
யகரம் சகரமாகவும் திரியும். அந்த வகையில் யா > சா என்று திருந்துள்ளது. யால் > சால் என ஒரு நெடு மரம் அழைக்கப்படுகிறது. சால் > சான்றோர் என்றால் உயர்ந்தோர். சால என்றால் பெரிய. சாலப்பெரும் பறையே என்று ஆண்டாள் பாடுகிறாள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5_ZMcaNRkaVZ2-CxHmi_LpYLXuXaqXJ-z7GRoEUAJWjQ%40mail.gmail.com.
அன்புள்ள சேசாத்திரி,
நீங்கள் பலப்பல பொருந்தாத கூற்றுகளை முன்வைக்கின்றீர்கள் என்று
தெரியவில்லை. அதாவது தாறுமாறாக கண்டபடி பொருள் கொள்கின்றீர்கள்.
உங்கள் கருத்துகள் செல்லாதன மட்டுமல்ல வெற்றுக் குழப்பம் உண்டாக்குவன.
கீழே உள்ளதைப் பாருங்கள்.
என்ன இந்தியில் இருந்தா தமிழ்ச்சொல் உடல் வந்தது?!
இதில் பொருத்தம் இல்லாததை உணரவில்லையா?
உடல், உடன், உடைய என்பன எவ்வளவு பழைய சொற்கள் என்பது
ஒருபுறம் இருக்க. நிமிர்ந்த என்று அங்கெல்லாம் பொருள்
வருமா?
யா என்பது பற்றி ப. அருளியார் ஒரு நூலே எழுதியுள்ளார்.
யா என்பதற்குப் பல பொருள்கள் இருந்தாலும்
யாக்கை என்பது கட்டுதல் என்னும் பொருளில் வந்ததென்பதைப்
பலரும் அறிவர். ஆனால் நீங்கள் கண்டமேனிக்கு பொருள்களை
உருவாக்கித் தாறுமாறாகத் தொடர்புபடுத்தி
தமிழின் வேரியல் சொற்பிறப்பியல் ஆய்வை மிகவும்
கொச்சைப் படுத்துகின்றீர்கள். ஒவ்வொன்றயும் மறுத்துரைத்தால்
மிகுந்த நேரம் விரயம் ஆகும்.
நீங்கள் பலவாறு சரியானவற்றையும்
தவறானவற்றையும் (இது அறியாமல் செய்வதன்று என்பது என்
உய்ப்பு) கண்டபடி கலந்து வேரியல் சொற்பிறப்பியலைக்
கொச்சைப் படுத்துகின்றீர்கள்.
செல்வா
//இந்தியில் உட் / உட்டோ (utto) என்றால் நிமிர்ந்து நிற்றல் என்று பொருள். utkatasana, uthkata konasana என்பதும் நின்று செய்வதால் அப்பெயர் பெற்றன. இந்த "உட்" என்ற வேர் நிமிர்ந்த, விறைத்த, நெடிய, எழுந்த ஆகிய பொருள் உடையது. உட் + அம்பு = உடம்பு, உட் +அல் = உடல் ஆகிய சொற்கள் நிமிர்ந்து நின்ற நிலையை குறிப்பது. இதே பொருளில் தான் படம் என்ற சொல் பாம்பின் படத்தையும் மனித உடலையும் குறிக்கும். மெய் > மேல் > மேனி ஆகியவும் உயர்ந்து நிமிர்ந்த (stiff erect) உடலையே குறிக்கும். "யா" என்றால் நெடிய என்ற பொருள் உண்டு. யா மரத்தை "நெடுநிலை யாஅம்" என்கிறது அக. 659:8. "யா" என்ற நெடுங் கருத்தைக் கொண்டு தான் யாக்கை என்ற உடலைக் குறிக்கும் சொல் உண்டானது. ஆனால் கண், காது, மூக்கு என பல உறுப்புகள் கூடியதால் உடல் யாக்கை எனப்பட்டதாக தவறாக வேர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
On Sun, Aug 6, 2023 at 3:22 PM Seshadri என்ன?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5YxQhD_OdjEquh1s2mU3-VATm4tTW4muPwCsVLHC%3D06Q%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7UaeU2zQD_eEptSONrFitC02rauA9Lk_n0aQ5rRWLiTA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7UaeU2zQD_eEptSONrFitC02rauA9Lk_n0aQ5rRWLiTA%40mail.gmail.com.
//நேரடியாக நெடுமைக் கருத்தில் "உல்" என்பதில் இருந்த பிறந்த சொல் உல்லி - உயர்ந்த மதில், ஒல்லியான ஆள், தலை; உலவ மரம் - இலவ மரம். மிக நெடிதாக வளர்ந்த இம்மரத்தை நான் கம்பம் சுருளி அருவி அருகே 100 அடி உயரம் கொண்டதாக பார்த்துள்ளேன். உலக்கை - நெடிய திரண்ட கம்பு. ஆனால் பாவாணர் அவசர அவசரமாக உல் > உருள் என்று கொண்டு உலக்கையின் அடி உருண்டு இருபத்தால் உலக்கை எனப்பட்டதாக தவறான பொருள் காட்டினார்.உய் > உயரம் - vertical //
பாவாணர் சொன்னது தவறாக இருக்கக்கூடாது என்றில்லை. அவர் "அவசர அவசரமாக"
என்றெல்லாம் சொன்னார் என்பது தவறான உள்வாங்கல். குறிப்பாக அவர்
உல் என்பதை மிக ஆழமாக அலசியிருக்கின்றார். உங்கள் உல்- நெடுமைக் கருத்தில் உலா, உலவு, உலாத்து போன்ற சொற்கள் எப்படி வரும்?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7dMLgiy8%3DoCisVSVSfYy_j%3D4ES7vLwTj5WT3Az39U8WvA%40mail.gmail.com.
அன்புள்ள சேசாத்திரி,
நான் பாவாணர், அருளியாரின் கூற்றுகளில் இருந்தும் முடிவுகளில் இருந்தும்
சில இடங்களில் மாறுபட்டுள்ளேன். நானோ என்னைப்
போன்றவர்கள் யாருமோ "வேத" வாக்காக எடுத்துக்கொள்வதில்லை.
"பொருள்" என்பது மிகவும் நுணுக்கமானது. வெற்றாக இது இதுதான்
என்று எதையாவது ஒன்றைக் கொண்டு முடிவுக்கு வருதல் கூடாது.
பொருள்கோண்மையைச் சரிவர உள்வாங்காதவர்கள் பாவாணரையோ
அருளியாரையோ படித்தால் அவர்கள் எப்படிப் பொருளை
உய்த்துணர்ந்து தொடர்புபடுத்தி தக்க சான்றுகளின் அடிப்படையில்
உறுதிப்படுத்தி முன் வைக்கின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் வலியவும் மெய்யுற பொருந்தாமலும் பொருள் கூறுகின்றீர்கள்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7d%3DcX1DvJJJEbj_bTeX5wfuq_XwNRYJbL-G26O-tbGPSg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6MbN8BiAjPGViBKpy_uYSC9iVyZG2kBkfeZn%2BHY_GNJA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5LiUD8w-bS%2BySaD%3D5FuZNGGdp%3D2P0J0vha2aCAE3egTg%40mail.gmail.com.
//உல்> உட் என்பதற்கு முதன் முதலாக நான் தான் நெடுமை கருத்தை சுட்டி யுள்ளேன் //
உள் > உண் > உட் ஆகும் ஆனால் உல் > உட் எப்படி ஆகும்?
உல் > உள் ?? உள் என்னும் கருத்து தமிழில் பேராழம் மிக்கது.
உணவு, உணர்வு, உள்ளம் உள்ளது உண்மை இப்படி மிக அடிப்படையான
சொற்களின் வேர்.

பேரா. அரசேந்திரன் உடல் என்பதற்குப் பொருள் காட்டியுள்ளார் என்று மெலிதாக
நினைவு. (உடல் உறுப்புகளைப் பற்றிய சிறு நூல் எழுதியுள்ளார்.
அதில் இருக்கலாம்).
உடல் என்பது உயிர் உடுத்தியுள்ள ஒன்று என்று கொள்ளலாம். ஆனால் இது
மிகையான கற்பனை என நினைக்கலாம். தக்கவாறு கருத்துகளை முன்வைத்தலும்
வேண்டும். உடல் என்பதும் உடன் என்பதோடு தொடர்புடையது.
உடன்-உடல் என்பது கூட (அதாவது அணைந்து, சூழ்ந்து) இருப்பது
என்னும் பொருள் சுட்டும் என்று நினைக்கின்றேன். உடை, (அணிவது)
உடுக்கை என்பது உடுத்தல் என்பதந் அடிப்படை. உடலைச் சூழக் கட்டியிருப்பது
உடுக்கை. (பழங்காலத்தில் அது இலை ஆடையாக மரவுரி ஆடையாக இருந்திருக்கும்,
பின்னர் பருத்தி முதலானவற்றால் ஆனதாக இருக்கும்). உடையவன் என்றால்
பெற்றிருப்பவன் (செல்வம் முதலானது). ஊக்கம் உடைமை உடைமை
என்கின்றார் வள்ளுவர். உள் (உரம்) பெற்றிருத்தல் உடைமை.
எனக்கு மேலோட்டமாகத் தோன்றியதை எழுதியுள்ளேன். ஆழ
எண்ண வேண்டும், தக்க சொல்லாட்சிகளைக் கருதவேண்டும். அவற்றில்
சொற்பயன்பாட்டுச் சூழலை உற்றறியவேண்டும். மாற்றுக் கோணங்களைக்
கருதிப்பார்கக்வேண்டும், இடர்களை எண்ணிப்பார்க்கவேண்டும். பிறகுதான்
நான் ஏதும் முன்மொழிவாகக் குட ஏதும் சொல்ல முடியும். நாந்
ஆழ இது பற்றி சிந்தித்தேனில்லை.


விலங்கு என்பதற்கு உடல், குன்று, மலை ஆகிய நெடுமைப் பொருள் சொற்கள் உண்டு. வில்வம் என்பதும் நிமிர்ந்த பொருளில் தான் உண்டானது என புரிந்து கொள்ள முடிகிறது. வில் > வல் என நெடுமையை இகர > அகர திரிபில் உறுதிப்படுத்தும் சொற்கள் உண்டு. வல் > வள் என்பன அவை. மலையாளத்தில் வல்லிய / வலிய என்றால் நெடிய எனப்பொருள். வளர் என்றால் உயர்தல். மலையாளத்தில் வளரே காலமாய் என்றால் நெடுங் காலமாய் என்று பொருள்.