அன்புள்ள அருண்,
வக்கீல் என்றால் வழக்குரைஞர் (லாயர்) என்று தெரியும் அல்லவா.
அதை ஒட்டி ஒருவ்வருக்காக மற்றொருவர் வழக்குரைக்க வருதலை
வக்காலத்து வாங்குதல் என்கிறார்கள். வக்கீல் தொழிலர், வக்காலத்து அவர்
செய்யும் தொழில் ("lawyering". the job of a lawyer, work of a laywer, practicing law).
இது மேலோட்டமாக நான் அறிந்தது. சரியான சொற்பிறப்பியல் அல்ல.
தாந்தோன்றி என்றால் யாருடைய உதவியும் இல்லாமல் தானே தோன்றியது. தான்தோன்றி என்பது மிக உயர் பொருள் தருவதாயினும் (சிவனைத் தான்தோன்றி என்றும் கூறுவர்), யார் பேச்சையும் கேட்காமல்
தானாகவே, தனக்குப் பிடித்தவாறெல்லாம் (சரியல்லாததையும், கெட்டதெல்லாம்) செய்யும் ஒருவரையும் தான்தோன்றி என்றும்,
அப்படியான நடத்தை, போக்கை தான்தோன்றித்தனம் என்பர். சுயம்பு என்றாலும் தானே தோன்றியது. சிலர் பெயர்கூட சுயம்புலிங்கம்,
சுயம்புநாதன் என்று இருக்கும். தமிழில் தானப்பன் என்பதும் வழக்கில்
இருக்கும் பெயர்.
அன்புடன்
செல்வா
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar