உடல், உடம்பு பொருள் என்ன?

297 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 6, 2023, 5:52:16 AM8/6/23
to தமிழ் மன்றம்
உடல், உடம்பு பொருள் என்ன?

இந்தியில் உட் / உட்டோ (utto) என்றால் நிமிர்ந்து நிற்றல் என்று பொருள். utkatasana, uthkata konasana என்பதும் நின்று செய்வதால் அப்பெயர் பெற்றன. இந்த "உட்" என்ற வேர் நிமிர்ந்த, விறைத்த, நெடிய, எழுந்த ஆகிய பொருள் உடையது. உட் + அம்பு = உடம்பு, உட் +அல் = உடல் ஆகிய சொற்கள்  நிமிர்ந்து நின்ற நிலையை குறிப்பது. இதே பொருளில் தான் படம் என்ற சொல் பாம்பின் படத்தையும் மனித உடலையும் குறிக்கும். மெய் > மேல் > மேனி ஆகியவும் உயர்ந்து நிமிர்ந்த (stiff erect) உடலையே குறிக்கும். "யா" என்றால் நெடிய என்ற பொருள் உண்டு. யா மரத்தை "நெடுநிலை யாஅம்" என்கிறது அக. 659:8.  "யா" என்ற நெடுங் கருத்தைக் கொண்டு தான் யாக்கை என்ற உடலைக் குறிக்கும் சொல் உண்டானது. ஆனால் கண், காது, மூக்கு என பல உறுப்புகள் கூடியதால் உடல் யாக்கை எனப்பட்டதாக தவறாக வேர் விளக்கம் கொடுத்துள்ளனர். 

உகரத்தில் மேலும் சில சொற்கள் நிமிர்ந்து, நின்ற ஆகிய பொருளில் வழங்குகின்றன. அவை கீழே:

உல் > உக் > உக்கம் - உயரம், தலை; உக்கு - மேலெழு, rise up; உக - உயர்தல்; உகப்பு - உயர்ச்சி; உகளுதல் - உயர்தல்; உகை - உயர்வெழும்பு.

உச்சம் - உயரம், tip; உஞ்சல் - உயரே தொங்கும் ஊஞ்சல்.

உடக்கு / உடம்பு / உடல்  - உயர்ந்து நிற்கும் மேனி.

உட் > உத் - உத்து / உத்தம் / உத்தம்பகம் - வளர்ச்சி, உயரம்; உத்தமி - உயர்ந்த பெண்; உத்தர - மேலான; உத்தரம் - உயரே மேல் கூரையை தாங்கும் மரம்; உத்திஷ்ட என்ற சமசுகிருத சொல் எழுந்து நிற்றலைக்  குறிக்கும்; உந்தல் - உயர்ச்சி.

உப்புரிசை - உப்பரிகை; உம்பர் - மேலிடம்; உம்பல் - எழுச்சி.

உள் - மேன்மை, superior; உறி - உயரே தொங்கும் கயிற்று புரிமணை; ஏணை.

உறுவன் -  மிக்கோன், பெரியோன், great man; உறை - பெருமை, உயரம்.

உன் / உன்னாயம் - உயர்வு; உன்னதம் (சமஸ்கி) - உயர்வான.

image.png

Seshadri Sridharan

unread,
Aug 7, 2023, 7:34:47 AM8/7/23
to தமிழ் மன்றம்
யகரம் சகரமாகவும் திரியும். அந்த வகையில் யா > சா என்று திருந்துள்ளது. யால் > சால் என ஒரு நெடு மரம் அழைக்கப்படுகிறது. சால் > சான்றோர் என்றால் உயர்ந்தோர். சால என்றால் பெரிய. சாலப்பெரும் பறையே என்று ஆண்டாள் பாடுகிறாள். 

Seshadri Sridharan

unread,
Aug 7, 2023, 9:08:20 PM8/7/23
to தமிழ் மன்றம்

On Mon, 7 Aug 2023, 5:04 p.m. Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
யகரம் சகரமாகவும் திரியும். அந்த வகையில் யா > சா என்று திருந்துள்ளது. யால் > சால் என ஒரு நெடு மரம் அழைக்கப்படுகிறது. சால் > சான்றோர் என்றால் உயர்ந்தோர். சால என்றால் பெரிய. சாலப்பெரும் பறையே என்று ஆண்டாள் பாடுகிறாள். 

உட் > உத் ஆகியவற்றில் கிளர்ந்த சொற்கள் இந்தியோ சம்ஸ்க்ருதமோ உண்மையில் தனி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன அல்லவா?

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 1:20:53 AM8/8/23
to தமிழ் மன்றம்
உடை வாள் > ராணுவ அணிவகுப்பின்போது ராணுவ அதிகாரி உடைவாளைத் தன்னுடைய முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்துக் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தார். இங்கும் உட் > உடை என்பது நிமிர்த்திய, ஏந்திய என்ற பொருளில் வருகிறது.

உடைப்படை - நிலைப்படை, standing army ; உடை - நிமிர்ந்த மரம், நிமிர்ந்த முள்.

image.png
image.png

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 2:09:59 AM8/8/23
to tamil...@googlegroups.com
 அன்புள்ள சேசாத்திரி,

நீங்கள் பலப்பல பொருந்தாத கூற்றுகளை முன்வைக்கின்றீர்கள் என்று
தெரியவில்லை. அதாவது தாறுமாறாக கண்டபடி பொருள் கொள்கின்றீர்கள்.
உங்கள் கருத்துகள் செல்லாதன மட்டுமல்ல வெற்றுக் குழப்பம் உண்டாக்குவன.
கீழே உள்ளதைப் பாருங்கள்.
என்ன இந்தியில் இருந்தா தமிழ்ச்சொல் உடல் வந்தது?!
இதில் பொருத்தம் இல்லாததை உணரவில்லையா?
உடல், உடன், உடைய என்பன எவ்வளவு பழைய சொற்கள் என்பது
ஒருபுறம் இருக்க. நிமிர்ந்த என்று அங்கெல்லாம் பொருள் 
வருமா? 
யா என்பது பற்றி ப. அருளியார் ஒரு நூலே எழுதியுள்ளார்.
யா என்பதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் 
யாக்கை என்பது கட்டுதல் என்னும் பொருளில் வந்ததென்பதைப்
பலரும் அறிவர். ஆனால் நீங்கள் கண்டமேனிக்கு பொருள்களை
உருவாக்கித் தாறுமாறாகத் தொடர்புபடுத்தி
தமிழின் வேரியல் சொற்பிறப்பியல் ஆய்வை மிகவும்
கொச்சைப் படுத்துகின்றீர்கள். ஒவ்வொன்றயும் மறுத்துரைத்தால்
மிகுந்த நேரம் விரயம் ஆகும். நீங்கள் பலவாறு சரியானவற்றையும்
தவறானவற்றையும் (இது அறியாமல் செய்வதன்று என்பது என் 
உய்ப்பு) கண்டபடி கலந்து வேரியல் சொற்பிறப்பியலைக்
கொச்சைப் படுத்துகின்றீர்கள். 

செல்வா

//இந்தியில் உட் / உட்டோ (utto) என்றால் நிமிர்ந்து நிற்றல் என்று பொருள். utkatasana, uthkata konasana என்பதும் நின்று செய்வதால் அப்பெயர் பெற்றன. இந்த 
"உட்" என்ற வேர் நிமிர்ந்த, விறைத்த, நெடிய, எழுந்த ஆகிய பொருள் உடையது. உட் + அம்பு = உடம்பு, உட் +அல் = உடல் ஆகிய சொற்கள்  நிமிர்ந்து நின்ற நிலையை குறிப்பது. இதே பொருளில் தான் படம் என்ற சொல் பாம்பின் படத்தையும் மனித உடலையும் குறிக்கும். மெய் > மேல் > மேனி ஆகியவும் உயர்ந்து நிமிர்ந்த (stiff erect) உடலையே குறிக்கும். "யா" என்றால் நெடிய என்ற பொருள் உண்டு. யா மரத்தை "நெடுநிலை யாஅம்" என்கிறது அக. 659:8.  "யா" என்ற நெடுங் கருத்தைக் கொண்டு தான் யாக்கை என்ற உடலைக் குறிக்கும் சொல் உண்டானது. ஆனால் கண், காது, மூக்கு என பல உறுப்புகள் கூடியதால் உடல் யாக்கை எனப்பட்டதாக தவறாக வேர் விளக்கம் கொடுத்துள்ளனர்.  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5_ZMcaNRkaVZ2-CxHmi_LpYLXuXaqXJ-z7GRoEUAJWjQ%40mail.gmail.com.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 3:05:46 AM8/8/23
to தமிழ் மன்றம்
On Tue, 8 Aug 2023, 11:40 a.m. C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
 அன்புள்ள சேசாத்திரி,

நீங்கள் பலப்பல பொருந்தாத கூற்றுகளை முன்வைக்கின்றீர்கள் என்று
தெரியவில்லை. அதாவது தாறுமாறாக கண்டபடி பொருள் கொள்கின்றீர்கள்.
உங்கள் கருத்துகள் செல்லாதன மட்டுமல்ல வெற்றுக் குழப்பம் உண்டாக்குவன.
கீழே உள்ளதைப் பாருங்கள்.
என்ன இந்தியில் இருந்தா தமிழ்ச்சொல் உடல் வந்தது?!

அப்படி எங்கும் சொல்லவில்லையே. அதன் பொருத்தம் தான் காட்டியுள்ளேன்.

இதில் பொருத்தம் இல்லாததை உணரவில்லையா?
உடல், உடன், உடைய என்பன எவ்வளவு பழைய சொற்கள் என்பது
ஒருபுறம் இருக்க. நிமிர்ந்த என்று அங்கெல்லாம் பொருள் 
வருமா? 

அதற்கு தான் மெய்> மேல் > மேனி காட்டினேன். ஏற்கனவே படம் என்பது நிமிர்ந்த பாம்பின் தலை, மனித உடல் என்று காட்டினேன்.

யா என்பது பற்றி ப. அருளியார் ஒரு நூலே எழுதியுள்ளார்.
யா என்பதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் 
யாக்கை என்பது கட்டுதல் என்னும் பொருளில் வந்ததென்பதைப்
பலரும் அறிவர். ஆனால் நீங்கள் கண்டமேனிக்கு பொருள்களை
உருவாக்கித் தாறுமாறாகத் தொடர்புபடுத்தி
தமிழின் வேரியல் சொற்பிறப்பியல் ஆய்வை மிகவும்
கொச்சைப் படுத்துகின்றீர்கள். ஒவ்வொன்றயும் மறுத்துரைத்தால்
மிகுந்த நேரம் விரயம் ஆகும்.
 
யா நூல் என்னிடமும் உள்ளது. யா என்றால் கருமரம் என்கிறது பேரகர முதலி. அதில் இருந்து தான் அக. நானூற்று பாடலை கொடுத்தேன் நெடுநிலை யாஅம் என்று. சால் எனும் குங்கிலிய மரம் காட்டினேன். 

நீங்கள் பலவாறு சரியானவற்றையும்
தவறானவற்றையும் (இது அறியாமல் செய்வதன்று என்பது என் 
உய்ப்பு) கண்டபடி கலந்து வேரியல் சொற்பிறப்பியலைக்
கொச்சைப் படுத்துகின்றீர்கள். 

செல்வா

//இந்தியில் உட் / உட்டோ (utto) என்றால் நிமிர்ந்து நிற்றல் என்று பொருள். utkatasana, uthkata konasana என்பதும் நின்று செய்வதால் அப்பெயர் பெற்றன. இந்த 
"உட்" என்ற வேர் நிமிர்ந்த, விறைத்த, நெடிய, எழுந்த ஆகிய பொருள் உடையது. உட் + அம்பு = உடம்பு, உட் +அல் = உடல் ஆகிய சொற்கள்  நிமிர்ந்து நின்ற நிலையை குறிப்பது. இதே பொருளில் தான் படம் என்ற சொல் பாம்பின் படத்தையும் மனித உடலையும் குறிக்கும். மெய் > மேல் > மேனி ஆகியவும் உயர்ந்து நிமிர்ந்த (stiff erect) உடலையே குறிக்கும். "யா" என்றால் நெடிய என்ற பொருள் உண்டு. யா மரத்தை "நெடுநிலை யாஅம்" என்கிறது அக. 659:8.  "யா" என்ற நெடுங் கருத்தைக் கொண்டு தான் யாக்கை என்ற உடலைக் குறிக்கும் சொல் உண்டானது. ஆனால் கண், காது, மூக்கு என பல உறுப்புகள் கூடியதால் உடல் யாக்கை எனப்பட்டதாக தவறாக வேர் விளக்கம் கொடுத்துள்ளனர்.  

On Sun, Aug 6, 2023 at 3:22 PM Seshadri  என்ன?

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 3:36:37 AM8/8/23
to தமிழ் மன்றம்
Vertical என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே அது தான் உடலுக்கு பொருந்தும் பொருள். Vertical என்பது தான் உயர்ந்த, மேலே, எழு (raise), நிமிர்ந்த (erect) ஆகியவற்றுக்கும் பொருள். இது வரை யாரும் உட் > உடல் என்பதற்கு vertical என்ற பொருள் தரவில்லை. நான் தான் முதன் முதலாக இப்படி பொருள் உரைத்தேன். அடுத்தவர் கூறியது போலவே என் விளக்கம் இருக்க வேண்டும் என்றால் அதையே படம் பிடித்து இட்டுவிடலாம். எதற்கு நான் வீணே இப்படி தட்டச்சு செய்ய வேண்டும். இது புதிய சிந்தனை என்பதால் நான் தானே தட்டச்சு செய்ய வேண்டும்? என் கருத்து ஒரு முன்மொழிவு (proposal) தான். இதுவே சட்டம் என்று நான் சொல்லவே இல்லை. மக்கள் பாவாணர், அருளி சொல்வதே சரி என்ற கருத்தில். இருந்து விடுபட வேண்டும்.

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 5:00:07 AM8/8/23
to தமிழ் மன்றம்
உட் என்பதன் மூல வேர் உல் / உய். 

நேரடியாக நெடுமைக் கருத்தில் "உல்" என்பதில் இருந்த பிறந்த சொல்  உல்லி - உயர்ந்த மதில், ஒல்லியான ஆள், தலை; உலவ மரம் - இலவ மரம். மிக நெடிதாக வளர்ந்த இம்மரத்தை நான் கம்பம் சுருளி அருவி அருகே 100 அடி உயரம் கொண்டதாக பார்த்துள்ளேன். உலக்கை - நெடிய திரண்ட கம்பு. ஆனால் பாவாணர் அவசர அவசரமாக உல் > உருள் என்று கொண்டு உலக்கையின் அடி உருண்டு இருபத்தால் உலக்கை எனப்பட்டதாக தவறான பொருள் காட்டினார்.

உய் > உயரம் - vertical 

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 9:42:54 AM8/8/23
to tamil...@googlegroups.com
அன்புள்ள சேசாத்திரி,
நான் பாவாணர், அருளியாரின் கூற்றுகளில் இருந்தும் முடிவுகளில் இருந்தும்
சில இடங்களில் மாறுபட்டுள்ளேன். நானோ என்னைப்
போன்றவர்கள் யாருமோ "வேத" வாக்காக எடுத்துக்கொள்வதில்லை.
"பொருள்" என்பது மிகவும் நுணுக்கமானது. வெற்றாக இது இதுதான்
என்று எதையாவது ஒன்றைக் கொண்டு முடிவுக்கு வருதல் கூடாது.
பொருள்கோண்மையைச் சரிவர உள்வாங்காதவர்கள் பாவாணரையோ
அருளியாரையோ படித்தால் அவர்கள் எப்படிப் பொருளை 
உய்த்துணர்ந்து தொடர்புபடுத்தி தக்க சான்றுகளின் அடிப்படையில்
உறுதிப்படுத்தி முன் வைக்கின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் வலியவும் மெய்யுற பொருந்தாமலும் பொருள் கூறுகின்றீர்கள்.
பொருள்வழி நடக்கும் சொற்பிறப்பியலில் இப்படியான சிக்கல்கள்
இருப்பதாலேயே மேற்குலக மொழியியலாளர்கள் பொருள்கோண்மையைப்
பெரிதாகக் கொள்வதே இல்லை. ஒலிப்புத்திரிபை, அதில் ஒழுக்கத்தை 
மட்டுமே விதிகளின் அடிப்படையில் அணுகிச் செல்கின்றார்கள்.
இது பாவாணர், அருளியார், அரசேந்திரனார் முறையில் இருந்து
பெரிதும் மாறுபட்டது. பாவாணர் முதலியோரும் ஒலிபெயர்வுகளைப்
பொருட்படுத்துகின்றார்கள், ஆனால் சொற்பொருள் வேர்ப்பொருள்
என்பதை மிக ஆழமாக அணுகுகின்றார்கள். கறுப்பாய் இருப்பதால்
கரி என்றால் அடுப்புக்கரியும் யானைக்கும் கண் மைக்கும் ஆகும்
என்றாலும் இதே நிறத்தொடர்பால் பிறவற்றுக்கும் அமையக்கூடும்
என்றாலும் பொருத்தும் பரபும் சூழலும் இருந்தால்தான் பொருந்தும்.
ஒரு கருங்குதிரையை என் உய்த்துப்பார்த்த  பார்வையால் கரி என்றழைக்க
நேர்ந்தால், அதனை கவிவரியாக கேட்போர் உணர்ந்து
போற்றும்படி அமைய நேர்ந்தால் கரிய பரிக்குக் கரி என்றும்
பொருள் உண்டாகலாம். ஆனால் அடுப்புக்கரி எரியும்
எனவே கரி என்றால் எரிதல், வெப்பம் என்றெல்லாம்
பொருள் கொள்ளுவது தவறு.  இவற்றை அன்பும் நன்னோக்கும்
கூரறிவும், மரபறிவும், மெய்யுணர்வும் கொண்டு நோக்கினால் தான்
விளங்கும். வறட்டுத்தனமாக ஏன் கூடாது. அப்படிப் பொருள் 
கொள்வேன் என்று கூறினால் ஏதும் செய்ய இயலாது. நீங்கள் 
பல கருத்துகளையும் பார்க்கின்றீர்கள் என்பதை உய்த்தறிகின்றேன்.
ஆனால் வலிய பொருந்தாத பொருள்களைப் பொருந்தாத 
துணை எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துகின்றீர்கள்.
வலிய குழப்பம் உண்டாக்குகின்றீர்கள். இந்த வேர்ச்சொல்
ஆய்வில் அறிவும், நுண்ணறிவும் பட்டறிவும் இல்லாதவர்கள்
உங்களின் செல்லாத பொருத்தப்பாடுகளை உணரமாட்டார்கள்.
அன்புடன் நேர்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன், 
தமிழ்ச் சொல்லாய்வை இப்படியெல்லாம் சிதைக்காதீர்கள்.
தமிழ் அரிய அரிய மொழி! மிக நுணுக்கமான ஆழமான மொழி.
தமிழின் சிறப்புகளில் இரண்டு அதன் ஒலிநுணுக்கம்,
பொருள் நுணுக்கம். இவற்றைப் பாதுகாக்கவேண்டியது
தமிழர்களின் கடமை. 
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 9:51:05 AM8/8/23
to tamil...@googlegroups.com
//உட் என்பதன் மூல வேர் உல் / உய்.//

எப்படி? உட் என்பதற்கு முன் நிலைகளாக உள், உண் இருக்கலாம். 
உடல் எனில் உடன், உடை (என்னுடைய, நான் அணியும் உட, உடு (உடுத்தல், உடுப்பு).
இப்படி நிறைய சொற்களை எண்ணிப்பார்த்து அதன் வேர்ப்பொருளாக வேர்ப்பொருள்
கருத்தாக எது இருக்கக்கூடும் என்று சிந்திக்கவேண்டும். உடல் என்பதற்கும் "நிமிர்"
என்பதற்கும் எந்தப்பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தி முதலான பிற்கால மொழிகளிலும்
அதற்கு முன்பிருந்த மொழிகளிலும் 'உட்' என்றிருந்தால் அவர்கள் மரபு என்னவென்று
அங்கே ஆய வேண்டும். தமிழோடு தொடர்பிருந்தான் மெய்யாக ஆழமாக இரு மொழிக்குடும்பங்கள்
சொற்களையும் பயன்பாடுகளையும் ஆய்ந்து முடிவுக்கு வரவேண்டும்.
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 10:05:27 AM8/8/23
to tamil...@googlegroups.com
//நேரடியாக நெடுமைக் கருத்தில் "உல்" என்பதில் இருந்த பிறந்த சொல்  உல்லி - உயர்ந்த மதில், ஒல்லியான ஆள், தலை; உலவ மரம் - இலவ மரம். மிக நெடிதாக வளர்ந்த இம்மரத்தை நான் கம்பம் சுருளி அருவி அருகே 100 அடி உயரம் கொண்டதாக பார்த்துள்ளேன். உலக்கை - நெடிய திரண்ட கம்பு. ஆனால் பாவாணர் அவசர அவசரமாக உல் > உருள் என்று கொண்டு உலக்கையின் அடி உருண்டு இருபத்தால் உலக்கை எனப்பட்டதாக தவறான பொருள் காட்டினார்.

உய் > உயரம் - vertical //

பாவாணர் சொன்னது தவறாக இருக்கக்கூடாது என்றில்லை. அவர் "
அவசர அவசரமாக"
என்றெல்லாம் சொன்னார் என்பது தவறான உள்வாங்கல். குறிப்பாக அவர்
உல் என்பதை மிக ஆழமாக அலசியிருக்கின்றார். உ
ங்கள் உல்- நெடுமைக் கருத்தில் உலா, உலவு, உலாத்து போன்ற சொற்கள் எப்படி வரும்? 

உய் உயரம் மேலெழுவது என்பது உண்மை. இது அறிந்து ஏற்கப்பட்ட ஒன்று.

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 10:29:01 AM8/8/23
to தமிழ் மன்றம்
On Tue, 8 Aug 2023, 7:35 p.m. C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
//நேரடியாக நெடுமைக் கருத்தில் "உல்" என்பதில் இருந்த பிறந்த சொல்  உல்லி - உயர்ந்த மதில், ஒல்லியான ஆள், தலை; உலவ மரம் - இலவ மரம். மிக நெடிதாக வளர்ந்த இம்மரத்தை நான் கம்பம் சுருளி அருவி அருகே 100 அடி உயரம் கொண்டதாக பார்த்துள்ளேன். உலக்கை - நெடிய திரண்ட கம்பு. ஆனால் பாவாணர் அவசர அவசரமாக உல் > உருள் என்று கொண்டு உலக்கையின் அடி உருண்டு இருபத்தால் உலக்கை எனப்பட்டதாக தவறான பொருள் காட்டினார்.

உய் > உயரம் - vertical //

பாவாணர் சொன்னது தவறாக இருக்கக்கூடாது என்றில்லை. அவர் "
அவசர அவசரமாக"
என்றெல்லாம் சொன்னார் என்பது தவறான உள்வாங்கல். குறிப்பாக அவர்
உல் என்பதை மிக ஆழமாக அலசியிருக்கின்றார். உ
ங்கள் உல்- நெடுமைக் கருத்தில் உலா, உலவு, உலாத்து போன்ற சொற்கள் எப்படி வரும்? 

உலைதல் - அசைதல் என்று அருளி பொருள் உரைக்கிறார்.  அந்த வகையில் உலா, உலாவு, உலாத்து என்பன அதே கருத்து உடையன. நான் உல் என்ற நெடுமை கருத்தில் அசையும் கருத்துகளை எடுத்துக்காட்டாக வில்லையே!!

உல்> உட் என்பதற்கு முதன் முதலாக நான் தான் நெடுமை கருத்தை சுட்டி யுள்ளேன் 

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 10:50:51 AM8/8/23
to தமிழ் மன்றம்
On Tue, 8 Aug 2023, 7:12 p.m. C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
அன்புள்ள சேசாத்திரி,
நான் பாவாணர், அருளியாரின் கூற்றுகளில் இருந்தும் முடிவுகளில் இருந்தும்
சில இடங்களில் மாறுபட்டுள்ளேன். நானோ என்னைப்
போன்றவர்கள் யாருமோ "வேத" வாக்காக எடுத்துக்கொள்வதில்லை.
"பொருள்" என்பது மிகவும் நுணுக்கமானது. வெற்றாக இது இதுதான்
என்று எதையாவது ஒன்றைக் கொண்டு முடிவுக்கு வருதல் கூடாது.
பொருள்கோண்மையைச் சரிவர உள்வாங்காதவர்கள் பாவாணரையோ
அருளியாரையோ படித்தால் அவர்கள் எப்படிப் பொருளை 
உய்த்துணர்ந்து தொடர்புபடுத்தி தக்க சான்றுகளின் அடிப்படையில்
உறுதிப்படுத்தி முன் வைக்கின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது.
நீங்கள் வலியவும் மெய்யுற பொருந்தாமலும் பொருள் கூறுகின்றீர்கள்.

நன்றாக கருத்துரைதீர்கள். 

 சொற்பிறப்பியல் பேரகர
முதலியில் பல சொற்களுக்கு வேர் விளக்கமும் அதன் நேர் பொருளும் இல்லை. சிலவற்றின் வேர் பொருள் தவறாக உள்ளன. காட்டாக, நிலம் என்பதை நீள > நில என திரிந்ததாக காட்டுகின்றனர். ஆனால் நில், நிலை என்ற அசையா கருத்துடன் தொடர்புடையது தான் நிலம்.

அதில் உடல், உடம்பு என்பதற்கு விளக்கமே இல்லை. நான் கூட இதற்கு முன்பு யாக்கை என்றால் பலவற்றின் கூட்டு என்கின்றனரே எனவே உடல் என்பதும் இப்படி கூட்டுக் கருத்தில் வந்திருக்குமா என்று தேடினேன்.  அப்படி ஏதும் பொருந்தவில்லை. உல் > உருண்டை என்ற திரட்சிக் கருத்தே முன் வந்தது.           

உண்மையில் பாவாணர் அருளி உடலுக்கு பொருள் காட்டி இருந்தால் பேரகர முதலியில் இடம் பெற்றிருக்கும். இல்லையே 

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 10:58:37 AM8/8/23
to tamil...@googlegroups.com
//உலைதல் - அசைதல் என்று அருளி பொருள் உரைக்கிறார்.  அந்த வகையில் உலா, உலாவு, உலாத்து என்பன அதே கருத்து உடையன. நான் உல் என்ற நெடுமை கருத்தில் அசையும் கருத்துகளை எடுத்துக்காட்டாக வில்லையே!!//

உல் > உலை-தல்  இங்கு நெடுமை என்னும் கருத்து இல்லை என்பதைச் சுட்டினேன். உங்கள் பொருள்கோண்மை
பொருந்தாமையைச் சுட்டினேன்.

//உல்> உட் என்பதற்கு முதன் முதலாக நான் தான் நெடுமை கருத்தை சுட்டி யுள்ளேன் //

உள் > உண் > உட் ஆகும் ஆனால் உல் > உட் எப்படி ஆகும்?
உல் > உள் ??  உள் என்னும் கருத்து தமிழில் பேராழம் மிக்கது.
உணவு, உணர்வு, உள்ளம் உள்ளது உண்மை இப்படி மிக அடிப்படையான
சொற்களின் வேர்.

"உல்> உட் என்பதற்கு முதன் முதலாக நான் தான் நெடுமை கருத்தை சுட்டி யுள்ளேன்"
ஆம், ஆனால் அது பொருந்தாதிருக்கின்றது. செல்லாது என்பதென் கருத்து. 
உங்கள் கருத்து தவறு (பிழையானது, பொருந்தாதது என்னும் கருத்தில்). 

செல்வா

C.R. Selvakumar

unread,
Aug 8, 2023, 11:12:42 AM8/8/23
to tamil...@googlegroups.com
// சொற்பிறப்பியல் பேரகர
முதலியில் பல சொற்களுக்கு வேர் விளக்கமும் அதன் நேர் பொருளும் இல்லை. சிலவற்றின் வேர் பொருள் தவறாக உள்ளன. காட்டாக, நிலம் என்பதை நீள > நில என திரிந்ததாக காட்டுகின்றனர். ஆனால் நில், நிலை என்ற அசையா கருத்துடன் தொடர்புடையது தான் நிலம்.//

இங்கு முழுவதும் உடன்படுகின்றேன். ஆம் நில் > நிலம் (நிலை). 

நானும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் இருந்து மாறுபட்ட இடங்களைக்
குறித்துள்ளேன் (என் பதிவுகளில்). 

பேரா. அரசேந்திரன் உடல் என்பதற்குப் பொருள் காட்டியுள்ளார் என்று மெலிதாக 
நினைவு. (உடல் உறுப்புகளைப் பற்றிய சிறு நூல் எழுதியுள்ளார்.
அதில் இருக்கலாம்). 

உடல் என்பது உயிர் உடுத்தியுள்ள ஒன்று என்று கொள்ளலாம். ஆனால் இது
மிகையான கற்பனை என நினைக்கலாம். தக்கவாறு கருத்துகளை முன்வைத்தலும்
வேண்டும். உடல் என்பதும் உடன்  என்பதோடு தொடர்புடையது.
உடன்-உடல் என்பது கூட (அதாவது அணைந்து, சூழ்ந்து) இருப்பது
என்னும் பொருள் சுட்டும் என்று நினைக்கின்றேன். உடை, (அணிவது)
உடுக்கை என்பது உடுத்தல் என்பதந் அடிப்படை. உடலைச் சூழக் கட்டியிருப்பது
உடுக்கை. (பழங்காலத்தில் அது இலை ஆடையாக மரவுரி ஆடையாக இருந்திருக்கும்,
பின்னர் பருத்தி முதலானவற்றால் ஆனதாக இருக்கும்). உடையவன் என்றால்
பெற்றிருப்பவன் (செல்வம் முதலானது). ஊக்கம் உடைமை உடைமை 
என்கின்றார் வள்ளுவர். உள் (உரம்) பெற்றிருத்தல் உடைமை. 
எனக்கு மேலோட்டமாகத் தோன்றியதை எழுதியுள்ளேன். ஆழ
எண்ண வேண்டும், தக்க சொல்லாட்சிகளைக் கருதவேண்டும். அவற்றில்
சொற்பயன்பாட்டுச் சூழலை உற்றறியவேண்டும். மாற்றுக் கோணங்களைக்
கருதிப்பார்கக்வேண்டும், இடர்களை எண்ணிப்பார்க்கவேண்டும். பிறகுதான்
நான் ஏதும் முன்மொழிவாகக் குட ஏதும் சொல்ல முடியும். நாந்
ஆழ இது பற்றி சிந்தித்தேனில்லை. 

செல்வா

Seshadri Sridharan

unread,
Aug 8, 2023, 11:46:37 AM8/8/23
to tamil...@googlegroups.com

//உல்> உட் என்பதற்கு முதன் முதலாக நான் தான் நெடுமை கருத்தை சுட்டி யுள்ளேன் //

உள் > உண் > உட் ஆகும் ஆனால் உல் > உட் எப்படி ஆகும்?
உல் > உள் ??  உள் என்னும் கருத்து தமிழில் பேராழம் மிக்கது.
உணவு, உணர்வு, உள்ளம் உள்ளது உண்மை இப்படி மிக அடிப்படையான
சொற்களின் வேர்.

 உண்  என்பதில் நெடுமை, மேன்மை கருத்துச் சொல் நமக்கு கிடைக்காமல் அழிந்திருக்கலாம். ஆனால் உள்  என்பதற்கு மேல், மேன்மை கருத்து தருகிறது பேரகர முதலி. 

image.png

Seshadri Sridharan

unread,
Aug 9, 2023, 2:12:18 AM8/9/23
to tamil...@googlegroups.com
On Tue, Aug 8, 2023 at 8:42 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
பேரா. அரசேந்திரன் உடல் என்பதற்குப் பொருள் காட்டியுள்ளார் என்று மெலிதாக 
நினைவு. (உடல் உறுப்புகளைப் பற்றிய சிறு நூல் எழுதியுள்ளார்.
அதில் இருக்கலாம்). 

உடல் என்பது உயிர் உடுத்தியுள்ள ஒன்று என்று கொள்ளலாம். ஆனால் இது
மிகையான கற்பனை என நினைக்கலாம். தக்கவாறு கருத்துகளை முன்வைத்தலும்
வேண்டும். உடல் என்பதும் உடன்  என்பதோடு தொடர்புடையது.
உடன்-உடல் என்பது கூட (அதாவது அணைந்து, சூழ்ந்து) இருப்பது
என்னும் பொருள் சுட்டும் என்று நினைக்கின்றேன். உடை, (அணிவது)
உடுக்கை என்பது உடுத்தல் என்பதந் அடிப்படை. உடலைச் சூழக் கட்டியிருப்பது
உடுக்கை. (பழங்காலத்தில் அது இலை ஆடையாக மரவுரி ஆடையாக இருந்திருக்கும்,
பின்னர் பருத்தி முதலானவற்றால் ஆனதாக இருக்கும்). உடையவன் என்றால்
பெற்றிருப்பவன் (செல்வம் முதலானது). ஊக்கம் உடைமை உடைமை 
என்கின்றார் வள்ளுவர். உள் (உரம்) பெற்றிருத்தல் உடைமை. 
எனக்கு மேலோட்டமாகத் தோன்றியதை எழுதியுள்ளேன். ஆழ
எண்ண வேண்டும், தக்க சொல்லாட்சிகளைக் கருதவேண்டும். அவற்றில்
சொற்பயன்பாட்டுச் சூழலை உற்றறியவேண்டும். மாற்றுக் கோணங்களைக்
கருதிப்பார்கக்வேண்டும், இடர்களை எண்ணிப்பார்க்கவேண்டும். பிறகுதான்
நான் ஏதும் முன்மொழிவாகக் குட ஏதும் சொல்ல முடியும். நாந்
ஆழ இது பற்றி சிந்தித்தேனில்லை. 

நான் உடை வாளுக்கு  விளக்கம் தந்த பின் தான் நீர் எதிர் வினை ஆற்றினர். உடைவாள் என்றால் இடையில் தொங்கும் வாள் என்று எண்ணப்படுகிறது. ஆனால் நிமிர்ந்த வாளுக்கு தான் மதிப்பு, வேலை எல்லாம். என் அண்ணன் படத்தில் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு" பாடலில் வாளை நிமிர்த்து என்பார் வாலி. எனவே உடைவாள் என்பது நிமிர்த்திய வாள் தான்.

இந்தியில் உட், உட்டோ என்பதில் மட்டும் நிமிர் (vertical) கருத்து வரவில்லை. தல்வார் உடா என்பதிலும், இதாவது வாள் உயர்த்து, எடு, ஏந்து  என்பதிலும் இந்த நிமிர் (vertical) கருத்து உண்டு.  

உடை என்றால் முள்ளையும் மரத்தையும் குறித்து சொல் உண்டு என்பதை நோக்குக.
image.png

தல்வார் உடா கூகிள் மொழிபெயர்ப்பு காண்க.  तलवार उठा  - sword raised  
  
image.png

Seshadri Sridharan

unread,
Aug 13, 2023, 8:55:58 AM8/13/23
to தமிழ் மன்றம்
விலங்கு என்பதற்கு உடல், குன்று, மலை ஆகிய நெடுமைப் பொருள் சொற்கள் உண்டு. வில்வம் என்பதும் நிமிர்ந்த பொருளில் தான் உண்டானது என புரிந்து கொள்ள முடிகிறது. வில் > வல்  என நெடுமையை இகர > அகர திரிபில் உறுதிப்படுத்தும் சொற்கள் உண்டு.  வல் > வள் என்பன அவை. மலையாளத்தில் வல்லிய / வலிய என்றால் நெடிய எனப்பொருள். வளர் என்றால் உயர்தல். மலையாளத்தில் வளரே காலமாய் என்றால் நெடுங் காலமாய் என்று பொருள்.

Seshadri Sridharan

unread,
Aug 14, 2023, 12:09:36 AM8/14/23
to தமிழ் மன்றம்
On Sun, Aug 13, 2023 at 6:25 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
விலங்கு என்பதற்கு உடல், குன்று, மலை ஆகிய நெடுமைப் பொருள் சொற்கள் உண்டு. வில்வம் என்பதும் நிமிர்ந்த பொருளில் தான் உண்டானது என புரிந்து கொள்ள முடிகிறது. வில் > வல்  என நெடுமையை இகர > அகர திரிபில் உறுதிப்படுத்தும் சொற்கள் உண்டு.  வல் > வள் என்பன அவை. மலையாளத்தில் வல்லிய / வலிய என்றால் நெடிய எனப்பொருள். வளர் என்றால் உயர்தல். மலையாளத்தில் வளரே காலமாய் என்றால் நெடுங் காலமாய் என்று பொருள்.

 வு > வி > வெ - வே - வ 

நெடுமை கருத்துள்ள எகரம் ஏறிய வகரச் சொற்கள்.

வேல் - மரவகை, நெடிய ஈட்டி; வேலி - நெடிதான மதில்; வேழம் - நெடிது உயரும் கரும்பு, மூங்கில் (வேணு), நாணல், விளக்கில் நெடிய யானை.  
Reply all
Reply to author
Forward
0 new messages