

கல்வெட்டுப் படத்தை 5 மடங்கு பெரிதுபடுத்திப் பார்த்ததில் மணி என்ற சொல்லில் இருந்து - ம், 𐓏 - ஒ, அமர்ந்த மான் என்ற சொல்லில் இருந்து - ன், முகம் என்ற சொல்லில் இருந்து - க, △ - ம். இதில் உள்ள எழுத்துகள் ம்ஒன்கம் > மொங்கம் ஆகும். தடித்த, பருத்த என்ற பொருளில் மொக்கன், மொக்கை ஆகிய சொற்கள் உள்ளன. மொக்கன் > மொங்கன் என்று திரியும். எனவே மொங்கம் என்பது திரண்ட, கூட்டம், team என்பதாக இருக்கலாம். வணிகர் திசை ஆயிரத்தைந் நூற்றுவர், ஐந்நூற்றுவர் என்று பலவாறு பெயர் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் ஓரிடத்தில் கூடப் போவதில்லை. ஆனால் 30 - 40 பேர் அமைந்த ஒரு குழுவாக (team) இடம் விட்டு இடம் பெயர்வர் என்ற வகையில் அந்தந்த குழுவுக்கு என்று தனியாக ஓதன், ஓவன், மொந்தம் என்றவாறு பெயர் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
On Fri, Nov 7, 2025 at 3:42 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் கால வணிகர் கல்வெட்டில் சிந்து எழுத்துஇக்கல்வெட்டு வைணவத் திருத்தலமான திருபுட்குழியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்பட்டது. இது தெலுங்கு பல்லவன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இவன் கி.பி.1205 இல் முடி சூடிக் கொண்டதாக தெரிகிறது. நாட்டார் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைய தளத்தில் இப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் மேலே சோழர் கால எழுத்தில் செய்தி உள்ளது. ஆனால் மன்னன் பெயர் தவிர்த்து பிற செய்திகள் சிதைந்து உள்ளன. அதே நேரம் கீழே ஐந்து சிந்து எழுத்தில் மொங்கம் என்ற பெயர் எழுதப்பட்டுள்ளது. இதில் நேரடியாக சிந்து எழுத்துக்களான 𐓏, △ இடம்பெற்றுள்ளன. அதோடு மணி, அமர்ந்த நிலையில் மான், முகமூடி ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இவை சிந்து முத்திரை போலவே புடைப்புச் சிற்பமாய் இருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. இதாவது, கல்வெட்டு எழுத்து போல குழித்து எழுதப்படவில்லை என்பதே. எனவே சிந்து எழுத்து இடம்பெறும் எல்லா வணிகக் கல்வெட்டுகளையும் நேரடி படமாக எடுத்தால் மட்டுமே இவ்வாறு படிக்க முடியும்; மைப்படியாக எடுத்தால் படிக்க முடியாது. இது எல்லா வணிகக் கல்வெட்டுச் சிந்து எழுத்துகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே மைப்படியாக எடுக்கப்பட்ட வணிகக் கல்வெட்டுகளையும் மீண்டும் புகைப்படமாக எடுத்து மறு வாசிப்பு செய்தால் இது போல இன்னும் பல கல்வெட்டுகளைப் படிக்க இயலும். எனது 12 - 13 ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு வாசிப்பில் இது மூன்றாவது கல்வெட்டு ஆகும்.
ஸ்வஸ்தி ஸ்ரீ மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஓலை காட்டுவார் ஊரவர் கண்டுவிடை தந்தா _ து பெறல் தேவதானம் பி _வ்வூரும் புத்த _ _ _ _ .இது மன்னனின் நேரடி ஓலை ஆவணம். அதில் கோவிலுக்கு நிலம் கொடுத்த செய்தி உள்ளது.