நெடுநல்வாடை
நீண்ட நல்ல வாடை என்ற பொருள் கொண்ட தலைப்பிலுள்ள இப்பாடலை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவர் பாடியுள்ளார். இப் பாடலின் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பர். நக்கீரர் என்ற பெயருடைய புலவர் பலர் பலகாலத்தும் இருந்திருக்கின்றனர். திருமுருகாற்றுப்படையின் ஆசிரியரான நக்கீரர் என்பவரும் இவரே என்ற கருத்து உள்ளது. இவரது இயற்பெயர் கீரன் என்றும், மரியாதை ஒட்டாக ‘நல்' என்ற முன்னொட்டுடன் நல்+கீரர் என்று கொண்டு, அதுவே நக்கீரர் என்றானது என்றும் கூறுவர். இவரது தந்தை மதுரையைச் சேர்ந்த கணக்காயனார் என்பவர். கணக்காயனார் என்பதற்கு ஆசிரியர் என்று பொருள். நெடுஞ்செழியன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். மதுரைக்காஞ்சியின் தலைவனான தலையானங்கானத்துச் செருவென்றவன் இவனே என்று கூறுவர்.
இப்பாடல் நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடப்பட்டது அல்ல. ஒரு கூதிர்காலத்து வாடையில், தலைவனைப் பிரிந்து வாடும், ஒரு மன்னனின் மனைவியான தலைவியின் நிலையையும், அதே நேரத்தில், போர்ப்பாசறையில் இருக்கும் மன்னனின் நிலையையும் கூறுகிறது. இம் மன்னனின் மெய்க்காப்பாளன் தன் வேலின் உச்சியில் வேம்புமாலை-யைக் கட்டியிருந்தான் என்று புலவர் கூறுகிறார். இதை வேண்டுமென்றே புலவர் கூறுகிறாரா அல்லது slip of the tongue என்பார்களே அதுபோல் கைதவறி வந்ததா? கைதவறி வந்திருந்தால் அது புலவருக்கு இழுக்கு. வேண்டுமென்றே கூறியிருந்தால் பாட்டுக்கு இழுக்கு. இதில் என்ன இழுக்கு என்கிறீர்களா? வேம்புமாலை பாண்டிய மன்னர்களுக்கு உரியது. அகப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்,
மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் - தொல் - 1000
என்று கூறியிருக்கிறார். அதாவது, அகப்பாடலின் தலைவனை இன்னார் என்று கூறக்கூடாது. எனவே, இது பொதுவான அகப்பாடலாக ஆகாமல், தனிப்பட்ட ஒரு மன்னனைப் பற்றிய புறப்பாடல் ஆகும் என்பர். எனவே இது விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாகிவிட்டது. இருப்பினும் பொதுவான ஒரு நிலை எடுத்து, இப் பாடல் ஒரு அகப்புறப்பாடல் என்றும் கூறுவர். பாலையாகிய அகத்தையும், வாகையாகிய புறத்தையும் பாடுவதால் இது அகப்புறம் எனப்படும் என்றும் கூறலாம். எனினும், இதே போன்று, முல்லையாகிய அகத்தையும், வஞ்சியாகிய புறத்தையும் பாடும் முல்லைப்பாட்டையும் அகப்புறம் என்னாமல், அகப்பாட்டு என்றே கூறுகிறோம். எனவே, வேம்பு மாலைதான் கருத்து வேறுபாட்டுக்குரிய பொருள் ஆகிறது. வேம்பு பாண்டிய மன்னனுக்கு உரியதுதான் என்றாலும், எந்தப் பாண்டியன் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே அவன் பெயர் சுட்டப்பெறவில்லை என்று கொண்டு, இப் பாடல் அகப்பாட்டுதான் என்று கூறுவோரும் உளர். இப் பாடலில் மொத்தமுள்ள 188 அடிகளில், முதல் 168 அடிகள் அகப்பொருளையே சுட்டி நிற்கின்றன. இறுதியில் உள்ள 20 அடிகளே மன்னனைப் பற்றிக் கூறுகின்றன. எப்படியாயினும், சிறந்த அகப்பாடல்களுள் ஒன்றான இப் பாட்டு விவாதத்திற்குரிய பொருளாக ஆனது போகூழே. (போகு+ஊழ்தூபோகூழ்=துரதிர்ஷ்டம், ஆகு+ஊழ்தூஆகூழ்=அதிர்ஷ்டம்)
வாடை என்பது வடக்கிலிருந்து வரும் காற்று. தமிழில் ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் காற்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. வடக்கத்திக் காற்று வாடை என்றால், தெற்கத்திக் காற்று தென்றல். மேற்கு என்பது குடக்கு எனப்படும். குடக்குக் காற்று கோடை. கிழக்கு என்பது குணக்கு எனப்படும். குணக்குக் காற்று கொண்டல். வாடை கூதிர்காலக் காற்றாகும். கூதிர்காலம் என்பது ஐப்பசி (October middle to November middle)), கார்த்திகை (November middle to December middle) மாதங்களைக் கொண்ட குளிர்காலம். இக் காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்று தமிழகத்தில் வீசும். மிகுந்த குளிர்கொண்டது. பாடலைப் படிக்கும்போதே தெரிந்துகொள்வீர்கள். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவேதான், வடக்கு நோக்கிய வாசலைக் கொண்ட வீட்டை வாங்குவதற்குச் சிலர் தயங்குவர். இருப்பினும், இவ் வாடையை நல்ல வாடை என்கிறார் புலவர். ஏன் என்பதையும் பின்னர் தெரிந்துகொள்வீர்கள்.
அகத்துறையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்பது பாலைத் திணையைக் கொண்டது. இதற்கு நேரான புறத்திணை வாகைத்திணை ஆகும். இத் திணைக்குரிய துறைகளில் கூதிர்ப்பாசறை என்ற துறையே முதலில் கூறப்படுகிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கொண்ட அடைமழைக் காலத்திலும் மன்னன் போர்மேல் சென்றிருக்கிறான் என்றால் அவனுக்கு ஒரு தவிர்க்க இயலாத காரணம் இருந்திருக்கிறது. எனவே, இப் போர் கடுமையானதாக இருக்கும். அதனால், நீண்ட காலம் இது நடைபெறலாம். எனவே, தலைவி-தலைவன் பிரிவும் நீண்டதாக இருக்கும். பிரிவு துயரமானது. ஆற்றாத் துயர் அளிப்பது. எனவே, மீண்டும் அதே கேள்வி. இது எப்படி நல்ல வாடை ஆகும்? பொறுத்திருந்து பாருங்கள்.
இப்பாடலில் உள்ள 188 அடிகளில், 11 உவமைகளே காட்டப்பட்டுள்ளன. உவமைகள் அதிகம் இல்லாமல் காட்சிகளை நேரிடையாக நம் கண் முன் உயிரோவியங்களாகக் காட்டுவதில் நக்கீரர் வல்லவர். இந்த உவமைகளிலும் 7 உவமைகள் அரசியின் படுக்கையறை பற்றிக் கூறும் உள்-அறைக் காட்சிகளே (in door scenes). பெரும்பாலும் வெளிப்புறக் காட்சிகளே (out door scenes) நிறைந்த இப் பாடல், ஒரு தேர்ந்த திரைப்படத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கொண்டிருக்கிறது. பாடல் முழுவதுமே கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகளே. It is just a visual delight.
கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு என அத்தனை துறைகளிலும் துறைபோகிய ஒரு மிகச் சிறந்த தயாரிப்பாளரால் மிகவும் கவனத்துடனும், கலைநயத்துடனும், கலைநுணுக்கத்துடனும் தயாரிக்கப்பட்ட ஓர் அருமையான திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்.
இதில் ஒவ்வொரு சொல்லும் சுவைத் தேன் மாங்கனி; ஒவ்வோர் அடியும் அடிவேர்ப் பலா; ஒவ்வொரு காட்சியும் கனிநிறை பனிக்கூழ் (fruit salad with icecream); மொத்தத்தில் பாடல் முழுதுமே ஒரு பழத்தோட்டம். அதைக் கண்டு களித்துப் பூரிப்பீர்; மண்டிக் குடித்துக் மகிழ்வீர்; விண்டுரைத்துக் களிப்பீர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி, கட்டுரைத் தொடரின் தலைப்புக்கும், இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் சொன்னேனே! கட்டுரைத் தொடரின் தலைப்பு, ‘நக்கீரரின் நடைப் பயணம்’. நெடுநல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். ‘அதனால் என்ன?’ என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.
மேலும் விபரங்கள் மார்ச் 1-ஆம் நாள் வரும். அன்றைய நாளுக்கு அப்புறம் ஒவ்வொரு மாதமும் 5, 10, 15, 20, 25, 30 ஆகிய நாள்களில் இக் கட்டுரைத் தொடரின் பகுதிகள் வெளிவரும் (தொடர் முடியும் வரை!).
வேறு ஏதாவது ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். அவற்றுக்கும் சேர்த்து வெள்ளியன்று மேலும் சில விளக்கங்கள் தருகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
வேம்பு பாண்டிய மன்னனுக்கு உரியதுதான் என்றாலும், எந்தப் பாண்டியன் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே அவன் பெயர் சுட்டப்பெறவில்லை என்று

* Blog : www.rameshpoet.blogspot.com
ஏழு ஜென்மம்
உண்மையோ பொய்யோ
வா, இந்தப் பிறப்பை
புனிதப் படுத்துவோம்
From: iraamaki <iraa...@bsnl.in>
To: tamil...@googlegroups.com
Sent: Monday, February 25, 2013 10:01 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
From: Karuannam Annam <karu...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Sent: Monday, February 25, 2013 12:48 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்
ஐயையோ (அய்யய்யோ-வா? நீங்கள் எந்தக் கட்சி?)
கொல்லன் பட்டறையில் "ஊசியோ ஊசி".
நான் நெடுநல்வாடையைப் பலமுறை படித்திருக்கிறேன். ஆனால், தாங்களோ பலமுறை பாடம் எடுத்திருக்கிறீர்கள். எனவே, நான் எழுதப்போவது தங்களைப்போன்றவர்களுக்காக அல்ல என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன்.
'இளைஞருக்கான பத்துப்பாட்டு' என்ற என் நூலில் (இன்னும் வெளிவரவில்லை) நான் எழுதியுள்ள நெடுநல்வாடைப் பகுதியை 'அனைவருக்குமான நெடுநல்வாடை'-யாக மாற்றி எழுதும் கட்டுரைத் தொடரே இது. சொல்லப்போனால், நான் இங்கு கொடுத்திருக்கும் முன்னுரை, அந்தப் புத்தகத்துக்காக எழுதப்பட்டதுதான். பொதுவாகவே எனக்குச் சொன்னதையே சொல்லப் பிடிக்காது என்பதனால், இத் தொடர் சற்று வேறுபட்டதாகவே இருக்கும்.
>>அந்த ... "குரூஉத் துளி தூங்க" என்ற வரியை .....>>>
இதை இதனுடன் இணைத்திருக்கும் படத்தில் பாருங்கள்!
>>"ஆடவர் குறுகா அருங்கடிக் காப்பு" உடைய அரண்மனையில் நக்கீரர் நடைப்பயணம் கொண்டிருக்க முடியாது, இல்லையா?>>நக்கீரர் நுழையாத இடமா? எப்படி நுழைகிறார் என்று பாருங்கள்!எனக்குத் தெரிந்ததை நான் சொல்லப்போகிறேன். அப்புறம் எனக்கு என்ன ப ~~~~ ய ~~~~~~ம்?
ப.பாண்டியராஜா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
<kurUuththuLi.jpg>
நான் வ.சு.ப. அவர்கள் எழுதியுள்ள தமிழ்க்காதல் என்ற நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைப் படித்ததில்லை. வேறு யாருடைய கருத்தைக் கூறினாலும் தவறாமல் அவர் பெயரைக் குறிப்பிட்டுவிடுவேன். I am honest in this, please believe me.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்புடையீர்,
நடைப்பயணத்துக்குச் சில முன்னேற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. ஆங்காங்கே விளக்கிக்கொண்டிருந்தால் பயணத்தின் வேகம் தடைப்படும். எனவே இப்போதைக்குத் தேவையானவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். இத் தொகுப்பில் சில படங்களும் (.jpg files) இருக்கின்றன. எல்லாமே சேர்ந்து .doc file-ஆக இருக்கிறது. கட்டுரையையும், படங்களையும் பிரிக்க மனமில்லை. எனவே கட்டுரையையே இணைப்பாக அனுப்பியுள்ளேன். சிலர் அனுப்பும் மடல்களில் படங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு அனுப்புவது எப்படி எனத் தெரியவில்லை. அப்படிச் செய்ய முடிந்தால் இவ்வாறு ஒவ்வொரு முறையும் இணைப்புகள் தேவையில்லை. யாராவது சொல்லுங்கள்.
நன்றி,
பயண முன்னேற்பாடுகள்
கிடை என்றால் என்ன?
நான் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாம் தேனி மாவட்டம் (அன்றைய மதுரை மாவட்டம்), சின்னமனூருக்குக் கிழக்கில் சுமார் 5 மைல் தொலைவில் இருக்கும் ஓடைப்பட்டி என்ற சிறிய ஊர். என் பெற்றோர் அங்கு தொடக்கநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அந்த ஊரில் ஒக்கலிகக் கவுண்டர் எனப்படும் மக்கள் நிறையப் பேர் உண்டு. அவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள்; கடினமான உழைப்பாளிகள். ஆழமாகக் கிணறு தோண்டி, மாடுகள் கொண்ட கமலைகளால் நீர் இறைத்துச் சோளம், கேப்பை, மிளகாய் போன்றவற்றை விளைவிப்பர். ஊருக்கு வெளியில் வானம்பார்த்த பூமியில் காடுகள் இருக்கும். அங்கு நிலக்கடலை, கம்பு, குதிரைவல்லி, சாமை போன்றவற்றை மானாவாரியாகப் பயிர்செய்வர். இந்தத் தோட்ட, காட்டு வெள்ளாமைகளுக்கு உரம் வேண்டுமே! எனவே, பணக்காரர்கள் நூற்றுக்கணக்கில் பசுமாடுகள் வளர்ப்பர். கூடவே ஒன்றிரண்டு முரட்டுக் காளைகளும் இருக்கும். ஊரை ஒட்டிய பகுதியில் மொட்டைச் சுவர் எழுப்பி, அவற்றுக்குள் மாடுகளை அடைத்திருப்பர். இதைத் தொழு என்பர். இத்தனைக்கும் உணவுக்கு எங்கே போவது? எங்கள் ஊருக்குக் கிழக்கே, நீண்ட மலைத்தொடர் உண்டு. எங்கள் பகுதி மலைக்குத் தம்பிரான் ஊற்று மலை என்று பெயர். அதுவே தெற்குப் பக்கம் நீண்டு, மேகமலை, பச்சக்கூமாச்சி மலை, சுருளி மலை என்று நீண்டு குமுளி வரை செல்லும். இந்தப் பசுக்களைப் பராமரிப்போர், அவற்றைக் காலையில் மலைக்கு ஓட்டிச் செல்வர். பகல் முழுக்க அங்கு மேய்ந்துவிட்டு மாலையில் மாடுகள் ஊர் திரும்பும். அவை கழுத்து மணியை ஆட்டி ஒலித்துக்கொண்டு, கூட்டங் கூட்டமாய்ப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சி! ஆனால் ஆண்டு முழுக்க இவ்வாறு நடக்காது. தை முதல் ஆனி முடிய ஆறுமாதங்களுக்கு மாடுகளுக்குத் தினந்தோறும் நடைப்பயணம்தான். பின்னர், ஆடி முதல் மார்கழி முடிய ஆறுமாதங்களுக்கு மாடுகளை மலையிலேயே தங்கவைத்துவிடுவர். முல்லைக் காடுகளில் பயிர்,பச்சை நிறைந்திருக்கும்போது, மாடுகள் அவற்றைத் தாண்டி தினமும் மலைக்குப் போய்வர முடியாதல்லவா! எனவே, மலை ஆறுமாதம் – தொழு ஆறுமாதம் என்பதுவே இந்த மாடுகளின் வாழ்க்கை முறை. இவற்றைப் பராமரிப்போருக்கும் இதே வாழ்க்கைதான். இவ்வாறு மாடுகளை மலையில் தங்கவைத்து வளர்ப்பதைக் கிடைபோடுதல் என்பர்.
பானாள் என்றால் என்ன?
பால் நாள் பானாள் ஆனது. பால் என்றால் நடு, பாதி என்ற பொருள் உண்டு. எனவே, பானாள் என்பது நடுநாள். இதை நள்ளிரவு என்று அகராதிகள் சொல்கின்றன. அரைநாள் என்ற இன்னொரு சொல் உண்டு. இதனை, நடுராத்திரி என்று அகராதிகள் சொல்கின்றன. நடுநாள் என்ற இன்னொரு சொல்லும் உண்டு. இதனை, நண்பகல், நள்ளிரவு என்று அகராதிகள் சொல்கின்றன. பாதி, அரை, நடு எல்லாம் ஒன்றுதானே? ஏனோ நடுநாள் மட்டும் நண்பகலையும் குறிக்குமாம்! ஆனால், ஓர் அரைநாளில் ஞாயிறு தோற்றுவிக்கும் நிழலைப் பற்றி நெடுநல்வாடை பேசுகிறது. நடுராத்திரியில் சூரியன் ஏது? எனவே அரைநாளுக்கும் நள்ளிரவு, நண்பகல் என்று இரண்டு பொருளும் கொள்ளலாம் என்பது நெடுநல்வாடை மூலம் தெரிகிறது. அப்புறம் பானாள் மட்டும் என்ன பாவம் செய்தது? அதனையும் நள்ளிரவு, நண்பகல் என்று சொல்லிவிடலாமே? சங்க இலக்கியங்களில் 41 முறை பானாள் வருகிறது. எல்லா இடங்களிலும் அது நடு இரவையே குறிக்கிறது. எனவே பானாள் என்பது நள்ளிரவு மட்டும்தான் என்று அகராதிகள் கூறுகின்றனவோ? பார்க்கலாம்!!
அன்றைய மதுரை
முதலில் இன்றைய மதுரையைப் பார்ப்போம். மதுரைக்கு நடுநாயகமாக இருப்பது மீனாட்சி அம்மன் கோவில். என்ன கோவில்? மீனாட்சி அம்மன் கோவில். (ஹூம், எல்லாம் காலம்!!) அதென்ன பெருமூச்சு என்கிறீர்களா? இந்தத் தொடர் முடியும்போது தெரியும். கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் தெருக்கள் உண்டு. அவை ஆடிவீதி எனப்படும். கிழக்கு ஆடிவீதி, மேற்கு ஆடிவீதி, இவ்வாறாக. இந்த ஆடிவீதிகளை ஒட்டி, வெளிப்புறமாக உயரமான கோட்டை மதில்கள் உண்டு. இந்த மதில்களின் இடையே நான்கு பக்கமும் கோபுர வாசல்கள் உண்டு. ஆனால், கிழக்குப் பக்கத்தில் இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சொக்கநாதருக்கு. அதன் வழியே கொவிலுக்குள் செல்வோர் மிகச் சொற்பம். (ஹூம்…..). அம்மன் சன்னதிக்குச் செல்லும் வாசல் முக்கியமானது. கோட்டைச் சுவரை ஒட்டி, நான்கு பக்கமும் தெருக்கள் உண்டு. அவை சித்திரை வீதிகள். கிழக்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி, இவ்வாறாக. அம்மன் சன்னதியிலிருந்து வெளியே சென்றால் சித்திரை வீதியை அடுத்துக் கடைகளுக்குப் பின்னர் வருவது ஆவணிமூல வீதி. அதென்ன ஆவணி மூல வீதி? மூலம் என்பதற்கு original என்ற ஒரு பொருள் உண்டு. கிழக்காவணி மூல வீதியை அடுத்து அம்மன் சன்னதித் தெருவில் ஒரு உயரமான வாயில் உண்டு. உயரம் 20 அடிக்கு மேலேயே இருக்கும். இப்போது மதுரையின் தளம் 10 அடி உயர்ந்திருக்கிறது என்பர். எனவே, அந்த வாயில் கட்டப்பட்ட காலத்தில் அது எவ்வளவு உயரமாக இருந்திருக்கும்?. அதின் பக்கச் சுவரில் ‘இது பாண்டியர் கோட்டை வாயில்’ என்ற கல்வெட்டு உள்ளது. ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது. எனவே, நான்கு ஆவணி மூல வீதிகளுக்குள் அமைந்து இருந்ததுவே அந்தக் கால மதுரை. பிற்காலப் பாண்டியருக்குப் பின்னர், வடநாட்டுப் படையெடுப்புகளால் சிதறிப்போய், சின்னாபின்னமாய்க் கிடந்த மதுரையை மீட்டெடுத்தவர்கள் நாயக்க மன்னர்கள். அவர்கள் சிதிலமடைந்து நின்ற கோட்டைச் சுவர்களை இடித்துவிட்டு, கோட்டைக்கு வெளியிலிருந்த அகழியை நிரப்பி மேடாக்கி வீதிகள் அமைத்தார்கள். இன்றைக்கும், மேலாவணி மூல வீதியை ஒட்டி, மேலப் பாண்டியன் அகில் தெரு என்று ஒன்று உண்டு. இது அகழித் தெரு. நாயக்கர்கள் அகழியினின்றும் வேறுபடுத்திக் காட்ட, இதைப் பாண்டியன் அகழி என்றார்கள். அதை மூடிவிட்டு அகழித்தெரு ஆக்கினார்கள். மேற்குப் பக்கம் இருப்பது மேலப் பாண்டியன் அகில் தெரு. இதே போல் மற்ற பக்கங்களிலும் இருந்த தெருக்கள் இப்போது வெவ்வேறு பெயர்களைச் சுமந்து நிற்கின்றன. பாண்டியன் அகழியைத் தூர்த்து அகலமாக்கியவர்கள் அந்தத் தெருக்களை மாசிவீதி என்றனர். இந்த நான்கு மாசிவீதிகளைச் சுற்றிலும் வெளிப்பக்கம் நாயக்கர்கள் கோட்டை இருந்தது. நாயக்கர்கள் வீழ்ச்சிக்குப் பின்னர், மதுரை ஆங்கிலேயர் வசம் வந்தபின்னர், மதுரையின் கலெக்டர் நாயக்கர் கோட்டைகளை இடித்து, அவற்றின் அகழிகளை மூடித் தெருக்கள் உண்டாக்கினார். இவையே இன்று வெளிவீதி எனப்படுகின்றன. இதைச் செய்தவர்கள் மாரட்டு என்ற வெள்ளைக்காரப் பொறியாளரும், பெருமாள் மேஸ்திரி எனப்படும் கொத்தனாரும் தான். கோட்டைச் சுவர் இருந்த பகுதி தெருக்களாக்கப்பட்டு மாரட்டு வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி என மதுரையின் நான்கு பக்கங்களிலும் இன்றைக்கும் இருக்கின்றன.
மேலக் கோபுரத் தெருவழியே வெளியே நேரே சென்றால் மேலவெளிவீதிக்கு வருவோம். அதற்கு அப்புறம் மதுரை புகைவண்டி நிலையம் இருக்கிறது. மதுரைக்குப் புகைவண்டித் தடம் போடப்படுவதற்கு முன்னர் மேலக்கோபுரத்தெரு நேராக நிலையத்துக் குறுக்காகச் சென்று வெளியூர்களுக்குப் போகும். புகைவண்டி நிலையத்தை அடுத்து மூலையில் இன்று Madura coats எனப்படும் நூற்பாலை இருக்கிறது. அதனுடைய மூலப் பெயர் ஹார்வி மில்ஸ். இந்த ஆலையை அமைக்க வாணம் தோண்டியபோது அங்கே ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. எனவே அங்கு யவனர் குடியிருப்பு அல்லது வணிக வளாகம் இருந்திருக்கவேண்டும்.
நக்கீரரின் நடைப்பயணத்தின்போது இவற்றையெல்லாம் பார்க்கப்போகிறோம். மதுரைக்காரர்களுக்கு இது மனப்பாடமாய்த் தெரிந்த செய்தி. மற்றவர்களுக்காக ஒரு முன்னோட்டம்.
இந்த முன்னோட்டம் இந்த அளவுக்கு இப்போதைக்குப் போதும். இன்னும் வரும் – தேவைப்படும்போது.
அடுத்து 5-ஆம் தேதி நமது பயணத்தின் முதல் கட்டம். ஆயத்தமாகுங்கள்.
கீழே நினைவில் இருத்திக்கொள்ளவேண்டிய இரண்டு படங்கள்.
நெடுநாளைக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கொவில் என்று இன்று அழைக்கப்படும் கோவிலுக்கு முக்கிய கிழக்கு வாசல் எங்கு இருக்கிறது பார்த்தீர்களா?
கீழே: மதுரை – ரயிலுக்கு முன் – ரயிலுக்குப் பின்
முதல் படம்:
ஆங்கிலேயர்கள் சிதிலமடைந்த நாயக்கர் கோட்டையை இடிப்பதற்கு முந்தைய படம் (ஆண்டு 1763). நகரைச் சுற்றிக் காண்பது நாயக்கர் கோட்டை. ஆற்றைக் கடந்து மதுரைக்குள் நுழையும் வழி எங்கே இருக்கிறது கவனித்தீர்களா? புகைவண்டிப் பாதை போடப்படாத காலம். இன்று புகைவண்டி நிலையம் இருக்குமிடம் பெரிய தோப்பு. மேலவாசலிலிருந்து அரசரடி போய், இடதுபக்கம் திரும்பி, நேரே கோச்சடை செல்லும் சாலை அன்றும் இருந்திருக்கிறது.
நமது பயணத்துக்கு இதெல்லாம் தேவை.
நெடுநல்வாடை
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் வழங்கியது.
போர்மேல் சென்றிருக்கும் தலைவனின் பிரிவினால் துயருற்று வருந்தும் தலைவியை ஆற்றுவிக்க, அவளின் தோழி “தலைவனுக்கு வெற்றி கிட்டி அவன் விரைவில் வீடு திரும்பவேண்டும்” என்று கொற்றவையை வேண்டிக் கூறிய தோழியின் கூற்றாக இப் பாடல் அமைந்துள்ளது. எனவே இது அகத்திணையுள் பாலைத்திணைப் பாடல் ஆயிற்று.
பாடல் தலைவனைப் பற்றிக் கூறும்போது, அவனது வேலின் தலையில் வேம்பு மாலை சூட்டியிருப்பதாகத் தோழி கூறுகிறாள். வேம்பு பாண்டிய மன்னர்களுக்கு உரியது. எனவே, இப்பாடல் பாண்டிய மன்னனின் வெற்றிக்காகப் பாடப்பட்டது என்ற வகையில் புறப்பொருளில் வாகைத்திணையின்பாற்படும். அந்தப் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் ஆவான். எனவே தலைவி பாண்டிமாதேவி ஆகிறாள். அவளது இருப்பிடம் பாண்டிய மன்னனின் அரண்மனையைச் சேர்ந்த அந்தப்புரம் ஆகிறது.
கூதிர்காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்புரத்தில் தூக்கம் வராமல் துயருற்றுப் படுத்துக்கிடக்கும் அரசியின் நிலையையும், அதே நேரத்தில் துயில் கொள்ளாது வீரர்களின் பாசறைகளைப் பார்வையிட்டு வரும் அரசனின் நிலையையும் இரண்டு ஒப்புமைக் காட்சிகளாகப் புலவர் படைத்திருக்கிறார். 188 அடிகள் கொண்ட இப் பாடலில் 167¾ அடிகள் தலைவியின் நிலையையும், மீதி 20¼ அடிகளில் பாசறைப் பாண்டியனின் நிலையையும் புலவர் வருணிக்கிறார். இதில் தலைவிக்காகப் புலவர் கொண்ட அடிகள் 12-தான். தலைவி படுக்கையில் மலரணையில் புனையா ஓவியம் போலச் சாய்ந்திருக்கிறாள். பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டிலாகிய அந்தக் கட்டில், அந்தப்புரத்தின் உள்ளே படுக்கை அறையில் இருக்கிறது. கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் ஆகிய அந்த அந்தப்புரம் திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின் அரண்மனைக்குச் சற்று அயலே இருக்கிறது. அந்த அரண்மனை குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயிலுக்குள் இருக்கிறது. வாயிலுக்கு வெளியே மதுரை மக்கள் அன்றைய பகல் முழுக்க விட்டுவிட்டுப் பெய்த மழையால் குளிரில் நடுங்கிக்கொண்டே இரவுத் தூக்கத்துக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் மாலையில் தங்கள் அருகே தேறல் மாந்தி மதுரையின் வெளிவீதிகளில் வேண்டுவயின் திரிதரும் முழுவலி மாக்களை விட்டு விலகிப்போய், வேறோரிடத்தில் நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது மாலை அயர்ந்துவிட்டார்கள். இந்த மாடம் ஓங்கிய மல்லல் மதுரை வயல்களாலும் தோப்புகளாலும் சூழப்பட்டது. இந்த நளிகொள் சிமைய விரவுமலர் வியன் சோலைகளுக்கும் அப்பால் முசுண்டையும் பீரமும் பூத்துச் சிரிக்கும். நாரையும் கொக்கும் அறல் எதிரும் கயல்களை மென்பறையாய்ப் பறந்து எவ்வாயும் கவர்ந்து திரியும். அவற்றுக்கும் அப்பால் ஆநிரைகள் குளிரால் மேயவும் மறந்து நிற்கும். அவற்றை மேய்க்கும் கோவலர்கள் விடியும் முன்னர் குளிர்காய்ந்து, பற்கள் பறைகொட்ட நொந்துபோயிருப்பர். காரணம் – மழை, மழை, மழை.
நண்பர்களே!
ஒரு ஹெலிகாப்டரில் ஏறிச் சென்று, முதலில் ஒரு போர்க்களப் பாசறை நள்ளிரவுக் காட்சியைப் பார்த்தோம். அதன் பின்னர், அந்த ஹெலிகாப்டர் சடுதியில் ஓர் அரண்மனைக்கு வந்து அங்கு அந்தப்புறத்திலிருக்கும் ஓர் அரசியைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழலவிட்டு, பல இடங்களை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் (bird’s eye view) பார்க்கவிட்டு, ஒரு மலைச் சரிவில் நம்மை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டது. இதுவும் நள்ளிரவுதான். ஆம், ஒரு நாள் முழுக்கப் பறந்திருக்கிறோம். இனித் திரும்பிச் செல்ல எத்தனை நாள் ஆகுமோ? பயப்படவேண்டாம். ஒரே நாளில் கடந்துவிடலாம். வழி தெரியுமா? அச்சமே தேவை இல்லை. நமக்குத் துணைக்கு ஒரு பெரியவர் இருக்கிறார் – இந்த நடைப்பயணத்தில் நம்மை நடத்திச் செல்ல. அவர் தமிழறிந்த பெரும் புலவர். தமிழ்ச்சங்கத் தலைவர். நக்கீரன் S/O கணக்காயன் என்பது அவர் பெயர். தூய தமிழில், மரியாதைப் பன்மையில், கணக்காயனார் மகனார் நக்கீரனார். இதோ நக்கீரருடன் நம் நடைப் பயணம் ஆரம்பிக்கிறது.
- தொடரும் மார்ச் 5
From: Pandiyaraja <pipi...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Sent: Friday, March 1, 2013 1:56 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்
மிக்க நன்றி திரு.செல்வா. தங்களின் அப்பழுக்கற்ற ஆழ்ந்த தமிழ்ப்பற்றுக்கு என் தலைசாய்த்த வணக்கம். தாங்கள் இந்தத் தளத்தின் மட்டுறுத்துநர். மட்டுறுத்தத் தங்களுக்குத் உரிமை உண்டு. 'அந்த' மாதிரி சொற்கள் இல்லாமல் என்னால் எழுத முடியும். எனினும் நான் வேண்டுமென்றே அவ்வாறு எழுதுவது இல்லை. எனக்கு இயல்பாக வருவதை அப்படியே எழுதுகிறேன். ஆனால், ... வேண்டாம், இதில் யாருக்கேனும் வருத்தம் இருந்தால், நான் இனிமேல் அத்தகைய சொற்களைத் தவிர்த்துவிடுகிறேன். ஒரு கடிதத்தில் தூய பவுல் அடியார் கூறுவார், "உன்னுடைய வெளிப்பாடுகள் முக்கியம் இல்லை. நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உன்னுடைய வெளிப்பாடுகள் உன் அருகிலிருப்போருக்கு உறுத்தலாய் இருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடு".நன்றி,ப.பாண்டியராஜா
அன்புள்ள செல்வா அவர்களுக்கு,நான் தவறாக எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் உறுப்பினராயுள்ள cTamil குழுமத்தில் எனக்கு வந்த நகல் மடல் ஒன்று - . Prof.George Hart எழுதியது. "tholkAppiyam is mostly a descriotive rather than a prescriptive one but after some time it has been made a prescriptive one". எனினும் என்னைப் பொருத்தவரையில், இதற்கு ஏற்பு - மறுப்புக் கூற்றுகள் தேவையில்லை. அவரவர் உணர்வுகள்தான் முக்கியம். உங்கள் உணர்வுகளை நான் பெருமளவு மதிக்கிறேன்.நன்றி,P.Pandiyaraja
வணக்கம். இரண்டு எண்ணங்கள்.1. பறவைகளின் கால் விரல்கள் குளிரில் மரத்துப்போய் பிடி விலகிக் கீழே விழுந்தன என்பது கொஞ்சம் அதிகம் போலத் தோன்றுகிறது.
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக்மா, மேயல் மறப்ப, மந்தி கூர, பறவை, படிவன வீழ.
நம்ம ஊர் மழைக்கே இந்தப் பாடாம். :)
அன்புடையீர்,நமது பயணத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.நன்றி,ப.பாண்டியராஜா
மொத்தத் தமிழகமே இன்றைக்குக் கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இலக்கிய இன்பம் பற்றிப் பேசும் மனநிலையில் நான் இல்லை. இந்த எழுச்சி நிறை போராட்டம் மென்மேலும் வலுப்பெறவேண்டும் - நல் வழிப்பட வேண்டும் - நல் முடிவு எட்டும் வரை நல் உறுதியுடன் நிற்கவேண்டும் - என்ற தவிப்புடன் கைகளைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் சூழ்நிலையில் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ தூண்டுதல் இல்லாத நிலையில், நெடும்பயணத்தைச் சிறிது காலம் நிறுத்தி வைத்திருக்கிறேன்.அன்புடன்,ப.பாண்டியராஜா
On Monday, March 11, 2013 5:19:32 AM UTC+5:30, வேந்தன் அரசு wrote:
காட்சிப்படுத்தியது மிக அருமை
புலம்பு எனும் சொல்லுக்கு தனிமை தரும் வருத்தம் எனும் பொருள் பொருந்தும்.தலவனை பிறந்த தலைவிக்கும் புலம்பு.10 மார்ச், 2013 7:12 AM அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:
அன்புடையீர்,நமது பயணத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.நன்றி,ப.பாண்டியராஜா--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இந்தப் பகுதி எனக்கும் பிடித்தது. மேற்கொண்டு சில கருத்துகளை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.இப்படிக்கு,ராஜம்
On Apr 20, 2013, at 7:07 PM, C.R. Selvakumar wrote:
அன்புள்ள ஐயா,மிக அருமை! மிகவும் சிறப்பான படங்களுடன், உங்களுக்கெ உரித்தானஎளிமையான நன்னடையில் செறிவான கருத்துகளடன் மிக அருமையாக விளக்கிஎழுதி இருக்கின்றீர்கள். இருகோட்டு அறுவை பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.முழுவலி மாக்கள் என்று குறிப்பிடப்படுவர் யவனர் (உரோமானியர்) என்னும்உங்கள் விளக்கம் அருமை. யவனர் என்னும் சொல்லாட்சியைக் கிரேக்கர்(இயோனியர் ionians) என்றும் அராபியர் என்றும் பலவாறு கேள்விப்பட்டிருக்கின்றேன்.பொதுவாக மேற்கு உலக மாந்தர்களை யவனர்கள் என்றனரா? என்றெல்லாம்ஐயுற்றிருக்கின்றேன். இந்த நெடுநல்வாடையில் உரோமானியரைத்தான்குறிப்பிடுகின்றார்கள் என்பது தெளிவு.
நன்றி
அன்புடன்செல்வா
அன்புடையீர்,இத்துடன் பயணம் -4 -க்கான கட்டுரை இணைத்து அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இந்தத் தவணைக்காக நிறைய வலைத்தளத் தேடல்கள் தேவைப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.படித்தவர்கள் தங்கள் பின்னூட்டங்களை இட்டால், என்னுடைய ஆய்வுக்கு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.மிக்க நன்றி,ப.பாண்டியராஜா
--
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
1) வாடை துவக்கத்தில் "ஏறுடை நிரை" மேய்ச்சலில்
இருக்கும் காட்சியும், பின்னர் அது கடுமழையால்
புலம் பெயர்கின்ற காட்சியும் வருகின்றன.
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கி –
என்ற அடிகளுக்கு உரைகள் இவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. இங்கே புலம்பெயர் புலம்பொடு என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். மாடுகளைக் கிடைபோடுவதற்காக அவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து (தமது ஊரை விட்டு) வெகுதொலைவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் புலம்பு – தனிமையால் அவர்கள் கலங்கியிருக்கிறார்கள். அதோடு இப்பொழுது பெய்கின்ற மழையாலும் இப்போது வேறு புலம் செல்லநேரிட்டதால் மிகவும் கலங்கி என்ற பொருள்தான் நான் கொள்வது. வேறுபுலம் பரப்பி என்பதிலேயே புலம்பெயர்தல் அடங்கிவிடுகிறது. மீண்டும் புலம்பெயர் புலம்பு என்று சொல்லவேண்டிய தேவை இல்லை. வேறுபுலம் என்பதில் உள்ள புலம் இப்போதுள்ள மேய்ச்சல் புலம். புலம்பெயர் என்பதில் உள்ள புலம் அவர்கள் வாழும் ஊர். புலம்பு என்பதற்கு துயரம் என்பதைக் காட்டிலும் தனிமைத்துயரம் என்பதுவே பொருந்தும் புலம்பு என்பதுவே தனிமையைக் குறிக்கும். மலையில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கும் போவது எப்படிப் புலம்பு ஆகும்? எனவே அது ஊரைவிட்டு வந்த புலம்புதான். அந்தப் புலம்பொடு இப்பொழுது வேறுபுலம் பரப்புதலும் சேர்ந்துகொண்டது.
அத்துடன்
மேய்ச்சலுக்காகவே புலம் பெயர்ந்து ஊரை விட்டு வந்த நிரைகள்+இடையர்கள் காட்சியையும் தருகின்றது.
வாடையின் காலம் ஐப்பசி மாதத் துவக்கத்தைக்
குறிப்பதையும், தற்போது குறுவைச் சாகுபடி
என்று நாம் சொல்கின்ற பருவத்தை ஒத்து இருக்கிற
காட்சியையும் காணமுடிகிறது.
(வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க).
ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் மேய்ச்சலுக்காக
நிரைக்கூட்டம் செல்ல வேண்டிய தேவை என்ன?
இப்படி வெள்ளாமை நிறைந்து இருக்கும் பருவத்தே
மேய்ச்சல் ஆகக்கூடியதா? வேளாளர் மேய்ச்சலை
அனுமதிப்பார்களா?
அதுவும், *புலம் பெயர்ந்து* இடையர்கள் கிடை போட்டு
மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டிய காரணம் என்ன?
மருத நிலப் பகுதியில், (அது குறிஞ்சியை ஒட்டி இருந்தாலும்)
பெருவாரியான மேய்ச்சல் என்பது தை அறுவடைக்குப் பின்னர்
தொடங்கி மாசி, பங்குனி, சித்திரை, ஆனி வரை போகும்.
இங்கே காட்டப் படுகின்ற மேய்ச்சல் எவ்வகையான பொருளியல்
காரணம் உடையது என்பதை எண்ணித் தோன்றிய தேட்டம் இவை.
தங்கள் கருத்தறிய ஆவல்.
நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரைக்கு மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சின்னமனூர் அருகே இருக்கும் ஓடைப்பட்டி என்ற சிறிய கிராமம். அங்கு முல்லை நில வாழ்க்கைதான். கிணறுதோண்டிக் கமலை வைத்து நீர் இறைத்துச் வெள்ளைச்சோளம், மிளகாய் போன்றவை பயிர்செய்வார்கள். ஆனால் ஊருக்குக் கிழக்கே வானம்பார்த்த பூமிதான். சுமார் இரண்டு மைல் தொலைவில் மலை உண்டு. மலை அடிவாரம் வரை காட்டு வெள்ளாமையில், கடலை, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவை பயிர்செய்வார்கள். எனவே உரத்துக்கு நிறையச் சாணம் தேவைப்படும். பணக்காரர்கள் தொழுக்கள் கட்டிப் பசுமாடுகள் வளர்ப்பார்கள் – கூடவே ஒன்றிரண்டு காளைமாடுகளும் இருக்கும் -(ஏறுடை இன நிரை). இந்தத் தொழுக்கள் ஊரை ஒட்டி இருக்கும். காலையில் வேலைக்காரர்கள் இந்த மாடுகளை (சுமார் நூறு இருக்கும்) அருகிலிருக்கும் மலைக்கு ஓட்டிச் செல்வார்கள் – தம்பிரான் ஊற்று என்று பெயர். மாலையில் திரும்பவும் மாடுகள் மொத்தமாகத் தம் கழுத்துமணிகளை ஆட்டிக்கொண்டு ஊர் திரும்பும் – முல்லைப்பாட்டு இடைப்பெண் – ‘இன்னே வருகுவர் தாயர்’ – படிக்கும்போது எனக்கு அக் காட்சி நினைவுக்கு வரும். இவ்வாறு தை முதல் ஆனி வரை – 6 மாதங்கள் - நடைபெறும். ஆடி தொடங்கியவுடன் காட்டு வெள்ளாமை தொடங்கிவிடும். அப்புறம் மாடுகள் இந்த முல்லைக்காடுகள் வழியே மலைக்குச் செல்லமுடியாது. எனவே ஆடி முதல் மார்கழி முடிய மாடுகள் மலையிலேயே தங்கிவிடும். இதனையே ‘கிடை போடுதல்’ என்பார்கள். மாட்டு இடையர்களும் மாடுகளுடன் தங்கிவிடுவர் – புலம்பெயர் புலம்பு என்பது இதனையே குறிக்கிறது என்பது என் கருத்து. எனவே கூதிரின் தொடக்கமாகிய ஐப்பசியில் கோவலர்கள் மலையில்தான் கிடைபோட்டு இருப்பர்.
இது எனது சொந்தப் பட்டறிவு. ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால்தான் இந்தப் பேரிலக்கியங்களை நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது – இதற்காகப் பலமுறை நான் இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம்.
மதுரை நகர் அருகில் இத்தகைய பழக்கம் இருந்திருக்கும். அது எந்தக் காலத்தில் நடைபெறும் என்று விராட்டிபத்து, கோச்சடை, துவரிமான் பகுதிகளின் பெரியவர்களைச் சந்தித்துத் தகவல் பெற ஆவல். மிக வயதானவர்களுக்கே இது தெரியும். சீக்கிரம் செய்யவேண்டும். நண்பர் உதயன் போன்றவர்களின் உதவியைக் கேட்டுள்ளேன். இந்த முறை மதுரை சென்றிருந்தபோது அடித்த அக்கினி நட்சத்திர வெயிலின் கொடுமையைத் தாங்கமுடியாமல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் தலைகாட்டமுடியவில்லை.
என்னுடைய கருத்து – மதுரையை ஒட்டிய நாகமலைத் தொடரின் வடக்குச் சரிவில்தான் நெடுநல்வாடை குறிப்பிடும் கிடை போடப்பட்டிருக்கவேண்டும். மதுரையின் புறநகர் ஆயர்களும், மதுரையைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களின் ஆயர்களும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் கிடை போட்டிருக்கலாம்.
திரு.இளங்கோவன், தங்களுடைய இந்தப் பகுதி கேள்விகள் அனைத்துக்கும் இது பதிலாய் அமையும் என நினைக்கிறேன்.
2) மழை பொழிகிறது. கடுங்குளிர்.
கோவலர் என்பது இடையரைக் குறிக்குமானால்,
அவர்கள் நிரைக்கூட்டத்தை புலம் பெயர்க்கிறார்கள்.
இங்கே ஏன் நக்கீரர் "கொடுங்கோல்" என்ற சொல்லாட்சியைப்
பயன்படுத்துகிறார்? மாட்டுக் கூட்டத்தை மேய்ப்பவர்கள்
கோல் வைத்திருப்பார்கள். அது நீளமானதாகவும் இருக்கும்.
ஆனால் அதனைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
மாடுகளைக் காக்கப் புலம் பெயர்க்கும் இடையரின் கோல் கொடும் கோலாகச்
சொல்லப் படவேண்டியதன் தேவை என்ன என்றும் மனம் தேடுகிறது.
மாட்டு இடையர்கள் நீண்ட கழியை வைத்திருப்பர். அதன் தலைப்பகுதி வளைவாக இருக்கும். அதனால் உயரமான மரங்களின் கிளைகளை வளைத்து இலைதழைகளை இணுங்கிப்போட்டு மாடுகளுக்கு இரையாகப் போடுவர். அதுவே கொடுங்கோல் (கொடும் = வளைவான) எனப்படுகிறது என்பது என் கருத்து. சமயத்தில் மாடுகளை அச்சுறுத்தவும், மறித்து வழிநடத்தவும் இது பயன்படுத்தப்படும். அதனாலும் கொடுங்கோல் எனப்பட்டது என்பர் உரையாசிரியர் (கொடும் = கொடிய). முல்லைப்பாட்டும் கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர – 15 என மாட்டு இடையர்களைப் பற்றிக் கூறுவதைக் கவனிக்க.
3) முழுவலி மாக்கள் என்பது நன்கு தின்று, பயிற்சி செய்து மறமேறிய
உடலமைப்பு கொண்டவர்களைச் சொல்வதாகவே இருக்கிறது.
முழுவலி என்பது யாரிடமும் இருக்கலாம். பலவான்களைக் (பயில்வான்?)
குறிக்கிற சொல்லாக மட்டுமே தெரிகிறது. உரோமானியர்களின் காசு
அந்த இடத்தில் கிடைத்தது என்பதற்காக அந்த முழுவலி மாக்கள் உரோமானியர்களாக
இருப்பார்கள் என்று கருதுவது கடினம் என்றே தோன்றுகிறது.
------------------ ------------------- வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் –
என்ற முல்லைப்பாட்டு அடிகளை (60,61) நினைவுகூருங்கள்.
இந்த ‘முழுவலி’ என்பது யவனருக்கே உரித்தானது என்று நான் கூறவில்லை. தமிழரிலும் நல்ல உடற்கட்டு மிக்கவர்கள் அன்று இருந்திருப்பர். அந்த முழுப் பகுதியின் ஒட்டுமொத்தப் பொருளைக் கூர்ந்து நோக்கும்போது இவர்கள் யவனராகலாம் என்பது என் கருத்து.
ஏனெனில் இருகோட்டு அறுவை என்ற அந்த உடுப்பு விளக்கம் சற்று பொருந்தவில்லையோ
என்றே கருதுகிறேன். முழுவலி மாக்களின் பயன்பாடு முகன்மையாக காவல், அரணம்,
அடியாள், மெய்க்காப்பாளர் போன்ற பணிகளுக்காகவே. அப்படியான காவற் பணியில்
இருப்பவர்கள் 20 அடி நீள உடுப்பை உடுத்தியிருப்பார்கள் என்று எண்ணுவது சற்று
கடினமாக இருக்கிறது. தடுக்காத, பணிக்கு இடையூறு இல்லாத, இழுத்துக் கட்டிய உடுப்பே காவலர் உடுப்பு.அதனால் அந்த நீள உடுப்பு முழுவலி மாக்களுக்குப் பொருந்தவில்லை என்று
கருதுகிறேன். இதில், அம்மா இராசம் அவர்களின் கருத்தோடும் எனக்கும் ஒப்புமை உண்டு. தங்கள் விளக்கத்தையும் பார்த்தேன்.
வணிகத்துக்காக வந்த யவனர்கள் தங்களுடன் காவலுக்கு யவன வீரர்களையும் அழைத்துவந்திருக்கலாம். எனவே வணிக யவனர்களும், யவனப் போர்வீரர்களும் தங்கும் பகுதியாக அது இருந்திருக்கலாம். அந்த வணிகர்கள் சாதாரண உடையே (civil dress) அணிந்திருப்பர். இந்த நெடுநல்வாடை யவனர்கள் வணிகர்களாக இருந்திருக்கலாம். மேலும் போர்வீரர்கள் தங்கள் சீருடையில் எப்போதும் இருந்திருக்கமுடியாது. காவல் காக்கும் நேரத்தில் சீருடையில் இருந்திருக்கலாம்.
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் – முல்: 59-61
என்ற முல்லைவரிகள் அரசனின் போர்க்களத்தில் பணியாற்றிய யவனர்களைப் பற்றிக் கூறுகிறது. இதுதான் அவர்களின் பணிக்கான சீருடை. ஆனால் நெடுநல்வாடை யவனர்கள் அன்றைய மாலைநேரத்தில் பணியில் இருக்கவில்லை. குடித்து வெறித்து இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்ணி - தலைமாலை (head wreath) அணிந்து, சாதாரண உடையில் இருந்திருக்கிறார்கள். அதுதான் இருகோட்டு அறுவையர் எனச் சிறப்பாக நம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நக்கீரரால் சொல்லப்படுகிறது என்பது என் கருத்து. இருகோட்டு அறுவையர் என்ற தொடர் அவர்களைத் தமிழரினின்றும் வேறுபடுத்திக்காட்டவே நக்கீரரால் தெரிவுசெய்யப்பட்டு அழுத்தமாகக் குறிக்கப்படுகிறது என்பது என் கருத்து. அதற்குரிய சரியான படம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் விளக்கத்தைக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.
அடுத்து இந்த முழுவலிமாக்கள் ஏன் தமிழராக இருக்கமுடியாது என்று கேட்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த யவனர்களின் குடியிருப்பு இன்றைய Madura coats ஆலை அருகே இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதன் வழியாகத்தான் நக்கீரர் நம்மை மதுரை நகருக்குள் அழைத்துச் செல்கிறார். 18-ஆம் நூற்றாண்டு மதுரைப் படத்தில் இதனைக் காணலாம். இந்த ஆலைக்கு மிக அருகில் இருப்பது கரிமேடு என்ற பகுதி. மிகவும் துடிப்பான, வீரம் மிக்க, போர்மறத்துக்கு அஞ்சாத மக்கள் இவர்கள். இவர்கள் ஆலைக்காக அங்கு பின்னாளில் குடியமர்த்தப்பட்டவர்களா, தொன்றுதொட்டு இருப்பவர்களா என ஆயவேண்டும். தொன்றுதொட்டு இருப்பவர்களாயின் இந்தக் கரிமேட்டுக்காரர்கள் நக்கீரரின் முழுவலி மாக்களாக இருக்கலாம். இப்பகுதி கவனமாக ஆயப்படவேண்டியது.
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
மிக்க நன்றி ஐயா!
//படலைக் கண்ணி பரேர் எறுழ்த் திணி தோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
//
ஐயா, இன்னோர் ஐயம்.
படலைக் கண்ணி என்பது "பரந்த பார்வையையுடைய" - அதாவது
காவலாளி என்ற பொறுப்பில், காவல் நோக்கில் அங்கும் இங்கும்
அகண்டு விழிப்புடன் பார்க்கும் பார்வையை யுடைய தோள் வலி மிகுந்து
முறுக்கேறிய உடலினைக் கொண்ட முழுவலி மாக்கள்
என்று பொருள் கொள்ள ஏலுமா?
படலை என்பது ‘பரந்த’ என்ற பொருள் தருமா? கண்ணி என்பது பார்வை என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளதா?
பெரும்பாணாற்றுப்படை அடிகளைக் காண்க:
கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்ப – 59 – 63
நக்கீரரின் அதே அடிகள்! இங்குக் கூறப்படுவோர், உமணரின் உப்புவண்டிகளின் தொடருக்குப் (caravan) பக்கவாட்டில் நடந்துசென்றவண்ணம் காவல் காத்துச் செல்கின்றனர். இவர்கள் அணிந்திருந்த ஆடை பற்றிய குறிப்பு இங்கு இல்லை. இவர்களும் யவனர்களா அல்லது இவர்கள் நம்மவர்களா – தெரியவில்லை. எனவேதான் இதனை நான் என் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லை.
அடுத்து,
கோட்டவும் கொடியவும் விரைஇக், காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஒன்றமர் உடுக்கைக் கூழ் ஆர் இடையன் – பெரும்: 173-175
என்ற அடிகளிலும் படலைக் கண்ணியைப் பார்க்கலாம். இவர்கள் நம் ஊர் இடையர்கள். கூழ் குடிப்பவர்கள் - வண்டு மூசு தேறல் அல்ல. ஒன்று அமர் உடுக்கையர்கள் – இருகோட்டு அறுவையர் அல்லர்.
இந்த மூன்று இடங்களைத் தவிர படலைக் கண்ணி சங்க இலக்கியங்களில் வேறு பாடல்களில் காணப்படவில்லை. படலை உண்டு – கண்ணியும் உண்டு – ஆனால் படலைக் கண்ணி இந்த மூன்றும்தான்.
இந்த இரண்டு அடிகளில் சொல்லப் படுபவர்களும்,
இதற்கு அடுத்த அடிகளில் சொல்லப்படுபவர்களும் (தேறல் மாந்தி...)
வேறு வேறு வகையானவர்களோ என்ற ஐயத்தில் இத்தேட்டம்!
இது ஒரே தொடர்தான் என்பது என் கருத்து. முழுவலி மாக்கள் – தேறல் மாந்தி – தண்துளி பேணார் – வேண்டுவயின் திரிதர – என்பது ஒரே தொடர்தான் அன்றோ. ஒரு தொடர்ச்சி இங்கு காணப்படுவதைக் கவனிக்க. எனினும் தங்களின் தேட்டம் வேறு பொருள் தந்தால் நல்லது – ஒரு புதிய பொருள் கொடுக்கும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
மிக்க நன்றி நாக.இளங்கோவன் அவர்களே!
அன்புடன்,
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்புடையீர்,இத்துடன் பயணம் -4 -க்கான கட்டுரை இணைத்து அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இந்தத் தவணைக்காக நிறைய வலைத்தளத் தேடல்கள் தேவைப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.படித்தவர்கள் தங்கள் பின்னூட்டங்களை இட்டால், என்னுடைய ஆய்வுக்கு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.மிக்க நன்றி,ப.பாண்டியராஜா
அன்புடையீர்,இத்துடன் பயணம்-6-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.நன்றி,அன்புடன்,ப.பாண்டியராஜா
<பயணம்-6.pdf><பயணம்-6.doc>
2. To be laid prostrate, overcome, as with pity;
மனமழிதல். கையற் றின்ன லெய்தலும் (ஞானா. 31, 22).
இன்னும் பல தொடர்கின்றன. ஆனால் இந்த இடத்தில் பொருந்துவன இந்த இரண்டுமே. இரண்டுக்கும் ஆங்கிலத்தில் ஒரே சொற்றொடர் கொடுக்கப்பட்டுள்ளது தட்டச்சுப் பிழை போல் தோன்றுகிறது. ஆனால் தமிழில் கொடுக்கப்பட்ட பொருள்கள் சரியாகத் தோன்றுகின்றன. முதலில் இருக்கும் பொருள் ஒரு State of the body. அடுத்த பொருள் state of the mind.
தேறா நெஞ்சம் கையறுபு வாட - நற்.345/8
கையறு நெஞ்சிற்கு உயவு துணையாக - ஐங்.477/3.
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் - கலித்.103/10
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க - அகம் 113/22
கையறு நெஞ்சினள் அடைதரும் - அகம் 279/16
போன்ற பயன்பாடுகள் கையறுநிலை என்பது ஓர் மனநிலை என்றும் வலியுறுத்துகின்றன.
இரண்டாவது பொருளை எடுத்துக்கொண்டால், மனம் செயலிழந்துபோனாலும் உடல் வழக்கமான செயல்களைச் - by reflex action - An automatic instinctive unlearned reaction - செய்துகொண்டுதான் இருக்கும். இந்த மனநிலையில் வேறு ஒன்றும் செய்யத் தெரியாத நிலை என்று கூறலாம். பாரி இறந்தவுடன் கலங்கிக் கையற்றுப்போன கபிலர் கூறுகிறார்:
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும்! வாழியோ! பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. ( புறம் 113:5-9
எனவே, கலங்கிக் கையற்ற கபிலர் கைகாலை முடக்கிப் படுக்கவில்லை.
பழனுடைப் பெருமரம் தீர்ந்தென கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல - புறம்: 209:9,10
கனி கிடைக்காமல் கையற்ற பறவைகள் துவண்டுபோய்விடவில்லை - இன்னும் தொலைவு நோக்கிப் பறக்கின்றன.
கையறு என்ற சொல்லை அடியாகக் கொண்ட 7 சொற்கள் மொத்தம் 52 முறை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெருவாரியான இடங்களில் உரைகளில் செயலற்று வருந்த என்ற பொருளைத்தான் தருகின்றன.
எனவே மதுரை மாளிகை மதலைகளில் பள்ளிகொண்டுள்ள புறவுகள் இரவும் பகலும் மயங்கிக் கையற்று, மதலைப் பள்ளிகளில் மாறிமாறி அமர்கின்றன என்று நான் கொண்ட பொருள் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. இதற்கு, நச்சினார்க்கினியர், பெருமழைப் புலவர் ஆகியோர் கொண்ட பொருள் இங்கு பொருந்தாது என்பது என் கருத்து.
>> பயணம் 6 பற்றிச் சில கருத்துகளை முன்வைக்க விருப்பம். இப்போது கொஞ்சம் 'வசக்கேடு. (== சுகமில்லை).' கூடிய விரைவில் மீண்டும் வருகிறேன்.
தங்களுக்கு மீண்டும் நல்ல சுகம் கிட்ட இறைவனை வேண்டுகிறேன். அந்தக் 'கூடிய விரைவில்' என்பது எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

...ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் மேய்ச்சலுக்காக</di
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
அன்புடையீர்,இத்துடன் பயணம்-9-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.அன்புடன்,ப.பாண்டியராஜா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.