean        SET 1       SET 2       SET 3       SET 4       SET 5       ALL

 

Acai            1.76           1.87           1.78           1.74           2.23           2.01

Syllable      2.47           2.41           2.43           2.37           3.02           2.72

Grapheme   3.34           3.48           3.37           3.28           4.15           3.76

Phoneme   5.50           5.52           5.48           5.34           6.83           6.15

Writing       4.70           5.06           4.80           4.71           5.75           5.29

Printing      3.99           4.24           4.04           3.97           4.92           4.49

Typing        5.89           6.22           5.97           5.80           7.19           6.58

CDAC        5.94           6.37           6.03           5.87           7.34           6.70

Singapore   5.68           6.02           5.76           5.60           7.05           6.41

Internet      5.28           5.56           5.32           5.19           6.40           5.87

 

All the texts in the first four sets are taken from literary works, which are in the form of poetry, and we find in all the ten different lengths, there is a near uniformity in all types of word lengths. Hence, it may be surmised that for centuries, the Tamil words have not undergone any change in their productivity. If new words are coined by prefixes and suffixes or by concatenation, the word lengths are likely to have been increased which has not happened till recent times. Moreover, the writing material, which was a palm leaf, was small and scarce to get and this would have necessitated using only small words. Hence the form, content or the writing material or some of them made the writers to use only small words. All word lengths in Set 5, which consists mostly of texts in prose, are greater than those in the other sets. Hence it is clear that longer words are being used in recent times and this is independent of form and content. This can be seen from the figures for all the texts of set 5 as given below.

            Len.    Bharathi  Metha  D.mani   D.malar  Kumudam  vikatan India Stories1  Stories2  Offiadvt   Texts  Criya

 

Acai       1.93         2.24       2.38       2.24       2.26         2.22       2.30     2.17     2.17     2.30     2.14   2.41

Syllable  2.56         3.05       3.32       3.03       3.03         2.99       3.13     2.86     2.85     3.13     3.00   3.26

Graphe   3.59         4.20       4.48       4.14       4.17         4.12       4.29     3.96     3.96     4.29     4.05   4.42

Phon      5.84         6.91       7.48       6.82       6.84         6.74       7.08     6.49     6.44     7.07     6.64   7.47

write      5.18         5.89       6.08       5.70       5.79         5.74       5.91     5.64     5.66     5.75     5.47   6.15

print       4.39         5.04       5.23       4.87       4.95         4.90       5.06     4.81     4.81     4.90     4.69   5.31

type       6.41         7.32       7.69       7.08       7.24         7.13       7.36     6.91     6.94     7.27     6.95   7.80

CDAC    6.51         7.46       7.82       7.29       7.40         7.33       7.56     7.08     7.14     7.47     7.14   7.80

Singapo  6.24         7.19       7.55       6.98       7.07         6.99       7.25     6.79     6.81     7.17     6.77   7.63

Internet 5.84         6.91       7.48       6.82       6.84         6.74       7.08     6.49     6.44     7.07     6.64   7.47

 

Here, except Bharathi and Metha, all others are prose works. But the figures for Metha are closer to the other prose works. Bharathi’s poems are of traditional type mostly while Metha’s works are free verses. Hence free verses, though poetic in content, are more prosaic in form. Here too we find that excepting Bharathi, in all other texts all types of word lengths are almost the same and so the different word lengths can be taken to be stable.

The mean of the word length enables us to have an idea about the average size of the words used in different texts. Normally the average value would lie close to that word length which has maximum frequency. But in some cases, the average word length might not be the size of the word mostly used. In Set 1 we see the mean phoneme length to be 5.50 while the word length which has maximum frequency (6545) is only 4. This means that a wide variety of words, as far as length is concerned, are being used and the word length is not consistent. This consistency can be tested by the coefficient of variation (cv) which is s.d / mean * 100, where s.d is the standard deviation. The following table gives the figures for the coefficients of variation for all the texts in different sets.

 

CV            SET 1       SET 2       SET 3       SET 4       SET 5       ALL

 

Acai          34.68         34.72         35.96         35.66         37.16         38.29

Syllable    36.10         37.27         38.28         37.59         40.33         41.13

Grapheme 36.26         37.06         37.98         37.54         41.00         40.99

Phoneme 36.92         38.05         39.43         38.58         42.45         42.62

Writing     37.04         37.73         38.92         38.45         40.49         40.67

Printing    37.63         39.19         40.06         39.28         41.23         41.85

Typing      39.04         39.07         40.36         39.98         42.57         42.70

CDAC      37.75         37.55         40.36         38.35         40.73         41.05

Singapore 39.60         39.90         38.44         40.73         43.42         43.69

Internet    37.28         37.98         38.70         38.14         41.72         41.39

 

            It is quite natural that the larger the mean the greater would be its variation. But the coefficient of variation is a measure of proportional variation and we find in all the cases, the variations to be almost the same in all the first four sets but in Set 5 the variation is largest. Hence we can say that not only in the case of the mean but also in the case of the variation, there has been stability up to recent times. In modern day texts, the average word length is large and there is a large variation in the length of the word. Yet we find that among the letter - operator systems, the measure of consistency is least in the case of grapheme length or writing length. So, it can be said that the present writing system is the easiest and the most optimal, because the words are, on the whole, smaller and even a longish sequence of ideas can be expressed with comparatively little effort as regards production of symbols. Much greater effort is required in the cases of other modes of writing. This comparative study of the different ways of writing Tamil is taken up in the next section.

6.3.1        RELATIVE EFFICIENCIES OF THE CODING SYSTEMS

The analysis of the different coding systems was taken up so far and their relative stability was studied with respect to the texts in different periods. Using the same data the relative efficiency of the coding systems can also be studied. As mentioned earlier, the acai length and syllable length might be helpful for the short hand coding and are not taken up for the comparative analysis. The other eight systems are different ways of writing in Tamil either by hand or using mechanical / electronic devices and hence these are called writing systems in Tamil. The Brahmi script, which, according to scholars like Mr.I.Mahadevan (1968), was used during the sangam period for writing in Tamil, is a purely graphemic system. But with the adoption of pulli for the pure mey forms and the later separation of the vowelising strokes and their evolution into independent writing units made the system less graphemic.

 In all the tables, the mean of the grapheme length is the lowest of all those for the other writing systems. This is quite natural, since, a grapheme is close to a syllable and the larger a unit of expression is the more efficient it would be in shortness of length. But this would result in a large number of distinct symbols. A unit of expression should be large enough to convey as much information as possible while keeping the number of distinct forms within reasonable bounds. Perhaps in an attempt to strike a balance between these two, it seems, our forefathers invented the concept of uyirmey and made it a single unit for writing. A basic unit of a grapheme is in the form of uyir (V), mey (C) or uyirmey (CV). We have seen that the CV form of syllable is the most frequent one (55 %) amongst the six syllable types and so much workload in writing is reduced by writing this CV syllable as a single unit. It is true this increases the number of distinct units by 216 (18 mey x 12 uyir). But because of the enormous saving in time, space and energy, the number of distinct forms of graphemes should not be taken as a disadvantage. The increase in the workload in the other systems of writing is explained below.

Total number of words in Set 5 = 126110.

Unit                 mean         Total units      difference       % increase

Grapheme         4.15                523357                    ---                   --

Phoneme          6.83                861331          3373743             64 %

Letter – operator

Writing             5.75                725133            201776             38 %

Printing            4.92                620461              97104             18 %

Typing              7.19                906731            383374             73 %

CDAC              7.34                925647            402290             76 %

Singapore         7.05                889076            365719             69 %

Internet            6.40                807104            283747             54 %

Hence the system of graphemes in which every uyir, mey and uyirmey is treated as a basic unit of writing is the best-suited system for writing Tamil. All other systems would involve more workload for writing.

iraamaki

unread,
Nov 4, 2013, 5:34:02 AM11/4/13
to tamil...@googlegroups.com
உண்மையான - அறிவியல் அடிப்படையிலான - மொழி உணர்வோ இன உணர்வோ இல்லாத ஒரு ' நிர்வாணச் சூழலில் '
இராம்கி ஐயா போன்ற ' கோவணம் கட்டிய பைத்தியக்காரர்களை '  பார்த்து சிரிக்கவா அழவா?
 
மேலேயுள்ளதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். “அம்மனாண்டிகளின் நடுவில் கோவணாண்டி பைத்தியக்காரன் தானே?”
 
அரசு ஆணை என்று சொன்னது ”அண்மையில் ஆங்கில அரசுப் பள்ளிகள் திறப்பது பற்றிய அரசு ஆணைக் குறிப்பு பற்றியது.“
மெட்ரிக்குலேசன் பள்ளிகளை இவ்வளவு திறந்த அரசு , நாளையில் இருந்து அரசு மொழி ஆங்கிலம் என்று சொல்லிவிடலாமே?
 
அன்புடன்,
இராம.கி.

iraamaki

unread,
Nov 4, 2013, 6:04:24 AM11/4/13
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thamizayam
செயமோகனின் எதிர்வினையையும் படியுங்கள்.
 
 
பொறுமையாக யாராவது ஒருவர் இந்த செயமோகனுக்கு ஒரு மறுப்பு எழுதலாமே?
 
அன்புடன்,
இராம.கி.

Hari Krishnan

unread,
Nov 4, 2013, 6:48:30 AM11/4/13
to தமிழ் மன்றம்

2013/11/4 iraamaki <iraa...@bsnl.in>

உண்மையான - அறிவியல் அடிப்படையிலான - மொழி உணர்வோ இன உணர்வோ இல்லாத ஒரு ' நிர்வாணச் சூழலில் '
இராம்கி ஐயா போன்ற ' கோவணம் கட்டிய பைத்தியக்காரர்களை '  பார்த்து சிரிக்கவா அழவா?
 

அன்புள்ள இராமகி ஐயா,

anbuLLa iraamaki ayya என்று தட்டி, அதைத் தமிழெழுத்தாக மாற்றும் பழக்கம் ஊறிப் போனால், வருங்காலத் தலைமுறைக்கு, தமிழில் எழுதுவது என்றால் aankilatthil thatti athai thamizaaka maatruvathu என்ற நிலைமையே வந்து சேரும்; ஆகவே, முறையான தமிழ்த் தட்டச்சு பயிற்சியை ஒரே மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்--மூன்று தலைமுறைகளாக தட்டச்சு கற்பித்து வரும் நான் இருக்கிறேன் பாடத் திட்டத்துக்கு--என்று நானும் 1999 முதல் கிடைத்த இடத்திலெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஓரிருவர் கற்க முன்வந்து, பாடத் திட்டங்களை வடிவமைக்க தொழில்நுட்ப உதவி தேவைப்படும் போது எல்லாம் காணாமல் போய்விடுகிறது.

கணினியைப் பயன்படுத்துபவர்களுக்குத் தட்டச்சு தெரிந்திருப்பது அவமானம் என்ற சூழல் 1990களிலேயே உருவான காரணத்தால்தான் நாங்கள் நிலையத்தை இழுத்து மூடினோம்.  ஆங்கிலத்துக்கே ஒருவிரல் கிருஷ்ணாராவ் என்னும் நிலைமை இருக்கும்போது, இதற்கு யார் முன்வரப் போகிறார்கள்?

நிமிடத்துக்கு குறைந்தது 2000 விசையழுத்தங்கள் (Key depressions per minute) என்ற அளவுக்கு வர சுமார் மூன்று மாதப் பயிற்சி (தினம் ஒரு மணி நேரம் என்ற வீதத்தில்) போதும்.  

யாருக்கு வேணும் இந்த ஊசல் பண்டம்!  aankilatthilEyE thatti/thitti koLLvaarkaL.  vAzka!  கௌரவப் பிரச்சினையாச்சுதுங்களே!

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N Deiva Sundaram

unread,
Nov 4, 2013, 7:10:40 AM11/4/13
to Tamilmanram
அன்புள்ள  ஐயா,
தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூற்று சரி. ரோமன் எழுத்தில்  தமிழைத் தட்டச்சு செய்வது  என்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது.
தமிழைத் தமிழ்த் தட்டச்சுப் பலகைமூலம்தான் செயல்படுத்தவேண்டும். ரோமன் விசைப்பலகை என்பது வேறுவழியின்றி, தமிழை எப்படியாவது எல்லோரும் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடுதான். அதைத் தொடரக்கூடாது. தொடருவது தமிழுக்கு நல்லதல்ல. தட்டச்சு செய்யும்போது தமிழ் எழுத்துகளில்தான் தமிழைச் சிந்திக்கவேண்டும். இதுவே நரம்பியல் அடிப்ப்படையிலும்  மூளைக்குச் சுமையில்லாத ஒன்றாகும். 
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Mon, 4 Nov 2013 17:18:30 +0530

Subject: Re: [தமிழ் மன்றம்] FW: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

iraamaki

unread,
Nov 4, 2013, 7:49:04 AM11/4/13
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஹரி,
 
உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. உங்களால் தமிழ்த் தட்டெழுத்து முறைகளை  இளையோருக்கு எளிதிற் சிறப்புறப் பயிற்றுவிக்க முடியும் என்று நான் அறிவேன். 
 
இருட்டில் எங்கோ  தொலைத்துவிட்டு இவர்கள் வெளிச்சத்திற் தேடுகிறார்கள். 
 
”தமிழ்ப் பொத்தகங்கள் விற்காததற்குக் காரணம் கண்டுபிடிக்கப் போனவர், முடிவில் தமிழை இன்று தமிழியில் எழுதுவதே காரணம்; உரோமனில் எழுதிவிட்டால் 500 பொத்தகங்கள் 10000, 20000 ஆக மாறி விற்றுவிடும்” என்று கனவு காண்கிறார் போலும்.
 
(நாம் எழுதும் எழுத்திற்குத் தமிழி என்று பெயர். நாம் பயன்படுத்தும் எழுத்து  தமிழி>தமிளி>தாமிளி>திராவிடி என்றே அந்தக் கால பாகத, பாலி ஆவணங்களில் பல காலம் அழைக்கப்பட்டிருக்கிறது. தமிழி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு திரிவுகள் பெற்றது இன்னொரு புலனம்.  பாண்டியர், சேரர் பகுதியில் இருந்த வட்டெழுத்து வேறெழுத்தல்ல.. அதுவும் தமிழியின் ஒரு திரிவே. என்ன? இன்று அந்த எழுத்து அழிந்து போனது. பல்லவர் பகுதியிலும், சோழர் பகுதியிலும் நிலைத்துப் போன எழுத்தையே இன்று நாம் பயன்படுத்துகிறோம். பாண்டியர் இதைப் பயன்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டது. சேரர் வட்டெழுத்தின் திரிவையும், கிரந்த எழுத்தின் திரிவையும் பிணைத்துப் புது எழுத்து உருவாக்கிக் கொண்டனர்; மலையாள எழுத்து அப்படித்தான் உருவாகியது. மொத்தத்தில் இன்றுமுள்ள தமிழியின் இருப்பு குறைந்தது 2500 ஆண்டுகளாவது இருக்கும். இதைத் தூக்கியெறிந்து உரோமன் எழுத்துப் பயிலவேண்டும் என்பது ஆய்வில்லாதோர் கூற்று.)
 
தமிழ் படித்தோர் பலரும் ஒலிப்பியல் முறையில் இன்று அடிப்பதற்குக் காரணம் விசைப்பலகைப் பொத்தான்களில் வெறும் உரோமன் எழுத்தே அவற்றின் முகங்களில் அச்சிடப்பட்டிருப்பதால் தான். ”தமிழ்நாட்டில் விற்கப்படும் விசைப்பலகைகளில் தமிழெழுத்து (tamil99 முறையிலோ, tamil typewriter முறையிலோ) அச்சடிக்கப்படவேண்டும். அந்த முறையில் இல்லாத விசைப்பலகைகளை விற்கமுடியாது” என்று அரசு ஆணை பிறப்பித்தால் tamil 99 போன்ற முறை உறுதியாகப் பரவும். நடுக்கிழக்கு அரேபிய நாடுகள் பலவற்றில் அரேபிய இடைமுகம் இல்லாத விசைப்பலகைகள் விற்க முடியாது. அதே போலத் தமிழெழுத்து இடைமுகம் இல்லாத விசைப்பலகைகள் இங்கு விற்க முடியாது என்று அரசிற்குச் சொல்ல எத்தனை காலம் பிடிக்கும்? அப்படி அது கட்டாயப் படுத்துமானால்,  ஒலிப்பியல் முறையில் தமிழடிப்பது உறுதியாகக் குறையும். நம் ஊரில் அரைகுறையாக அரசு நிர்வாகம் நடப்பது தான் சிக்கலே தவிர ஒலிப்பியல் முறையில் அடிப்பதல்ல,.
 
தமிங்கிலம் இங்கு இருப்புக் கொண்டதற்குக் காரணம் தமிழக அரசின் கையாலாகாத நடவடிக்கைகளே! 1967க்கு முன் பேராயக் கட்சி எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்திருந்தால்,  தமிழ் வணிக மொழியாக, அரசு மொழியாக, வழக்கு மொழியாக, அலுவல் மொழியாக, உயர்கல்வி மொழியாக ஆகியிருக்கும். இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்குக் காரணம் திராவிடக் கட்சிகளே.
 
இது தமிழுக்கு மட்டும் உள்ள சிக்கல் அல்ல. இந்திய எழுத்துமுறைகள் எல்லாவற்றிற்கும் உள்ள சிக்கல் தான்; எல்லா மொழியினரும் இதில் ஈடுபட்டு செயமோகன் போன்றோரின் கருத்துகளுக்கு மறுப்புரை சொல்ல வேண்டும்.  செயமோகன் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு ஏரண ஓட்டைகள், அறிவியற் குறைகள் உள்ளன.   
 
நீங்கள் இதுபற்றி உங்கள் கருத்துக்களை முடிந்த அளவு இணையத்திற் பல்வேறு இடங்களில் எழுதுங்கள். 
 
நானும் எழுதுவேன்.
 
அன்புடன்,
இராம.கி. 

Sent: Monday, November 04, 2013 5:18 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] FW: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

--

iraamaki

unread,
Nov 4, 2013, 8:07:23 AM11/4/13
to tamil...@googlegroups.com
திரு. சீனிவாசன் gbinfitt குழுவில் ஐகாரசு பிரகாசின் 2006 வலைப்பதிவு ஒன்றை நினைவு படுத்தியிருந்தார். இந்தப் புலனத்தில் அதுவும் படிக்கவேண்டியதே.
 
இதைக்கூட ஒரு கட்டுரையில் தெரிவித்துத் திரு.செயமோகனுக்கு அனுப்பலாம்.
 
அன்புடன்,
இராம.கி. 

C.R. Selvakumar

unread,
Nov 4, 2013, 9:25:47 AM11/4/13
to தமிழ் மன்றம்
அன்புள்ள பாண்டியராசா அவர்களே,

மிக அருமையாகவும், அறிவின் அடிப்படையிலும் 
தரவின் அடிப்படையிலும் நீங்கள்
முன்வைத்த மடல்  பெருமகிழ்ச்சியைத் தந்தது. 

பண்டிதர் நேரு முன்வைத்த அதே
உரோமன் எழுத்தாக மாற்றும் திட்டம் இன்னும் பல வடிவங்களில் வந்துகொண்டிருக்கின்றன.
நீங்கள் ஆணித்தரமாக கருத்துகளை முன்வைத்ததோடு, இன்னொரு கருத்தையும் 
கருத வேண்டிக்கொள்கின்றேன்.  இப்பொழுது செய்யும் எந்த
எழுத்துரு மாற்றத்தாலும் இதுவரை வெளிவந்த 
அனைத்துப் படைப்புகளும் வருங்காலத்தில்
மூல வடிவில் படிக்க முடியாமலே போகும். தொடர்பு  பலவாக
அறுந்து போகும். மில்லியன் கணக்கான நூல்களையும், 
துண்டு அறிக்கைகளையும் பிற பலவற்றையும் பிழையில்லாமல்
எழுத்துப்பெயர்த்து அச்சடிகக்ப்போகின்றார்களா?!  எத்தனை நூlல்கள் கடந்த நூற்றாண்டில்
வெளியாயின, அவற்றின் தலைப்புகள்  என்ன ஆசிரியர்கள் யாவர் என்றும் கூட பதிவு
செய்யத்தெரியாமல் விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றோம்.  
கல்வி என்றால் என்ன,  தமிழர்களாகிய நம் நிலை 21-ஆம் நூற்றாண்டில் 
என்ன, 80 மில்லியன் தமிழர்களாகிய
நம் வாய்ப்புகள் என்ன என்று எதுவுமே அறியாது, ஊழல், கொள்ளை, அடிமைத்தனம்,
தாழ்வுமனப்பான்மை, வினையாண்மை இல்லாமை, அறியாமை போன்று பல
தீய -ஆமைகளில் உழன்றுகொண்டிருக்கின்றோம். இன்னும் 20 ஆண்டுகளில்
தமிழ் மொழி ஏறத்தாழ இல்லாமல் அற்றே போகும் நிலையின் உள்ளோம் என்பதை
ஆட்சியாளர்களும், பொதுமக்களும் உணராத கொடுநிலைமையில் இருக்கின்றோம்.
பெரிய விழிப்புணர்வும் அது இயக்கமாக மலர்ந்து மாபெரும் மாற்றங்களும்
வந்தாலொழிய தமிழின் எதிர்காலம்
உண்மையிலேயே மிகமிக மங்கியதாகவே உள்ளது என்று நினைக்கின்றேன்.
ஒரு கோணத்தில் தமிழின் எதிர்காலம் மிக மிக உயர்வாக
(உலகின் முதல் 10 மொழிகளுள் ஒன்றாக பெருமையுடன் நிற்கும் நிலையாக)
இருந்த போதிலும், அதற்கான வாய்ப்புக்கூறுகள் நிறைய இருந்தபோதிலும், அரசாலும்,
மேலே கூறிய -ஆமைகளில் ஊறியிருக்கும் பொதுமக்களாலும், 
நாம் ஆழமாகவும் முழுவதுமாகவும் சீரழிந்து கொண்டிருக்கின்றோம்.

எந்த எழுத்துமுறைக்கும் மாற்றலாம், அதில் நன்மை தீமைகள் இருக்கலாம், 
ஆனால் இதனைச் சரிவர அலசத்தெரியாமலும், இதுதான் இப்போதையத் 
தேவையா என்றும் அறியாமல், ஊரே தீப்பற்றி
எரிந்துகொண்டிருக்கும் பொழுது,  உரோமப்பேரரசன்
பிடில் வாசித்துக்கொன்டிருந்தானாம், அதுபோல் 
உதவாத பேச்சுகளிலும் சிந்தனைகளிலும் உழன்று
கொன்டிருக்கின்றோம்.

இப்பொழுதே நொடிப்பொழுதில் எந்த எழுத்துருவில் இருந்தும் எந்த 
எழுத்துருவுக்கும் மாற்றிப் படிக்க முடியும். உரோமன் மட்டும் அன்று.
பிற பல மொழி எழுத்துகளில் மாற்றிப் படிக்க முடியும். 
திரு செயமோகன் மிக விரும்பினால் அவருடைய கட்டுரையை அவரே
கீழ்க்காணும் எழுத்தில் படிக்கட்டும். மூச்சு முட்டினால் அதற்கு
நான் பொறுப்பு அல்லன்! எல்லாம் பழக்கம்தான், மறுக்கவில்லை.
அறிவில்லாமை கூட பழக்கம்தான்!!! 

ceṉṉaiyil perum āṅkilap puttakak kaṭaiyoṉṟil ōr aṟivippaip pārttēṉ. aṉṟu vantucērnta āṅkila nūl oṉṟu 2,000 piratikaḷ viṟṟirukkiṟatu eṉṟu coṉṉatu atu. paraparappāka viṟkum oru tamiḻ nūl varuṭam 2,000 piratikaḷtāṉ viṟkum. atil 1,500 piratikaḷ nūlakattukku vāṅkappaṭupavai. tamiḻakam muḻukka 500 piratikaḷ vācakarkaḷiṭam viṟkappaṭṭāl atu oru cātaṉai!

nam iḷaiya talaimuṟai ērāḷamāka vācikkiṟatu. āṉāl, tāymoḻikaḷil vācippatillai. kāraṇam, intiyāveṅkum āṅkilak kalvi paravalākivarukiṟatu. ulakamayac cūḻalil āṅkilamē vēlai vāyppuk kalvikkuriya moḻi eṉa niṟuvappaṭṭuviṭṭatu. atu teḷivāṉa uṇmaiyumkūṭa. ākavē, etirkālattilum āṅkilamē iṅkē kalviyiṉ moḻiyāka irukkum. atait taṭukkavē muṭiyātu. varalāṟṟiṉ pōkku atu. ataṟku etirākap piṭivātamāka nilaikoḷvatu aṭippaṭaivātam maṭṭumē.

āṅkilak kalviyāl tāymoḻik kalvi kaiviṭappaṭuvataik kaṇṭu, intiya mānila aracukaḷ tāymoḻik kalviyaik kaṭṭāyamākkukiṉṟaṉa. viḷaivāka, kuḻantaikaḷ iraṇṭāvatu moḻiyākat tāymoḻiyai eṭuttu, paḷḷi iṟutivarai ataip paṭikkiṉṟaṉar. āṉāl, atu iraṇṭāvatu moḻiyāka iruppatālēyē atil avarkaḷukkuk kavaṉam nīṭippatillai.

pireñcu allatu camskirutattai iraṇṭām moḻiyāka eṭuttup payilum kuḻantaikaḷ, eppaṭi ammoḻikaḷaik kaṟkiṉṟaṉavō appaṭittāṉ iṉṟu nam kuḻantaikaḷum tāymoḻiyaik kaṟkiṉṟaṉa. atāvatu, tērvukaḷil eḷitāka velvataṟku maṭṭumē taṭṭuttaṭumāṟi vācikkavum ōraḷavu eḻutavum kaṟkiṉṟaṉar. inta uṇmaiyai nām maḻuppa vēṇṭiyatillai.

avarkaḷ cantikkum cikkal eṉṉa? iḷamaiyil iraṇṭu moḻikaḷiṉ eḻuttu vaṭivaṅkaḷaik kaṟṟukkoḷvatil irukkum ciramamtāṉ eṉṟu collalām. iṉṟu ētēṉum oru tuṟaiyil takutiyuṭaiyavarāka āka vēṇṭumeṉṟāl, mika virivāṉa pallāṇṭu kālak kalvi tēvaippaṭukiṟatu. ākavē, kalvikku utavāmal veṟumē moḻiyaṟivukkāka maṭṭumē kaṟkappaṭum iraṇṭām moḻiyai viṭṭuviṭukiṟārkaḷ.

moḻikkum eḻutturuvukkumāṉa uṟavu eṉpatu oru maṉappayiṟcitāṉ eṉpatai niṉaivil koḷḷa vēṇṭum. ka eṉṟa eḻuttaip pārttatum anta oli niṉaivukku varuvataṟku nām iḷamaiyilēyē kuḻantaikaḷaip paḻakkukiṟōm. namakku atu iyalpāṉa oṉṟākat terikiṟatu. āṉāl, kuḻantaikaḷ mikak kaṭiṉamāṉa īrāṇṭup payiṟci vaḻiyākavē antap payiṟciyai aṭaikiṉṟaṉa.

eḻutuvatu eṉpatu iṉṉum cikkalāṉatu. camūkaviyal āyvāḷarāṉa miṣēl fūkkō “eḻuttu eṉpatu kaikaḷukku aḷikkappaṭum kaḻaikkūttāṭṭap payiṟci” eṉkiṟār. nam kuḻantaikaḷukku ataik kaṭṭāyamāka ākkiyiruppatāl avarkaḷ iḷamaiyil kaṟṟukkoḷkiṟārkaḷ. āṉāl, avarkaḷiṉ vāḻkkaiyil atu mikak kaṭiṉamāṉa ōr uḻaippu. mirukaṅkaḷaiyum paṟavaikaḷaiyum vittaikkākap paḻakkuvataṟkum itaṟkum periya vēṟupāṭu uṇmaiyil illai.

innilaiyil, intiyak kuḻantai iḷamaiyil orē camayam iraṇṭu eḻutturukkaḷ muṉṉāl niṟuttappaṭukiṟatu. iraṇṭu maṭaṅku uḻaippu ataṟkuk kaṭṭāyamākkappaṭukiṟatu. ka eṉṟālum ka eṉṟālum orē uccaripputāṉ eṉa atu uṇarntu teḷiya nēramākiṟatu. mēlum, eḻuttukaḷaik kaṟṟukkoṇṭāl maṭṭum pōtātu. itu kalvi alla, payiṟci. toṭarntu nikaḻum payiṟciyē nammiṭam nīṭikkum. nam kuḻantaikaḷ āṅkilattilēyē eḻutukiṉṟaṉa, vācikkiṉṟaṉa. ākavē, iraṇṭām moḻiyākak kaṟṟukkoṇṭa tamiḻ avarkaḷ kaikaḷukkum karuttukkum paḻakkamaṟṟatāka ākiviṭukiṟatu.

intac cikkalait tāṇṭuvataṟkāṉa vaḻimuṟaikaḷaittāṉ nām yōcikka vēṇṭum. iṉṟu nāṉaṟintu tamiḻakattil iṇaiyam, fēspuk pōṉṟavaṟṟukkākak kaṇiṉiyil taṭṭaccu ceypavarkaḷ aṉaivarumē āṅkila eḻuttukaḷilēyē taṭṭaccu ceytukoṇṭirukkiṟārkaḷ: ammā iṅkē vā vā eṉṟāl, “ammaa ingkee vaa vaa” eṉṟu. oru vārattil avarkaḷ āṅkila eḻuttukaḷil tamiḻai eḻutum payiṟciyai aṭaintuviṭukiṟārkaḷ.

nāṉ patiṉmūṉṟāṇṭu kālamāka āṅkila eḻuttukaḷilēyē tamiḻait taṭṭaccuceykiṟēṉ. pēcum vēkattil eḻuta muṭiyum eṉṉāl. kaṇṇetirē tamiḻ terikiṟatu, eṉ kaikaḷil āṅkila eḻutturukkaḷ ōṭukiṉṟaṉa. entac ciramamum illai. āṅkila eḻuttukaḷil eḻutappaṭṭa tamiḻai nāṉ caraḷamāka vācikkavum ceyvēṉ. ēṉ tamiḻai ivvāṟu āṅkila eḻutturukkaḷilēyē eḻutak kūṭātu?

paḷḷikaḷil itaik kaṟpittāl, kuḻantaikaḷukku orē oru eḻutturuvaik kaṟpittāl pōtum. avarkaḷ tamiḻai iṉṉum vēkamāka, iṉṉum cakajamāka vācikka atu utavum allavā? nām tamiḻaip pēcikkoṇṭirukkumvarai tamiḻ nammuṭaṉ irukkum. atai aṉaivarum caraḷamāka vācippataṟkāṉa vaḻiyai maṭṭumē yōcikkiṟēṉ. uṭaṉaṭiyākak kēḷvip paṭumpōtu caṟṟu apattamāṉa, atītamāṉa eṇṇamāka itu tōṉṟakkūṭum. āṉāl, ellā māṟṟaṅkaḷum mutalil appaṭittāṉ tōṉṟum. avaṟṟukku marapu aḷikkum kaṭumaiyāṉa etirppum mukkiyamāṉatu. anta etirppaiyum karuttilkoṇṭu veṟṟi peṟṟu nikaḻakkūṭiya māṟṟamē ākka pūrvamāka irukkum. ākavē, nām itai vivātikka vēṇṭumeṉa niṉaikkiṟēṉ.

uṭaṉaṭiyākac ceyyakkūṭiyatalla itu. ārampap paḷḷi mutalē āṅkila eḻuttukaḷil tamiḻaik kuḻantaikaḷukkuk kaṟṟukkoṭukka vēṇṭum. kuḻantaikaḷ atikapaṭcam oru varuṭattil itaik kaṟṟuk koḷḷum. ataṟkēṟpa toṭarcciyākat tamiḻiṉ nūlkaḷai ellām anta eḻutturuvukku māṟṟikkoṇṭē irukka vēṇṭum. iraṇṭu eḻutturukkaḷumē orutalaimuṟaik kālam puḻakkattil irukkalām. mēlum, iṉṟaiya toḻil nuṭpattil enta ōr eḻuttaiyum ōr eḻutturuviliruntu iṉṉoṉṟukku eḷitil māṟṟikkoḷḷalām.

malāy pōṉṟa pala moḻikaḷ iṉṟu āṅkila eḻutturukkaḷilēyē eḻutappaṭu kiṉṟaṉa. anta makkaḷ āṅkilam kaṟpatu eḷitākiṟatu. malāy moḻi vāḻavum ceykiṟatu. ataṉ eḻutturukkaḷait taṉiyāka evarum payila vēṇṭiyatillai. koñcam pēcat terintavarkaḷ atai vācittuviṭalām. āṅkila eḻutturukkaḷ malāy moḻiyai vaḷappaṭuttavē ceykiṉṟaṉa. intiyāvil uḷḷa moḻikaḷ aṉaittum āṅkila eḻutturukkaḷil eḻutappaṭṭāl perumpālāṉa moḻikaḷai mikac cila nāṭkaḷilēyē vācittup purintukoḷḷa muṭiyum. teṉṉaka moḻikaḷaip pirippatu avaṟṟiṉ vēṟupaṭṭa eḻutturukkaḷtāṉ. maṟṟapaṭi avai 70% oṉṟē.

eḻutturukkaḷ moḻiyiṉ māṟāta aṭaiyāḷaṅkaḷ alla. tamiḻ ārampa kālattil pirāmi eḻutturuviltāṉ eḻutappaṭṭaṉa. anta eḻuttukaḷil iruntu vaṭṭeḻuttu uruvākivantatu. anta eḻutturu kaiviṭappaṭṭu, iṉṟaiya eḻutturu vantirukkiṟatu. accu vaṭivukku vanta piṉ inta eḻutturuvil ērāḷamāṉa māṟutalkaḷ vantuḷḷaṉa. payiṟci peṟṟa oruvarē nūṟāṇṭukaḷukku muntaiya cuvaṭikaḷai vācikka muṭiyum. varuṅkālattukkāka nam eḻutturukkaḷai māṟṟikkoṇṭāl atil piḻaiyillai eṉṟē paṭukiṟatu. atu kātil tamiḻ kēṭkum cūḻalkoṇṭa, tamiḻaip purintukoḷḷakkūṭiya evarum tamiḻil vācikkum cūḻalai uruvākkum. tamiḻ varuṅkālattilum vācikkappaṭum. illai yēl, tamiḻ oruvakaip pēccu vaḻakkāka maṭṭumē nīṭikkum. atil ilakkiyamum aṟivut tuṟaikaḷum nikaḻāmal pōkum. camskirutampōlap pātukākkappaṭum tolporuḷākavō palvēṟu paḻaṅkuṭi moḻivaḻakkukaḷpōla naṭaimuṟai urai yāṭalukkāṉa oṉṟākavō maṭṭumē tamiḻ nīṭikkum.

- jeyamōkaṉ, eḻuttāḷar, toṭarpukku: jeyamohan.novelist…gmail.com 

அன்புடன்
செல்வா


2013/11/4 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Nov 4, 2013, 5:47:38 PM11/4/13
to tamil...@googlegroups.com

சிறுகதை, பெருங்கதை, புதுக்கவிதை, இதெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. எப்போதாவது அவற்றை எட்டிப் பார்ப்பேன், முதல் இரண்டு மூன்று வரிகள் அலுக்காமல் இருந்தால் மட்டுமே தொடர்ந்து படிப்பேன், அவ்வளவே. அதனால் அவற்றைக் குடைந்து அவற்றைப் படைத்தவர்களைக் குறைசொல்ல மாட்டேன். எனக்குப் பயிற்சியில்லாத அறிவில்லாத திறமை இல்லாத ஒரு துறையில் புகுந்து புறப்படும் நேர்மையின்மை இன்னும் என்னை ஆட்கொள்ளவில்லை, தமிழன்னையின் அருளால்!


ஆனால், இணையத்துக்கு வந்ததால் எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையைப் படித்து வியந்துபோனேன். ஒரு புத்தக விற்பனையை வைத்து இவ்வளவு சொல்ல முடியுமா??!!!


++++++++++++++++++++++


ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன


ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாதுதான், சொகுசான நம் வாழ்க்கை இன்றுபோல் என்றும் இனிதாகப் போய்க்கொண்டிருக்கும்வரை! ஆங்கிலவழிக் கற்கும் உங்கள் பரம்பரைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குப்போய் அங்கே பல நாட்டுக்குழந்தைகளும் தத்தம் மொழியைத் தவறாமல் அதனதன் எழுத்துருவில் கற்றுத் தேர்ந்து, உங்கள் (கொள்ளுப்)பேரக்குழந்தைகளிடம் ‘உன் தாய்மொழி என்ன?’ என்று கேட்கும்போது என்ன சொல்வதென்று புரியாமல் பிறகு ஏதாவது ஒன்று சொல்லவேண்டுமேயென்று 'டமில்’ என்று சொல்லி (ஏனென்றால் வேறு யாரும் உங்கள் குழந்தைகளை அவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!) பிற்காலத்தில் உங்கள் பரம்பரையினர் தங்கள் ஆய்வுக்காக உங்கள் ஊருக்கே திரும்பிவந்து தொல்லகழ்வு நிகழ்த்தி உங்கள் எலும்பையே தோண்டியெடுத்து உங்களையே அடையாளம் புரிந்துகொள்ளாமல் … ‘அட இது ஒரு டமிலனின் எலும்புடா’ என்று ஏதோ ஒரு மொழியில் பிதற்றும்போது நீங்கள் இறந்திருப்பீர்கள், ஆனால் உங்கள் ஆவி/உயிர் எங்கே எந்த வடிவில் பிறந்திருந்தாலும் சிறிதாவது நெளிந்து புண்படும்; பழவினை விடாது!


குழந்தைகளும் தமிழ் எழுத்துருவும்

------------------------------------------------

1. தமிழ்க்குழந்தைகள் தமிழ் எழுத்துருவைக் கற்றுக்கொள்ளச் சிக்கல் என்று சொல்லுவது ‘வயதுக்கு வந்துவிட்ட என் பெண்ணுக்கு மாதவிடாய் பற்றித் தெரியவில்லை’ என்று பிதற்றும் தாயின் உளறல் போன்றது. இது பெண்ணின் குற்றமா? தாயின் குற்றமா?


2. குழந்தைகளின் திறமையைக் குறைவாக மதிப்பிடவேண்டாம். இங்கேயுள்ள பலருக்கும்போல எனக்கு அயல்நாட்டினர் தொடர்பு மிகுதி. எபிரேயக் குழந்தைகளின் மொழியறிவு நம் எல்லாரையும் வியக்கவைக்கும். ஒரு குழந்தை, 3 வயதிருக்கும், ‘உன் பெயர் என்ன’ என்று அமெரிக்க-ஆங்கிலத்தில் கேட்டால் மிக அழகாக அமெரிக்க-ஆங்கில ஒலிப்பில் தன் பெயரைச் சொல்லும்; அவளுடைய தந்தை எபிரேய மொழியில் கேட்டால் அதே பெயரை எபிரேய ஒலிப்பில் சொல்லும். பேச்சில் மட்டுமில்லை, எழுத்திலும் அப்படியே! வலமிருந்து இடம் எழுதும் முறையும் இடமிருந்து வலம் எழுதும் முறையும் அந்தக் குழந்தையைக் குழப்பவில்லை, இது உண்மை! அடுத்தவீட்டுச் சீனர்களின் குழந்தைகளும் அப்படியே. நம் ஊரிலும் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட தோழியரும் மாணவியரும் எனக்குப் பலர். மதுரைக் காஜிமார் தெரு எனக்கு அண்டை வீடு. சிறு வயதில் என் தோழியர் என் பெயரை உருதுவில் எழுதக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று என் மாணவி ஒருத்தி தமிழ்ப் புறநானூற்றை உருதுவில் மொழிபெயர்த்திருக்கிறாள். தமிழ்க் கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறாள். இது எப்படி முடிந்தது? உருதுவை ஆங்கில எழுத்தில் அவள் எழுதிப் படித்திருந்தால் தமிழ் உருது ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளையும் கொலைசெய்திருப்பாள். அவளுடைய பேரக்குழந்தைகளுக்கு உருது, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியும் - எழுதவும் பேசவும். இது எப்படி முடிகிறது?


12 அகவைக்குள் 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்த தமிழ்ப்பெண்களைப் பற்றி நமக்குத் தெரியும். நானே என் 13 வயதிற்குள் கற்றவை பல. பிற்காலத்தில் அப்படி முடியவேயில்லை; எல்லாமே நுனிப்புல் கல்வியே. பிள்ளைப்பருவத்து மூளை உறிஞ்சுவது போலப் பிற்காலத்திய மூளை உறிஞ்சாது. ஏற்கனவே படித்தவற்றை அசைபோடும், ஆழமாக்கும், அகலப்படுத்தும், விரிவாக்கும், அதற்குமேலே பிறவற்றை அடுக்கிக்கொள்ளும், அவ்வளவே. புதிதாகப் படிப்பவற்றையும் பழைய படிப்பின் பின்னணியிலேயே நினைத்துப் பார்க்கும். எனவே, ஏதானாலும் 12 வயதிற்குள் கற்கும்படிக் குழந்தைகளை ஊக்குவியுங்கள்.  


3. குழந்தைகள் கற்கத் தொல்லைப்படுகிறார்கள் என்றால் அது கற்பிக்கும் பெற்றோரின் திறமையின்மையையும் இயலாமையையும் குறிக்கிறது. ஆசிரியர்களின்மேல் பழியைப் போடுவது மிக மிக மிகத் தரக்குறைவான செயல். இக்காலப் பெற்றோருக்கு ஏகப்பட்ட கடமைகள் — தொலைக்காட்சி பார்க்கணும், திரைப்படங்கள் பார்க்கணும், மின்னிணையத்தில் வம்படிக்கணும், இன்ன பிற!! என் மிகச்சிறு வயதில் என் தாத்தா எனக்காக நேரம் ஒதுக்கிக் கணக்கும் திருக்குறளும் சொல்லிக் கொடுத்திருக்காவிட்டால் இன்று எப்படி ஆயிருந்திருப்பேனோ! (இராம.கி ஐயாவுக்கு இந்தச் செய்தி பிடிக்கும் — உறவினர் குழந்தைகள் கூட்டத்தோடு மதுரையில் அந்தக் காலத்தில் இருந்த மிகப் பெரிய ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட என்னையும் அண்ணனையும் மிகக் குறுகிய நாட்களில் அங்கேயிருந்து விலக்கித் தமிழ்ப்பள்ளியில் சேர்த்தார் என் தாத்தா!)


4. தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினால்தான் உங்கள் குழந்தைகள் தமிழைக் கற்க முடியும் என்றால் அதுக்கு மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது. மொழியியலாளருக்கு இது தெரியும். International Phoentic Alphabet (IPA) என்ற நெறி. அதைக் கற்றுக்கொடுங்கள். களப்பணி செய்யும்போது, அதாவது பலவகைப்பட்ட மொழிகளைப் பேசுகிறவர்களின் மொழியை ஆய்வு செய்யும்போது இந்த எழுத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். மொழியியல் வகுப்புகளில் இதற்கென்ற தனிப்பயிற்சி உண்டு. உங்கள் குழந்தைகள் ஒரு தொல்லையும் இல்லாமல் உலகில் எந்த மொழியையும் கற்றுத் தேர்ந்துவிடுவார்கள்!!


5. ஆங்கில எழுத்தில் தமிழ் கற்றுக்கொண்டால் அந்தப் பரம்பரையில் வருகிறவர்கள் ஆய்வாளராக முடியாது. பலவகைப்பட்ட தமிழ் வரிவடிவங்களினூடே பிழைத்துவந்துள்ள பழங்காலச் செய்திகளை அவர்களால் அறிந்துகொள்ளமுடியாது.


தட்டச்சும் கணினியும்

-------------------------------

1. தட்டச்சுப்பொறிக்கும் கணினிக்கும் உள்ள வேறுபாடு தெரியாத தமிழன் இருக்கமுடியாது என்றே நினைக்கிறேன். 


“ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன்” என்ற கூற்று எனக்கு விளங்கவில்லை. 


தட்டச்சுக் கருவியோ கணினியோ அதன் முகப்பில் இருக்கும் விசைப்பலகையைத்தானே பயன்படுத்தவேண்டும்? 


தட்டச்சுக் கருவியில் ASCII, unicode போன்ற பின்னணிக் குறியீடு இல்லை. கணினியில் அவை உண்டு. இது தெரிந்திருக்கும். 


///ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை.///


இது சிரமமில்லை என்று சொல்லமுடியாது. நானும் கணினித்திரையில் தமிழ் எழுத்துருவைக் காண எடுத்த முயற்சிகள் பல. பெருங்கணினி உருவான பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) பயின்றவள் நான். அங்கேதான் என் கணினிப் பயிற்சி தொடங்கிற்று. இதில் உள்ள தொழில் நுட்ப நுணுக்கங்கள் பல; அவற்றைத் தனியாகப் பேசி உரையாடவேண்டும். 


++++++++++++++++++++++

சரி, எல்லாம் கிடக்கட்டும். தமிழைப் படிக்க முயன்று வெற்றிபெற்ற முதல் அயல்நாட்டுப் பாதிரியார் (Henrique Henriques) என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.


தமிழ் எழுத்து முறையை அறிமுகப்படுத்தின கையோடே பாதிரியார் சொல்கிறார்: “Note that each one of the characters mentioned above is distinct in pronunciation just as it is in writing, and we are likely to pronounce them badly.”

 


“What is written here in Malabar [script], and some things that will be written later on, are the same as what is written in our [Portuguese] letters. However, in order to know well how to pronounce and to accent them, it is good to read and write in Malabar script.”


போதுமா?

+++++++++++++++++++++++ 

இப்படிக்கு,

ராஜம்

ருத்ரா

unread,
Nov 4, 2013, 7:48:03 PM11/4/13
to tamil...@googlegroups.com, ndsun...@hotmail.com



அன்று தேவநாகரியில் தமிழைப்படியுங்கள் எழுதுங்கள் என்று சொல்வதைப்போல் தான் இந்த "ரோம நாகரி"த்திட்டம்.ஐரோப்பிய மொழிகள் ஒரே ரோமன் எழுத்து வடிவத்தில் இருப்பதால் மேலை நாட்டு மக்களைப்போல் தமிழையும் "ரோமன்"வடிவத்துக்கு கொண்டு வர நினப்பது தமிழ் வடிவத்தையே குழி தோண்டி
புதைப்பது போல் தான்.கல்வெட்டுகளில் உள்ள பிராம்மி வடிவத்தை வைத்தே நம் தமிழ் வடிவத்தை சரியாக இன்னும் "தரிசனம்"செய்ய முடியவில்லை.அதற்குள் கோவிலைச்சாத்து என்பது போல் தான் இதுவும்.இன்றைய கணினி யுகத்தில்கல்லை உயிர்ப்பித்து புழு பூச்சி உண்டாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.இவர் என்னடாவென்றால் தமிழ் வடிவத்திற்கு ஆங்கில வடிவத்தில் பாடை கட்டிவிடலாம் என்கிறார்.ஏன் ஒரு முயற்சி முறையில் இவர் வெளியிடும் அடுத்த வெளியீட்டை "ஆங்கில வடிவத்தில்"அச்சிட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக் குவிக்கட்டுமே. மொழியின் தொன்மை தேடி டி.என்.ஏ ரேகை யெல்லாம் தோண்டி துருவும் இந்நேரத்தில் ஆங்கிலத்தில் "மார்ச்சுவரி ஐஸ் பெட்டியில்"தமிழை அழகு பார்க்கும் எண்ணம் இவருக்கு எப்படி வந்தது.அதிரடி திகில் மூலம் எழுத்தாளராய் வலம் வரும் இவர் ஃப்ராம்கென்ஸ்டீன்" ஆக வந்து தமிழை காப்பாற்றப்போகிறேன் என்பது நகைப்புக்குரியது.ஏற்கனவே
பியுடி புட்  புயுடி பட் பிஓடி பாட் சிஏயுஜிஹெச்டி காட் என்றெல்லாம் ஒலிப்பு
வேறுபாடுகளை ஜார்ஜ் பெர்னாட்ஷாவே ஆங்கிலத்தை கிண்டல் பண்ணியிருப்பதை எல்லோரும் அறிவார்களே.காதல் என்பது ஆங்கில வடிவில்
காடல் கடல் காத்ஹால் என்று ஒலிக்கப்படும் குழப்பங்களுக்கு ஒரு புத்தகத்தோடு தனியாய் இன்னொரு புத்தகம் புத்தகம் போடவேண்டிருக்கும்.
உலக மொழிகள் எல்லாவற்றையும் ரோம நாகரியில் படிக்க முடிகிறது என்பது உண்மை தான்.அதற்காக மொழியின் தனி வடிவத்தை தாரை வார்க்க முடியுமா? எகிப்து சீன மொழி வடிவங்கள் தங்கள் ஓவிய வடிவங்களுக்காகவே
எல்லோராலும் ஆர்வத்துடன் அணுகப்படுகின்றன.தமிழுக்கும் அப்படியொரு
தொன்மை வடிவங்கள் சிந்துவெளி முத்திரைகளில் பதிந்து கிடப்பதாக சொல்கிறார்கள்.தமிழ் மொழியின் தொல்லியல் ஆராய்ச்சிக்கு இது ஊறு விளைவிக்கும்.அகழ்வாராய்ச்சியில் ஒட்டியிருக்கும் மண்ணை சுத்தம் செய்யும் புருசுவையே அந்த மொழி வடிவம் ஆக்குவது போல் தான் இந்த "ரோம நாகரி"
எழுத்து முறை. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்.

===================================ருத்ரா

N Deiva Sundaram

unread,
Nov 4, 2013, 8:00:37 PM11/4/13
to Tamilmanram
Date: Tue, 5 Nov 2013 06:30:07 +0530
Subject: RE: [gbinfitt] RE: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

 

ஒரு மொழியின் எழுத்துகள் - வரிவடிவம் - என்பது  அம்மொழியில் பயன்படும் அனைத்து பேச்சு ஒலிகளுக்குமான ( phones)  குறியீடுகள் இல்லை.
பொருள் வேறுபாட்டை ( meaning differentiation)  உணர்த்தவே பேச்சொலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பேச்சொலிகள் தாமாகவே பொருளை வெளிப்படுத்துவதில்லை. வேறுபடுத்துவதில்லை.  அவை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் ( structured) அமைந்து - ஒலியன்களாக ( Phoneme) , அசைகளாக ( Syllable)  - அமைந்துதான் பொருளை வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தமுடியும்.  

அக்குறிப்பிட்ட கட்டமைப்பை வெளிப்படுத்துவதுதான் எழுத்துகள் ( Grapheme) . அக்கட்டமைப்புக்குத்தான் எழுத்துகள்  அமைகின்றன. எடுத்துக்காட்டாகத் தமிழில் கடல், தங்கம், பகல் என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முதல் சொல்லில் உள்ள க் , இரண்டாவது சொல்லில் உள்ள க், மூன்றாவது சொல்லில் உள்ள க் ஆகிய மூன்றும் வெவ்வேறு பேச்சொலிகள். இவை மூன்றும் ஒரே இடத்தில் வராது ( Complimentary distribution) . ஆனால் இம்மூன்றுக்கும் ஒரே எழுத்துதான். ஆனால் இந்தியில் இவற்றிற்கு வெவ்வேறு எழுத்துகள். இதற்குக்க காரணம் தமிழில் இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  உறுப்பினர்கள் -  மாற்றொலிகள் ( Allophones) . ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. வந்து பொருள் வேறுபாட்டைத் தராது. ஆனால் இந்தியில் இந்த மூன்றும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே இடத்தில் வந்து, பொருள் வேறுபாட்டைத் தரும். அதாவது தனித்தனி ஒலியன்கள் ( Phonemes) . எனவேதான் இந்தியில் அவற்றிற்குத் தனித்தனி எழுத்துகள். தமிழில் அவற்றிற்கு ஒரே எழுத்து. 

தமிழில் ஒவ்வொரு ஒலியனுக்கும் - 12 உயிர், 18 மெய் - எழுத்துகள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்த கட்டமாக,  ஒலியன்கள் அசைகளாக அமைகின்றன. ஒரு சொல்லை உச்சரிக்கும்போது எத்தனை தடவை வாய் திறக்கப்பட்டு, காற்றுக்கொத்து ( air puff)  வெளிவருகிறதோ, அத்தனை அசைகள் அச்சொல்லில் உண்டு. காற்றுக்கொத்து வெளிவரும்போது உயிர் ஒலி  பிறக்கும். அதற்குத் துணையாக முன்னும் பின்னும் மெய் ஒலிகள் அமையலாம். மெய் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்கமுடியாது. ஆனால் உயிர் ஒலியைத் தனியாகப் பிறப்பிக்கமுடியும்.  அக்கா என்ற சொல்லில் வாய் இரண்டு தடவை ( அக்-கா) திறக்கிறது. எனவே இரண்டு அசைகள். முதல் அசையில்  அ ( உச்சி - peak)  - க்( ஒடுக்கம் - coda)   என்ற இரண்டும் அசையின் உறுப்புகள்.  இரண்டாவது அசையில் க் ( தொடக்கம் - onset) - ஆ ( உச்சி)  என்ற இரண்டும் அசையின் உறுப்புகள். 

தமிழில்  அசையின் உச்சிகளுக்குத் ( உயிர்களுக்கு)தனி எழுத்துகள் . அசையின் ஒடுக்கத்திற்கு ( மெய்களுக்கு) தனி எழுத்துகள். இதுபோக,  தொடக்கம் , உச்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொகுதிகளுக்கும் ( உயிர்மெய்கள்) எழுத்துகள். உயிர்மெய் எழுத்துகளை அசை எழுத்துகள் ( syllabic scripts) என்று அழைக்கலாம். தனித்தோ அல்லது மெய்யோடு இணைந்தோ காற்றுக்கொத்து வெளியிடப்படும்போது , அதற்கென்று எழுத்துவடிவம் அமைந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்றாகும். அசையின் தொடக்கம், உச்சி, ஒடுக்கம் ஆகியவை தனித்தனி ஒலியன்களாகும். தொடக்கமும் உச்சியும் இணைந்தது அசையாகும். 

அசையானது ஒடுக்கம் இல்லாமலும் ( மெய் )  முடியலாம்.  ஒடுக்கத்தோடும் ( மெய்)  முடியலாம். 
எனவே தமிழின் எழுத்துவடிவங்கள் ஒலியன், அசை என்ற அமைப்புகளை - கட்டுக்கோப்புகளை-  வெளிப்படுத்தும் ஒரு குறியீடு. பொருளற்ற குறியீடு அல்ல.

மேலும் தமிழில் எழுத்துவடிவத்திற்கும் உச்சரிப்புக்கும்  மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்கமுடியும். ஆங்கில எழுத்துமுறை வேறு.  எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுதுவதை அப்படியே உச்சரிக்கமுடியாது. உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ளவேண்டும். எனவேதான் டானியல் ஜோன்ஸ், கிம்சன் போன்றோர் ஆங்கிலத்திற்குத் தனியே உச்சரிப்பு அகராதி வெளியிட்டுள்ளார்கள். தமிழுக்கு மாற்றொலி விதிகளைக் கற்றுக்கொடுத்தால் போதும்.

இவ்வாறு தெளிவான அமைப்பு அடிப்படை தமிழுக்கு இருக்கும்போது, ரோமன் எழுத்தில் தமிழை எழுதவேண்டும் என்று சொல்வது   உடல் உறுப்புகளை வெறும் படமாகப் பார்ப்பது போலாகும்.  அவற்றை இயக்கும் உயிரை கவனத்தில் கொள்ளாத போக்காகும். இதயமோ, நுரையீரலோ , சிறுநீரகமோ வெறும் உறுப்புகள் அல்ல. உயிரை இயக்குவதற்காக - அதற்கேற்றவாறு - அமைந்துள்ள உறுப்புகளாகும்.

அதுபோன்றே  ஒரு மொழியின் எழுத்துகள். இந்த அடிப்படையை மனதில் கொள்ளாமல், ரோமன் எழுத்தில் தமிழை எழுதச் சொல்வதோ அல்லது தன் விருப்பத்திற்கு எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் கருத்துகளை முன்வைப்பதோ தவறு. கண்ணை வெட்டிக் காலில் வைக்கமுடியாது. காலை வெட்டித் தலையில் வைக்கமுடியாது. 

பேசுவதை அப்படியே எழுதுவது என்பது மொழியியல் ஆய்வுக்குத் தேவைப்படும். அதற்குப் பன்னாட்டு ஒலியியல் கழகம் ( International Phonetic Association)  உருவாக்கியுள்ள பேச்சொலி எழுத்துகள் ( IPA scripts)உள்ளன.  அதைப் பயன்படுத்தலாம். 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்




To: kta...@yahoogroups.com; gbin...@yahoogroups.com
From: ndsun...@hotmail.com
Date: Mon, 4 Nov 2013 13:40:40 +0530
Subject: [gbinfitt] RE: [ktamil] ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர்

__._,_.___
Recent Activity:
CONFIDENTIALITY NOTICE: This message (including any attachments) is
intended only for the use of the individual or INFITT Members and Mailing list to whom it is addressed and contains information that is privileged and confidential. As INFITT member you should not disclose, disseminate,
distribute, copy or use any of the information contained in this
transmission . Thank you.

WARNING:  Unauthorised dissemination, distribution, copying or reliance on this communication is prohibited and may attract  liabilities
.

__,_._,___

Elangovan N

unread,
Nov 4, 2013, 8:18:47 PM11/4/13
to tamilmanram
//

ஐரோப்பிய மொழிகள் ஒரே ரோமன் எழுத்து வடிவத்தில் இருப்பதால் மேலை நாட்டு மக்களைப்போல் தமிழையும் "ரோமன்"வடிவத்துக்கு கொண்டு வர நினப்பது தமிழ் வடிவத்தையே குழி தோண்டிபுதைப்பது போல் தான்.
//

நல்ல கருத்துகள் திரு.உருத்ரா.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/11/5 ருத்ரா <eps...@gmail.com>

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 5, 2013, 5:33:42 AM11/5/13
to tamil...@googlegroups.com
சிறப்பான கருத்துக்களை முன்வைக்கும் பதிவொன்றை நண்பர்கள் காணப் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: வினையூக்கி செல்வா <amie....@gmail.com>
தேதி: 4 நவம்பர், 2013 9:47 PM
தலைப்பு: [பண்புடன்] தமிழுக்குத் தேவை சீன வரிவடிவம் - கட்டுரை
பெறுநர்: பண்புடன் <panb...@googlegroups.com>


சில விசயங்களுக்கு மூக்கை மூடிக் கொண்டுப் போய் விடலாம் என்றாலும் ,
அப்படியே அமைதியாக இருந்து கொண்டு இருந்தால் எல்லா ஆற்றிலும் அவரவர்
வீட்டு சாக்கடைகளைக் கலந்து விடுவார்கள். தமிழில் எழுதும் ஓர்
எழுத்தாளர் , தமிழ் வரி வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்தை தமிழ்
தினசரி ஒன்றில் எழுதி(http://tamil.thehindu.com/opinion/columns/ஆங்கில-எழுத்துருவில்-தமிழை-எழுதினால்-என்ன/article5311674.ece)
இருந்ததை வாசிக்க நேர்ந்ததன் எதிர்வினை என்பதாக இந்தக் கட்டுரையைப்
படியுங்கள்.


நாகரிகத்தின் தொடர்ச்சி , சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சி ஆகியன மொழியை
மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் அதன்
சொந்த வரிவடிவத்தையும் சார்ந்தது. ஒன்றாய் இருந்தத் தமிழ் , மூன்றாய்
நான்காய், ஐந்தாய் , இன்று திராவிட மொழிக் குடும்பமாய் மாறியதற்கு காரணம்
வெவ்வேறு காலக் கட்டங்களில் தமிழ் வழக்குகளாக இருந்த தெலுங்கு ,
கன்னடம், மலையாளம் ஆகியன தங்களுக்கு என்று புதிய வரி வடிவங்களை
ஏற்றுக்கொண்டமைதான். சிந்து சமவெளி வரி வடிவங்கள் தமிழுக்கானவை என்றக்
கருத்தும் உண்டு. இந்தக் கருத்தை ஒட்டி, கைபர் போலன் கணவாய் வழி வந்த
காட்டுமிராண்டி படையெடுப்புகள் , பேச்சு மொழியை மட்டும் விட்டுவைத்து
விட்டு , பயன் பாட்டு வரிவடிவத்தை மாறி இருந்து இருக்கும் என்பதையும்
முன் வைக்கலாம்.


சில மாதங்களுக்கு முன்னர், துருக்கியத் தோழி ஒருவரிடம் , நவீன
துருக்கியின் தந்தை முஸ்தபா கமால் அத்தாதுர்க்கைப் பற்றி சிலாகித்துப்
பேசிக் கொண்டு இருக்கையில், அந்த தோழி சொன்னது, 'அத்தாதுர்க் அற்புதமான
தலைவர், ஆனால் ஒரு விதத்தில் துருக்கிய வரலாற்றில் கரும்புள்ளி அவர் ...
அற்புதமான துருக்கிய கடந்த காலத்தை எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாகத்
துண்டித்து விட்டார்"


அந்தத் துருக்கியத் தோழி அப்படி சொன்னதற்கான காரணம் , 1928 ஆம் ஆண்டு ,
அத்தாதுர்க் , அரேபிய வரி வடிவத்தில் அமைந்து இருந்த துருக்கிய மொழி, இனி
லத்தீன் வரி வடிவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் என அறிவித்ததுதான்.
பழைய வரி வடிவம் தடை செய்யப்பட்டது. ஓட்டோமான் துருக்கியர்களின் மேல்
நூற்றாண்டுகளாக கடுங்கோபம் கொண்டிருந்த மேற்கத்திய உலகம், மேற்கத்திய
மோகம் கொண்ட , அத்தாதுர்க்கைக் கொண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது
என்பது துருக்கியத் தோழியின் கருத்தாக இருந்தது. இன்றைய துருக்கியத்
தலைமுறைக்கு , ஓட்டோமான் துருக்கிய பண்பாட்டு ஆக்கங்களை அதன் உண்மையான
வடிவில் வாசிக்கத் தெரியாது.மொழி மாற்றத்தில் தொலைந்தவைகளை விட வரிவடிவ
மாற்றத்தில் தொலைந்தவைகள் தாம் ஏராளம்.


பாரசீகம் இஸ்லாமைத் தழுவிய பொழுது, அரேபிய வரி வடிவத்தையும் தழுவிக்
கொண்டது. உலகப் போர்களுக்குப் பின்னர் ஈரானில் லத்தீன் வரி வடிவத்திற்கு
மாறிக்கொள்ளலாம் என கருத்தாக்கங்கள் எழுந்த பொழுது எல்லாம், இஸ்லாமிய
அடையாளம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி மாற்றப்படவில்லை. உயிர்
எழுத்துகளுக்கான சரியான வடிவங்கள் இல்லை என்ற குறைபாடு இருந்த பொழுதிலும்
, இன்றைய தலைமுறை கடந்த காலத்துடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கின்றது
என்ற மகிழ்ச்சி பாரசீக மக்களுக்கு உண்டு. லத்தீன் வரி வடிவம் இன்றி சொந்த
கிரேக்க வரி வடிவத்துடன் கிரீஸ் ஐரோப்பாவுடன் தான் இருக்கின்றது.


நூறாண்டுகளுக்கு முன்னர், வரி வடிவத்தை மாற்றுவதும் , இன்றையக் காலக்
கட்டத்தில் மாற்றச் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அன்று
கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக்குறைவு. ஐரோப்பாவிற்கு
நெருக்கமாக மாறவேண்டும் என்ற நிலையின் அடிப்படையில் துருக்கியில் அன்று
அந்த முடிவு எடுக்கப்பட்டது. மெல்லத் தமிழினிச் சாகும் என்றக் கூற்றைப்
பொய்ப்பிக்க திராவிட இயக்கங்கள், அதைத் தொடர்ந்து இளையராஜா, தமிழ்த்
தொலைக் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான்
இருக்கின்றன. யுனிகோட் சாத்தியத்திற்குப் பின்னர் கன்னித் தமிழ் கணினித்
தமிழாகவும் உருவெடுத்து உள்ளது.


சிலர் மலாய் மொழியை உதாரணம் காட்டுகின்றார்கள். இன்று லத்தீன்
வரிவடிவங்களில் எழுதினாலும் அரேபிய வரி வடிவமும் புழக்கத்தில் உண்டு.
மலாய் மொழி எடுப்பார் கைப்பிள்ளையாக , தொடர்ந்து வரி வடிவங்களை மாற்றிக்
கொண்டே இருந்ததன் மூலம் பல வரலாற்றுச் சுவடுகளைத் தொலைத்ததுதான்
மிச்சம். அதில் தொலைந்துப் போனது மலாய் தீபகற்ப வரலாறு மட்டுமல்ல,
தென்னிந்திய சோழர் வரலாறுகளும் தொடர்ந்த வரிவடிவ மாற்ற சுனாமிகளால்
காணாமல் போனது.



இந்தோனேசியாவைப் பொறுத்த மட்டில், அது பலவேறு தேசிய இனக்குழுக்களை
உள்ளடக்கிய பெரும் தீவுக் கூட்டம் அதனை ஒருங்கிணைக்க 'திணிக்கப்பட்ட
மொழி' ஒன்றையும் கடன் வாங்கிய லத்தீன் வரி வடிவமும்
அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.

இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்கி , லத்தின் வரி வடிவத்தை அதிகாரப்
பூர்வம் ஆக்குதல் போன்றது ஒடுக்குதல் ஆகும் அது.


தமிழ்ப் பேசும் சமூகம் ஆங்கில மோகம் கொண்டு அலைந்துத் தமிழைத்
தொலைக்கின்றது என்பதே பொய்யான வாதம். அப்படி தொலைப்பது உண்மை என்றால்
எல்லா நாளிதழ்களும் வார இதழ்களும் தங்களது இணைய வடிவங்களைத் தமிழில்
உருவாக்கி இருந்திராது.


லத்தீன் வரிவடிவத்தில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஜெயமோகன் என்பதை
Jayamokan என்று எழுதலாம். ஐரோப்பிய மொழிகளில் J என்பதற்கு ஜெ எனவும்
யெ எனவும் உச்சரிப்பு உண்டு. சில சமயங்களில் உச்சரிக்கவும் படாது.
வருங்காலத் தலைமுறை Jayamokan என்ற பெயரைப் படிக்கையில் J வை
உச்சரிக்காமல் விட்டு விட்டு ஆயா மூக்கன் அதன் பின்னர் ஆய் மூக்கன்
எனவும் மாறிவிட வாய்ப்பு உண்டு.


காந்தி மற்றவர்களுக்கு போதிக்கும் முன்னர் சுயப் பரிசோதனை செய்து
கொள்வாராம். இந்து ஞான மரபு கூட அதைத் தான் சொல்லுகின்றது
எனப்படித்ததும் நினைவுக்கு வருகின்றது. எழுத்துரு கட்டுரையாசிரியர்
காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் என்றும் இந்து ஞான மரபை பரப்புபவர்
என்ற வகையில் அவரே தனது அடுத்தப் புதினத்தை லத்தீன் வரி வடிவத்தில்
வெளியிடலாம்.


அந்த 'எழுத்துரு' கட்டுரை ஆசிரியர் விவாத எண்ணங்களை விதைக்கின்றார் என
சிலர் பூசி மெழுகிக் கொண்டு இருப்பதால், நாம் விவாத நோக்கில்
பார்த்தோம் என்றாலும், இன்னும் இருபது வருடங்களில் சீன மொழி தான் உலக
மொழியாகப் போகின்றது. தமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அந்தக் கட்டுரையாசிரியர் சீன வரி
வடிவங்களைத் தான் முன் மொழிந்து இருக்க வேண்டும்.


ஸ்னொவ்டன் அவர்களின் கலகத்திற்குப்பின்னர் மென் பொருள் என்றாலே ஐயப்பட
வேண்டி இருக்கின்றது. ஒரு வேளை அந்தக் கட்டுரையாசிரியருக்கு தமிழ்த்
தட்டச்சு மென்பொருள்கள் மேல் சந்தேகம் வந்து இருக்கலாம். எதற்கு சின்ன
எலி பெரிய எலிக்கு தனித்தனி பொந்துகள் , ஒரேப் பொந்தாக , தனித் தனி
மென்பொருள் தேவையின்றி லத்தீன் வரி வடிவம் இருந்தால் Thamiz Vazhka எனச்
சொல்லிவிடலாம் எனக் கருதி எழுதி இருப்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள
வேண்டும்.


லத்தீன் வரி வடிவம், தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளுக்கும்
பின்பற்றப்படுமானால் ஒரு பயன் இருக்கின்றது. மலையாளம் , சேரலத்து தமிழ்
வழக்காக மீண்டும் தமிழுடன் சேரும். பின்னர் தொடர்ந்து துளு, கன்னடம்
தெலுங்கு என இந்த வரி வடிவ மாற்றத்தால் தமிழுடன் சேர்ந்து தமிழ்
செழுமையுறும் என கட்டுரையாசிரியர் நினைத்து இருந்து இருக்கலாம் என நாமும்
நம் பங்கிற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டிவிடுவோம்.


குரூர அரசியல் நகைச்சுவையாக நீண்ட நாட்களுக்கு முன்னர் , நண்பர் ஒருவர்
சொன்னது நினைவுக்கு வந்தது. தமிழர்களை ஒடுக்க வன்முறையைக் கையில்
எடுத்தற்குப் பதிலாக , தமிழுக்கு சமமான அந்தஸ்து உண்டு , ஆனால் தமிழ்
சிங்கள வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என உடன்படிக்கை செய்து
கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள் மலையாளிகளைப் போல தனிச் சமூகமாக மாறி
இருந்து இருப்பார்கள். ஆனால் நம்பூதிரிகளைப் போல சிங்களவர்கள்
புத்திசாலிகள் இல்லை என நண்பர் சொன்னார்.


சரி முடிவாக, அடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டுச் செல்லவேண்டும்
என்றால், தமிழைப்படியுங்கள் , இணைப்பு மொழியாக ஆங்கிலம் / ஐரோப்பிய
மொழிகளைப் படியுங்கள். இவற்றுடன் சீன வரி வடிவத்தையும் கற்றுக் கொள்ள
மறவாதீர். எதிர்காலத்தில் இழப்பின்றி வரலாற்றை வரிமாற்றம் செய்யப்
பயன்படும். சித்திர எழுத்து வரி வடிவம் தமிழுக்குப் புதிதல்ல ..
சிந்துவெளியில் இருந்த தமிழுக்கும் சித்திர எழுத்துதான்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ் : http://www.panbudan.com


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

You received this message because you are subscribed to the Google
Groups "மின்தமிழ்" group.
>>> ------------------------------
>>> ------------------------------
>>> post<http://groups.yahoo.com/group/ktamil/post%3b_ylc=X3oDMTJwZjRyZmM2BF9TAzk3MzU5NzE0BGdycElkAzIxNDk4MzAEZ3Jwc3BJZAMxNzA1ODQ4NTkxBG1zZ0lkAzY0NzYEc2VjA2Z0cgRzbGsDcnBseQRzdGltZQMxMzgzNTUyNjQz?act=reply&messageNum=6476>
>>> Reply
>>> to sender Reply to group Start a New
>>> Topic<http://groups.yahoo.com/group/ktamil/post%3b_ylc=X3oDMTJldmlnaGh2BF9TAzk3MzU5NzE0BGdycElkAzIxNDk4MzAEZ3Jwc3BJZAMxNzA1ODQ4NTkxBHNlYwNmdHIEc2xrA250cGMEc3RpbWUDMTM4MzU1MjY0Mw-->
>>> Messages
>>> in this
>>> topic<http://groups.yahoo.com/group/ktamil/message/6475%3b_ylc=X3oDMTM0MHV1aWhwBF9TAzk3MzU5NzE0BGdycElkAzIxNDk4MzAEZ3Jwc3BJZAMxNzA1ODQ4NTkxBG1zZ0lkAzY0NzYEc2VjA2Z0cgRzbGsDdnRwYwRzdGltZQMxMzgzNTUyNjQzBHRwY0lkAzY0NzU->(2)
>>> Recent Activity:
>>>
>>>
>>> Visit Your
>>> Group<http://groups.yahoo.com/group/ktamil%3b_ylc=X3oDMTJla2ZlNWU5BF9TAzk3MzU5NzE0BGdycElkAzIxNDk4MzAEZ3Jwc3BJZAMxNzA1ODQ4NTkxBHNlYwN2dGwEc2xrA3ZnaHAEc3RpbWUDMTM4MzU1MjY0Mw-->
>>> [image: Yahoo!
>>> Groups]<http://groups.yahoo.com/%3b_ylc=X3oDMTJkbG9xYnJqBF9TAzk3NDc2NTkwBGdycElkAzIxNDk4MzAEZ3Jwc3BJZAMxNzA1ODQ4NTkxBHNlYwNmdHIEc2xrA2dmcARzdGltZQMxMzgzNTUyNjQz>
>>> Switch to: Text-Only, Daily Digest • Unsubscribe • Terms of
>>> Use<http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/>• Send
>>> us Feedback
>>> .
>>>
>>> __,_._,___
>>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to tamilmanram...@googlegroups.com.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to tamilmanram...@googlegroups.com.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>


--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

C.R. Selvakumar

unread,
Nov 5, 2013, 10:47:52 AM11/5/13
to தமிழ் மன்றம்
அருமையான பகிர்வு!!

மிக்க நன்றி!

உங்கள் தாத்தாவுக்கு நன்றி! இல்லையென்றால் இப்படி ஓர் அறிஞரை
நாங்கள் பெற்றிருக்கமாட்டோம் அல்லவா?!

நீங்கள் சொன்ன எபிரேயர் உணர்வு ஏனோ நம் தமிழர்களுக்கு வருவதில்லை!

//எனவே, ஏதானாலும் 12 வயதிற்குள் கற்கும்படிக் குழந்தைகளை ஊக்குவியுங்கள்.  //

மிக உண்மை. தற்கால அறிவியல் என்ன கூறுகின்றது என்றால் ஒரு குழந்தை அகவை 5 இருக்கும் பொழுது
பள்ளிக்குச் செல்லும் முன்பே நுண்ணறிவுத்திறனை (intelligence) ஏறத்தாழ முற்றுமாய் பெற்றுவிடுகின்றதாம்.
இக்கருத்தோடு ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, இளமையில் கல் என்னும் கருத்துகளையும்
சரிவர புரிந்துகொள்ள மறுக்கின்றோம். கற்கும் திறன் என்பது உச்ச நிலையில் இருப்பது இளமையே.
மிகச்சிலருக்கே பிற்காலத்திலும் தொடர்ந்து கற்கும் திறம் இருக்கின்றது.  

//குழந்தைகள் கற்கத் தொல்லைப்படுகிறார்கள் என்றால் அது கற்பிக்கும் பெற்றோரின் திறமையின்மையையும் இயலாமையையும் குறிக்கிறது. ஆசிரியர்களின்மேல் பழியைப் போடுவது மிக மிக மிகத் தரக்குறைவான செயல். //

கட்டாயம் குழந்தைகள் காரணம் அல்லர், ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சில நேரங்களில்
கல்வி முறையும் காரணம்.  ஆசிரியர்களும் காரணம் அம்மா! இது உண்மை! எல்லோருக்கும் நல்ல
ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. பெற்றோர்கள் சில நேரம் அறவே கல்வியறிவில்லாதவர்களாகக் கூட
இருப்பார்கள் (50% உக்கும் கூடுதலானவர் இப்படி). நடுத்தர மக்களை மட்டும் வைத்துப் பேச முடியாது.
நானறிய எத்தனையோ பேர் எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள்
ஆசிரியரையும் சுற்றுப்புற நல்லோர்களையும் வைத்தே முன்னேற முடியும்.  நான் சிறுவனாக
வளர்ந்த காலத்தில் இவ்வளவு மோசமாக லளழ-நனண வேறுபாடுகள் அறியாமல் பார்த்ததில்லை.
ள-ழ திருத்தம் இல்லாமையைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் பள்ளி என்பதை யாரும் பல்லி என்றோ
நாங்கள் என்பதை நாங்கல் என்றோ ஒரு சிறிதும் கேட்டதில்லை. மிகப்பெரும் பொறுப்பின்மை
தொடக்கக்கல்வி நிலைகளில் இருந்திருக்க வேண்டும்.  இது தரக்குறைவான  குற்றம் சாட்டும் செயல் 
அன்று. எடுத்துக் கூறி திருத்தம் வேண்டப்படம் ஒன்று.  தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு
இது பற்றிய விழிப்புணர்வும், தக்கப் பயிற்சியும் தர ஏற்பாடு செய்ய வேண்டும். 


மற்றபடி திரு செயமோகனின் கட்டுரைபற்றி சொல்ல அதிகம் இல்லை.
சாகித்திய அக்காதெமி  விருது பெற்றவர், தமிழ்ப்பேராய விருது பெற்றவர்,
ஆனால் இவர் அடிக்கடி  இப்படி எதையாவது அசட்டு பிசட்டு என்று எழுதுவது வரவர
பெரும் வழக்கமாகிவிட்டது. முன்பு மாம்மூத்துக் (mammoth) கொள்கை என்று அறவே 
பிழையான பல கருத்துகளைக் கூறினார். அண்மையில் கருதுகோள்
(hypothesis) பற்றி உளறிக் கொட்டினார். இப்பொழுது "ஆங்கில" எழுத்தில்
தமிழில் எழுதுவது பற்றி உளறிக்கொட்டி இருக்கின்றார்!
(இது உரோமானிய, இலத்தீன் எழுத்து என்பது கூட அறியாதும், எழுத்துருவுக்கும்
வரியெழுத்துக்கும் வேறுபாடு தெரியாதும் எழுதும் இவர் எழுதுவதும் கொடுமை).

அன்புடன்
செல்வா



2013/11/4 rajam <ra...@earthlink.net>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Anna Sundaram

unread,
Nov 6, 2013, 7:42:11 PM11/6/13
to tamil...@googlegroups.com, <tamilmanram@googlegroups.com>, <tamil_ulagam@googlegroups.com>, thamizayam
Dear Ramki Ayya 

I had mailed this to Jayamohan  

அன்புமிக்க எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு 
ஆங்கில எழுத்துரு கொண்டு தமிழை வளர்க்கலாம் என்ற உங்கள் சிந்தனை பற்றிய எமது சில அபிப்ராயங்கள் 

என்னைப்பற்றி சிறு அறிமுகம் -நான் தமிழ் மீடியம்  இல் படித்து ஆங்கிலத்தில் பேசி பிழைப்பு நடத்துபவன் 

1. நீங்களும் நானும் ஒரு கருத்தில் ஒன்று படுகிறோம் - அது தமிழை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது என்பதில் என்றே நினைக்கின்றேன் 

நமது நோக்கம் ஒன்றாக இருப்பினும் உங்களது  வழியினால் என்ன எதிர் விழைவுகள் வரலாம் என்பதை நேரில் கண்டு வருபவன் என்பதால் இதை தங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் 

1. இன்று Fuji  தீவு / Bali - Indonesia வசிக்கும் தமிழர் தலைமுறை தன் பாரம்பரிய மொழியை தொலைத்த அவல நிலை தமிழ் நாட்டின் எதிர்கால சந்ததிக்கு வரலாம் 

2. சம்ஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சியில் வெற்றி கண்ட மொழி வல்லுனர்கள் ஏன் ஆங்கில எழுத்துரு பயன்படுத்தப் படவில்லை ?

இது பற்றி உங்களது கருத்துக்களை அறிய விரும்புகின்றேன் 

உங்களது வழி சரி அல்லது தவறு என்று அறிய தாங்கள் ஒரு முறை சிட்னி க்கு வந்தால் எனது Fiji தமிழ் நண்பர்கள் - 50 வயதில் - தமிழ் எழுத்துரு மூலம் தமிழ் படித்து - தன் பேரன் பேத்திகளுக்கு தமிழ் சொல்லிதர விரும்பும் - நண்பர்களை அறிமுகப் படுத்துகின்றேன் 


அன்பன் 
 அண்ணா சுந்தரம் சிட்னி, ஆஸ்திரேலியா 



Thank You 

With Regards
Anna Sundaram 
VAP Australia Pty Ltd
Mob: 0411242134 
VAP means Value Adding Professionals 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 9, 2013, 12:02:09 AM11/9/13
to தமிழ் மன்றம், <tamil_ulagam@googlegroups.com>, thamizayam



2013/11/7 Anna Sundaram <anna.s...@vapaustralia.com>
சில அபிப்ராயங்கள் 
2. சம்ஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சியில் வெற்றி கண்ட மொழி வல்லுனர்கள் ஏன் ஆங்கில எழுத்துரு பயன்படுத்தப் படவில்லை ?

இது பற்றி உங்களது கருத்துக்களை அறிய விரும்புகின்றேன் 
கப் படுத்துகின்றேன்

வணக்கம், சிறப்பான கருத்துக்கள். 
சமக்கிரதத்தில் கலப்பை விரும்பாது பேணிக்காக்க விரும்பும் குழு சீர்திருத்தம் என்று சொல்லித் தமிழில் மூக்கை நுழைக்கிறது. வேறு சிலர் தன் அறிவு பற்றியும், தமிழ் வருங்காலத்தில் அக்கறை போலவும் பொய்த்தோற்றம் காட்டிக்கொள்கிறார்கள் என்று ஒரு பதிவு முன்பு படித்தேன்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.    

DEV RAJ

unread,
Nov 9, 2013, 5:36:16 AM11/9/13
to tamil...@googlegroups.com
atra sargo visargaś ca sthānaḿ poṣaṇam ūtayaḥ |
manvantareśānukathā nirodho muktir āśrayaḥ ||


avyākṛta-guṇa-kṣobhān mahatas tri-vṛto 'hamaḥ|
bhūta-sūkṣmendriyārthānāḿ sambhavaḥ sarga ucyate||


puruṣānugṛhītānām eteṣāḿ vāsanā-mayaḥ|
visargo 'yaḿ samāhāro bījād bījaḿ carācaram ||

வேந்தன் அரசு

unread,
Nov 9, 2013, 9:15:23 AM11/9/13
to தமிழ் மன்றம்



2013/11/9 DEV RAJ <rde...@gmail.com>

--

தேவ் ஐயா

நீங்கள் இலத்தீன் மொழி கூட அறிவீரா? சொல்லவே இல்லையே ?


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Nov 9, 2013, 9:57:12 AM11/9/13
to tamil...@googlegroups.com
On Monday, 4 November 2013 19:55:47 UTC+5:30, செல்வா wrote:
ceṉṉaiyil perum āṅkilap puttakak kaṭaiyoṉṟil ōr aṟivippaip pārttēṉ. aṉṟu vantucērnta āṅkila nūl oṉṟu 2,000 piratikaḷ viṟṟirukkiṟatu eṉṟu coṉṉatu atu. paraparappāka viṟkum oru tamiḻ nūl varuṭam 2,000 piratikaḷtāṉ viṟkum. atil 1,500 piratikaḷ nūlakattukku vāṅkappaṭupavai. tamiḻakam muḻukka 500 piratikaḷ vācakarkaḷiṭam viṟkappaṭṭāl atu oru cātaṉai!

nam iḷaiya talaimuṟai ērāḷamāka vācikkiṟatu. āṉāl, tāymoḻikaḷil vācippatillai. kāraṇam, intiyāveṅkum āṅkilak kalvi paravalākivarukiṟatu. ulakamayac cūḻalil āṅkilamē vēlai vāyppuk kalvikkuriya moḻi eṉa niṟuvappaṭṭuviṭṭatu. atu teḷivāṉa uṇmaiyumkūṭa. ākavē, etirkālattilum āṅkilamē iṅkē kalviyiṉ moḻiyāka irukkum. atait taṭukkavē muṭiyātu. varalāṟṟiṉ pōkku atu. ataṟku etirākap piṭivātamāka nilaikoḷvatu aṭippaṭaivātam maṭṭumē.
 


On Saturday, 9 November 2013 16:06:16 UTC+5:30, DEV RAJ wrote:
atra sargo visargaś ca sthānaḿ poṣaṇam ūtayaḥ |
manvantareśānukathā nirodho muktir āśrayaḥ ||


On Saturday, 9 November 2013 19:45:23 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
நீங்கள் இலத்தீன் மொழி கூட அறிவீரா?
  

அது செல்வா அவர்கள் எடுத்துக்காட்டிய அதே எழுத்துரு, வேந்தரே.
அதிகப்படியாக ஒன்றுமில்லை. கற்பனையுலிகிலிருந்து
விரைவில் மீண்டு வெளிவருவீராக



தேவ்

வேந்தன் அரசு

unread,
Nov 9, 2013, 10:12:26 AM11/9/13
to தமிழ் மன்றம்



9 நவம்பர், 2013 9:57 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Monday, 4 November 2013 19:55:47 UTC+5:30, செல்வா wrote:
ceṉṉaiyil perum āṅkilap puttakak kaṭaiyoṉṟil ōr aṟivippaip pārttēṉ. aṉṟu vantucērnta āṅkila nūl oṉṟu 2,000 piratikaḷ viṟṟirukkiṟatu eṉṟu coṉṉatu atu. paraparappāka viṟkum oru tamiḻ nūl varuṭam 2,000 piratikaḷtāṉ viṟkum. atil 1,500 piratikaḷ nūlakattukku vāṅkappaṭupavai. tamiḻakam muḻukka 500 piratikaḷ vācakarkaḷiṭam viṟkappaṭṭāl atu oru cātaṉai!

nam iḷaiya talaimuṟai ērāḷamāka vācikkiṟatu. āṉāl, tāymoḻikaḷil vācippatillai. kāraṇam, intiyāveṅkum āṅkilak kalvi paravalākivarukiṟatu. ulakamayac cūḻalil āṅkilamē vēlai vāyppuk kalvikkuriya moḻi eṉa niṟuvappaṭṭuviṭṭatu. atu teḷivāṉa uṇmaiyumkūṭa. ākavē, etirkālattilum āṅkilamē iṅkē kalviyiṉ moḻiyāka irukkum. atait taṭukkavē muṭiyātu. varalāṟṟiṉ pōkku atu. ataṟku etirākap piṭivātamāka nilaikoḷvatu aṭippaṭaivātam maṭṭumē.
 

யாது சொன்னீர்? 

DEV RAJ

unread,
Nov 9, 2013, 11:13:40 AM11/9/13
to tamil...@googlegroups.com
On Monday, 4 November 2013 15:50:53 UTC+5:30, Pandiyaraja Paramasivam wrote:
Word length என்ற தலைப்பில், ஒரே சொல்லைப் பல முறைகளில் எழுதி, அங்கு வரும் குறியீடுகளின் எண்ணிக்கையை word length எனக் குறிப்பிட்டு, ஏறக்குறைய 2,50,000 சொற்களுக்குசொல்நீளம் கண்டு அவற்றை ஒப்பீடு செய்துள்ளேன்.

The word ‘அகர is taken as அ+க்+அ+ர்+அ to have length 5. This is close to writing this in Roman script as ‘akara’ which also has length 5.

அக்ஷரமுக எழுத்துரு மாற்றி [font size 16]

nam iḷaiya talaimuṟai ērāḷamāka vācikkiṟatu. 
நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. 

āṉāl, tāymoḻikaḷil vācippatillai. 
ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. 

kāraṇam, intiyāveṅkum āṅkilak kalvi paravalākivarukiṟatu. 
காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. 

ulakamayac cūḻalil āṅkilamē vēlai vāyppuk kalvikkuriya moḻi eṉa niṟuvappaṭṭuviṭṭatu. 
உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. 

atu teḷivāṉa uṇmaiyumkūṭa. 
அது தெளிவான உண்மையும்கூட. 

இவ்வகையான தட்டச்சில் எழுத்துச் சுமை
கூடுவது உண்மை; ஆனால் தமிழ் எழுத்துருவில்
வரிநீளம்  மிகுதியாகிறது.


திரு. பாண்டிய ராஜா அவர்கள் நேரமிருக்கும்போது
தம் ஆய்வின் நுட்பங்களை மேலும் விளக்க
வேண்டும் எனக் கோருகிறேன்.

 

தேவ்

DEV RAJ

unread,
Nov 9, 2013, 11:32:48 PM11/9/13
to tamil...@googlegroups.com
On Monday, 4 November 2013 19:55:47 UTC+5:30, செல்வா wrote:
இப்பொழுது செய்யும் எந்த
எழுத்துரு மாற்றத்தாலும் இதுவரை வெளிவந்த 
அனைத்துப் படைப்புகளும் வருங்காலத்தில்
மூல வடிவில் படிக்க முடியாமலே போகும். தொடர்பு  பலவாக
அறுந்து போகும். 
 

ஆம், இவ்வகையான இழப்பு ஏற்படும்;
வட்டெழுத்திலுள்ள தகவல்கள் மறைந்து
போய்விட்டன


தேவ்

Anna Sundaram

unread,
Nov 10, 2013, 4:02:19 AM11/10/13
to tamil...@googlegroups.com
அன்புமிக்க வினைதீர்த்தான் அய்யா அவர்களே 
அருமையாக எடுத்து உரைத்துள்ளீர்கள்  

எழுத்தாளர் ஜே இன்னும் எம் மடலுக்கு கருத்து தரவில்லை 

உணர்ந்தும் உணர்ந்ததை எழுத்து வடிவில் தர விரும்பவில்லையோ அன்றி உணரவே இல்லையோ 
பொறுத்திருந்து பார்க்கின்றேன் 

Thank You 

With Regards
Anna Sundaram 
VAP Australia Pty Ltd
Mob: 0411242134 
VAP means Value Adding Professionals 

Pandiyaraja Paramasivam

unread,
Nov 22, 2013, 2:51:12 AM11/22/13
to tamil...@googlegroups.com
அன்புள்ள திரு.தேவ் அவர்களுக்கு,
மதுரை சென்றுவிட்டு இன்று காலைதான் சென்னை திரும்பினேன். மதுரை வீட்டில் internet வசதியில்லை. அதனால் இன்றுதான் எல்லா மடல்களையும் பார்த்தேன். 
'நீளம்' என்பது அடிக்குச்சியை வைத்து அளப்பதல்ல. நீங்கள் குறிப்பிடும் வரிநீளம் என்பது எழுதுபவரின் கையெழுத்தைப் பொருத்தது. ஒருவர் நுணுக்கி நுணுக்கி எழுதலாம் அல்லது கொட்டை கொட்டையாக எழுதலாம். எனவே, கையில் எழுதினாலும், கணினியில் எழுதினாலும் அது font size-ஐப் பொருத்தது அல்ல. நான் குறிப்பிடும் நீளம் ஒரு சொல்லுக்கான எழுத்துருக்களின் எண்ணிக்கை. length(மதுரை) = 4. length(Maturai) = 7. length(கொண்டை ) = 6; length(koNTai) = 6  தமிழில் ஒகர, ஓகார, ஔகார உயிர்/உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்ட சொற்கள் மிகச் சொற்பமே. எனவே சொ, சோ, சௌ போன்ற எழுத்துக்களுக்கு மூன்று எழுத்துருக்கள் அமைந்திருந்தாலும் அவை சராசரி நீளத்தை அதிகம் பாதிப்பதில்லை. மேலும் தமிழில் உள்ள ற, ள, ங, ஞ, ண, ந, ட, ள, ழ ஆகிய எழுத்துக்களுக்கு ரோமன் லிபியில் diacritic marks தேவைப்படுகின்றன. இதனால் சொல்லின் 'நீளம்' இன்னும் அதிகமாகிறது.
தாங்கள் கொடுத்துள்ள ஐந்து எடுத்துக்காட்டுகளுக்குமே எழுத்துருக்களின் எண்ணிக்கையைக் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பவை  diacritic marks.
    ரோமன்  -----   தமிழ்
1. 39 +(13)    ---    26 +(2)
2. 29 + (12)  ---     23 +(2)
3. 51 + (13)   ---    34 + (7)
4. 75 + (21)   ----   50 + (10)
5. 23 +(8)      ---    16 +(2)    
 
இங்கே diacritic marks என்பன, கீழ்ப்புள்ளி, மேற்புள்ளி, கீழ்க்கோடு, மேற்கோடு முதலியன.
தமிழில் மெய்ப்புள்ளி diacritic mark ஆக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள் ரோமன் லிபியில் தமிழை எழுதுவது சிக்கனமானதா?
 
(எண்ணிக்கைகளில் சிறிது கூடக்குறைய இருக்கலால். தூக்கக் கலக்கத்தில் எண்ணியது!!!)
நன்றி,
ப.பாண்டியராஜா

iraamaki

unread,
Nov 22, 2013, 4:00:53 AM11/22/13
to tamil...@googlegroups.com
ஐயா,
 
அருள்கூர்ந்து கலைச்சொற்கள் பயன்படுத்துவதிற் குழப்பம் வேண்டாம். எழுத்துரு (font) என்ற சொல்லிற்கு நீங்கள் சொல்லும் பொருள் கிடையாது; வேறு பொருளாகும்.
 
இப்பொழுது “லதா” என்பது தமிழுக்கான ஓர் எழுத்துரு. “Arial Unicode MS" என்பது இன்னோர் எழுத்துரு.  இப்படிப் பல்வேறு எழுத்துருக்கள் உள்ளன. [எழுத்துரு என்ற சொல்லிற்கு 30 ஆண்டுகளுக்கு முன் ”வார்ப்பு” என்ற சொல்லிருந்தது. நானும் அதைப் பல்வேறு கட்டுரைகளிற் பயன்படுத்தி வந்தேன். ”வார்ப்படம்/ வார்ப்புத் தொழில் (foundary) என்பது இரும்புப் பட்டறையை யொட்டித் தமிழிற் பன்னூறு காலம் பழகி வந்த சொல். என்ன ஊழோ தெரியவில்லை, இற்றைத் தமிழில் அருவி போய், நீர்வீழ்ச்சியானது  போல், எல்லாரும் இப்பொழுது வார்ப்பை விடுத்து எழுத்துரு என்பதையே font ற்கு நிகராகப் பயன்படுத்துகிறார்.
 
ஒவ்வோர் எழுத்துருவும் ஒவ்வொரு தோற்றங் காட்டும்.  நீங்கள் சொல்லும் எழுத்தின் (alphabet or character) நீளக் கணக்கில் வரும் கருத்து வேறொன்றாகும்..
 
எழுத்து என்பது தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற் சொன்னபடி வருவதாகும். நம்முடைய எழுத்துக்கள் அசையெழுத்துக்களாகும் (syllabic characters).
 
எழுத்துக்களின் பகுதிகளைக் கீற்றுக்கள் (glyphs) என்று சொல்கிறோம். தமிழில் அடிப்படைக் கீற்றுக்கள் போக, (மெய்யெழுத்திற்குப்) புள்ளி  , (ஆகாரத்திற்குக்) கால், (இகரத்திற்குக்) கொக்கி, (ஈகாரத்திற்குச்)சுருட்கொக்கி, (உகரத்திற்குக்) கொண்டை, (ஊகாரத்திற்குச்) சுருட்கொண்டை, (எகரத்திற்கு) ஒற்றைக்கொம்பு, (ஏகாரத்திற்கு) இரட்டைக் கொம்பு, (ஐகாரத்திற்கு) ஐகாரக் கொம்பு, (ஔகாரத்திற்குச்) சிறகு என்று இந்தக் காலத்திற் துணைக் கீற்றுகளைச் சொல்கிறோம். [இதே கீற்றுக்களுக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்ற சொற்களும் உரையாசிரியர் காலத்தில் இருந்தன.]
 
”கொ” என்பதில் 3 கீற்றுக்கள் இருக்கின்றன. இந்த கீற்றுக்கள் குறியேற்ற முறைக்குத் தக்க மாறும். ஒருங்குறிக் குறியேற்ற முறையில் (encoding) ”க” என்பது ஒரு கீற்று; ”க், கா, கி.கீ,கு,கூ,கெ, கே” என்பவை இரு கீற்றுக்கள் கொண்டவை. ”கொ,கோ,கௌ” ஆகியவை மூன்று கீற்றுக்கள் கொண்டவை.
 
கீற்றுக்களுக்கு வெவ்வேறு தோற்றங் கொடுக்கலாம். அவை எழுத்துருக்கள் (fonts) என்று சொல்லப்படுகின்றன.
 
சுருங்கச் சொன்னால், “கோ என்ற எழுத்திற்கு 3 கீற்றுக்கள் உண்டு. அதற்கு ஒருங்குறிக் குறியேற்றத்தில் காட்டாக, லதா என்ற எழுத்துருத் தோற்றங் கொடுத்துப் படிக்கலாம்.”
 
எழுத்துரு என்பதைக் குழப்பி எழுத்து என்ற சொல்லிற்கு மாறாக எழுத்தாளர் செயமோகன் அண்மையிற் பயன்படுத்தினார். நீங்கள் கீற்றுக்களுக்கு மாறாகப் பயன் படுத்துகிறீர்கள். தமிழர்கள் எழுத்துக்கள், கீற்றுக்கள், எழுத்துருக்கள் (அல்லது வார்ப்புக்கள்) ஆகிய மூன்றிற்கும் இடையே குழப்பமில்லாது பயனாக்குவதை என் போன்றோர் வேண்டுகிறோம்.
 
குறியேற்றங்களுக்காக தமிழ்க் கணிஞர்  16 ஆண்டுகளுக்கு முன் பாடுபட்டபோது இந்தக் கருத்தீடுகளில் தெளிவுவேண்டிய உரையாடல்களில் நானும் பங்களித்திருக்கிறேன்.  
 
அன்புடன்,
இராம.கி... 

Sent: Friday, November 22, 2013 1:21 PM
--

Pandiyaraja Paramasivam

unread,
Nov 22, 2013, 5:13:42 AM11/22/13
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஐயா,
தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. 2001-இல் நான் என்னுடை Ph.D ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தபோது, நான் பயன்படுத்திய சொற்கள் வேறு. என்னுடைய அறிக்கை ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. அப்பொழுது நான் பயன்படுத்தியது:
The writing forms of all the uyir, mey and uyirmey symbols are to be taken as the graphemes in Tamil.  So, there are 247 graphemes in Tamil. The graphemes in Tamil consist of certain basic symbols and combinations of these basic symbols with what are called operators. Any basic symbol which stands as a single unit is taken as a Letter. The symbols which are used to be affixed, prefixed or suffixed are called operators. So, there are 65 letters and 7 operators. I have got the frequencies for each of these symbols. In the Tamil version of my synopisis, I used the term எழுத்து for grapheme and எழுத்துரு for the symbols representing a grapheme. So கொ is ezuththu which has three symbols (எழுத்துரு).
I don't think that a standard Tamil term was used for the word 'font' at that time. I agree that there should be uniformity in the use of Technical words. I am unaware of your work on these lines. I would be extremely happy if I know the complete list.
Thank you again,
P.Pandiyaraja
Reply all
Reply to author
Forward
0 new messages