ஓ மனிதா!

21 views
Skip to first unread message

ருத்ரா

unread,
Jan 28, 2023, 11:38:05 PM1/28/23
to தமிழ் மன்றம்

ஓ மனிதா!

____________________________________

ருத்ரா




சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை

பல்கலைக்கழகம் எனும்

அடிப்படைக்கட்டுமானத்தையே 

அடித்து நொறுக்கி விட்டது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள்

இந்த செல்லமான பூனைக்குட்டியை

வைத்துக்கொண்டு

புயல் கிளப்புகிறார்கள்.

உண்மை அறிவு காணாமல்

போய்விட்டது.

செயற்கை அறிவின் இந்த‌

கருவி

வெறும் மண்ணாங்கட்டியைக்கூட‌

நோபல் பரிசு 

வாங்க வைத்து விடும்.

மனிதர்களின் மூளையின் நிழலே

இனி ஆட்சி செய்யும்.

அமெரிக்க பள்ளிக்கூடங்கள்

மாணவர்கள் இந்த‌

சேட்ஜிபிடியை

பயன்படுத்த தடை 

விதித்துக்கொண்டிருக்கிறது.

கணினியுகம் க‌ண்மூடித்தன்மான‌

ஒரு யுகத்துள் விழுந்து விட்டதால்

இனி பிறக்கும் குழந்தைகளின்

கபாலங்கள் காலியாகவே

இருக்கும்

மூளைகள் இன்றி.

செயற்கை அறிவின் கதிர்வீச்சில்

இயற்கை சிந்தனைகள்

பூண்டற்றுப்போகும்.

ஒரு இறுக்கமான பனியுகம்

நம் அறிவை உறையவைத்து

இந்த உலகையே

விறைத்துப்போகவைக்கும்

பேரழிவு

நம் கைபேசி வழியே வந்து

குதிக்கப்போகிறது.

ஒரே தீர்வு

திருக்குறளை தினமும்

ஓதுவது தான்.

நம் நியூரான்களுக்குள்

கிளர்ந்து கொண்டிருக்கும் அந்த‌

டிஜிடல் சுனாமியை

எதிர் கொள்ள 

ஓ மனிதா!

மனிதம் எனும் ஆற்றலை

ஒரு எரிமலையாய்

உன்னிலிருந்து 

உமிழச்செய்.

சமுதாய உணர்வின் பிரளயம்

ஒன்றே இதைத்தடுக்கும்.

அமிழ்ந்து விடாதே

இந்த அகங்காரக்கடலில்.


_________________________________________________







Aravindan Sumaithangi Sambasivam

unread,
Jan 30, 2023, 12:40:03 AM1/30/23
to tamilmanram, Eskki Paramasivan, Delhi Tamil Sangam, Bangaloretamilsangam Tamilsangam, தமிழ் சிறகுகள், rajam, C.R. Selvakumar, திருவள்ளுவன் இலக்குவனார்
வியக்காதே வியக்காமல் சொன்னால் வள்ளுவர்
வியந்தால் நன்றாய் அவிழ்ந்திடும் கோவணம்
வியக்காமல் வாழ்ந்தால் மனசாட்சி வாழும்
வியத்தல் நீங்கினால் வையம் வாழும்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/025839a8-bcf7-466d-9b68-e44dd06b76dbn%40googlegroups.com.

ருத்ரா

unread,
Jan 30, 2023, 3:12:31 AM1/30/23
to தமிழ் மன்றம்
நமது தத்துவங்கள் நம் சிந்தனைக்கு மனப்பயிற்சி செய்வது போல் தோன்றினாலும் மனிதன் தன்னைத்தானே கொஞ்சம் ஏமாற்றிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இந்த முறையில் சிந்திப்பதே பகுத்தறிவு எனும் ரேஷனலிசம்.சான்றாக ஒருவனுக்கு உயிரே போகும் வலி இருப்பினும் அதை இவன் எப்படி அணுக வேண்டும் என்றால் என் உடம்பில் ஏதோ ஒரு நரம்புக்கூட்டம் இருக்கிறதாமே அதன் இயக்கமே (ஃபங்ஷன்) இது என்று"மாற்றி யோசி"க்கவேண்டும். ஆயிரம் சொல்லலாம். வலி வந்தால் அல்லவா தெரியும் என்று மடங்கிப் போகிறவர்கள் 99 சதவீதம் என்றால் அப்படி +மடங்காதவர்கள் இருக்கலாம் அல்லவா. இப்படி இருப்பவர்களே"பற்று" என்பதையே அழிப்பவர்கள்.எனவே துறவிகள் என்பவர்கள் எல்லோருமே துறவிகளாக இருக்க முயலுபவர்களே.இப்படி மண்டையை உடைத்துக்கொள்ளாதீர்கள்."மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்ததை ஒழித்துவிடின்"என்ற எளிதாக கூறினார் வள்ளுவர்.எங்கோ தொங்கிக்கொண்டிருக்கிற‌பிரம்மத்தோடு நீ ஒன்றிப்போவது இருக்கட்டும்.இந்த உலக மக்களின் வெள்ளத்தோடு உள்ள்த்தோடு
இயைந்து இழைந்து பார் என்கிறார் அந்த "பொதுமை"யாளர்..........ருத்ரா

திங்கள், 30 ஜனவரி, 2023அன்று முற்பகல் 11:10:03 UTC+5:30 மணிக்கு samoogam எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages