விக்கியில் இந்த விளக்கத்தில் உள்ள பிழையான ஆய்வை வெளிப்படுத்தவே கொல்லன் என்ற சொல்லின் வேர் ஆய்வு.
உ > இ > எ > ஒ > அ திரிபின்படி பார்ப்போம்.
குல் - எரிதல், சிவத்தல், உலர்தல், ஒளிர்தல் என பொருள்.
குய் - வேதல், எரிதல், குய்யன்/ குயவன் - மட்கலன் சுடுபவன். குய்+ சு= குசு - வெப்பக் காற்று.
குலாலன் என்பதும் சுடுபவன் என்ற பொருளுடையது. பலரும் இது தமிழ் அல்ல என்று கருதுவது தவறு. குல குண்டலினி என்பதில் உள்ள குல வெப்பத்தை குறிக்கும். குண்டலினி என்றால் சுருள் வடிவ ஆற்றல். வேட்கோ (வேள் > வேட்+ கூ) என்றால் மண் கலன் இறுகி வலுவாக சுடுபவன். தெலுங்கில் வேடி என்றால் வெப்பம் என்பதை நோக்குக.
குல் > கொல் திரிபு கொல்லன் என்றால் உலை நெருப்பில் இரும்பு, பொன், வெள்ளியை இட்டு தட்டி உருவம் வடிப்பவன் என்பதே பொருள் உலோகம் சிதைப்பது அல்ல பொருள். உலோக உருக்கிற்கு உலை நெருப்பு இன்றியமையாதது.
கல் > கன்> கனல் - நெருப்பு, வெப்பம், சுடுதல். கனலி - நெருப்பு