நினைவு வேர் பொருள் என்ன?

208 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 24, 2023, 1:53:20 AM7/24/23
to தமிழ் மன்றம்
நினைவு வேர் பொருள் என்ன?

மனம் பழையவற்றை அவ்வப்போது நினைவுபடுத்துவது புதியவற்றை சிந்திப்பது என இரண்டு வேலைகளை ஓயாமல் செய்கிறது.

நினைவு அசையாத, பெயராத மாறாத என்ற பொருளில் நில் > நின்  > நினை இதாவது, எப்போது அந்த நினைவுப் பதிவை தொட்டாலும் அது மாறாததாக நிலையானதாக இருப்பதால் தான் நினைவு என்று சொல்லப்படுகிறது. நேற்று அதை கவனத்தில் கொண்டாலும் சரி நாளை அதை கவனத்தில் கொண்டாலும் சரி அது மாறுபடாது இருக்கும். நினைவு தப்பினால் அது மறதி ஆகும். மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க அது மாறாததாக இருக்க வேண்டும் என்பதே நினைவின் அடையாளம். ஆனால் புதிதாக எண்ணுவதற்கும் நினை என்ற சொல்லை பயன்படுத்துவது அதன் வேர் பொருளுக்கு சற்றும் பொருந்துவதாக இல்லை.

ஞா என்றால் பெயராது பொருந்தியிருத்தல் (fixed) ஞாத்தல் என்று பொருள். இதில் இருந்து ஞா + அகம் > ஞாவகம்  > ஞாபகம் என்று இன்னொரு சொல் நினைவை குறிக்க ஆளப்படுகிறது. இதாவது மனதில் நிலையாக பொருந்தியிருப்பது என்று. ஆனால் சொற்பிறப்பியல் பேரகர முதலி இதை தமிழ்ச் சொல்லாகவே கருதவில்லை போலும்.

குறி என்றால் மாறாமல் கவனம் பிசகாமல் ஒன்றிலேயே குறிகொள் என்று பொருள். இதை வைத்து தெலுங்கில் குர்து என்ற சொல் நினைவிற்கு பயங்கொள்ளப்படுகிறது.

image.png

வேந்தன் அரசு

unread,
Jul 24, 2023, 2:04:20 AM7/24/23
to vall...@googlegroups.com, தமிழ் மன்றம்
நினைவுகளும் எண்ணங்களும் தலையில் தோன்றுவதால் தலுப்பு என்ற தொலுகுச்செல்லை தமிழுக்கு கொணரலாம்.

திங்., 24 ஜூலை, 2023, முற்பகல் 11:20 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPR9UE_uhu8t10jB-AHJJ9DTbNOOLHhSpm5ki3S2myjYVg%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
Jul 24, 2023, 3:47:12 AM7/24/23
to தமிழ் மன்றம்
"நா உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே" என்பது நினைவு. என்ன யாருன்னு நெனச்சே நாம் பாத்தா பைத்தியக்காரன் உம் பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன் என்பது என்னை யாரென்று எண்ணினாய் என்று சொல்வது நினைவொடு சற்றும் தொடர்பில்லாதது.    

ஞாவின் முந்து நிலை யா. இந்த ஞாத்தல் அதன்படி யாத்தல் ஆகும். வட இந்திய மொழிகளில் இன்றும் நினைவு யாத் என்று குறிக்கப்படுவது கருத்தில் வைக்கத்தக்கதாய் உள்ளது.

Reply all
Reply to author
Forward
0 new messages