மாணிக்கவாசகர் ஆவுடையார் கோயில்

226 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 3, 2014, 11:39:43 PM2/3/14
to தமிழ் மன்றம், வல்லமை, mintamil, thami...@googlegroups.com, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org
அன்புள்ள மடலாடருக்கு,

நேற்று ஆவுடையார்  கோயிலில் புதிய கல்வெட்டு கண்டு பிடித்தது பற்றிய செய்தியை கண்டோம்
 அது இந்து ஆங்கில பதிவிலிருந் து. வந்தது 

இன்று அதன் தமிழ் பதிவு வெளி வந்துள்ளது இதனில்மேலும் சில விளக்கங்கள் உள்ளன 
யாவரும் மீண்டும் இணையம்  சென்றுதான் பார்க்க வேண்டமே எனும் எண்ணத்தில் 
அப்பக்கத்தின் படத்தை வைத்துள்ளேன் காண்க 

 கல்வெட்டுகள்   கண்ட இடம் கோயிலில் உள்ள பஞ்சாக்ஷர மண்டபம்

இதனில்கன்டுபிடிதவை 200 கல்வெட்டுகள்
அதனில் செய்யுள் வடிவில் உள்ளவை 5
வற்றில் ஒன்றில் மாணிக்க வாசகர் கட்டினார் என குறிக்கப்பட்டிகின்றதாம்

இக்கோயில் கட்டப்பட்ட காலம் 16 ம் நூற்றாண்டு

எனவே செய்யுள் எழுதிய காலம் அதே  16 ம் நூற்றாண்டு  காலமாகத்தான் ஆக வேண்டும் 

ஆகவே இப்போது நாம் செவிவழி அறியும் செய்தி உறுதி செய்யப்படுமின்றதாம் 

அதாவது 

நாம் இன்று கொண்டுவரும் கருத்தே  16 ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளது என்பது காட்டப்படும் பொருள்

மேலும் விவரங்கள் அதனிலேயே காணலாம் 

அன்புடன்

நூ த லோ சு
மயிலை
AvudaiyArkOyil.jpg

iraamaki

unread,
Feb 4, 2014, 12:48:33 AM2/4/14
to தமிழ் மன்றம், thami...@googlegroups.com
அன்புடையீர்,
 
இல்லாத செய்தியை இருப்பதாகச் சொன்னால் எப்படி? மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்பதற்கு என்ன விவரம் அந்தக் கல்வெட்டிலிருக்கிறது? இப்பொழுது 16 ஆம் நூற்றாண்டு என்று பொருள் கொள்ளுகிறீர்கள்? அதற்கும் என்ன ஆதாரம்? சில மாதங்களுக்கு முன் கோகழி என்பது கர்நாடகாவில் உள்ளது. மாணிக்கவாசகர் கன்னடப் பின்புலங் கொண்டவர் என்று சொன்னீர்கள். அது என்னவாயிற்று?
 
கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளை வைத்து எதையெதையோ முடிச்சுப் போட்டுக்கொண்டால் எப்படி?
 
அன்புடன்,
இராம.கி.  
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

சிவ அறிவொளியன்

unread,
Feb 5, 2014, 3:42:23 PM2/5/14
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org

Could you please refer http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=4?

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். 

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம். 

``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

சிவ அறிவொளியன்

unread,
Feb 9, 2014, 5:44:16 AM2/9/14
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org
1.வள்ளலார் காலம்  5th October 1823 -- 30th January 1874.
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ் ஜோதி அகவல் 1596 வரிகளில் மிக அதிகமாக வருவது

அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி

திருவாசக வரிகளைக் காண்க இதனில் "சோதியனே" "வள்ளலாரை"  அன்றி வேறு எதனைக் குறித்தது ??

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
.....
.....
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் "சோதி"
    உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
    திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
    இன்பமே என்னுடைய அன்பே.

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
    பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
    நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
    திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
    ஆனந்த மாக்குமென் "சோதீ"


ஆதியும் அந்தமும் இல்லா "அரும்பெருஞ்
    சோதியை" யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
    ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பாசம் பரஞ்"சோதி"க் கென்பாய் இராப்பகல்நாம்
    பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
    சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
    கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
    ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.


"சோதியே" சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
    பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே.

எனவே மாணிக்கவாசகர் அவர்களின்  காலம் வள்ளலாருக்கு சமமாகவோ அல்லது அதற்குப் பிறகோ இருக்கும்....
ஆகவே மாணிக்கவாசகரின் காலம் 19 இருந்து 25 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வமா???????????????


2.வள்ளலார் எழுதிய ஒரு பாடல்

"வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

3.ஆதி சங்கரருக்கு முன்பே மாயாவாதம் உண்டு. அதன் வேறு பெயர் ஏகன்ம வாதம்!

N D Logasundaram

unread,
Feb 9, 2014, 10:05:28 AM2/9/14
to தமிழ் மன்றம், thami...@googlegroups.com, mintamil, வல்லமை, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
திரு சிவ அறிவொளியன் 

நீங்கள் இராமலிங்கஅடிகளாரின் காலதிற்கே கொணர நினைத்தால் . . . . . . . .  . . .  . . 

.ஆதி சங்கரருக்கு முன்பே மாயாவாதம் உண்டு. அதன் வேறு பெயர் ஏகன்ம வாதம்!

மேற்கண்ட வரிகளில் உள்ள கருத்துக்கள்  யார் யார் எப்பொது எந்த நூலில் கூறினார்கள் 
என்பதையும் வைக்கவும் சான்று காட்டவிடில் மேற்கண்டது போல் உங்கள் கருத்தாகிவிடுமல்லவா?

நீலகேசி வரிகள் > > > > 
கேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய நாடகம் > > > > 
சிவஞான பாடியம் பரபக்க ம் காட்டும் சான்று   

 என்பது போல் 

அல்லவிடில் இவைகளை இந்த இந்த  மேனாள் / முன்னாள் வரலாற்ரறாளர்
அவரது இந்த நூலில் என கைகாட்டல் வேண்டுமல்லவா?

அல்லது 

ஆதி சங்கரர் தன்  நூலில் திராவிட சிசு என திருஞான சம்பந்தரைக் குறித்தார் போன்ற 
 பரவலாக எல்லோரும் ஓரளவிற்கு கேள்விப்பட்டது ஒன்றைக் காட்டுங்ககள்

அன்புடன்
நூதலோசு
மயிலை



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

DEV RAJ

unread,
Feb 9, 2014, 1:23:33 PM2/9/14
to tamil...@googlegroups.com
On Sunday, 9 February 2014 02:44:16 UTC-8, சிவ அறிவொளியன் wrote:
1.வள்ளலார் காலம்  5th October 1823 -- 30th January 1874.
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ் ஜோதி அகவல் 1596 வரிகளில் மிக அதிகமாக வருவது

அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி

திருவாசக வரிகளைக் காண்க இதனில் "சோதியனே" "வள்ளலாரை"  அன்றி வேறு எதனைக் குறித்தது ??

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் "சோதி"
    உள்ளவா காணவந் தருளாய்..........

..............................................................

யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
    ஆனந்த மாக்குமென் "சோதீ"

ஆதியும் அந்தமும் இல்லா "அரும்பெருஞ்
    சோதியை" யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்... 


எனவே மாணிக்கவாசகர் அவர்களின்  காலம் வள்ளலாருக்கு சமமாகவோ அல்லது அதற்குப் பிறகோ இருக்கும்....
ஆகவே மாணிக்கவாசகரின் காலம் 19 இருந்து 25 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வமா???????????????
 

சோதி - தேவாரத்தில் :

சொற்றுணை வேதியன் சோதிவானவன்..

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!


ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்புஅது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக்கொடுமுடி
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. 

தேவார மூவர் காலமும் 19க்குப்பின் ......  ? :))



தேவ்

சிவ அறிவொளியன்

unread,
Feb 9, 2014, 7:53:35 PM2/9/14
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org
//************
நீங்கள் இராமலிங்கஅடிகளாரின் காலதிற்கே கொணர நினைத்தால் . . . . . . . .  . . .  . . 

.ஆதி சங்கரருக்கு முன்பே மாயாவாதம் உண்டு. அதன் வேறு பெயர் ஏகன்ம வாதம்!

மேற்கண்ட வரிகளில் உள்ள கருத்துக்கள்  யார் யார் எப்பொது எந்த நூலில் கூறினார்கள் 
என்பதையும் வைக்கவும் சான்று காட்டவிடில் மேற்கண்டது போல் உங்கள் கருத்தாகிவிடுமல்லவா?

நீலகேசி வரிகள் > > > > 
கேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய நாடகம் > > > > 
சிவஞான பாடியம் பரபக்க ம் காட்டும் சான்று   

 என்பது போல் 

அல்லவிடில் இவைகளை இந்த இந்த  மேனாள் / முன்னாள் வரலாற்ரறாளர்
அவரது இந்த நூலில் என கைகாட்டல் வேண்டுமல்லவா?

அல்லது 

ஆதி சங்கரர் தன்  நூலில் திராவிட சிசு என திருஞான சம்பந்தரைக் குறித்தார் போன்ற 
 பரவலாக எல்லோரும் ஓரளவிற்கு கேள்விப்பட்டது ஒன்றைக் காட்டுங்ககள்


**********//

சங்கரருக்கு முன்பே மாயாவாதம் உண்டு. அதன் வேறு பெயர் ஏகன்ம வாதம்.
We don't need book evidence but common sense!
If you need evidence, could you  please read சிவஞான  சித்தியார் பரபக்கம்?

When I Google searched, I don't find the word "ஏகன்ம வாதம்". Then only I realized that it was a typo.  The correct word is  "ஏகான்மவாதம்"


முக்கூற்றுப் புறச்சமயங்கள் மூன்று :

    (புறப்புறம்) - உலகாயதம், மாத்தியமிகர், யோகாசரர், சௌத்திராந்திகர், வைபாடிகள், (பௌத்தம்) ஆருகதர்.

    (புறம்) தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம்.

   ((அகப்புறம்) பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம்.


எங்கோ படித்தது. இந்த ஏகான்மவாதமானது,

மாயாவாதம்
பாஸ்கரியவாதம்
உத்தரப் பிரம்மவாதம்
கீரிடப் பிரம்மவாதம்

என நான்கு வேறுபாடுகளுடன் வழங்கப்படுகிறது


So, let me argue this way

Here is the Wikipedia evidence for the existence of மாயாவாதம் before Sankarar:

http://en.wikipedia.org/wiki/Adi_Shankara

Adi Shankara's opponents accused him(Adi Shankara) of teaching Buddhism in the garb of Hinduism, because his non-dualistic ideals seemed rather radical to contemporary Hindu philosophy, and so he earned the title "pracchannabauddha". He further praised the Buddha as the "emperor of yogis in the Kali Age."[46] However, although Advaita proposes the theory of Maya, likening the universe to "a trick of a magician", Adi Shankara and his followers see this as a consequence of their basic premise that Brahman alone is real. Their theory of Maya emerges from their belief in experiential reality of the absolute consciousness 'Brahman' (as emphasized in Upanishads), as opposed to Buddhist doctrine of emptiness, which emerges from the Buddhist approach of observing the nature of reality

எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை. என்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்லவில்லை. பிரபஞ்சமேல்லாம் மாயைதான். ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது என்கிறது அத்வைதம். மாயா வாதமாவது சங்கரரால் பரப்பப்பட்ட மதம். இது 'அகம் பிரமம்' என்பது. உலகம் யாவையும் மாயையென்னும் கொள்கையுடையது. இக்கொள்கை சங்கரருக்கு முன்பே பௌத்தத்தில் உண்டு.

மாணிக்கவாசகர் காலத்தில் பௌத்தம் மேலோங்கி இருந்தது.
திருவாசகப் பாடல்  "திருச்சாழல்"  இதற்குத் தக்க சான்று.  
மாணிக்கவாசகர் போற்றி திருஅகவல் "மாயாவாதம்"  பௌத்த மாயாவாதம். ஆதி சங்கரர் மாயாவாதம்  அன்று!!!.

எப்படி "சோதி" என்ற வார்த்தை வள்ளலாரைக் குறிக்காதோ, அது போல "மாயாவாதம்" என்ற ஒரு சொல் ஆதிசங்கரரை குறிக்காது!
ஆதி சங்கரருக்கு முன்பே பௌத்தத்தில் "மாயாவாதம்" உண்டு.
மாணிக்க வாசகர் போற்றி திருஅகவலில் குறிப்பிட்ட "மாயாவாதம்" பெளத்த மாயாவாதமே!


Elangovan N

unread,
Feb 9, 2014, 9:21:25 PM2/9/14
to tamilmanram, ariv...@gmail.com
என்னங்க தேவ் இப்படிச் சொல்றீங்க.

திரு.சிவ அறிவொளியன் 19ஆம் நூற்றாண்டு என்று தவறாகச் சொன்னால் நீங்களுமா
தவறாகச் சொல்வது.

"ஆட்டுவித்தால் யாரொருவர்..." என்று தொடங்கி, கண்ணதாசன் திரைப்பாட்டு எழுதினார் இல்லையா?
அதே மாதிரி அப்பரும் எழுதியிருக்கிறார் அல்லவா?

அப்படின்னா அப்பரும் கண்னதாசனும் சம காலத்தவர் அல்லவா? ;-))))))

அன்புடன்
நாக.இளங்கோவன்







சிவ அறிவொளியன்

unread,
Feb 9, 2014, 9:49:57 PM2/9/14
to tamil...@googlegroups.com


தேவார மூவர் காலமும் 19க்குப்பின் ......  ? :))



தேவ்


25  க்குப்பின் :))))

சிவ அறிவொளியன்

unread,
Feb 9, 2014, 10:01:59 PM2/9/14
to tamil...@googlegroups.com, ariv...@gmail.com
நான் சரியாகத்தான் சொல்லி உள்ளேன்  மாணிக்க வாசகர் காலம் 25 ஆம் நூற்றாண்டு!!!! :))))
19 என்பது கூட தவறு

அப்பரே கண்ணதாசனைப் பார்த்துதான் எழுதினர் !!! :)))))

DEV RAJ

unread,
Feb 10, 2014, 12:11:40 AM2/10/14
to tamil...@googlegroups.com
On Sunday, 9 February 2014 18:21:25 UTC-8, Elangovan N wrote:
என்னங்க தேவ் இப்படிச் சொல்றீங்க.
திரு.சிவ அறிவொளியன் 19ஆம் நூற்றாண்டு என்று தவறாகச் சொன்னால் நீங்களுமா
தவறாகச் சொல்வது.

 
இல்லை, அவரும் விளையாட்டாகச் சொல்கிறார்;
நானும் அதைப் பின்பற்றினேன்


தேவ்

சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 5:51:39 AM2/10/14
to tamil...@googlegroups.com
நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. ஒரு பொடி வைத்து சொல்லி உள்ளேன். மாணிக்கவாசகரின் காலம் கி.மு 25 முதல் கி.மு 19....

சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 6:22:22 AM2/10/14
to tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org

//மாணிக்க வாசகர் போற்றி திருஅகவலில் குறிப்பிட்ட "மாயாவாதம்" பெளத்த மாயாவாதமே! //

மாணிக்கவாசகர் போற்றி திருஅகவல் வரிகளில் அவர் "பெளத்த மாயாவாதம்" பற்றிதான் பாடி உள்ளார் என்பதுக்கு ஆதாரம் உண்டு!

மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் "சுழி"த்தடித் தாஅர்த்

உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும்

சூனியத்தை சுழி என்பர் 
பௌத்த ஞானத்தினை " ஞான சூனியம்" என்பர்


சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 6:35:47 AM2/10/14
to tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mintamil, வல்லமை, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
நூதலோசு

 

ஆதி சங்கரர் தன்  நூலில் திராவிட சிசு என திருஞான சம்பந்தரைக் குறித்தார் போன்ற 
 பரவலாக எல்லோரும் ஓரளவிற்கு கேள்விப்பட்டது ஒன்றைக் காட்டுங்ககள்



ஆதி சங்கரர் காலம் என்ன?

திருஞான சம்பந்தர் காலம் என்ன?

ஆதி சங்கரர் எந்த நூலில் எந்த வரியில் திருஞான சம்பந்தரை "திராவிட சிசு" என குறிப்பிட்டு உள்ளார் ?

பரவலாக ஒரு பொய் பலரால் சொல்லப்பட்டால், ஒரு பொய்  உண்மை ஆகி விட முடியுமா?


சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 7:13:15 AM2/10/14
to tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org


//திருவாசகப் பாடல்  "திருச்சாழல்"  இதற்குத் தக்க சான்று.  //

Mani Manivannan

unread,
Feb 10, 2014, 8:14:37 AM2/10/14
to tamilmanram, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
// ஆதி சங்கரர் எந்த நூலில் எந்த வரியில் திருஞான சம்பந்தரை "திராவிட சிசு" என குறிப்பிட்டு உள்ளார் ? //

ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியின் 75 வாது சுலோகத்தில் அம்மையின் பால் குடித்த திராவிட சிசு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் புராணம் திருஞானசம்பந்தரைத் தவிர வேறு யாருக்காவது பொருந்தி வந்திருக்கிறதா? ஞானப்பால் குடித்ததாகக் கூறப்படுபவர் தண்டமிழ் ஞானசம்பந்தர் இல்லை என்கிறீர்களா?

கீழே சுலோகத்திலிருந்து மேற்கோள் கொடுத்துள்ளேன்:


https://sites.google.com/site/soundaryalahare/Home/slokas-71-80

Sloka:75

 

 

Oh mother

 

 Just tasting of what you have to offer,

 one attains the impossible

तव स्तन्यम् मन्ये धरणिधरकन्ये हृदयत:

पय: पारावार: परिवहति सारस्वतमिव

दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत्

     कवीनां प्रौढ़ानामजनि कमनीय: कवयिता  ॥  ७५

 

Tava   Sthanyam   Manyae   Dharani-dhara-kanyae   Hr’dayathaha

Payah   Paara-avaarah   Parivahathi   Saaraswatham-iva

Daya-vathiyaa   Dattham    Dravida-sishu –r-aaswaadya   Tava   Yath

Kaveenaam   Proudhaanaam-ajani   Kamaneeyah   Kavayithaa

 

Oh mother,

Daughter kanyae

of the Mighty Himalayas Dharani-dara

 

I feel that Manyae 

 

The milk Sthanyam

of your (breast ), Tava

is an ocean Paara-avaaraha

of the nectar of life Payaha

 

Which is flowing Parivahathi

from your heart Hr’dayathaha

like iva

the words of Devi Saraswathi . Saaraswatham-

 

“Dravida Sishu” Dravida-sishu

with much benevolence Daya-vathiyaa

was given Daththam

that milk, Tava   Yath

 

Who, after tasting  of  it aaswaadya

became ajani

a very great Kamaneeyaha 

poet Kavayithaa

 

Amongst  the greatest Proudaanaam

of poets.  Kaveenaam 


அன்புடன்,


மணி மு. மணிவண்ணன்

மணப்பாக்கம், தமிழ்நாடு



சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 10:20:30 PM2/10/14
to tamil...@googlegroups.com, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
//ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியின் 75 வாது சுலோகத்தில் அம்மையின் பால் குடித்த திராவிட சிசு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் புராணம் திருஞானசம்பந்தரைத் தவிர வேறு யாருக்காவது பொருந்தி வந்திருக்கிறதா? ஞானப்பால் குடித்ததாகக் கூறப்படுபவர் தண்டமிழ் ஞானசம்பந்தர் இல்லை என்கிறீர்களா?//

ஞானப்பால் குடித்ததாகக் கூறப்படுபவர் தண்டமிழ் ஞானசம்பந்தர் இல்லை என்கிறேன். ஏன் தெரியுமா? என்னுடைய தெலுங்கு, மலையாளம் நண்பர்களிடம் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியின் 75 வாது சுலோகத்தின் பொருளையும், ஞானசம்பந்தர் பற்றியும் விசாரித்தேன்.   ஞானசம்பந்தர் கிலோ என்ன விலை என்றனர். உங்கள் கருத்து உண்மை என்றால் எல்லா மொழிகளிலும் (தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஞானசம்பந்தர் பற்றி குறிப்பு இருக்க வேண்டும். ஏன் இல்லை என்று விளக்க முடியுமா?

Then I did a Google search.  I found this interesting book http://www.archive.org/stream/SaundaryaLahari/SaundaryaLahariBhashyaSktEng#page/n7/mode/2up

which describes who was that person who introduced thirunagasamdar in 75th solga and his failed attempt to insert the thiruganasambar story in Malabar(malayalam) orginal!!!  Moreover this book clearly states that the person who drank the gnanapal is Adi Sanakara him self!!!!

சிவ அறிவொளியன்

unread,
Feb 10, 2014, 11:22:13 PM2/10/14
to tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org, resp...@shaivam.org
//ஆதி சங்கரருக்கு முன்பே மாயாவாதம் உண்டு. அதன் வேறு பெயர் ஏகன்ம வாதம்!


மேற்கண்ட வரிகளில் உள்ள கருத்துக்கள்  யார் யார் எப்பொது எந்த நூலில் கூறினார்கள்
என்பதையும் வைக்கவும் சான்று காட்டவிடில் மேற்கண்டது போல் உங்கள் கருத்தாகிவிடுமல்லவா?//

Ref:

1.http://www.jeyamohan.in/?p=7712
அத்வைதம் ஒரு மாயாவாதம். ஆனால் மாயாவாதம் என்பது அத்வைதம் உள்ளிட்ட பல சிந்தனைகளை தன்னுள் கொண்ட ஒரு பொது தத்துவநோக்கு.
மாயாவாதத்தின் மூன்று நிலைகளில் சங்கரரின் அத்வைதமே சரியான மாயாவாதம் என்று சொல்லப்படுகிறது. பிற மாயாவாதங்களைப் போலன்றி நாம் அறிபவை முற்றாகவே பொய்த்தோற்றங்களே என்று வாதிடுவது அதுதான். சங்கர மாயாவாதம் இந்தியமெய்ஞான மரபில் மிக ஆழமாக வேரூன்றியது. சங்கரர் தன் கருத்துக்களுக்கு உபநிடதங்களை மேற்கொள் காட்டினாலும் ஆப்தவாக்கியங்களை வெகுவாக திரித்து பொருள்கொண்டே அதை நிகழ்த்துகிறார் என்பது இந்தியவியலாலர்களின் கருத்தாகும். மோனியர் வில்லியம்ஸ் [Monier Williams ]தன் இந்திய ஞானம் [Indian Wisdom] என்ற நூலில் ‘இந்திய சிந்தனையில் வேரோடியுள்ள மாயாவாதத்துக்கு உண்மையில் உபநிடதங்களில் ஆதாரம் இல்லை. அது பௌத்த இறக்குமதியே’ என்று

சொல்கிறார்.(http://www.jeyamohan.in/?p=7712)

For those who wants to read Monier Willams book "Indian wisdom", please follow this link

http://www.scribd.com/doc/102453999/India-Wisdom-Monier-Williams

2.ஆதிசங்கரரில் ஆரம்பித்து மகாபெரியவருடனான அனுபவங்கள்

http://thathachariyar.blogspot.com/2010/10/13.html
http://thathachariyar.blogspot.com/2010/10/14.html
http://thathachariyar.blogspot.com/2010/10/15.html
http://thathachariyar.blogspot.com/2010/10/16.html
http://thathachariyar.blogspot.com/2010/10/17.html
http://thathachariyar.blogspot.com/2010/10/18.html
http://thathachariyar.blogspot.com/2010/10/19.html
http://thathachariyar.blogspot.com/2010/10/20.html
http://thathachariyar.blogspot.com/2010/11/21.html
http://thathachariyar.blogspot.com/2010/11/22.html
http://thathachariyar.blogspot.com/2010/11/23.html
http://thathachariyar.blogspot.com/2010/11/24_05.html
http://thathachariyar.blogspot.com/2010/11/25.html
http://thathachariyar.blogspot.com/2010/11/26.html
http://thathachariyar.blogspot.com/2010/11/27.html
http://thathachariyar.blogspot.com/2010/11/28.html
http://thathachariyar.blogspot.com/2010/11/29.html
http://thathachariyar.blogspot.com/2010/11/30.html
http://thathachariyar.blogspot.com/2010/11/31.html
http://thathachariyar.blogspot.com/2010/11/32.html


Mani Manivannan

unread,
Feb 11, 2014, 12:59:42 AM2/11/14
to tamilmanram, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
 Were there any legends of Adi Sankara him self drinking the milk of the divine mother as a child?  Just because others weren't aware of Gnanasambandar (or change the story to glorify Sankara) it doesn't mean that Sankara didn't refer to Gnanasambandar.  Since people have been attempting to put Sankara's date to 5th century BCE there is every motive to disconnect this reference from the later Sambandar.  There is every evidence that Sankara's date is 8th Century CE and that he came after Sambandar.  Despite your hand waving argument dismissing this theory, the Sambandar connection cannot be dismissed that casually.

What do you claim is Sankara's date and Sambandar's date.  That will show if you are approaching this with a confirmation bias or not.

Regards,

Mani M. Manivannan

N D Logasundaram

unread,
Feb 11, 2014, 2:42:09 AM2/11/14
to தமிழ் மன்றம், Mani Manivannan
அன்புள்ள மணிவண்ணன் அவர்களுக்கு 

நான் பலர் ஆய்வுக்கட்டுரைகளில் குறித்து சென்றதை மட்டும் படிதுள்ளேன் நுண்ணிய நிலையில் அந்த சங்கரரின் எந்த நூல் பாடல்  என்பதை அச்சில் உள்ளதால் கேட்டு அறிய சிரமம் அதிகம் மேலும் அவை பொருப்புள்ள விவேகமுடையவர்களால் கட்டப்பட்டதால் ஐயம் எழவில்லை
இந்த மடலில் தாங்க்கல் காட்டியது அறிந்தேன் மிக்க நன்றி
அன்புடன்
நூ த லோ சு
மயிலை

Mani Manivannan

unread,
Feb 11, 2014, 3:57:18 AM2/11/14
to tamilmanram, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
Also, if Adi Sankara is referring to himself, why did he use a third person reference?  And do you think he is bragging that he is "among the greatest of poets"?

Regards,

Mani M. Manivannan


“Dravida Sishu” Dravida-sishu

with much benevolence Daya-vathiyaa

was given Daththam

that milk, Tava   Yath

 

Who, after tasting  of  it aaswaadya

became ajani

a very great Kamaneeyaha 

poet Kavayithaa

 

Amongst  the greatest Proudaanaam

of poets.  Kaveenaam 

சிவ அறிவொளியன்

unread,
Feb 11, 2014, 8:02:05 AM2/11/14
to tamil...@googlegroups.com, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
http://www.mazhalaigal.com/2010/may/20100531gs_sankara.php

“அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக் கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ? பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு? கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மா ஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக் குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே. -


ஆதிசங்கரரின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்வு.  பல சங்கர விஜயம் புத்தகங்களிலும் இதற்கான குறிப்பு காணக்கிடைக்கும். நான் "தெய்வத்தின் குரல்" புத்தகத்தை ஒட்டி எழுதி உள்ளேன். 

சங்கரரின் காலம்


தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509 - கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன். - 


Mani Manivannan

unread,
Feb 11, 2014, 8:27:33 AM2/11/14
to tamilmanram, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
// ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது //

இதற்கு  வாய்ப்பே இல்லை. கௌதம புத்தரின் வாழ்வுக்காலமே கி.மு, 563 இலிருந்து கி.மு. 400க்குள் அடங்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அசோக மாமன்னர் பௌத்தத்தைத் தழுவிய பின்னர்தான் பௌத்தம் இந்தியாவெங்கும் பரவுகிறது.  குறிப்பாகத் தென்னகத்தில்.  அசோகரின் காலம் கி. மு. 
304–232. பிரச்சன்ன பௌத்தர் என்று சங்கரரை அழைத்தது புத்தருக்கு முன்பாக இருந்திருக்க முடியாது.  பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆதி சங்கரரின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு என்றுதான் கொள்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Adi_Shankara

சிவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்பார்கள்.  ஆனால், ஆதி சங்கரரைச் சிவனின் அவதாரமாகக் கொள்வது மட்டுமல்லாமல், தன் பதியின் அவதாரமான அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பாலாக உமையே தன் பாலைக் கொடுத்தார் என்ற கதை நம்பும்படி இல்லை.  நம் மரபுக்கும் பொருந்தாது.  ஆதி சங்கரரும் தன் பாடலில் அது தன்னைக் குறிப்பிடுவதாகச் சொல்லவில்லை.  மூன்றாவது மனிதர் ஒருவரைத்தான் சங்கரர் குறிப்பிடுகிறார்.  அதிலும் அந்த ஞானப்பாலைக் குடித்ததனால் கவிஞர்களிலெல்லாம் பெரியவர் என்று தம்மைத் தாமே சங்கரர் குறிப்பிட்டுத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்திருப்பார் என்பதும் நம்ப முடியாதது.

இதற்கெல்லாம் காரணம், எப்படியாவது காஞ்சி மடத்தின் காலத்தை முன் தள்ளுவது என்ற தற்சார்புடமையால்தான்.  சங்கரரின் காலம் குறித்த ஆராய்ச்சி இப்படிச் சார்புடன் இருப்பதை நடுநிலையுள்ள ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

திராவிட சிசு சம்பந்தராக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அது நிச்சயம் ஆதி சங்கரர் அல்ல.

Dev Raj

unread,
Feb 11, 2014, 2:18:51 PM2/11/14
to mint...@googlegroups.com, tamilmanram, mintamil
On Tuesday, 11 February 2014 05:27:33 UTC-8, mmanivannan wrote:
// ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது //

இதற்கு  வாய்ப்பே இல்லை. கௌதம புத்தரின் வாழ்வுக்காலமே கி.மு, 563 இலிருந்து கி.மு. 400க்குள் அடங்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அசோக மாமன்னர் பௌத்தத்தைத் தழுவிய பின்னர்தான் பௌத்தம் இந்தியாவெங்கும் பரவுகிறது.  குறிப்பாகத் தென்னகத்தில்.  அசோகரின் காலம் கி. மு. 
304–232.
 

பகவத் பாதரவர்களின் காலம் ஆசார்ய தர்மகீர்த்தியின் காலத்துக்குப்பின். 
பவுத்தர் சங்கத மொழி ஊடகத்திற்கு மாறியதும் பிற்காலத்தில்தான்;
ப்ரமாண வார்த்திகம் எழுந்த பின்னரே சங்கரரின் காலம் என்பது தெளிவு.
கட்டாயம் கி மு ஆக முடியாது


தேவ்

சிவ அறிவொளியன்

unread,
Feb 12, 2014, 5:18:38 AM2/12/14
to tamil...@googlegroups.com, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan

//ஆனால், ஆதி சங்கரரைச் சிவனின் அவதாரமாகக் கொள்வது மட்டுமல்லாமல், தன் பதியின் அவதாரமான அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பாலாக உமையே தன் பாலைக் கொடுத்தார் என்ற கதை நம்பும்படி இல்லை.  நம் மரபுக்கும் பொருந்தாது//

உமை தன்னையே தன் பதியிடம் இழந்து ஆனை போல ஒரு பிள்ளை, அழகா ஒரு பிள்ளை பெற்று விட்ட பிறகு, தன் பதியின் அவதாரமான அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பாலாக உமையே தன் பாலை ஏன் கொடுக்க கூடாது? ஏன்  நம் மரபுக்கும் பொருந்தாது?ஏன் அதனை சங்கரர் குடிக்க கூடாது?

இறைவன் (சிவன்) ஒரு பெண்ணின் வயிற்றில் மனிதனாக பிறந்ததில்லை!
அவ்வாறு மனிதனாக பிறந்து விட்டவைகள் அனைத்தும் இறை இல்லை!! சங்கரர், விஷ்ணு, பிரம்மா, இருத்ரன் உட்பட! அதனால் தான் "சிவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்பார்கள்" தமிழர்கள்

சிவ அறிவொளியன்

unread,
Feb 12, 2014, 5:34:24 AM2/12/14
to tamil...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil
/பகவத் பாதரவர்களின் காலம் ஆசார்ய தர்மகீர்த்தியின் காலத்துக்குப்பின்.
பவுத்தர் சங்கத மொழி ஊடகத்திற்கு மாறியதும் பிற்காலத்தில்தான்;
ப்ரமாண வார்த்திகம் எழுந்த பின்னரே சங்கரரின் காலம் என்பது தெளிவு.
கட்டாயம் கி மு ஆக முடியாது//

Dev, "/ ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது //" is not my assumption, but one of the Kanchi Kamkoti peedam's supporter assumption!


சிவ அறிவொளியன்

unread,
Feb 12, 2014, 5:44:59 AM2/12/14
to tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mintamil, வல்லமை, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
என்ன நூ த லோ சு சத்தத்தையே காணோம்? மாயாவாதம் சங்கரருக்கு முன்பே உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? மாயாவாதம் என்ற ஒரு வார்த்தை சங்கரை குறிக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?


Mani Manivannan

unread,
Feb 12, 2014, 9:17:21 AM2/12/14
to tamilmanram, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
இப்படித் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சொன்னால் வாதம் ஏதும் இல்லை.

ஆமாம், நான் கேட்ட பிற கேள்விகளுக்கு விடையளிக்காமல் தவிர்த்து விட்டீர்களே?

ஏன் சங்கரர் தம்மைப் பற்றியே மூன்றாம் மனிதனை விவரிப்பது போல எழுதியிருக்கிறார்?

ஏன் தம்மையே பெருங்கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்?  அதிலும் தம் மனைவியின் பாலைத் தாய்ப்பாலாகக் குடித்ததனால் வந்தது என்று ஏன் சொல்லிக் கொள்கிறார்?  சிவனுடைய அவதாரத்துக்கு ஏன் உமையின் பால் ஞானப்பால் ஆக வேண்டும்?

இதற்கும் 1 = 0 என்றால் என்ன தவறு என்று விடையளித்தால் வாதிக்க ஏதுமில்லை.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

N D Logasundaram

unread,
Feb 12, 2014, 11:55:47 AM2/12/14
to தமிழ் மன்றம், thami...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org
திருவாளர் இராமகி அவர்களுக்கு 
நீங்கள் இப்படி எழுதினீர்கள் (தாங்கள் காட்டும் என்மடல் கீழே உள்ளது அதற்குத்தான் இந்த கருத்து 
வைத்துள்ளீர்கள்)

அன்புடையீர்,
 
இல்லாத செய்தியை இருப்பதாகச் சொன்னால் எப்படி? மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்பதற்கு என்ன விவரம் அந்தக் கல்வெட்டிலிருக்கிறது? இப்பொழுது 16 ஆம் நூற்றாண்டு என்று பொருள் கொள்ளுகிறீர்கள்? அதற்கும் என்ன ஆதாரம்? சில மாதங்களுக்கு முன் கோகழி என்பது கர்நாடகாவில் உள்ளது. மாணிக்கவாசகர் கன்னடப் பின்புலங் கொண்டவர் என்று சொன்னீர்கள். அது என்னவாயிற்று?
 
கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளை வைத்து எதையெதையோ முடிச்சுப் போட்டுக்கொண்டால் எப்படி?
 
அன்புடன்,
இராம.கி.  

இதனைப்பற்றி நான் சிலநாள் கழித்தே இப்பொது  என்கருத்தை வைப்பதற்கு மன்னிப்பீர்கள் யென நினைக்கின்றேன் காரணம் சில தனிப்பட்ட சொந்த வேலைகளுக்கு இடையேஇடையே மின் மடல்களைப்பார்ப்பதால்

நன்றாகக் கவனித்துப் பார்க்கவும் 
 காட்டும் மடலில் நான் எங்கும் மாணிக்க வாசகர் காலம் பற்றி யும்  அதுவும் 9 ஆம் நூற்றாண்டு யெனவும்  கூறவில்லையே
 தமிழ் இந்து நாளிதழ் செய்தியை மட்டும் தான் வைத்து கருத்து வைதுள்ளேன் எங்கிலும் 18 ம் நூற்றாண்டுடன் மாணிக்க வாசகரை பிணைக்கவிள்ளையே அய்யா. அதனில் வந்த செய்தியைத்தான் அப்படியே குறித்துள்ளேன் வேறொன்றும் அங்கு இல்லையே 

இக்கோயில் கட்டப்பட்ட காலம் 16 ம் நூற்றாண்டு

எனவே செய்யுள் எழுதிய காலம் அதே  16 ம் நூற்றாண்டு  காலமாகத்தான் ஆக வேண்டும் 

ஆகவே இப்போது நாம் செவிவழி அறியும் செய்தி உறுதி செய்யப்படுமின்றதாம் 

அதாவது 

நாம் இன்று கொண்டுவரும் கருத்தே  16 ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளது என்பது காட்டப்படும் பொருள்

மேலும் விவரங்கள் அதனிலேயே காணலாம் 

அதான்று,

தாங்கள் குறித்ததுபோல் முன்பு மாணிக்கவாசகரை கருநாடகத்துடன் தொடர்ப் படுத்திய கருத்து இப்பொதும் உள்ளது அதனில் மாற்றம் யேதும் இதுவரை இல்லை அதனை வல்லமையில் பார்த்திருப்பீர்கள்.

அங்கு நான் வைத்தது வேறு 'எவரும் காட்டாதவை யே மேலும் இன்றும் மாறாதது 

மாணிக்க வாசகரையும் குதிரை களையும் இணைத்துள்ள புராணக் கதைகளுக்கு  ( நரி பரியாகியது >>>>> ) அவருடைய திருவாசகம் உள்ளே அகச்சான்றாக  இருப்பதெல்லாம் பயனற்றவை
(1)

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைக்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்                                                      கீர்த்தித் திருவகவல்

                        சிவபெருமான் (அல்லது அவர் தன் குரு) மனித வடிவில்  உமைஅம்மையுடன்
                        சதிராடவல்ல குதிரைக் கொண்டு மேற்கமைந்த மேடான நிலப்பகுதியில்
                        அல்லது மலை நாடாகும்உயர்ந்த  குடகினில் எழுந்தருளியதும் >>>>>

        நோக்குக               தன் பொருட்டு அல்ல >>>>> இப்புவனி உய்ய 

(2)
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்                                             30
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்                                       35
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்                                   40 
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்          45 கீர்த்தித் திருவகவல்

உம் உம் எனவரும் உம்மைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனி செய்தியை காட்டுகிறது
மெலும் இந்த கீர்தித் திருவகலில் முன் 16 வரிகளிலும் பின் 29 வரிகளிலும் காணலாம்
 
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் என்பது
மாணிக்கவாசகர் தொடர்புடையது மட்டுமல்ல 

அப்பரடிகளும் திருவாரூர் தேவாரத்தில் 

நரியைக் குதிரை செய்வானும் 
நகரைத் தேவு செய்வானும் 

என்பார் எனவே நரியைக் குதிரை செய்வது சிறப்புடைய தனித்தது அல்ல 
(இதனையெ மறைமலை அடிகள்வாசகர் முற்காலத்திர்கு உடையவர் எனக் காட்டுவார் )

மேலும் பாருங்கள் 
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது

பாண்டியனுக்கு தான் பரிமாவினை விற்றார்
அதனில் 
பொருள் பண்டமாற்றில் இசையப்பெறாதது ஏதொ ஒன்று கட்டப்படுகின்றது 

புராணக்கதைகளில் உள்ளது போல் அவர் அமைசர் குதிரை வாங்க பொன்னுடன் அனுப்பப்பட்டார் 
அதனை கோயில் கட்ட செலவு செய்தார் என்பதெல்லாம் கற்பனையில் எழுந்த வெறும் புராணக்கதைகளே

மதுரை ப் பெருநல் மாநகர் இருந்து 
குதிரைச் சேவகவனாகிய நன்மையும் 

இதனில் உள்ளது ம் நகரைத் தேவு செய்வானுக்குப் பொருந்தும் 


மேலும்

கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய                                     70 திருவண்டப்பகுதி 

பெருந்துறை ஓர் வரை (மலை )அருகுள்ளது 
ஏறி எனும் வினனை ஓர் பொருளான மலையைத்தான் குறிக்கின்றது
உருவகம் ஏதுமில்லை 

நான் காட்டியதைத் தான் நாசா கணேசனார் காட்டினார் 



அய்யா மே லும் பல உள்ளது  கோகழி பற்றி உள்ளது 


இன்று நேரம் அதிகம் ஆகிவிட்டது மடலை அடுத்து தொடர அனுமதிக்கவும் 



நூ த லோ சு

மயிலை



2014-02-04 11:18 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
அன்புடையீர்,
 
இல்லாத செய்தியை இருப்பதாகச் சொன்னால் எப்படி? மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்பதற்கு என்ன விவரம் அந்தக் கல்வெட்டிலிருக்கிறது? இப்பொழுது 16 ஆம் நூற்றாண்டு என்று பொருள் கொள்ளுகிறீர்கள்? அதற்கும் என்ன ஆதாரம்? சில மாதங்களுக்கு முன் கோகழி என்பது கர்நாடகாவில் உள்ளது. மாணிக்கவாசகர் கன்னடப் பின்புலங் கொண்டவர் என்று சொன்னீர்கள். அது என்னவாயிற்று?
 
கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளை வைத்து எதையெதையோ முடிச்சுப் போட்டுக்கொண்டால் எப்படி?
 
அன்புடன்,
இராம.கி.  

Sent: Tuesday, February 04, 2014 10:09 AM
Subject: [தமிழ் மன்றம்] மாணிக்கவாசகர் ஆவுடையார் கோயில்

அன்புள்ள மடலாடருக்கு,

நேற்று ஆவுடையார்  கோயிலில் புதிய கல்வெட்டு கண்டு பிடித்தது பற்றிய செய்தியை கண்டோம்
 அது இந்து ஆங்கில பதிவிலிருந் து. வந்தது 

இன்று அதன் தமிழ் பதிவு வெளி வந்துள்ளது இதனில்மேலும் சில விளக்கங்கள் உள்ளன 
யாவரும் மீண்டும் இணையம்  சென்றுதான் பார்க்க வேண்டமே எனும் எண்ணத்தில் 
அப்பக்கத்தின் படத்தை வைத்துள்ளேன் காண்க 

 கல்வெட்டுகள்   கண்ட இடம் கோயிலில் உள்ள பஞ்சாக்ஷர மண்டபம்

இதனில்கன்டுபிடிதவை 200 கல்வெட்டுகள்
அதனில் செய்யுள் வடிவில் உள்ளவை 5
வற்றில் ஒன்றில் மாணிக்க வாசகர் கட்டினார் என குறிக்கப்பட்டிகின்றதாம்

இக்கோயில் கட்டப்பட்ட காலம் 16 ம் நூற்றாண்டு

எனவே செய்யுள் எழுதிய காலம் அதே  16 ம் நூற்றாண்டு  காலமாகத்தான் ஆக வேண்டும் 

ஆகவே இப்போது நாம் செவிவழி அறியும் செய்தி உறுதி செய்யப்படுமின்றதாம் 

அதாவது 

நாம் இன்று கொண்டுவரும் கருத்தே  16 ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளது என்பது காட்டப்படும் பொருள்

மேலும் விவரங்கள் அதனிலேயே காணலாம் 

அன்புடன்

நூ த லோ சு
மயிலை

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N D Logasundaram

unread,
Feb 13, 2014, 5:14:04 PM2/13/14
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A
திரு சிவ அறிவொளியான் அவர்களுக்கு,
தங்கள் பெயரில் உள்ள சிவ எனும் முன்னொட்டு சிவ சமய தீட்சை பெற்றவர் என்பதை காட்டுவதாகும் எனக்கோள்கிறேன்  எனவே இந்த  மடல்.
  
நான் வைத்த இந்த தமிழ் இந்து செய்தி  கைகாட்டு மடலில் வேறு மடலின் மாணிக்க வாசகர் காலம் பற்றிய தங்கள் கருத்து  இடுகையை வைத்தீர்  ஒரளவிற்கு ஒரே விதமான இணையான கருத்து மடல் என்பதாலும்  பல மடல் குழுக்களில்  (ஒரே கருப் பொருள் =  மாணிக்க வாசகர் காலம் ) அலசப்படுவதாலும்  இது தவறாகக் கொள்ளப்படவில்லை

(1)
நீங்கள் மாணிக்க வாசகர் கால வரலாறு தொடர்புடன் முதலில் தருமை ஆதீன கருத்து வைத்தீர் 
(2)
 பிறகு  சிறுபிள்ளை விளையாட்டாக இராமலிங்க அடிகளாருடன் பிணைதுக்காட்டினீர்
(3)
அதனில் 19 >>>> 25 ஆம் நூற்றண்டு என குறித்ததில் தவறான சொல்லாம் 25 வது  நூற்றாண்டு யென எழுதினீ ர் 
(4)
 விவேகம் மிக்க மடலாடர்களாம் இளங்கோவன் மற்றும் தேவ் அவர்களின் கருத்துக்களையும் உங்களின் தொடர்ந்த
 சிறு பிள்ளை விளையாட்டுப் புத்தியில் அவர்களை கிண்டலடிக்கும் முனைப்பில் 

நன்கு அறிந்த தேவார ஆசிரியர்களின் காலத்தை 19 நூற்றாண்டிற்கு பின் எனவும் 
(5)
அப்பரே கண்ணதாசனைப் பார்த்துதான் எழுதினர் !!! :))))) என எழுதினீர் 
(6)
 நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. ஒரு பொடி வைத்து சொல்லி உள்ளேன். மாணிக்கவாசகரின் காலம் கி.மு 25 முதல் கி.மு 19....
என நல்ல மனனிலையிஉல் உள்ளேன் எனச் சொல்லியே அவசர புத்தியிலோ அல்லது வேண்டுமென்றோ 6 ஆண்டுகள்தான் மாணிக்க வாசகரின் காலம் 
எனவெல்லாம்  எழுதினீர்
(7)
சிவானந்த லகரி பாடலுக்கு தங்கள் மனனிலையை அடுத்தவர் ஏற்கவேண்டும் எனும் நிலையில் தங்கள் மடல்கள் வந்தன 

 இவை யாவையும் கவனித்த நான் பதில் எழுதுவதுவிதண்டா வதவாதமே  அவரிடம் தொடரும் ஆகையால் கேலிசெய்யும் 
நோக்கத்தில் மடல்களை வைக்க நினைப்பவருக்கு சரியான நிலைப்பாடு அவற்குபதில் யேதும் வைக்கமலேயே விடுவதுதான்
சரியெனக் கொண்டேன் 

இிப்பொதும் இந்த மடல் வைத்ததே அந்த  சிவ எனும் முன்னொட்டு  தங்கள்  பெயரில் உள்ளதால்தான்
 நான் கொண்ட பொருள் உண்மை இல்லை  என்றால் இம்மடலும் தங்களுக்கு எழுதியது ஆகாது.

 தங்களின் மடல்களில் வைகப்பட்ட தவறான குழப்பனிலை வாதங்ளுக்கு சரியான விளக்கங்கள் 
இவ்விழைகளில்  கலந்து கொண்ட மடலாடருக்கு பின் தொடரும் மடல் களில்  வைப்பேன் 

நூ த லோ சு
மயிலை

2014-02-12 16:14 GMT+05:30 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>:
என்ன நூ த லோ சு சத்தத்தையே காணோம்? மாயாவாதம் சங்கரருக்கு முன்பே உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? மாயாவாதம் என்ற ஒரு வார்த்தை சங்கரை குறிக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?


சிவ அறிவொளியன்

unread,
Feb 20, 2014, 12:21:30 AM2/20/14
to tamil...@googlegroups.com, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
1.மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரான சிவன் என்ற "ஒன்றையும்(1)", பௌத்தத்தில் இருந்து இறக்குமதி  செய்து மாயாவாதத்தை வேதத்தில் புகுத்திய ஞான சூனியமான சங்கரர் என்ற

"சுழியையும்(0)" சமபடுத்தி (1=0 என) தாங்கள் தான் வாதிட்டு வருகின்றிர்கள். அடியேன் மிகத் தெளிவாக சிவன் என்றும் மனிதனாய்ப் பிறந்ததில்லை; மனிதனாய் பிறந்த எவனும் சிவனில்லை என்று

தெளிவாக வாதிட்டு வந்துள்ளேன்.
அடியேன் வாதப்படி, சங்கரர் உமையிடம் பால் குடித்ததில் தவறில்லை
தங்கள் வாதப்படியும் (1=0), சங்கரர் உமையிடம் பால் குடித்ததில் , தவறில்லை நம் மரபுப் படி!
ஏன் சங்கரர் உமையிடம் பால் குடித்திருக்கக் கூடாது?

2.இந்த பூமியின் வயது 4.54 பில்லியன் வருடங்கள். உமையின் வயதை 4.5 பில்லியன் வருடங்கள் என்று கொண்டால், சங்கரரின் 32 வயது,  சங்கரர், உமைக்கு ஒரு குழந்தைதான்.ஏன் சங்கரர் உமையிடம்

பால் குடித்திருக்கக் கூடாது?

3.தாங்கள் தான் முதலில் "திருஞானசம்பந்தரைத் தவிர வேறு யாருக்காவது பொருந்தி வந்திருக்கிறதா? ஞானப்பால் குடித்ததாகக் கூறப்படுபவர் தண்டமிழ் ஞானசம்பந்தர் இல்லை என்கிறீர்களா?" என்று  மூன்று கால் பிடித்தீர்கள்.  தக்க ஆதாரங்களைத் ( http://www.archive.org/stream/SaundaryaLahari/SaundaryaLahariBhashyaSktEng#page/n7/mode/2up) தந்த பிறகு "திராவிட சிசு சம்பந்தராக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அது நிச்சயம் ஆதி சங்கரர் அல்ல." என்று மூன்று கால் பிடிகின்றீர்கள்

4.அம்பிகையின் பேரழகைக் கண்ணால் கண்டு அந்த ஆனந்தம் தாங்காமல் அவளது அழகை தலை முதல் பாதம் வரை வர்ணித்து, பின்னரும் திருப்தியில்லாமல் போகவே மீண்டும் பாதம் முதல் தலை வரை அன்னையின் தேஜ ஸ்வரூபப் பேரழகை வர்ணிக்கும் ஒரு துதியே சௌந்தர்ய லஹரி. இப் பாடல் உருவான கதை புரிந்தால் மற்ற உங்கள் கேள்விகளுக்கு எளிய பதில் கிடைக்கும்
Reply all
Reply to author
Forward
0 new messages