கேக்

324 views
Skip to first unread message

kumar a

unread,
Nov 9, 2011, 11:29:13 PM11/9/11
to Tamil2...@googlegroups.com, kad...@googlegroups.com, paga...@googlegroups.com, tamil...@googlegroups.com, lover...@googlegroups.com

முட்டை கேக்

தேவையானவை

முட்டை - 4
மைதா - 1 கப்
வெனிலா எசன்ஸ் - அரை தே‌க்கர‌ண்டி
பொடித்த சர்க்கரை - அரை க‌ப்
பேக்கிங் பவுடர் - 1/2 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை

முட்டைகளை நுரை பொங்கக் கடையவும். இதில் சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, முட்டைக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

எசன்ஸ் சேர்க்கவும்.

ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் லேசாக மைதா மாவைத் தூவவும்.

இதில் கேக் கலவையை விட்டு, 7 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து, பேக் மோட்டில் வேக விடவும்.

ஆறிய பின் த‌னியாக எடு‌த்து தேவையான வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டவு‌ம்.

 

 

 

 

 

ஆப்பிள் ஐஸிங் கேக் (Apple Icing Cake)

தேவையான பொருட்கள்:

1
/2 கிலோ ஆப்பிள்
500
கிராம் மைதா
375
கிராம் வெண்ணெய்
200
கிராம் ஐஸிங் சர்க்கரை
50
கிராம் மில்க் மெய்ட்
50
மிலி பால்
100
கிராம் சர்க்கரை
5
கிராம் பட்டைத்தூள்
100
கிராம் பிரெட் தூள்

செய்முறை:

வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து இதனுடன் மைதாமாவு சேர்த்து வைக்கவும்.

ஆப்பிள் தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் சாஃப்டாகிவிடும்.

பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.

வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும்.

இதன் மேல் 10 ‌கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.

 

 

 

புது‌வித கேக் (Nuts Cake | Variety of Cake | Veg Cake |)

தேவையான பொருட்கள்:

பாதா‌ம் - ஒரு க‌ப்
முந்திரி - ஒரு க‌ப்
தோல் உரித்த பச்சை வேர்க்கடலை - ஒரு க‌ப்
சர்க்கரை - அரை ‌கிலோ
நெய் - 200 ‌கிரா‌ம்
பால் - 100 ‌‌கிரா‌ம்
பாதாம் எஸன்ஸ் - 1 தே‌க்கர‌‌ண்டி

செய்முறை:

பாதாம், முந்திரி, வேர்க்கடலை மூன்றையும் தனித்தனியாக ஊற விடவும்.

பாதாமின் தோல் நீக்கி மூன்றையும் விழுதாக அரைக்கவும்.

அரை‌த்த ‌விழுதுட‌ன் பால், சர்க்கரை, நெய் சே‌ர்‌த்து ஒரு வாண‌லி‌யி‌ல் வை‌த்து அல்வாவாக சுருள கிண்டி எடுக்கவும்.

பாதாம் எஸன்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து ஆறியபின் துண்டு போடவும்.

 

 

 

 

 

 

 

 

 

மைதா கே‌க்

தேவையான பொருள்கள்:

மைதா - 1‌கிலோ
ரவை - சிறிதளவு
அரைத்த சர்க்கரை பவுடர் - 3/4 ‌கிலோ
சோடா உப்பு - சிறிதளவு
டால்டா - 3 ஸ்பூ‌ன்
தண்ணீர் - பிசைய தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூ‌ன்
பாதாம் எசன்ஸ் அல்லது வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு
பா‌ல்பவுடர் - 5 ஸ்பூ‌ன்
ரிபைன்டு ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: முதலில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சிறு மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.

தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து வாய்அகன்ற பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சுவையான மைதா கேக் தயார்.

 

தேங்காய் கேக் (Coconut Cake | Owan | Sweet Item)

தே‌ங்கா‌ய் கே‌க்கை ஓவ‌னி‌ல் எ‌ளிதாக செ‌ய்யலா‌ம்.

தேவையானவை :

தேங்காய் துருவல் - 100 கிராம்
மைதா - 200 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தே‌க்கர‌ண்டி
வெனிலா எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை :

மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து சலிக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய், பொடி செய்த சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்கு குழைக்கவும்.

அதில் மைதா, தேங்காய் துருவல் இரண்டையும் மாறி, மாறி சிறிது, சிறிதாக சேர்த்து ஒவ்வொரு முறையும் நன்கு குழைக்கவும்.

மைதா, தேங்காய் துருவல் முழுவதையும் சேர்த்து குழைத்த பின் சிறிதளவு எசன்ஸ் சேர்த்து நன்கு குழைக்கவும்.

அதன் பிறகு சிறு, சிறு உருண்டைகளாக வேண்டிய வடிவத்தில் செய்து நெய் தடவிய தட்டில் வைத்து கேக் ஓவனில் வேக வைக்கவும்.

 

 

 

 

 

 

 

 

வாழைப்பழ கேக்

வாழை‌க்கு ஏ‌து ‌சீச‌ன்? எ‌ல்லா நா‌ட்க‌ளிலு‌ம் ம‌‌லிவாகவு‌ம் ‌‌கிடை‌க்கு‌ம் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து கே‌க் செ‌ய்து அச‌த்து‌ங்க‌ள் உ‌ங்க‌ள் குடு‌ம்ப‌த்தாரை.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

மைதா மாவு - 300 ‌கிரா‌ம்
சக்கரைப் பவுடர் - 300 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
வாழைப்பழம் - 4
உலர் திராட்சை - 125 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
கோழி முட்டை - 5
வாழைப்பழ எசன்ஸ் - 1 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
சோடியம் பை கார்பனேட் - 1 தேக்கரண்டி

செ‌ய்யு‌ம் முறை

மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.

வெண்ணெயை, ச‌ர்க்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.

முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.

ந‌ன்கு அக‌ண்ட தகர ட்ரேயில் பட்டர் பேப்பர் லைனிங் செய்து, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி சுமார் 1 மணி நேரம் இளம் தீயில் வேக வை‌த்து எடுக்கவும்.

சுவையான வாழைப்பழ கேக் தயார்.

 

சுவையான கேக் வகைகள்

கேக் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்;-

 

1. கேக் அல்லது பிஸ்கெட் ரெடியானவுடனேயே ஓவனிலிருந்து எடுக்கக் கூடாது.சிறிது நேரம்

நேரம் அந்த சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

2.ஃபேன் காற்றில் ஆற வைக்கக் கூடாது.

3.பழைய பேக்கிங் பவுடர் உபயோகித்தால் கேக் எழும்பாது.

4.கேக் கலவை கேக் செய்யும் பாத்திரத்தின் பாதி உயரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

5.கேக் ரெடியானவுடனேயே சூடாக கவிழ்க்கக் கூடாது.

6.அடிக்கடி ஓவனை வெந்து விட்டதா என்று திறந்து பார்க்கக் கூடாது.

7.மாவில் வெண்ணெய் சர்க்கரை முட்டை சேர்ந்த கலவையை மெதுவாக ஊற்றி

விரல் நுனிகளாலேயே லேசாக கலக்கவேண்டும்.

8.வெண்ணெய் முட்டை போன்றவற்றை குளிர் சாதனப்பெட்டியில் வைத்திருந்தால்

ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியே எடுத்து விடவும்.

9.கேக் கலவை மிருதுவாகவும் லேசாகவும் இருக்கவேண்டும்.ஒரு கரண்டியில்

இக் கலவையில் கொஞ்சமெடுத்து ஊற்றினால் மிருதுவாக வழிந்து விழ வேண்டும்.

கலவை கெட்டியாக இருந்தால் பால் ஊற்றிக் கொள்ளலாம்.

10டிரை ஃப்ருட்ஸ் எனப்படும் உலர்ந்த பழ வகைகளை கேக்கில் உபயோகிப்பதாக

இருந்தால்,கேக் கலவையுடன் சேர்ப்பதற்கு முன்பாக இவற்றின் மீது சிரிதளவு

உலர்ந்த மாவு சேர்த்துப் பிசறி சேர்க்க வேண்டும்.இதனால் ப்ழ வகைகள் கேக்கில்

ஊறி நிற்கும்.


சாக்லெட் ஆரஞ்ச் ஏஞ்சல் ஃபுட் கேக்


தேவையான பொருட்கள்;-


மைதா 1/2 கப்

கோக்கோ பவுடர் 1/4 கப்

வெண்ணிலா எஸ்சென்ஸ் -2 டீஸ்பூன்

சோள மாவு -2 மேஜைக் கரண்டி

உப்பு - 1 சிட்டிகை

முட்டையின் வெண் கரு -5

க்ரீம் ஆஃப் டார் டார் என்று சொல்லப்படும்

ஒருவித ஸ்டார்ச் பவுடர் -1/2 டீஸ்பூன்

சர்க்கரை -1/2 கப்

ஆரஞ்சு பழத் தோல்

துருவியது -சிறிதளவு அலங்கரிக்க

 

முதலில் ஒவனை சூடாக்கி ரெடியாக வைக்கவும்.

 

1.மைதா கோக்கோ சோள் மாவு கலந்து சலிக்கவும்

2.முட்டையின் வெள்ளை நுரைவரும் வரை அடிக்கவும்.

3.க்ரீம் ஆஃப் டார் டார் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.ஸ்பூனால் எடுத்தால்

கீழே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்.

4.கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்துஅடிக்கவேண்டும்.

5.பிறகு தயாராக உள்ளமைதா சேர்த்த பிறகு கேக் பாத்திரத்தில் கொட்டி பேக்

செய்யவும்.

6.முட்டையின் வெள்ளையை மட்டுமே வைத்து செய்வதால் மிகவும் லேசாக

இருக்கும்.அக் கலவையில் பால் சேர்க்க கூடாது.

7.இதை ராயல் ஐசிங் கொண்டு அலங்கரிக்கலாம்.

 

செவன் ஸ்டார் கேக்

----------------------------------------------------------------------------------------------

செவன் ஸ்டார் கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் செவன் ஸ்டார் கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

* கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.

*
தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*
ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.

*
அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.

*
கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.

*
இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும்.

*
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

வெல்லக் கேக்

----------------------------------------------------------------------------------------------

வெல்லக் கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் வெல்லக் கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

ரவை – 500 கிராம்
முட்டை – 6
துருவிய வெல்லம் – 500 கிராம்
கெட்டியான தேங்காய்ப்பால் – 2 கப்
சீனி – 250 கிராம்
பன்னீர்எசன்ஸ் – 3 தேக்கரண்டி
வெண்ணெய் – 250 கிராம்
முந்திரிப் பருப்பு – 250 கிராம்

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

பாதி முந்திரிப்பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். மற்ற பாதியை நைய நறுங்கத் தட்டிக் கொள்ளவும். ரவையை வறுத்து அது சூடாக இருக்கும் போதே வெண்ணெயைக் கலந்து தனியே வைக்கவும். முட்டை மஞ்சள் கருவையும் சீனியையும் நன்கு அடித்து ரவைக்கலவையில் வெல்லம் சேர்த்துக் கலக்கவும். பருப்பு, எசன்ஸ் கலக்கவும். வெள்ளைக் கருவை நன்கு நுரை பொங்க அடித்துக் கேக், மாவுடன் கலக்கவும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து நெய் தடவிய கேக் பாத்திரத்தில் ஊற்ற வேக வைக்கவும்.

 

 

வாழைப்பழ கேக்

----------------------------------------------------------------------------------------------

வாழைப்பழ கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் வாழைப்பழ கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

சீனி – 1 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
முட்டை – 3
மைதா – 2 கப்
வாழைப்பழம் – 3
வெண்ணெய் – 1/2 கப்
பால் – 1 மேஜைக்கரண்டி

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

வெண்ணெயையும், சீனியையும் நன்றாகக் கடையவும். இதனுடன் நன்றாக கடையப்பட்ட முட்டையைச் சேர்க்கவும். பிசைந்த வாழைப்பழத்தையும், பாலையும் சேர்க்கவும். பின் மைதா, சோடா, உப்பு, பேக்கிங் பவுடரைச் சலித்து கேக் கலவையில் கலக்கவும். வெண்ணெய் தடவிய கேக் டின்னில் பேக் செய்யவும்.

 

 

வாழைப்பழ கேக் 2

----------------------------------------------------------------------------------------------

வாழைப்பழ கேக் 2 நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் வாழைப்பழ கேக் 2 மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

மைதா மாவு - 300 ‌கிராம்
சக்கரைப் பவுடர் - 300 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
வாழைப்பழம் - 4
உலர் திராட்சை - 125 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
கோழி முட்டை - 5
வாழைப்பழ எசன்ஸ் - 1 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
சோடியம் பை கார்பனேட் - 1 தேக்கரண்டி

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.

வெண்ணெயை, ர்க்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.

முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.

ன்கு அகண்ட தகர ட்ரேயில் பட்டர் பேப்பர் லைனிங் செய்து, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி சுமார் 1 மணி நேரம் இளம் தீயில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான வாழைப்பழ கேக் தயார்.

 

மைதா கேக்

----------------------------------------------------------------------------------------------

மைதா கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் மைதா கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

மைதா - 1‌கிலோ
ரவை - சிறிதளவு
அரைத்த சர்க்கரை பவுடர் - 3/4 ‌கிலோ
சோடா உப்பு - சிறிதளவு
டால்டா - 3 ஸ்பூன்
தண்ணீர் - பிசைய தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
பாதாம் எசன்ஸ் அல்லது வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு
பால்பவுடர் - 5 ஸ்பூன்
ரிபைன்டு ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

முதலில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சிறு மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.

தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து வாய்அகன்ற பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சுவையான மைதா கேக் தயார்.

 

பழ கேக்

----------------------------------------------------------------------------------------------

பழ கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் பழ கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

காய்ந்த திராஷைப் பழம் – 1 1/2 கப்
கொட்டை எடுத்த பேரீச்சம்பழம் – 1 1/2 கப்
பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்
முந்திரிப்பருப்பு – 1/2 கப்
ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வெனிலா எஸ்ஸென்ஸ் – 10 சொட்டு
வெண்ணெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
முட்டை – 4
மைதா – 3/4 கப்
தேன் – 1/2 கப்

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பைச் சிறிது பன்னீர் விட்டு அரைக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்துக் கொள்ளவும். சீனியையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பையும் தேனையும் கலந்து அடிக்கவும். கடைசியில் வெள்ளைக்கருவை கலக்கவும். மாவு கலந்த பிறகு அதிகமாகக் கடையக் கூடாது. மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றையும் எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து, வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்.

 

ராக் கேக்

----------------------------------------------------------------------------------------------

ராக் கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் ராக் கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

வெண்ணெய் – 125 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
சீனி – 125 கிராம்
மாவு – 250 கிராம்
முட்டை – 2
ப்ளம்ஸ் – 50 கிராம்
வெனிலா எசன்ஸ்

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------

வெண்ணெயையும் சீனியையும் நன்கு கலக்கவும். முட்டையை நன்கு அடித்து கலக்கவும். மாவுடன் பேக்கிங் பவுடரைச் சலித்து, பாதி மாவை வெண்ணெய்க் கலவையுடன் கலக்கவும். ப்ளம்ஸ், எசன்ஸ் கலந்து மீதமுள்ள மாவையும் கலந்து விடவும். ஒரு பிஸ்கட் ட்ரேயில் வெண்ணெய் தடவி இந்தக் கலவையை குவியல் குவியலாக தேக்கரண்டி கொண்டு ஊற்றி, கேக் அடுப்பில் வேக வைக்கவும்.

 

செர்ரி கேக்

----------------------------------------------------------------------------------------------

செர்ரி கேக் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் செர்ரி கேக் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

----------------------------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள்

----------------------------------------------------------------------------------------------

வெண்ணெய் – 100 கிராம்
சீனி – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
செர்ரி – 150
பால் – 2 மேஜைக்கரண்டி
மைதா – 200 கிராம்
முட்டை – 2
கொஞ்சம் பொடியாக நறுக்கிய எலுமிச்சம்பழத் தோல்

----------------------------------------------------------------------------------------------

செய்முறை

----------------------------------------------------------------------------------------------


மாவையும், பேக்கிங் பவுடரையும் சலிக்கவும். வெண்ணெய், சீனி, எலுமிச்சம்பழத் தோல் சேர்த்துக் கடையவும். இதனுடன் கடைந்த முட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மூன்றில் ஒரு பங்கு மாவை இக்கலவையுடன் சேர்க்கவும்.

 

 

 

 

 

சிவப்பு வெல்வெட் கேக்

Published October 12, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா – 1 1/2 கப்

சர்க்கரை – 1  1/2 கப்

எண்ணெய் – 1 1/2 கப்

சோடா உப்பு – 3/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

முட்டை – 2

வெள்ளை வினிகர் – 1 தேக்கரண்டி

வெனிலா எஸென்ஸ் – 1 தேக்கரண்டி

கெட்டியான மோர் – 1 கப்

சிவப்பு ஃபுட் கலர் – 2 தேக்கரண்டி

க்ரீம் சீஸ்தேவையான அளவு

செய்முறை

1. மைதா, பேக்கிங் பவுடர், மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து இருமுறை சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வினிகர், சர்க்கரை மற்றும் எசென்ஸ் எல்லாவற்றையும் கலந்து நன்றாக நுரைக்க அடிக்கவும்.

3. பின் சிவப்பு ஃபுட் கலரையும் சேர்த்து அடியுங்கள். பிறகு சலித்து வைத்துள்ள மைதா கலவையும் சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்குங்கள்.

4. பிறகு மோரையும் அதனுடன் கலக்குங்கள். இப்போது கேக் கலவை ரெடி. இதை கேக் பாத்திரத்தில் கொட்டி பேக் செய்யுங்கள்.

5. கேக் கலவையை இரண்டாகப் பிரித்து ஒரே அளவிலான இரண்டு தனித்தனிக் கேக்குகளாகவும் பேக் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது பேக் ஆன இரண்டு கேக்குகளின் நடுவே க்ரீம் சீஸ்ஃபில்லிங்கைப் பரத்தி விட்டு அதை ஒரே கேக்காக செட் செய்யுங்கள்.

இதோ சிவப்பு வெல்வெட் கேக் ரெடி.

க்ரீம் சீஸ் தயாரிக்கும் விதம்

தயிரை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் வடிந்தவுடன் இந்த கெட்டித் தயிரை துணியிலிருந்து பிரித்து எடுத்து(2கப் தேவை) அத்துடன் 2கப் சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி வெனிலா எஸென்ஸும்சேர்த்து நுரைக்க அடித்துக் கொள்ளுங்கள். க்ரீம் சீஸ் ரெடி. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்து தேவையான போது உபயோகப் படுத்தலாம்.

 

 

ப்ளம் கேக்

Published September 29, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா-100 கிராம்

ஓமம் தூள்-1/2 டீ ஸ்பூன்

திராட்சை-30 கிராம்

சுக்குத் தூள்-1/2 ஸ்பூன்

வெண்ணெய்-100 கிராம்

பால்-1/4 கப்

சர்க்கரை – 100 கிராம்

சோள மாவு – 2 ஸ்பூன்

முந்திரி பிஸ்தா வால்நட்- 40 கிராம்

கலந்த பீல் – 30 கிராம்

முட்டை- 3

செர்ரி பழம் – 50

செய்முறை

1. கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி விட்டு டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்து விடவும்.

2. சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டும்.

3. மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.

4. இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.

5. முட்டையை எக் பீட்டரில் போட்டு நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும்.

6. பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரிப் பழங்களைப் போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

 

 

 

 

 

 

 

சாக்லேட் கேக்

Published September 28, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம் 

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 100 கிராம்

சர்க்கரை – 75 கிராம்

வெண்ணெய் – 75 கிராம்

பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி

முட்டை – 2

வெனிலா எசன்ஸ் – 10 சொட்டுக்கள்

பால் – 100 மில்லி

கோக்கோ பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. வெண்ணெயில் சிறிதை எடுத்து வைத்து விட்டு, சர்க்கரையைப் போட்டு நன்றாகக் குழையுங்கள். முட்டையை உடைத்து அடித்து கலவையில் விட்டு கலந்து கொள்ளுங்கள்.

2. மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் இவற்றைச் சலித்து கலவையில் போட்டுபால் விட்டுப் பிசையுங்கள்.

3. கேக் தட்டை எடுத்து வெண்ணெய் தடவுங்கள். பிசைந்த மாவை தட்டின் உயரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு சமமாகப் பரப்பி பேக் செய்யுங்கள்.

படத்திற்கு நன்றி

 

பாதாம் கேக்

Published September 27, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 200 கிராம்

பாதாம் பருப்பு – 25 கிராம்

பேக்கிங் பவுடர் – 2 டீ ஸ்பூன்

முட்டை – 2

வெண்ணெய் – 150 கிராம்

பாதாம் எஸென்ஸ்சில துளிகள்

உலர்ந்த பழங்கள் – 50 கிராம்

முந்திரிப் பருப்பு – 25 கிராம்

கேக் மசாலாப் பவுடர் -1/2 டீ ஸ்பூன்

பால் – 1 டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை – 200 கிராம்

செய்முறை

1. பாதாம் பருப்பைச் சூடான நீரில் ஊற வைத்துத் தோலுரித்து, பால் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

2. மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.

3. வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து லேசாகும் வரை குழைக்கவும்.

4. முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

5. மாவுடன் வெண்ணெய், சர்க்கரை குழைத்த கலவை, முட்டை இவற்றை மெதுவாக ஊற்றிக் கலக்கவும். கலக்கும் போதே பாதாம் எஸன்ஸ், கேக் மசாலாப் பவுடர், பாதாம் பருப்பு அரைத்தது, முந்திரிப் பருப்புத் துண்டுகள், மாவில் புரட்டி எடுத்த உலர்ந்த பழத் துண்டுகள் இவற்றைக் கலக்கவும்.

6. கேக் கலவையை ட்ரேயில் ஊற்றி சூடாகிக் கொண்டிருக்கும் கேக் ஓவனில் வைத்து பேக் செய்யவும்.

வாழைப்பழ கேக்

Published September 26, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு -200 கிராம்

பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்

சர்க்கரை – 150 கிராம்

வெண்ணெய் -100 கிராம்

முட்டை- 2

வாழைப் பழம் – 2

பால் – 50 மில்லி

செய்முறை

1.மைதா மாவு, பேக்கிங் பவுடர், இரண்டையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.

2.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

3.வாழைப்பழத்தைப் பிசைந்து பாலுடன் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4.வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு லேசாகும் வரை குழைக்கவும்.

5.சலித்த மாவில் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவை, நுரைக்க அடித்த முட்டை, அரைத்த வாழைப்பழ விழுது இவற்றைச் சேர்த்து விரல்களாலேயே மிருதுவாக கலக்கவும்.

6.பேக்கிங் ட்ரேயில் வெண்ணெயைத் தடவி மாவு தூவி, கேக் கலவையை அதில் ஊற்றி பேக் செய்யவும்.

தேங்காய்ப்பால் கேக்

Published September 24, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்


தேவையான பொருட்கள்

கெட்டியான தேங்காய்ப் பால் -1கப்

மைதா மாவு -150 கிராம்

வெண்ணெய் -100 கிராம்

சர்க்கரை -150 கிராம்

பேக்கிங் பவுடர் -11/2 டீ ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – 1/2 டீ ஸ்பூன்

உலர்ந்த திராட்சை -25 கிராம்

முந்திரிப் பருப்புத் தூள் – 50 கிராம்

முட்டை – 2

செய்முறை

1.மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், முந்திரிப் பருப்புத் தூள், ஏலக்காய்த் தூள் கலந்து சலித்துக் கொள்ளவும்.

2.வெண்ணெய் சர்க்கரை சேர்த்து குழைக்கவும்.

3.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

4.மாவில் குழைத்த கலவை, முட்டை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

5.தேங்காய்ப் பால், மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை, ஆகியவற்றைக் கலந்து இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.

 

 

முட்டையில்லாத கேக்

Published September 23, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 200கிராம்

வெண்ணெய் – 100 கிராம்

பால் – 1 கப்

பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்

சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்

சர்க்கரை – 75 கிராம்

ஏலக்காய்த் தூள்- 1/2 டீ ஸ்பூன்

கிராம்புத் தூள் – 1/2 டீ ஸ்பூன்

உலர்ந்த திராட்சை- 50 கிராம்

தேன் – 50 கிராம்

செய்முறை

1. மைதா மாவில் பேக்கிங் பவுடர், சோடா உப்பு, ஏலக்காய்த் தூள், கிராம்புத் தூள் கலந்து மூன்று முறை சலிக்கவும்.

2. இம் மாவுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசிறி பொடிப்பொடியாக உதிர்த்து வைக்கவும்.

3. பாலில் சர்க்கரை, தேன் இவைகளை கரைத்துக் கொள்ளவும்.

4. இக் கரைசலுடன், மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை சேர்த்து, கேக் கலவையைத் தயாரித்துக் கொள்ளவும். இக்கலவையை பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும்.

5. முட்டை வாசனை பிடிக்காதவர்களுக்கு உகந்த அருமையான கேக் இது.

கிறிஸ்துமஸ் கேக்

Published September 22, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு -300 கிராம்

பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்

சோடா உப்பு -1/2 டீஸ்பூன்

வெண்ணெய் -200 கிராம்

பொடித்த சர்க்கரை -250 கிராம்

முந்திரிப் பருப்பு -50 கிராம்

உலர்ந்த திராட்சை -50 கிராம்

செர்ரி -50 கிராம்

முட்டை -3

பிஸ்தாப் பருப்பு -50 கிராம்

சுல்தானாஸ்(உலர்ந்த கறுப்பு திராட்சை) -50 கிராம்

கேக் மசாலா -1 டீஸ்பூன்

கோக்கோ -1 டீஸ்பூன்

பால்-100 மில்லி

வெனிலா எசென்ஸ் -சில துளிகள்

செய்முறை

1.மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு கேக் மசாலா இவைகளை ஒன்றாகக் கலந்து இரண்டு மூன்று முறை சலிக்கவும்.

2.பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து

ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

3.குழைத்த கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.

4.மைதா மாவில் ஊற்றி விரல் நுனிகளால் எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும்.

5.இவற்றில் கோக்கோ, பால், காரமல், சர்க்கரை, எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

6.கடைசியாக மாவு தூவிய செர்ரிப் பழங்கள், உலர்ந்த திராட்சை (சுல்தானாஸ்),முந்திரிப்பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் வைத்து பேக் செய்யவும்.

7.வெந்ததும் வெளியில் எடுத்து விரும்பியபடி ஐசிங் அலங்காரம் செய்யலாம்.

டெவில்ஸ் கேக்

Published September 21, 2011 | By சாந்தி மாரியப்பன்

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்

எண்ணெய்-1/2 கப்

முட்டை-2

பால்-1கப்

வெனிலா எசென்ஸ்-1டீஸ்பூன்

மைதா-1 3/4 கப்

சர்க்கரை-1 1/2

கோக்கோ-1/2 கப்

சமையல் சோடா-1 1/4 டீஸ்பூன்

உப்பு-1 சிட்டிகை

பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஓவனைச் சூடாக்கி ரெடியாக வைக்கவும்.

1.மைதா, சமையல் சோடா, கோக்கோ,  உப்பு, பேக்கிங் பவுடர் முதலியவற்றை சேர்த்து இரண்டு மூன்று முறை சலிக்கவும்.

2.பால், சர்க்கரை, முட்டை, எண்ணெய் இவற்றோடு வெனிலா எசென்ஸைச் சேர்த்து கைவிடாமல் நுரைக்க அடிக்கவும்.

3.சலித்த மாவைச் சிறிது சிறிதாக முட்டைக் கலவையில் சேர்க்கவும்.

4.இந்த கேக் கலவையை, தயாராக வைத்துள்ள பேக் செய்யும் பாத்திரத்தில் கொட்டி பேக் செய்யவும்.

 

 

Monday, March 8, 2010

கேக் ஜசிங் வகைகள்-4

 பார்ச்மென்ட் ஜசிங்

தேவையான பொருட்கள்
ஜெலட்டீன் -1 தேக்கரண்டி
தண்ணீர் -6 தேக்கரண்டி

ஜசிங் சீனி(சக்கரை)-200 கிராம்

ஜசிங் நிறங்கள் -விரும்பியது

செய்முறை
(1)
ஓருகனமான பாத்திரத்தில் தண்ணீர்
,
ஜெலட்டீன் ஆகியவற்றை கலந்து

அரைமணித்தியாலம் ஊறவைக்கவும்
.

(2)
அதன் பின்பு ஊறவைத்தவற்றை

அடுப்பில் வைத்து மூன்று
நிமிடங்கள் சூடு படுத்தினால்

பசை(பேஸ்ட்) போல உருண்டு

திரண்டு வரும் பின்பு அதனை

அடுப்பில் இருந்து இறக்கவும்
.

(3)
பின்பு இறக்கிய பாத்திரத்தில்

உள்ள பசையின்(பேஸ்ட்)அளவுக்கு

தேவையான அளவில் ஜசிங்சீனி
(
சக்கரை) கலந்து பூரிமா அல்லது

இடியப்ப மா பதத்தில் குழைக்கவும்.

(4)
அதன் பின்பு மாவை ஓரு பலகையில்

வைத்து கட்டையால் தேய்த்துக்
கொள்ளவும் .

(5)
அதன் பின்பு அதில் பூ,பழங்கள் போன்ற

வடிவங்களை செய்து ஓருமணித்தியாலம்
அதனை காய விடவும் .

 

 

 

 

 

 

7 கப் கேக்


கடலை மாவு - முக்கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சீனி - 3 கப்
நெய் - ஒரு கப்
முந்திரித்தூள் - கால் கப்




கடலை மாவை சலித்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, ஓடு, நார் இல்லாமல் வெண்மையான பூவாக எடுத்துக் கொள்ளவும்.

முந்திரியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரைத்த முந்திரி பொடியை போட்டு ஒன்றாய் கலந்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற, அடி சற்று கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடேற்றவும். அதில் கரைத்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.

அதனுடன் தேங்காய்த் துருவல், சீனி சேர்த்து நன்கு கிளறவும்.

சீனி கரைந்து பாகாகி, மாவு மற்றும் தேங்காயுடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது விடாது கிளறிவிடவும்.

20
நிமிடங்கள் தொடர்ந்து கிளறியவுடன், கலவை எல்லாம் ஒன்று சேர்ந்து சற்று கெட்டியாகி வரும். நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.

ஒரு தட்டின் உட்புறம் முழுவதும் நெய் தடவி வைக்கவும்.

இறக்கியவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி நன்கு பரப்பி சற்று ஆறவிடவும். 3 நிமிடம் கழித்து கத்தியில் நெய் தடவிக் கொண்டு வில்லைகளாக வெட்டி வைக்கவும்.

சுவையான 7 கப் கேக் தயார். செய்வதற்கு எளிதான, மிகவும் சுவையான கேக் இது


 

முந்திரி பாதாம் கேக்

    (35)  (38) 

Rating :

(0) Rate this post

தேவையான பொருள்கள்:

முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

செய்முறை:

  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்.

 

அன்னாசி கேக்


ழுத்த அன்னாசி -- 1
மைதாமாவு -- 200 கிராம்
வெண்ணைய் -- 150 கிராம்
முட்டை -- 4
சர்க்கரை -- 150 கிராம் (பொடித்துக் கொள்ளவும்)
செர்ரி -- 6 என்னம்
பேக்கிங் பவுடர் -- 1/2 டீஸ்பூன்
அன்னாசி எசன்ஸ் -- சில துளி
மஞ்சள் கலர் -- 2 சிட்டிகை
நாட்டு / வெல்ல சர்க்கரை -- 4 ஸ்பூன்


அன்னாசியை தோல் சீவி வில்லைகளாக போட்டுக் கொள்ளவும்.
வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
முட்டைகள் நன்றாக அடிக்கவும்.
அடித்த முட்டையைச் சிறிது சிறிதாக சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
அத்துடன் எசன்ஸ்,கலர் சேர்க்கவும்.
பேக்கிங்பவுடர்.மைதாமாவு இரண்டையும் கலந்து சர்க்கரை கலவையில் சேர்க்கவும்.
10
அங்குல கேக் தட்டில் 20 கிராம் வெண்ணையை சமமாக தடவிக் கொள்ளவும்.
நாட்டு / வெல்ல சர்க்கரையை மேலாக சமமாகத் தூவி விடவும்.
அன்னாசி வில்லைகளை கேக் தட்டில் அழகாக வைக்கவும்.
நடுவில் செர்ரி பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.
அன்னாசி வில்லைகள் மீது கலவையை மெதுவாக போடவும்.
வில்லைகளை நகராமல் இருக்குமாறு செய்யவேண்டும்.
375
டிகிரி சூட்டில் 40 நிமிடம் வரை ஓவன் அடுப்பில் வைத்து பேக் செய்யவும்.
கேக் ஆறிய பிறகு ஒரு தட்டில் கவனமாக திருப்பவும்.
தட்டில் கீழே உள்ள அன்னாசி பழம்,செர்ரி கேக்கின் மேல் அலங்காரம் செய்தது போல் அழகாக இருக்கும்.
வெல்ல/நாட்டு சர்க்கரை சூட்டில் கரைந்து அன்னாசி பழ வில்லைகளின் மேல் ஒரு பளபளப்பைக் கொடுக்கும்.
ரெடி

 

 

 

 

 

 



--
With Love:

Kumar
முட்டை கேக்.pdf
முட்டை கேக்.docx
Reply all
Reply to author
Forward
0 new messages