தலையெடு பொருள்
இப்போது அருகிய வழக்காகிவிட்ட சொல் தலையெடு. முன்பு பெரியோர்கள் பிள்ளைகள் வளர்வதை குறிக்க இந்த சொல்லை பயன்படுத்தினர். இதாவது, விதை முளைத்து அந்த பிளந்த விதையோடு மண்ணுக்கு மேலே தூக்கி நிற்கும். இப்படியாக ஒரு பிள்ளை மெள்ள முளை போல் வளர்ந்து தம் சொந்த முயற்சியில் வாழ்க்கையை தொடங்குவதை தலையெடுத்தல் என்றனர். இச்சொல் இப்போது இளைய தலைமுறைக்கு செவிப்படாத சொல் ஆகிவிட்டது. இப்போது உள்ள மூத்த தலைமுறையும் இல்லாது போனால் இனி, அகராதியில் மட்டும் புகலிடம் கொண்ட சொல் ஆகிவிடும்.
அதே போல ஏறெடு என்ற சொல் எழுச்சியை குறிக்கும். இங்கு தலையை நிமிர்த்தி பார்க்கும் விதமாக தலையை தூக்குவது ஆகும். இந்த இரண்டு சொல்லிலும் எடு என்ற சொல் தான் எழுச்சிக்கு வித்தக சுட்டுவதாக உள்ளது .