சரி ஸ்வாமி.. கொஞ்ச நாள் கழித்து அதனைச் சுட்டியிருக்கலாமே. ஏன் அவசரம்??. தமிழ் மரபு , தமிழன் பண்பு அது அன்று
அவர் மேல் உங்களுக்குக் காழ்ப்புனர்ச்சி இல்லை என்பதை நான்(மட்டும்?) அறிவேன்.. மேலும். உங்கள் தமிழ் நாட்டில் நிறைய பணக்காரர்கள் இருக்கின்றனர். வேறுயாராவது நா. மகாலிங்கம் அய்யா போல் அள்ளிக்கொடுத்து பல தமிழ் இலக்கியங்களுக்கு+ நல்ல முந்தைய நூல்களுக்கு அருட்கொடை கொடுத்து அச்சிட்டு குறைந்த விலையில் பற்பல தமிழர்கட்கு, தமிழ் மாணவர்கட்கு, ஆய்வு செய்பவர்கட்குக் கொடுத்தவர் யார் சொல்லுங்கள்? விரல்மடக்குங்கள் பார்க்கலாம்.அதுபோன்றே ஆன்மிகச் சேவையும் செய்தவர் அவர். ஆன்மிக நூல்களையும் பலர்க்கும் அவர் கையால் இலவசமாக உங்கள் போன்ற கவிஞர்கட்கு, பேச்சாளர்க்கு அள்ளிகொடுத்தவர் அவர். சிலம்பொலியாரையும், அவ்வையையும் கேளுங்கள்சொல்வர்.
எங்கோ ஒரு மூலையில் உங்களுக்குப்( மட்டும்?)-பிடிக்காத ஒரு சிறு செயலைச்செய்ததற்காக இப்படி உமிழணுமா? என்பதே என் கேள்வி. அது அவரது தனிக்கருத்தாக எண்ணி மதிப்பீர்களாக.. உங்கள் கருத்துக்கு விரோதமாக அவர் எத்தனை, கிரந்த நூல்கள் சம்ஸ்கிருத நூல்களை ஆதரித்து வெளிக்கொணர்ந்தார்? சொல்க யானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி,
யோகியார்