மிக்க நன்றி அம்மையீர். 'மயங்கா மரபின் எழுத்துமுறை' என்ற தொடருக்கான எனது விளக்கத்தை முதன்முதலில் என் தமிழ்த்துறை நண்பர்களிடம் தெரிவித்தபோது 'தொல்காப்பியம் ஒரு பெரிய கடலையா, அதில் முங்கி முத்தெடுக்க முடியாது' என்று சிரித்து ஒதுக்கிவிட்டனர். அவருள், நண்பர் பிரணதார்த்தி ஹரன் (அவர் B.Sc கணிதம் பயின்றவர்) மட்டும் தனியாக வந்து பாராட்டினார். அப்போது அவர் துறையில் மிகவும் இளைஞர். தயக்கத்துடன் இதனைப் புதுச்சேரிக் கருத்தரங்கில் தெரிவித்தபோது, அப்போது தலைமை வகித்த முனைவர். முத்துச்சண்முகன், முனைவர். முருகரத்தினம் ஆகியோர் இதனை வெகுவாகப் பாராட்டினர். அப்புறம்தான் நாமும் தமிழில் ஆயலாம் என்ற தெம்பு வந்தது.
மதுரையில் ஏற்கனவே உலகத்தமிழ்ச் சங்கம் என்ற ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டு தொய்வடைந்துபோன நிலையில் அதற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் சில ஏற்படுகள் நடந்துவருவதாகக் கேள்விப்பட்டேன். தங்களின் ஆசையை அதன்மூலம் தீர்க்கமுடியுமா என முயன்று பார்க்கிறேன்.
ஆனால் எனக்கு மேலும் சில தகவல்கள் தேவை. அடுத்த வாரம் மதுரைக்குச் செல்கிறேன். அதன் இயக்குநரைச் சந்திக்கவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறேன். உங்களுடைய 'ஆசை' பற்றிய மேல்விவரங்கள் தெரிந்தால் அதுபற்றியும் பேசுகிறேன்.ஏற்கனவே, நான் மதுரை செல்லும்போது எனக்கு ஒரு பணி இருக்கிறது என்று கூறியிருக்கிறீர்கள்.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்ற்தான் சொல்லப்படிகிறது
>>பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலோ, அதற்கு முன்னரோ இங்கு பயன்படுத்தப்பட்டுவந்த எழுத்துமுறை இன்னதென்று அறிய இதுவரை எந்தச் சான்றுகளும் கிடைத்தில3.
இதுவே, தமிழ்நாட்டில் நேர்வரிசையில் எழுத்துக்களை எழுதும் வேறொரு முறை இருந்திருக்கலாம் என்பதற்கும், ஏதோவொரு வலிதான காரணத்தை முன்னிட்டுத் தமிழ்மக்கள் பிராமி எழுத்துக்களை ஏற்றுக்கொண்டனர் என்பதற்கும், இருப்பினும் தங்கள் பழைய முறையை அவர்கள் கைவிட்டுவிடவில்லை என்பதற்கும் அகச் சான்றாக அமைகிறது <<
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதைத் தவிர நான் இவ்வாறும் குறிப்பிட்டுள்ளேன் :-
>>
பிராமி எழுத்துக்களின் ஆரம்பகாலமும் திட்டவட்டமாகக் கணிக்கப்பெறவில்லை.
ஏதோவொரு காரணத்தினால் வடநாட்டுப் பிராமி எழுத்துக்களை ஒப்புக்கொள்ள நேர்ந்த காலத்திலும், நமது எழுத்து மரபையும், சொல் மரபையும் கட்டிக்காக்கும் வண்ணம் விதியமைத்த தொல்காப்பியரின் நுண்மாண்நுழைபுலம் எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும் வியந்து போற்றற்குரியது. << ஐயா!, இக் கட்டுரை எழுதப்பட்டது 20 ஆண்டுகட்கு முன்னர். அப்போது பிராமியிலிருந்து தமிழா, தமிழிலிருந்து பிராமியா என்ற கேள்விக்கு முழுவிடை காணப்படவில்லை. ஆனால் இந்த இருபதாண்டுகாலத்தில் பல்வேறு இடங்களில் புதிய பிராமி எழுத்துகள் கிடைத்த நிலையில் இக் கேள்விக்கு விடை மிகத் தெளிவாகத் தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------
சிறிது கால அவகாசத்துக்குப் பின்னர் விளக்கமான பதில் எழுதுகிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா
(எழுத்துருக்கள் ஏன் இவ்வாறு மாறிமாறி வருகின்றன எனத் தெரியவில்லை- மன்னிக்கவும்)
1) தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது, "ற" , வல்லெழுத்துகளோடு வரிசைப்படுத்தப்படவில்லை என்று
சொல்லியிருக்கிறீர்கள். க, ங,ச வரிசையைச் சொல்கிறீர்களா - அல்லது வேறு வரிசைமுறையைச் சொல்கிறீர்களா என்பது
புரியவில்லை. விளக்கினால் நன்று.
மெய்யெழுத்துக்களைச் சொல்லும்போது மூன்று முறைகளைப் பயன்படுத்துகிறோம்.
1. கசடதபற, ஙஞணநமன, யரலவழள – என்ற இசைப்பு முறை
2. (க,ங), (ச,ஞ), (ட,ண), (த,ந), (ப,ம), (ற,ன), (ய), (ர), (ல), (வ), (ழ), (ள) – என்ற (வல்-மெல்) இணை, பின்னர் இடை – என்ற முறை
3. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன – என்ற முறை. இம் முறை மிகப்பெரும்பாலும் அகராதிகளில் பயன்படுத்தப்படுகிறது. ககனம், கங்கணம், கசடு, கஞ்சம், கட்டம், கண்ணன், கத்தி, கந்தை, கப்பல், கம்மல் ஆகிய வரிசையில் அடுத்து கற்றல், கன்று ஆகியவை வரவேண்டும். ஆனால், கம்மலை அடுத்து, கயல், கரம், கல், கவவு, கழகம், களவு, கற்றல், கன்னல் என்றேதான் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. (இரண்டாவது எழுத்துக்களின் வரிசையைக் கவனிக்கவும்). அதாவது. மெய்யெழுத்துக்களின் வரிசையில் ‘ற’வும், ‘ன’வும் இறுதியில் வருகின்றன. இதுதான் ஏன் என்று கேட்டிருக்கிறேன்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்காப்பியர்,
எழுத்தெனப்படுவ,
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப – 1
என்பார். அகர முதல் ளகர இறுவாய் என்று சொல்லியிருந்தால் முறை1 அல்லது 2 ஆகியவற்றில் ஒன்றாக இருந்திருக்கும். எனது தமிழாசிரியர், ‘திருக்குறள் அகரத்தில் தொடங்கி, ‘ன்’-இல் முடிகிறது என்பார். முதல் குறளின் முதல் எழுத்து ‘அ’. கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. என்ற சொன்னபோது வியந்திருக்கிறோம். அப்படியென்றால் தமிழ் எழுத்துமுறையில் கடைசி எழுத்து ‘ன்’. இது எப்படி வரும்?
2) பிராமியை உள்வாங்கும்போது, தமிழ்நாட்டுக்கே உரித்தான ழ, ள, ற, ன என்ற ஒலிகளுக்கு உருவம் தேவைப்பட்டது
என்று கூறியிருக்கிறீர்கள். அவைமட்டும் இங்கே உருவாக்கப்பட்டதால் இறுதியில் சேர்க்கப்பட்டதென்று கூறுகிறீர்கள்.
எனது கேள்வி: "தமிழர்கள் தங்களுக்கென்று எழுத்தே இல்லாதவர்கள்" என்ற உங்களின் கூற்றுப்படி, இந்த ஒலிவேறுபாடுகள்
ஏன் தேவைப்பட்டன? இந்த நான்கு ஒலிகளும், பாரததேயம் முழுதும் இல்லாமலிருக்க இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து
வந்தன? பிராமி நெடுங்கணக்கையே உள்வாங்கியவர்கள், ஏன், இந்த நான்கு ஒலிகளை மட்டும் ஒட்டவைத்தார்கள்?
அதற்கு இவர்களுக்கு என்ன தேவை வந்தது. இந்த நான்கு ஒலிகளின் நுண்மையை அறியும் அளவுக்குத் தமிழர்களுக்கு
அறிவு இருந்திருந்தால், ஏன் அவர்களால் எழுத்து உருவாக்கும் அறிவு இல்லை?
பல கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலில் இங்கு சிவப்பு எழுத்துகளில் அடிக்கோடிட்டிருப்பது எனது வேலை. என் இதயத்தில் வடிந்த இரத்தத்தை எடுத்துப் பூசியிருக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். இப்படி எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை. இது என் கருத்தும் அன்று. சொல்லப்போனால் தமிழர்கள் தங்களுக்கென வேறோர் எழுத்துமுறையைக் கொண்டிருந்தார்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கூற்றுதான் என்னை அடியோடு சாய்த்துவிட்டது. இது ஒரு குணங்கொல்லிக் கூற்று (character assassination). இதிலிருந்து மீளத்தான் எனக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டன.
.>> , இந்த ஒலிவேறுபாடுகள் ஏன் தேவைப்பட்டன?<<
ஏனென்றால் இவை தமிழுக்குரிய எழுத்துகள்.
>> இந்த நான்கு ஒலிகளும், பாரததேயம் முழுதும் இல்லாமலிருக்க இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தன? <<
இவை தமிழுக்கேயுரிய தனி எழுத்துகள்.
>> பிராமி நெடுங்கணக்கையே உள்வாங்கியவர்கள், ஏன், இந்த நான்கு ஒலிகளை மட்டும் ஒட்டவைத்தார்கள்? <<
ஏனென்றால் இவை பிராமியில் இல்லை. தமிழுக்காக இங்கு உருவாக்கப்பட்டன.
இவற்றுக்குரிய பிராமி எழுத்துருக்களைப் பாருங்கள். ‘ழ’ வுக்கு ஒரு வட்டம்போட்டு, பின்னர் மேலிருந்து கீழாகக் கோடுபோட்டு எதிர்ப்புறங்களில் நீட்டியிருக்கிறார்கள். இவ்வாறு வட்டத்தில் நெடுங்கோடு போட்டு, அதில் மேலும், கீழும் வலப்பக்கம் இழுத்து ஒரு குறியீடு கொங்கற்புளியங்குளத்திலும், இன்னும் வேறு சில இடங்களிலும் காணப்படுகிறது. இது வெட்டப்பட்ட கூற்றின் இறுதியில் (சில இடங்களில் தொடக்கத்தில்) காணப்படுகிறது. ஆனால் கூற்றின் ஒரு பகுதி அல்ல. எனவே இது ஒரு மந்திரக் குறியீடு என்கிறார்கள். இதில் சிறிது மாற்றம் செய்து தமிழின் சிறப்பு ழகரத்தை உருவாக்கியிருக்கலாம் என்பது சிலர் கருத்து.
அடுத்து ‘ள’. பிராமி ‘ல’-வில் வலப்பக்கம் நீட்டிக் கீழே இழுத்திருக்கிறார்கள். அதாவது பிராமியில் உள்ள ‘ல’ –வில் சிறிது மாற்றம் செய்து அதில் இல்லாத தமிழ் ‘ள’-வை உருவாக்கியிருக்கிறார்கள்.
அடுத்து ‘ற’. பிராமியில் ‘ட’, ‘த’ என்ற இரு எழுத்துக்களையும் ஒன்றன் கீழ் ஒன்றாய் எழுதி இதற்கு உருவம் உண்டாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு எழுதினால் அதனைப் பிராமி முறையில் ‘ட்த’ என்ற கூட்டெழுத்தாகப் படிக்கவேண்டும். இந்த இரண்டின் பிறப்பிடங்களை வைத்து ‘ற’கர உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியவரின் மொழியியல் நுட்பம் வியந்து போற்றற்குரியது. தமிழில் கூட்டெழுத்து இல்லை என்று சொன்னேன். இது ஒரு linear மொழிமுறை. இதில் ஒரு பிராமி non-liner முறையில் ஓரெழுத்து உருவாக்கப்பட்டு தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டிடுருக்கிறது.
அடுத்து ‘ன’. இதுவும் பிராமியில் இல்லை. பிராமி ‘ந’ வை வலப்பக்கம் சிறிது வளைத்துச் செய்யப்பட்டது இது.
(நான் இணைப்பாக அனுப்பியிருந்த படங்களைப் பாருங்கள்.)
>> இந்த நான்கு ஒலிகளின் நுண்மையை அறியும் அளவுக்குத் தமிழர்களுக்கு
அறிவு இருந்திருந்தால், ஏன் அவர்களால் எழுத்து உருவாக்கும் அறிவு இல்லை? <<
மீண்டும் தமிழுக்கு எழுத்து இல்லை என்று கூறவருகிறீர்கள். இல்லை. தமிழருக்குக் கூர்த்த மதி இருந்திருக்கிறது. எனவேதான் அவர்கள் linear எழுத்துமுறையைக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு வலிய காரணத்தை முன்னிட்டுத் தமிழர்கள் பிராமி முறைக்கு மாறியிருக்கிறார்கள். (இன்றைக்குத் தமிழ்ப் பெண்கள் சுரிதாருக்கு மாறியிருப்பது போல. அதை வைத்து வடநாட்டுச் சுரிதாருக்கு முன்னர் தமிழ்ப்பெண்கள் ஆடையே அணியவில்லையா? என்று கேட்கலாமா? – இது ஒரு எடுத்துக்காட்டுக்கு மட்டும் கூறினேன். இவ்வாறு உதாரணம் கூறிப் பேசுவது சரியான முறையன்று எனத் தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை. ஆடை பற்றிய பேச்சு மேலும் வேண்டாம் - தயைசெய்து)
3) பிராமி முதன்முதலில் உருவாகியது எப்படி?
இது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வடநாட்டில் அசோகன் காலத்தில் பிராமி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து அவன் காலத்துக்கு முந்தைய பிராமி எழுத்துக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைவைத்துத்தான் தமிழ்நாட்டு எழுத்துகளையும் அசோகன் காலத்தை ஒட்டிக் கணக்கிடுகிறார்கள். ஆனால், இது தவறு என்பது என் கருத்து. பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களில் காணப்படும் பிராமி எழுத்துகள் அசோகனுக்குப் பல நூற்றாண்டுகள் முந்தையவை. எனவே தமிழ்நாட்டுப் பிராமி மிக மிக முந்தையது.
4) "தமிழ் எழுத்தை எழுத வடநாட்டு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மையைச் செரிக்க இயலாத
'தீவிர மொழிப்பற்றுடையோர்" - என்று கட்டுரை சாடுகிறது.
இந்த இடம் தங்களைச் ‘சுருக்’கென்று தைத்திருக்கிறது எனப் புரிகிறது. இது சாடல் இல்லை. நிச்சயமாக இல்லை. இருபது ஆண்டுகட்கு முன்னர் எழுதியது. அப்பொழுது எனக்கு வயது 51 – prime of youth. இதனால் தங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். மன்னிக்க. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வருந்திய யாவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். இதில் எனக்கு வெட்கமில்லை.
>>சாடும் கட்டுரை உண்மை சொல்லுமா என்று எனக்குத் தெரியவில்லை.<<
உண்மையைத் தேடித்தான் கட்டுரை எழுதப்பட்டது.
>>
தங்கள் கட்டுரையே தமிழகத்தின் ஆய்வுகள் இன்னும் தொன்மையைத் தேடிச் செல்லவில்லை என்று கூறுகிறது.
இந்நிலையில், பிராமியே தமிழ் என்பதை ஏன் அவ்வளவு அவசரத்தோடு ஏற்றுக்கொண்டு செரித்துவிடவேண்டும் என்று தங்களைப் போன்ற
அறிஞர்கள் அவசரப்படுகிறார்கள்? இனி ஆராய்ச்சியே நடக்காதா? அப்படிச் செரிக்காதவர்கள் எல்லாம் தீவிரப்பற்றாளர்கள் என்று
ஏன் வரிசைப் படுத்த வேண்டும்? சில அறிஞர்கள் கூறுவதை அப்படியே ஏற்காவிட்டால் இப்படி வகைப்படுத்துதல் முறையா?
>>
ஆராய்ச்சிகள் இன்னும் நடக்கும். அவசரம் ஒன்றும் இல்லை. கிடைக்கும் முடிவுகளை வைத்து முடிவுக்கு வருகிறோம். மாற்றுச் சான்றுகள் கிடைத்தால் கருத்துகள் மாறும். ஆனால் இதுவரை கிடைக்கும் சான்றுகளை வைத்தே கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
>>பிராமிக்கு முன்னால் மாற்றுக் கருத்துகளுக்கு இடமே இல்லை போலும். <<
மாற்றுக் கருத்துகள் மனமுவந்து வரவேற்கப்படுகின்றன. உண்மையை ஆய்வதே நம் வேலை.
>> அதைத்தான் பிராமி பற்றிய தங்கள் கட்டுரை உணர்த்துகிறது.<<
தயவுசெய்து என் கட்டுரையை மீண்டும் படியுங்கள். ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதல்ல என் நோக்கம். கலந்துரையாடுவோம். வேறொரு இழையில்
தொல்காப்பியரின் எழுத்து ஒலியனா அல்லது வரிவடிவா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி என்ற தலைப்பில் March 29-இல் நான் எழுதியுள்ள பதிலில் இணைத்துள்ள கட்டுரை இன்னும் பல் உண்மைகளைத் தங்களுக்குத் தெரிவிக்கும்.
நன்றி
அன்புடன்,
ப.பாண்டியராஜா
...
...
--
--
...
தங்கள் கேள்வி மிக மிக நியாயமானது ஐயா! ஆனால் அது சரியானதா? ஆராய்வோம்.
இந்த இருபதாம் நூற்றாண்டு மொழியியல் சிந்தனையைத் தன் காலத்திலேயே பயன்படுத்திய தொல்காப்பியர் மதி நுட்பம் எப்படி? இப்போது அவர் வந்தால் ka, ga வேறுபடுத்திக் காண்பியுங்கள் என்று சண்டை போடுவீர்களா?
அன்புள்ள பேராசிரியைக்கு,கீழ்க்கண்ட கருத்துபற்றி, தங்களது கருத்து என்ன?அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
From: ndsun...@hotmail.com
To: tamil...@googlegroups.com
Subject: RE: [தமிழ் மன்றம்] பிராமி எழுத்துக்களும் தொல்காப்பியமும் - ஒரு மீள்பார்வை
Date: Sat, 5 Apr 2014 20:01:27 +0530
எனது கேள்வி: "தமிழர்கள் தங்களுக்கென்று எழுத்தே இல்லாதவர்கள்" என்ற உங்களின் கூற்றுப்படி,இந்த ஒலிவேறுபாடுகள்
For more options, visithttps://groups.google.com/d/optout.
...<p style="line-height: normal; vert
...
அன்புள்ள பேராசிரியை அவர்களுக்கு,உண்மையிலேயே மிகவும் உழைத்து, எனக்குத் தெளிவான மறுமொழி கொடுத்துள்ளீர்கள். பொருத்தமாகவும் இருக்கிறது.ஆனாலும் என்னால் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இடையின வரிசையில் 'ல்' தான் இறுதியில் அமையும் வேண்டுமென நினைக்கிறேன். அதற்கு ஒரே காரணம், அதற்கும் 'ன்' 'ற்' ஆகியவற்றிற்கும் புணர்ச்சியில் உள்ள உறவேயாகும்.
அடுத்து ஒரு ஐயம் பேராசிரியை அவர்களே! யாப்பில் நிரையசை , நேரசைபற்றிப் பேசுகிற இலக்கண ஆசிரியர்கள், மொழியசைபற்றி ஏதும் கூறியுள்ளார்களா?
ஒலியன்கள் நேரடியாக உருபன்களாக அல்லது சொற்களாக அமைவதில்லை. ஒரு கட்டமைப்பில் அசைகளாக மாறித்தான் அவை உருபன், சொல்லாக அமைகின்றன. சொற்கள் தொடர்களாக அமைந்து பின்னர் வாக்கியங்களாக அமைவதுபோல. ஒலியன்களுக்கும் உருபன்களுக்கும் இடையில் அசை என்பது ஒரு முக்கியமான பகுதியாக அமைகிறது.தமிழில் உடம்படுமெய் வருவது ( தெரு + ஆ = தெருவா ), தனிக்குறிலுக்கு முன் ஒற்று மிகுதல் ( கல்+ஐ= கல்லை) ஆகியவையெல்லாம் தமிழ் அசையின் அமைப்பைத் தக்கவைப்பதற்காகவே நிகழ்கின்றன. தமிழ்ச் சொற்களில் முதல் அசையைத் தவிர, அடுத்துவரும் எந்த ஒரு அசையிலும் தோற்றம் ( onset) இருக்கவேண்டும். விதிவிலக்கு இருப்பதாகத் தெரியவில்லை.மேலும் ஈரொற்று வரும்போது, முதல் ஒற்று மெல்லினமாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்கும் அசையின் அமைப்பே காரணம். இரண்டு ஒற்றுகளில் எந்த ஒற்று அதிக உயிர்ப்புத்தன்மைபெற்று ( more sonarant) இருக்கிறதோ, அதுவே அசையின் ஒடுக்கத்தில் ( coda) உச்சியாக அமைகிற உயிருக்கு அருகில் அமையமுடியும். இது தமிழுக்கு மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் காணப்படுகிற ஒரு பண்பு. ங்க், ஞ்ச், ண்ட், ன்ற், ம்ப், ந்த் ஆகிய ஈரொற்றுகளில் மெல்லினமே முதல் ஒற்றாக அமைகிறது. ச்ஞ், க்ங், த்ந், ப்ம், ட்ண் என்ற ஒடுக்கத்தைத் தமிழில் காணமுடியாது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மொழி அசைக்கு இலக்கண ஆசிரியர்கள் தகுந்த சிறப்பை அளிக்கவில்லையே. அதற்கு ஏதாவது காரணம் உண்டா? தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
...<span lang="TA" style="color:rgb(34,34,34);font-f
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புள்ள பேராசிரியை அவர்களுக்கு,