Re: [MinTamil] Re: அனங்கு - தேவாரம் 387.9

20 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 1, 2015, 2:56:18 AM3/1/15
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com
திரு செல்வன் 
திரு ஏ பி நாகராசன் எடுத்த பல புராணப்படம் ஒன்றிலும்
"அங்கன் அனங்கன்" எனும் சொல் மன்மதனை குறித்து தொடங்கும் வரியுடைய பாடல் உண்டு

அனங்கன் எனும் சொல் அருணா கிரியாரின் திருப்புகழிலும் உண்டு 

18000+ பன்னிரு திருமுறைப்படல்களில் அனங்கன் எனும் சொல் ப ற்பல பத்துகளில்  கிடைக்கக் கூடும் 

தற்காலத்து வடமொழிகளில் நங்க எனும் சொல் ஆடை ( அல்லது ஏ தோ ஒன்று காலணி போன்று )
இல்லாததைக் குறிக்கின்றது  ஆக  அநங்கன் திகம்பரம் அல்லாது சிறப்பாக ஆடை அணிந்தமையைக் காட்டும்
மேலும் 
வடமொழியில் னகரம் இல்லா து (தந்தகர)  நகரம் தான் உள்ளது ஸ்ரீனிவாசன் என்பதனை தமிழ் படுத்திக்
காணுங்கால் சீனு வாசன் எனாமல்  சீநுவாசன்  (அனுராகம் அநுராகம்) என்பதே தமிழ் இல்லக்கண பிழை
எதுமில் லாத தால் சிறப்பென்பர் 

நூ த லோ சு   

அநுபல்லவி அநுதாரா போன்றவற்றில் உள்ள அநு எனும் முன்னொட்டு தமிழில் வரும்
அணித்த தாகும்  (= பக்கத்தே) பொருளில் வருவதால் அதன்  தமிழ் மூலம் காட்டும் 

கொசுறு = அநுதாரா விண்மீன் மட்டுமல்ல அப் யரில் துணை நடிகர்கள் சங்கமு ம் உள்ளது 

2015-03-01 9:20 GMT+05:30 Meenavan M <meen...@gmail.com>:
ம்னோகரா என்னும் திரைப்படம் -சிவாஜி ந்டித்தது.அதில்
வசந்தோத்சவ விழாவில் ஒரு பாடல்
அனஙகன் அங்கன் மன்மதன் என்று
அனங்கன் மன்மதனைக் குறிக்கும் சொல்லே
மீனவன்

2015-02-26 11:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


911
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத் 
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக் 
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும் 
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?




இந்தப் பாடலின் பொழிப்புரையைத் தொடர்ந்ததில் மேலும் இரு பாடல்கள்....

அநங்கைக் காய்ந்த பிரான் ...

அநங்கைக்காய்ந்தபிரான்; செற்றுக்காய்ந்தபிரான், 
அநங்க: என்பது மன்மதன் பெயர். அஃது இரண்டனுருபு ஏற்று அநங்கை என்று திரிந்து நின்றது. 
சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி.2 ப.45 பா.5இல், ‘அநங்கைக் காய்ந்த பிரான்’ என்றதும். ‘பெருந்திறத்து அநங்களை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்’ (தி.3 ப.91 பா.9) என்றதும் ஈண்டு நோக்குக. அங்கன் - உருவன். அநங்கன் - உருவிலி.


சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி.2 ப.45 பா.5இல், ‘அநங்கைக் காய்ந்த பிரான்’ என்றது....
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர்கூறு உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல்நஞ்சு உண்டு அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில்---கைச்சினமே.

‘பெருந்திறத்து அநங்களை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்’ (தி.3 ப.91 பா.9) என்றது ....
பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை
      யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா
      விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
      யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண்
      டோங்கிய வடிகளாரே. 





..... தேமொழி






On Wednesday, February 25, 2015 at 7:55:00 PM UTC-8, N. Ganesan wrote:
அப்பரின் திருக்கண்டியூர்த் தேவாரம்: 387.9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றனங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே

அனங்கு < அணங்கு.

On Wednesday, February 25, 2015 at 6:24:00 PM UTC-8, N. Ganesan wrote:
சென்னைப் பல்கலைப் பேரகராதி:
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5127.tamillex
*அனங்கு aṉaṅku , n. See அனங்கன். (தேவா. 387, 9.)

அனங்கு என்றாலே மன்மதன் என்கிறது தேவாரம். இத் தேவாரத்தின் முழுப் பாடலும்
பழைய தேவாரப் பதிப்புகளில் இருக்கும். பார்த்துப் பாடலைத் தருவாருக்கு நன்றிகள் பல.

அணங்கன் என்றால் மன்மதன் என்று சிந்தாமணியில் இருந்து காட்டியவர் ஜி. யு. போப்.
கடம்பு கதம்பு ஆவதுபோல், அணங்கு அனங்கு. (அனங்கன்).

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages