வேதி (அ) வேதியல்

142 views
Skip to first unread message

இரா. செல்வராசு

unread,
Mar 6, 2013, 11:18:13 PM3/6/13
to tamil...@googlegroups.com

கெமிக்கல் பொட்டென்சியல் என்பதற்கான தமிழ்ச்சொல் தேடிக் கொண்டிருந்தேன். ப.அருளி அதனை வேதியற்பண்பு என்று குறித்திருக்கிறார். வேதியல் என்று நீட்டி முழக்குவானேன் என்று வேதி என்று பிற இடங்களைப் போல வேதிப்பண்பு என்று கொள்ளலாமே என்று நினைத்து த.விக்கியில் எழுதினேன்.  ஆனால் பண்பு என்பது property  என்பதைப் போல் இருக்கிறதோ என்று ஐயம். விக்சனரியில் வேதி வினை, வேதி ஆற்றல் வளம் என்று குறித்திருப்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை. பொட்டென்சியல் என்பது சற்று வித்தியாசமானது தான். இயல்பியலில் நிலை ஆற்றல் என்றும், மின்னியலில் மின் அழுத்தம் என்றும் வேறு வேறு சொல்லாட்சிகளைக் கொண்டிருக்கிறது. அதனால் வேதியியல், வேதிப் பொறியியலில் வேதிப்பண்பு என்றே கூட வைத்துக் கொள்ளலாம் எனவும் தோன்றுகிறது. கருத்துகள்? நன்றி.

- இரா. செல்வராசு
http://blog.selvaraj.us

விக்கிக் கட்டுரை: (குறைகள் இருக்கலாம். சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்).

வேதிப்பண்பு (Chemical Potential) என்பது வெப்ப இயக்கவியலில் ஒரு வேதிவினையின் போது உட்கவரப்படும் அல்லது வெளியிடப்படும் நிலை ஆற்றலைப் போன்றதொரு பண்பு ஆகும்.

ஒரு கலவை அல்லது கரைசலில் இருக்கும் பல கூறுகளில், ஒன்றின் மோல்களை மட்டும் அதிகரிக்கும் போது அதன் உள்ளாற்றல் அல்லது நிலை ஆற்றல் அதிகரிக்கும் வீதத்தை வேதிப்பண்பு என்று கூறலாம்.

மூலக்கூற்றுத் துகள்கள் உயர் வேதிப்பண்புள்ள இடத்தில் இருந்து குறை வேதிப்பண்பு உள்ள இடத்திற்கு நகரும் இயல்பை உடையன. இவ்வகையில் பிற இயற்பியல் துறைகளில் உள்ளது போல், "அழுத்தம் அல்லது ஆற்றல் (potential)" போன்றதே வேதிப்பண்பும். எவ்வாறு மலைச்சரிவில் உருளும் பந்தானது அதிக நிலையாற்றல் உள்ள இடத்தில் இருந்து குறை நிலையாற்றல் உள்ள இடத்திற்குச் செலுத்தப் படுகிறதோ, அதைப் போன்றே நகர்ச்சி, வேதிவினை, உருகல், கரைதல், பரவல் போன்ற நிறை மாற்ற நிகழ்வுகளின் போது, முலக்கூறுகள் அதிக வேதிப்பண்புள்ள இடங்களில் இருந்து குறைவான வேதிப்பண்புள்ள இடத்திற்குச் செல்லும்.

ஒரு எளிய உதாரணமாக, ஒரு கரைசலில் அதிகச் செறிவுள்ள இடத்தில் இருந்து மூலக்கூறுகள் குறை செறிவுள்ள இடத்திற்கு நகர்வதைக் குறிப்பிடலாம். இந்த நகர்ச்சி கரைசலின் செறிவு அனைத்து இடங்களிலும் சமனாகும் வரை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம்.

சி. ஜெயபாரதன்

unread,
Mar 6, 2013, 11:28:28 PM3/6/13
to tamil...@googlegroups.com
வேதிப் பண்புத் தேக்கம் (Chemical Potential) அல்லது வேதிமை ஆற்றல் தேக்கம்

வேதிமைத் திறன் தேக்கம்

சி. ஜெயபாரதன்
+++++++++++
 
2013/3/6 இரா. செல்வராசு <ma...@selvaraj.us>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Pandiyaraja

unread,
Mar 6, 2013, 11:57:15 PM3/6/13
to tamil...@googlegroups.com
வேதியல் என்பது chemistry என்ற பாடப்பகுதியைக் குறிக்கும். chemical என்பதற்கு அதனையே அடையாகக் கொள்ளவேண்டியதில்லை. வேதி என்பதுவே அடையாக இருக்கலாம். இதற்கு மட்டுமல்ல, மற்ற பாடப்பகுதிகளுக்கும் தேவையற்ற விதத்தில் அந்த 'இயல்'-ஐச் சேர்த்துக்கொள்கிறார்கள். வேதிமை என்பதுவும் நல்ல சொல்லாக்கமே.
Potential என்பதனை ஆக்குதிறன் எனலாமா?
ப.பாண்டியராஜா

iraamaki

unread,
Mar 7, 2013, 1:53:50 AM3/7/13
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வராசு,
 
பொதிதல் = சேமித்தல்; “பொன்போற் பொதிந்து” - குறள் 153;
                         = உள்ளடக்குதல் “செழுந்தேனும் பொதிந்து” - திருக்கோவையார் 46;
                         = மறைத்தல், “தூண்டிலுட் பொதிந்த தேரையும்” (திரிகடுகம் 24
 
பொதி என்ற சொல் நிறைவு, மூட்டை, பண்டம், செல்வம் போன்று பல்வேறு பொருட்பாடுகளைக் குறிக்கும். நாற்பதாண்டுகளாய் body என்னும் பொருளில் தெறுமத் துனைமவியலில் பொதியைப் புழங்கி வருகிறோம். (thermodynamics; dynamics என்பதற்கான துனைமவியR சொல்லை அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிற் பாருங்கள்; இல்லையென்றால் என் வலைப்பதிவுகளிற் தேடுங்கள்.)  
 
”பொத்தி உள்ளது” என்றால் ”பொதிக்குள் மறைந்து உள்ளது” என்று பொருள். அதைப் பொத்துள் என்னும் போது வினைத்தொகையாகும். ”பொத்திக் கிடக்கும் உள், பொத்துகின்ற உள், பொத்தும் உள்” என்று காலம் விரித்துப் புரிந்து கொள்ளலாம். உள் என்பதை உள்ளாற்றலாய்ப் (internal energy) புரிந்து கொண்டால், பொத்துள் என்ற கூட்டுச் சொல் பொதியுள் அடங்கிய உள்ளாற்றலைக் குறிக்கும். நடுவில் வரும் த் என்னும் ஒலியை சொல் எளிமைக்காக இன்னும் தொகுக்கலாம். பொத்துள் “பொதுள்” என்றே ஆகலாம். பொதிந்து கிடக்கும் ஆற்றல் என்று பொருள் கொள்ளும்.
 
potential என்பது ஓர் அலகிற்கு ஆகும் (per mole, per gm) உள்ளாற்றல். ஆங்கிலத்தில் potential என்ற சொல் potent என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
 
c.1500, from Latin potentem (nominative potens) "powerful," prp. of *potere "be powerful," from potis "powerful, able, capable," from PIE root *poti- "powerful, lord" (cf. Sanskrit patih "master, husband," Greek posis, Lithuanian patis "husband"). Meaning "having sexual power" is first recorded 1899.
 
வடமொழியில் இதை ”வீரியம்” என்பார்கள். அது உள்ளே கிடக்கும் ஆற்றற் பொதிவைப் பொறுத்தது. பொதிவு கூடக் கூட ”வீரியம்” கூடும். ”வேதிப் பொதுள்” என்ற சொல் ”chemical potential” யை எங்கும் குழப்பமின்றிக் குறிக்கும். [நான் பல்வேறு வாக்கியங்களில் அமைத்துப் பார்த்திருக்கிறேன்.] 1965 இல் உருவாக்கிய இந்தச் சொல்லைப் பல்வேறு கட்டுரைகளிற் புழங்கியிருக்கிறேன். வலையில் கிடக்கும் என்னுடைய மூன்று ஆக்கங்களைத் தேடினால் பொதுள் என்ற சொல்லின் பயனாக்கம் உங்களுக்கு விளங்கும்.
      
1. காலும் காற்று http://valavu.blogspot.in/2010/10/blog-post.html என்ற தளத்தில் potential energy யைப் ”பொதுள் ஆற்றல்” என்று குறித்திருந்தேன்.
2. ”பணத்திற்கு எதிரான அறிவு” என்ற இடுகையில் (http://valavu.blogspot.in/2005/04/blog-post_12.html) பொதுள் பயன்படுத்தியிருக்கிறேன்.
3. தமிழெழுத்துப் பரம்பல் - 2 பற்றிய உரையாடல் தமிழ் உலகத்தில் எழுந்தது https://groups.google.com/forum/?fromgroups#!msg/tamil_ulagam/5TyVl18efU8/q7Dtl3BOHFQJ
அதிலும் இந்தப் பொதுள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.

iraamaki

unread,
Mar 7, 2013, 2:32:43 AM3/7/13
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வராசு,
 
தமிழில் புல்>பொல் என்னும் வேரில் இருந்து ”பொத்து” எனும் வினைச்சொல் பிறக்கும். பொத்துதல் என்பது மூடுதல் ஆகும். பொத்திக் கிடந்தது புதையலுமாகும். புதை என்ற சொல்லும் புல் எனும் வேரிற் பிறந்தது தான். பொதிந்து கிடத்தலும் உள்ளே புதைந்து கிடப்பதைத் தான் குறிக்கும். பொதிதல் தன்வினை. பொதித்தல் பிறவினை.
 
பொதிதல் = சேமித்தல்; “பொன்போற் பொதிந்து” - குறள் 153;
         = உள்ளடக்குதல் “செழுந்தேனும் பொதிந்து” - திருக்கோவையார் 46;
         = மறைத்தல், “தூண்டிலுட் பொதிந்த தேரையும்” (திரிகடுகம் 24
 
பொதி என்ற சொல் நிறைவு, மூட்டை, பண்டம், செல்வம் போன்று பல்வேறு பொருட்பாடுகளைக் குறிக்கும். நாற்பதாண்டுகளாய் body என்னும் பொருளில் தெறுமத் துனைமவியலில் (thermodynamics; dynamics என்பதற்கான துனைமவியல் என்னும் சொல்லை அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிற் பாருங்கள்; இல்லையென்றால் என் வலைப்பதிவுகளிற் தேடுங்கள்.) பொதியைப் புழங்கி வருகிறோம்.  
 
”பொத்தி உள்ளது” என்றால் ”பொதிக்குள் மறைந்து உள்ளது” என்று பொருள். அதைப் பொத்துள் என்னும் போது வினைத்தொகையாகும். ”பொத்திக்
 
கிடக்கும் உள், பொத்துகின்ற உள், பொத்தும் உள்” என்று காலம் விரித்துப் புரிந்து கொள்ளலாம். உள் என்பதை உள்ளாற்றலாய்ப் (internal energy) புரிந்து
 
கொண்டால், பொத்துள் என்ற கூட்டுச் சொல் பொதியுள் அடங்கிய உள்ளாற்றலைக் குறிக்கும். நடுவில் வரும் த் என்னும் ஒலியை சொல் எளிமைக்காக
 
இன்னும் தொகுக்கலாம். பொத்துள் “பொதுள்” என்றே ஆகலாம். பொதிந்து கிடக்கும் ஆற்றல் என்று பொருள் கொள்ளும்.
 
potential என்பது ஓர் அலகிற்கு ஆகும் (per mole, per gm) உள்ளாற்றல். ஆங்கிலத்தில் potential என்ற சொல் potent என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
 
வடமொழியில் இதை ”வீரியம்” என்பார்கள். அது உள்ளே கிடக்கும் ஆற்றற் பொதிவைப் பொறுத்தது. பொதிவு கூடக் கூட ”வீரியம்” கூடும். ”வேதிப் பொதுள்” என்ற சொல் ”chemical potential” யை எங்கும் குழப்பமின்றிக் குறிக்கும். [நான் பல்வேறு வாக்கியங்களில் அமைத்துப் பார்த்திருக்கிறேன்.] 1965 இல் உருவாக்கிய இந்தச் சொல்லைப் பல்வேறு கட்டுரைகளிற் புழங்கியிருக்கிறேன். வலையில் கிடக்கும் என்னுடைய மூன்று ஆக்கங்களைத் தேடினால் பொதுள் என்ற சொல்லின் பயனாக்கம் உங்களுக்கு விளங்கும்.
      
1. காலும் காற்று http://valavu.blogspot.in/2010/10/blog-post.html என்ற தளத்தில் potential energy யைப் ”பொதுள் ஆற்றல்” என்று குறித்திருந்தேன்.
2. ”பணத்திற்கு எதிரான அறிவு” என்ற இடுகையில் (http://valavu.blogspot.in/2005/04/blog-post_12.html) பொதுள் பயன்படுத்தியிருக்கிறேன்.
3. தமிழெழுத்துப் பரம்பல் - 2 பற்றிய உரையாடல் தமிழ் உலகத்தில் எழுந்தது https://groups.google.com/forum/?fromgroups#!
 
msg/tamil_ulagam/5TyVl18efU8/q7Dtl3BOHFQJ. அதிலும் இந்தப் பொதுள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

வேந்தன் அரசு

unread,
Mar 7, 2013, 8:08:24 AM3/7/13
to tamil...@googlegroups.com
வீரியம் தமிழ் என்று தேவ் சொல்லியதாக நினைவு. வீறு என்பது அதன் செந்தமிழ்.

7 மார்ச், 2013 2:32 AM அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Mar 7, 2013, 8:12:14 AM3/7/13
to tamil...@googlegroups.com

2013/3/6 Pandiyaraja <pipi...@gmail.com>

வேதியல் என்பது chemistry என்ற பாடப்பகுதியைக் குறிக்கும். chemical என்பதற்கு அதனையே அடையாகக் கொள்ளவேண்டியதில்லை. வேதி என்பதுவே அடையாக இருக்கலாம். இதற்கு மட்டுமல்ல, மற்ற பாடப்பகுதிகளுக்கும் தேவையற்ற விதத்தில் அந்த 'இயல்'-ஐச் சேர்த்துக்கொள்கிறார்கள். வேதிமை என்பதுவும் நல்ல சொல்லாக்கமே.
Potential என்பதனை ஆக்குதிறன் எனலாமா?
ப.பாண்டியராஜா

எல்லா இடங்களிலும்  '  -இயல்'  என்னும் பின்னொட்டைச் சேர்ப்பதைப் பேராசிரியர் கூறுவதை போலவே நானும் பலமுறை
எண்ணியிருக்கின்றேன். ஆனால் -மை என்பதைப் பண்புகளுக்குப் பயன்படுத்தலாம். வேதியியல் என்பதை வேதி- எனச்
சுருக்கலாம். இங்கு கெமிக்கல் பொட்டென்சியல் என்பது ஆற்றல், ஆற்றழுத்தம்   (=பொட்டென்சியல்) அன்று. 
(மின்னழுத்தம் அல்லது மின்னிலை என்பது எலக்ட்ரிக்கல் பொட்டென்சியல்).  ஆனால் கெமிக்கல் பொட்டென்சியல்
என்பது பொட்டென்சியல் அன்று, அதுவோர் ஆற்றல்.

ஆற்றலில் நிலையாற்றல் (பொட்டென்சியல் எனர்கி), 
இயங்கு ஆற்றல் (கைனெட்டிக்கு எனர்கி)  என இரண்டு கூறுவோம் அல்லவா, 
அதில் வரும் நிலையாற்றலைச்
சில நேரங்களில் ஆற்றல் என்பதைச் சேர்க்காமல் தனித்துப் பொட்டென்சியல் என்று கூறிவிடுவர்.

பொட்டென்சியல் என்றால் ஆற்றுநிலை, ஆற்றழுத்தம் 

 [எனர்ச்சி = எனர்கி = energy; 
சப்பானியர்கள், செருமானியர் போன்றவர்கள் எனர்கி  என்றும் 
பிரான்சியர் எனர்ழ்சி  (énergie) என்பது போலவும் ஒலிக்கின்றனர்]

என்னுடைய துறையில் (குறைக்கடத்திக் கருவி நுட்பியல்) பெர்மி ஆற்றல் (Fermi Energy) 
என்பதைத்தான் பொதுவாக கெமிக்கல் பொட்டென்சியல் என்பார்கள், 
ஆனால் அங்கே முறையாக எலெக்ட்ரோகெமிக்கல் பொட்டென்சியல் என்று கூறல் வேண்டும். 
அதாவது எதிர்மின்னிகளின்  ஓர் இயல்பான சராசரி நிலையாற்றல்  எனலாம்.  
பின்னர் விரித்துக் கூறுகின்றேன்.

அன்புடன்
செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

இரா. செல்வராசு

unread,
Mar 8, 2013, 12:39:54 AM3/8/13
to tamil...@googlegroups.com

அனைவருக்கும் நன்றி.

"வேதியல்" என்பதை அருளி +இயல் ஒட்டாகக் குறித்திருக்கிறார் என நான் கருதவில்லை. வேதியியல் என்றால் chemistry, ஆனால் வேதியல் என்பது chemical என்பதற்கான மொழியாக்கமாய்ப் (+அல் ஒட்டு?) பல சொற்களில் கையாளுகிறார். chemical  என்பதனை வேதி, வேதியல், வேதிய என்று பல வகையாகக் கருதியிருப்பது ஒருவேளை ஓசைநயத்துக்காகவோ பிற காரணிகளுக்காகவோ இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இது ஒரு வகை ஆற்றலே என்பதையும் அது பற்றிய ஆங்கிலப் பெயரிலேயே குழப்பமும் வரலாற்றுத் தடுமாற்றங்களும் உண்டு எனத் தெரிகிறது. இது பற்றி இன்னும் சற்றுப் படிக்க வேண்டும்.

இராம.கி ஐயா. நன்றி. நீங்கள் சுட்டிய மூன்று கட்டுரைகளையும் படித்துவிட்டு வந்தேன். பொதுள் என்ற சொல்லாக்கம் குறித்த கருத்துகள் நன்றாக இருந்தாலும், இது அவ்வளவு எளிமையாக இல்லையே எனத் தயக்கமாக இருக்கிறது. புதிதாகப் படிக்க வரும் ஒருவருக்கு முதலில் பொதுள் என்பது என்ன, ஏன், எப்படி என்று விளக்க வேண்டும். 'பொதிவு' என்று கூடச் சொல்லிவிடுவது இன்னும் சற்று எளிமையாக இருக்கிறது. "சத்து" என்றும் கூடச் சொல்லிவிட்டால் என்ன என்றும் தோன்றுகிறது. (வேதிச்சத்து).

தெறுமத் துனைமவியல் எனக்கும் பிடித்த ஒரு பாவனை. ஆனால் எளிமையாய் வெப்ப இயக்கவியல் இருக்க, இது எதற்கு என்று த.வி.யில் சுட்டுத் தள்ளி விட்டார்கள் :-) (நானும் ஏற்றுக் கொண்டேன்).

(பி.கு. அருங்கலைச்சொல் அகரமுதலி என்னிடம் உள்ளது. )

- இரா. செல்வராசு
http://blog.selvaraj.us

வேந்தன் அரசு

unread,
Mar 8, 2013, 8:08:39 PM3/8/13
to tamil...@googlegroups.com

8 மார்ச், 2013 12:39 AM அன்று, இரா. செல்வராசு <ma...@selvaraj.us> எழுதியது:

அனைவருக்கும் நன்றி.

"வேதியல்" என்பதை அருளி +இயல் ஒட்டாகக் குறித்திருக்கிறார் என நான் கருதவில்லை. வேதியியல் என்றால் chemistry, ஆனால் வேதியல் என்பது chemical என்பதற்கான மொழியாக்கமாய்ப் (+அல் ஒட்டு?) பல சொற்களில் கையாளுகிறார். chemical  என்பதனை வேதி, வேதியல், வேதிய என்று பல வகையாகக் கருதியிருப்பது ஒருவேளை ஓசைநயத்துக்காகவோ பிற காரணிகளுக்காகவோ இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இது ஒரு வகை ஆற்றலே என்பதையும் அது பற்றிய ஆங்கிலப் பெயரிலேயே குழப்பமும் வரலாற்றுத் தடுமாற்றங்களும் உண்டு எனத் தெரிகிறது. இது பற்றி இன்னும் சற்றுப் படிக்க வேண்டும்.

இராம.கி ஐயா. நன்றி. நீங்கள் சுட்டிய மூன்று கட்டுரைகளையும் படித்துவிட்டு வந்தேன். பொதுள் என்ற சொல்லாக்கம் குறித்த கருத்துகள் நன்றாக இருந்தாலும், இது அவ்வளவு எளிமையாக இல்லையே எனத் தயக்கமாக இருக்கிறது. புதிதாகப் படிக்க வரும் ஒருவருக்கு முதலில் பொதுள் என்பது என்ன, ஏன், எப்படி என்று விளக்க வேண்டும். 'பொதிவு' என்று கூடச் சொல்லிவிடுவது இன்னும் சற்று எளிமையாக இருக்கிறது. "சத்து" என்றும் கூடச் சொல்லிவிட்டால் என்ன என்றும் தோன்றுகிறது. (வேதிச்சத்து).

தெறுமத் துனைமவியல் எனக்கும் பிடித்த ஒரு பாவனை. ஆனால் எளிமையாய் வெப்ப இயக்கவியல் இருக்க, இது எதற்கு என்று த.வி.யில் சுட்டுத் தள்ளி விட்டார்கள் :-) (நானும் ஏற்றுக் கொண்டேன்).

தமிழ் ஆழப்படித்தால் இவை விளங்கும்

துனைகால் என்றால் வேகமாக வீசும் காற்று
தெறல் = வெப்பம்

நம் மக்களுக்கு வெப்பத்துக்கும் வெம்மைக்கு வேற்றுமை தெரியாது
வெப்பம் ஒரு பொருள்
வெம்மை= அதன் தன்மை; தண்மை அதன் எதிர்சொல்
இரண்டிலும் வெப்பம் இருக்கு. ஒன்றில் கூடுதல். மற்றதில் குறைச்சல்

C.R. Selvakumar

unread,
Mar 8, 2013, 10:22:25 PM3/8/13
to tamil...@googlegroups.com

2013/3/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஆம் வேந்தனாரே!! 
ஆழப் படிக்கக்கூட வேண்டாம். 
ஆங்கிலத்தில் sequestration என்றால் என்னவென்று 
தெரியாதவர்கள் உடனே தெரிந்து கொண்டு எடுத்தாண்டு பேசுவதில்லையா? 
ஆனால் அதுபோல் தமிழர்கள் தமிழ்ச்சொற்களை, 
அவற்றுள் சில புதிதாகவோ புதிதுபோல்
தோற்றம் அளிப்பதாகவோ  இருந்தால் கூட எடுத்து ஆள்வோம் என்னும்
உளப்போக்கு  கொள்வார் இல்லை.  
காற்று என்பது எல்லோரும் அறிந்த சொல்
(ஆ! சொல்ல வேண்டும்!! சில தமிழர்கள்  இருக்கிறார்கள் 
அவர்கள் ஐயையோ  காற்றா ? இது புரியவே புரியாதுங்க
காத்து என்றால்தான் புரியும் என்பார்கள்!!)

காற்று என்பது கால் என்பதன் இன்னொரு  வடிவு 
என்று சொன்னால் ஏற்க மாட்டார்கள்!  வெல் வெற்றி ஆவது போல்
என்று பல எடுத்துக்காட்டுகள் தரலாம். ஆனால் ஏற்கமாட்டார்கள்!
சீக்குவெசிட்ரேசன் என்பதை பார்த்துப் பார்த்து ஒலிப்புத்துல்லியத்துடன்
தமிழி எழுத பெரும் பாடுபடுவார்கள்! மறந்தும் ஒரு தமிழ்ச்சொல்லை
ஆண்டுவிடவே மாட்டார்கள். தமிழ்ச்சொல்லை ஆண்டால்
இனவாதம், பாசிசம்! 

நீர் எரி கால் என்று எத்தனையோ இடத்தில்
வந்துள்ளன!
திருமங்கை ஆழ்வார்  (திரு நெடுந்தாண்டகத்தில்)
பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி 
      பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற 
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற 
      இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது 
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ 

என்கிறார்.  
ஆனால் தமிழர்களிடையே பல  உண்மை விளம்பிகள் இருக்கின்றார்கள் 
அவர்கள்  இது சுத்தமாகத் தமிழே இல்லீங்க
இதெல்லாம் ஒன்றுமே புரியவில்லை என்று "சத்தியம்"
செய்வார்கள்.  வெளிநாட்டுக்காரர்களில் சிலரும்
ஆமாம் ஆமாம் இது புரியாத மொழி. இதனை நாங்கள்
நடுக்காலத் தமிழ்-மலையாள-கன்னட-சுவாகிலி பரோடா-
சப்பாத்தி மொழி என்போம்  (இந்தச் சப்பாத்தி-பரோட்டா
எல்லாம் இழிவான தமிழில் (தற்காலத்தமிழில் சொல்லவே
முடியாது- ஆகவே இதனை அவர்கள் தெய்வீக ஆங்கிலத்திலோ
ஐரோப்பிய மொழியில் மட்டுமோதான் சொல்லுவார்கள் (அவர்கள்
தமிழர்களாகவே இருந்தாலும்!).
மறந்தும் கீழான தமிழ் மொழியில் எல்லாம் சொல்லிவிடவே
மாட்டார்கள்.  அவர்களுடைய  கல்வி என்ன ஆவது!!
நம்மூரில் உள்ள "உண்மையான" தமிழர்களோ
ஆமாங்க ஆமாங்க அதுதான் சரி என்பார்கள்!

திருவாய்மொழியில்

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய் 

கால் = காற்று என்று நினைப்பூட்டலாம்!

துனை = விரைவு என்பதும் அருமையான சொல். இது பரவலாக 
அறியப்பட்ட சொல்லாக இருந்தால் பல அருமையான கலைச்சொற்கள்
ஆக்க  உதவும். துன் என்பது சிறியது, குறுகியது, நெருக்கம்
என்னும் பொருள் உடையது.
குறுகிய காலத்தில் நிகழ்வது என்பதால் விரைவு. 
துன்னல் என்றால் கிட்டல் (கிடைத்தல்). கிட்ட வராதே
என்றால் அருகே வராதே. கிட்டுதல் என்றால் நெருங்கி
வந்துவிட்டது  "கிட்டி" விடுவது. வந்துகிட்டே இருக்கேன்
என்றால் அங்கே கிட்டே என்பது கால நெருக்கத்தையும் 
தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதையும், நிகழ்ச்சியின்
அடர் நடத்தையையும் குறிக்கும். வந்துகொண்டு
இருக்கின்றேன் என்பதும் வந்துகிட்டிருக்கின்றேன் என்பதும்
நல்ல செந்தமிழே! கொண்டு என்பது கிட்டு ஆனது
என்பது தவறான கூற்று! கிட்டு என்பது மெலிதாகி 
வந்துகிண்ணு இருக்கேன்  > வந்துகிணுருக்கேன்
என்று ஆகும். இன்னும் சுருங்கி வந்துணுருக்கேன்
என்றும் ஆகும்.  துன்னா என்றால் கூடாத என்று பொருள்
(கிட்டாத, சேராத). ஆகவே துன்னாதார் என்றால் பகைவர்.
கிழிந்த துணையைச் சேர்க்கத் தைப்பதால் தையற்காரரை
துன்னர் என்பார்கள் செருப்புத் தைப்பவர்களையும்
துன்னர் என்பார்கள். 

அன்புடன்
செல்வா

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

C.R. Selvakumar

unread,
Mar 9, 2013, 12:53:54 AM3/9/13
to tamil...@googlegroups.com
இந்தத் துனை (= விரைவு) என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
துன்பம் என்றால் இக்கட்டு இல்லாமை (சிறுமை, குறுமை, நெருக்கம்) என்னும்
பொருளில் எழுந்த சொல்.  துன் > துன்பு  > துன்பம்.  பரோட்டா-சப்பாத்தியர்கள்
இதனை எல்லாம் அறியா மக்கள் கூற்று என்று ஒதுக்குவார்கள். அது அவர்கள்
உகப்பு விட்டுவிடுவோம்.  

துன்னுதல்  என்பதற்குக் கழக  அகராதி (திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக
அகராதி) கீழ்க்காணும் பொருள்களைத் தருகின்றன:

துன்னுதல் = கிட்டுதல், நெருங்குதல், செறிதல், அணுகுதல், மேவுதல், செய்தல் ([சேர்தல், கூடுதல்
என்னும் பொருள்]), ஆலோசித்தல் ([கூடி எண்ணுதல்]) பொருந்துதல் [சேர்தல், கூடுதல்], தைத்தல்,
உழுதல்.

[பகர அடைப்புக்குறிக்கிடையே தந்துள்ளவை என்னுடைய விளக்கம்] 

துன் = சிறு,  குறு (சிறிய, குறுகிய) என்பதே அடிப்படை. இதன்
பொருள் விரிவாய்  நெருங்கிய  > கிட்டுதல்  > கிடைத்தல் > கூடுதல் (கூடுதல் என்பது எல்லோரும்
அணுகித் திரளுதல்) > தைத்தல் > பொருத்துதல்;  துனை = விரைவு (கால நெருக்கம்,
குருகிய காலத்தில் நடப்பது என்பதால் விரைவு).
எல்லாப் பொருள் விரிவையும் சீராக விளக்க முடியும். தமிழில்
சொல்லாராய்ச்சி இல்லை என்று கூறுவோர், தமிழ் என்றால் என்னவென்றே
அறியாதவர், ஏனெனில் தமிழ் என்றால் அனைத்தும் அடுக்கடுக்காய்
ஆழ ஆழப்  புரிய வேண்டும். அதுதான் தமிழ்! எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே
என்று சொன்னது ஏன் எதனால் என்று அறிய வேண்டும். எவ்வளவு
துணிவு இருந்திருந்தால் திருவள்ளுவர் உரை  ஏதும் 
இல்லாமல் தம் நூலை அப்படி விட்டுப்போயிருப்பார்!!! 
தமிழர்களின் அறிவையும் நுண்ணறிவையும்
ஆழ உணர்ந்தவர்! தமிழில் புதிய சொற்கள் ஆக்கியே ஏற்பதும் இந்த
நெடிய மரபால்தான். நமக்குப் புரிய வேண்டும் என்பது ஆழ்
அடிப்படை. 

அன்புடன்
செல்வா

2013/3/8 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 9, 2013, 7:43:18 AM3/9/13
to tamil...@googlegroups.com
செல்வா

தெலுகு மொழியில் கால் என்பதை காலி என்பார்கள்.

தமிழ்நாடு இன்னும் பொருளாதாரதுறையில் வளரணும். நமக்கு தன்னம்பிக்கை பிறக்கும் போது நம் மொழியும் வளரும்.

9 மார்ச், 2013 12:53 AM அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

iraamaki

unread,
Mar 9, 2013, 7:59:42 PM3/9/13
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வராசு,
 
எதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட உகப்பு. அதில் நான் நுழைய மாட்டேன். எனக்குச் சரியென்று பட்டதை இங்கு மன்றத்திற் சொன்னேன்.
 
ஒரேயொரு செய்தியை மட்டும் இதனோடு சொல்லுகிறேன். பொதிவு என்ற சொல் சற்று விலகி வேறு பொருள் கொண்டது. அதை positive என்பதற்கு இணையாக நான் பயன்படுத்தி வருகிறேன். (நேர்மறை, எதிர்மறை என்று மறை போட்டு எழுதுவது எனக்கு உடன்பாடு அல்ல. இளம் அகவையில் எனக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள். அது மிகவும் சுற்றி வருகிறது. ) 
 
 பொதிவின் எதிர்ச்சொல் நொகை (negative) என்பதாகும். நொகுதல் என்பது நொடித்துப் போதல். (நொந்து போனான் என்று சொல்கிறோம் இல்லையா? நொட்டம்>நட்டம் என்ற சொல்லும் loss யைக் குறிக்கும். இவையெல்லாம் ஒரு தொகுதிச் சொற்கள்.)  
 
என்னுடைய கணக்கியல் பற்றிய பதிவுகளைப் படித்தால் உங்களுக்கு மேலும் விளக்கம் கிடைக்கலாம். எண்ணியல் என்ற தொடரில் (7 பகுதிகள் அடங்கியது)
 
பொதிவெண்கள் (positive numbers),
நொகையெண்கள் (negative numbers),
பலக்கிய எண்கள் (complex numbers)
 
என்பவற்றையும் இன்னும் பலவற்றையும் பற்றிப் பேசியிருக்கிறேன்.
 
பொதிவோடு குழம்பிக் கொள்ளக் கூடாது என்பதாலேயே ”பொதுள்” என்ற கூட்டுச்சொல்லை potential க்கு இணையாகப் பரிந்துரைத்தேன். அதில் வரும் ”உள்” என்பது பொருள் புரிதலுக்கு அடிப்படையான செய்தி. ”பொருள்” என்ற தமிழ்ச்சொல்லும் பொருந்தியுள்ளதைத்தான் குறிக்கிறது  சற்று எண்ணிப் பாருங்கள். அந்த ஈறு எதைக் குறிக்கிறது?

வேந்தன் அரசு

Reply all
Reply to author
Forward
0 new messages