திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல!

865 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 13, 2021, 5:38:52 AM8/13/21
to தமிழ் மன்றம்
திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல!

image.png

Muthamizh Vendhan

unread,
Aug 13, 2021, 9:47:15 AM8/13/21
to tamilmanram
அதெல்லாம் இருக்கட்டும். எங்கள் தமிழ் பாட்டன் கட்டிய கோவிலில் சமற்கிருதத்தில் வழிபாடு எதற்கு?... கால காலமாக தமிழ் தான் இருந்தது. எப்படி எதற்கு வடமொழி புகுந்தது. நாங்கள் எதற்கு சமற்கிருத வழிபாட்டில் எங்கள் தமிழ் சாமிகளை வணங்கவேண்டும்.

On Fri, 13 Aug 2021 at 15:08, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல!

image.png

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5A6aNrAhDDOLYeA2e1CtZ2ENjGX%3D10tt6JPrnoUePX3A%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Aug 13, 2021, 10:16:20 AM8/13/21
to தமிழ் மன்றம்
On Fri, Aug 13, 2021 at 7:17 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
அதெல்லாம் இருக்கட்டும். எங்கள் தமிழ் பாட்டன் கட்டிய கோவிலில் சமற்கிருதத்தில் வழிபாடு எதற்கு?... கால காலமாக தமிழ் தான் இருந்தது. எப்படி எதற்கு வடமொழி புகுந்தது. நாங்கள் எதற்கு சமற்கிருத வழிபாட்டில் எங்கள் தமிழ் சாமிகளை வணங்கவேண்டும்.

தமிழர் பட்டான் சமஸ்கிருதம் படிக்காதவனா என்ன?  அவனே சமசுகிருத வழிபாட்டில் கலந்து கொண்ட பின் இந்த கேள்வி முட்டாள்தனமானது. தமிழர் பாட்டன் தன் செப்பேடுகளில் மங்கலம் கருதி தொடக்க உரைகளை சமசுகிருதத்தில் தனது குடும்ப வரலாறு , மெய்க்கீர்த்தி வெளியிட்டது ஏன்? எதற்கு இந்த சைவப் பயல்கள் விடும் புருடாவை ஏற்கவேண்டும்?

Muthamizh Vendhan

unread,
Aug 13, 2021, 12:49:33 PM8/13/21
to tamilmanram
அந்த அளவிற்கு அரசர்களையும் முட்டாளாக்கி இருக்கிறீர்கள். கடவுளின் பெயரால்...அரசர்களின் நலன் என்ற போலி நம்பிக்கையூட்டலின் பெயரால்..வேறென்ன சொல்ல... முதல் நூற்றாண்டில் இல்லாத சமஸ்கிருத ஆதிக்கம் 5-ஆம் நூற்றாண்டில் மெல்ல தொடங்கி 13-ஆம் நூற்றாண்டிலேயே அதிக ஆதிக்கம் செலுத்தியது எப்படி?...எல்லாம் ஏமாற்று வித்தையாலதான்... உங்க புருடாவை வேறு யாரிடமாவது கூறுங்கள்...

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 14, 2021, 12:30:35 AM8/14/21
to தமிழ் மன்றம்
On Fri, Aug 13, 2021 at 10:19 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
அந்த அளவிற்கு அரசர்களையும் முட்டாளாக்கி இருக்கிறீர்கள். கடவுளின் பெயரால்...அரசர்களின் நலன் என்ற போலி நம்பிக்கையூட்டலின் பெயரால்..வேறென்ன சொல்ல... முதல் நூற்றாண்டில் இல்லாத சமஸ்கிருத ஆதிக்கம் 5-ஆம் நூற்றாண்டில் மெல்ல தொடங்கி 13-ஆம் நூற்றாண்டிலேயே அதிக ஆதிக்கம் செலுத்தியது எப்படி?...எல்லாம் ஏமாற்று வித்தையாலதான்... உங்க புருடாவை வேறு யாரிடமாவது கூறுங்கள்...

நாடு பிடிக்க ஆசை கொண்ட வேந்தன் கூடுதலாக ஒரு பொதுவான மொழியை கற்றிருப்பான். சமஸ்கிருதம் வரும் முன் வடக்கே பிராகிருதம், தெற்கே தமிழ் இருந்தது. பின்பு பிராகிருதம் போய் சமசுகிருதம் வந்தது. சாளுக்கிய வேந்தர்கள் தமிழும் சமஸ்கிருதமும் கற்றிருந்தனர் ஆனால் அவர் மொழியால் கன்னடர். தமிழ் கற்றதால் தமிழகத்தில் படைகொண்டு வந்து வென்று தமிழகத்தின் வேந்தர் ஆயினர். உச்சையினியை ஆண்ட பட்டினத்தாரின் மாணாக்கர் பத்திரகிரியார் தமிழில் பாடல் புனையும் அளவிற்கு தமிழறிவு பெற்றிருந்தார்.  இதெல்லாம் எதற்கு நாடுகடந்து வந்து வணிகம் செய்யவா? இல்லை! இல்லை!! நாடுபிடிக்க அது உதவும் என்று.  அக்காலத்தே தமிழும் சமஸ்கிருதமும் முழு வளர்ச்சி பெற்ற மொழிகளாய்  இருந்தன. அதனால் அவற்றை வேந்தர், மன்னவர் கற்றனர். எனவே மதத்திற்கும் மன்னவர் சமஸ்கிருதம் கற்றதற்கும் நீர் முடிச்சு போடுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது முட்டாள்களுக்கே இயன்ற வித்தை. ஈவேரா தம் முட்டாள் திறத்தால் பல முட்டாள்களை உருவாக்கினார் அவர் ஒரு முட்டாளென்பதால். அவரால் அது தான் முடியும்.  அறிவாளிகள் உருவாக என் போன்ற அறிவாளியை நாடி வரவேண்டும்.

Muthamizh Vendhan

unread,
Aug 14, 2021, 5:00:28 AM8/14/21
to tamilmanram

உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்? 

Aravindan Sumaithangi Sambasivam

unread,
Aug 14, 2021, 11:30:23 AM8/14/21
to tamilmanram, ssesh...@gmail.com, mutha...@gmail.com
பேரன்புடைய அன்பர்களே,

முதலில் வழிபாட்டிற்குரிய இடத்திற்குள் செல்லும் போது பாரம்பரிய உடைகளை மட்டும் அணிந்து செல்லும் விதமாக உரிய நெறிப்படுத்தலை மிகப்பெரிய அளவில் மக்களை சேரும் விதமாக ஏதேனும் செய்தால் நலமாக இருக்கும் .

On Sat, 14 Aug, 2021, 2:30 pm Muthamizh Vendhan, <mutha...@gmail.com> wrote:

உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்? 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 14, 2021, 11:56:06 AM8/14/21
to தமிழ் மன்றம்
On Sat, Aug 14, 2021 at 2:30 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:

உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்? 

  நீர் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர். நான் பதிவிட்ட ஏதேனும் ஒன்றிற்காவது இதுவரை நேரடியாக விடை உண்டா? எல்லாவற்றை skip செய்கிறீர். பள்ளிக்கூடத்து பையன் மாதிரி தான் உமது பதிவுகள் உள்ளன.   

Muthamizh Vendhan

unread,
Aug 14, 2021, 12:31:03 PM8/14/21
to tamilmanram
இதோடு உங்களுடனான கருத்து பகிர்வை நிறுத்திக்கொள்கிறேன். கருத்து இல்லாமல் அல்ல. உங்களை போன்ற வெறி பிடித்த எண்ணம் கொண்டவர்களிடம் தர்க்கம் செய்வதை விட ஒதுங்கி போவதே சிறந்தது. நன்றி. வணக்கம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 15, 2021, 12:01:34 AM8/15/21
to தமிழ் மன்றம்
On Sat, Aug 14, 2021 at 10:01 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
இதோடு உங்களுடனான கருத்து பகிர்வை நிறுத்திக்கொள்கிறேன். கருத்து இல்லாமல் அல்ல. உங்களை போன்ற வெறி பிடித்த எண்ணம் கொண்டவர்களிடம் தர்க்கம் செய்வதை விட ஒதுங்கி போவதே சிறந்தது. நன்றி. வணக்கம்.

நல்ல முடிவு. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.  

உம்மிடம் சரக்கு இல்லை என்பதை உமது 2-3 பதிவுகளிலேயே உணர்ந்து கொண்டேன். ஏதோ கற்பனையாக மனம்போனபடி பிராமணர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைத்தீர். அவற்றை எல்லாம் நான் தகுந்த காரணங்களை சொல்லி தவிடுபொடி ஆக்கினேன். ஆனாலும் அவற்றுக்கு முகம் காட்டாமல் செய்திக்கு செய்தி தாவிக்கொண்டிருந்தீர்.  இன்னொரு வேலையையும் நீர் செய்தால் நன்மை உண்டாகும் தமிழ் இனத்திற்கு. அது என்ன என்றால் என்னிடம் மட்டும் கருத்து பகிர்வை நிறுத்திக்கொள்வதாக சொல்கிறீர். இது போதாது. ஒரேயடியாக யாருக்கும் கருத்துப்பதிவை போடாமல் நிறுத்துவதே சிறப்பு. இது நான் உமக்கு சொல்லும் அறிவுரை என்றோ வேண்டுகோள் என்றோ கொள்ளலாம்.

Aravindan Sumaithangi Sambasivam

unread,
Aug 15, 2021, 2:05:58 AM8/15/21
to Seshadri Sridharan, mutha...@gmail.com, tamilmanram
பேரன்புடைய மாமேதைகளே..... உங்களின் வாதம் இருக்கட்டும்....
முதலில் வழிபாட்டிற்குரிய இடத்திற்குள் செல்லும் போது பாரம்பரிய உடைகளை மட்டும் அணிந்து செல்லும் விதமாக உரிய நெறிப்படுத்தலை மிகப்பெரிய அளவில் மக்களை சேரும் விதமாக ஏதேனும் செய்தால் நலமாக இருக்கும் .

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
Message has been deleted
Message has been deleted

Aravindan Sumaithangi Sambasivam

unread,
Aug 15, 2021, 5:47:03 AM8/15/21
to jsthe...@gmail.com, tamilmanram
சட்டை போட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருப்பதை வலியுறுத்தும் அதே சமயத்தில் பெண் குழந்தைகளை கையில்லா ஆடை (sleeveless dress என்று நினைக்கிறேன்) மற்றும் கண்ணாடி போன்று அணிந்தும் அணியாத்து போன்ற ஆடை (transparent) பலர் நன்றாகவே பழக்கி வருகிறார்கள். கேட்டால் இந்த வயதில் போடாமல் எந்த வயதில் என்கிறார்கள்.ஆடைக்குண்டான கண்ணியத்துடனான ஆடைகளை மட்டுமே பழக்குவது பெண்மைக்கே நலம். 

On Sun, 15 Aug, 2021, 11:52 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
On Saturday, August 14, 2021 at 11:05:58 PM UTC-7 samoogam wrote:
/// முதலில் வழிபாட்டிற்குரிய இடத்திற்குள் செல்லும் போது பாரம்பரிய உடைகளை மட்டும் அணிந்து செல்லும் விதமாக உரிய நெறிப்படுத்தலை மிகப்பெரிய அளவில் மக்களை சேரும் விதமாக ஏதேனும் செய்தால் நலமாக இருக்கும் .///

ஏதோ உடை என்று ஒன்றை உடுத்தி  வந்தால் சரி  
எல்லோரும் சட்டை போட்டுக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் 
அரைகுறை ஆடையுடன் வருவதை நிறுத்த வேண்டும்

குறிப்பு: 
எனது கருத்து சேசாத்திரியின் இழையின் பொருண்மையை திசை திருப்பாமல் இருக்க,  
புதிய இழையில் ...... 

Seshadri Sridharan

unread,
Aug 15, 2021, 8:17:28 AM8/15/21
to தமிழ் மன்றம்
On Sun, Aug 15, 2021 at 3:17 PM Aravindan Sumaithangi Sambasivam <arvinpa...@gmail.com> wrote:
சட்டை போட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருப்பதை வலியுறுத்தும் அதே சமயத்தில் பெண் குழந்தைகளை கையில்லா ஆடை (sleeveless dress என்று நினைக்கிறேன்) மற்றும் கண்ணாடி போன்று அணிந்தும் அணியாத்து போன்ற ஆடை (transparent) பலர் நன்றாகவே பழக்கி வருகிறார்கள். கேட்டால் இந்த வயதில் போடாமல் எந்த வயதில் என்கிறார்கள்.ஆடைக்குண்டான

சாமி இல்ல, பூதம் இல்ல, பிசாசு இல்ல என்போர் மதம்தொடர்பாக கருத்து சொல்ல உரிமை இல்லை. அவர்கள் தலையீடு தேவையற்றது. அது அதனப்பிரசங்கித்தனமான வேலை.

ஆடை ஏன் வந்தது? மானத்தை காக்கவா? இல்லை! இல்லை!! தொடக்கத்தில் ஆடை ஒரு பாதுகாப்பு தான். எப்படி? குளிர்ந்த பாறையில் உட்கார்ந்தால் தணுப்பு வாட்டும். தணலாய் தகிக்கும் பாறை மேல் உட்கார்ந்தால் குண்டியை சுட்டுவிடும். இதை தடுக்கும் செவ்விய வழியாகத்  தான் விலங்கின் தோலை அரையில் கட்டி குண்டியை பாதுகாக்கத்தான் ஆதிமனிதன். காலில் செருப்பு வந்ததும் அதே பாதுகாப்பிற்கு தான். அதன் பின் நாகரிகம் வளர வளர தன் உயர் நிலையை காட்ட  சட்டையை கொண்டு வந்தான். இதை சுமேரிய பாரசீக சிலைகள், ஓவியங்களில் காணலாம். ஆனால் எகுபதில் அரசர் திறந்த மார்புடன் இருந்தனர்.  எனவே ஆடை சமூக அந்தஸ்து, பருவ சூழல் ஆகியவற்றால் இடத்திற்கு இடம் மாறுபட்டது. இந்தியாவில் ஆடவர் பெருபாலும் திறந்த மார்பினராய் இருந்தனர். வணிகர், அரசர் உள்ளிட்ட செல்வர் மட்டும் விரும்பிய போது சட்டை அணிந்தனர். இது மேலைஆசிய / அயலக அரசர் படையெடுப்பின் தாக்கத்தால் ஏற்பட்டது. 

இனி, ஆன்மீகத்திற்கு வருவோம். தந்திர யோக ஆன்மீகத்தில் ஈடுபட்ட இமாச்சலத்து ஆடவர் பிச்சை எடுத்து உண்ணும் தவ நெறியை கைக்கொணடவர். தவத்தோர் பெரும்பாலும் மரவுரி ஆடையை அணிந்தனர். அது இடுப்பை சுற்றித் தான் இருக்கும். மேலாடை கிடையாது. அவர்கள் இமாச்சலத்தை விட்டு பிற இடங்களுக்கு பரவிய பின் மரவுரிக்கு மாற்றாக கோவணத்தை அணிந்தனர். பிச்சை எடுத்து வாழ்வோர் சிலர் அந்த கோவணமும் சுமை என்று கருதி  அம்மணமாக திரிந்தனர். இவர்களை திகம்பரர் என்றனர். சமணரில் மகாவீரரின் பிரிவு இதை பின்பற்றியது. 

ஆடை ஒரு சுமை என்பதற்கு ஒரு கதை உண்டு, காட்டில் தவத்தில் ஈடுபட்ட ஒரு துறவி  தனது உணவிற்கு தனது மாணாக்கனை பிச்சைக்கு அருகில் இருந்த கிராமத்திற்கு அனுப்புவார். அவன் பிச்சை எடுக்கும் போது மட்டும் ஆடை அணிந்து செல்வான். ஒருபோது அந்த துறவி தன் மாணவனிடம் நான் வடநாட்டிற்கு திருச்செலவு செல்ல இருக்கிறேன் எனவே இந்தக்  குடிலை நன்றாகப் பார்த்துக் கொண்டு நான் சொல்லிய பயிற்சிகளை தவறாமல் செய்து வா என்று கட்டளையிட்டுவிட்டு சென்றுவிடுகிறார். மாணவன் வழக்கம் போல் பிச்சை எடுத்து வந்து விட்டு தன் துணியை கொடியில் உலர்த்திவிட்டு தன் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுகிறான். இப்படியே சில நாள்கள் கடக்கின்றன. ஒரு நாள் அவன் பிச்சைக்கு செல்ல தன் துணியை எடுக்கிறான். அதை எலி கடித்துவிட்டிருந்தது. எனவே பிச்சை எடுக்க சென்ற போது கூடவே ஒரு பூனையை கொண்டுவருகிறான் எலியை ஒழிக்க!! தனது பிச்சையில் சிறிதளவு பூனைக்கு கொடுக்கிறான். நாள் செல்லச் செல்ல பூனை இளைக்கிறது. எனவே பூனைக்கு பால் வைக்க பசு ஒன்றை தானமாக பெற்று வருகிறான். பூனையின் நிலை தேறியது ஆனால் பசு இளைத்தது. இப்போது பசுவை வளர்க்க ஒரு வயலை ஏற்படுத்துகிறான். இப்போது வயலை கவனிக்க ஆள் தேவை. அதனால் ஒரு பெண்ணை மணக்கிறான். பிள்ளை பேற்றால் குடும்பம் பெருக்கிறது. வீட்டில் வறுமை தாண்டவம்  ஆடுகிறது. வடக்கே சென்ற குரு தனது குடிலை நோக்கி வருகிறார். குடில் இல்லை ஆனால் அங்கே வயலும் வீடும் மாடும் கட்டி இருக்க ஒரு பெண் குழந்தைகளோடு வெளியே நிற்கிறாள். இதை பார்த்த அவர் தான் வந்த இடம் தவறோ என்று ஐயுறுகிறார்.    அப்போது அங்கே வந்த மாணவன் தனது அறியாமையால் தான் படும் துன்பத்தை குருவிடம் கூறி புலம்புகிறான். ஒரு ஆடையால் அவனுக்கு இந்த துன்பம் நேர்ந்தது.  

இனி, வடக்கே இருந்து துறவிகளாக வந்த பிராமணர் தம் பிச்சை வாழ்க்கை காரணமாக மேல் சட்டை அணிவதில்லை. பிற்பட்ட காலத்தில் துறவு வாழ்க்கை போய் கோவில் பூசக வாழ்க்கை வாய்த்த போதும் மேல் சட்டை அணியாது இருப்பதை ஒரு ஆன்மீக ஒழுக்கமாகவே  கருதினர். இன்றும் அது தொடர்கிறது, இதாவது கோவிலுக்கு போகும் போது ஆடவர் சட்டை அணியக்கூடாது என்று. இந்தியாவில் சட்டை அணிவது ஆங்கிலரது அலுவலக ஒழுக்கமாக இந்தியாவில் திணிக்கப்பட்டது. இந்தியாவில் ஆடவர் சட்டை அணியாததை யாரும் கவர்ச்சியாகவோ, அசிங்கமாகவோ கருதுவதில்லை. மேலை நாட்டில் இன்று பல பெரிய ஆடவர் கூட தெருவில் trouser அணிந்து தான் நடக்கின்றனர். இங்கும் சிலர் அப்படி நடக்கின்றனர். அதை எவரும் அசிங்கம் என்று கருதுவதில்லை. அதேநிலை தான் இங்கும் கோவிலில் சட்டை அணியாததற்கு கருத வேண்டும். நாட்டிற்கு நாடு காலத்திற்கு காலம் மனித ஒழுக்கம் மாறுகிறது. வரும் காலத்திலும் மாறலாம். AC அறையில் இருக்கும் போது எதற்கு ஆடை என்று கூட கருதலாம். மேலை நாட்டவர் பலர் இரவில் அம்மணமாக படுகின்றனர். 

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகளான பனியன், லெக்கிஸ் இல்லாமல் கோவிலுக்கு வந்தால் போதும். ஆண்கள் லுங்கியை தவிர்க்கலாம். நமது பண்பாட்டு உடையான  வேட்டியை அணியலாம். சட்டை அவரவரது விருப்பம். 

Muthamizh Vendhan

unread,
Aug 15, 2021, 10:14:48 AM8/15/21
to tamilmanram
ஓநாயின் அறிவுரை எனக்கு தேவையில்லை. இரண்டகம் செய்யும் வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். அது கேவலமான புத்தி. இது எனது வேண்டுகோள். இல்லையென்றால் நான் சுக்குநூறாக உடைத்துக்கொண்டு இருப்போம் உங்கள் சகுனி வேலைகளை...

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 15, 2021, 12:06:44 PM8/15/21
to தமிழ் மன்றம்
On Sun, Aug 15, 2021 at 7:44 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
ஓநாயின் அறிவுரை எனக்கு தேவையில்லை. இரண்டகம் செய்யும் வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். அது கேவலமான புத்தி. இது எனது வேண்டுகோள். இல்லையென்றால் நான் சுக்குநூறாக உடைத்துக்கொண்டு இருப்போம் உங்கள் சகுனி வேலைகளை...

நேற்று தானே திருத்தமான மனநிலையில் கருத்து சொன்னீர். பின் மீண்டும் ஏன் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது.

தேமொழி

unread,
Aug 15, 2021, 2:24:16 PM8/15/21
to தமிழ் மன்றம்
********** தமிழா? திராவிடமா?  எது சரி?  தினமணி இதழில் ஆய்வு **********

source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/11/நாம்-திராவிடர்கள்-அல்ல-3677694.html
ஆகஸ்ட் 11, 2021 
"நாம் திராவிடர்கள் அல்ல!..."
-- ஜனனி ரமேஷ்
------------------------------------------------------------
தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் 'தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் 'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் 'தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. 'திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை. 
------------------------------------------------------------
**********

source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/12/தமிழ்-தேசியத்தை-உள்ளடக்கியதே-திராவிட-தேசியம்-3678113.html
ஆகஸ்ட் ஆகஸ்ட் 12, 2021
தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!...
-- கே.எஸ். இராதாகிருஷ்ணன்

திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.

source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/13/தமிழுக்கான-ஸம்ஸ்க்ருத-சொல்லே-திராவிடம்-3679105.html
ஆகஸ்ட் 13, 2021 
"தமிழுக்கான சம்ஸ்க்ருத சொல்லே திராவிடம்!..."
-- கோதை ஜோதிலட்சுமி
------------------------------------------------------------
இன்று நாம் இங்கிலிஷ் மொழியை ஆங்கிலம் என்கிறோம். ஸம்ஸ்க்ருதத்தை வடமொழி, ஆரியம் என்கிறோம். அதுபோல, சம்ஸ்க்ருதத்தில் தமிழ் மொழியை ‘திராவிடம்’ என்று வழங்கினாா்கள். அதனால் தான், திராவிடம் என்று தேடும் பொழுது சம்ஸ்க்ருத உதாரணங்களே கிடைக்கின்றன.
------------------------------------------------------------
**********
வரிசையில் வெளிவந்த கட்டுரைகளில் தவிர்க்கப் பட்ட ஒன்றையும் இங்கு இணைக்கிறேன் 

தமிழா? திராவிடமா?  எது சரி?  தினமணி இதழில் ஆய்வு 
source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/12/தமிழ்-தேசியத்தை-உள்ளடக்கியதே-திராவிட-தேசியம்-3678113.html
ஆகஸ்ட் ஆகஸ்ட் 12, 2021

தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!...
-- கே.எஸ். இராதாகிருஷ்ணன்

------------------------------------------------------------
திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.
------------------------------------------------------------
தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சம்ஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை ஆண்டவா்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரா்களாய் விட்டாா்கள் (அதிகாரம் 10, 44-ஆவது செய்தி, மனுதா்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. ‘தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹு ஆஸ்வாத்ய தவயத்’”என்கிறது ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீா் சுவட்டில் தென்னாட்டு பிராமணா்களை ‘திராவிட பிராமணா்கள்’ என்று குறிபிட்டுள்ளது. பாா்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வைணவ ஆச்சாரியாா் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றாா் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல ‘பாகவதம்’ என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56 நாடுகளில் திராவிட நாடும் ஒன்று.

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன் முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

இராமாநுஜா் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், ‘திருக்கோளூா் பெண்பிள்ளை ரகசி’யத்தில் இராமாநுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

திரமிளம்,“திராவிடம்”என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. திரமிள சங்கம் மதுரை சமண முனிவா் வஜ்ரநதியால் கி.பி 470-இல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்ற பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம்.

தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னா் விக்கிரம சோழனின் 11-ஆவது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது.“திரிபுவன சக்கிரவா்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிா்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம்– 714, பக் 670, செளத் இண்டியன் டெம்பிள் இன்ஸ்கிரிப்ஷன் - வால்யூம் 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது.

இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூா் தற்போதைய தமிழகத்தின் கரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
‘யிப்படி அநேகஞ் சதுா்யுகம் பூசை கொண்டருளிய தேவா் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோா்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தா் பிரியன் பக்தவத்சல பாா்பதி வல்லவன் பாா்பதி மநோகரன் பாா்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவா்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பாா்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்..’” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் புலவா் செ. இராசு).

இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவா் செ. இராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளாா். இந்தச் செப்பேடும் 1584-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுசோ்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூா்காங்கேயா் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.
‘செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பாா்வதி தேவியம்மான அா்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்..’ (பக் 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துபி ஆண்டில் எழுதப்பட்டது). இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், ‘திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் போ் பெற்றவரான, சான்றோா் குலத்தில், மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகா் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான..’ (பக் 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தா், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாா் போன்றவா்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.

சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞா் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 - 1936) வாழ்க்கை வரலாற்றை கபாலி சாஸ்திரி எழுதினாா். ‘வாசிஷ்ட வைபவம்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் திராவிட தேசத்தில் ‘சோ்மாதேவி’ என்ற இடத்தில் கிா்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவா்களால் பாரத்வாஜாச்ரமம் ஒன்று நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ - பழ. அதியமான்).

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளாா். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் திவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியா் ச.வே. சுப்பிரமணியம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றாா். பிஷப் காா்டுவெல் 1856-இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் திராவிடம் என்ற பதத்தை நிலைநாட்டிய அதே காலகட்டத்தில் அயோத்தி தாசா், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். 1899-இல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிஷப் காா்டுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனாா், ‘திராவிட நல் திருநாடு’”என்று குறிப்பிட்டிருக்கிறாா். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907-இல் ‘திராவிடாபிமானி’”என்ற வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறாா். ‘திராவிட உத்கல வங்கா’ என்று பாடுகிறது இரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.

பெரியாா், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழைமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தமிழா் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வாா்த்தை புழக்கத்தில் உள்ளது.

திராவிடம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயா் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.

கட்டுரையாளா்: செய்தி தொடா்புச் செயலளாா், திராவிட முன்னேற்றக் கழகம்.

______________________________________________________________________

தேமொழி

unread,
Aug 15, 2021, 2:31:58 PM8/15/21
to தமிழ் மன்றம்
இவ்வரிசை தொடர்ந்திருந்தால் மற்ற கட்டுரைகளையும்  பகிரவும்..
நன்றி. 

Seshadri Sridharan

unread,
Aug 15, 2021, 11:12:01 PM8/15/21
to தமிழ் மன்றம்
தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!...
-- கே.எஸ். இராதாகிருஷ்ணன்

------------------------------------------------------------
திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.
------------------------------------------------------------

தமிழ், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, தமிழர் நலம் ஆகிய இவற்றை பாதுகாப்பது தான் தமிழ்த்தேசிய கருத்தியல் குறிக்கோள். உயிருடன் வாழ்ந்த போது தமிழையும் , தமிழரையும் இழித்துப்பேசிவிட்டு தமிழக நிலங்கள், உரிமைகள் திராவிடர் தூக்கிச்செல்ல உழைத்த ஈவேராவின் திராவிடம் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியதாக இருக்கும்?

தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சம்ஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

திராவிடம் இடத்தை குறித்தே சமஸ்கிருத இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை இராதாகிருஷ்ணன் மறைக்கிறார். அது மொழியை குறித்ததல்ல  

மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை ஆண்டவா்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரா்களாய் விட்டாா்கள் (அதிகாரம் 10, 44-ஆவது செய்தி, மனுதா்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. ‘தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹு ஆஸ்வாத்ய தவயத்’”என்கிறது ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’.

மனுஸ்ம்ரிதி 2,000 ஆண்டுகள் பழமையானதல்ல 300 ஆண்டுகளே பழமையானது. ஆதிசங்கரர் 1,300 ஆண்டுகளவில் வாழ்ந்தவர். அதில் தென்னக குழவி என்ற பொருளில் தான் அவர் கூறுகிறார் மொழிக் குழந்தை என்ற பொருளிலல்ல 
 
பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீா் சுவட்டில் தென்னாட்டு பிராமணா்களை ‘திராவிட பிராமணா்கள்’ என்று குறிபிட்டுள்ளது. பாா்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வைணவ ஆச்சாரியாா் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றாா் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல ‘பாகவதம்’ என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56 நாடுகளில் திராவிட நாடும் ஒன்று.

இங்கும் திராவிடம்  இடப்பொருளிலேயே வழங்கியுள்ளது. 

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன் முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

இராமாநுஜா் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், ‘திருக்கோளூா் பெண்பிள்ளை ரகசி’யத்தில் இராமாநுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

திரமிளம்,“திராவிடம்”எ

இங்கும் தென்னகம் என்று பொருள் தான்.  

ன்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. திரமிள சங்கம் மதுரை சமண முனிவா் வஜ்ரநதியால் கி.பி 470-இல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்ற பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம்.

தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னா் விக்கிரம சோழனின் 11-ஆவது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது.“திரிபுவன சக்கிரவா்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிா்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம்– 714, பக் 670, செளத் இண்டியன் டெம்பிள் இன்ஸ்கிரிப்ஷன் - வால்யூம் 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது.

இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூா் தற்போதைய தமிழகத்தின் கரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கும் இடமே பொருள்படுகிறது. 

அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
‘யிப்படி அநேகஞ் சதுா்யுகம் பூசை கொண்டருளிய தேவா் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோா்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தா் பிரியன் பக்தவத்சல பாா்பதி வல்லவன் பாா்பதி மநோகரன் பாா்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவா்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பாா்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்..’” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் புலவா் செ. இராசு).

இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவா் செ. இராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளாா். இந்தச் செப்பேடும் 1584-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுசோ்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூா்காங்கேயா் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.
‘செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பாா்வதி தேவியம்மான அா்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்..’ (பக் 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துபி ஆண்டில் எழுதப்பட்டது). இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திரும்பத் திரும்ப இடப்பொருள்தான் வருகிறது. தமிழ் மொழியை  குறிப்பதல்ல திராவிடம். ஏதேனும் தமிழ் இலக்கியத்தில் திராவிடம் உள்ளதா? இல்லையே. 

அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், ‘திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் போ் பெற்றவரான, சான்றோா் குலத்தில், மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகா் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான..’ (பக் 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தா், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாா் போன்றவா்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.

சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞா் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 - 1936) வாழ்க்கை வரலாற்றை கபாலி சாஸ்திரி எழுதினாா். ‘வாசிஷ்ட வைபவம்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் திராவிட தேசத்தில் ‘சோ்மாதேவி’ என்ற இடத்தில் கிா்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவா்களால் பாரத்வாஜாச்ரமம் ஒன்று நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ - பழ. அதியமான்).

தேசம் இங்கும் இடப்பொருள் தான் . இராதா கிருஷ்ணன் ஒரு தெலுங்கர் என்பதால் எப்படி எல்லாம் திராவிடத்தை தமிழ் என்று மொழிக்குறிப்பாக காட்டமுயன்று தோற்றிருக்கிறார்.

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளாா். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் திவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியா் ச.வே. சுப்பிரமணியம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றாா். பிஷப் காா்டுவெல் 1856-இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் திராவிடம் என்ற பதத்தை நிலைநாட்டிய அதே காலகட்டத்தில் அயோத்தி தாசா், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். 1899-இல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிஷப் காாடுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனாா், ‘திராவிட நல் திருநாடு’”என்று குறிப்பிட்டிருக்கிறாா். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907-இல் ‘திராவிடாபிமானி’”என்ற வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறாா். ‘திராவிட உத்கல வங்கா’ என்று பாடுகிறது இரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.

எல்லாம் கால்டுவெல்லை பின்பற்றி போட்டுக்கொண்ட சூடு. 

பெரியாா், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழைமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தமிழா் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வாா்த்தை புழக்கத்தில் உள்ளது.

திராவிடம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயா் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.

கட்டுரையாளா்: செய்தி தொடா்புச் செயலளாா், திராவிட முன்னேற்றக் கழகம்.

இடத்தை குறிக்கும் ஒரு அயல் சொல்லை பொருள்மாற்றி  தமிழ் மொழியை குறிக்கும் தமிழ்ச்சொல் தான் "திராவிடம்" என்று கற்பனையாக ஏற்றிக்கூறுகிறார் இந்த பெரியாரிய முட்டாள். ஈவேரா தனக்கு அறிவாளிகள் வேண்டாம் முட்டாள்கள்  மட்டும் இருந்தால் போதும்  என்று வேண்டி வேண்டி தவமிருந்து பெற்ற  பிள்ளைகள் அல்லவா அதனால் அவருடைய அடிவருடிகள் எல்லாரும் முட்டாளாக, மடையராக, மட்டியாக, அறிவுகெட்டவராகவே இருப்பர். இது ஈவேரா வேண்டிப் பெற்ற பிள்ளை வரம். இதற்கு தமிழர் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். 

திராவிடரான நாயுடு, ரெட்டி, ராஜு உள்ளிட்ட அனைவரும் வெள்ளைத்தோல் ஆரியர். அதனால்தான் தமது ஐரோப்பிய நிலத்து அடையாளமான ஓநாயை அவ்வப்போது நினைவு கூர்கின்றனர். ஓநாய் ஆசிய கண்ட விலங்கு அல்ல. இப்படி திராவிடருக்கு எப்போதும் ஆரியப்பித்து தான்.  அவருடைய தெலுங்கு கன்னடம் கூட 80% சமஸ்கிருத சொல்லாட்சி உள்ளவை தான் . இதைத்தான் விளக்கின் அடியிலேயே இருட்டு உள்ளது என்றனர் நம் பெரியோர். ஆனால் முட்டாள்கள் இதை ஒருபோதும் உணரப்போவதும் இல்லை ஒப்புக்கொள்ளப்ப போவதுமில்லை. சாவு ஒன்று தான் அவர்களை இந்த கோரப்பிடியில் இருந்து விடுவிக்கும். 

Seshadri Sridharan

unread,
Aug 15, 2021, 11:27:18 PM8/15/21
to தமிழ் மன்றம்
அமெரிக்கா கனடா ஆத்திரேலியா போன்ற மேலை நாடுகளில் வாழும் தமிழ்ப்  பகுத்தறிவாளர்கள் தமது நாட்டில் trouser உடன் திரியும்  ஆடவரை நிரந்தரமாக பேன்டு போட வைத்தால், two piece ல் திரியும் கடற்கரை மாதுகளை நாகரீகமான உடைய அணியச் செய்தால் "மானம் காத்த மற மங்கை" என்ற பட்டத்தையும் "மானம் காத்த மறதமிழன் என்ற பட்டத்தையும் நான் மின் முகவரி மூலம் அனுப்ப அணியமாக உள்ளேன். இதற்கு 100 பேரை அவ்வாறு மாற்றிய காணொளியை அனுப்பினால் போதும்.  

சென்னை சவுகார் பேட்டையில் பெண்கள் சிலர் தெருக்களில் கீழ்வரும் படத்தில் உள்ளது போல திரிகின்றனர். இதற்கு மேலாடை இல்லாத ஆடவர் எவ்வளவோ மேல். இத்தகு ஆடைகள் போட்டு பெண்கள் வரக்கூடாது.  

image.png     image.png    image.png

தேமொழி

unread,
Aug 15, 2021, 11:42:57 PM8/15/21
to தமிழ் மன்றம்
என்ன கொடுமை இது?
உங்கள் இழையின் விவாதக் கருத்து திசை திரும்பக் கூடாது  என்று நான் எவ்வளவு முயன்றும் தனி இழையாக அமையாமல் இங்கேயே வந்து வந்து எனது மடல்கள் விழுந்தன.  இதனால் இழையில்   என் பதிவுகளை நீக்கினேன். 
நீங்களே திசை திருப்பிக் கொண்டு இருக்கிறீர்களே ஏன்?
 
திராவிடம் என்பதன் தவிர்க்கப் பட்ட மாற்றுக் கோண கட்டுரை இடம் பெற்றதாலோ !!!

தேமொழி

unread,
Aug 15, 2021, 11:45:39 PM8/15/21
to தமிழ் மன்றம்
On Sunday, August 15, 2021 at 8:27:18 PM UTC-7 sseshadri69 wrote:
அமெரிக்கா கனடா ஆத்திரேலியா போன்ற மேலை நாடுகளில் வாழும் தமிழ்ப்  பகுத்தறிவாளர்கள் தமது நாட்டில் trouser உடன் திரியும்  ஆடவரை நிரந்தரமாக பேன்டு போட வைத்தால், two piece ல் திரியும் கடற்கரை மாதுகளை நாகரீகமான உடைய அணியச் செய்தால் "மானம் காத்த மற மங்கை" என்ற பட்டத்தையும் "மானம் காத்த மறதமிழன் என்ற பட்டத்தையும் நான் மின் முகவரி மூலம் அனுப்ப அணியமாக உள்ளேன். இதற்கு 100 பேரை அவ்வாறு மாற்றிய காணொளியை அனுப்பினால் போதும்.  

சென்னை சவுகார் பேட்டையில் பெண்கள் சிலர் தெருக்களில் கீழ்வரும் படத்தில் உள்ளது போல திரிகின்றனர். இதற்கு மேலாடை இல்லாத ஆடவர் எவ்வளவோ மேல். இத்தகு ஆடைகள் போட்டு பெண்கள் வரக்கூடாது.  

பிறகு ஏன் கோவிலில் அரைகுறை ஆடை பெண்களை  சிலை வடித்து வைத்து கண்டு களிக்கிறார்கள் 

தேமொழி

unread,
Aug 15, 2021, 11:49:30 PM8/15/21
to தமிழ் மன்றம்

திராவிடம் குறித்து மாரிராஜன் தொல்லியல் இலக்கிய சான்றுகள்  கொடுத்து எழுதிய கட்டுரை.  மேலுள்ள சுட்டியில் இருக்கிறது. 
பலபடங்கள் கொடுத்து எழுதியுள்ளார் . 
வெட்டி ஒட்டுகையில் படங்கள் வரவில்லை.  ஆர்வம் உள்ளவர் சுட்டி வழி சென்று படிக்கலாம். 

திராவிடம் ....
-- மா.மாரிராஜன்

திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... 
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 
இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 

மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.

References:
1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.
2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச்  சொற்களும் இலக்கணக் கூறுகளும்.
3. Epigrphia Indica Vol. 20.
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில்  - திராவிடக்குறிப்பு

Seshadri Sridharan

unread,
Aug 16, 2021, 6:05:46 AM8/16/21
to தமிழ் மன்றம்
On Mon, Aug 16, 2021 at 9:15 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Sunday, August 15, 2021 at 8:27:18 PM UTC-7 sseshadri69 wrote:
அமெரிக்கா கனடா ஆத்திரேலியா போன்ற மேலை நாடுகளில் வாழும் தமிழ்ப்  பகுத்தறிவாளர்கள் தமது நாட்டில் trouser உடன் திரியும்  ஆடவரை நிரந்தரமாக பேன்டு போட வைத்தால், two piece ல் திரியும் கடற்கரை மாதுகளை நாகரீகமான உடைய அணியச் செய்தால் "மானம் காத்த மற மங்கை" என்ற பட்டத்தையும் "மானம் காத்த மறதமிழன் என்ற பட்டத்தையும் நான் மின் முகவரி மூலம் அனுப்ப அணியமாக உள்ளேன். இதற்கு 100 பேரை அவ்வாறு மாற்றிய காணொளியை அனுப்பினால் போதும்.  

சென்னை சவுகார் பேட்டையில் பெண்கள் சிலர் தெருக்களில் கீழ்வரும் படத்தில் உள்ளது போல திரிகின்றனர். இதற்கு மேலாடை இல்லாத ஆடவர் எவ்வளவோ மேல். இத்தகு ஆடைகள் போட்டு பெண்கள் வரக்கூடாது.  

பிறகு ஏன் கோவிலில் அரைகுறை ஆடை பெண்களை  சிலை வடித்து வைத்து கண்டு களிக்கிறார்கள் 

தமிழ்  வேந்தர் ஆட்சியில் தூண்களில் வெறுமனே இலை பூ என்று இருந்த புடைப்பு சிற்பம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திராவிட தெலுங்கரின் கைவண்ணம் தூணில் புடைப்பு சிற்பங்களாய் பெண்கள் வெளிப்பட்டனர். இதற்கு சாதவாகன வாரிசுகளை தான் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். 

பாதுகாப்பு காரணங்களுக்காக குறிஞ்சி நிலத்தில் காலுக்கும் குண்டிக்கும் தோலாடை அணிந்த ஆதி மனிதன் மெல்ல மலை இறங்கி முல்லை, மருதம், நெய்தல் என  பரவினான். ஆனால் அங்கெல்லாம் முள்ளில் இருந்து காக்க காலைத்  தவிர குண்டியை பாதுகாக்க தோலாடை தேவை இல்லாத போது  ஏன் பழைய பழக்கத்திலேயே ஆடை அணிய வேண்டும்?  பின்பு அதை மெல்லிய இழைகளால் நெய்த ஆடைக்கு மாறவேண்டும்? எனக்கு இதற்கு விடை ஏதும் தட்டுப்படவில்லை. தட்டுப்பாட்டால் தட்டச்சி அனுப்புக. 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2021, 11:04:48 AM8/16/21
to தமிழ் மன்றம்
On Mon, Aug 16, 2021 at 9:19 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

திராவிடம் குறித்து மாரிராஜன் தொல்லியல் இலக்கிய சான்றுகள்  கொடுத்து எழுதிய கட்டுரை.  மேலுள்ள சுட்டியில் இருக்கிறது. 
பலபடங்கள் கொடுத்து எழுதியுள்ளார் . 
வெட்டி ஒட்டுகையில் படங்கள் வரவில்லை.  ஆர்வம் உள்ளவர் சுட்டி வழி சென்று படிக்கலாம். 

திராவிடம் ....
-- மா.மாரிராஜன்

திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 

மாரிராஜன் எடுத்த எடுப்பிலேயே உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். அயலவர் அழைத்த பெயர் என்று.

இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  ஆக திராவிட என்பது தமிழ்வழி வந்ததல்ல.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இது திராவிட அரசியல் தாக்கத்தால் உண்டானது இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 
 
இதுவும்  தமிழ் வழிச்சான்று அல்ல மாறாக அயலவர் தவறாக, சிதைவாகப் பலுக்கியது 
 
மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அடுத்தவன் கொடுத்த பெயர் நமக்கு எதற்கு? நமக்கு நாம் கொண்ட பெயரே போதும்  

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தமிர  த்ரவிட ஒலிப்பில் காத தொலைவு உள்ளது 

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

இங்கே தெளிவாக த்ரமிட  அயலவர் பலுக்கும்  முறை என்று காட்டுகிறது. த்ரமிட த்ராவிட இரண்டும் ஒலிப்பால், பொருளால்  வெவ்வேறரானவை 

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

இங்கும் வேறுபாடு தெளிவாக உள்ளது. 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

ஆம் த்ரமிட என்பது த்ராவிட என்று ஆகவே ஆகாது. 

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

 த்ரமிட என்பதன் பொருளில் வராமல் தென்னக  என்று இடத்தை குறிக்கும் த்ராவிட என்ற பொருளில் வந்துள்ளது. 

  த்ரமிட,  த்ராவிட  இரண்டையும் ஒலி ஒற்றுமையானவை என்று கொண்டு குழப்பியுள்ளார்.

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.
 
 தென்னக எழுத்து 

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

DAmili, த்ரவிடி  இரண்டும் ஒலிப்பு வேற்றுமை உள்ளவை என்பது தெளிவாகவில்லையா?

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

இங்கும் thamila, dravida  ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 
 
மிக தெள்ளத் தெளிவிக்க தமிட தமிழோடு பொருந்துகிறது. திரவிட அவ்வாறு பொருந்தவில்லையே??

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

திராவிட என்பது இங்கு தென்னக சங்கம் என்றே பொருள்படும்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

இதுவும் தமிழ் என்பதன் வடபால் திரிபு திராவிட என்பதன் திரிபோடு ஒத்துப்போக வில்லை. 

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

வடவர் குறிப்பை  எப்படி தமிழரின் குறிப்பாக கொள்ள முடியும். 

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

வடமொழி அறிந்தவர் இந்நூல்களில் இச்சொல் குறிக்கும் பொருளை சுட்டுவதே நன்மை. 

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

ஆந்திர என்பது தமிழகத்தில் அல்லவே 
 
13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

இடம் சுட்டியதே 
 
16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

தென்னாடு என்று பொருள். தமிழ்நாடு என்று பொருள் அல்ல.
 
19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கைகால் எல்லாம் ஓய்ந்து போக  தேடி எடுத்துள்ளார். ஆனால் ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே. அது அயலவர் பயன்படுத்திய வடக்கத்திய பலுக்கம் தானே. அடுத்தவன் நம்மை அழைத்த பெயர் நமக்கு எதற்கு? 

தேமொழி

unread,
Aug 16, 2021, 8:24:25 PM8/16/21
to தமிழ் மன்றம்
///ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே. ///

தமிழ்த்தாய் வாழ்த்து ???

Seshadri Sridharan

unread,
Aug 17, 2021, 12:32:24 AM8/17/21
to தமிழ் மன்றம்
On Tue, Aug 17, 2021 at 5:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே. ///

தமிழ்த்தாய் வாழ்த்து ???

மனோன்மணியம் சுந்தரனார் ஆரிய - திராவிட கருத்தியலுக்கு ஆட்பட்டவர். அவர் போன்றோரால் தான் இன்று தமிழர் தெலுங்கர் அடிமைகளாக உள்ளனர். சுந்தரனார் ஒரு திராவிடக் கருத்தியல் அடிமை. கன்னடர், தெலுங்கர், மலையாளியர் இந்த திராவிட கருத்தியலை ஏற்கவில்லை. ஆனால் தமிழன் மட்டும் இந்த திராவிடப்  பொறியில் சிக்கவைக்கப்பட்டு கன்னடன், தெலுங்கன் மலையாளி ஆகியயோரை நீ வா! நீ வா ! என்று கட்டியணைத்து தன்னுடைய உடமைகளை உரிமைகளை அவரிடம் இழந்து அடிமை ஆனான்.

தேமொழி

unread,
Aug 17, 2021, 12:38:27 AM8/17/21
to தமிழ் மன்றம்

திராவிட வேதம் என அறியப்படும் நூல் எது?

_________________

கோடிட்ட இடத்தை நிரப்புக 

Seshadri Sridharan

unread,
Aug 17, 2021, 5:53:44 AM8/17/21
to தமிழ் மன்றம்
On Tue, Aug 17, 2021 at 10:08 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

திராவிட வேதம் என அறியப்படும் நூல் எது?

_________________

கோடிட்ட இடத்தை நிரப்புக 

பிற்பட்ட காலத்தில் வந்த வைணவ தலைவர்கள் ஆழ்வார் பாசுரங்களை வியாக்கியானத்திற்காக அப்படி சொல்லி இருந்தாலும் ஆழ்வார்கள் திராவிடம் என்று பாடவில்லையே..

 தலையை பார்க்காமல் வாலைப் பார்கின்றீரே!!! 

தேமொழி

unread,
Aug 17, 2021, 6:23:45 AM8/17/21
to தமிழ் மன்றம்
திராவிட வேதாந்த தேசிகர் என்பவர் யார் ? 
எக்கலாத்தவர் ?
அவருக்கு எப்படி அந்தப் பட்டம் வந்தது ?  
யாரால் கொடுக்கப்பட்டது? 

Seshadri Sridharan

unread,
Aug 17, 2021, 6:52:53 AM8/17/21
to தமிழ் மன்றம்
ஸ்ரீ திராவிட உபநிஷத் ரத்நாவளி–ஸ்ரீ தாத்பர்ய ரத்னாவளி -இரண்டாம் பத்து –ஸ்ரீ வேதாந்த தேசிகன்-2018/10/24/
ஸ்ரீ திராவிட உபநிஷத் ரத்னாவளி –ஸ்லோகம் -72-/122-2018/07/20//
6–ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்-https://thiruvonum.wordpress.com–2018/10/24/
7-ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகா

அடுத்தது திராவிடம்.

“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள், முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள். எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.. பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு) “….வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார். வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.

ராபர்ட் கால்டுவெல்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (கி.பி. 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.

“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான “திராவிட இனம்” என் கருத்தாக்கம்தான்.

கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :

A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils to allied people in inferior grades of culture. The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an ethnological distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory

P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார். ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ.வெ.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.

ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது. தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில், ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.

நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் “திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். – ஜனவரி 5, 2011.

தேமொழி

unread,
Aug 17, 2021, 11:30:36 AM8/17/21
to தமிழ் மன்றம்
நன்றி 
உங்கள் பதில்களைத் தொகுத்தால்..கிடைப்பது....

(1)
திராவிட வேதம் என அறியப்படும் நூல், வைணவ ஆழ்வார்கள் அருளிய ""நாலாயிர திவ்விய பிரபந்தம்""  என்ற நூல். 
இதனை  "தமிழ் வேதம்"  என்றும் சொல்கிறார்கள்  பார்க்க http://www.tamilvedham.org/  
ஃ திராவிட வேதம் = தமிழ் வேதம்
திராவிடம்   =   தமிழ் 
என்பதைக் குறித்துள்ளார்கள் வைணவர்கள் என்பது தெளிவு 

(2)
அத்துடன், வடக்குத் திருவீதிப்பிள்ளை  என்பவரை "திராவிட வேதாந்த தேசிகர்"  என்று அழைத்து வேறு  மகிழ்ந்தார்கள் 

(3)
நீங்கள் கொடுத்த அதே தளத்தில் இங்கு உள்ள இந்த நூலைப் பார்க்கவும். 

சுலோகம் 19 என்ன சொல்கிறது - 
  Slokam 19:
yaH samskrta kavitAyAm prauDhimnAnveti kUranAthasutam |
draviDa (drAmiDa) kavitAmArge parakAlam vA atha bhaktisAram vA ||

Meaning:
In composing excellent Sanskrit SrI sUktis, svAmi DeSikan
matched ParASara BhaTTar, the son of KUreSar. In creating
Tamizh Prabandhams, his excellence reminded one of Kaliyan and
Tirumazhisai AzhvAr.  

draviDa (drAmiDa) = Tamizh 
parasarar.JPG

(4)
  திருவாய்மொழித் தனியன்கள் சொல்வது.  

 1. ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்தது

    பொ - ரை : ‘அடியார்கட்கு அமிர்தமாய் இருப்பதும், எல்லா மக்களையும் ஆனந்திக்கச் செய்வதும், எல்லா உறுதிப்பொருள்களையும் கொடுக்க வல்லதும், ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய உபநிடதங்களின் தொகுதியாய் இருப்பதும், நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்’ என்றவாறு.
        பக்தாம்ருதம் விச்வஜநாநு மோதனம்
        ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோபவாங்மயம்
        ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
        நமாம்யகம் த்ராவிட வேத ஸாகரம்.

    பொ - ரை : ‘அடியார்கட்கு அமிர்தமாய் இருப்பதும், எல்லா மக்களையும் ஆனந்திக்கச் செய்வதும், எல்லா உறுதிப்பொருள்களையும் கொடுக்க வல்லதும், ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய உபநிடதங்களின் தொகுதியாய் இருப்பதும், நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்’ என்றவாறு.

 த்ராவிட வேத ஸாகரம் = தமிழ் வேதக்கடல் 

இவ்வாறு சான்றுகள் 1 முதல் 4 வரையில் வைணவர்களும் வைணவ நூல்களும் சொல்வது த்ராவிட  = தமிழ் 

*** ஆழ்வார்கள் காலம் மலயாளமும் உருவிவாகவில்லை. 
ஆகவே தமிழைத்தான் அவ்வாறு திராவிடம் கூறினார்கள் என்பதும் தெளிவு**

இதில்  நீங்கள் 
ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே 
என்று சொல்கிறீர்கள்.  

சான்றுகள் காட்டுவது இவை.  நிற்க..

பிற்காலத்தில் வந்த .... 
சுந்தரம் பிள்ளை "சுந்தரனார் ஒரு திராவிடக் கருத்தியல் அடிமை"  என்று வேறு குற்றம் சாட்டுகிறீர்கள்.  

இருக்கும் நிலையை அடிப்படையாக வைத்து ஆய்வு  செய்த 
ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் (கி.பி. 1777 – 1789) , 
கால்டுவெல் (1814 –  1891) எல்லோரையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.  

ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே என்று வியக்கும் உங்களுக்காக ..  
தமிழ்ச் செய்யுளில் தாயுமானவர் (1705-1742)  “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார். 
காலத்தைக் கவனியுங்கள். 

“….வடமொழியிலே 
வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே
வந்ததாவி வகரிப்பேன் 
வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிது புகல்வேன் 
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தை….” 

தமிழ்ச் செய்யுளில் தாயுமானவர் (1705-1742)  “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார். 
“….வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” 
“முதலில் வடமொழியில் வந்ததென்பார்; வட மொழியில் வல்லவர் ஒருவர் வந்து விட்டால் திராவிட மொழியில் வந்ததென்பார்” என்று கூறினார் தாயுமானவர். 
இதனால் படித்தவர்களை விடப்படிக்காதவர்களே மேல் என்கிறார்.

மக்கள் பிறர் பால் வாதிடுதல் இயல்பு. இதனைத் தாயுமானவர்மேல்வருமாறு பாடலில் கூறுவதுடன் திராவிடம்....  வடமொழி....  தமிழ்மொழி....   என்று மாற்றி மாற்றி  வாதிடுவார்கள் என்று கால்டுவெல்லும் அவருக்கும்  மூத்தவரான  ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ்  பிறக்கும் முன்னரே   எழுதி ..... ஆமாம் "தமிழ்" இலக்கியத்தில் தான் எழுதி வைத்துள்ளார். 

ஆகவே, எனக்கு என்னவோ வைணவ இலக்கியவாதிகள்தான் திராவிடக் கருத்தியல் அடிமைகளாகத் தெரிகிறார்கள்.  

பிற்காலத்தவர்கள் எல்லாம்  முற்காலத்து நடைமுறை வழக்கை,  

அதாவது திராவிடம் = தமிழ் என்ற வழக்கை 

இவர்களை அடியொட்டி  பின்பற்றினார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

Seshadri Sridharan

unread,
Aug 17, 2021, 12:30:24 PM8/17/21
to தமிழ் மன்றம்
நான் தலை என்று ஒரு பதிவில் குறிப்பிட்டது ஆழ்வார்களை, வால்  என்று குறிப்பிட்டது வைணவ ஆச்சாரியர்களை. ஏனென்றால் வைணவ ஆச்சாரியர்கள் தமது விளக்கங்களுக்கு ஆழ்வார் பாசுரங்களையே சார்ந்திருந்தனர். ஆழ்வார்கள் திராவிட என்ற சொல்லை தமது பாசுரத்தில் எங்கும் பயன் கொள்ளவில்லை. ஆழ்வார்கள் இல்லாவிடில் இவர்களுக்கு வேலையே இல்லை.  மேலும் ஆச்சாரியர்கள் இந்த பாசுரங்களின் பெருமையை தமிழில் விளக்கும் போது திராவிட வேதம் என்று குறிப்பிடவில்லை. மாறாக தமிழ்ப் பாசுரங்களின் பெருமையை அயலவருக்கு விளக்கும்போது  தான், குறிப்பாக சமசுகிருதத்தில் விளக்கும் போது தான் சமஸ்கிருத  மரபுப்படி அதை "திராவிட வேதம்" என்கின்றனர். தேசிகரின்  "திராவிட உபநிஷத் ரத்நாவளி" எந்த மொழியில் உள்ளது? சமசுகிருதத்தில். அதற்கு தான் அந்த தொடுப்பை முன்பு கொடுத்தேன். வேதாந்த தேசிகர் தமது நூலை தமிழில் எழுதவில்லை. அப்படி தமிழில் எழுதி இருந்தால்  "திராவிட" என்ற சொல்லை தவிர்த்திருப்பார்.

“….வடமொழியிலே 
வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்

வடமொழியாளருக்கு "திராவிடம்" என்றால் தான் புரியும் என்பதால் அந்த இடத்தில் அதன் பேச்சு வழக்கிற்கு இயைப அவர் "திராவிடம்" என்று சுட்டுகிறார். நன்றாக கவனியுங்கள்  இங்கே "திராவிட" என்பதை பேச்சுவழக்கில் நாம் பொய் என்பதை "புருடா " என்று சொல்வது போல தான் நக்கலாக பயன்படுத்துகிறார். அதை தமிழ்ச் சொல்லாக பயன்படுத்தவே இல்லை. புரிகிறதா?

தேசிய கீதத்தில் தாகூர் பஞ்சாபு, சிந்து, குசராது, மராத்தா என்று இடப்பெயராகவே குறிப்பிட்டுவந்து திராவிட என்று தென்னகத்தை  குறிப்பிடுகிறார். அதன் பின் ஒரிசாவை உட்கல் என்றும் பின் வங்க என்றும் இடத்தை குறிப்பிடுவதை கூர்ந்து நோக்குங்கள்.  

 அகல் விளக்கு இருளை விரட்டத்தான் ஏற்றப்படுகிறது ஆனாலும் அது தன் அடியில் இருளை அப்படியே வைத்துள்ளது. இது வேடிக்கையானது, முரணனானது, நகைப்பிற்கு உரியது. அது போலத்தான் சமசுகிருதத்தை ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இயக்கத்திற்கு சமசுகிருத்திலேயே "திராவிடம் " என்று பெயர் சூட்டியது ஒரு நகைமுரண் ஆகும். அதிலும் வெள்ளைத்தோல் ஆரியர்களான தெலுங்கர் கன்னடர், இதாவது தமது மொழியில் 80% சமசுகிருத சொல் கொண்டாரை உடன் வைத்துக்கொண்டு சமசுகிருதத்தை  ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று வெள்ளாளர் புறப்பட்டது ஒரு நகைமுரண் அன்றோ? இதற்காக வெள்ளாளர் மொத்த தமிழரையும் தவறாக வழிநடத்தி ஈவேராவின் வாயால் தமிழரை அவமானப்படச் செய்தனர்.

தமிழர் திராவிடர் அடிமையாக ஆக்கப்பட்டது யாரால்?

தேமொழி

unread,
Aug 17, 2021, 1:07:11 PM8/17/21
to தமிழ் மன்றம்
// வால்  என்று குறிப்பிட்டது வைணவ ஆச்சாரியர்களை//

நானும் அவர்களைத்தானே குறிப்பிட்டேன்!!!!
இப்பொழுது; திராவிட = தமிழ் என்று கூறிக் கொண்டிருந்தவர் யார் என்று தெரிந்ததன்றோ...
அவர்கள் கூற்றுப்படி ...... 
திராவிடம்  = தமிழ் 

அவ்வாறென்றால் 
திராவிடர் = தமிழர் 
என்றுதான் பொருள் கொள்ள முடியும்  

Seshadri Sridharan

unread,
Aug 18, 2021, 12:10:48 AM8/18/21
to தமிழ் மன்றம்
On Tue, Aug 17, 2021 at 10:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
// வால்  என்று குறிப்பிட்டது வைணவ ஆச்சாரியர்களை//

நானும் அவர்களைத்தானே குறிப்பிட்டேன்!!!!
இப்பொழுது; திராவிட = தமிழ் என்று கூறிக் கொண்டிருந்தவர் யார் என்று தெரிந்ததன்றோ...
அவர்கள் கூற்றுப்படி ...... 
திராவிடம்  = தமிழ் 

அவ்வாறென்றால் 
திராவிடர் = தமிழர் 
என்றுதான் பொருள் கொள்ள முடியும்  

இந்தியாவில் ஒரு ஆற்றை "பிரம்மபுத்திரா" என்று குறிப்பிட்டாலும், குறிப்பாக 25 கோடி மக்கள் அவ்வாறு குறிப்பிட்டாலும் அது தோன்றும் திபெத்தில் வாழும்  2 கோடிக்கும் குறைவான மக்கள் அதை பிரம்மபுத்ரா என்று கூறுவதில்லை சாங்போ என்று தான் இன்றும் கூறுகின்றனர். அது தான் மக்கள் உணர்வு. திராவிட என்பது பிறமொழிச்சொல். தமிழ் அல்லவே அல்ல!!  எனக்கு என் தமிழ் முன்னோர் வைத்த பெயர் தான் உண்மை.

தேமொழி

unread,
Aug 18, 2021, 1:29:31 AM8/18/21
to தமிழ் மன்றம்
//// தமிழர் திராவிடர் அடிமையாக ஆக்கப்பட்டது யாரால்?/////

பார்க்க இறுதி வரி - https://groups.google.com/g/tamilmanram/c/DyMwGwcORNs/m/jmP0yEEQAQAJ
என்று கேட்டுள்ளீர்கள் 

அதைத் தெளிவு படுத்தும் நோக்கில் சொன்ன விளக்கம் 
திராவிடம் = தமிழ் என்றால் 
திராவிடர் = தமிழர் 
என்றுதான் பொருள் கொள்ள முடியும்  என்பது.
அதாவது ஒரு பொருட் பன்மொழி

பாரதம் என்றாலோ இந்தியா என்றாலோ அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை அரசியல் ஆக்குவதில்லை. 
எது குறிப்பிடப்படுகிறது என்று புரிந்து  கடந்து செல்வார்கள். 
அவ்வாறே ஆங்கிலம் இங்கிலீஷ் 
என்பது  போல எத்தனை எத்தனையோ இணைகள்  
இவை யாவும் காலக்கோட்டில் அந்த அந்தக் காலத்தின்  தேவைக்கு ஏற்ப கையாளப்படும்/கையாளப்பட்ட சொற்கள் 

இந்தியன் நேஷனல் காங்கிரஸ் பார்ட்டி  என்பதைப் பேராயக் கட்சி என்றால் அதன் கொள்கை மாறிவிடுமா ?
கம்யூனிஸ்ட் பார்ட்டி என்றாலோ பொதுவுடமைக் கட்சி என்றாலோ கட்சியின் கொள்கை மாறப்போவதில்லை - அது சமத்துவம்தான் 
நீங்களும்  திராவிட, திராவிட முன்னேற்ற, அண்ணா, அம்மா என்று கட்சிகள் ஊர்வாகிக் கொண்டே சென்றாலும் அவை தமிழர் என்ற பொருண்மையில் உள்ளவை என்று புரிந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை 

தேர்தலில் நிற்கும் கட்சிகளே இந்த நிலையில்...
தேர்தலில் இறங்குவதில்லை என்பது முடிவு; மக்களின் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் எங்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் "இயக்கத்தின்" பெயர் எதுவாக இருந்தால் என்ன - அதுவும் அது  சென்ற நூற்றாண்டின் அரசியல். 
அவர்களிலிருந்து பிரிந்தவர் தங்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் திராவிட எனத் தொடர்கிறார்கள். 
காங்கிரஸ் உடைந்த பொழுதும் அதன் பிரிவுகளுக்கும்  அந்த காங்கிரஸ் இந்த காங்கிரஸ் என்றுதான் பெயர். 

ஒன்றில் நீங்கள் தெளிவு பெறுவது நலம். 
தமிழ் மக்களுக்குத் தமிழக வரலாறு தெரியும். 

மீண்டும் வலியுறுத்த .... திராவிடக் கழகம் என்று பெயர் இருந்தால் அதன் அடிப்படைக் காரணம்  சென்ற நூற்றாண்டு அரசியல் சூழல் / தேவை 
இதை அரசியல் செய்வது உள்நோக்கம் கொண்டது. 

திராவிட என்ற வடமொழிச் சொல்லைத் தமிழாக மாற்றவேண்டும் என்ற குறள் எழுப்புவாதிறக்குப் பதில்  ... 
உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் ஏன் அனைத்து கோயில் பெயர்களையும் அனைத்து கடவுளர்  பெயரையும் தமிழாக்குவேன் என்று களத்தில் இறங்கக் கூடாது?
சமஸ்கிருதத் தாக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது?
உங்கள் தமிழார்வத்தைச் சரியான முறையில் செயலாக்கப் படுத்தலாமே!!!

பாருங்கள் திபெத்தில் வாழும் மக்கள் சாங்போ என்று தான் இன்றும் பிரம்மபுத்திராவைக் கூறுகின்றனர். 
ஆனால் நம் தமிழருக்கோ  ஒவ்வொரு சாமியின் பெயரும் சமஸ்கிருதம்,  
கோயிலின் பெயரும் சமஸ்கிருதம், 
பிறக்கும் குழந்தைகளுக்கும் சமஸ்கிருதப்  பெயர் 
தமிழராக நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கலாமே. 

அரசியல் .... தேவையில்லை; 
அதுவும்  வேண்டும்பொழுது சமஸ்கிருத ஆதரவு,  
வேண்டும்பொழுது சமஸ்கிருத எதிர்ப்பு,
என்ற  சூழ்ச்சி அரசியல் கொஞ்சமும் தேவையில்லை. 

அத்தகைய  செயல்பாடு கற்றவர் புழங்கும் இடத்தில் அவர்களை முட்டாள் என நினைத்துச் செயல்படுவது 
அத்துடன் தயக்கமின்றி  முட்டாள் மூடர் என்ற வசைச் சொற்கள் கொண்ட பதிவுகளையும் 
அச்சில் ஏற்றவே  கூசும் சொற்களையும் பதிவிடுவது 
முதிர்ச்சி பெறுங்கள் சேசாத்திரி 
நீங்கள் எங்கு, என்ன, யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற சூழலைப் புரிந்து கொண்டு பதிவிடுங்கள் 

தமிழ்க் குழுமங்களின் தரம் குறையாமல் காப்பது நம் எல்லோருக்கும் உள்ள கடமை 

என் கருத்தையும் இழையில் முன்வைக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி 

Seshadri Sridharan

unread,
Aug 18, 2021, 5:56:37 AM8/18/21
to தமிழ் மன்றம்
On Wed, Aug 18, 2021 at 10:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
திராவிடம் = தமிழ் என்றால் 
திராவிடர் = தமிழர் என்றுதான் பொருள் கொள்ள முடியும்  என்பது.
அதாவது ஒரு பொருட் பன்மொழி

சறுக்கிவிட்டீரே தேமொழி!!! திராவிடரென்றால் தமிழர் மட்டும் அல்லர் அது தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என பலரையும் உள்ளடக்கியது. இதை கவனித்திருக்க வேண்டாமா? திராவிட என்ற பொருளில் தமிழன் இவர்களையும் சேர்த்துக்கொண்டதால் தானே தமிழரை சுரண்ட இவர்கள் இச்சொல்லை பயன்படுத்தியதால் தானே தமிழ்த்தேசியம் இந்த திராவிடக் கருத்தியலை தூக்கியெறிந்தது?? திராவிடம் ஒருபொருட் பன்மொழியல்ல திராவிடம் என்பது ஒரு இனத்தை சுரண்டும் பல்லினம் ஆகும்.  

பாரதம் என்றாலோ இந்தியா என்றாலோ அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை அரசியல் ஆக்குவதில்லை. 
எது குறிப்பிடப்படுகிறது என்று புரிந்து  கடந்து செல்வார்கள்.  அவ்வாறே ஆங்கிலம் இங்கிலீஷ் என்பது  போல எத்தனை எத்தனையோ இணைகள்  இவை யாவும் காலக்கோட்டில் அந்த அந்தக் காலத்தின்  தேவைக்கு ஏற்ப கையாளப்படும்/கையாளப்பட்ட சொற்கள் 

பாரதம் இந்தியர் அடையாளப்படுத்த  பயன்படுத்திய சொல். அது சுதந்திர நாடு. இந்தியா ஆங்கிலர் அடிமைநாட்டை குறிக்க பயன்படுத்திய சொல். மக்களுக்கு அரசியல் தெரியாது அதனால் அதன் வேறுபாட்டை உணரவில்லை.

இந்தியன் நேஷனல் காங்கிரஸ் பார்ட்டி  என்பதைப் பேராயக் கட்சி என்றால் அதன் கொள்கை மாறிவிடுமா ?
கம்யூனிஸ்ட் பார்ட்டி என்றாலோ பொதுவுடமைக் கட்சி என்றாலோ கட்சியின் கொள்கை மாறப்போவதில்லை - அது சமத்துவம்தான் 
நீங்களும்  திராவிட, திராவிட முன்னேற்ற, அண்ணா, அம்மா என்று கட்சிகள் ஊர்வாகிக் கொண்டே சென்றாலும் அவை தமிழர் என்ற பொருண்மையில் உள்ளவை என்று புரிந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை 

நன்றாக குழம்பிபோயுள்ளீர். காங்கிரசு என்பதை பேராயம் என்று தேவநேயர் தமிழ்ப்படுத்தினார்.  அது பிறமொழிச் சொல் கலவாமல் இருக்க. திராவிட முன்னேற்றம் என்பது பிறர் தமிழரை கொள்ளையடிக்க உருவான அமைப்பு. 

 மக்களின் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் எங்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் "இயக்கத்தின்" பெயர் எதுவாக இருந்தால் என்ன - அதுவும் அது  சென்ற நூற்றாண்டின் அரசியல். 
 
இது தமிழரை ஏமாற்றி பிழைக்க தெலுங்கர் ஏற்படுத்திய இயக்கம். தமிழர் எவரும் நீதிக்கட்சி ஆட்சியில் மதிக்கப்படவில்லை. தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே ஓட்டு என்று விதி வைத்திருந்தால் தெலுங்கர் எவரும் சட்டமன்ற உறுப்பினராக,அமைச்சராக வந்திருக்க முடியாது நீதிக்கட்சி உருவாகியிருக்கவே முடியாது.  திராவிடத்தால் தமிழருக்கு  விளைந்த கேடு என்ன என்று இப்போது புரிந்திருக்கும்.

ஒன்றில் நீங்கள் தெளிவு பெறுவது நலம். 
தமிழ் மக்களுக்குத் தமிழக வரலாறு தெரியும். 

மீண்டும் வலியுறுத்த .... திராவிடக் கழகம் என்று பெயர் இருந்தால் அதன் அடிப்படைக் காரணம்  சென்ற நூற்றாண்டு அரசியல் சூழல் / தேவை  இதை அரசியல் செய்வது உள்நோக்கம் கொண்டது. 

தமிழருக்கு இன்று வரை தம் வரலாறு தெரியாது. இன்றய திராவிட மறுப்பு தமிழருக்கு அரசியல் விழிப்புணர்வை  உண்டாக்கவே பரவி வளர்கிறது. இதை எதிர்ப்பது தான் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

திராவிட என்ற வடமொழிச் சொல்லைத் தமிழாக மாற்றவேண்டும் என்ற குறள் எழுப்புவாதிறக்குப் பதில்  ... 
உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் ஏன் அனைத்து கோயில் பெயர்களையும் அனைத்து கடவுளர்  பெயரையும் தமிழாக்குவேன் என்று களத்தில் இறங்கக் கூடாது? சமஸ்கிருதத் தாக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது? உங்கள் தமிழார்வத்தைச் சரியான முறையில் செயலாக்கப் படுத்தலாமே!!!

தமிழாக்குவேன் என்பது தேவையற்றது. ஏனெனில் ஏற்கனவே கல்வெட்டுகளில் தமிழ்ப்பெயர்களே உள்ளன. இன்றைய அரசை அப்பெயர்களை மீண்டும் வைக்க இந்த திராவிடம்  முயலலாமே?  

பாருங்கள் திபெத்தில் வாழும் மக்கள் சாங்போ என்று தான் இன்றும் பிரம்மபுத்திராவைக் கூறுகின்றனர். 
ஆனால் நம் தமிழருக்கோ  ஒவ்வொரு சாமியின் பெயரும் சமஸ்கிருதம்,  கோயிலின் பெயரும் சமஸ்கிருதம், 
பிறக்கும் குழந்தைகளுக்கும் சமஸ்கிருதப்  பெயர்  தமிழராக நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கலாமே. 

அரசியல் .... தேவையில்லை; அதுவும்  வேண்டும்பொழுது சமஸ்கிருத ஆதரவு,  வேண்டும்பொழுது சமஸ்கிருத எதிர்ப்பு,
என்ற  சூழ்ச்சி அரசியல் கொஞ்சமும் தேவையில்லை. 

இன்று கோவில்கள் அரசின்கட்டுப்பாட்டில் தான் உள்ளன. எனவே பெயர் மீட்சி நடவடிக்கை அரசினுடையது. 

அத்தகைய  செயல்பாடு கற்றவர் புழங்கும் இடத்தில் அவர்களை முட்டாள் என நினைத்துச் செயல்படுவது 
அத்துடன் தயக்கமின்றி  முட்டாள் மூடர் என்ற வசைச் சொற்கள் கொண்ட பதிவுகளையும்  அச்சில் ஏற்றவே  கூசும் சொற்களையும் பதிவிடுவது முதிர்ச்சி பெறுங்கள் சேசாத்திரி நீங்கள் எங்கு, என்ன, யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற சூழலைப் புரிந்து கொண்டு பதிவிடுங்கள் 

பெரியார் தமிழரை முட்டாள் என்றது இன்றுவரை கண்டிக்கப்படாமலேயே உள்ளது.  அதுதான் எல்லாவற்றிலும் எதிரடிக்கும்.(reflect) 

தேமொழி

unread,
Aug 18, 2021, 6:07:18 AM8/18/21
to தமிழ் மன்றம்
வைணவ ஆச்சாரியர்கள் திராவிட வேதம் என்றது தெலுங்கு நூலையா ?

Seshadri Sridharan

unread,
Aug 18, 2021, 6:11:04 AM8/18/21
to தமிழ் மன்றம்
On Wed, Aug 18, 2021 at 3:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வைணவ ஆச்சாரியர்கள் திராவிட வேதம் என்றது தெலுங்கு நூலையா ?

சமசுகிருத நூலை.

தேமொழி

unread,
Aug 18, 2021, 6:15:03 AM8/18/21
to தமிழ் மன்றம்
திராவிட வேதம்

Seshadri Sridharan

unread,
Aug 18, 2021, 10:48:07 AM8/18/21
to தமிழ் மன்றம்
On Wed, Aug 18, 2021 at 3:45 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
திராவிட வேதம்

ஒன்று தெரியுமா? திவ்ய பிரபந்தம் என்ற பெயரே பிற்பட்ட காலத்தில் வந்த பெயர்தான். அதுவும் சமசுகிருத சொல்தான்.  எந்த ஆழ்வாரை தட்டி எழுப்பி கேட்டாலும் திவ்யபிரபந்தம் என்றால் என்ன என்று கேட்டால் தெரியாது என்பார். 

தமிழ், திராவிடம் இரண்டும் வேறு வேறு எப்படி?

தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர் சொல். பின்னர், குஜராத்து மொழி குஜராத்தி, சிந்தின்  மொழி சிந்தி, பஞ்சாபின் மொழி பஞ்சாபி, அசாமின் மொழி அசாமி, வங்கத்தின் மொழி வங்காளி என்பது போல திராவிட என்ற இடத்தில் வழங்கும் மொழியும் இடப்பெயரை ஒட்டியே திராவிடம் எனக்   குறிக்கப்பட்டது.  ஆந்த்ரதிராவிட பாஷா, திராவிடாந்த்ரா தமிழில் இருந்து வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு குறிக்கப்பட்டது.   அத்தோடு நில்லாமல் இன்று திராவிடம் என்ற சொல் பொதுவாக தெலுங்கர், கன்னடர், மலையாளியரையும் குறிப்பதாக அமைந்துவிட்டதால் தமிழை மட்டும் குறிப்பதாகாது. இப்படி திராவிடத்திற்கு மூன்று வெவ்வேறு பொருள் இருக்க  தமிழ் என்ற சொல்லுக்கு இப்படி மூன்று வெவ்வேறு பொருள் இல்லை. எனவே,  திராவிடம் என்றால் தமிழ், தமிழ் என்றால் திராவிடம் என்று பொருள் உரைப்பது தமிழரை ஏமாற்றும் உத்தியாகும்.    

தேமொழி

unread,
Aug 18, 2021, 12:52:55 PM8/18/21
to தமிழ் மன்றம்
/// திராவிடம் என்றால் தமிழ், தமிழ் என்றால் திராவிடம் என்று பொருள் உரைப்பது தமிழரை ஏமாற்றும் உத்தியாகும்.    ///

வைணவ ஆச்சாரியர்களை இவ்வாறு குற்றம் சாட்டுவது அழகல்ல 
எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். 

தேமொழி

unread,
Aug 18, 2021, 2:17:25 PM8/18/21
to தமிழ் மன்றம்
நன்றி - சிறகு :  http://siragu.com/தமிழ்த்-தாத்தா-பெற்ற-பதவ/

தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும்

-- தேமொழி
Jun 24, 2017

‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் ‘உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர்’ (1855-1942) அவர்களுக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பட்டம். இவர் பெற்ற அனைத்துப் பட்டங்களுடன் இவரது முழுப்பெயரும் “பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகாவித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள்” என்று குறிப்பிடப்படுவதையும் நூல்களில் காணலாம்.
[...]

உ. வே.சா. செய்து வந்த தமிழ்த் தொண்டை அறிந்த காசியிலுள்ள ‘பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபையினர் திராவிட வித்யாபூஷணம்’ (திராவிடக் கலையழகன்) என்ற பட்டத்தை 1917 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கினார்கள். 
காங்கிரசின் தலைவராக விளங்கிய ‘பண்டிதர் மதன்மோகன் மாளவியா’ அவர்கள் தோற்றுவித்த அமைப்பே காசி பாரத தர்ம மகா மண்டலம் என்பது. இவர் 1916 இல் பனாரஸ் (காசி) இந்து பல்கலைக் கழகத்தை அன்னி பெசண்ட் அம்மையாருடன் இணைந்து தோற்றுவித்தவர் என்பதும், அப்பல்கலைக் கழக துணைவேந்தராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காசி பாரத தர்ம மகா மண்டலம் என்ற அமைப்பு சனாதன தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பரப்புவதற்காகத் தொடங்கப்பட்டதாக இந்த அமைப்பின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைச் செயல்படுத்தும் முறையில் இந்து சனாதன தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் உயர்த்தப் பணியாற்றுபவர்களை பாராட்டி மதிப்புச் செய்து வந்தது. உ.வே.சா. விற்கு திராவிட வித்யா பூஷணம் அளிக்க விரும்பி, அது குறித்து திருச்சியில் இருந்த உ.வே.சா. அவர்களின் மாணவர் வழக்கறிஞர் திரு. டி. வி. சுவாமிநாத சாஸ்திரியார் என்பவரைத் தொடர்பு கொண்டார்கள் (இவர் பெயரில் இன்றும் திருச்சி தில்லைநகரில் சாஸ்திரி சாலை என்ற ஒரு சாலை அமைந்துள்ளது).   சுவாமிநாத சாஸ்திரியே அந்தப் பட்டத்தினைப் பெற்று உ.வே.சா. விடம் கொண்டு வந்து அளித்தார். அதனைக் காசி விசுவநாதருடைய திருவருள் என்று கருதிய உ.வே.சா. மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற உ.வே.சா வுடன் உரையாடிய தாகூர், அவரது பதிப்புப்பணி குறித்து அறிந்து வியந்து உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்கே வந்து உ.வே.சா. பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்றே மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் உ.வே.சா.வைப் பாராட்டி அப்பொழுதே கவிதையும் வரைந்தார்.

தேசிகோத்தம தேமாகரிப்ரணாம் – ரவீந்திரநாத் தாகூர்
(வங்காளி மூலம்)
ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ
த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி,
ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம
தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்?
ஸே   காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே
ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே?
ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே
சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி
ஸம்சோதன கரே தாஹார் பத   ஜூகலே
ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?
ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே
ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத
சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்

தமிழாக்கம்:
“ஆதி(முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்
இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி -
அந்தப் பெருநிதி, பேராசானே
உன்னால் அன்றோ வெளிப்பட்டது?
அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல 
நீயன்றோ வந்து உன் அன்னையினைச் 
சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?
அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்
சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து)
அந்த அன்னையின் இணையடியில்
சமர்ப்பித்தவன் நீ அன்றோ?
அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்
நிலவில் மலர்ந்த முல்லை என
ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்.”

(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி – மஞ்சரி முன்னாள் ஆசிரியர்)
சுப்பிரமணிய பாரதியார், ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் உ.வே.சா. அவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

[... ] 
uvesa.jpg
குடந்தை கல்லூரியில் இருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்கு 1903 ஆம் ஆண்டு மாற்றல் பெற்று வந்த உ.வே.சா., 1903 – 1919 ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் அங்கு பணியாற்றிய காலத்திலேயே மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற பொழுது, அந்தக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு (முன்னர் குறிப்பிட்டது போல) ஒரு பாராட்டுக் கூட்டமும் நடந்தது. அவர் இறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே வாயிலில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றும் விதமாக 1948, மார்ச் 7 ஆம் நாளன்று உ.வே.சா. வின் உருவச்சிலையும் நாட்டப்பட்டது. அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன் பாரதியாரின் வாழ்த்துப் பாடலின் இறுதி இரு வரிகளும் இணைக்கப்பட்டன.
[.... ]

Seshadri Sridharan

unread,
Aug 19, 2021, 12:26:56 AM8/19/21
to தமிழ் மன்றம்
 குஜராத்தின்  மொழி குஜராத்தி, சிந்தின்  மொழி சிந்தி, பஞ்சாபின் மொழி பஞ்சாபி, அசாமின் மொழி அசாமி, வங்கத்தின் மொழி வங்காளி என்பது போல திராவிட என்ற இடத்தில் வழங்கும் மொழியும் இடப்பெயரை ஒட்டியே திராவிடம் எனக்   குறிக்கப்பட்டது   ஆனால் ஆந்திரத்தில் பேசிய மொழி வேறுபட்டிருந்ததால் ஆந்திரதிராவிட பாஷா எனப்பட்டது. சமஸ்கிருதத்தில்தான் தமிழை   திராவிடமென்றனர். ஆனால் தமிழில் திராவிடம் என்ற சொல்லில்லை. கன்னடர் தமிழரை திகுலர் என்றும், தெலுங்கர் அரவாள்ளு என்றும் மலையாளியகள் பாண்டியென்றும்   கூறுகின்றனர். ஆனால் தமிழர் நாம் நம்மை தமிழர் என்று தான் கூறிக்கொள்கிறோம். வேற்று மொழிச்சொல் தமிழில் வேண்டாம் என்று தனித்தமிழை ஆதரிப்போர் தமிழல்லாத திராவிடம் என்ற சொல்லை மட்டும் ஏன் ஆதரிக்கவேண்டும்? 

தேமொழி

unread,
Aug 19, 2021, 12:54:12 AM8/19/21
to தமிழ் மன்றம்

  ஆதரிப்பது வேறு காலக்கோட்டில் வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு.  

அத்துடன் ஒரு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றுவது தேவையில்லை. 

எடுத்துக் காட்டு பேஸ்புக், கூகுள், ஹோண்டா, டொயோட்டா இன்னபிற 

காங்கிரஸ் கட்சியிடம் ஏன் ஓர் இந்தியக் கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறது என்று கேள்வி கேட்டதுண்டா?

Seshadri Sridharan

unread,
Aug 19, 2021, 5:47:04 AM8/19/21
to தமிழ் மன்றம்
On Thu, Aug 19, 2021 at 10:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

  ஆதரிப்பது வேறு காலக்கோட்டில் வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு.  அத்துடன் ஒரு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றுவது தேவையில்லை. 

 திராவிடம் தமிழ் இனக்கேடு என்பது தமிழர் வாழ்வியல் அனுபவம். ஏனென்றால் அது தமிழருக்கு நம்பிக்கை மோசடி புரிந்தது. அந்த நிறுவனம் சுக்குநூறாக உடைக்கப்படவேண்டும் என்பது இன்றைய வரலாற்றுத் தேவை. 

தேமொழி

unread,
Aug 19, 2021, 6:37:26 AM8/19/21
to தமிழ் மன்றம்
///திராவிடம் தமிழ் இனக்கேடு என்பது தமிழர் வாழ்வியல் அனுபவம்/// 

‘திராவிட வித்யாபூஷணம்’  - உ வே சா அவர்களின் சிலையின் கீழே
 இவ்வாறு  எழுதி வைத்தால் சரிப்பட்டு வராது 
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது வேண்டுமானால் உறங்கச் செல்லலாம் 

Seshadri Sridharan

unread,
Aug 19, 2021, 10:25:53 AM8/19/21
to தமிழ் மன்றம்
On Thu, Aug 19, 2021 at 4:07 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///திராவிடம் தமிழ் இனக்கேடு என்பது தமிழர் வாழ்வியல் அனுபவம்/// 

‘திராவிட வித்யாபூஷணம்’  - உ வே சா அவர்களின் சிலையின் கீழே
 இவ்வாறு  எழுதி வைத்தால் சரிப்பட்டு வராது 
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது வேண்டுமானால் உறங்கச் செல்லலாம் 

குஞ்சன் நாடார் வரலாற்றை படித்தீரா? அதுவே  சொல்லும் திராவிடத்தின் கேட்டை. இதை தமிழர் உணர்ந்தால் போதும். திராவிடர் திராவிடராகவே இருக்கட்டும். ஆனால்தமிழர் திராவிடராக இருக்க வேண்டாம்.. 

தேமொழி

unread,
Aug 19, 2021, 11:14:03 AM8/19/21
to தமிழ் மன்றம்
திராவிடம் என்ற சொல்லின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு மையம் கொண்டுள்ள சரியான இடம் எதுவென்று உணர்ந்தால் போதுமே. 

Seshadri Sridharan

unread,
Aug 20, 2021, 2:49:14 AM8/20/21
to தமிழ் மன்றம்
On Thu, Aug 19, 2021 at 8:44 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
திராவிடம் என்ற சொல்லின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு மையம் கொண்டுள்ள சரியான இடம் எதுவென்று உணர்ந்தால் போதுமே. 

தமிழர் திராவிடம் எது? தமிழ் எது என்று உணர்ந்தால் போதும் .

C.R. Selvakumar

unread,
Aug 20, 2021, 8:18:19 AM8/20/21
to தமிழ் மன்றம்
அருமையான பதிவு முனைவர் தேமொழி அவர்களே!
மிக்க நன்றி.

உடனே உரையாடலில் பங்குகொள்ள இயலாதிருக்கின்றேன். 
(பொறுத்தாற்ற வேண்டுகின்றேன்).

அன்புடன்
செல்வா

On Sun, Aug 15, 2021 at 11:49 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

திராவிடம் குறித்து மாரிராஜன் தொல்லியல் இலக்கிய சான்றுகள்  கொடுத்து எழுதிய கட்டுரை.  மேலுள்ள சுட்டியில் இருக்கிறது. 
பலபடங்கள் கொடுத்து எழுதியுள்ளார் . 
வெட்டி ஒட்டுகையில் படங்கள் வரவில்லை.  ஆர்வம் உள்ளவர் சுட்டி வழி சென்று படிக்கலாம். 

திராவிடம் ....
-- மா.மாரிராஜன்

திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... 
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 
இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 

மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.

References:
1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.
2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச்  சொற்களும் இலக்கணக் கூறுகளும்.
3. Epigrphia Indica Vol. 20.
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில்  - திராவிடக்குறிப்பு

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/71962bc7-14c3-4c5c-8157-059343003d5fn%40googlegroups.com.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
Reply all
Reply to author
Forward
0 new messages