வாழ்த்துகள், வாழ்த்துக்கள். எது சரி?

15,149 views
Skip to first unread message

Bala Swaminathan

unread,
Jan 14, 2016, 3:11:11 PM1/14/16
to தமிழ் மன்றம்
வணக்கம் நம் குழுவினர் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

வாழ்த்துக்கள் என்று ஏன் சொல்ல வேண்டும். வாத்து என்பதன் பன்மை வாத்துகள், வழக்கு -> வழக்குகள், வாழ்க்கை -> வாழ்க்கைகள்.
ழ கரம் வருவதை அடுத்து வல்லினம் ஒற்று மிகுந்து வந்தால் பன்மைக்கு முன் ஒற்று மிக வேண்டும் என்பது விதியா? அம்மா இராசம் அவர்களின் ஒற்று பற்றிய கட்டுரையிலும் வாழ்த்துக்கள் என்று வருவதற்கான விதிகளைக் காண முடியவில்லையே.

எது தான் சரியான பயன்பாடு?

நட்புடன்,
-பாலா

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 14, 2016, 5:15:36 PM1/14/16
to tamilmanram kuzhu, thiru thoazhamai
ஒரு வாழ்த்து இரு வாழ்த்து என்பதெல்லாம் இல்லை. தண்ணீர் போன்றவற்றிற்குப் பன்மை இல்லாததுபோல் வாழ்த்திற்கும் பன்மை யில்லை. எனவே, வாழ்த்து என்பதே போதுமானது. அப்படியும் எழுத எண்ணினால் ஒற்று மிகாமல்  வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Jan 14, 2016, 7:44:23 PM1/14/16
to tamil...@googlegroups.com
அன்புள்ள திரு பாலா சுவாமிநாதன் அவர்களுக்கும் ஐயன் திருவள்ளுவன் அவர்களுக்கும் வணக்கம்.

வாழ்த்து, நன்றி ஆகிய சொற்களைப் பன்மைப்படுத்தத்தேவையில்லை என்பது என் கருத்து.

(best) wishes; many thanks, greetings, salutations … போன்ற ஆங்கிலப்பயன்பாட்டின் தாக்கமே வாழ்த்து(க்)கள், நன்றிகள், வணக்கங்கள் போன்ற தமிழ் வழக்காறுகள் என்றும் கருதுகிறேன்.

அன்புடன்,
ராஜம்

Bala Swaminathan

unread,
Jan 14, 2016, 8:43:30 PM1/14/16
to tamil...@googlegroups.com
இராசம் அம்மையாருக்கும் இலக்குவனார் ஐயாவிற்கும் மிக்க நன்றி. (நன்றிகள் பல = many thanks, என்று இம்மடலுக்கு முன், சற்றே பிழையுடன், எழுதியிருக்கிறேன்!)

நட்புடன்,
-பாலா


rajam

unread,
Jan 14, 2016, 9:11:03 PM1/14/16
to tamil...@googlegroups.com
congratulations, blessings … போன்றவையே பாராட்டு(க்)கள், ஆசிகள் என்று உருவெடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

ஒருவருக்குச் சொல்ல நினைத்திருந்த பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து இன்ன பிறவெல்லாம் அந்தந்த நேரத்தில் தெரிவிக்கப்படாமல் தேங்கிக்கிடந்து … எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லநினைத்தால் வேண்டுமானால் … “வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு நழுவலாம் என்று நினைக்கிறேன். ;-)

பொங்கல் வாழ்த்துடன்,
ராஜம்

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 9:58:43 PM1/14/16
to தமிழ் மன்றம்

2016-01-15 7:40 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ஒருவருக்குச் சொல்ல நினைத்திருந்த பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து இன்ன பிறவெல்லாம் அந்தந்த நேரத்தில் தெரிவிக்கப்படாமல் தேங்கிக்கிடந்து … எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லநினைத்தால் வேண்டுமானால் … “வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு நழுவலாம் என்று நினைக்கிறேன்

நன்றி, ஆசி, வாழ்த்து என்று சொல்வதுதான் வழக்கம்.  இப்பல்லாம் வணக்கம் சொன்னா போற மாட்டேங்குது.  வணங்கங்களாம்.  கள் பெருகிப் போச்சு.

பொங்கல் வாழ்த்து.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

iraamaki

unread,
Jan 14, 2016, 10:05:43 PM1/14/16
to tamil...@googlegroups.com
நான் சொல்லும் இன்றைய வாழ்த்திற்குப் பன்மையில்லை. அது ஆற்றுத்தண்ணீர் போன்று பெருகுவதுதான் ஆனால் ஆறுகளிலிருந்து பெருகும் வெவ்வேறு வெள்ளங்கள் எல்லாம் ஒன்றா?  எப்படி வெள்ளங்களிற் பன்மையுண்டோ, அதுபோல் வாழ்த்துக்கள்.வாழ்த்துகளிலும் பன்மையுண்டென்று எண்ணுகிறேன். இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இற்றைப் பொங்கலுக்கும், நாளை மாட்டுப்பொங்கலுக்கும், நாளன்றைக்குக் காணும் பொங்கலுக்கும் நான்சொல்லும் வாழ்த்துப் பன்மையாகவே அமையும். ”வெவ்வேறு நாட்களில் நான் சொன்ன வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்”. அதேபோல, நான் சொன்ன வாழ்த்து, நீங்கள் சொன்ன வாழ்த்து, அவர் சொன்ன வாழ்த்து, இவர் சொன்ன வாழ்த்து என்று சேர்க்கும் போது ”எல்லாருஞ் சொன்ன வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்” என்று பன்மையமையும்.
 
நண்பர் கேட்டது வாழ்த்துக்களா/வாழ்த்துகளா என்ற கேள்வி. அதற்கு விடைசொல்லுங்கள்.
 
அன்புடன்,
இராம.கி. 


STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 10:45:23 PM1/14/16
to தமிழ் மன்றம்

2016-01-15 8:35 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
நண்பர் கேட்டது வாழ்த்துக்களா/வாழ்த்துகளா என்ற கேள்வி. அதற்கு விடைசொல்லுங்கள்.

ஐயா,

கள் விகுதிக்கு முன்னால் ஒற்று மிகாது என்று பேராசிரியர் பரமசிவம் எழுதிய நற்றமிழ் இலக்கணத்தில் படித்திருக்கிறேன்.  சொல்லும் சொல்லும் புணரும்போதுதான் ஒற்று மிகும்; விகுதியோடு சேரும்போது மிகாது என்பது அவர் அளித்திருக்கும் விளக்கம்.

புத்தகத்தைச் சென்னையிலிருந்தபோதே தொலைத்துவிட்டேன்.  யாருக்குக் கொடுத்தேனோ நினைவில்லை.  ஆசிரியர் பெயரும் முழுமையாக நினைவில்லை.  (டாக்டர் தொ மு பரமசிவம் என்று நினைவு). 

இதை 17-18 ஆண்டுகளுக்கு முன்னால் மரத்தடி காலத்திலேயே சொல்லியிருக்கிறேன்.  'வாழ்த்துகள்' என்று க்காமல் எழுதச் சொல்லித்தந்த ஹரியண்ணன் என்று ஆசிப் மீரான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். 

Hari Krishnan

unread,
Jan 14, 2016, 10:47:38 PM1/14/16
to தமிழ் மன்றம்

2016-01-15 9:15 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
படித்திருக்கிறேன்.  சொல்லும் சொல்லும் புணரும்போதுதான் ஒற்று மிகும்; விகுதியோடு சேரும்போது மிகாது என்பது அவர் அளித்திருக்கும் விளக்கம்.

இது தமிழ் மன்றமா.  கவனிக்கவில்லை.  இங்க ஒருத்தர் அதிமேதாவித்தனம் பண்ணுவார்.  பூக்கள், பாக்கள்... என்றெல்லாம் எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார்.  இசுட்டம் இருந்தா எடுத்துக்கோங்கோ.. அல்லாக்காட்டி உட்ருங்கோவ். (அவருக்குச் சொன்னது)

MANICKAM POOPATHI

unread,
Jan 16, 2016, 12:42:21 AM1/16/16
to tamil...@googlegroups.com
வணக்கம்:

அனைவருக்கும் தைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும்
இனிய பொங்கல் புதுநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

அன்புடன்.../பூபதி

------------------------
பி.கு:
இந்த ஒருமை பன்மை பற்றி
பலமுறை  எழுதியாகி விட்டது..

முதலாவது..
ஒருமை என்பது (singularity)
இறைப்பொருள் ஒன்றையே குறித்தானது..

ஆதலினால்தான்.. தமிழில்..
இறைப்பொருளை  இறைவன்/இறைவி  என்று
ஒருமையில் அழைக்கிறோம்..

ஈன்ற அம்மையையும்  அப்படி
அழைப்பது வழக்கமும்கூட ..?

சரி..! கேள்விக்கென்ன பதில்..?

முதலாவது :
ஒரேழுத்து ஒருமொழியில்.. மிகும்.
உ-ம்: பூ (ஒருமை)  பூக்கள் (பன்மை)

வெவ்வகாரம் என்னவென்றால்..

கண்ணடம்/தெலுங்கு போன்ற மொழிகளில்
பூ என்பது  புவ்வு (பூவு) என்றாகும்
அப்படியான  வு-கார விகுதியில்..
மிகவே மிகாது.. பூவுகள்'னுதான்  
வரும்..வரணும்.?  அதான்.

ஈரசை சொற்கள்:
குறில்  <உ-ம்>  பசுக்கள்
நெடில்  <உ-ம்> மாடுகள்

மூன்றசை சொற்களில் ஒற்று மிகாது..?
<உ-ம்> தேர்வுகள்/தீர்வுகள்/பாடல்கள்

மேளகர்த்தாக்கள்  எழுவத்திரண்டிலும்
தமிழ்பாடல்கள் படைத்த  ஒரேயொரு பாரதி.. அதனால்தானோ
அவனை பாட்டுக்கொரு (பாட்டுக்களுக்கு அல்ல)
புலவன் பாரதி என்கிறோம்.. இல்லீங்களா..!?
(நம்ம சுத்தானந்த பாரதி'ங்க செர்..?) <வுட்டு ஜூட்டு>
 
நான்கசை சொற்களில்:
புள்ளி  இ ரு ந் தா ல்  மிகும் 
<உ-ம்> வாழ்த்துக்கள்/எழுத்துக்கள்....

இருக்கும் பிரட்சனை..
தமிழன் தமிழில் சிந்திக்க வேண்டும். _/\_

எழுத்தாளனின் எழுத்தினை 
எழுத்துகள் (writings) எனும் ஆங்கிலப்  பன்மைப்போக்கு
நம்மிடையே இன்னுமே  நிலவி வருகிறதோ..?
(எழுத்துக்கள் = அகரம்  முதலிய எழுத்துக்கள் (letters))

வாழ்த்து சரி..
வாழ்த்துக்களும்  சரி...
வாழ்த்துதல்களை  நினைத்து வாழ்த்துகளை
இடிக்காமல் இருந்தால்.. இன்னும் சரி..
இல்லீங்களுங்களா...??
-----------------------------------











--
Reply all
Reply to author
Forward
0 new messages