(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி)
இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி.
இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம்.
எனவே, இக்குறைபாடுகள் நேரும் என்று பெருமளவில் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
இளவரசன் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளவரசன் வெருளி.
இளவரசன் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் அவரின் தவறான செயல்கள் கண்டு அமைதி காத்து அஞ்சலாம். நாளைய அரசர் எனக் கருதி அவர் தீமையைப் பொறுத்துக் கொண்டு அதே நேரம அவரால் தீயன தொடரும் என அஞ்சலாம். இளவரசன் சிலரின் சிறுபிள்ளைத்தனமான விளைாயட்டுகள் கண்டும் அஞ்சலாம். ஏதோ ஒரு வகையில் சிறுவர்களின் செயல்களால் ஏற்படும் பேரச்சமே இளவரசர் வெருளி. இளவரசி வெருளி(Vasilopoulaphobia) வருவோருக்கு இளவரசர் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
நடைமுறையில் இளவரசன் சிறுவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எவ்வளவு அகவை ஆனாலும், அரசுப் பட்டம் பெறாதவரையில் – முடி சூடாத வரையில் – இளவரசன்தான்.
prigki என்றால் கிரேக்க மொழியில் இளவரசன் என்று பொருள்.
00
இளவரசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளவரசி வெருளி.
இளவரசன் வெருளி போன்றதுதான் இதுவும். அதற்குரிய விளக்கம் இதற்கும் பொருந்தும். இளவரசன் வெருளி வருவோருக்கு இளவரசி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Vasilopoula என்றால் கிரேக்க மொழியில் இளவரசி என்று பொருள்.
00
இறகால் வருடப்படுதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறகு வெருளி.
இறகுகள் செருகப்பட்ட தொப்பி, இறகுகள் நிரப்பப்பட்ட தலையணை, இறகுகளால் ஆன வேறு பொருள் என இறகுகள் தொடர்பானவற்றின் மீதும் வெறுப்பு, பேரச்சம் ஏற்படும். பறவை வெருளி (ornithophobia) உள்ளவர்களுக்கும் இறகு வெருளி வர வாய்ப்புள்ளது.
‘ptero’ என்னும் கி்ரேக்கச் சொல்லிற்கு இறகு எனப் பொருள்.
00
இறக்கைப் பல்லி(Pterosaur) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறக்கைப் பல்லி வெருளி.
பல்லி மீது பேரச்சம் உள்ளவர்களுக்கு இறக்கைப் பல்லி மீது பேரச்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இறக்கை உடைய தீ நாகம் மீது பேரச்சம் (தீநாக வெருளி/Dracophobia) உள்ளவர்களுக்கும் இற்க்கை உடைய பறவை மீது பேரச்சம் கொண்ட(பறவை வெருளி/-Ornithophobia) உள்ளவர்களுக்கும் இறக்கைப்பல்லி மீது பேரச்சம் வரும் வாய்ப்பு உள்ளது.
கிரேக்கத்தில் pteron, sauros என்றால் இறக்கை, பல்லி எனப் பொருள்கள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9
சூரியன் – சூர்ய
செக்கு – செக்கு
செம்பருத்தி – கெம்பத்தி
செருப்பு – செர்ப்பு
செவி – கிவி
செவ்வரி – கெம்பரி
செவ்வவரை – கொம்பவரே
செவ்வாம்பல் – கெம்பாவல்
செவ்வாழை – கெம்புபாளெ
சேரி – கேரி
சேலை – சேல
சோளம் – (ஞ்)சோள
சோளிகை – (ஞ்)சோளிகை
தகரம் – தகர
தகர் – தகர்
தக்காளி தக்காளி
தக்கோலம் – தக்கோல
தங்கை – தங்கி
தடி – தடி
தடுக்கை – தடுக்கெ
தட்டம் – தட்டெ
தண்டை – தண்டெ
தந்தை – தந்தெ
தப்பட்டை – தப்பட்டெ
தப்பணம் – தப்பள
9
தப்பை – தப்பெ
தம்பி – தம்ம
தலை – தலெ
தலைக்குட்டை – தலைக்குட்டெ
தவடை – தவடெ
தவணை – கடு
தவண்டை – தவட்டெ
தவலை – தபலே
தவுடு – தவுடு
தளிகை – தளிகெ
தாடி – தாடி
தாடை – தாட
தாதை – தாத்தா
தாய் – தாயி
தாலி – தாலி
தாழை – தாழ
தாழ் – தாழ்
தாழ்ப்பாள் – தாப்பாலு
திங்கள்(மாதம்) – திங்களு
திட்டி – திட்டி
திட்டு – திட்டு
தித்தி – தித்தி
திருகாணி – திருகாணி
தின்றி – திண்டி
தீ – தீ
தீனி – தீனி
துக்கம் – துக்க
துடுப்பு – துடுப்பு
தும்பை – தும்பெ
துளசி – துளசி
துளை – தொளெ
துறடு – தொறடு
தெப்பம் – தெப்பம்
தெற்கு – தெங்க
தென்னை, தெங்கு – தெங்கு
தொடை – தொட
தொட்டி – தொட்டி
தொட்டில் – தொட்டிலு
தொண்டை – தொண்டெ
தேக்கு – தேகு
தேர் – தேர் / தேரு
தேவர் – தேவரு
தோகை – சோகெ
தோடடக்காரன் – தோட்டக்காரனு
தோட்டம் – தோட்ட
தோப்பு – தோப்பு
தோல் – தொகலு
நகரம் – நகர
நடுவே – நடுவெ
நமது – நம்ம
நரவள்ளி – நரவள்ளி
நரி – நரி
நல்லள் – நல்லள்
நாங்கள் – நாவு
நாம் – நாவு
நாய் – நாயி
நாவாய் – நாவெ
நாளை – நாளெ
நான் – நானு
நிலம் – நெல
நீ – நீனு
நீங்கள் – நீவு
நீர் – நீரு
நுதல் – நொசல்
நுதி – நுதி
நெய்த்தோர்(இரத்தம்) – நெத்தர்
நெல்லி – நெல்லி
நொச்சி – நொச்சி
நேற்று – நின்னெ
பகல் – ஃககலு
பக்கம்(விலா) – பக்கெ
பசு – ஃகசு
படகு – ஃகடக
பட்டணம் – பட்டண
பருந்து – பந்து
பல் – ஃகல்லு
பல்லி — ஃகல்லி
பழம் – பலெவு
பள்ளம் – ஃகள்ள
பள்ளி – ஃகள்ளி
பனை – பனி
பால் – ஃகாலு
பித்தளை – கித்தாள
புங்கை – ஃகொங்கே
புங்கை – ஃகொங்கே
புத்தகம் – புஃச்தக
புலம் – ஃகொல
புலி – ஃகுலி
புல் – ஃகுல்லு
புளி – ஃகுளி
புற்று – புத்து
புனல் – பொனல்
பூ – ஃகூவு
பூமி – பூமி
பூவரசு – ஃகூவர்சி
பெட்டகம் – பெட்டகெ
பெண்மகள் – மஃகிலெ
பொழுது – ஃகொத்து
பொற்றை(மலை) – பெட்டெ
பேட்டை – பேட்டெ
மகள் – மகளு
மகன் – மக
மக்கள் – மக்களு
மணி – மணி
மரம் – மரவு
மருது – மருது
மருந்து – மர்து
மழை – மலெ
மறி(குட்டி) – மறி
மனம் – மனசு
மனை – மனெ
மா – மாவு
மாகாளி – மாகாளி
மாமா – மாவ
மீன்- மீனு
முகம் – முக
முட்டை – மொட்டெ
முதுமகன் – முதுக
முயல் -மொல
முலை -மொலெ
முள் – முள்ளு
மூக்கு – மூகு
மூடன் – மூட
மூலை – மூலெ
மேசை – மேசு
மேலே – மேலெ
யானை / ஆனை – ஆனெ
வடக்கு – படக
வட்டில் – பட்லு
வல – பல
வலி (நோவு) – நோவு
வலை – பலெ
வள்ளம் – பள்ள
வாகை – பாகெ
வாசல் – பாசிலு
வாதுமை பாதாமி
வாதுமை – பாதாமி
வாய் – பாயி
வாரம் – வார
வால் – பாலவு
வாவல் – பாவல்
வானரம் – வானர
விடுவு(ஓய்வு) – பிடுவு
விரல் – பெரல்
விருந்து – பிர்து
விளை – பிளி
வெ – வெரிந் (முதுகு) – பெந்
வெண்டை – பெண்டெ
வெண்ணெய் – பெண்ணெ
வெண்ணெய் – வெண்ணெ
வெதிர் – பிதிர்
வெள்ளி – பெள்ளி
வேகமாக – வேகவகி
வேண்டாம்/ வேண்டா – பேடா
வேம்பு – பேவு
வேர் – பேரு
வேலி – பேலி
வேல் – பேல்
வேளை – வேளி
“எந்த மொழியும் முதல் முதலாக எழுதப்படும் போது மக்கள் எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே எழுதப்படும் என்பது ஒரு பொதுக் கருத்து. எனவே, கன்னட மொழி, முதல் முதலில் எழுதப்பட்டபோது, கொச்சைத் தமிழ்ச் சொல்லாகிய பேச்சு வழக்குத் தமிழ்ச் சொல்லைத் தனது எழுத்து வழக்குச் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்டது என்பது புலனாகும்.” என்கிறார் பேரா.சுந்தர சண்முகனார்(தமிழ்க்காவிரி). மேற்குறித்த சொற்பட்டியல் இதனை நன்கு தெளிவாக்குகிறது. எனவே, தமிழே கன்னடமாகத் திரிந்தது என்பது வெள்ளிடை மலை.
கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
– பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை)
– இலக்குவனார் திருவள்ளுவன்
98844 81652
நன்றி – இனிய உதயம், ஆகட்டு 2025
(நிறைவு)