சிலப்பதிகார ஐயங்கள்

1,087 views
Skip to first unread message

இராம.கி

unread,
Jul 16, 2016, 2:48:25 AM7/16/16
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அண்மையில் ஈழத்தைச் சேர்ந்த முகுந்தன் சிலப்பதிகாரம் பற்றிய 6 ஐயங்களை மின் தமிழ்க் குழுமத்தில் எழுப்பியிருந்தார். அவர் கேட்டிருந்த ஐயங்களுக்கு முழுக்க விடையிறுக்க வேண்டுமானால் மிகுந்த நேரம் பிடிக்கும். வேறு பணிகள் இருந்தாலும், சிலப்பதிகாரத்தில் ஆர்வத்தோடு ஒருவர் கேட்கும்போது விடையிறுக்காது நகரமுடியவில்லை. சிலம்பை ஆர்வமாய்ப் படித்தவன் நான். அதன் காலம் பற்றியும் ஒரு நூலும் தனியே எழுதியிருக்கிறேன். இங்கே விடைகள் கொஞ்சம் முன்பின்னாய் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் அவர்கேட்ட கேள்விகள்:

------------------------------------------------------
1. காடுகாண் காதை (196)
”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557. இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா? வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது. கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

2. பூங்கண் இயக்கிக்குப் (சமண தெய்வம்??) பான்மடை கொடுத்த மாதரி பின்பு ஆய்ச்சியர் குரவையில் மாயவனையும் ஆயவனையும் போற்றிப் பாடுகிறார்... அக்காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று எல்லாத்தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ?

3. கொலைக்களக் காதை (18)
”சாவக நோன்பிக ளடிக ளாதலின்” எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா? (தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல) ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில் கட்டுரை காதை (155)
”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994. இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான்..வேறு மதத்தவன் என எவ்வாறு

அறியப்படுகிறான்? இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )


4. இது வசந்தமாலை பற்றியது. கடலாடு காதை (171)
”வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்..”
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=324
கோவலன் மாதவியுடன் இருக்கும்போது , வசந்தமாலை ஏன் வருந்தி நின்றாள் ?

5. மனையறம்படுத்த காதை
”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:
 (உரை : அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்) http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=110 (வெண்பா இளங்கோவடிகளால் பாடப்படவில்லையென்பது ஒருசாரார் கருத்து. ) இங்கே நாமந் தொலையாத இன்பம் (அழகு கெடாத இன்பம் ) என ஏன் கூறப்படுகின்றது ?

6. உரைபெறு கட்டுரை
”கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து...”.
(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63) இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப்
பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா? இதற்கும் வேட்டுவ வரி (47) ”கொங்கச் செல்வி குடமலை யாட்டி” இருக்கும் தொடர்பு இருக்குமா?
--------------------------------------------------

முதலில் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். (உங்களுடைய 6 வது கேள்வி)

உரைபெறு கட்டுரையில் முதலில் வருவது, வெற்றிவேற் செழியன் செய்ததைக் குறித்தாகும். சிலம்பை முழுதும் படித்தால் கதை பஞ்சகாலத்தில் நடந்தது புரியும். கதைநடந்த காலத்தில் தென்னிந்தியா முழுக்க வற்கடம் வந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கிறோம். மழையிலாக் காலம். அப்பொழுது மதுரை எரிபட்டது ”பெரியாரின் கூற்றைக் கொண்டுவந்து” நா. கணேசன் கேலிசெய்கிறாரே, அதுபோல் கண்ணகியின் கொங்கைப் ”பாசுபரசால்” அல்ல. அப்படி இளங்கோ புனைவு கலந்து சொல்கிறாரென்று வேண்டுமானாற் சொல்லலாம். பெரும்பாலும் நெடுஞ்செழியன் மேலிருந்த பஞ்சகாலக் கோபத்தில் மக்கள் கூடி “இதுதான் சாக்கென்று” அரண்மனைக்கும் சுற்றியுள்ள மாளிகைகளுக்கும் தீ வைத்ததாகவே அறிவியல் பூர்வமாய்ச் சொல்லலாம். pure arson.

இக்கலவரம் கேள்விப்பட்டு கொற்கையிலிருந்து வெற்றிச்செழியன் மதுரைக்கு ஓடிவருகிறான். வெற்றிச்செழியன் பெரும்பாலும் நெடுஞ்செழியனின் தம்பியாக இருக்கவேண்டும். நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை. மதுரை எரிந்ததற்குப் பின் நடந்தது இதுவே. இதுபோன்ற பிழைகள் இன்றும் நடைபெறுகின்றன. யாரோவொரு சீக்கியன் இந்திராகாந்தி கொலைக்குக் காரணமானானென்று தில்லி முழுக்க 1000 பேருக்குமேல் சீக்கியரைப் பேராயக் கட்சியின் அரம்பர்கள் கொன்றது இந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. இதுபோல் உங்கள் நாட்டிலும் சொல்லமுடியும்.

இவ்வளவு எரிப்புநடந்தால் கணக்கற்ற புகையும் துகளும் வானத்தில் பரவி ஏறும். அது உறுதியாய் மழையை வருவிக்கும். இன்றும் யாகம் நடத்தி மழை வருவிக்கிறார்களே? அவையெல்லாம் துகள்களாற்றான். அதே சூழ்க்குமம் தான் இங்கும் பயன்படுகிறது. what you need are suspended particles among the moist clouds. Boom..... Rain starts pouring. How long it lasts depends on the humidity of the clouds.

பாண்டிய நாட்டைப் போலவே மழையே காணாத கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்தும், நங்கைக்கு விழாவோடு சாந்திசெய்ய, மழை அங்கும் பொழிகிறது. அருள்கூர்ந்து முன் வாக்கியத்திற் போட்டிருக்கும் கால்குறியைக் கவனியுங்கள். பாக்களில் கால்குறி இருக்காது. நாம்தாம் பொருள்பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணகி  சோழநாட்டுக்காரி, எரிந்தது பாண்டித் தலைநகர். கொங்கு என்பதும் இன்றுள்ள தமிழ்நாட்டுக் கொங்குமண்டலம் மட்டுமல்ல. முந்தையக் கொங்கு என்பது இன்றையத் தமிழகக் கொங்கும் தென்கன்னடமும் சேர்ந்த ஒரு பெரியபகுதி. தென் கன்னடத்திற்கு வடகொங்கு என்று பெயர். வடகொங்கின் அரசர்கள் தான் கங்கர்கள் என்று பின்னால் அழைக்கப்பட்டனர். வடகொங்கர் நாட்டில் மைசூர்ப்பகுதியும் அடங்கும். மங்களுருக்குச் சற்று கிழக்கே இருக்கும் நிலம்தான் கோசரின் நாடு. அவரை வலிந்து கோயம்புத்தூருக்கு இழுப்பதெல்லாம் சிலரின் வெற்று முயற்சி.

”கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்பது கொங்கிளங்கோசர் விழவெடுத்ததைக் குறிப்பால் உணர்த்துகிறது. பொதுவாக நாட்டுப்புறங்களில் பஞ்சகாலங்களில் கண்ணகி கூத்து நடைபெறும். அதை நடத்துவதால் மழை பொழியும் என்பது மக்கள் நம்பிக்கை மாரியம்மாவையும், கண்ணகியையும் தொடர்புறுத்துவார்கள். 

அவ்வளவு பெரியகொங்கில் கோசர்நாடு ஒருபகுதி. (கோசர் நாட்டில் குடமலை என்ற கூர்க்குப் பகுதியும் அடக்கம்.) அதுவே முழுக்கொங்கு அல்ல. தமிழகத்தில் பாண்டிநாடு ஒரு பகுதி என்பதைப் போல இதைப் புரிந்துகொள்ளுங்கள். கோசர் நாட்டில் விழவெடுத்தது வெற்றிவேற் செழியனின் செயலுக்கு அடுத்து ஒருசில மாதங்களுக்குள் நடந்திருக்கவேண்டும். அதனாற்றான். அச்செய்தி அறிந்த இளங்கோ (இந்நூல் எழுதியது கண்ணகிக்கு வஞ்சியில் கோயிலெடுத்த பொழுது நடந்திருக்கவேண்டுமென்றே நான் எண்ணுகிறேன்.) அதைப் புனைவாய் சாலினிமேல் வைத்து வேட்டுவ வரியிற் கூறுகிறார்.  இந்தப் புனைவு இலக்கிய ஆசிரியரின் உரிமை. நாம் ஒன்றுஞ் சொல்லமுடியாத். இதுபோன்ற புனைவுகள் சிலம்பில் நெடுகவேயுண்டு.

வெற்றிவேற் செழியன் செய்தது, கோசர் செய்தது ஆகியவையெல்லாம் இளங்கோவிற்கு நூலெழுதுவதற்கு முன்பே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் கயவாகு என்பான் செய்தது அவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை. தெரிந்திருந்தால் இன்னும் வேட்டுவரியில் இருவரிகள் சேர்த்துக் கூறியிருப்பாரே? கூறவில்லையே?

என் “சிலம்பின் காலம்” நூலில் ”வருந்தரு காதை என்பது இளங்கோ எழுதியிருக்க வழியில்லை; அதுவொரு பின்செருகல்” என்று நிறுவியிருப்பேன். சிலம்பு ஒரு கூத்து. அதில் இடைச்செருகலும் பின் செருகலும் நடந்தே வந்திருக்கிறது. அவற்றைக் கண்கொத்திப் பாம்பாய்க் கண்டுபிடிக்கவேண்டும். அந்த நூலில் என் வாதத்தைப் படித்துப்பாருங்கள். இணையத்திலும் தொடட்கட்டுரையாய் உண்டு. என் வலைப்பதிவிலும் உண்டு.

கயவாகு என்பான் விழாவிடுத்தது உரைபெறு கட்டுரையில் சொல்லப்படும். அதில் முதற்றொடரைக் கூர்ந்து கவனியுங்கள். “அதுகேட்டு.....” என்று அது தொடங்கும். அதாவது கொங்கிளங்கோசர் விழாவெடுத்தது கேட்டு என்று பொருள். இது எத்தனை ஆண்டுகள் கழித்து என்பது யாருக்கும் தெரியாது. 100 ஆண்டுகளுக்கு அப்புறமும் ஆகியிருக்கலாம். கயவாகு கண்ணகி கோயிலின் குடமுழுக்கில் இருந்தான் என்பது இந்தச் செய்திக்கு மூரணானது.

இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன். இந்த மடல் நீளம்

அன்புடன்,
இராம.கி.
 

இராம.கி

unread,
Jul 16, 2016, 4:06:15 AM7/16/16
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com

அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.


”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

இந்தப்பாவில் ”நாமம் தொலையாத இன்பம்” என்பது ”அழகு கெடாத இன்பம்” அல்ல. நாமம் என்பதற்கு நிறைவு என்ற பொருளுமுண்டு. அதுதன் இங்கு சரிவரும். கொஞ்சங்கூட நிறைவுயடையாத கலவியின்பத்தை இருவரும் பெறுகிறார் என்று இந்த வெண்பா கூறுகிறது. இது சற்று நளினமான பாட்டு. இத் திறந்த அவையில் இதை விவரித்துச்சொல்லத் தயக்கமாயிருக்கிறது. இந்த வெண்பா இளங்கோ எழுதியதாவென்று தெரியாது. பொதுவாகக் காதைகளின் பின்வரும் வெண்பாக்களை இளங்கோ எழுதியதாய் நான் கொள்வதில்லை. நாலாயிரப் பனுவலிலும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரத் தொகுதிகளின் பின்னே இதுபோன்று போற்றி வெண்பாக்கள் வரும். அவையெல்லாம் நாலாயிரப் பனுவலைச் சேர்ந்தவையல்ல. ஆனால் பாடஞ் சொல்லிக்கொடுக்கும்போது அவற்றையும் சேர்த்திச் சொல்லித்தருவார்கள். சிலம்பில் இப்படி வரும் வெண்பாக்களை
”பொருள் சுருக்கும் வெண்பாக்கள்; வேறு யாரோ எழுதியவை” என்று கொண்டு நகரவேண்டும்.

மூன்றாவதாய்க் கடலாடு காதையில் வசந்தமாலை பற்றிய கேள்விக்கு வருவோம். இதை நான் விளக்குவதைக் காட்டிலும், திரு. ஆ. பழநி எழுதிய “சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை(தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007) tamizh...@yahoo.co.in என்ற முகவரிக்குக் கேட்டெழுதி வாங்கிப்படியுங்கள். அருமையான நூல். சிலம்பினுள் ஆழ்ந்து பலரும் அறியாத ஓர் உண்மையை அவர் எடுத்தோதுகிறார். அவர்நூலை அறியாதோர் வாங்கிப் படிக்கவேண்டும்.

கண்ணகியை விட்டுவந்த கோவலனுக்கு மாதவியோடு மட்டும் தொடர்பு ஏற்படவில்லை. நேரடியாய்ச் சொல்லாவிடினும் பூடகமாய் அங்கங்கே குறிப்போடு இளங்கோ சொல்வார். அவனுக்கு வசந்தமாலையோடும் தொடுப்பு ஏற்படுகிறது. மாதவி எப்படியோ அதை நாள்கழித்து இலேசுபாசாய் அறிந்துகொள்கிறாள். கடலாடுகாதையில் வசந்தமாலை வருந்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ”இந்த உறவு தகாதது, முறையற்றது” என்று உணர்த்துவதற்காகத் தான் கானல்வரிப்பாட்டே எழுகிறது. ”காவிரியை மட்டுமா சோழன் கொண்டான், கன்னியையும் தான் கொண்டான்” என்று தொனிக்க கோவலன் மாற்றுப்பாட்டைப் பாடுகிறான். இங்கே மாதவி காவிரிக்கு ஒப்பாகிறாள்; வசந்தமாலை கன்னிக்கு ஒப்பீடு ஆகிறாள். கோவலன் புகாரைவிட்டுப் பிரிந்தது மாதவியாலும் அல்ல; கண்ணகியாலும் அல்ல. மாதவின் முன்னே கோவலனின் குட்டு வெளிப்பட்டு விட்டது. மாதவி குறிப்பால் அதைக் கேட்கிறாள். கோவலனால் அதற்கு விடைசொல்லமுடியவில்லை. தன்னைத் திருத்திக்கொள்ளவும் முடியவில்லை. சினமெழுகிறது தான் ஊர் மேய்வதைத் தன் காமக்கிழத்தில் கேட்டுவிட்டாளே எனக் கோவங்கொண்டு புகாரை விட்டு ஒரேயடியாய் விலகுகிறான். இவ்வளவு தவறுகள் நடந்தும் தன் மனை தன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டாளே என்று மனந்திருந்தி மதுரைக்கு வருகிறான். மதுரைக்கோட்டைக்குள் வந்தும் அவன் முதற்பார்வை கணிகையர் வீதியைத்தான் நாடுகிறது. நாய்வாலை நிமிர்த்தவா முடியும்?

பழநிசொன்ன எல்லாக்கருத்துக்களை நான் ஏற்காவிட்டாலும், அவர் காட்டிய கோணம் ஒரு புதிய புரிதலை எனக்களித்தது. இன்னும் ஆய்ந்து பார்க்கவேண்டும். அவர்சொல்வது பெரும்பாலும் சரியாய் இருக்குமென்றே இப்பொழுதெல்லாம் எண்ணுகிறேன். இதைக் காடுகாண் காதையிலும் பார்ப்போம்.

iraamaki

unread,
Jul 16, 2016, 10:13:17 AM7/16/16
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
 
 
From: iraamaki
Sent: Saturday, July 16, 2016 7:40 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.
 
இந்தியாவெங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக்காலத்திற்கு முன்னர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற்சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/சாருவாகம்/பூதவாதம் என்று சிற்சிறு வேறுபாடுகளுடன் பெயருண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இந்தக் கொள்கையை ஏற்காது வேதக்கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது. கொஞ்சங்கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சிலவேளைகளில் விளைபொருட்களாயும், சிலவேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லைநிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக்கொண்டிருந்த தொடக்கநிலை மருதநிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.
 
நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.533), வர்த்தமான மகாவீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறையுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இவர் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே இவர் பெரிதும் பேசினார். இவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லை ஒட்டியவர்.
 
மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்களிடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ்செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். வேதநெறி ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் தாழ்ந்து உத்தர மீமாம்சம் உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங்கொஞ்சமாய் உருமாற்றி வேதநேறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்திற்றான், எல்லாச் சமயநெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றே நான் சொல்வேன். எல்லாச் சமயநெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன.
 
வேதமறுப்பின் மூன்றுசமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக்கொண்டது போலவே தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக்கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச்சுழற்சியைத் தடுத்துநிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர்மூவரும்  வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கைவேறுபாட்டை இங்குசொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச்சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச்சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப்பட்டது. பிறவிச்சுழற்சி பற்றி புத்திதெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப்பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தியானநிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தியானிப்பதால் சம்மணம்>சமணம் என்று மூன்றுமே அறியப்பட்டன.  
 
பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ்சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப்பாடல்களைத்தவிர  தனிப்பட ஒரு உருப்படியான நூலும் கிடைக்காத அளவிற்கு நிலைமையுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்றவை தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாதுபோய் இலங்கையில் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப்பெயராகவும் ஆகிப்போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.
 
வேதநெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேதநெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேதநெறிப்பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது நீருக்கே முகன்மைகொடுத்து 15 ஆம் நூற்றாண்டுவரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தங்களுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதானநிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும்நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமெழுந்தது. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச்சொல்வர். என்செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் அரசாங்கப் பதிவுகளில் “இந்துமதம்” என்று எழுதிக்கொள்வர். இந்துமதம் ஒரு கலவை மதம்.
 
இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச்சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவியைத் துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாம் என்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.
 
கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பியிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயின நெறிப்பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்குமென்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாதவொன்றாகும்.
 
சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்ததுபோற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. (நண்பர் பானுகுமார் தமிழ்ச்செயினர். அவருக்கும் மற்றவர்க்கும் எந்த வேறுபாடும் தோற்றத்திற் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை. தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது. அதை நெற்றியில் யாரும் குறித்துக்கொண்டு நான் பார்த்ததில்லை. புத்தருக்குச் சுழற்குறி முகன்மையில்லை. கோவலம் ஏதும் இதுபோல் அணிந்திருந்தானா, தெரியாது.  
 
கட்டுரை காதையில் (155) வரும் வரிகள் பற்றி ஓரளவு என் நூலிற் பேசியுள்ளேன். இங்கே இளங்கோவின் வார்த்தை விளையாட்டு நடக்கிறது. இப்பிறப்பில் கோவலன் என்பது இயற்பெயர். முற்பிறப்பில் அது பணிப்பெயர் (கொ-வலன். bureaucrat). முற்பிறப்பில் பரதன் என்பது இயற்பெயர். இப்பிறப்பில் அவன் பணிப்பெயர் (பரத்தல் = விலைசொல்லுதல். பரதன் trader) பரதன் கொல்லாமை விரதத்தை நீங்கிய வெறுப்புக் கொண்டவன் ஆதலால், பிடிபட்டவனை “ ஒற்றன் இவன்” என அவன் பற்றிக் கொண்டான். சங்கமன் வேறு மதத்தவன் என்று கொலைசெய்யப் படவில்லை. தவறிழைக்காத சங்கமன் இறக்கப் பரதன் காரணமானான். எனவே இப்பிறப்பில் தவறிழைக்காமலே கோவலன் இறக்க நேரிடும் என்று விதிவழியே அற்றுவிகம் சொல்லும். வினைவழியே செயினம் சொல்லும். அது தான்,
.  
”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”
 
என்பதற்கான பொருளாகும்.வினையா, விதியா என்பது முடிவில்லாத வாதம்.
 
இனி உங்களின் அடுத்த ஐயத்திற்கு வருவேன். உங்கள் ஐயங்களுக்கு விடைகளை முடித்துவிட்டு இப்பொழுது நீங்கள் எழுப்புங் கேள்விகளுக்கு வருவேன். இல்லையென்றால் தொடர்ச்சி போய்விடும்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Saturday, July 16, 2016 2:52 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அன்பின் இராம.கி ஐயா,
மிக்க நன்றி,

எனது சில கருத்துக்கள்



நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை.
ஐயா,
நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது.
இது பற்றிய வரியைத் தரவியலுமா?

கொலைக்களக் காதை  (193)

இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தாளிற் காணான்


பொற்கொல்லன் கூறும் இக்கதையில் வரும் இளங்கோவேந்தன் வெற்றிவேற்செழியனாக இருப்பின், பொற்கொல்லன் - வெற்றிவேற்செழியன் சம்மந்தப்பட்ட பழைய நிகழ்ச்சி நடந்திருக்கலாம். அதில் வரும் கள்ளன் பொற்கொல்லன் குழுவில் ஒருவனாக இருந்திருக்கலாம். அதுவும் வெற்றிவேற்செழியன் கோபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.


7.
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று
ஐயா, இதில் வரும் ஆயிரவர் என்பதை 1000 எனப் பொருள்கொள்ளாமல் ஒரு குழுப்பெயராகக் கொள்ளலாமா..
ஐந்நூற்றுவர், ஆயிரவர் என்று வணிகக் குழுக்கள் இருந்திருக்கின்றன.. பொற்கொல்ல ராயிரவர் அதிலிருந்து வந்த பொற்கொல்லராக இருக்கலாமா?

காட்சிக் காதை -
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இதில் ஆரிய மன்னர் ஆயிரம் பேர் எனக் கொள்ளவியலாதே?





இணையத்திலும் தொடட்கட்டுரையாய் உண்டு. என் வலைப்பதிவிலும் உண்டு.
உங்கள் வளவு தளத்தில் அத்தொடரை வாசித்துள்ளேன் ஐயா..


“சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை(தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007)
நன்றி ஐயா.. முன்பும் வாங்க முயன்றேன்.. முடியவில்லை. முயற்சித்துப்பார்க்கின்றேன்.


வசந்தமாலை பற்றி உங்கள் விளக்கத்திற்கு நன்றி, எனக்கும் அந்த சந்தேகம் உண்டு..

கானல் வரியில் மாதவி மாலை பற்றிப் பாடுவது வசந்தமாலை பற்றியதோ என்றும் ஐயம்.

இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே
களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட் டுளதாங்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை.

கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே
எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீ ருகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொல்
மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை.

பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல்
மறவையாய் என்னுயிர்மேல் வந்தஇம் மருள்மாலை.


கோவலன் பிரிந்து போனபின்பு , வசந்தமாலை போய்க்கூப்பிட்டால் கோவலன் வருவான் என்று மாதவி நினைத்திருக்கலாம்..

பசந்த மேனியள் படருறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையிற் றுணிபொரு ளெல்லாங்
கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென

இங்கும் எனக்கொரு ஐயம் . பசந்த மேனியள் என்பது மாதவியா வசந்தமாலையா?

நன்றி ,
முகுந்தன்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Jul 17, 2016, 2:01:50 AM7/17/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அடுத்து அடைக்கலக்காதையில் வரும் 
 
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்”
 
என்ற (105-108) வரிகளைப்பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இதில் வரும் பூங்கண் இயக்கி, நேமிநாதருக்கான இயக்கி இவளைக் குசுமாண்டினி, அம்பிகா என்றுங் குறிப்பர். (அண்மையில் ”சமணம் அறிவோம்” இழையில் நண்பர் பானுகுமார் "பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலைமாலினி, குசுமாண்டினி/கூஷ்மாண்டினி, வராகி, ஜினவாணி" eன்ற இயக்கிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.) அம்பிகாதேவி தாமரைமலரின் மேல் நின்றிருப்பவள். நேமிநாதத் தீர்த்தங்கரரை யாதவரைச் சேர்ந்த கண்ணன், பலராமனின் ஒன்றுவிட்ட சோதரனாய்ச் சொல்வர். (வசுதேவருக்குப் பலராமனும், கண்ணனும் புதல்வர்கள்; வசுதேவரின் அண்ணனான சமுத்திரவிசயனுக்கு நேமிநாதர் புதல்வர்) நேமிநாதரை அரிட்டநேமி (>அரிஷ்டநேமி) என்றுங் குறிப்பிடுவர்.
 
அரிட்டன்/அரட்டன் என்றபெயர் தமிழகத்தில் நெடுநாளிருந்தது. ஆனைமலைக் கல்வெட்டில் ”அற்றுவாயி அரட்ட காயிபன்” என்றபெயர் வரும். (அற்றுவாயி = அற்றுவிக நெறியாளர்.) பழந்தமிழிக் கல்வெட்டுக்களைச் செயினரோடு மட்டுமே பொருத்துவது பிழையான அணுகுமுறை. இன்று அற்றுவாயிகள் இல்லாததால் அன்றைய அவரிருப்பை மறுப்பது சரியில்லை. பல கல்வெட்டுக்கள் அற்றுவாயிகளுக்கும் பொருந்தும். அரட்டனென்பது அற்றுவாயிகளுக்கும் செயினருக்கும் வரலாம். இருவருமே நேமிநாதரை ஏற்றவர். நேமிநாதரின் காலம் கி.மு.800 க்கும் முன்பாகலாம். எந்தக் காலமென்று உறுதியாய் இப்போது சொல்லமுடியவில்லை.
 
குசுமம் என்பது மலருக்கான கணப்புப் (generic) பாகதப் பெயர். என்ன மலர் என்பது புரிதலைப் பொருத்தது. பெரும்பாலும் அது தாமரையையே குறிக்கும். ஓரோவழி பாதிரிப்பூவையும் (>பாடலிப் பூவையும்) குசுமமென்று அழைத்திருக்கிறார். மகதத்தின் பெருந்தலைநகரான பாடலிபுத்தத்தைக் குசுமபுரம் என்றும் அழைத்திருக்கிறார். நம்முரில் கடலூருக்கு அருகிலுள்ள பாதிரிப்புலியூரும் குசுமபுரம் என்று அழைக்கப்பட்டது. அண்டுதல் என்பதற்கு பொருந்தியிருத்தல், மேலிருத்தல் என்றே பொருள்படும். குசும அண்டினி என்பவள் பூவின் மேல் இருப்பவள். பாகத முறைப்படி குசுமாண்டினி என்று கூட்டுச்சொல் அமையும். செயினத்தின் பழம்நூல்கள் அருத்த மாகதி (அரை மாகதி) என்ற மொழியிலேயே இருந்தன. மகாவீரர் அருத்த மாகதியிற் பேசினார். புத்தர் மாகதியில் உரை நிகழ்த்தினார். 
 
மாகதி, அருத்த மாகதியின் கலப்பாய்ப் பாகதம், பாலி என்ற மொழிகள் பின்னால் எழுந்தன. இற்றை வட இந்தியமொழிகள் பலவும் பாலி, பாகதத்திற் கிளைத்தவை. [தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாகதமும், பாலியும் சொல்லிக்கொடுப்பது நல்லது. பல படிப்பாளிகளும் வெறும் சங்கதத்தோடு நின்றுவிடுவது ஒருபக்கப் பார்வையையே தருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொருவரும் பாகதம், பாலி, சங்கதம் போன்றவற்றில் இரு மொழிகளாவது படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். வெறுமே தமிழை மட்டும் படித்துக்
குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவது நல்லதல்ல.]
 
குசுமாண்டினியை கூஷ்மாண்டினி என்பது வட்டாரப் பலுக்கல். அம்மா என்ற தமிழ்ச்சொல் பாகதம், சங்கதம் போன்ற மொழிகளில் அம்பா என்றாகும். (அம்பாவை மீண்டுங் கடன்வாங்கி அம்பாள் என்று நாம் ஆக்குவோம். எல்லா அம்மன் கோயில்களையும் அம்பாள் கோயில் என்கிறாரே? அது சங்கதத்தாக்கம்.) அம்பாவின் நெருக்கமான அழைப்பு அம்பிகா என்றாகும். குசுமாண்டினியை குழந்தையைத் தூக்கிவைத்திருக்கும் அம்மாபோல் பழஞ்சிற்பிகள் சிலைவடிப்பர். அம்பிகாதேவி என்ற பெயர் எழுந்தது அப்படித்தான். அவள் நம்மைப் போற்றிக் காக்கும் தாய்.
 
பூங்கண்ணில் வரும் ”கண்” விழியைக் குறிப்பதில்லை. அதன் பொருள் ”இடம்”. பூவை இடமாய்க் கொண்டவள் பூங்கண் இயக்கி. இப்பொழுது அடைக்கலக் காதையில் வரும் பூங்கண் இயக்கிக்கும், குசுமாண்டினிக்கும் உள்ள உறவு உங்களுக்குப் புரிகிறதா?
 
பூவின்மேல் மங்கை நிற்பதை அலர்மேல் மங்கையென்றுஞ் சொல்வர். (அலமேலு என்பது தென்பாண்டிநாட்டில் மிகச் சாத்தாரமாய் உள்ள பெயர்.) இருபக்கம் யானைகள் நீர் தூற்றிப் போற்றியபடி, தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அலர்மேல் மங்கையின் சிற்பம் வெறும் விண்ணவக்கோயில்களில் மட்டுமிருக்காது. வேதமறுப்புச் சமயங்களைச் சார்ந்த ஐயனார் கோயில்களில் (குறிப்பாய் ஐயனார் கருவறையின் திருநிலைக்குமேல்) இருக்கும். இன்னுஞ்சொன்னால் ஏராளமான சிவன் கோயில்களின் வடமேற்கு மூலையிற் கூட மகாலெட்சுமியின் திருமேனி தனிக்கருவறையில் இருக்கும். நான் சொல்வது கேட்டு அதிர்ந்துவிடாதீர்கள். இலக்குமிக்கும், சமணரின் பத்மாவதிக்கும், குசுமாண்டினிக்கும் ஏராளமான ஒப்புமை, உறவுகளுண்டு. (இலக்குமியின் தொன்மத் தொடக்கம் பற்றியறிய ”வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அருமையான நூலைப் படியுங்கள். சுவீரா ஜெயஸ்வால் எழுதிய ஆங்கில நூலை கி.அனுமந்தன், ஆர்.பார்த்தசாரதி என்போர் மொழிபெயர்த்து 2010 இல் இரண்டாம் பதிப்பாய் NCBH வெளியிட்டிருக்கிறது.) மடற்குழுக்களில் சிலவற்றைப் பேசப் பலரும் தயங்குகிறார். நம்பிக்கைகளைக் குலைத்துவிடுவோமோ என்ற பயமும் பலருக்கிருக்கிறது.  
 
[எங்கள் சிவகங்கைப் பக்கம்,
 
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் – வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.
 
என்ற ”பாடுவார் முத்தப்பர்” பாட்டுச் சொல்லுவார்கள். பெருமாள் கோயிலுக்கே போகாத சிவப்பழமான வீட்டிலும் இது சொல்லப்படும். இது பூங்அண் இயக்கிக்கான பாட்டுத்தான்.  (அம்மா = அம்பிகா; இலக்குமி = குசுமாண்டினி) 
 
நான் இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணமுமுண்டு. பெரும்பாலான விண்ணவக் கோயில்களில் பெருமாளுக்கு முதலிற் கருவறை ஏற்பட்டுப் பலகாலங்கழித்தே (ஏதோவொரு ஒட்டுக்கோயிலாய்) தாயாருக்குக் கருவறை ஏற்பட்டதைப் பார்த்து அறியமுடியும். இதேநிலை சிவன் கோயில்களிலும் உண்டு. அம்மனின்சந்நிதி சிவன்சந்நிதிக்குத் தள்ளி பின்னால் ஏற்பட்டு அமைந்திருக்கும். ஆனானப் பட்ட சிதம்பரங் கோயிலிலேயே சிவகாமசுந்தரியின் கருவறை நடவரசனின் கருவறையிலிருந்து பெரிதும் விலகியிருக்கும். மதுரை மீனாட்சி கோயிலும் அப்படித்தான். சொக்கன் கோயில் முதலெழுந்ததா? கயற்கண்ணி கோயில் முதலெழுந்ததா என்று தெரியாது. ஆனால் இரண்டும் வெவ்வேறு கட்டுமானங்கள். அத்மட்டும் உருதி. இவற்றையெல்லாம் ஆய்வுசெய்து சொல்லப்போனால், பலரும் என்னைப் புறந்தள்ளக் கூடும். ஆனால் உண்மை அதுதான். சிவநெறியும், விண்ணவநெறிகளும் தாயாரையும், அம்பாளையும் சேர்த்துக்கொண்டது ஒருவிதமான மறுவினையால் மட்டுமே என்று சொல்லவேண்டியிருக்கிறது. முதலில் அவை எழுந்தவையல்ல.
 
மொத்தத்தில் “இயக்கிகளின் தாக்கம்” குமுகாயத்தில் மிகப் பெரியது. ஒவ்வொரு ஐயனார் கோயிலிலும் இயக்கிகள் உண்டு. ஐயனார் கோயில்கள் சில செயினத்தால் எழுந்தவை, சில அற்றுவிகத்தால் எழுந்தவை. சில புத்தத்தால் எழுந்தவை. இற்றைய ஐயனார் கோயில்கள் சிவத்தோற்றம் கொண்டாலும் பல நாட்டுப்புறத் தெய்வங்கள் அங்கு குடிகொண்டிருக்கும். ஐயனார் கோயில்களில் அரிதாகச் சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றில் குயவரே வேளகாரராய் இருப்பர். அவரே அங்கு குருக்கள். புறநடையான சில கோயில்களில் மட்டுமே பார்ப்பனர் குருக்களாய் இருப்பர். (காட்டு. சபரி மலை).
 
அம்மன் கோயில்களாய்த் தனித்து எழுந்த கோயில்களும் நிறுவனப்படுத்தப்பட்ட சிவநெறி, விண்ணவ நெறிகளுக்குள் முதலில் வரவில்லை. இப்பொழுது இந்துமதம் என்ற கலவை மதம் இவற்றை இழுத்துக்கொள்கிறது. இந்த அம்மன் கோயில்களில் முன்னாளில் குயவரும், பண்டாரங்களுமே பூசாரிகளாய் இருந்தார். பின்னால் சங்கதவாக்கம் கூடிப்போய் 50/60 ஆண்டுகளுக்கு முன்தான் பார்ப்பனக் குருக்கள் கோயில்களுக்குள் வந்தார். சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காடு, மாங்காடு போன்றவை பின்னாற்றான் மாறின. என் வாழ்நாளிலேயே பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பண்டாரம் போய், பார்ப்பனக் குருக்கள் வந்திருக்கிறார். இன்னுஞ்சொன்னால் எண்ணிக்கையில் கணிசமான பார்ப்பனர் இன்றும் குலதெய்வக் கோயில் என்றுசொல்லி தங்களுடைய மூதாதையர் ஊர்களுக்குப் போய் அம்மனைக் கும்பிட்டு வருவதுண்டு. அவையேல்லாமே அவர்கள் வீட்டுப்பெண்களின் அழுத்ததாற் செய்வர்.      
 
அக்காலத்தில் எம்மதமும் சம்மதமென்று எல்லாத்தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ? - என்றால் உண்டு. இன்றுங் கூட உண்டு. நான் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோயிலுக்கும் போயிருக்கிறேன். பலமுறை தொழுதிருக்கிரேன். நாகூர் தருக்காவிற்குப் பலரும் போவார். சீரங்கம் கோயிலில் இன்றும் சில முசுலீம்கள் தொண்டுசெய்கிறார். ஐயனார் கோயிலுக்கு எல்லோரும் தான் போகிறார்.
 
தமிழர் குமுகாயம் பொதுவாய்ச் சமயப்பொறையுள்ள குமுகாயம் தான். ஆனாற் சில காலங்களில் சமயப்பொறை குறைந்து குத்து, வெட்டு என்று சீரழிந்த காலமும் உண்டு. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சிவநெறிக்கும் விண்ணவநெறிக்கும் ஆகாது. மகேந்திரவருமன் காலத்தில் செயினத்திற்கும் சிவத்திற்கும் ஆகாது. அற்றுவிகம் ஒழித்தது பற்றி முன்பே சொன்னேன். பல்லவரின் முடிவுக் காலத்தில் புத்தநெறியாளர் இங்கிருந்து மறைந்தே போனார். அதனாற்றான் மணிவாசகர் 9 ஆம் நூற்றாண்டு என்பதை நான் ஒப்புவதில்லை. இல்லாத புத்தநெறியாளரோடு அவர் வாதிடுவாரா? புத்த நெறியாளர் இங்கு உயர்ந்திருந்த காலம் களப்பிரருக்குச் சற்று முன்னாலும், களப்பிரர் காலத்திலுமே. அந்தக்காலமே மணிவாசகர் காலம். அப்படித்தான் ஏற்னம் வழிகாட்டும். அதையெல்லாம் வேறிடத்திற் பேசுவோம்.
 
இந்தப் பகுதியில் பூங்கண் இயக்கியைப் பார்த்தோம். இனி உங்களின் முதற்கேள்விக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.   
 
 
 
 
Sent: Saturday, July 16, 2016 10:59 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
வணக்கம்  ஐயா , உங்கள் விளக்கங்களைப் படித்து வருகிறேன். 
 
சிலம்பை முழுதும் படித்தால் கதை பஞ்சகாலத்தில் நடந்தது புரியும். கதைநடந்த காலத்தில் தென்னிந்தியா முழுக்க வற்கடம் வந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கிறோம்.<

இந்த  ஊகங்கள்  எதன் அடிப்படையில் எழுகின்றன என அறிந்து கொள்ளலாமா ?

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2016, 11:53:54 AM7/17/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், tamil_ulagam, தமிழாயம்
>
மதுரைக்கோட்டைக்குள் வந்தும் அவன் முதற்பார்வை கணிகையர் வீதியைத்தான் நாடுகிறது. நாய்வாலை நிமிர்த்தவா முடியும்?

கோவலன் மாதவியை அடைந்தது அப்படி அல்லவே!



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2016, 12:05:44 PM7/17/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், tamil_ulagam, தமிழாயம்
>
இங்கும் எனக்கொரு ஐயம் . பசந்த மேனியள் என்பது மாதவியா வசந்தமாலையா?

வசந்தமாலையே ”வசந்தமாலைவருகென” விளிப்பாளா?

17 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:53 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2016, 12:28:28 PM7/17/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், tamil_ulagam, தமிழாயம்
>தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொருவரும் பாகதம், பாலி, சங்கதம் போன்றவற்றில் இரு மொழிகளாவது படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்

இலத்தீன் கிரேக்கமும் கற்கலாம். தமிழ்ச்சொற்களை அங்கும் காணலாமே.

17 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:05 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

iraamaki

unread,
Jul 19, 2016, 12:20:06 AM7/19/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
இனி
”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....
 
என்ற காடுகாண்காதை (196) வரிகளுக்கு வருகிறேன். மதுரைக்காண்டத்தின் முதலில்வரும் காடுகாண்காதையின் களத்தையும், வேதமறுப்பாளரின் சில பொதுமைகளும், பார்ப்பனரின் விதப்புக்களையும்  ஓரளவு அறிந்துகொள்வது நம் புரிதலைக் கூட்டும். இம்மடலில் அதைத்தான் செய்யப்போகிறேன்.
 
கதைநடந்த காலத்தில் உறையூரைவிட்டு வெளிவந்தவுடன் காவிரித் தென்கரைக்கு வெகு அருகில் பாண்டியநாட்டெல்லை தொடங்கிவிடுகிறது. (அதனாற்றான் இக்காதை மதுரைக்காண்டத்துள் வருகிறது.) “காதம் எவ்வளவு தூரம்?” என்ற உரையாடலில் இக்காலத்திய பாண்டிய, சோழப் பகுதிகளின் அளவைப் பற்றி ”பழந்தமிழர் நீட்டவைகள்” என்ற கட்டுரைத்தொடர் மூலம் கணக்குப்போட்டதைச் சொல்லியிருந்தேன். அந்தக் கணக்கு எனக்குப் பெரும்வியப்பைக் கொடுத்தது. சிலம்பைப் புரிந்துகொள்ளவும் வழிவகுத்தது.
 
அக்காலத்தில் சேரநாடே பென்னம் பெரியது. [அதனாற்றான் செங்குட்டுவன் அவ்வளவு துள்ளியிருக்கிறான். தமிழகத்திற்கே தான் ஆழிவேந்தன்(சக்ரவர்த்தி) போல் வடக்கே படையெடுத்திருக்கிறான்.] பாண்டியநாடு அதற்கடுத்த அளவானது. அளவில் மிகச்சிறியதான சோழநாட்டில் நாகநாடும் (நாகநாட்டுள் வட இலங்கையையும் சேர்ந்தது. மணிபல்லவம் என்பது நாகனார் தீவுதானே?) வளநாடும் முறையே புகாரையும் உறையூரையும் தலைநகராய்க் கொண்ட பகுதிகள். இவற்றிலும் நாகநாட்டைவிட மீச்சிறிய வளநாட்டின் இருப்பை உறுதிசெய்தவன் சேரன் செங்குட்டுவனே. தன் மாமன் மகனை (அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனாகலாம் என்ற ஊகத்தை என்நூலிற் சொல்லியிருப்பேன்.) இருத்துவதற்காக 9 மன்னர்/வேந்தருடன் போரில் வென்றது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. சிலம்பின் காலத்தை கி.மு.75 என்றே நான்சொல்வேன். கி.பி.144 க்கருகில் சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாமென்பதை நான் முழுக்க மறுப்பேன். வரலாறுமிகுந்து புனைவு மிகவுங்குறைந்த சிலம்போடு புனைவுமிகுந்த மணிமேகலையை இரட்டைக்காப்பியமாய்ச் சேர்த்து சிலம்பின்காலத்தைக் கீழிழுப்பதை நான் மறுப்பேன். பெரும்பாலும் மணிமேகலையின் காலம் கி.பி.285-385 க்குள் ஆகலாம். 
 
காவிரிக்குத்தெற்கே அழனி(>அக்னி)யாறு தொடங்கி, பாமணியாறு, அம்புலியாறு, தெற்குவெள்ளாறு, மணிமுத்தாறு, பாம்பாறு வரையுள்ள வளைபகுதியைக் (முழுப் புதுக்கோட்டை, கொஞ்சம்போல் சிவகங்கை மாவட்டங்கள்) காலகாலத்திற்கும் சோழரும், பாண்டியரும் பந்தாடினர். அது சோழத்தோற்றமுங் காட்டும்; பாண்டியமரபுங் காட்டும். மாற்றான் ஏமாந்தால் தினவெடுத்த எந்தப் பாண்டியனும், சோழனும் உடனே பிடுங்கிக்கொள்ளும் இப்பகுதியையே முத்தூர்க்கூற்றமென்பார் (முத்தூற்றுக்கூற்றம் என்றுஞ்சொல்வர் முத்தூர்ப்பேட்டை (>முத்துப்பேட்டை), முத்தூரார் வயல்(>மித்திராவயல்), முத்துக் குடா போன்ற முத்து எச்சங்கள் அங்கு நிறையவேயுண்டு. தவிர கிழக்குத்தொடர்ச்சிக் குன்றுகளிற் தொடங்கிய மேற்கூறிய ஆறுகளின் போக்கில் ஏராளம் கண்மாய்களும், குளங்களும் ஏற்பட்டன. (கூகுள்படத்தைப் பாருங்கள், நான் சொல்வது புரியும்) உறுதியாக வெள்ளாறும் பாம்பாறும் பலகாலம் தடம்புரண்டுகொண்டே இருந்திருக்காவிடில் இத்தனை கண்மாய்கள் எழ வாய்ப்பேயில்லை. பம்பிய (= அகலத்திற் பரவிய) ஆறு பாம்பாறு (பாம்பிற்கும் அதற்கும் தொடர்பில்லை). அதேபோல வெள்கிய ஆறு வெள்ளாறு. இற்றை ஆற்றுப்போக்குகளை வைத்து அற்றைக் கதைகளை உணர முடியாது.
 
இக்கதை நடந்தகாலத்தில் முத்தூர்க் கூற்றம் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வசமேயிருந்தது. அதனாற்றான் உறையூரை விட்டு வெளிவந்தவுடன் கொடும்பாளூர் போகும்வழியிலுள்ள அடர்ந்த விராலிமலைக் காடுகளில் (அந்தக் காடுதான் இந்தக்காதை நடக்கும் களம்) குடமலை சேர்ந்த மாங்காட்டுப் பார்ப்பான் தென்னவனின் புகழ்பாடுகிறான். [பொதுவாக, இதுபோன்ற படித்தவர், ஒன்று தன்னாட்டு வேந்தனின் புகழைப்பாடுவர். அல்லது தான் பயணஞ்செய்யும் நாட்டுமன்னனின் புகழைப்பாடுவர். இங்கே உறையூர்ச்சோழனின் புகழ் பாடப்படவேயில்லை. வியப்பாக இல்லையா? எனவே காதை நடந்த இடம் பாண்டியநாடாகவே இருந்திருக்கவேண்டும்.
 
இங்கே முகுந்தன் கேட்ட கேள்விக்கு உடனே வராது காதையைச் சற்று விவரிக்க விரும்புகிறேன்.
 
“திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்மொழி லகவயிற்”
 
என்றவரிகள் ஆதிநாதரை (முதல் தீர்த்தங்கரர்) வணங்குவதையும் நிக்கந்தர்பள்ளிப் பெரியோரையுங் குறிப்பிடுகின்றன. (கடவுள் என்றசொல் இச்சமயங்களில் பெரியவர், தலைவர் என்றே பொருள்படும். எல்லாம்வல்ல இறைவனையல்ல. சமயங்களுக்குள் இருக்குஞ் சிக்கலே வரையறைகளிற்றான். அவை புரியாமற்றான் வீண்வாதங்களில் நாம் ஈடுபடுகிறோம்.) ஆதிநாதரை அற்றுவிகர், செயினர், புத்தர் எனும் மூவருமே ஏற்றுக்கொள்வர். நிக்கந்தர் என்ற சொல் ”பிறவிக்கட்டை நிறுத்துவோர்” என்றே பொருள்படும். கந்தென்றால் தமிழிற் கட்டென்றே பொருள். பார்சுவரை ஏற்ற எல்லாச் சமணருக்கும் நிக்கந்தரென்ற பெயருண்டு. பார்சுவருக்கு அப்புறந்தான் 3 பெரிய பிரிவுகள் ஏற்பட்டன (உண்மையில் ஏராளப் பிரிவுகள் ஏற்பட்டன. அவையெல்லாம் ஒன்றுளொன்றாய்க் கரைந்து மூன்றாய்த் தங்கின.)
 
எப்படி நிறுவனப்படுத்தப்பட்ட கிறித்துவமதம், ”கத்தோலிக்கம், இரோப்பிய எதிர்ப்பாளர், ஆங்கில எதிர்ப்பாளர், செரிலிக் எதிர்ப்பாளர்” என்று பலவகையாய்ப் பிரிந்ததோ அதுபோல பார்சுவருக்கு 250 ஆண்டுகள் கழித்து நிக்கந்தர்பள்ளி உடையத்தொடங்கியது. இதில் செயினரே பிற்காலக் கத்தோலிக்கர்போல் நாட்பட்ட நிறுவனத்தைத் தூக்கிப்பிடித்தார். அற்றுவிகமும், புத்தமும் எதிர்ப்புச் சமயங்களாயின. பார்சுவரை ஏற்ற, மக்கலி கோசலரும், கௌதமபுத்தரும் வர்த்தமான மகாவீரரை ஏற்கவில்லை. தாமே 24 ஆம் தீர்த்தங்கரர் என்று உரிமைகொள்ளத் தொடங்கினர். தமக்கேயுரிய நிறுவனங்களை ஏற்படுத்தினர். இப்படி இவர் முரண்பட்டு நிறுவனத்தைவிட்டு விலகியதால், நிக்கந்தப் பெயர் கி.மு.500களுக்கு அப்புறம் செயினரையே குறித்தது.
 
ஆயினும் முப்பிரிவினரும் நிக்கந்தர் பள்ளிகளுக்குள் சென்று வந்து கொண்டிருந்தார். அவரிடையே முரண் கூராக வில்லை. பகைவர் என்றெண்ணும் அளவிற்கும் அது வளரவில்லை. 3 சமயங்களுமே பகைமுரணை ஏற்பவையல்ல. குறிப்பாக ”ஒருநிகழ்வைப் பார்க்கும்வகையிற் பல பார்வைகளுண்டு” என்னும் ”அநேகந்த வாதத்தைப்” பின்பற்றிய செயினம் மற்ற இரண்டையும் பகைமுரணாய்க் கருதவில்லை. (ஆனால் மற்ற இரண்டையும் முரணிய மதங்களென்றே சொல்லும்.) எனவே அற்றுவிகரும், புத்தரும் நிக்கந்தர் பள்ளிகளுக்கு வந்துபோவதும், அங்கு தங்குவதும், உரையாடுவதும், தியானம் செய்வதும் நெடுங்காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே கி.மு.80-75 இல் இது நடைபெறுவது வியப்பில்லை. அதைத்தான் இந்தக் காதை சொல்கிறது. தவிர இந்தப்பள்ளியில் சாவக நோன்பிகளும் தங்கிக்கொள்ளலாம்.
 
இரவில் சமணர் யாருமே நகரக் கூடாது. எனவே வைகறை யாமத்தில் (2-6 A.M) கோழி கூவியபின் கதிரவன் கிழக்கே தோன்றியபின், வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத்து இருக்கை புக்குழி (பண்ணை = நிறுவனப்படுத்தப் பட்ட வயல்; வாவி = குளம். இளமரக்கானம் = பெரிய மரங்கள் இல்லாத காடு. அப்படியே விராலிமலைப் பக்கத்தை உரித்துச் சொல்லும் விவரிப்பு) மாங்காடுப் பார்ப்பான் வருகிறான்.
 
இவ்விடத்தில் ஓர் இடைவிலகல். பார்ப்பனரைப் பற்றியது. முதலில் மாங்காட்டுப் பார்ப்பான், பின் புகாரைச் சேர்ந்த கோசிகன், பின் தலைச்செங்காட்டு மாடலன், அப்புறம் கட்டுரைக் காதையில் வரும் வார்த்திகன் எனப் பார்ப்பனர் செய்திகள் இக்காப்பியத்தில் தொடர்ந்துவரும். இவரெல்லாம் வரலாற்று மாந்தரா எனில் வார்த்திகன் தவிர மற்றோர் அப்படித் தோன்றவில்லை. கதையை முன்னகர்த்த சிலம்பின் ஆசிரியர் படைத்துக்கொண்ட கற்பனைப்பங்காளர் இவரென்றே சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிற்குவந்த பார்ப்பனர் பெரும்பாலும் கங்கைக்கரையிலிருந்தே வந்ததாய் வரலாற்றாசிரியர் ந..சுப்பிரமணியன் சொல்வார். (1989 இல் வெளியான The Brahmin in the Tamil Country என்ற அவர் பொத்தகம் படிக்கவேண்டியவொன்று. இப்பொத்தகத்தை யாரேனும் இற்றைப்படுத்தி, கோத்திர வரலாற்று விவரங்களைச் சேர்த்து ஏரணக் கண்ணோட்டத்தோடு புதுநூல் வெளிவந்தால் நன்றாகவிருக்கும். அப்படியான விவரம் நம்பூதிகளுக்கு இணையத்தில் உள்ளது.
 
மூன்று அலைகளாய் கங்கைப்பகுதியிலிருந்து  பார்ப்பனர் தெற்கே வந்திருக்கலாம் என்று பேரா. ந.சுப்பிரமணியம் சொல்வார். முதலலை கி.மு. 1000-800 (மிகச்சிலர்), இரண்டாமலை கி.மு.500-200; மூன்றாமலை கி.பி.300-500 என்றும் அவர்சொல்வார். இரண்டாம் அலை மகதநாட்டில் வேதநெறிக்கும் வேதமறுப்பு நெறிகளுக்கும் இடையே நடந்தபோட்டியில் அடுத்தடுத்த மன்னர்கள் வேதமறுப்பை நோக்கிச் சாய்ந்ததால், வேறு புகலிடம் வேண்டுமென்று தெற்கே வந்தது. சங்க இலக்கியத்தில் வேதநெறி சார்ந்த கருத்துக்களும் உள்ளன. வேதமறுப்புக் கருத்துக்களும் உள்ளன. (சங்க இலக்கியச் செய்திகளை வைத்துப்பார்த்தால் பெரும்பாலும் 2 ஆம் அலையினர்  முன்குடுமியர். சோழநாட்டில் இவரே மிகுதி. இவரைச் சோழியரென்றுஞ் சொல்வர். நம்பூதிகளும் கூட முன்குடுமி வைத்திருப்பர். இம் மாங்காட்டுப்பார்ப்பான் நம்பூதியாகக்கூட இருக்கலாம் கோசிகனும், மாடலனும் சோழியராகலாம். வார்த்திகன் பற்றிய விவரம் தெரியாது.
 
தமிழ்ப்பார்ப்பனர் ஆதிசங்கரருக்கு அப்புறம் பெருங்கணம் (பெருகச்சரணம்; இவரே பார்ப்பனர் எண்ணிக்கையில் மிகுதியானவர். அதனாலேயே இப்பெயரைப் பெற்றார்), எண்ணாயிரவர் (அஷ்ட ஸஹஷ்ரர்; எண்ணிக்கையால் ஏற்பட்டபெயர்) வார்த்திகர் (வாத்திமார்; வேதஞ் சொல்லிக்கொடுப்பவர் போலும்), வடமர் (இவரில் பெரும்பாலோர் மூன்றாம் அலையில் வந்தவர்; பல்லவ, பேரரசுச்சோழ அரசியலில் ஈடுபட்டவர்) என்று நான்கு வகைகளில் ஒருங்கிணைந்தவர் ஆனார் ஸ்மார்த்தரென்றே இன்று நால்வரும் அறியப்படுவார். (ஸ்ம்ருதியைச் சார்ந்தவர் ஸ்மார்த்தர்.) நாதமுனிகளுக்கு அப்புறம், குறிப்பாக இராமனுசருக்கு அப்புறம், பல ஸ்மார்த்தர்கள் திருவிண்ணவர் (ஸ்ரீவைஷ்ணவா) ஆயினர். இவருள்ளும் ”தென்கலை, வடகலை” என்று இருவேறு பிரிவுகள் பின்னால் ஏற்பட்டன. . .   .
 
இந்தப் பின்புலத்தோடு, காதையில் மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வதற்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.   :
 
Sent: Monday, July 18, 2016 4:13 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
2016-07-16 19:40 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.
 
இந்தியாவெங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக்காலத்திற்கு முன்னர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற்சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/சாருவாகம்/பூதவாதம் என்று சிற்சிறு வேறுபாடுகளுடன் பெயருண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இந்தக் கொள்கையை ஏற்காது வேதக்கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது.
 
வேதக்கொள்கை வடமேற்கில் எழுந்தது என்று சட்டென்று சொல்லிவிட முடியுமா என்றுத் தெரியவில்லை.
 
http://heritageinstitute.com/zoroastrianism/aryans/index.htm

"....

Similarity in Avestan & Rig Vedic Languages

The languages of the two scriptures, the Zoroastrian Avesta and Hindu Rig Veda, are similar but not identical, indicating that at the time of their composition, the people of the Avesta and the Rig Veda were related and close neighbours - in a fashion similar to two provinces within one country - provinces where the people spoke two dialects of the same language.

The following is an example of the closeness of the Avestan Old Iranian and Rig-Vedic (Sanskrit) languages:
Old Iranian/Avestan: aevo pantao yo ashahe, vispe anyaesham apantam (Yasna 72.11)
Old Indian/Vedic: abade pantha he ashae, visha anyaesham apantham
Translation: the one path is that of Asha, all others are not-paths.
[The Rig-Vedic (Sanskrit) translation of the Avestan was provided to this writer by Dr. Satyan Banerjee.] ..//
 
 
இவற்றை எவ்வாறுப் புரிந்துக் கொள்வது என்றுத் தெரியவில்லை ஐயா. நேரம் அமையும்போது
விரிவாக தங்கள் புரிதலை எழுதவும்.
 
 
 
கொஞ்சங்கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சிலவேளைகளில் விளைபொருட்களாயும், சிலவேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லைநிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக்கொண்டிருந்த தொடக்கநிலை மருதநிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.
 
நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.533), வர்த்தமான மகாவீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறையுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இவர் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே இவர் பெரிதும் பேசினார். இவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லை ஒட்டியவர்.
 
மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்களிடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ்செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். வேதநெறி ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் தாழ்ந்து உத்தர மீமாம்சம் உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங்கொஞ்சமாய் உருமாற்றி வேதநேறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்திற்றான், எல்லாச் சமயநெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றே நான் சொல்வேன். எல்லாச் சமயநெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன.
 
வேதமறுப்பின் மூன்றுசமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக்கொண்டது போலவே தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக்கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச்சுழற்சியைத் தடுத்துநிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர்மூவரும்  வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கைவேறுபாட்டை இங்குசொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச்சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச்சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப்பட்டது. பிறவிச்சுழற்சி பற்றி புத்திதெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப்பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தியானநிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தியானிப்பதால் சம்மணம்>சமணம் என்று மூன்றுமே அறியப்பட்டன.  
 
பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ்சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப்பாடல்களைத்தவிர  தனிப்பட ஒரு உருப்படியான நூலும் கிடைக்காத அளவிற்கு நிலைமையுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்றவை தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாதுபோய் இலங்கையில் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப்பெயராகவும் ஆகிப்போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.
 
வேதநெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேதநெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேதநெறிப்பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது நீருக்கே முகன்மைகொடுத்து 15 ஆம் நூற்றாண்டுவரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தங்களுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதானநிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும்நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமெழுந்தது. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச்சொல்வர். என்செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் அரசாங்கப் பதிவுகளில் “இந்துமதம்” என்று எழுதிக்கொள்வர். இந்துமதம் ஒரு கலவை மதம்.
 
இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச்சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவியைத் துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாம் என்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.
 
கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பியிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயின நெறிப்பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்குமென்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாதவொன்றாகும்.
 
சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்ததுபோற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. (நண்பர் பானுகுமார் தமிழ்ச்செயினர். அவருக்கும் மற்றவர்க்கும் எந்த வேறுபாடும் தோற்றத்திற் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை.
 
 
ஜைனர்கள் நெற்றியில் பிறையிடும் வழக்கம் உண்டு. தற்போதும் சிலர் பின்பற்றுகின்றனர்.
 
 
 
 
 
தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது.
 
 
ஜைனர்கள், வீட்டின் முகவாயிற்படியில் ஸ்வஸ்திகம் இருக்கும். வேறோர் ஊரிலிருந்து வருபவர்களுக்கு, ஜைன வீடு என்பதற்கு அடையாளமாகவும் திகழும்.
 
 
நன்றி!
 
 
இரா.பானுகுமார்,
வங்களூரு
 

iraamaki

unread,
Jul 19, 2016, 11:14:16 AM7/19/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை ஆண்ட தென்னவன் வாழி
 
என்ற வரிகள் ஏதோவொரு பட்டறிவுத் தொன்மத்தை நமக்கு உணர்த்துகின்றன. இது என்னவென்று புரியாது இன்றும் பல தமிழர் தடுமாறுகிறார். முதலில் அரசர், மன்னர், வேந்தர் என்று மூன்று சொல் விதப்புக்களை அறிவோம். அரசர் என்போர் பெரும்பாலும் வலிவுடைய இனக்குழுத் தலைவர் (உரவர்>அரவர்>அரகர்>அரசர் என்பார் பாவாணர்); மன்னர் என்போர் மன்னி நிலைத்தவர் - பல இனக்குழுக்களுக்குச் சேர்ந்த தலைவர். (மொத்தத்திற் கணபதங்களின் தலைவர்); வேந்தர் = முடிசூடியவர், இவரைத்தான் koning என்று மேலைமொழிகளிற் சொல்வார். மன்னவர் பெருந்தகை என்பதும் வேந்தருக்குச் சமமே. இங்கே தென்னவன் என்பது உறுதியாகப் பாண்டியனையே குறிக்கிறது.
 
என் கட்டுரைகளில் பலதடவை சொல்லியிருக்கிறேன். (சிலம்பின் காலம் என்ற என்நூலையும் பாருங்கள்.) சேர, சோழ, பாண்டியர் என்ற பெயர்கள் சந்தனம் பூசிய, மஞ்சள்/குங்குமம் சூடிக்கொண்ட, திருநீறு பூசிய பென்னம்பெரிய இனக்குழுக்களையே குறித்தன. (இவையெல்லாம் சமய அடையாளங்களே அல்ல. வெறும் இனக்குழு அடையாளங்கள். இன்றும் காட்டிக்கொண்டிருக்கிறோம். பலபோது கலந்தும் அணிகிறோம். நம்மோடு ஈனியற் தொடர்புடைய ஆத்திரேலியப் பழங்குடியினரும் விழாக்காலங்களில் திருநீறு பூசுகிறார். அவர் சிவநெறியாளரா, இல்லையே?) கொஞ்சங் கொஞ்சமாய் சிறு இனக்குழுக்கள் இம் மூன்று பெரிய இனக்குழுக்களில் கரைந்துவந்தார். வேளிர் என்போர் இதிற் கரையும்வரை வேந்தரோடு போராடிக்கொண்டேயிருந்தார்.
 
ஊழி என்பதைப் பெரும்பாலும் உரையாசிரியர் நீண்டகாலமென்றே பொருள்கூறுவார். ஆனால் வானியல்வழி விதப்பான பொருளுண்டு. அதற்குமுன் சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவேண்டும். (http://valavu.blogspot.in/2003/09/2.html). சூரியனைச் சுற்றிவரும் புவி தன்னுருட்டல் (rotation), வலைத்தல் (revolution), கிறுவாடல் (gyration), நெற்றாடல் (nutation) என நான்கு இயக்கங்கங்களைக் காட்டும் ஒவ்வொரு பருவகாலத்திலும் பகலும் இரவும் ஒரேபொழுதாக 12 மணிநேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளும்; வாடையில் இரவு நீளும். ஆனாலும் ஆண்டில் இருநாட்கள் பகலும் இரவும் ஒத்தநாட்களாக அமையும். அந்தநாட்களை ஒக்கநாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கிறார். 
 
புவியின் கிறுவாட்டம் (gyration) காரணமாய் ஒவ்வோராண்டும் ஆண்டின் ஒக்கநாள்கள் சிறிதுசிறிதாக முன்நகர்ந்து வருகின்றன. இதை முன்செலவம் (precession; precede = முன்செல்லு) என்பர். ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரைக்கு முன்வந்த ஒக்கநாள் இன்றைக்கு மார்சு 21/22-லேயே நிகழ்கிறது. மேழத்தில் விழுந்த பசந்த ஒக்கநாள் கி.பி. 2012ற்கு முன்னர் மீனத்தில் (pisces) விழுந்தது. இன்றோ நாலாண்டுகள் கழித்து அஃகர (aquarius) ஓரையில் விழுகிறது. அப்படி விழும்போது, புதிய உகத்திற்கு (உகம் = ஒன்றுசேரும் காலம்; உகம்>யுகம்>yuga in Sanskrit) நாம் போகிறோம் என்று வரலாற்றாசிரியர் சொல்லுகிறார். உகம் என்பதுதான் வானியற்படி ஒரு ஊழி. மொத்த முன்செலவம் முடிய கிட்டத்தட்ட 25800 ஆண்டுகள் ஏற்படுகின்றன. அளவுகோல்கள் நுணுகநுணுக இந்த இயக்கத்தின் நடவுகாலம் துல்லியப்பட்டு வருகிறது. 25800 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால், ஓர் ஓரையில் (உகத்தில்/ஊழியில்) 25800/12 = 2150 ஆண்டுகள் என்ற பருவகாலம் அமையும்.
 
ஒவ்வொரு ஊழியிலும் ஒருமுறையாவது வானிலிருந்து எரிகோள் விழும் என்பது தமிழ்மாந்தரின் பட்டறிவு. [இதை நம்புவதற்குத்தான் இற்றைத் தமிழரான நம்மில் யாரும் அணியமாயில்லை. ஆனால் முகன அறிவியல் (modern science) அதைநோக்கிக் கிட்டத்தட்ட வந்துவிட்டது.] வடிவேல் என்பது வானிலிருந்து வந்துவிழும் எரிகோளையே குறிக்கிறது. அதன் தலையும் வாலையும் சேர்த்தால் ஓர் எரியும்வேல் போலவே காட்சியளிக்கும். இந்த எரிகோள்கள் பல்வேறு அளவானவை பல்வேறு பருவங்களில் இவை சூழ்மண்டலத்துள் நுழைந்து புவியில் பெரும் மாற்றங்களை விளைத்திருக்கின்றன. நிலத்தில் இவைவிழுந்து அதனால் ஏற்படும் குழிவுகளை ஆய்வுசெய்ததற்கும், புவியில் மரஞ்செடி கொடிகள், விலங்குகளுக்கு ஏற்படும் இழப்புகள் பற்றியும் அறிவியலிற் பல கட்டுரைகள் வந்துள்ளன. இந்நிகழ்வுகள் நடக்கக்கூடிய பருவெண்களை (frequencies) முன்கணிப்பதற்கும் வழிகள் வந்துவிட்டன.
 
நிலத்தில் எரிகோள்கள் விழுவது பற்றி ஏராளம் ஆய்வுநடந்தாலும், கடலில்விழுவது பற்றியும், அதனாலேற்படும் அழிவுகள், மாற்றங்கள் பற்றியுமறிய பல அறிவியலாளரும் தடுமாறிக்கொண்டிருந்தார். எரிகோளின் விட்டம் 4 அல்லது 5 கி.மீ இருந்தாற்றான் கடலில் ஆழிப்பேரலைகள் ஏற்பட்டுச் சேதம் விளைவிக்கும் என்று அண்மைக்காலம் வரை நம்பிக்கொண்டிருந்தார். அதுபோன்ற நிகழ்வுகள் மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடக்குமென்ற கணிப்பாலும் இவற்றைப் பலரும் மறுத்துவந்தார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் புவிக்கு சாத்தாரமாய் வந்துசேரும் 100-400 மீ விட்டம் உள்ள எரிகோள்களும் கூட கடலிற் குறிப்பிட்டவகையில் விழுந்தால் பெரும் ஆழிப்பேரலைகளை எழுப்பிக் கடற்கரை நகரங்களையும், நிலங்களையும் அழிக்கமுடியுமென்று இப்பொழுது சொல்லத் தொடங்கியுள்ளார். கீழே கொடுத்துள்ள இரு எடுகோள்களைப் (references) படித்துப்பாருங்கள். இவற்றை மறுக்கும் கட்டுரைகளும் கிடைக்கக்கூடும்.      
 
 
முதற்கட்டுரையில் 6000 ஆண்டுக்கு ஒருமுறை 300 மீ விட்டமுள்ள எரிகோள் கடலில் விழுங்காரணத்தால் ஆழிப்பேரலை ஏற்படுமென்றும், இரண்டாங் கட்டுரையில் மடகாசுகருக்குக் கிழக்கில் மாலத்தீவுகளுக்கு அருகில் கி.மு.2800 ஆண்டுகளில் கடல்பரப்பிலிருந்து 12500 அடிகளுக்குக் கீழே 18 மைல் விட்டங்கொண்ட ஒரு பெருங்குழிவு எரிகோளால் ஏற்பட்டிருக்கிறதென்றும், இதன் விளைவால் 2004 இல் நடந்த ஆழிப்பேரலையைவிடப் 13 மடங்கு பெரிதான 600 மீ உயரங்கொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டதென்றும் ஆய்வாளர் சொல்லுகிறார். இந்த ஆய்வு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. இது உண்மையானால், சுமேரியா, எகிப்து, தமிழக நாகரிகங்களில் சொல்லப்படும் கடற்கோள் பெரும்பாலும் உண்மையாகலாம். இந்த ஆய்வை மறுத்தும் பலர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 
மேலேயுள்ள காடுகாண்காதை வரிகளில், எறிந்துவரும் எரிகோளின் பெரும்பகையைப் பொறாது, அதேபொழுது ஒவ்வொரு ஊழியிலும் உலகத்தைக் காக்கும் பொருட்டு, தன் அடியளவை (=ஆழத்தை) அரசருக்கு உணர்த்தி ”பஃறுளியாற்றுடன், பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” அதற்கப்புறம் வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்ட தென்னவன் வாழி - என மாங்காட்டுப்பார்ப்பான் சொல்லுகிறான். இந்த வரிகள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு உரியவையல்ல. அவனுக்கு 2725 ஆண்டுகள் முந்திய பாண்டியனைப் பற்றிக் கூறியது. பஃறுளி, பன்மலையடுக்கம், குமரிக்கோடு என்பவற்றை நானும் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் உறுதியான கருத்துக்கள் எனக்கு வந்துசேரவில்லை. பல்வேறு ஊகங்கள் மட்டுமேயுள்ளன. கண்டம் என்ற இந்த வரிகள் கூறவில்லை. ஏதோவொரு நிலம் அழிந்திருக்கிறது. எவ்வளவு பெரியது என்று எனக்கு இப்பொழுது தெரியாது,
 
சிலம்பு ஒரு புதினம் என்று சொல்வதைக் கேட்டால், ”அறியாதவர் பேசுகிறார்” என்று நகர்ந்துவிட வேண்டியது தான்.
   
அடுத்த வரிகளுக்குப் போவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Tuesday, July 19, 2016 9:49 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 

வேந்தன் அரசு

unread,
Jul 19, 2016, 8:18:23 PM7/19/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், tamil_ulagam, தமிழாயம்
வடி”வேல் எறிந்த” ! =.” வேல் எரிந்த”

கடல்கோள் என்பது கடல்மட்டம் உயர்வது. ஆழிப்பேரலை அல்ல.

19 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:13 அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Jul 20, 2016, 5:33:17 AM7/20/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
திங்கட் செல்வம் திருக்குலம் விளங்க
செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
 
இந்த வரிகள் முற்றிலும் தொன்மத்தைக் குறிக்கின்றன. பாண்டியர் திங்கட் குலமென்றும், சோழர் ஞாயிற்றுக் குலம் என்றும், சேரர் நெருப்புக் குலம் என்றும் பலருஞ் சொல்வர். முன்னது இரண்டிற்கும் ஆதாரம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நெருப்புக்குலம் என்பதற்கு ஆதாரங் கண்டேனில்லை. இந்திரனை ஆயிரங் கண்ணோன் என்பதற்கு இழிவான கதையையே கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ஆரம் பற்றிச் சொல்லும்போது ஆயிரங்கண்ணோனென்பதால் வேறேதோ நல்லபொருள் இருக்கவேண்டும். ஒருவேளை உடல்முழுக்க ஆயிரக்கணக்கில் செந்தழும்புகளைப் பெற்றிருப்பானோ என்னவோ? மொத்தத்தில் நல்லபொருளை எந்த உரையாசிரியரும் தரவில்லை. எனவே இது விளக்கப்படாத கூற்று. இந்திரனின் ஆரம் பாண்டியனிடம் சேர்ந்ததும் ஒரு தொன்மக்கதையால் தெரியவரும். இந்தக் கதைகளால் நாம் ஒன்றும் வரலாறு அறியப்போவதில்லை. எனவே ஒதுக்குகிறேன். அடுத்து,:
 
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க எனத்
 
என்ற வரிகள் ஆழத் தோயவேண்டியவை. ஒன்று பாண்டியவரசரின் அடையாளம். இன்னொன்று நாட்டின் வெதணம் (Climate). [தவிர, சிங்கநெஞ்சன் ”பஞ்சகாலம் என எப்படிச் சொல்வீர்?” என்று கேட்டிருந்தார். பல இடங்களில் குறிப்புகளுள்ளன. ஒருகுறிப்பு இங்குள்ளது.] முதலிற் பாண்டியர் அடையாளத்திற்கு வருவோம். சென்னி = சிறப்பு. பாண்டியமுதல்வன் சிறப்பு, முடியில் வளையுடன் இருத்தலே. வளை= சங்கு. அதாவது இவன் தன்முடியிற் சங்குபதித்துள்ளான். அடிப்படையிற் பாண்டியர் கொற்கையிற் தோன்றியவர். மாறோக்கமென்றும் அப்பகுதியைச் சொல்வர். கொற்கைப்பரதவர் வழியினரே பின்னாளிற் பாண்டியரானார். பழந்தலைநகர்களான தென்மதுரையும், கவாடபுரமும் நெய்தல்நிலங்களில் இருந்தன. அவற்றை இழந்தபிறகே வைகை மதிரைக்கு வந்துசேர்ந்தார். [இற்றை மதுரை கூடச் சங்ககால மதுரையில்லை. ஒருவேளை அண்மையில் கண்டுபிடித்த கீழடித் தோண்டலுக்குள் இருக்கும் நகரமோ என்பது சுவையார ஊகம்.]
 
இந்தியாவிற்குள் 70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் நுழைந்தபோது (A Journy of Man - A Genetic  Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப்பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங்காலம் முன்னே தெற்கேகிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணிவரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) நெய்தலார்வழித் தோற்றம் பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(>நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications) எனக்] கோரைப்பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளால் உறுதிப்படும். அவற்றை வேறொரு கட்டுரையில் விரித்துரைப்பேன்.     
 
அடுத்து அடிப்படையில் பாண்டியநாடு மழைவளங்குன்றிய நாடு (இன்றும் குமரிமாவட்டம் தவிர்த்து திருச்சிக்குத் தெற்கே தென்றமிழ்நாடு வறட்சிப்பகுதிதான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் கடும்பஞ்சமுண்டு. அன்றுமப்படியே.) பாண்டியரின் இனவாழ்க்கை கடலைச்சார்ந்தது. கடலிற் போகிறவர், கடலை நம்பியிருப்போர் மழைவேண்டாமென நினைப்பார். இதை மாங்காட்டுப் பார்ப்பான் ஓர் உருவகத்தால் உணர்த்துகிறான். இடியுடைய பெருமழை பாண்டியனைப் பார்த்து ”இவன் முடியில் சங்கு பதித்திருக்கிறான். இவன் என்னை விரும்பான். நான் இங்கு பெய்யவேண்டும்?” என்று இங்கு எய்தாது ஏகுகிறதாம். ஆனால் பரதவனாய்த் தொடங்கிய பாண்டியன் இப்பொழுது குறிஞ்சி, முல்லை, மருத நில மக்களுக்கும் மன்னவன் ஆகிவிட்ட காரணத்தால், ”பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்பதற்காக” மழையைப் பிணித்துக் கட்டிப்போட்டுவிட்டானாம். குறிப்பு இதுதான்; மழையைப் பிணித்துக் கட்டிப்போடுவது பாண்டியனுக்கு ஒரு கடமையாகிறது. எந்தநாட்டில் மழையைக் கட்டிப்போட நினைப்பார்? மழையில்லாத பஞ்சநாட்டிலே தானே? ஆகப் பாண்டிநாடு வறண்டநாடு என்பது குறிப்பாற் பெறப்படுகிறது. வறழ்ச்சியைக் குறிக்கும் வேறு இடங்களைப் பின்னாற் பார்ப்போம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Jul 20, 2016, 7:13:46 PM7/20/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அடுத்து திருவரங்கம், திருவேங்கடம் பற்றிப் பேசிவிட்டு மதுரைக்கான 3 வழிகளுக்குச் செல்லப்போகிறோம். தீதுதீர்ச் சிறப்பின் தென்னனை வாழ்த்திய மாமுது மறையோனிடம் ”யாது நும்மூர்? யாதி ஈங்கண் வரவு?” என்று கோவலன் கேட்க,
 
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரித்து அகலாது படிந்ததுபோல்
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளி பலதொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியம்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
 
என்று அரங்கத்தம்மானைப் பற்றிக் கூறுகிறான். மலைப்பாம்பின் மேற்பக்கம் முழுக்கருப்பாகவும், கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இத்தகைப் பாம்பு சுற்றிச்சுற்றி வளைத்து பாயற்பள்ளி அமைப்பது, எப்படியிருக்கிறதாம்? நெடிய பொற்குன்றத்தின் எல்லாப்பக்கங்களிலும் விரிந்து கருமேகம் படிந்ததுபோல் இருக்கிறதாம். இங்கே ஆயிரந் தலைகளென்பது உயர்வுநவிற்சி (இயற்கையில் எப்போதாவது இருதலைப் பாம்புகள் பிறப்பதுண்டு.) விரியும் குற்றலைகளையுடைய அகன்றபெரும் துருத்தியின் (காவிரியில் திருவரங்கத்தீவு துருத்திக்கொண்டேயுள்ளது) பாயற்பள்ளியில் எல்லோரும் தொழுதேத்தும்படி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - என்ற விவரிப்பு நளினமானது. அடுத்து,
 
வீங்குநீர் அருவி வேங்கடமென்னும்
ஓங்குயர் மையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
 
என்ற வரிகள் வேங்கடத்துச் சிறப்பைக் கூறுகின்றன. வேங்கடமென்பது நண்பர் நூ.த.லோ.சு. சொன்னபடி வேங்கடம் (வேகுங் கடம் வேங்கடம். இன்றுள்ள இராயல சீமையிற் பாதியை இது குறிக்கும்.) என்ற பரப்பையும் வேங்கடத்துள் நிற்கும் 7 மலைகளையுங் குறிக்கும். வேங்கடத்திற்கு மேலுள்ள நல்லமலையைச் சுற்றியுள்ள பகுதியும் வேகுங் கடம் தான். ஆனால் சங்ககாலத்தில் அது மொழிபெயர் தேயமென்ற பெயரைக் கொள்ளும். மாமூலனார் நிறையப் பேசியுள்ளார். மொழிபெயர் தேயம் இன்னும் வடக்கே போய் நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) அரசைத் தொடும்.
 
இன்றும் வேங்கடமலைக்குள் போகும்போது ஒரு வறண்டுபோன அருவியைப் பார்க்கலாம். (கோயில் நிருவாகத்தார் மறுபடியும் அதைப் புதுப்பிக்க முயலுகிறார். செல்வங் கொட்டிவழியும் போது அருவியைப் புதுப்பிக்க முடியாதா, என்ன? அந்தக்காலத்தில் அது வீங்குநீர் அருவியாய் இருந்ததுபோலும். அம்மலையின் உச்சியில் ஒருபக்கம் ஞாயிறும், இன்னொருபக்கம் திங்களும் ஓங்கிநிற்க இடைப்படும் இடத்தில் ஒளிபொருந்திய கோடியுடையை உடுத்து வானவில்லைக் கையிற்தரித்து நல்லநிறங் (கருநிறம்) கொண்ட மேகம் நின்றதுபோல் பகைவர் அணங்கிப்போகும் (ஆட்பட்டுப் போகும்) ஆழியையும், பால்வெண்மையான சங்கத்தையும் தன் தகைபெறும் தாமரைக்கையிலேந்தி நலம் கிளர்த்துகின்ற ஆரத்தை மார்பிற் பூண்டு, பொற்பூ ஆடையிற் பொலிந்து (பொற்பூ ஆடையைத்தான் பீத அம்பரம் என்று ஆண்டாளும் ஆழ்வாரும் சொல்லிச்சொல்லிக் குதுகலிப்பர்) தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - திருவரங்கத்தைவிட இன்னும் நளினமான விவரிப்பு.
 
இந்த இரு இடங்களையும் காணவந்தேன்.  நான் குடமலை மாங்காட்டிலுள்ளேன். தென்னவன் நாட்டுச்சிறப்பும் செய்கையும் கண்மணி குளிப்பக் காண்டேன் ஆதலின் வழ்த்திவந்திருந்தேன் இதுவே என் வரவு என்று மாங்காட்டு மறையோன் சொல்லுகிறான்.
 
இதில் கவனிக்கவேண்டியது திருவரங்கத்தையும், வேங்கடத்தையும் பார்க்கவந்த மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்லும் 3 வழியையும் விவரிக்கும்போது திருமால்குன்றம் பற்றி ஓரளவு மட்டுமே நிறைவின்றிச் சொல்வான். அதில் அரங்கம் வேங்கடம்போல் உணர்வுகலந்திருக்காது. ஏதோ நிறைவில்லாததுபோல் தெரியும். பேரா. தொ.பரமசிவன் தன் முனைவர்பட்ட ஆய்வேட்டில் திருமால்குன்றம் ஒருகாலத்தில் புத்த ஆராமமாய் இருந்திருக்கலாமென்று பல்வேறுவகையில் நிறுவுவார். (அருமையான ஆய்வேடு, பொத்தகமாயும் வெளிவந்தது. தமிழினி வெளியீடு.) அப்படியானால் இம்மாற்றம் கி.மு.75 க்கும் முன்னே நடந்திருக்கவேண்டும். எத்தனையோ புத்த, செயின, அற்றுவிகக் கோயில்கள் சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றோ என்னவோ?  (எங்கெல்லாம் மொட்டை போடுகிறோமோ, அங்கெல்லாம் மாற்றங்கள் ஏதோவொரு காலத்தில் நடந்திருக்கலாம். திருப்பதி மொட்டையும் நம்மைக் கேள்விகேட்க வைக்கிறது. வேறு பெருமாள் கோயில்களில் இது நடப்பதில்லையே?)        
 
இனி மூன்று வழிகளுக்கு வருவோம்.

iraamaki

unread,
Jul 20, 2016, 11:07:30 PM7/20/16
to Oru Arizonan, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய அரிசோனன் மற்றும் பிற கேள்விகள் கேட்டிருந்த நண்பர்களுக்கு,
 
என் கட்டுரையை இன்னும் ஓரிரு மடல்களில் முடித்துவிடுவேன். பிறகு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையிறுக்கிறேன். முன்புபோல் என்னால் இப்பொழுதெல்லாம்  உடனுக்குடன் மறுமொழிக்க முடிவதில்லை. எழுத்தின் வேகம் குறைந்துவிட்டது. தட்டச்சுப்பிழைகளும் கூடிவிட்டன. எல்லாமே சற்று மெதுநடை தான். பொறுத்துக்கொள்ளுங்கள்.
 
அன்புடன்,
இர்ரம.கி.
 
 
Sent: Thursday, July 21, 2016 5:55 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
உயர்திரு இராமகி அவர்களே,
 
வேங்கடம் என்பதை வேய்+கடம் , அதாவது மூங்கில் காடு  என்றும் பொருள் செய்துகொள்ளலாமல்லவா?
உ-ம்:  "வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்.." என்று துவங்கும் காழிப்பிள்ளையாரின் கோளறு  திருப்பதிகம்.
 
இதில் பிள்ளையார் அம்மையின் தோள்களை மூங்கிலுக்கு உவமைச்சொல்கிறார்.  எனவே, மூங்கில் காடுகள் நிறைந்த மலைப்பகுதி என்று பொருள்கொண்டு, சில ஆயிரம் ஆண்டுகள்முன்னர், அது தமிழகத்தின் வடபகுதியில் எங்கிருக்கக்கூடும் என்றும் ஆராயலாமல்லவா?
 
தங்கள் கற்றறிந்தவர்;  ஆகவே, அறிவிலி எனது ஐயத்தை நீக்கவேண்டுகிறேன்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

iraamaki

unread,
Jul 25, 2016, 10:42:55 AM7/25/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
இப்பொழுது நாம் பார்க்கப்போகும் வரிகள்
 
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீ”யெனக் கோவலற்கு உரைக்கும்
 
என்பதாகும். தீயில் திறங்காட்டுவது யாகம் நடத்துவதே. அக்காலத்தில் யாகஞ்செய்யக் குறைந்தது நால்வர் தேவை. இக்காலத்தில் ஒருவரே இரு வேலைகள் செய்வதும், ஒரே வேலையை இருவர் செய்வதும் நடக்கிறது. ஒவ்வொரு யாகத்திலும் கூர்ந்துகவனித்தால் செய்வோர் பொறுப்புப்பகிர்வது தெரியும். முதலாமவர் ஓதி (Hotri; நம்ஓதியே சங்கதத்தில் நம்ஓத்ரி>நம்மோத்ரி>நம்மூத்ரி>நம்பூத்ரி எனவாகலாம். முன்குடுமி நம்பூதிகள் சேரநாட்டிலும், சோழியர் சோழ, பாண்டிய நாடுகளிலும் தங்கினார். சங்ககாலத்தில் முன்குடுமிச் சோழியரே மிகுதி. இற்றைக்காலத்தில் சென்னைப்பக்கம் ஓதியை வாத்தியார் என்பர்.). இரண்டாமவர் அடுத்தவர் (= நெருங்கியவர்; assistant; சங்கதத்தில் Adhvaryu. யாகத்தின் பூதிக-physical-வேலைகள் செய்பவர்) எனப்படுவார்; மூன்றாமவர் உடுகலி (Udgatri; உடன் பாடி; கனபாடிகளும் இவ்வகைதான். கலித்தல்=பாடுதல். கலித்தொகை= பாட்டுத் தொகுதி; கலித்தம்>கயித்தம்>கீதம். அன்று சங்கத கீதம் பாடுவது சாமமோதுவதே.) நாலாமவர் பெருமானர் (Brahmin; யாகம் நிர்வகிக்குங் கண்காணி) மாங்காட்டுப் பார்ப்பான் இந்த 4 வகைகளில் ஏதோவொன்று. செலவளித்து யாகஞ்செய்பவர் இயமானர்> இசமானர்>எசமானர் ஆவார்.
 
”மாமறை முதல்வ! மதுரைக்கு செந்நெறி (= சரியான வழி) எது?” எனுங் கோவலனுக்கு
:
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான் நலந்திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினீர் காரிகை தன்னுடன்
 
என்று மறையவன் மறுமொழிதொடங்குவான். கோத்தொழிலாளர் = bureaucrats; வேத்தியல் = governance. கோவலனென்ற இயற்பெயர் பற்றி முன்பே சொன்னேன். சென்றபிறப்பில் பரதன் இயற்பெயர்; தொழிற்பெயரோ கோவலன் (கோ வலன் = கோத்தொழிலாளன்) ஆனது; இப்பிறப்பில் கோவலன் இயற்பெயர்; தொழிற்பெயர் பரதன் (= விலை சொல்வான்; trader/import-exporter) ஆனது. கோவலன் பெயருக்கு அடுத்து 2 ஆஞ் சொல்லிலே கோத்தொழிலாளரென மேலே ஆள்வதைக் கண்டுமா, சிலருக்குக் கோவலன் பெயரின் வார்த்தை விளையாட்டுப் புரியவில்லை? ஓர்ந்துபாருங்கள். விதியோ, வினையோ, எதுவாயினும் சமணருக்கு அறநெறி சொல்ல முற்பிறவிக் கதைகள் தேவை. இல்லெனில் பிறவிச் சுழற்சியை எப்படி உணர்த்துவது, அற்றுவிப்பது, செயிப்பது?
 
கோவலன்-கண்ணகி-மாதவி பெயர்விளக்கத்தை முன்னொரு கட்டுரையிற் சொன்னேன். (என்நூலிலும் உண்டு.) பொறுமையோடு படிக்காது, வறட்டுப்பிடிவாதமாய், “இராகவையங்கார் சொன்னார்; இவர் சொன்னார்; கிருஷ்ணன், இலக்குமியே கோவலன், கண்ணகிக்குப் பொருள்” என அடம்பிடித்து, விண்ணவச்சாயலைச் சிலம்பிற்குச்சார்த்தித் தானுங்குழம்பி மற்றோரையும் குழப்புவர்க்கு என்னசொல்லிப் பயன்? விட்டுவிடவேண்டியதுதான். எரி விண்கல்லைப் பற்றிச்சொல்லும்போது ”எறிந்த” என்று தான் சொன்னேன். ஆனாலும் ”எறிந்த”வை விட்டு ”எரிந்த” என்றே பொருள்கொள்வாருக்கு என்ன சொல்ல? நகரவேண்டியதுதான். ரகர, றகறங்களுக்கு வேறுபாடறியாமலா பொருளெழுத வருவேன்? கட்டுரைத்தொடரைக் கவனமெடுத்து ஆழப்படிப்போருக்கு உறுதியாகச் சொல்கிறேன். சிலம்பைப் புரியாதோர் பழந்தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அதுவொரு அரிய திறவுகோல். உ.வே.சா.விற்கு நாமெல்லோரும் நன்றி சொல்லவேண்டும்..மேலுள்ள வரிகளுக்கு வருவோம்.
 
ஒரு கொற்றவன் கோத்தொழிலாளரோடு கோடினால் (= விலகினால்) அவனுடைய வியல் நிலம் வேத்தியல் இழந்து போகுமென்ற கருத்து மிக முகன்மையானது. (இதை அருத்த சாற்றமும் அழுத்திச் சொல்லும். இன்றும் அமைச்சர் இந்திய ஆட்சிப் பணியாளரோடு கோடிக்கொண்டால் நாடு அதோகதி தான்.) அதுதான் கதைநடந்த காலத்திற் பாண்டிநாட்டில் நடந்தது. கோத்தொழிலாளர் அரசனுக்கு எச்செய்தியுஞ் சொல்லவில்லை. (தமிழகமறிந்த ஒரு வணிகனின் மகன் கோட்டைக்குள் நுழைந்துள்ளான். ”அவன் யார்? எதற்கு வந்தான்?” என்றசெய்தி கூட அரசனுக்கு அறிவிக்காது ஒரு கோட்டைத் தளபதி இருக்கமுடியுமா? Intellignce officials - ஏ பாண்டிநாட்டில் இல்லையா? கோவலன் என்ன சுப்பனா, குப்பனா? ”பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” மகனல்லவா? :அம்பானி மகன் மும்பையில் அடையாளந்தெரியாது போகமுடியுமா?” சற்று முரணாய்த் தெரியவில்லையா?
 
பின்னால் அரசனிடம் வழக்காடுகையில் கணவன் பெயர் சொல்லாமல் ”மாசாத்துவான் மருமகள்” என்றுதானே கண்ணகி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்? அப்படியாயின் மாசாத்துவான் 3 நாடுகளிலும் அரசுத் தொடர்பாளர்க்குத் தெரிந்தவனாகவே இருப்பானல்லவா? ஆயினும் கோவலன், கண்ணகியாரென்று அரசனுக்குத் தெரியவில்லையாம். Isn’t it something wrong with governance? பாண்டியன் எப்படி எதையும் விசாரிக்காமல் பொற்கொல்லன் பேச்சை நம்பிக் கோவலனைக் கொன்று சிலம்பு கொணரச் சொன்னான்? வழக்குரைகாதையில் அல்லவா, அரசனுக்குத் தன்தவறு புரிகிறது. எனவே பாண்டிய அரசின் நிர்வாகம் அரசனுக்குப் பலசெய்திகளைச் சொல்லவில்லை என்று தோன்றவில்லையா?.அரசனும் எதையுங் கேட்கவில்லையே? அரச நடைமுறையில் ஏதோ அடிப்படைத் தவறுள்ளதுபோல் ஆகவில்லையா? அதைத்தான் இங்கே உருவகமாய் வைத்து இளங்கோ சொல்கிறார்.
 
பின்னால் கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் மதுரையில் கண்ணகிக்கு முன்னால் நடந்த கலகங்களையும், மக்கள் மன்னனை எதிர்த்த கதையையும் ”ஆடித்திங்கள் மதுரை அழற்படும்” என்ற தானறிந்த முந்தையச்செய்திகளையும் அழற்பாடு சற்று தணிகையிற் சொல்லும். பஞ்சகாலமென நான்சொன்னதற்கு அதுவுமொரு காரணம் மக்களுக்கு அரசன்மேல் ஏராளங் கோபம் இருக்குமெனில் அது பஞ்சகாலம்தான். இல்லெனில் கண்ணகிக்கு நடந்த நிகழ்ச்சியை வினையூக்கியாய் வைத்து மதுரை எப்படி எரியூட்டப்படும்.? இலக்கிய அழுத்திற்காக இளங்கோ அதைக் கொங்கையில் விளைந்ததாய்ச்  சொல்லலாம். (அதை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள வேண்டாமா?) அதை விடுத்து தான்மதிக்கும் நாகசாமி ”சிலம்பு புதினமென்று” சொன்னதால், “கொங்கையிற் பாசுபரசா இருந்தது?” என்று பெரியாரை துணைக்கொண்டால் எங்கேபோய் முட்டிக்கொள்வது? மஞ்சட்கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும் "ஆமாங்க! கண்ணகி ஒரு terrorist. இப்பொழுது மனமாறியதா? சிலம்பு ஒரு முட்டாள் தனமான புதினம்.” 
      .
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, இங்கே வெங்கதிர் வேந்தன் வேனலங் கிழவனோடு கோடிக்கொள்கிறானாம்.
 
புவி சூரியனைச் சுற்றும் வலயத்தில் ஓராண்டில் 4 முகனநாட்கள் உண்டென்று முன்னாற் சொன்னேன். அவற்றில் 2 ஒக்கநாட்கள். மற்று இரண்டில் ஒன்று வேனில் முடங்கல் (summer solstice. இற்றைக் காலங்களில் சூன் 21 இல் நடைபெறும். சிலப்பதிகாரக்காலத்தில் சூலை 15 இல் நடைபெற்றது.) இன்னொன்று பனிமுடங்கல் (winter solstice. இற்றைக்காலங்களில் திசம்பர் 22 இல் நடைபெறும். சிலம்புக் காலத்தில் இது பொங்கலுக்கு அருகில் ஏப்ரல் 14 இல் நடைபெற்றது.) கோடை உச்சமென்பது வேனில்முடங்கலே. வேனில்முடங்கலும், பனிமுடங்கலும் புவியின் நாலாவது அசைவான நெற்றாட்டத்தால் (nutation) நெடுங்காலப் பாதிப்பிற்கு உள்ளாகும். அதாவது அவ்வியக்கத்தால் வேனில்முடங்கல் ஒரு சுழற்சிப்பருவத்தை ஒட்டி மிகச்சூடும், குறைவான சூடுமாய் ஆகிவிடும். இந்த நெடுங்கால மாற்றம் போக 12 ஆண்டிற்கு ஒருமுறை சூரியனில் தோன்றும், மறையும் சூரியப்புள்ளிகளாலுங் கோடை கூடுவதுங் குறைவதுமுண்டு. சூரியப்புள்ளிகளால் ஆகும் சூடுக்காலத்தைத் தான் பஞ்சகாலமென்றார். அது பெரும்பாலும் தாது ஆண்டிலும் (தாது+12, தாது+24, தாது+36, தாது+48) ஆண்டுகளிலும் நடைபெறுவதாய் ஒரு கணக்குமுண்டு.
 
ஏதோவொரு காரணத்தால் வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் தான் நலந்திருகத் (தான் நலந் திருகிப்போக = அளவிற்கு மீறிய கோடை கூடிப்போக) தன்மையிற் குன்றி (எல்லா ஆண்டுமுள்ள வளம்தருந் தன்மையிற்குன்றி) ”முல்லையுங்குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்“ என்று இளங்கோசொல்வார். பல தமிழறிஞரும் இம் 3 வரிகளைப் பாலை வரையறையாகக் கொள்கிறாரேயொழிய, என்ன காலமென்பதிற் கோட்டைவிடுகிறார். எல்லாக்காலங்களிலும், முல்லையுங்குறிஞ்சியும் திரிந்து பாலையாகாது. இவ்வாண்டு நல்ல மழைபெய்து,. ஏரி-குளங்கள் நிறைந்தன; அடுத்தாண்டு இளவேனிற்காலத்திலும் கோடையிலுங் கூட சிலபோது மழை பெய்கிறது; இந்நிலையில் அடுத்தாண்டு பாலை ஏற்படுமா? ஏற்படாது.
 
இங்கே ஒரு கட்டியம் (condition) இருக்கிறது. அதைப் பலரும் மறந்துவிடுகிறார். வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் ”தான் நலந்திருக தன்மையிற் குன்றிய” காலத்திற்றான் பாலை ஏற்படும். இப்பொழுது சூரியப்புள்ளிகளைப்பற்றி ஓர்ந்துபாருங்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் நலம் திருகிக்கொள்கிறது. தன் வளந்தரும் தன்மையிற் குன்றிப்போகிறது. (மேலையர் 11 இலிருந்து 12 ஆண்டுகள் என்று துல்லியக்கணக்குச் சொல்வார். இந்தியவானியல் அன்றைக்கிருந்த அறிவில் 12 ஆண்டுகள் என்றது.) இதைத்தான் பஞ்சகாலம் என்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பான் கோவலனைப் பார்த்து, “என்னைய்யா, பஞ்சகாலம் ஏற்படுஞ்சமயத்தில் பெண்டாட்டியோடு இங்கே வந்திருக்கிறாய்?  உங்களூர்போல நீர்வளம்கூடிய நாடு இதுவல்லப்பா? இது வறுபடும் நாடு”
 
அடுத்த பகுதிக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.    
 
Sent: Wednesday, July 20, 2016 7:11 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 

N D Logasundaram

unread,
Jul 26, 2016, 1:27:29 AM7/26/16
to தமிழ் மன்றம்
குசுமம் என்பது மலருக்கான கணப்புப் (generic) பாகதப் பெயர். என்ன மலர் என்பது புரிதலைப் பொருத்தது. பெரும்பாலும் அது தாமரையையே குறிக்கும். ஓரோவழி பாதிரிப்பூவையும் (>பாடலிப் பூவையும்) குசுமமென்று அழைத்திருக்கிறார். மகதத்தின் பெருந்தலைநகரான பாடலிபுத்தத்தைக் குசுமபுரம் என்றும் அழைத்திருக்கிறார். நம்முரில் கடலூருக்கு அருகிலுள்ள பாதிரிப்புலியூரும் குசுமபுரம் என்று அழைக்கப்பட்டது. அண்டுதல் என்பதற்கு பொருந்தியிருத்தல், மேலிருத்தல் என்றே பொருள்படும். குசும அண்டினி என்பவள் பூவின் மேல் இருப்பவள்.

திரு இராம்கி இவ்வாறு எழுதினர் 
" குசும்பா"  எனும் சொல்பற்றி மட்டும் இங்கு 
இது நீர்த்தவராம் அல்லாது  நிலத்தில் வளரும் இரு மரம் 
(1)
குசும்(பா) நெய் (எண்ணெய்) ஓர் சமையல் நெ ய் வாணிபத்தில் ஓரளவிற்கு செல்வாக்கு பெற்றது ஒ ரு வகை மரத்தின் பழத்திலிருந்து கிடைப்பது பலநேரங்களில் சிவப்புநிற இலைகளுடன் காணுமாம் 
அதே மரம் அர க்கு எனும் (lac )ஆழ்ந்த சிவந்த வண்ணப்பூச்சிவழி கிடைக்கும் கச்சாப்பொருள் சாற்கண்டு சத்தீசுகர் மராட்டம் போன்ற மாநிலங்களில்  அரக்குப்பூச்சி வளர்க்க பயன்படுகின்றது என்கிறார்கள் 
இது ஓர் வகை பு ங்க மரம் ( 
(2) 
ஓர் வகையில் இ ந்தியாவில் உள்ள சிவனுறையும் பழந்தலங்களாக 
வகைப்படுத்தப்படும் நிரலில் 12 சிறப்புத்தலங்கள்(சோதி  லிங்கங்கள்)
என்பதில் ஒன்று குசுமேசுவரர் கோயில் எல்லோரா எனும் வரலாறு படைத்த குகைக்கோயில்களுக்கு  அருகில் உள்ளது குசுமேசுவரர் = 
குசும்புமரத்தடி சிவன் தலைப்பயிரினம் அதுவே  ஆக வேண்டும் 
சில விவரங்கள் இங்கே https://en.wikipedia.org/wiki/Kusum_oil

Inline image 1
கு சும் >> கேசரி = சிவந்தநிறம் காட்டும் சொல் 

பாரத மா க்கதையிலேயே வரும் எரியூட்டப்பட்ட அர க்கு மாளிகை
(building  built using a resin ) குறிக்கப்படுவது அறிவோம்இ
ந்தியர்  கண்ட முதல் பிசின் =PLASTIC 

நூ த லோ சு 
மயிலை 

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

iraamaki

unread,
Jul 26, 2016, 7:40:33 AM7/26/16
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
From: iraamaki
Sent: Tuesday, July 26, 2016 5:09 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
இனிக் காடுகாண்காதை வரிகளின் மூலம் மதுரைக்குப்போகும் 3 வழிகளைப் பார்ப்போம்.
 
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைசாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்
 
அறை = ஒற்றைக்கற் பாறை (இப்பயன்பாட்டிற்கான ஒரு காட்டு திருச்சிக்கு அருகேயுள்ள திருவெள்ளறையாகும். வெள்ளைப்பாறை மேல் பெருமாள்கோயில் இருக்கிறது.) பொறை = சிறுமலை. (கரூருக்கருகே சிறு மலைகளுண்டு. இரும்பொறை = இருள்நிறப் பாறை. இந்நாடு இரும்பொறை நாடெனப்பட்டது. இங்கு ஆண்ட சேரர்கிளையினர் இரும்பொறையினர் எனப்பட்டார்.) இடைமயக்கம் = பாறையா, பொறையா என்றுசொல்லமுடியா இடைநிலைப் பொருப்புகள். நிறைநீர் வேலி = நீர்நிறை ஏரி. மதிரைக்கு அருகிற்றான் நிறைநீர் வேலிகள் நிறையவுண்டு. உறையூரிலிருந்து கிளம்பினால், நீர்வேலிகள் குறைந்தே காணப்படும். அறை, பொறை, இடைமயக்கம் அப்புறம் நீர்வேலி என்று முறைபடக் கிடக்கும் நெடிய அத்தத்தை (=பெருவழி) இளங்கோ குறிக்கிறார். நீளச் செல்லுதல் நீண்டு போதலும் ஆகும் நீள்ந்திப்போதலும் ஆகும். நீள்ந்துதல்>நீண்டுதல்; நீள்ந்துதல்>நீந்துதல்
 
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் = kodumbaalur region. அது கொடும்பாளூரல்ல. கோட்டத்தையும் ஊரையும் குழம்பக்கூடாது. கோட்டத்தை இன்று taluk ற்கு இணையாய்ப் பயன்படுத்துவார். ”பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைசாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்” என்ற வாசகம் விராலிமலைக்கருகிற் சூலம்போற் பிரியும் முக்கோற் பிரிவைச் சொல்லுகிறது. திருச்சியிலிருந்து வருகையில் விராலிமலையை ஒருமுனையாயும் மதுரையை மாற்றுமுனையாயுங் கொண்டு வலக்கையில் வத்தலக்குண்டு/நிலக்கோட்டைப் பகுதியை ஒருமுனையாயும், இடக்கையில் புதுக்கோட்டையை இன்னொரு முனையாயும் கொண்டு கிட்டத்தட்ட ஒரு செவ்வகத்தை மனத்தில் உருவகஞ் செய்யுங்கள் விராலி மலையிலிருந்து வலப்பக்கம் ஒருவழியும், இடப்பக்கம் ஒருவழியும், செவ்வகத்தின் குறுன (கர்ண)வழியே மூன்றாவதும் தோன்றும். இவ்வழிகள் இன்றுமட்டும் இருப்பவையல்ல. பழங்கால வழிகளுங் கூட. பொதுவாய்ப் பழம்வழிகளே சிறுமாற்றங்களுடன் சற்றே அகலமாகி மேடுபள்ளங்கள் சீராகி, கோணல்கள் ஒழுங்குபட்டு இக்கால வழிகளாகும். இவை குமுகாயத்தின் தொடர்முயற்சி விளைவுகள். எனவே இற்றைவழிகள் நமக்கு ஒரு தெளிவைக்கொடுக்கும்.
 
இன்றும் விராலிமலைக்கு வலதுபக்கம் மணப்பாறை, இளங்குறிச்சி, அய்யலூர், வடமதுரை, திண்டுக்கல், நத்தம், நெட்டியாபட்டி என்று அழகர்கோயிலைச் சுற்றிக்கொண்டு மதுரைக்கு ஒருவழியுண்டு. [இதற்குச் சற்று மாறாயும் திண்டுக்கல்லிலிருந்து சின்னாளப்பட்டி, கோடைரோடு, வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை என்று ஒரு பெருவழி மதுரைக்குண்டு. இன்றைய இருள்வாய்ப்பாதையும் புதுவழியே தான் போகிறது.] திண்டுக்கல் தாண்டினாற் சிறுமலைக்காடு வந்துவிடும். (மேற்கில் கோடைக்கானலும் தென்படும்.) பொதுவாகக் காடும் மலையும் கூடியவழி. அக்காலத்தில் இவ்வழி சிக்கலானது. முதல் வழியை விவரிக்கும் இளங்கோ ”தென்னவன் சிறுமலை” என்று இக்காடுகளைக் குறிப்பிடுவார். இன்றுவரை அதே பெயரிருப்பது வியப்புத்தான். சிறுமலைக்காடுகளை வலங்கொண்டு நத்தம் போயிருக்க வேண்டுமென ஊகிக்கிறோம். அதற்கப்புறம் திருமால்குன்றம் காண்பதாய் வருவதால் நத்தம் போகாது இவ்வழி அமையாது. திருமால்குன்றத்தின் அருகே பிலத்தையும், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசத்தி என்ற பொய்கைகளையும், சிலம்பாற்றையும் உடன்தொடர்பான தொன்மக்கதைகளையும் மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். (இங்கே தொன்மக்கதைகளை விவரிக்க நான் விரும்பவில்லை.)
 
விராலிமலைக்கு இடப்பக்கம் இலுப்பூர், சிற்றன்னவாசல், புதுக்கோட்டை, (நற்சாந்துபட்டி, பொன்னமராவதி, நெற்குப்பை, முறையூர், கோட்டைப்பட்டி), கீழவளவு, மேலூர், வழியேயும் மதுரைக்குப் போக முடியும். மலைகளும், காடுகளுங் குறைவான. இதுவும் நீண்டவழியே. ஆனாற் சற்று வரண்டபகுதி. திருச்சி/விராலிமலையிலிருந்து வருவோர் தொலைவுகருதி இப்பாதையை விரும்பார். நற்சாந்துபட்டி, பொன்னமராவதி, நெற்குப்பை, முறையூர், கோட்டைப்பட்டி இடைவழிக்குமாறாய்த் திருமயம், திருப்புத்தூர், கோட்டைப்பட்டியென இன்னொரு இடைவழியுமுண்டு. பொன்னமராவதி வழிக்குமாறாய் இதில் வாய்ப்புகள், ஏந்துகள் அதிகம். வியப்பென்னவெனில் இடவழியை இளங்கோ விவரிக்கவேயில்லை. இடப்பக்கம் வழியுண்டென்று மட்டுமே குறிக்கிறார். Perhaps this way was inconsequential then.
 
விராலிமலையிலிருந்து செந்நெறியாய், குறுன வழியாய்க் கொடும்பாளூர், மருங்காபுரி, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, நத்தம், ரெட்டியாபட்டி, என திருமால்குன்றைச் சுற்றிக்கொண்டு தல்லாகுளம் வழியாக மதுரைக்குவரும் வழி சொல்லப்படும். இச்செந்நெறியிலும் திருமால்குன்றம் வந்துசேரும். இதைத்தாண்டினால் மூன்றுவழிகளும் சேருமிடத்தில் ஒரு தெய்வம் உள்ளதாம் சந்திப்புகள் சேருமிடத்தில் அம்மன் கோயில்கள் இருப்பது தென்பாண்டிப்பழக்கம். ”பயணம் ஒழுங்காய் அமைய வழிவிடும் அம்மனுக்கு ஒரு தேங்காய் உடையப்பா” என்பர்.
 
ஆரிடையுண்டோர் ஆரஞர்த்தெய்வம்
நடுக்கஞ்சாலா நயத்தின் தோன்றி
இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும்
மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி.
 
என்று சொல்லி “நான் வேங்கடம் போகிறேன்; நீங்கள் மதுரை செல்லுங்கள்” என்று மாங்காட்டுப்பார்ப்பான் முடித்துவிடுகிறான். ஆரிடை = ஆருகின்ற இடம்; நிறைகின்ற இடம். சேரும் இடம் மூன்று வழிகளும்சேரும் இவ்விடத்தில் ஓர் ஆரஞர்த்தெய்வமுண்டு. இந்த வழியிடைத்தெய்வம் உங்களுக்குத் துன்பம் தராது; ஆனால் உங்களைத் தங்கவைத்துவிடும். (மேலேசொன்ன அம்மன் கோயில்களோடு இயக்கிகளைப் பொருத்துங்கள். தேங்காய் உடைப்பதைச் சேருங்கள். தங்குதற்பொருள் புரிந்துவிடும்.) அத்தெய்வத்தை மடுத்து மதுரைப் பெருவழி கிடக்கும். இச்சந்திப்பிலிருந்து எவ்வளவு தொலைவு மதுரை இருக்குமென்ற செய்தி சிலம்பில் எங்குஞ்சொல்லப்படவில்லை. 
 
இற்றைநிலையில் மேற்சொன்ன 3 வழிகளும் மதுரை மேம்பாலத்தருகே வந்துவிடுகின்றன. பாலந்தாண்டினால் வெளிவீதியின் முனை வந்துவிடும். இற்றைமதுரை இச்சந்திப்பிலிருந்து 200/300 மீட்டருக்குள் உள்ளது. தவிர ஆற்றைக் கடக்கவேண்டும். சிலம்பிலோ இதற்கப்புறம் ஒரு பெருவழி சொல்லப்படுகிறது. அப்படியெனில் இற்றைமதுரை அன்றிருந்தல்ல. அதற்கப்புறம் வைகையை ஒட்டி வடகரையில் கவுந்தியும், கோவலனும், கண்ணகியும் நடப்பார். எவ்வளவு தொலைவு? தெரியாது. (ஒரு 12 கி.மீ. இருக்குமா?) சிலைமானுக்கருகில் கீழடியிற்கிடைத்த தொல்லாய்வுச்செய்திகளை சிலம்போடு ஒட்டிப் பார்த்தால், பழமதுரை கீழடிக்கு அடியிலிருக்குமோ?  நம்மனத்திற் குறுகுறுப்பு ஏற்படுகிறதல்லவா? சங்ககால மதுரையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோமா?.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Tuesday, July 26, 2016 12:53 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
​​
அன்பின் இராம.கி ஐயா,
மேலும் இரு ஐயங்களை இங்கே கூறுகின்றேன்.. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தபின் இவற்றையும் பாருங்கள்..
--------------------------------------------
8.


 
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=13
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்,
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின்,
வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு’ என,
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு-
தீத்திறம் - யாகம்


http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=15
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்;
ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து;
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்;
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து-
தீத்திறம் - யாகம்

http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1700&subid=1700010
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
இங்கே தீத்திறம் என்பது
மாமறை யாளன் மனைவி/அருமறையாட்டி / யாகம் செய்பவர் என்ற பொருளா அல்லது கீரியைக் கொன்றது தான் தீத்திறமா?


பதிகம்
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=1
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத் திறம் கேட்ட 
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்கு உரை காதையும், வஞ்சின மாலையும்
அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும்...

http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2600&subid=2600025
குன்றக் குரவை
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
தீமுறை செய்தாளை - மதுரையை எரித்தவளை..
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=25

கட்டுரை காதை
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ், ‘ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான்’ என்று ஏங்கி.

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=23
‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய ....

இங்கே தீத்திறத்தார் என்பது யார்? தீயவர் எனக் கூறமுடியுமா? அல்லது ஏதாவது மறைபொருளா?
------------
(மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதையிலும் தீத்திறத்தார் என வருகின்றது..
http://www.tamilvu.org/slet/l3200/l320urai.jsp?id=1700&sid=170017
உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன்)
----------------------------------------------------------------------------------------------------

9.
அடைக்கலக் காதை
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை

கோவலனைக் கண்ணகியோடு புறஞ்சிறையில் இருக்கவேண்டாம் மதுரை நகருக்குள் செல்லுங்கள் வணிகர் உன்னை வரவேற்பர் எனக் கவுந்தியும் மாடலனும் கூறுகின்றனர்..

அவ்வாறு கூறிய கவுந்தி, மாதரி வந்தபின் கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் கொடுக்கின்றாள்.
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று’ என எண்ணினளாகி
‘மாதரி! கேள்; இம் மடந்தை-தன் கணவன்
தாதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம்  தந்தேன்-
......
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக
’ என்றே கவுந்தி கூற-..

மாதரி கண்ணகியுடன் மாலைப்பொழுது முடியும் நேரத்தில் கோட்டை வாயிலைக் கடந்து தன் மனைக்குச் செல்கின்றாள்.
உவந்தனள் ஏத்தி,
வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்,
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்து;......
.....
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து-என்.

பின்பு கண்ணகி பகற்பொழுது அமுது சமைத்துக் கோவலனுக்குக் கொடுக்கின்றாள்.
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்


முதல்நாள் மாலை மாதரியுடன் கோட்டை வாயிலைக் கடந்து கண்ணகி மாதரி மனைக்குச் செல்கின்றாள். புறஞ்சேரியில் கோவலனைத் தங்கவேண்டாம் எனக் காவுந்தியடிகள் கூறுகின்றார்.. அந்த இரவுப்பொழுதில் கோவலன் எங்கே தங்கியிருந்தான்?

iraamaki

unread,
Jul 26, 2016, 11:18:19 PM7/26/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
மாங்காட்டுப் பார்ப்பான் வழிசொன்னதற்கு அப்புறம் அவன்கூறிய தொன்மக்கதைகளைக் காவுந்தி ஐயை மறுத்து .
 
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு இயற்கையின் விளக்கங் காணாய்
 
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பின் காணாயோ நீ
 
வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்?    
 
என்ற 3 கட்டுரைகள் சொல்வாள். முதற்கூற்றில் வரும் கப்பத்து இந்திரன் ஒரு சமணநூல் ஆசானாகலாம். (அவனை தேவலோக இந்திரனாய்க் காட்டுவது வேதநெறி விளக்கமாகும்.) இந்திரன் நூலில் மெய்ப்பாட்டியற்கை பற்றிய விளக்கம் இருக்கலாம். (அது என்னவென நமக்குத் தெரியாது.) தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பவற்றையும், அவைதொடர்பான மற்ற உணர்வுகளைப் பற்றியும் மெய்ப்பாட்டியல் கூறும். இவ்விளக்கத்தை ஓர் இலக்கணப் பகுதியாக அக்காலகட்டத்தில் எந்தப் பாகதநூலும். சங்கதநூலும் சொன்னதாகச் சான்றுகளில்லை. (பின்வந்த சங்கத நாட்டிய நூலைப் பிடித்துக்கொண்டு ”தொல்காப்பியர் இதைப் படியெடுத்தார்” என்றுரைத்துத் தொல்காப்பியத்தைக் கீழேயிழுப்பர். பாட்டனைப் பேரன் என்பதுதான் இவர் வழக்கமாயிற்றே? சங்கதமென்றால் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்போர் இப்பொழுது பெருகிவிட்டார்.) ”மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று சிறப்புப்பாயிரம் கூறுவதால், கப்பத்திந்திரன் நூல் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுந்திருக்கலாம். ஒருவேளை பாயிர ஐந்திரமும், கப்பந்திந்திரன் நூலும் ஒன்றோ, என்னவோ?
 
அடுத்த கூற்றான “முற்பிறப்புக்களில் செய்த வினைகளை ஒட்டியே இப்பிறப்பு” என்பது சமணத்தின் 3 நெறிகளுக்கும் பொதுவானது. ”இப்பிறப்பில் நல்லதைச் செய்; செயின நெறிகளைக் கடைப்பிடி. அடுத்த பிறப்பில் உனக்கு நல்லது விளையும். 84 இலக்கம் பிறவிகளைக் குறைக்கமுடியும்.” என்று செயினம் நம்பிக்கைசொல்லும். “இப்பிறப்பில் நல்லதையே செய். சுற்றாருக்கு உதவு. அடுத்த பிறப்பில் என்ன நடக்குமென யாரறிவார்? என்ன விதியோ அது நடக்கும். கலங்காதே. 84 இலக்கம் பிறவிகளானாலும் உனக்கு வீடுபேறுண்டு.” என்று அற்றுவிகம் மனவுறுதியூட்டும். “இப்பிறப்பில் நல்லதுசெய். எண்ணமுஞ் செயல்களும் சிறப்பாக இருக்கவேண்டும். உன்னை வருத்திக் கொள்ளாதே. நடுவழிப்பாதையிற் துணிந்துநில். 84 இலக்கம் பிறவிகளைக் குறைத்துவிடலாம்.” என்று நெருக்கங்காட்டி புத்தம் அமைதி சொல்லும். ஆக 3 நெறிகளும் கொஞ்சங் கொஞ்சமே தம்முள் வேறுபடும்.
 
”வாய்மையில் வழுவாது மன்னுயிரைக் காப்போற்றுவோருக்கு பெறமுடியாத பொருள் ஏதேனும் உண்டோ?” என்பது மூன்றாவது கூற்றின் பொருள்
 
இம் 3 கட்டுரைகளையுஞ் சொன்ன காவுந்தி ஐயை “விருப்பப்பட்ட தெய்வத்தைக் கண்டு அடிபணிய நீ போ, நாங்கள் இந் நீள்நெறியுள் படர்கிறோம்” என்பாள். இவ்வுரையாடல் விராலிமலைக்குச் சற்று முன்னர் நடைபெறுகிறது. கடைசியில் எந்தவழியைக் கவுந்தி தேர்ந்தாளென்பது தெரியாது. செந்நெறியை எடுத்ததாய் எண்ணிக்கொள்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பானோடு நடந்த உரையாடலுக்குப்பின்  ஒருபகல் தங்கி, மாலையிற் கிளம்புகிறார். ஒருநாளைக்கு ஒருகாதமென்ற பயணம். சிலம்பில் தென்புலத் தொலைவுவாய்ப்பாடே பயன்பட்டிருக்கிறதென்று பல காதைகளின் வழி அறிகிறோம். இதன்படி
 
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
 
அதாவது ஒருநாளைக்கு 6.7 கி.மீ.யென மெதுவாய்நடந்து ஓய்வெடுத்து மதுரைநோக்கி நகர்கிறார். செல்வந்தர் வீட்டுப்பெண் எப்படிச்செல்வாள்? முன்னாற்சொன்ன ஆரஞர் தெய்வம் கோயில்கொண்ட இடத்திற்குச் (இற்றைக் கணக்கின்படி கோரிப்பாளையத்தில், மதுரை வைகையாற்று மேம்பாலத்திற்குச்) சற்றுமுன்னால் (பழம் மதுரை இன்னுஞ்சற்று தள்ளித் தெற்கேயுள்ளது.) கருந்தடங்கண்ணியும், கவுந்தியடிகளும் “வகுந்துசெல் வருத்தத்து வழி மருங்கிருப்பச்” சாலையைவிட்டுப் பக்கத்திலிருக்கும் ஒரு பொய்கைக்குச் சென்று  நீர்வேட்கையில்  அதன் படித்துறையில் கோவலன் நிற்கிறான்.       
 
அடுத்த பகுதிக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.

C.R. Selvakumar

unread,
Jul 27, 2016, 9:11:37 AM7/27/16
to தமிழ் மன்றம், tamil_ulagam, தமிழாயம்
அன்புள்ள இராம. கி ஐயா,

அருமையான கருத்தாடல், விரிவான விளக்கங்கள். ஆர்வத்துடன் படிக்கின்றேன்.

கருத்தாடலுக்குப் புறம்பாக ஒரு கருத்து

//வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்? //

போன்ற உள்ளொளி ஊட்டும் மொழிகள் இன்னும்
தமிழர்களிடையே பரவலாக உயிர்த்தொலிக்க வேண்டும்.

2000 ஆண்டுகளோ, 1600 ஆண்டுகளோ, ஏன் 1000 ஆண்டுகளோ 
முன்னதாகவே இருந்ததாகக் கொண்டாலும்
இன்றும் தெற்றெனவும் உயிரைத்தொட்டெழும்
சொற்களாகவும் விளங்குவது அருமையிலும் அருமை. 

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

iraamaki

unread,
Jul 27, 2016, 9:15:43 AM7/27/16
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
From: iraamaki
Sent: Wednesday, July 27, 2016 6:44 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
மதுரைக்குச் சற்று முன்னாலுள்ள கானுறை தெய்வம் அதன் கோட்டத்திற்கருகில் கோவலனை ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறது. அவனுடைய மறைந்த பக்கத்தைக் காப்பியம் படிப்போருக்குப் படம் பிடித்து வெளிப்படுத்துகிறது. சிலம்பை ஆழ்ந்துபடிக்காது, கோவலன் கண்ணகி, மாதவியோடு மட்டுமே புகார்க்காண்டத்தைப் பொருத்திப் பார்த்தவர் இன்னொரு பங்காளரும் இதனுள் பொதிந்ததைக் கண்டு சற்று அதிர்ந்துபோவார். ”இதை எப்படி உணராதுபோனோம்?” என்ற கேள்வியெழும். இளங்கோ ஒரு தேர்ந்த காப்பிய ஆசிரியன்.  
 
கானுறை தெய்வங் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவன் என
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங்கு அருங்கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென்று என்முன்
மாதவி மயங்கி வான்துயர் உற்று
மேலோர் ஆயினும் நூலோர் ஆயிலும்
பல்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடை போன்ம் எனச்\
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத்து உதிர்ந்து வெண்ணிலாத் திகழும்
தண்முத்து ஒருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற்று என்னையும் துறந்தனள் ஆதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங்கு உரைப்பர்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்.
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாது என
 
என்ற வரிகளைப் படித்தால், கானல்வரியின் பின் கோவலன் மாதவியிடம் விலகியதன் பொருள்விளங்கும். மாதவி இளஞ்சிவப்பு. நிறத்தாள் குருக்கத்திப் பெயராள். (குருகு, குருக்கத்தி, குருங்கு, வசந்த மல்லிகை, வசந்தமாலை, வசந்தி, வாசந்தி, புண்டரவம், வாலாகினி, எருக்கத்தி சோகைநீக்கி, கத்திகை, காந்தி, அதிகத்தி, அதிகாந்தி, அதிகம், அதிமத்தம், அதிகமாலி, முத்தம், முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம், மாதவி என்று ஏராளமான பெயர்கள் குருக்கத்திக்கு உண்டு. தமிழரைப் பெரிதும் மயக்கிய ஒரு பூ குருக்கத்தியாகும். இந்தக் காலத்தில் இதைப் பொருட்படுத்துவாரும் அரிது. இதை விளைவிப்பதும் அரிது. தமிழர் தம் மரபிலிருந்து விலகி நெடுநாட்கள் ஆகிவிட்டன போலும்.)
 
மாதவி கண்கள் கண்ணகியைப் போன்றவை. அதே பொழுது அழகுக்கண்ணகி மாநிறத்தாள்; (சிவப்பு - கருப்பு ஊடாட்டம் தமிழரிடை மிகவும் அதிகம்.) செந்நிறக் கோவலன் மாநிறக் கண்ணகியோடு குடும்பம் நடத்தியது பெரும்பாலும் 5 ஆண்டுகள் இருக்கும். கானல்வரியின்போது கோவலனுக்கு அகவை 21, கண்ணகி மடந்தைக்கு 17, மாதவி மங்கைக்கு 13. (இந்த அகவைக்கணக்கை ”சிலம்பின் காலத்தில்” காரணத்தோடு விவரித்திருப்பேன்.) மாதவியோடு கோவலனிருந்தது ஓராண்டிற்குளிருக்கும். அதற்குள் பிள்ளை பிறந்துவிடுகிறது. மேகலைபிறந்த ஓரிரு மாதங்களில் கோவலன் மாதவியிடம் இருந்து பிரிந்துவிடுகிறான்.) 6 மாதப் பிள்ளைதாய்ச்சியோடு உடலுறவு தவிர்ப்பது தமிழர் குமுகாயத்தில் ஒருவிதக் கட்டுப்பாடு. அளவிற்குமீறிய காமவுணர்வுகொண்ட கோவலனால் இதைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. மாதவியறியாமல், வசந்தமாலையோடு தொடுப்பு ஏற்படுகிறது. அதை இளங்கோ வெளிப்படையாய்ச் சொல்லவில்லை. ஆனாற் குறிப்பாலுணர்த்துகிறார்.
 
நாட்கழித்து இலேசுபாசாக அதையறிந்த மாதவி கோவலனுக்கும் வசந்தமாலைக்கும் ஏற்பட்ட உறவைத் தவறென்று கானல்வரியில் குறிப்பாலுணர்த்துகிறாள். (மேலே சொன்னேனே? வசந்தமாலைக்கும் குருக்கத்திப் பொருளுண்டு. பசந்தகாலத்தில் மலர்வது வசந்தமாலை. பசந்தம்>வசந்தம்) அதற்கான குறிப்புக்கள் சிலம்பிலேயேயுள்ளன பலரும் எண்ணுவதுபோல் கானல்வரி ஏற்பட்டது கண்ணகியால் அல்ல. இல்லக்கிழத்தி கேள்விகேட்டாளா? இல்லையா? தெரியாது. ஆனால் காதற்கிழத்தி கானல்வரியிற் கேட்கிறாள். ”தன்னை ஐயுறுகிறாள்” என்ற குற்றவுணர்ச்சியோடு ”கண்டுகொள்ளாதே” என்று பொருள்படும்படி,
 
”கங்கைதன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி”
 
என்று கோவலன் உரைக்கிறான்.
 
”கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”
 
என்று மாதவி இசைப்பாட்டு (எசப்பாட்டு) பாடுகையில், “எனக்கு எல்லாந்தெரியும். உன் செங்கோல் வளைந்துவிட்டதே?” என்று உவமையால் உணர்த்துகிறாள். இதைக்கேட்ட ஓர் ஆணாதிக்கவாதிக்குக் கோவம் வராதா என்ன? ”என்மனைவியே என்னைக் கேள்வி கேட்டதில்லை. ஒரு கணிகை கேட்கிறாளே?” என்று கோவப்பட்டு ஆணாதிக்கக் கோவலன் மாதவியைவிட்டு விலகுகிறான். (ஆ.பழநியின் ”சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” நூலைப் படியுங்கள்.கானல்வரி ஓர் இசைப்பாட்டென நகர்வோரே மிகுதி. ஆனால் கதைப்போக்கை மாற்றுவதே கானல்வரி தானென்று பழநி அலசியது போல் வேறெவரும் அலசி நான் பார்த்ததில்லை. சிலம்பை ஒழுங்காய்ப் புரிந்துகொண்டோர் மிகவும் குறைவென ஏன் சொன்னேன், தெரிகிறதா?)
 
வீட்டுக்கு வருகிறான். நடந்தது எதையும் மனைவிக்குச் சொல்லவில்லை. அவளுங் கேட்கவில்லை. ”சீரழிந்து போனவனை இனியும் சீர்கெட விடுவதிற் பலனென்ன? தானும் உடனிருக்கப் புதுவிடத்திற் வணிகம் தொடங்கலாமே?” என்றே கண்ணகி புகாரை விட்டு நீங்குகிறாள். எல்லோருஞ் சொல்வது போல் கண்ணகி முட்டாளல்ல. பெண்ணியக்கவாதியல்ல. சட்டாம்பிள்ளையுமல்ல. வெறும் சாத்தாரப் பெண். ஆனாற் புத்திசாலி. அலைந்துதிரிந்து வந்தவனை மேலும் விரட்டுவதில் பொருளுண்டோ? உள்ளமை நிலையைப் புரிந்துகொள்ளவேண்டாமா? அவள் அழுதுபுலம்பி உதவிகேட்டுப் பெற்றோரிடம் போகவில்லை. மாமன், மாமியிடமும் போகவில்லை. தானே துணிந்து முடிவெடுக்கிறாள். ”தன்னால் அவனை மாற்றமுடியும்” என்று நம்புகிறாள். ஊரைவிட்டுச் செல்ல முயலும் கோவலனுக்குச் சிலம்பு தந்து ஊக்குவிக்கிறாள். Given the circumstances, this is the most sensible thing to do. Afterall nobody is perfect. Had she not lived with him for 5 years? Of course he has meandered. But he has now come back and wants to re-start his life through a second chance. Why not make a try?
 
கோவலனுக்கு முன்னால் வயந்தமாலையின் வடிவில் தோன்றி, “என்னைநயந்த காதலால் நான்கேட்பதை நல்குவான்” என்று கொடிநடுக்குற்றதுபோல் அவன்காலடியில் விழுந்து அருங்கண்ணீர் உகுத்து,
 
”[வேனிற்காதையில் தாழைமடலிலெழுதி என்வாயிலாய் முன்னனுப்பிய]
வாசமாலை(மாதவி)யின் மாற்றம்(மடல்)
உன்னை மறைமுகமாய்க் குத்திக்கிளறியதாற் கோவப்பட்டாயோ?.
எந்தத் தீமையையும் நானுனக்குச் செய்யவில்லை
(நம்முள் நடந்ததை மாதவியிடம் சொல்லவில்லை.)
அவளிடம் (கானல் வரியின் வழி) நீ தப்பாகப் பேசினாய்,
எனவே ’கொடுமை செய்தாய்’ என அவள் புரிந்துகொண்டாள்.
 
பெருந்துயருற்று அவள் என்முன் மயங்கிவிழுந்து,
’குமுகாயத்தில் மேலோராயினும், படித்தவராயினும்,
பல்வேறு வழிவகை தெரிந்தவராயினும்,
தம்மைப் பிடித்த பிணி எனக்கொண்டு
பின்தள்ளி விலகும் கணிகையர்வாழ்க்கை மிக இழிந்தது’ என்றாள்.
அடுத்துச் செவ்வரிபடர்ந்த.தன் செழுங்கடை மழைக்கண்ணிலிருந்து
முத்துப்போல நீருகுத்து,
வெண்ணிலாவாய்த் திகழும் தன் முத்துவடத்தை
தன்கையாலே அறுத்துவீசி,
வெகுண்டு என்னையும் துறந்தாள்
(என்னை வெளியே போகச்சொன்னாள்).
 
வெளியேவந்து உசாவியபோது, எதிர்வழிப்பட்டோர்
நீ மதுரை மூதூர் மாநகர் போந்ததை உரைத்தார்.
புகாரிற் புறப்பட்ட சாத்தோடு உடன்வந்து
அவரிடமிருந்து இங்குபிரிந்து தனியாக உழந்துநிற்கிறேன்.
 
எல்லோருக்கும் பகுத்து அருளும் பண்புள்ளவனே,
எனக்கு நீதரும் பணிமொழி யாது?”
 
என்று கானுறை தெய்வம் விருப்பத்தோடு சென்று சொன்னது. வசந்தமாலையின் உருவமெடுத்து இதைச் சொல்லும்போது ”கோவலன் எப்படி மறுவினை செய்கிறான்? அவன் உறுதியென்ன? என்று தெய்வம் அறியவிரும்புகிறது. படிப்போருக்கும் முதன்முறையாக வசந்தமாலை - கோவலனின் கள்ளக்காதல் வெட்டவெளிச்சம் ஆகிறது. காடுகாண் காதை கோவலனுக்குள்ளிருக்கும் கமுக்கத்தைக் காணவைக்கும் காதை
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, July 27, 2016 5:00 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
2016-07-25 16:42 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
இப்பொழுது நாம் பார்க்கப்போகும் வரிகள்
 
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீ”யெனக் கோவலற்கு உரைக்கும்
 
என்பதாகும். தீயில் திறங்காட்டுவது யாகம் நடத்துவதே. அக்காலத்தில் யாகஞ்செய்யக் குறைந்தது நால்வர் தேவை. இக்காலத்தில் ஒருவரே இரு வேலைகள் செய்வதும், ஒரே வேலையை இருவர் செய்வதும் நடக்கிறது. ஒவ்வொரு யாகத்திலும் கூர்ந்துகவனித்தால் செய்வோர் பொறுப்புப்பகிர்வது தெரியும். முதலாமவர் ஓதி (Hotri; நம்ஓதியே சங்கதத்தில் நம்ஓத்ரி>நம்மோத்ரி>நம்மூத்ரி>நம்பூத்ரி எனவாகலாம். முன்குடுமி நம்பூதிகள் சேரநாட்டிலும், சோழியர் சோழ, பாண்டிய நாடுகளிலும் தங்கினார். சங்ககாலத்தில் முன்குடுமிச் சோழியரே மிகுதி. இற்றைக்காலத்தில் சென்னைப்பக்கம் ஓதியை வாத்தியார் என்பர்.). இரண்டாமவர் அடுத்தவர் (= நெருங்கியவர்; assistant; சங்கதத்தில் Adhvaryu. யாகத்தின் பூதிக-physical-வேலைகள் செய்பவர்) எனப்படுவார்; மூன்றாமவர் உடுகலி (Udgatri; உடன் பாடி; கனபாடிகளும் இவ்வகைதான். கலித்தல்=பாடுதல். கலித்தொகை= பாட்டுத் தொகுதி; கலித்தம்>கயித்தம்>கீதம். அன்று சங்கத கீதம் பாடுவது சாமமோதுவதே.) நாலாமவர் பெருமானர் (Brahmin; யாகம் நிர்வகிக்குங் கண்காணி) மாங்காட்டுப் பார்ப்பான் இந்த 4 வகைகளில் ஏதோவொன்று. செலவளித்து யாகஞ்செய்பவர் இயமானர்> இசமானர்>எசமானர் ஆவார்.
 
”மாமறை முதல்வ! மதுரைக்கு செந்நெறி (= சரியான வழி) எது?” எனுங் கோவலனுக்கு
:
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான் நலந்திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினீர் காரிகை தன்னுடன்
 
என்று மறையவன் மறுமொழிதொடங்குவான். கோத்தொழிலாளர் = bureaucrats; வேத்தியல் = governance. கோவலனென்ற இயற்பெயர் பற்றி முன்பே சொன்னேன். சென்றபிறப்பில் பரதன் இயற்பெயர்; தொழிற்பெயரோ கோவலன் (கோ வலன் = கோத்தொழிலாளன்) ஆனது; இப்பிறப்பில் கோவலன் இயற்பெயர்; தொழிற்பெயர் பரதன் (= விலை சொல்வான்; trader/import-exporter) ஆனது. கோவலன் பெயருக்கு அடுத்து 2 ஆஞ் சொல்லிலே கோத்தொழிலாளரென மேலே ஆள்வதைக் கண்டுமா, சிலருக்குக் கோவலன் பெயரின் வார்த்தை விளையாட்டுப் புரியவில்லை? ஓர்ந்துபாருங்கள். விதியோ, வினையோ, எதுவாயினும் சமணருக்கு அறநெறி சொல்ல முற்பிறவிக் கதைகள் தேவை. இல்லெனில் பிறவிச் சுழற்சியை எப்படி உணர்த்துவது, அற்றுவிப்பது, செயிப்பது?
 
கோவலன்-கண்ணகி-மாதவி பெயர்விளக்கத்தை முன்னொரு கட்டுரையிற் சொன்னேன். (என்நூலிலும் உண்டு.) பொறுமையோடு படிக்காது, வறட்டுப்பிடிவாதமாய், “இராகவையங்கார் சொன்னார்; இவர் சொன்னார்; கிருஷ்ணன், இலக்குமியே கோவலன், கண்ணகிக்குப் பொருள்” என அடம்பிடித்து, விண்ணவச்சாயலைச் சிலம்பிற்குச்சார்த்தித் தானுங்குழம்பி மற்றோரையும் குழப்புவர்க்கு என்னசொல்லிப் பயன்? விட்டுவிடவேண்டியதுதான். எரி விண்கல்லைப் பற்றிச்சொல்லும்போது ”எறிந்த” என்று தான் சொன்னேன். ஆனாலும் ”எறிந்த”வை விட்டு ”எரிந்த” என்றே பொருள்கொள்வாருக்கு என்ன சொல்ல? நகரவேண்டியதுதான். ரகர, றகறங்களுக்கு வேறுபாடறியாமலா பொருளெழுத வருவேன்? கட்டுரைத்தொடரைக் கவனமெடுத்து ஆழப்படிப்போருக்கு உறுதியாகச் சொல்கிறேன். சிலம்பைப் புரியாதோர் பழந்தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அதுவொரு அரிய திறவுகோல். உ.வே.சா.விற்கு நாமெல்லோரும் நன்றி சொல்லவேண்டும்..மேலுள்ள வரிகளுக்கு வருவோம்.
 
ஒரு கொற்றவன் கோத்தொழிலாளரோடு கோடினால் (= விலகினால்) அவனுடைய வியல் நிலம் வேத்தியல் இழந்து போகுமென்ற கருத்து மிக முகன்மையானது. (இதை அருத்த சாற்றமும் அழுத்திச் சொல்லும். இன்றும் அமைச்சர் இந்திய ஆட்சிப் பணியாளரோடு கோடிக்கொண்டால் நாடு அதோகதி தான்.) அதுதான் கதைநடந்த காலத்திற் பாண்டிநாட்டில் நடந்தது. கோத்தொழிலாளர் அரசனுக்கு எச்செய்தியுஞ் சொல்லவில்லை. (தமிழகமறிந்த ஒரு வணிகனின் மகன் கோட்டைக்குள் நுழைந்துள்ளான். ”அவன் யார்? எதற்கு வந்தான்?” என்றசெய்தி கூட அரசனுக்கு அறிவிக்காது ஒரு கோட்டைத் தளபதி இருக்கமுடியுமா? Intellignce officials - ஏ பாண்டிநாட்டில் இல்லையா? கோவலன் என்ன சுப்பனா, குப்பனா? ”பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” மகனல்லவா? :அம்பானி மகன் மும்பையில் அடையாளந்தெரியாது போகமுடியுமா?” சற்று முரணாய்த் தெரியவில்லையா?
 
பின்னால் அரசனிடம் வழக்காடுகையில் கணவன் பெயர் சொல்லாமல் ”மாசாத்துவான் மருமகள்” என்றுதானே கண்ணகி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்? அப்படியாயின் மாசாத்துவான் 3 நாடுகளிலும் அரசுத் தொடர்பாளர்க்குத் தெரிந்தவனாகவே இருப்பானல்லவா? ஆயினும் கோவலன், கண்ணகியாரென்று அரசனுக்குத் தெரியவில்லையாம். Isn’t it something wrong with governance? பாண்டியன் எப்படி எதையும் விசாரிக்காமல் பொற்கொல்லன் பேச்சை நம்பிக் கோவலனைக் கொன்று சிலம்பு கொணரச் சொன்னான்? வழக்குரைகாதையில் அல்லவா, அரசனுக்குத் தன்தவறு புரிகிறது. எனவே பாண்டிய அரசின் நிர்வாகம் அரசனுக்குப் பலசெய்திகளைச் சொல்லவில்லை என்று தோன்றவில்லையா?.அரசனும் எதையுங் கேட்கவில்லையே? அரச நடைமுறையில் ஏதோ அடிப்படைத் தவறுள்ளதுபோல் ஆகவில்லையா? அதைத்தான் இங்கே உருவகமாய் வைத்து இளங்கோ சொல்கிறார்.
 
பின்னால் கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் மதுரையில் கண்ணகிக்கு முன்னால் நடந்த கலகங்களையும், மக்கள் மன்னனை எதிர்த்த கதையையும் ”ஆடித்திங்கள் மதுரை அழற்படும்” என்ற தானறிந்த முந்தையச்செய்திகளையும் அழற்பாடு சற்று தணிகையிற் சொல்லும். பஞ்சகாலமென நான்சொன்னதற்கு அதுவுமொரு காரணம் மக்களுக்கு அரசன்மேல் ஏராளங் கோபம் இருக்குமெனில் அது பஞ்சகாலம்தான். இல்லெனில் கண்ணகிக்கு நடந்த நிகழ்ச்சியை வினையூக்கியாய் வைத்து மதுரை எப்படி எரியூட்டப்படும்.? இலக்கிய அழுத்திற்காக இளங்கோ அதைக் கொங்கையில் விளைந்ததாய்ச்  சொல்லலாம். (அதை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள வேண்டாமா?) அதை விடுத்து தான்மதிக்கும் நாகசாமி ”சிலம்பு புதினமென்று” சொன்னதால், “கொங்கையிற் பாசுபரசா இருந்தது?” என்று பெரியாரை துணைக்கொண்டால் எங்கேபோய் முட்டிக்கொள்வது? மஞ்சட்கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும் "ஆமாங்க! கண்ணகி ஒரு terrorist. இப்பொழுது மனமாறியதா? சிலம்பு ஒரு முட்டாள் தனமான புதினம்.” 
      .
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, இங்கே வெங்கதிர் வேந்தன் வேனலங் கிழவனோடு கோடிக்கொள்கிறானாம்.
 
புவி சூரியனைச் சுற்றும் வலயத்தில் ஓராண்டில் 4 முகனநாட்கள் உண்டென்று முன்னாற் சொன்னேன். அவற்றில் 2 ஒக்கநாட்கள். மற்று இரண்டில் ஒன்று வேனில் முடங்கல் (summer solstice. இற்றைக் காலங்களில் சூன் 21 இல் நடைபெறும். சிலப்பதிகாரக்காலத்தில் சூலை 15 இல் நடைபெற்றது.) இன்னொன்று பனிமுடங்கல் (winter solstice. இற்றைக்காலங்களில் திசம்பர் 22 இல் நடைபெறும். சிலம்புக் காலத்தில் இது பொங்கலுக்கு அருகில் ஏப்ரல் 14 இல் நடைபெற்றது.) கோடை உச்சமென்பது வேனில்முடங்கலே. வேனில்முடங்கலும், பனிமுடங்கலும் புவியின் நாலாவது அசைவான நெற்றாட்டத்தால் (nutation) நெடுங்காலப் பாதிப்பிற்கு உள்ளாகும். அதாவது அவ்வியக்கத்தால் வேனில்முடங்கல் ஒரு சுழற்சிப்பருவத்தை ஒட்டி மிகச்சூடும், குறைவான சூடுமாய் ஆகிவிடும். இந்த நெடுங்கால மாற்றம் போக 12 ஆண்டிற்கு ஒருமுறை சூரியனில் தோன்றும், மறையும் சூரியப்புள்ளிகளாலுங் கோடை கூடுவதுங் குறைவதுமுண்டு. சூரியப்புள்ளிகளால் ஆகும் சூடுக்காலத்தைத் தான் பஞ்சகாலமென்றார். அது பெரும்பாலும் தாது ஆண்டிலும் (தாது+12, தாது+24, தாது+36, தாது+48) ஆண்டுகளிலும் நடைபெறுவதாய் ஒரு கணக்குமுண்டு.
 
ஏதோவொரு காரணத்தால் வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் தான் நலந்திருகத் (தான் நலந் திருகிப்போக = அளவிற்கு மீறிய கோடை கூடிப்போக) தன்மையிற் குன்றி (எல்லா ஆண்டுமுள்ள வளம்தருந் தன்மையிற்குன்றி) ”முல்லையுங்குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்“ என்று இளங்கோசொல்வார். பல தமிழறிஞரும் இம் 3 வரிகளைப் பாலை வரையறையாகக் கொள்கிறாரேயொழிய, என்ன காலமென்பதிற் கோட்டைவிடுகிறார். எல்லாக்காலங்களிலும், முல்லையுங்குறிஞ்சியும் திரிந்து பாலையாகாது. இவ்வாண்டு நல்ல மழைபெய்து,. ஏரி-குளங்கள் நிறைந்தன; அடுத்தாண்டு இளவேனிற்காலத்திலும் கோடையிலுங் கூட சிலபோது மழை பெய்கிறது; இந்நிலையில் அடுத்தாண்டு பாலை ஏற்படுமா? ஏற்படாது.
 
இங்கே ஒரு கட்டியம் (condition) இருக்கிறது. அதைப் பலரும் மறந்துவிடுகிறார். வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் ”தான் நலந்திருக தன்மையிற் குன்றிய” காலத்திற்றான் பாலை ஏற்படும். இப்பொழுது சூரியப்புள்ளிகளைப்பற்றி ஓர்ந்துபாருங்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் நலம் திருகிக்கொள்கிறது. தன் வளந்தரும் தன்மையிற் குன்றிப்போகிறது. (மேலையர் 11 இலிருந்து 12 ஆண்டுகள் என்று துல்லியக்கணக்குச் சொல்வார். இந்தியவானியல் அன்றைக்கிருந்த அறிவில் 12 ஆண்டுகள் என்றது.) இதைத்தான் பஞ்சகாலம் என்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பான் கோவலனைப் பார்த்து, “என்னைய்யா, பஞ்சகாலம் ஏற்படுஞ்சமயத்தில் பெண்டாட்டியோடு இங்கே வந்திருக்கிறாய்?  உங்களூர்போல நீர்வளம்கூடிய நாடு இதுவல்லப்பா? இது வறுபடும் நாடு”
 
அடுத்த பகுதிக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.   
 
​கல்லூரியில் படிக்கும் தமிழ்ப்பாடம் போல இருக்கின்றது.
அருமை.
நன்றி பல.
 
சுபா
 
 
 
Sent: Wednesday, July 20, 2016 7:11 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
அடுத்து திருவரங்கம், திருவேங்கடம் பற்றிப் பேசிவிட்டு மதுரைக்கான 3 வழிகளுக்குச் செல்லப்போகிறோம். தீதுதீர்ச் சிறப்பின் தென்னனை வாழ்த்திய மாமுது மறையோனிடம் ”யாது நும்மூர்? யாதி ஈங்கண் வரவு?” என்று கோவலன் கேட்க,
 
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரித்து அகலாது படிந்ததுபோல்
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளி பலதொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியம்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
 
என்று அரங்கத்தம்மானைப் பற்றிக் கூறுகிறான். மலைப்பாம்பின் மேற்பக்கம் முழுக்கருப்பாகவும், கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இத்தகைப் பாம்பு சுற்றிச்சுற்றி வளைத்து பாயற்பள்ளி அமைப்பது, எப்படியிருக்கிறதாம்? நெடிய பொற்குன்றத்தின் எல்லாப்பக்கங்களிலும் விரிந்து கருமேகம் படிந்ததுபோல் இருக்கிறதாம். இங்கே ஆயிரந் தலைகளென்பது உயர்வுநவிற்சி (இயற்கையில் எப்போதாவது இருதலைப் பாம்புகள் பிறப்பதுண்டு.) விரியும் குற்றலைகளையுடைய அகன்றபெரும் துருத்தியின் (காவிரியில் திருவரங்கத்தீவு துருத்திக்கொண்டேயுள்ளது) பாயற்பள்ளியில் எல்லோரும் தொழுதேத்தும்படி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - என்ற விவரிப்பு நளினமானது. அடுத்து,
 
வீங்குநீர் அருவி வேங்கடமென்னும்
ஓங்குயர் மையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
 
என்ற வரிகள் வேங்கடத்துச் சிறப்பைக் கூறுகின்றன. வேங்கடமென்பது நண்பர் நூ.த.லோ.சு. சொன்னபடி வேங்கடம் (வேகுங் கடம் வேங்கடம். இன்றுள்ள இராயல சீமையிற் பாதியை இது குறிக்கும்.) என்ற பரப்பையும் வேங்கடத்துள் நிற்கும் 7 மலைகளையுங் குறிக்கும். வேங்கடத்திற்கு மேலுள்ள நல்லமலையைச் சுற்றியுள்ள பகுதியும் வேகுங் கடம் தான். ஆனால் சங்ககாலத்தில் அது மொழிபெயர் தேயமென்ற பெயரைக் கொள்ளும். மாமூலனார் நிறையப் பேசியுள்ளார். மொழிபெயர் தேயம் இன்னும் வடக்கே போய் நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) அரசைத் தொடும்.
 
இன்றும் வேங்கடமலைக்குள் போகும்போது ஒரு வறண்டுபோன அருவியைப் பார்க்கலாம். (கோயில் நிருவாகத்தார் மறுபடியும் அதைப் புதுப்பிக்க முயலுகிறார். செல்வங் கொட்டிவழியும் போது அருவியைப் புதுப்பிக்க முடியாதா, என்ன? அந்தக்காலத்தில் அது வீங்குநீர் அருவியாய் இருந்ததுபோலும். அம்மலையின் உச்சியில் ஒருபக்கம் ஞாயிறும், இன்னொருபக்கம் திங்களும் ஓங்கிநிற்க இடைப்படும் இடத்தில் ஒளிபொருந்திய கோடியுடையை உடுத்து வானவில்லைக் கையிற்தரித்து நல்லநிறங் (கருநிறம்) கொண்ட மேகம் நின்றதுபோல் பகைவர் அணங்கிப்போகும் (ஆட்பட்டுப் போகும்) ஆழியையும், பால்வெண்மையான சங்கத்தையும் தன் தகைபெறும் தாமரைக்கையிலேந்தி நலம் கிளர்த்துகின்ற ஆரத்தை மார்பிற் பூண்டு, பொற்பூ ஆடையிற் பொலிந்து (பொற்பூ ஆடையைத்தான் பீத அம்பரம் என்று ஆண்டாளும் ஆழ்வாரும் சொல்லிச்சொல்லிக் குதுகலிப்பர்) தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - திருவரங்கத்தைவிட இன்னும் நளினமான விவரிப்பு.
 
இந்த இரு இடங்களையும் காணவந்தேன்.  நான் குடமலை மாங்காட்டிலுள்ளேன். தென்னவன் நாட்டுச்சிறப்பும் செய்கையும் கண்மணி குளிப்பக் காண்டேன் ஆதலின் வழ்த்திவந்திருந்தேன் இதுவே என் வரவு என்று மாங்காட்டு மறையோன் சொல்லுகிறான்.
 
இதில் கவனிக்கவேண்டியது திருவரங்கத்தையும், வேங்கடத்தையும் பார்க்கவந்த மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்லும் 3 வழியையும் விவரிக்கும்போது திருமால்குன்றம் பற்றி ஓரளவு மட்டுமே நிறைவின்றிச் சொல்வான். அதில் அரங்கம் வேங்கடம்போல் உணர்வுகலந்திருக்காது. ஏதோ நிறைவில்லாததுபோல் தெரியும். பேரா. தொ.பரமசிவன் தன் முனைவர்பட்ட ஆய்வேட்டில் திருமால்குன்றம் ஒருகாலத்தில் புத்த ஆராமமாய் இருந்திருக்கலாமென்று பல்வேறுவகையில் நிறுவுவார். (அருமையான ஆய்வேடு, பொத்தகமாயும் வெளிவந்தது. தமிழினி வெளியீடு.) அப்படியானால் இம்மாற்றம் கி.மு.75 க்கும் முன்னே நடந்திருக்கவேண்டும். எத்தனையோ புத்த, செயின, அற்றுவிகக் கோயில்கள் சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றோ என்னவோ?  (எங்கெல்லாம் மொட்டை போடுகிறோமோ, அங்கெல்லாம் மாற்றங்கள் ஏதோவொரு காலத்தில் நடந்திருக்கலாம். திருப்பதி மொட்டையும் நம்மைக் கேள்விகேட்க வைக்கிறது. வேறு பெருமாள் கோயில்களில் இது நடப்பதில்லையே?)        
 
இனி மூன்று வழிகளுக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


 
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

iraamaki

unread,
Jul 30, 2016, 9:21:22 PM7/30/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
காடுகாண் காதையின் கானுறை தெய்வம் ஓர் இனக்குழுத் தெய்வம். அவள் (அலர்மேல்மங்கை, குசுமாண்டிணி, இலக்குமி, அம்பிகா எனும்) பூங்கண் இயக்கியாகவோ, (பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி எனும்) கொற்றவையாகவோ, அன்றி பத்மாவதி, சக்ரேசுவரி, சுவாலமாலினி, ஜீனவாணி போன்ற இயக்கிகளில் ஒருவராகவோ ஆகலாம். அற்றுவிக, செயின, புத்த, சிவ, விண்ணவ நெறிகள் இனக்குழுத் தெய்வங்களை ஒருபாலேற்று, மறுபால் தமக்கேற்ப மாற்றியதுமுண்டு. [நாடுறைத் தெய்வங்களும் மாறியுள்ளன. நமக்குத் தெரிந்த காமக்கண்ணி ஒருகாலத்தில் புத்தநெறியின் தாராதேவிதான். இன்றவள் காஞ்சி காமாட்சியாய் (காம அக்ஷி; காமத்தை/க்ராமத்தைக் காப்பவள்) மாறிக் காட்சியளிக்கிறாள். இத்தகை மாற்றங்கள் தமிழ்நாட்டில் ஏராளம்] இவற்றைக் கும்பிடுவதாலே சமயநெறி வழுவியதாய் யாரும் எண்ணுவதில்லை. (மாங்காட்டிற்கும் திருவேற்காட்டிற்கும் பெரியபாளையத்திற்கும், சமயபுரத்திற்கும் போகக்கூடாதென்று சொல்லுங் கூட்டம் எவ்வளவு?)
 
பொதுவாய்ப் பல சமயங்களும் இனக்குழு நிகழ்வுகளை ஒருபக்கம் கவனியாதவை போலக் காட்டிக்கொண்டு, மறுபக்கம் அமைதியாய் அவற்றை ஒத்துக்கொண்டே தம் நடைமுறைகளை வளர்க்கின்றன; செழிக்கின்றன. இற்றைக்காலக் கிறித்தவ, இசுலாம் நெறியினருங் கூட இவற்றைச் சிலபோது விலக்காது தம்நெறிக்குத் தக்க உருமாற்றிக் கொள்வர். கூர்ந்து பார்த்தால் எல்லா நெறிகளிலும் இவ்வகை நீக்குப்போக்குகளுண்டு. பெரும்பாலும் மதத்தீவிரவாதிகளே இனக்குழுப் பழக்கங்களை அடியோடு ஒதுக்கச்சொல்வர். (தீவிரவாதிகள் எந்த மதத்தில் இல்லை?) எனவே சமணனான கோவலன் (அவன் செயினனா, அற்றுவிகனா, புத்தனா என்பது சிலம்பிற் தெரியாது.) கானுறை தெய்வத்தைத் தொழுவதும் மந்திரஞ் சொல்லுவதும் கொஞ்சங்கூட வியப்பன்று. அவன் சொன்னதைப் புரிந்துகொள்வதற்கு முன் மந்திரங்கள் பற்றிய இடைவிலகல் நமக்குச் சரியான புரிதலைத் தரும். 
 
எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்றமைவதாகவே சிற்றகவைகளில் நாம் பார்த்த கதைப்படங்களாலும், பாட்டி கதைகளாலும், அம்புலிமாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைகாட்சிகளாலும் எண்ணிக்கொள்கிறோம். உண்மையில் அப்படிக்கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டன. தமிழில் ஓம்பதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்புதலெனில் விருந்தினருக்கு உணவளித்துக் காப்பாற்றலாகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்து வருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று” .என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம்வல்ல இறைவனிடங் கூட வேண்டுகிறோம். தடுத்தாட்கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்>ஒல்>ஒ>ஓ>ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ஓமென்ற சொல் முழுக்க முழுக்க நல்ல தமிழ். அதைச் சங்கதமென்று நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் ஓம் என்பது இருந்தே தீரும். 
 
["என்னைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந்தீவில் இருந்துவருகின்றன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவதாய் அமைத்து, ம் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற் (சுவத்திக) குறி அமைத்தாரென இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறிக்கொண்டுள்ளார். மதிவாணனோ சிந்துசமவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.]
     .      
கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132
 
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி
வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்
காண்டகு மரபின அல்ல மற்றவை
 
என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப்பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங்கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து ஒரு விண்ணவ மந்திரமாகவும் ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேதநெறியைக் கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம் நடைமுறைகளும், இன்னும் தமிழ்வழியே தான் இருக்கின்றன. ஆழ்ந்துபார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசைமாறிய தமிழ்மந்திரங்களே. வடக்கெழுந்த வேதமந்திரங்கள் இவற்றிலிருந்து முற்றும் வேறுபட்டவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்களைச் சொல்வர்.)
      .
முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன் கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என்றே இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரமாகும். (கட்டளைப்பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பதுதான் இம்,மந்திரத்தின் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” என்றமையும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரிலுள்ளவனாவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையை http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html இல் பாருங்கள்.)
 
இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்>நுள்வு>*நுவ்வு>*நும்மு>நுமு>நமு என்ற வேர்ச்சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்தபொருள் மென்மை யாகும். மென்மையானது வளையும், வணங்கும். குழைதற்பொருளில் திருவாய்மொழியின் ஒன்பதாம்பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)
 
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
  இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
  துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
  தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்
  பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!
   
என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணைமுலைகள் குழைந்துபோயின” என்பார். நமுத்துப்போவதை நமத்துப்போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப்போதல்>நமர்த்துப்போதல் என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும். ரகரமும் லகரமும் பல இடங்களிற் போலிகள். நமர்த்துப்போதல் நமல்த்துப்போதலும் ஆகும். தான்கொண்ட பற்றியாற் குழைந்துபோனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற்பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே. சங்ககால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச்சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன் காட்டைத் திருவாய்மொழியின் மூன்றாம்பத்தில் மூன்றாம் பதிகத்தில் ஏழாம்பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)
 
”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”
 
என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழுமென்பது ”வணங்கியெழும்” என்று பொருள்கொள்ளும். நமனுதலென்றாலும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக்கோயில் நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த ஒருசிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புக விடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காசிவிசுவநாதர் கோயிலில் (செல்வ வளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என்ற உலகவழக்கங்களைப் பொறுத்து) யார் வேண்டுமெனினும் நமனிகைக்குள் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டிருக்கிறேன்.) பாலால் முழுக்காட்டலாம். வில்வமும் போடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம். ஆனால் தென்புலப் பழக்கம் மிகுந்த கட்டுப்பெட்டியானது. எல்லோரையும் விடாது.
 
நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்>நுளு>நுழு>நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச்சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது குறைந்தது தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்து கிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப்பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்டநேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.   
 
”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதமென எண்ணிக்கொண்டிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப்பாவை மறந்துவிடாதீர்கள். மல் ஓரெழுத்து.)
 
”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,
“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”
 
நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கத்தில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும். (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர்சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகளுண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டுவந்து சேர்ப்பர். [ஆகுதல்>ஆய்தல் என்பது ஆகுஞ்செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச்சொல் ஆய என்றாகும்.) இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்றுமாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப்போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்றுமட்டுமே இம்மந்திரம் பொருள்தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்றுசொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ்மந்திரம் வேண்டுமெனில் மேலே கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.
 
இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில்  ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிய குறிப்புச் சொல்லப்படும். மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத்தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இதைப்புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள்கொடுத்துக் குழப்பிக்கொண்டிருப்பர். (இணையத்தில் எங்குதேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும்வரை புத்தனைப் பீடிகைகளாலே தான் மக்கள் தொழுதார். புத்தனுடைய செந்நிறக் காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப்பதுமம் என்பது இரட்டைவுவமம் அவ்வளவுதான்.
 
இதேபோல் மந்திரங்கள் செயினத்திலுமிருக்கலாம் அற்றுவிகத்திலுமிருக்கலாம். தேடிப்பார்க்கவேண்டும். மந்திரங்கள் தீர்த்தங்கரர்களை அழைத்தும், இயக்கிகளை அழைத்துமிருக்கலாம் (அவையெல்லாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக்கொள்வேன்.
 
இனி காடுகாண் காதையின் முடிவிற்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, July 27, 2016 5:00 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
2016-07-25 16:42 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
​கல்லூரியில் படிக்கும் தமிழ்ப்பாடம் போல இருக்கின்றது.
அருமை.
நன்றி பல.
 
சுபா
 
 
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Aug 1, 2016, 7:25:35 AM8/1/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
காடுகாண் காதையில் கோவலனைப் பொறுத்தவரையில் வசந்தமாலை தன்முன் நேரே வந்திருப்பதாகவே முதலில் உணருகிறான். (ஆனால் வசந்தமாலையாய்த் தோற்றமளித்த கானுறைதெய்வமே நேரே வந்தது.) கோவலனிடம் அத்தெய்வம் கேட்டதற்கு கோவலன் என்ன செய்திருக்கமுடியும்? கண்ணகியையும் கவுந்தியையும் கானுறைதெய்வ வளாகத்திலிருத்தித் தான்மட்டும் வசந்தமாலையோடு நகர்ந்து வேறெங்கோபோக எண்ணலாம். அன்றேல் “இவள் ஏன் தன்னைத் தேடிவந்தாள்?” என்று குடையலாம். மாதவியை நாடியும் போகலாம். அன்றேல் ”நடந்தது நடந்ததே; மாதவியோடும் இனி வாழேன்; இவளோடும் குலவேன். என் மனையாளொடு மதுரைக்குச் செல்வதே சரி”யென்று திருந்தியும் அமையலாம்.  திருந்திவாழவே முடிவெடுக்கிறான்.
 
இந்நிலையிற்றான், ”இந்த வலிய காட்டினுள் மயக்கும் தெய்வமும் உண்டெ”ன்று மாங்காட்டுப் பார்ப்பான் கூறிய சொற்கள் நினைவிற்கு வருகின்றன. “ஒருவேளை ’ஐஞ்சில் ஓதி’போல்வந்து என்னைக் கானுறைதெய்வம் குழப்ப முற்படுகிறதோ?” என ஐயுறுகிறான். (ஐஞ்சில் ஓதி = ஐந்தாகிய கூந்தல் பொதுவாய்ப் பெண்கள் முடியை மூன்றாய்ப் பிரித்துச் சடைபின்னுவர். கலைநயம் பொருந்தியோரோ, அக்காலத்தில் தங்குழலை ஐந்தாய்ப் பிரித்துச் சடைபின்னிக்கொள்வர். மாதவியும் வசந்தமாலையும் இப்படிச்செய்வார் போலும்.) சோதனையிற் தப்பிக்கக் கொற்றவையை விரும்பி அழைத்துத் “தாயே காப்பாற்றெ”னக் கோவலன் சொல்வது முற்றிலும் இயல்பான செய்கை. நம்மிற்பலர் எண்ணங்குழம்பிய நிலையில் இன்றும் விருப்புத்தெய்வத்தை விளித்து, “தெய்வமே! காப்பாற்று” என்கிறாரல்லவா? ”காப்பாற்று” என்றபின், சோதனை தொடருமோ?
 
கோவலன் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவையின் மந்திரமாதலின், கானுறைதெய்வம்/ வனசாரினி கோவலனிடம் தன்னுருவைக் காட்டி ”உன்னைச் சோதிக்கவே மயக்கினேன். நான்செய்ததை கானமயிற் சாயல் கொண்ட நின்மனைவிக்கும். புண்ணியமுதல்விக்கும் உரைக்காது இங்கிருந்து செல்” என்றதாம். பாய்கலைப் பாவை கொற்றவையைக் குறிப்பதாய்ப் பல்வேறு உரையாசிரியருங் கூறுவர். ஆனால் அடியார்க்குநல்லார் “அந்தரி” என்று வேறுசொல் தொடுத்துச்சொல்வார். அந்தரி என்பவள் கொற்றவையா இயக்கியா? சற்று தடுமாறுகிறோம். ஏனெனில் 11 ஆம் தீர்த்தங்கரரான ஸ்ரேயம்ஸ நாதருக்கு இயக்கியான கௌரி / மாணவியும் கலைமானை ஊர்தியாக்கியவள்.(http://www.lchr.org/a/42/m9/sasandevs/) ஒருவேளை இந்தக் கௌரியும் கொற்ரவையும் ஒன்றோ, என்னவோ? தவிர, காடுகாண் காதையை அடுத்துவரும் வேட்டுவ வரியில் கலைமானைக் கொற்றவையின் ஊர்தியாக்கிப் பல அடிகள் வரும். புலி/சிங்கமும் கலைமானும் கொற்றவை ஊர்திகளாய்ச் சொல்லப்பட்டவை. நமக்குத் தெரியாத ஊடாட்டங்கள் சமணத்திற்கும் வேதநெறிப்பட்ட சிவ, விண்ணவ நெறிகளுக்கும் இடையே இருந்துள்ளன. நாம் இற்றைப் புரிதலிலேயே பேசிக்கொண்டிருக்கிறோம். 
 
பொய்கையிலிருந்து தாமரையிலைத் தொன்னையால் நீரெடுத்து வந்து, தளர்ந்திருந்த கண்ணகி மடந்தைக்குக் கொடுக்கிறான். (மடந்தைப் பருவம் என்பது 13-19 வயதிற்குள் இருக்கும். கண்ணகிக்கு 17 வயது இருக்கலாமென்று முன்னே சொன்னேன்.) கோவலன் நீர்கொடுத்த பின் ”வெய்யில் ஏறுகிறது. தீயகாட்டின்வழி இனிச்செல்வதரிது” என்றெண்ணிய கவுந்தி, குரவம், மரவம், கோங்கம், வேங்கை நிறைந்த இடைவழியே, மயக்குஞ் சாலைப்பரப்பில், நடப்போர்தவிர வேறுயாரும் இல்லாநிலையில், [மாரிவளம் பெறா வில்லேருழவர், கூற்றைவிட மிகுந்த வலியொடு வில்லேந்தி, வேற்றுப்புலம் ஏகினும் நல்வெற்றிதந்து அதனாற் கழிபேராண்மைக் கடனை எதிர்பார்த்திருக்கும் நெற்றிக்கண்ணுடையவளும், விண்ணவர்மகளும், குற்றமற்ற சிறப்புடைய வான்நாட்டவளும் ஆன] ஐயையின் கோட்டத்திற்கு கோவலனொடும், கண்ணகியொடும் வந்து அடைகிறார்.
 
மூன்றுவழிகள் சேருமிடத்தில் கானுறைதெய்வக் கோட்டமிருந்தது. அது இன்றுள்ள மதுரைமேம்பாலத்திற்கு அருகிலென முன்னால் ஊகித்திருந்தோம். இந்தக் கானுறை தெய்வக் கோட்டமே முதல்நாள் மூவரும் தங்கிய இடமாகும். ஒருநாளைக்கு ஒரு காதமே (4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ) இவர் நடப்பதாலும், ஐயைகோட்டம் மதுரைக்கோட்டைக்குச் சற்றுமுன் இருக்கக்கூடும் என்பதாலும் [பொதுவாகக் கொற்றங்களுக்கு - கோட்டைகளுக்கு - அருகிற் சற்றுமுன்னால் ஐயைக் கோட்டங்கள் (கொற்றவைக் கோட்டங்கள்) இருப்பது தமிழகத்தில் வழக்கம். இன்றும் இடிந்த கோட்டைகளுக்கருகில் இதுபோன்ற அம்மன்கோயில்களைக் காணலாம்], இற்றை மேம்பாலத்திலிருந்து வைகை வடகரையில் கிட்டத்தட்ட 7/7.5 கி.மீ. நடந்துவந்தால், பழமதுரைக்கு அருகில் வந்துவிடலாம் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.. இவ்விடத்திற்குத் தெற்கே ஆற்றைத் தாண்டிப் பழமதுரை இருக்கலாம். இன்று தொல்லியல் மூலம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் சிலைமான் கீழடிப்பகுதி இக்கணக்கோடு சரியாய்ப் பொருந்துகிறது. ஒருவேளை பழமதுரையைத் தொல்லியல் நெருங்கிவிட்டதோ?.  
.. 
காடுகாண் காதையை நாம் பெரிதுங் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆழ்ந்து படித்தால் இதுவரை புரியாத தமிழர் வரலாறு இனிமேற் பெரிதும் புரியும். அதைப் புதினமென்று என்னாற் கொள்ள இயலாது. அப்படிச் செய்பவர் தன் கண்ணை மூடிக்கொள்கிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடாது.
 
அன்புடன்,
இராம.கி.
 
(இனி அடுத்த பகுதியில் பலரும் ஊடே எழுப்பிய குறுக்கு வினாக்களுக்கு விடையளிக்க முற்படுவேன்.)    

iraamaki

unread,
Aug 2, 2016, 9:29:36 AM8/2/16
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
 
 
Sent: Tuesday, August 02, 2016 6:57 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
இனிவரும் பகுதிகளில் என் விவரிப்பினூடே பலருமெழுப்பிய குறுக்குவினாக்களுக்கு விடையளிக்க முற்படுவேன். முதற்கேள்வி முகுந்தன் எழுப்பியது. ”நெடுஞ்செழியன் மகன் தீக்கிரையாகினான் என்று எப்படிச்சொல்கிறீர்கள்?” என்றும் ”அதற்கான வரிகள் எங்குள்ளன?” என்றுங் கேட்டார். நேரடி வரிகள் கிடையா. ஆனாற் சுற்றிவளைத்து ஊகிக்கமுடியும்.
 
பாண்டிய இனக்குழு கொற்கையிலிருந்தே முதலில் எழுந்தது. இதை இக்கட்டுரையின் நடுவே உரைத்திருந்தேன்.
 
---------------------------------------------
இந்தியாவிற்குள் 70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் நுழைந்தபோது (A Journy of Man - A Genetic  Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப்பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங்காலம் முன்னே தெற்கேகிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணிவரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) நெய்தலார்வழித் தோற்றம், பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(>நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications) எனக்] கோரைப்பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளால் உறுதிப்படும்.
---------------------------------------------
 
பொதுவாகச் சங்ககாலத்தில் பாண்டியன் என்பது இனக்குழுப்பெயர். செழியன் மாறன் என்பவை பட்டப்பெயர்கள். வேல், வழுதி என்பன இயற்பெயர் முடிபுகள் செழியன், மாறன் என்ற குடிப்பெயரை பாண்டியக் கொடிவழியார் மாறிமாறி வைத்துக்கொள்வார். மாறனும் செழியனும் தண்பொருநையாற்றின் முடிவிற்கிடக்கும் கோரைப்பகுதியால் எழுந்த பெயர்கள்..செழியன் பின்னாளிற் சடையனுமானது. வெற்றிவேற்செழியனில் வேல் இயற்பெயர் முடிபு. பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலின்படி மாணிக்கவாசகர் ”தானைவேல் வாகைமாறனிடம்” அமைச்சராய் இருந்தாராம். (அரிமர்த்தன பாண்டியன் என்பதெல்லாம் பிழைமிகுந்த “திருவிளையாடற் புராணத்தால்” ஏற்பட்ட குழப்பம். பல திருவிளையாடல்களில் திருவாலவாயுடையார் புராணமே கற்பனையைக் குறைத்துச்சொல்கிறது. திருவிளையாடற் புராணமே பலரும் படிப்பதால் பிழைகளே பரவிக்கொண்டுள்ளன.) இங்கும் வேலென்பது இயற்பெயர் முடிபு. ஆழ்ந்துபார்த்தால், திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி போலவே இன்னொரு இயற்பெயராய் வேல் முடிவதில் வியப்பேயில்லை:-)
 
மூவேந்தர் தத்தம் மூத்த மக்களுக்கே பொதுவாய் இளங்கோப் பட்டம் சூட்டுவர். ஏதோ காரணத்தால் இளங்கோவிற்கு ஊறு ஏற்பட்டால், அடுத்த மகனுக்கோ, அன்றேல் சோதரனுக்கோ, சோதரன் மகனுக்கோ பட்டஞ்சுட்டுவார். முற்காலச்சோழரும் பிற்காலப்பாண்டியரும் பங்காளிச்சண்டையிற் சீரழிந்தது வரலாற்றிலுண்டு. ”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” என்னும் கொலைக்களக்காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோவேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவரவந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக்கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையிலிருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதேபொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மையிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப்பட்டதும் உண்மை. சிலபோது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநனாகலாம்.
 
இந்நிலையில் கொலைக்களக்காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை, கட்டுரைகாதை என்று மதுரைக்காண்டம் நகரும். முடிவில் யார் அரசனானான்? உரைபெறு கட்டுரை மூலம் ”அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது” என்ற கூற்றால், வெற்றிவேற்செழியனே நெடுஞ்செழியனுக்கப்புறம் அரசுகட்டில் ஏறியது புலப்படும். அப்படியானால் மதுரை இளங்கோ என்னவானான்? 
 
மதுரை எரிபடுகையில், நெடுஞ்செழியனுக்கு 50 அகவையிருக்கலாம் (கோபெருந்தேவியோடு காமத்தால் ஊடியவன் 60 அகவை என்பது சற்று அரிது. சிலம்புக்காலத்தில் அவனை முதிர்ந்தவனாய்க் கொள்வதை ஏற்கமுடியாது.) மதுரையிலிருந்த அவன்மகன் 20/25 அகவைக்குள்ளிருக்கலாம். நேரியவாய்ப்பில் அவனே நெடுஞ்செழியனுக்குப்பின் மாறனென்ற பெயரோடு வேந்தனாக வேண்டியவன். ஆனால் அடுத்து ஏறியவன் வெற்றிவேற்செழியன் இவன் நெடுஞ்செழியனின் 2 ஆம் மகனாயிருந்தால் அகவை 20க்கும் குறைந்திருக்கும். பின்னால் அகம் 149 இல் எருக்காட்டுத் தாயங்கண்ணனார் தெரிவிப்பதுபோல் தும்பைப்போர் செய்து, வஞ்சியிலிருந்து கண்ணகி படிமத்தைக் கவர்ந்துவர ஏற்பாடுசெய்பவன் 20க்கும் குறைவான அகவையில் இருக்கமுடியாது. அதற்குப் பட்டறிவும் தந்திரமும், சூழ்ச்சியும் வேண்டும். மாறாக வெற்றிவேற் செழியன் நெடுஞ்செழியனின் தம்பியாக இருப்பானேயானால், நிகழ்வுகள் அச்சாகப் பொருந்துகின்றன. எனவே அரண்மனை எரிப்பில் நெடுஞ்செழியன் மகன் இறந்திருக்கலாம் என்றே கொள்ள வேண்டியுள்ளது. கொற்கையிலிருந்த தம்பியே இன்னொரு செழியனாய்ப் பெயர்கொண்டு பட்டமேறினான்.
 
[சிலம்பின் காலம் கி.மு.75 என்பதற்கு அகம் 149 உம் ஒரு காரணம். கி.பி. 5/6 ஆம் நூற்றாண்டு என்று சிலர் சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத கூற்று. வெறுமே “அவர்சொன்னார், இவர் சொன்னார்” என்று பழைய ஆசிரியர் கூற்றுக்களையும் இரண்டாம் நிலை ஆவணங்களையும் வைத்துக்கொண்டு தட்டாமாலை சுற்றாது, தாமே ஊற்றாவணங்களை (original documents) வைத்து ஏரணத்தோடு (logic) ஒன்றின்கீழ் ஒன்றாய் தன் தேற்றத்தை (thesis) நிருவித்தால் நின்று உரையாடலாம். அதைவிடுத்து இலக்கியக் காணிப்பையே (literature survey) செய்துகொண்டு இருப்பவரோடு என்னசெய்ய? “இராமா, ஓடிவா, இந்தக் கயிற்றைத் தாவு. ஆங்... தாண்டிட்டான். இப்படித்தான் தாண்டோணும்” என்பதுபோல் இவர்செய்யும் குரங்காட்ட வேடிக்கையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது தான்.] 
 
சங்ககாலத்தில் நாமறிந்து, நம்பி நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற்செழியன் ஆகிய செழியரைப் பார்க்கிறோம். இன்னும் சில செழியரைப் பற்றியுங் குறிப்புகளுள்ளன. ஆனால் அவற்றை முறைப்படுத்தி யார் முன், யார் பின் என்பதில் இன்னுங் குழப்பமிருக்கிறது. நானும் ஆய்வை முடித்தேனில்லை. கொற்கையில் இருந்த தம்பிக்கு வயது 40-45 இருக்கலாம். பஞ்ச காலம். நாட்டிற் பலரும் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்திருக்கும் காலம். நெடுஞ்செழியன்மேற் பலருக்கும் கோவமிருந்தது. வார்த்திகன் காரணமாய் ஒருமுறையும், கோவலன்/கண்ணகி காரணமாய் மறுமுறையும் மதுரையில் கலகம் விளைகிறது. அரசன் உயிர் துறக்கிறான். அரண்மனை எரிக்கப்படுகிறது. (எரிப்பு கண்ணகி கொங்கையின் பாசுபரசால் அல்ல. அது இலக்கிய உருவகம். விவரங்கெட்ட விமரிசரே பாசுபரசா என்று கேலிசெய்வர்.) மேலே கூறிய உரைபெறு கட்டுரை வாசகத்தில் ,”அன்று தொட்டு” என்பதை அரண்மனை எரிக்கப்பட்ட நாளிலிருந்து என்று பொருள்கொள்ளலாம். அடுத்து 2/3 மாதங்கள் நாட்டில் குழப்பம் நிலவியிருக்கலாம்.
 
பஞ்சத்தால் (”பஞ்சமென்று எப்படிச்சொல்கிறீர்?” என்று சிங்கநெஞ்சன் கேட்டார். உரைபெறு கட்டுரையால் தெள்ளெனத் தெரிகிறது.) அடிபட்ட மக்களை ஆற்றுப்படுத்த பொற்கொல்லரைக் கொன்று, களவேள்வி (இச்சொல் ஆழமான குறிப்பு. போருக்கப்புறஞ் செய்யும் வேள்விபோல brutal repression மூலம் கலகத்தையடக்கிச் செய்யப்படும் வேள்வி.) செய்து தன் அதிகாரத்தால் வெற்றிவேற் செழியன் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுகிறான். [தமிழ்வேந்தரை ஏதோ அருளாளரென்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அவரிலும் அறம் வழுவி நின்றவர் பலரிருந்தார்.] 
 
இரண்டாங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பதுபோல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா என்றால், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படியொரு கூட்டக்குறிப்பு இருந்ததாவென்று பார்க்கவேண்டும். [மேலே வணிகரைக்குறிக்கும் சொல்லில் ஐஞ்ஞூற்றுவர் என்பதே சரி. இன்றும் காரைக்குடிக்கு அருகே மாற்றூர் நகரத்தார் கோயிலின் ஈசர் ஐஞ்ஞூற்றீசரென்றே அழைக்கப்படுவார். ஆயிரத்து ஐஞ்ஞூற்றீசரல்ல. திசையாயிரம் என்பது எல்லாத்திசைகளும் என்றே பொருள்கொள்ளும். நானாதேசம் என்பதும் இதே பொருள்தான். அதேபோல ஆயிரவைசியர் என்றொரு கூட்டமுண்டு. 1500 வைசியர் கேள்விப்பட்டதில்லை. நீங்கள்சொன்ன முன்மொழிவு எண்ணிப் பார்க்கவேண்டியது. ஆனால் வேறொரு ஆதாரம் வேண்டும். சமணரில் எண்ணாயிரம், பார்ப்பனரில் எண்ணாயிரம் என்பதையுங் கூட சொற்பொருள் காணாது உட்பொருள் காணவேண்டும். 
     
இனி மூன்றாங் கேள்வியில் ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்பதைப் புரிந்துகொள்ள வஞ்சின மாலைக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.    
 
 
Sent: Tuesday, August 02, 2016 11:52 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அன்பின் இராம.கி ஐயா.. விரிவாக விடையளித்ததற்கு நன்றி.... பல புதிய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது.. வேறு சில ஐயங்களும் உண்டு... விரைவில் கேட்கின்றேன்.

நன்றி.
 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Aug 2, 2016, 9:13:54 PM8/2/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
இப்பொழுது ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்ற கூற்றில் வரும் ”தீத்திறத்தார் யார்?” இந்த 3 ஆம் கேள்வியைப் புரிந்துகொள்ள என் வஞ்சினமாலைப் பதிவைப் பாருங்கள் அதிலிருந்து சிலவற்றை வெட்டியொட்டி, இன்னும் சில வாதங்களையுங் கூடச்சேர்த்து கீழே விடையளிக்கிறேன். (http://valavu.blogspot.in/2015/11/blog-post.html)  . .
 
சிலம்புச்சுவடியில் பெரும்பாலான காதைகளில் யாப்பு எதுவென வெளிப்படும். வஞ்சினமாலையில் அப்படியில்லை. ஆய்வின் மூலமே ஒற்றையடிகளில் நாற்சீரும், இரட்டையடிகளில் முச்சீர் தனிச்சீரும், கடையடியில் இருசீர், ஓரசைச்சீரும் பயின்றுவரும் நேரிசைக் கலிவெண்பாவை அறிகிறோம். ஆழ்ந்து பார்த்தால், 19 இடங்களில் அடிகள் சிதைந்திருப்பதும், சிலவிடங்களில் யாப்புத் தட்டுவதும் கூடப் புலப்படும். பிழைகளோடு இளங்கோ இவற்றை யாத்திருக்க முடியாது. ஓலைக்கட்டின் ஆயுள் 150/200 ஆண்டுகளெனில், உவே.சா.விற்குக் கிடைத்தது 10-14 ஆவது எடுவிப்பாக (edition) இருக்கலாம். இச்சிதைவுகள் அரும்பதவுரை எடுவிப்பிலேயே தென்படுவதால், பெரும்பாலும் 4/5 ஆவது படியெடுப்பில் ஓலைகள் செல்லரித்துப் போயிருக்கலாம். மிஞ்சியவற்றைத் தொகுத்து, தொடரறுந்த இடங்களிற் தோன்றிய சொற்களைப்பெய்து, புது ஓலைப்படி உருவாகியிருக்கலாம். ஆக வஞ்சினமாலையில் இடைச்செருகலுக்குப் பெரிதும் வாய்ப்புண்டு..] கீழ்வரும் 6 அடிகள் செல்லரித்துள்ளன. காட்சி நாடகத் தனமாயிருந்தாலும், எதெல்லாம் இடைச்செருகலென்று சொல்லமுடியாதுள்ளோம். பொருள் சொல்கையில் குத்துமதிப்பாகவே சொல்லவேண்டியுள்ளது..   
 
  ......................................................................- வட்டித்த
  நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
  (---------------------------------------------------)- 
  பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் - கோலத்து
  (----------------------------------------------------)
  மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி
  (-----------------------------------------------------)- 
  மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
  (-----------------------------------------------------)- 
  பாயெரி யிந்தப் பதியூட்டப் பண்டேயோர்
  (-------------------------------------------------------) 
  ஏவ லுடையேனா கியார்பிழைப்பா ரீங்கென்னப்
  (-----------------------------------------------------)-
 
வானத்தில் நீலநிறம் கூடிப்போனது. ஆயினும் செக்கர் வானக்கீற்றுகள் அங்கங்கே இடைகாட்டுகின்றன.. அந்நேரத்தில் வெள்ளைப் பல்கொண்ட பால்நிறத்து பார்ப்பனன் போல் (பார்ப்பனன் = வெள்ளை நிறத்தவன்.) அக்கினி தோன்றி, “பத்தினியே! பிழைநடக்கும் நாளொன்று வரும். அப்போது இந்நகரை எரியூட்டவேண்டுமென முன்னே எனக்கோர் கட்டளையுண்டு. இதில் யார் பிழைக்க வேண்டுமெனச் சொல்” என்கிறான். இதில் அங்கியைப் பார்ப்பனனாய்க் காட்டும் ”பல்புரை வெள்ளெயிற்ருப் பார்ப்பன” என்ற வரியை எடுத்துவிட்டு,
 
......................................................................-வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
----------------------------------------------  - கோலத்து
மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி
 
என்று பார்த்தாலும் குறைவில்லாத பொருள் கிடைக்கிறது. தேவையில்லாமல் அழனிக்கு (அங்கிக்கு/அக்னிக்கு) பார்ப்பனத்தோற்றம் கொடுக்கப்படுகிறதோ என்ற எண்ணமும் எழாமலில்லை. (இப்படி எல்லாத் தெய்வங்களுக்கும் பார்ப்பனத் தோற்றங் கொடுப்பது வேதநெறிப்பட்ட சிவ, விண்ணவ நெறியினரின் பழக்கம்.) ஐம்பூதங்களை உருவகஞ் செய்கையில் ஒரு சமண ஆசிரியன் நெருப்பைப் பார்ப்பனனாகக் காட்டுவானா? உண்மையில் ஐம்பூதங்களை மெய்யியற் கூறுகளாய் ஆக்கியது சாருவாகம்/பூதவாதம், (நிரீச்சுர) சாங்கியம், அற்றுவிகம், செயினம், புத்தம், விதப்பியம் (விஷேஷிஸம்) போன்ற வேதமறுப்பு மெய்யியற்பார்வைகளே. கி.மு.800-கி.பி.250 காலப்பருவத்தில் அவை வேதநெறியை ஆழமாயெதிர்த்தன. குப்தர்காலத்திற்றான் வேதமறுப்புச் சமயங்கள் ஓய்ந்துபோய், வேதநெறி சார்ந்த சமயங்கள் புத்தாக்கம் பெற்றன. உபநிடதங்களுக்குள்ளும் ஐம்பூதச் சிந்தனை வந்தது வெகுநாட்கள் கழித்தேயாகும். இனி வஞ்சினமாலையின் கடைக்காட்சிக்கு வருவோம். இங்கும் பாட்டில் ஓரடியைக் காணோம். எதெது இடைச்செருகலெனச் சொல்லமுடியவில்லை. ”பார்ப்பாரையும், பசுவையும் விட்டுவிடு” என்று புறனடை சொல்வது சங்ககாலத்தில் நடந்திருக்குமா? தெரியவில்லை.
 
  பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
  (------------------------------------------------------------)-
  மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
  தீத்திறத்தோர் பக்கமே சேர்கென்று - காய்த்திய
  பொற்றொடி யேவப் புகையழல் மண்டிற்றே
  நற்றேரான் கூடல் நகர்.
 
பசு என்பது காப்பற்றவேண்டிய விலங்கென நான்படித்தவரை எந்தச் சங்க இலக்கியமுஞ் சொல்லவில்லை. கி.பி. 400 களுக்கப்புறம் வேதநெறி கலந்த சமயங்களால் புராணங்கள் எழுந்தபோது தான் அச்சிந்தனை வந்தது.. ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் பெரும்பாலும் இங்கு இடைச்செருகலுண்டு. எப்படி இத்தனைபேரைவிட்டு மற்றவரைமட்டும் நெருப்பு சூழமுடியுமென்பதும் பகுத்தறிவிற்குப் புறம்பாய்த் தெரிகிறது. ஏரணமுறைப்படி ஓர்ந்துபார்த்தால் இந்த அடிகளிற் சில கேள்விகள் எழுகின்றன.
 
பார்ப்பார் முதலில் வருவதால், தீத்திறத்தோருக்கு ”வேள்விசெய்தோர்” என்று பொருள்கொள்ளமுடியாது. அப்படிக்கொண்டால் கூறியது கூறலாகிவிடும். ”தீத்திறத்தார்” என்பதற்கு. இவ்விடத்தில் ”தீவினைசெய்தோர்” என்று பொருள்கோடலே சிறந்ததாய்த்தோன்றுகிறது. தீவினையாளருக்கு எதிர் நல்வினையாளர்தானே? ”நல்வினையாளரைக் கைவிட்டுத் தீவினையாளர்பக்கம் சேர்க” என்றபொருள் சரியாகவே பொருந்துகிறது. நல்வினையாளர் வகையை ”அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி”யென விரிப்பதும் சரிதான். ஆனால், மாந்தர்வரிசைக்குள் பசு ஏன் வந்தது? (தொல்காப்பியம் மரபியலிலும் விலங்கு வரிசையில் முன்னுக்குப்பின் முரணாய் வருண வரையறைகள் வரும். அவற்றையும் இடைச்செருகலென்றே ஆய்வாளர் கணிப்பர்.) மற்ற விலங்குகள் இங்கு ஏன் வரவில்லை?
 
“காவிரியின் சோமகுண்டம், சூரிய குண்டம் எனும் பொய்கைகளில் (இப்பொய்கைகளை நினைவுறுத்தி இன்றும் காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகிலுள்ள பட்டினத்தார் தலமான திருவெண்காட்டுச் சிவன் கோயிலில் சோமதீர்த்தம், சூரியதீர்த்தம் உண்டு.) நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரோடு கூடி இன்புற்று, மறுமையிலும் போகபூமியிற் பிறந்து கணவனைப் பிரியாது இருப்பர்” என்றுசொன்ன தேவந்திக்கு ”அப்படிச்செய்வது எமக்குப் பீடன்று” என்று சமயஞ்சார்ந்து மறுமொழிசொன்ன ஒரு சமணத்தி ”பசுவைக் காப்பாற்று” என்று ஒற்றையாய்ச் சொல்வாளா? அன்றி ”எல்லா விலங்குகளின் உயிரையுங் காப்பாற்று” என்பாளா? தவிர, அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி என்ற பொதுப்படை மாந்தப்பிரிவு இருக்கையில் பார்ப்பனரென்ற வருணப்பிரிவு ஏன் உள்ளேவந்தது? பார்ப்பாரைக் காப்பாற்றச்சொல்லி எந்தச் சமணவழிகாட்டலும் இல்லையே? பொதுப்படைக்கும், வருணத்திற்குமான வேறுபாடு சிலம்பாசிரியருக்குத் தெரியாதா, என்ன? வேதம் முறைசெய்யும் பார்ப்பனரோடு வேதமறுப்பு வழக்காடும் சமண ஆசிரியன் (காடுகாண் காதையில் கவுந்தி மாங்காட்டுப் பார்ப்பானோடு வழக்காடி வேறுபாதை எடுப்பதைக் கவனியுங்கள்) ”பார்ப்பனருக்கு விலக்குக் கொடு” என்று சொல்வானா?
 
தவிரப் பெண்டிருக்குப் பெயரடையாய்ப் ”பத்தினி” வருகையில், அறவோருக்குப் பெயரடையாய் முதற்சீர் வந்ததை மாற்றி இடைச்செருகலில் ”பார்ப்பாரெ”னப் பதமாற்றம் நடந்ததோ?.(புறம் 34 ஆம் பாடலைப் பதிப்பிக்கையில் “குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்ற சரியான பாடம் இருக்கையில், அதையெடுக்காது “பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்” என்று பாடத்தைப் பதிப்பித்த குழப்பங்களும் தமிழிலுண்டு. பதிப்பிப்பில் இரண்டும் இருவேறு பார்வைகள். ”குரவருக்கான” சுவடியைக் கண்டுபிடிப்பதில் ஏராளம் தேடுதல்களும், வாக்குவாதங்களும் நடந்துவிட்டன. ”அதுபோன்ற திருகல்கள் வேறிலக்கியங்களில் நடந்தனவா?” என இன்றுந்தெரியாது.) பார்ப்பாரெனும் தேமாச் சீரை எடுத்து அறவோருக்குத் தேமாச் சீர் அடையையும், ”பசுப்” என்ற நிறையசையை எடுத்துவிட்டு பத்தினிப் பெண்டிருக்கு இன்னொரு நிரையசையை முன்னொட்டாய்ப் போட்டாலும் பொருள் சீராகவேவரும். ஆகப் பார்ப்பார், பசு என்ற சொற்கள் இடைச்செருகலெனும் ஐயம் என்னுள் வலுக்கிறது.  
 
We should be true to the original authors. We cannot insert our individual religeous perceptions into Ilango's mouth. ஆய்வின் படி பார்த்தால், இப்போதுள்ள வஞ்சினமாலையின் கடைசி 5 வரிகள் சமண நெறியாளரின் கூற்றை உணர்த்தவில்லை. ஏதோ ஒரு நுணுகிய மாற்றஞ் செய்யப்பட்டிருக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, August 03, 2016 1:21 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
​அன்பின் இராம.கி ஐயா,
நன்றி.

”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” என்னும் கொலைக்களக்காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோவேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவரவந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக்கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையிலிருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதேபொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மையிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப்பட்டதும் உண்மை. சிலபோது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநனாகலாம்.
இளங்கோ வேந்தன் வெற்றிவேற் செழியனாக இருக்க வாய்ப்பில்லையா?

செழியனின் இளங்கோ மாறன் .. மாறனின் இளங்கோ செழியன் என்பதுதான் நடைமுறையா? செழியனின் இளங்கோ செழியனாகவியலாதா?

இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தாளிற் காணான்

இந்த நிகழ்ச்சி பழைய நிகழ்ச்சியாக இருக்கலாமல்லவா?




---------


இரண்டாங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பதுபோல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா என்றால், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படியொரு கூட்டக்குறிப்பு இருந்ததாவென்று பார்க்கவேண்டும்.
 
இதையும் பாருங்கள் ஐயா.
நீர்ப்படைக் காதை
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல்காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;

---------
மேலும் சில கேள்விகள்.
10.
​​
காட்சிக் காதை - சேரனுக்கு வாழ்த்து
​வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழி யுலகங் காக்கென

கால்கோள் காதை - சேரனுக்கு வாழ்த்து
வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற
.....
செங்கோல் கொற்றத்து
அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க!

நீர்ப்படைக் காதை - சேரனுக்கு வாழ்த்து
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என-

வரந்தரு காதை - சேரனுக்கு வாழ்த்து
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
நீடு வாழியரோ, நெடுந்தகை!’ என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-


காடுகாண் காதை - பாண்டியனுக்கு வாழ்த்து
வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க!​
-----------
ஊழி என்பது 2150 ஆண்டளவில் வரும் என முன்பே கூறியிருந்தீர்கள். சேரனுக்கு ஒருவாறும் பாண்டியனுக்கு ஒருவாறும் கூறுவது எதற்காக?
பாண்டியன் : ஊழிதொறு ஊழிதொறு உலகம்
சேரன்: ஊழிதொறு ஊழி உலகம்
இதிலிருந்து ஏதாவது அறியமுடியுமா?

11.
கட்டுரை காதையில்
கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு எனக் கூறும் கண்ணகி மதுரைக்குள் போகும் வாயில்
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்

வாயில் எனக் கூறப்படுகின்றது..

ஆனால் கோவலன் செல்லும் வழி
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி
கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்-

சுருங்கை என்பது சுரங்கப்பாதையா? கோவலன் யவன காவலர்களுக்குத் தெரியாமல் சுரங்கப்பாதையால் செல்வதாயின், அதைப்பற்றித் தெரிந்த யாரேனும் உதவியிருக்கவேண்டுமே?


நன்றி,
முகுந்தன்

iraamaki

unread,
Aug 6, 2016, 11:31:29 PM8/6/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
"காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாவதாய் ஒரு குறுக்குக்கேள்வி எழுந்தது: இதற்கானவிடை சற்றுநீளமானது. அதைச் சொல்லுமுன் சங்ககாலச் சேரர்வரலாற்றையும், அதற்குதவியாய் இணையத்திலுள்ள மகத அரசர் காலங்களையும் சற்று ஆழமாய்ப் பார்க்கவேண்டும்.
 
சிலப்பதிகாரக் காலத்தில் வடக்கே மகத அரசே பேரரசாய் இருந்தது. (என் ”சிலம்பின் காலம்” நூலையும் படியுங்கள்.) மகதத்தோடு பொருதாதவன் அந்தக்காலத்தில் வடக்கே மேலெழ முடியாது. அல்லாவிடில் மகதத்திற்கடங்கிக் கப்பங்கட்டவேண்டும். தெற்கிருந்து படையெடுத்துப் போனவன் (இந்தப் படையெடுப்பை இதுவரை எந்த வடவரும் ஏற்றதில்லை. பாகதச் சான்றுகள்  ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. வெறுமே “தமிழ் வாழ்க” என்று கூப்பாடு போடுவதிற் பயனில்லை. சிலப்பதிகாரத்தைச் சரியாய்ப் பொருத்தித் தேடவேண்டும். இல்லாவிட்டால், 5/6 ஆம் நூற்றாண்டுப் புதினம் என்று சொல்லித் திரியவேண்டும்) மகதத்தைச் சண்டைக்கிழுக்காது தமிழன் போய்வந்தானென்பது ஒரு கட்டுக்கதையாகிவிடும் ”இளங்கோ வடிகட்டிய பொய்சொல்கிறார்” என்று கருதவில்லையெனில், கதைக்காலம் மகதத்தோடு பொருந்த வேண்டும்.
 
கதையை 5, 6 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் வஞ்சிக்காண்டத்தையே மறுக்கிறார். “எல்லாமே கப்சா, இதுவொரு புதினம்” என்பார் ஒருநாளும் வஞ்சிக்காண்ட முகன்மை புரிந்தவர் இல்லையென்று பொருளாகும். அவர் தமிழரை இழிவுசெய்கிறாரென்பது இன்னொரு ஆழமானபொருள். அப்படிமறுக்கிறவர் ”சேரன் யாரோடு போர்செய்திருப்பான்?” என்பதை ஆதாரத்தோடு சொல்லவேண்டும். இளங்கோவென்ற எழுத்தாளர் கற்பனைக்கதை சொல்லியிருந்தால், மதுரைக்காண்டத்தோடு முடிப்பதே சரியான உச்சகட்ட உத்தியாகும். அதற்கப்புறம் காதையில் ஓரிரு காட்சிகளைச் சொல்லி “சுபம்” என முடித்திருக்கலாம். (அப்படியே சிறுவயதில் இரவெலாம் நான் விழித்துபார்த்த 15 நாள் கண்ணகி கூத்துக்கள் நடைபெற்றன. இக்கூத்துகளை 3,4 முறை பார்த்திருக்கிறேன். கோவலன் கதையெனும் நாட்டுப்புறக் கூத்துப்பாட்டும் அப்படித்தானிருக்கும். வஞ்சிக்காண்டமிருக்காது.)
 
ஒருகதையை எங்கு முடிக்கவேண்டுமென்பதற்கு உளவியல்தொடர்பாய்க் கதையிலக்கணமுண்டு. அக்கதையிலக்கணம் மீறிச் சிலப்பதிகாரமுள்ளது. கண்ணகி பாண்டியனைப் பழிவாங்கியதும் மதுரையை எரித்ததும் சிலம்பின் முடிவல்ல. மதுரைக்காண்டத்தில் முடிவது சிலம்பு அணிகலனின் அதிகரிப்பால் வந்தது. வஞ்சிக்காண்டத்தில் முடிவது சிலம்பெனும் மலையரசின் அதிகாரம். அது வடக்கேபோய் வெற்றிகொண்டு தமிழகத்திற் தன்னைப் பேரரசனாய்க் காட்டிக்கொள்கிறது. அதனாற்றான் சிறைப்பிடித்த ஆரியவரசரை மற்றவேந்தருக்குக் காட்டச்சொல்கிறான். சிலம்பென்ற சொல்லிற்கு காப்பியத்தில் இருபொருளுண்டு. ”இளங்கோ வஞ்சிக்காண்டத்தை ஏன் தன்நூலில் வைத்தான்? அதிலென்ன சொல்லவிழைகிறான்? உட்கருத்தென்ன? ஒரு காட்சி, காதை, காண்டம் நூலில் ஏன் வருகிறது?” என்பதே கட்டுக்கதைக்கும், காப்பியத்திற்குமான வேறுபாடு.
 
சிலம்பில் வரும் ஆரியவரசர் பெரும்பாலும் மகதத்திலும், மகத்தைச் சுற்றியுமிருந்தவரே. வடக்கென்றவுடன் நம்மையறியாது தில்லியையும், தில்லிக்கு வடமேற்கையுமே எண்ணிக் கொள்கிறோம். அது பிற்காலப்பார்வை. பழங்காலத்தில் வடக்கென்பது வாரணாசி, பாடலிபுத்தம் சுற்றிய பகுதிகளே. சங்ககாலத்திற் கங்கையே வடக்கின் வற்றாத ஊற்று பாடலிபுத்தத்தை தக்கசீலத்தோடு உத்தரப்பாதையும், தென்னாட்டோடு தக்கணப்பாதையும் கலிங்கத்தோடு கடற்கரைப்பாதையும் இணைத்தன. மூன்றாம்பாதை அக்காலத்தில் தமிழகத்தை இணைக்கவில்லை. பெரும்பாலான பயணங்கள், படையெடுப்புக்கள் உத்தர, தக்கணப்பாதைகளின் வழியே நடந்தன. இற்றை அவுரங்காபாதிற்குத் தெற்கே கோதாவரி வடகரைப் படித்தானத்தில்> பயித்தான்> பைத்தான்) தக்கணப்பாதை முடிந்தது. மோரியருக்கான தண்டல் நாயகராய் படித்தானத்திலிருந்து, பின்பு ஆளுநராகவும் மன்னராகவும் நூற்றுவர்கன்னர் (சாதவாகன்னர்) மாறினார். நூற்றுவர்/ சாத்துவருக்கு, நொறுக்குவரென்ற பொருளுண்டு. நூறென்ற எண்ணிக்கைப் பொருள் கிடையாது. சிலம்புக்காலத்தில் நூற்றுவர் கன்னரும், அவருக்கு மேலிருந்த மகதக் கனக அரசரும் வலியிழந்திருந்தார்.
 
மொழிபெயர்தேயக் கருநாடக, வேங்கடத்தின் (காடுவிரவிய வேகுங்கடத்தில் மக்கள் வதிவது மிகக்குறைவு) வழி தகடூர் ஊடே மூவேந்தர் நாட்டிற்கு தக்கணப்பாதையின் தொடர்ச்சி இருந்தது. Puls there was a standing Tamil army to protect the language changing country as per Maamuulanaar. மொழிபெயர்தேயத்தைத் ”திராமிரசங்காத்தம் 1300 ஆண்டுகள் காப்பாற்றியதென்றும், தானே சங்காத்தத்தை உடைத்ததாயும்” கலிங்கக் காரவேலன் தன் கல்வெட்டிற்குறிப்பான். மொழிபெயர் தேயத்தை ஒட்டியதால் நூற்றுவர்கன்னர் நாணயத்தின் ஒருபக்கம் தமிழும், இன்னொரு பக்கம் பாகதமும் இருந்தது. நூற்றுவர்கன்னர் தாம் சுருங்கிய காலத்தில் ஆந்திர அமராவதிக்குத் தலைநகரை மாற்றிக்கொண்டார். நூற்றுவர்கன்னர் தொடங்கியது படித்தானம்; முடிந்தது அமராவதி. கன்னருக்குப்பின் படித்தானத்தில் கள அப்ரர்>களப்ரர் அரசேறினார். பின்னாளில் அவரே மூவேந்தரைத் தொலைத்தார். (களப்ரர் என்கிறோமே, அவர் இவர்தாம்.) சங்ககாலத்தில் தொண்டைநாட்டிற்கு மேல் கலிங்கம்வரை கடற்கரை தவிர்த்திருந்தது தொண்டகக் காடு (>தண்டக ஆரண்யம்) எனவாயிற்று. பின் இக்காடழிந்து இற்றை ஆந்திரமானது. காடழித்த காரணத்தால் பல்லவருக்குக் காடவர்/ காடுவெட்டி என்ற பெயர்வந்தது.
      .
தகடூரிலிருந்து வயநாடு வழியாகக் குடவஞ்சிக்கும், கொங்குவஞ்சி வழியாக உறையூருக்கும், பொதினி (பழனி) வழியாக மதுரைக்கும் பாதைகளிருந்தன. (இன்றும் பாதைகள் இப்படித்தான்.) குறிப்பிட்ட இக்கூட்டுச்சாலைகள் இருந்ததாலேயே அதியமான்கள் வடக்கே அறியப்பட்டார். காரணமின்றி அசோகன் சத்தியபுத்திரரைச் சொல்லவில்லை. மகதத்திலிருந்து தமிழகம் வர தகடூரின் அதியமானைத் தாண்டி வரமுடியாது. இன்று சிங்கப்பூரை மீறி இந்தியப்பெருங்கடலிலிருந்து பசிபிக்பெருங்கடலுக்குள் எந்தக்கப்பலாவது போகமுடியுமா? அதன் தடந்தகை இருப்பாற் (strategic existence) சிங்கப்பூர் பெரிதாகப் பேசப்படுகிறது. அப்படியேதான் தகடூரின் இருப்பு தமிழகத்திலிருந்து வடக்கே போவதற்கு இருந்தது.
 
(சங்கப்பாடல்களில் பாதிக்குமேல் பாலைத்திணைப் பாடல்கள். அவற்றிற் பெரும்பகுதி வணிகத்திற்போன செய்திகள்தான். வணிகரெல்லாம் எங்குதான் போனார்? முடிவில் எல்லாமே மகதத்திற்குத்தான். அதேபோல மகதத்திலிருந்தும் தமிழகம் வந்தார். அவருக்கு வேண்டிய பொன் (வடகொங்கிற்-பிற்காலத் தென்கருநாடகம்-கிடைத்தது. எவன் கொங்கைக்கவர்ந்தானோ அவனே தமிழரிற் பெருவேந்தன்.), மணிகள் (தென்கொங்கிற் கிடைத்தன. கொங்குவஞ்சி இதனாலேயே சிறப்புற்றது.), முத்து (நித்தில்>நிதி என்றசொல் முத்திலெழுந்தது. பாண்டிநாடு முத்திற்குப் பெயர்போனது), பவளம் (சோழநாட்டிற் கிடைத்தது.) இன்ன பிற செல்வங்கள் (குறிப்பாய்ச் செலாவணிச் சரக்குகள்-exchange goods) கிடைக்கவேண்டுமெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வராது முடியாது. எந்த நாடு செலாவணிச் சரக்குகளை அதிகம் கொண்டதோ, அதுவே அக்கால வணிகத்தில் வென்றது. மகதத்தைவிடச் சிறுபரப்பே கொள்ளினும், செலாவணிச் சரக்குகளால் தமிழர் அக்காலத்தில் தனிப்பெரும்நிலை கொண்டார்.
 
இவ்வணிகத்திற்குக் கொங்குவஞ்சியும், தகடூரும் முகன்மையாயிருந்தது உண்மைதான். அதையாரும் மறுக்கவில்லை. தொல்லியல் வெளிப்பாடுகள் அதைத்தான் காட்டின. மணிகளுக்கும், மாழைகளுக்கும் கொங்குமண்டலம் பெயர்பெற்றது. அதைவைத்துச் ”சேரர்தலைநகரே இங்குதான் இருந்தது” என்பது சற்று அதிகம். வானத்திற்கும் புவிக்குமாய் கோட்டைகட்ட முயல்வதாகும். கொங்குவஞ்சி என்றுமே குடவஞ்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வேண்டுமென்றே கொங்குவஞ்சியைத் தூக்கிப்பிடிப்பவர் ஆய்வின்றிப் பேசுகிறார். (ஒவ்வொருவரும் தம் வாழிடங்களைத் தூக்கிப்பிடிப்பதற்காய் ஏரணத்தைத் தூக்கிக் கடாசுவது பொருளற்றது. ”திருச்சியிலிருந்து மதுரைக்கு காரைக்குடி வழியேதான் எல்லோரும் போனார்” என்றுநான் சொன்னால் பலருஞ் சிரிப்பார். விராலிமலை வழிதான் குறைத்தொலைவுப் பாதை என்பது உள்ளமை நடைமுறை. மக்கள் மதிப்பார்.) கொங்குவஞ்சி வாணிகத்தில் தகடூரோடு தொடர்புற்றது இயற்கையே. ஆனால் சிலம்பை ஆழப்படித்தால் குடவஞ்சியின் சிறப்புப் புரியும். (கொஞ்சம் பொறுக்கவேண்டும். இப்பொழுதுதானே 4,5 ஆண்டுகள் முன்னே தொல்லியலார் முசிறிப்பட்டணத்தைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து சிறுதொலைவிற் குடவஞ்சி கிடைத்துவிடும்.)
 
இனி மகதத்தின் பல்வேறு அரசர் காலங்களுக்கு வருவோம்.
 
அலெக்சாண்டர் இந்தியாவின்மேற் படையெடுத்தது பொ.உ.மு.327/326 என்பர். (இது ஒரு வரலாற்று முற்றைப் புள்ளி. இதைவைத்தே இந்தியவரலாற்றைக் கணிக்கிறார்.)
 
சந்திரகுத்த மோரியன் காலம் பொ.உ.மு.321 - 297 (இவனுக்கு முந்தைய நந்தர் காலத்தைக் குறிக்கும் சங்கப்பாடல்களும் உண்டு. குறிப்பாய் மாமூலனார் பாடல்கள். சங்க இலக்கியத்தை ஒழுங்காகப் பொருத்தாத காரணத்தால் சங்ககாலத் தமிழர் வரலாற்றை, இன்றுங்கூடத் தப்பும் தவறுமாய்ப் புரிந்துகொள்கிறோம். கமில் சுவலபில் கணிப்பிலிருந்து வெளியே வந்தாலொழிய இது புரியாது.)
 
பிந்துசார மோரியன் காலம் பொ.உ.மு. 297 - 273 (இவன்தான் தென்னகத்தின் மேல் படையெடுத்தவன். இவன் படையெடுப்பைப் பற்றிச் சுற்றிவளைத்துச் சங்கப்பாடல்கள் உண்டு. தமிழ் மூவேந்தரைத் தோற்கடிக்க முடியாமல் இவன் படைகள் திரும்பிப் போயின.)
 
தேவானாம்பியதசி அசோகன் காலம் பொ.உ.மு. 268 - 232 (இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4 ஆண்டுகள் ஒரே குழப்பம் மகதநாடு வேந்தனில்லாது இருந்தது. கணக்கின்றித் தன் சோதரரைக்கொன்றே அசோகன் பட்டத்திற்குவந்தான். இந்தியவரலாற்றில் முகன்மையான மன்னன். தமிழ்மூவேந்தரின் இருப்பையும் அதியமான்களின் இருப்பையும் தன் கல்வெட்டுக்களிற் பதிவுசெய்தவன். இவன் செய்த கோத்தொழில் தமிழ்மூவேந்தரால் பாராட்டப்பட்டது போலும். ஏனெனில் தேவானாம்பியதசி என்ற பட்டம் அப்படியே தமிழாக்கப்பட்டுச் சேரருக்கு முன்னொட்டாக்கப் பட்டதென்பார். மயிலை சீனி வேங்கடசாமியார். இமையவரன்பனென்பது திரிந்து இமையவரம்பனாகிப் பின் ”இமையத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. அதேபோல; வானவரன்பனும் வானவரம்பனாகி ”வானத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது.. இமையவரம்பனும், வானவரம்பனும் மாறிமாறி சேரருக்கு முன்னொட்டாயின. தேவானாம்பிய என்ற பாகத முன்னொட்டை இலங்கையரசன் தீசன் அப்படியே வைத்துக்கொண்டான். சேரரோ அதைத் தமிழ்ப்படுத்திச் சூடிக் கொண்டார். There must have been a mutual admiration society. வேதநெறியும், சிவநெறியும், விண்ணவநெறியும், வேதமறுப்பு சமயங்களும், பல்வேறு மெய்யியல்களும் விரவிக் குடவஞ்சியில் சமயப்பொறை இருந்தது சிலம்பாலும் மேகலையாலும் தெரிகிறது. வேதமறுப்புச் சமயங்களை ஆய்ந்தாலொழிய தமிழர் வரலாறு புரிபடாது.)
    
தசரதன் காலம் பொ.உ.மு. 231 -224 (இவன் அசோகனின் முதல் மகனல்லன். அடுத்தமகன். அசோகனின் இரண்டாவது அரசி முதல்மகனைச் சதி தீட்டிக் கொன்றுவிடுவாள். எப்படி இராசேந்திர
சோழனுக்கு அப்புறம் ஒவ்வொரு மகனும் ஏதோவகையில் கொல்லப்பட்டு சோழர் குடிவழியழிந்து தெலுங்குச் சோழராட்சி ஏற்பட்டதோ, அதேபோல ஆழமான சூழ்ச்சி அசோகனின் மகன்களுக்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு புத்தம், அற்றுவிகம், செயினங்களுக்கு நடுவே இந்தக் கொலைகளும் அசோகனுக்குப்பின் நடந்தன. வரலாறு மருமமானது.)
 
சம்பாதி காலம் பொ.உ.மு. 224 - 216 (இவனும் அசோகனின் மகன். தசரதன் இருக்கும்போதே இவன் ஒருபக்கம் ஆளுநனாய் இருந்து பின்னால் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொள்வான்.)
 
சலிசுகா காலம் பொ.உ.மு. 215 - 202 (இவன் சம்பாதியின் மகன்)
தேவ வர்மன் காலம் பொ.உ.மு.202-195
சடாதன்வன் காலம் பொ.உ.மு.195-187
 
பெருகதத்தன் காலம் பொ.உ.மு.187-185 (இவனைத்தான் சேனையதிபதி சுங்கமித்திரன் கொலைசெய்து தன்குடியை மகத அரசிலேற்றினான். இந்தப் பிரகதத்தனுக்குத் தான் பெரும்பாலும் கபிலர் குறிஞ்சிப்பாட்டைச் சொல்லியிருக்கலாமென ஊகிக்கிறோம். கபிலர் போன்றவர் ஒரு குறுநில மன்னனுக்காகக் குறிஞ்சிப்பாட்டை பாடினாரென்பது ஐயமாக உள்ளது. சேர, சோழ, பாண்டியருக்கு இணையான வேந்தர் அக்காலத்திற் சிலரே இருந்தார். மகதமே எல்லாவற்றிற்கும் தலைமையானது. அந்தப் பெருகதத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டு சொல்லுவது கபிலருக்கு நன்மை பயக்குமல்லவா?)
 
இனி சுங்கருக்கு வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்

iraamaki

unread,
Aug 7, 2016, 8:38:52 PM8/7/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
"காட்சிக்காதை 163 ஆம் வரியில்வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று 4 ஆவதாய் ஒரு குறுக்குக்கேள்வி எழுந்தது: முன்கொடுத்த விடையின் தொடர்ச்சியிது. இதில் சுங்க அரசக் குடியினரையும் கனக அரச குடியினரையும் பார்க்கப்போகிறோம்.
 
புஷ்யமித்ர சுங்கன் காலம் பொ.உ.மு. 185-149 (பெருகதத்த மோரியன் ஒரு படையணி வகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சூழ்ச்சியால் அவனைக்கொன்று, அவனிடம் சேனைத் தலைவனாயிருந்த புஷ்யமித்திரன் ஆட்சிக்கு வந்தான். அவந்தியின் பெருமானர் குலத்தைச் சேர்ந்த இவன்தான் இந்தியாவில் வேதமறுப்புச் சமயங்களின் ஆளுமையைத் தடுத்துநிறுத்தி, வேதநெறிக்கு முன்னுரிமை கொடுத்து, மீண்டும் தழைக்கவைத்தவன். இவனையும், இவன்மகனையும் வேதநெறியார் சிறப்பாகவே கருதியிருக்கவேண்டும். ஏனெனில் குப்தர்காலத்திய அரசவை இவரைப் போற்றியிருக்கிறது. புஷ்யமித்ரன் காலத்தில் புத்தமதம் ”மத்தியதேசத்தில்” இல்லாதுபோய், வடமேற்கே இற்றை ஆப்கனித்தானுக்குத் துரத்தப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் அதேபொழுது வேதமறுப்புச் சமயங்களுக்கான ஆதரவை இவன் முற்றிலும் நிறுத்திவிடவில்லை. இந்த அரசனின் ஆளுமை நருமதையாறு வரைக்கும் இருந்தது.)
 
அக்னிமித்ரன் காலம் பொ.உ.மு. 149-141 (இவன் புஷ்யமித்ரனின் மகன். வேதநெறியைத் தூக்கிப்பிடித்த பிற்காலக் குப்தர்களின் அவைசேர்ந்த காளிதாசர் எழுதிய ”மாளவிகாக்னிமித்ரம்” நாடகத்தின் நாயகன் இவனே. புஷ்யமித்ரனின் நடவடிக்கைகளுக்கு இவனும் பொறுப்பானவன். வேதநெறிக்கு மறுமலர்ச்சி கொடுத்தவனென்பதால் இவன் காளிதாசனின் நாயகன் ஆனானோ, என்னவோ? ) 
 
வசுஜ்யேஷ்டன் காலம் பொ.உ.மு. 141-131
வசுமித்ரன் காலம் பொ.உ.மு. 131-124
பத்ரகன் காலம் பொ.உ.மு. 124-122
புலிந்தகன் காலம் பொ.உ.மு. 122-119
வஜ்ரமித்ர
 
பாகபத்ரன் (இவன் காலத்தில் மகதம் ஆட்டங்கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்குதான் அசோக மோரியன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சிபுரிவார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் கொஞ்சங்கொஞ்சமாய்ச் சுருங்கியது. மகதப்பகுதிகளைக் கவர்ந்துகொள்ள கலிங்கர், நூற்றுவர்கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசரென்று பலரோடு சண்டைகள் தொடங்கிவிட்டன. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயி” இலக்கணத்திற்கு பதஞ்சலி மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம்) சுங்கர்கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சிமுடிவில் நூற்றுவர்கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயலத்தொடங்கிவிட்டார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறூத்தது இயற்கையே. இக்காலத்தில் தான் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சேரன் வந்துள்ளான். அவன்தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். சிலம்பில் 2 படையெடுப்புகளும் குறித்துக் காட்டப்படுகின்றன.
 
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்”
 
இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகள் நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசியாய் இருக்கும். இன்றும் தெற்கிலிருந்து அலகாபாத், கயை, வாரணாசி போயாடுவதில் அளவற்ற ஆர்வங்கொள்கிறோமே? அது அன்றும் நடந்திருக்கலாம். சேரன் சிவநெறியாளன். விண்ணவப் பெருஞ்சோற்றை (ப்ரசாதம் என்று சங்கதப்படுத்துவர். அதையே சொல்லி நம் தமிழ்ப்பெயரை மறந்துவிட்டோம்.) தலையில் வாங்கமறுத்தவன். தோளிலேற்க ஒருப்பட்டவன். மகதக்குழப்பதிற் தான்புகுந்து விளையாட முடியும் என்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையை தன் அரசமுயற்சிக்குப் பயன்படுத்தினான். (வடக்கிலிருந்து intelligence information வந்ததும் வஞ்சிக்காண்டத்திற் சொல்லப்படும்.) There must have been an empire building politcs with these expeditions. We should not be very naive to these aspects. Cheran was as intelligent as our modern leaders are.  
 
தேவபூதி காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்க அரசன். அளவுக்கு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இந்த அரசனை இவனுடைய முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்றுவிடுவான். அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதி என்ற பெயரும் இருந்திருக்கலாம். பாகதச் சான்றுகளைக் கொண்டு அதை உறுதி செய்யவேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்லமுடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயமாய் எழுகிறது.
 
செங்குட்டுவன் பொ.உ.மு.80 இல் படையெடுத்து வரும்போது பெரும்பாலும் இவ்வரசனுடன் போர்புரிந்திருக்கலாம். மகதம் தமிழர்க்குப் பகைநாடு என்பதை இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்” என்ற வரிகள் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கப்புறமே ”யாரைநோக்கிச் செங்குட்டுவன் படை எடுத்திருப்பான்?” என்பது எனக்கு விளங்கியது. மகதம் பற்றிப் படிக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு கட்டமாய்ச் செருகி உராய்ந்துபார்க்க உள்ளிருக்கும் படம் விளங்கிற்று. செங்குட்டுவனின் படைபலம் தெரிந்து அவனைத் தம் கைக்குள் வைத்து அவன்மூலம் மகத அரசிற்கு ஊறுவிளைவித்துப் பின் தாம் கைப்பற்றிக்கொள்ள முற்பட்டே நூற்றுவர்கன்னர் சொங்குட்டுவனுக்கு உதவியிருக்கிறார். ”இமயத்திலிருந்து பத்தினிக்குக் கல்லெடுக்க நீங்கள் போகவேண்டுமா? நாங்கள் செய்யமாட்டோமோ?” என்பதெல்லாம் சரியான அரசதந்திரம் (tactics). தடந்தகை (strategy). தவிர நூற்றுவர்கன்னருக்கும் சேரருக்கும் நெடுநாள் உறவு இருந்திருக்கலாம். புறம் 2 இல் சேரமான் பெருஞ்சோற்று உதியன்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது, ”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்தொழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக்குறிக்காது நூற்றுவர் கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு. புறம் 2 பற்றிய கட்டுரையை என் வலைப்பதிவில் பாதிவரை எழுதி முடிக்காதுவிட்டேன்.    
 
தவிர, செங்குட்டுவன் படையெடுப்பின்போது பெயருக்கு தேவபூதி மகத அரசனாயிருந்து கட்டுப்பாடெலாம் முதலமைச்சனிடமே இருந்திருக்கலாம். சேரன் போரிறுதியில் பிடித்துப்போனது வசுதேவக் கனகனா, அன்றி அவன் தந்தையா என்பது தெரியவில்லை. ஆரியஅரசர் என்போர் மகதங் காக்க இவனுக்குப் பின்னிருந்தோராவர். அவர் ஆயிரம்பேர் என்பது ஒருவித பேச்சுவழக்கு. “இவனுக்குப் பின்னால் ஆயிரம்பேர் நின்றார் தெரியுமா?” என்று இன்றும் உரையாடலிற் சொல்கிறோமில்லையா? அதைப்போல் இதைக் கொள்ளவேண்டும். உறுதியான எண்ணிக்கையென்று கொள்ளக்கூடாது.) 
 
கனக அரச குடியினர் (இவரைக் கனவர் என்றுஞ் சொல்லலாம். பொதுவாக வடவரின் பெயர் அப்படியேவா நமக்கு மட்டுப்படுகிறது? கன்வன் என்று பிராமியில் எழுதுவது கனவன் என்றே தமிழியிற் படிக்கப்படும். வகரமும் ககரமும் தமிழிற் போலிகள் நாவற்பழம் நாகற்பழம் ஆகிறதே? எனவே கனவன் கனகனாவது இயற்கையே.)
 
வசுதேவன் காலம் பொ.உ.மு.75-66 (விசயன், வசுதேவனென்று பெயர்வைப்பது மகாபாரதத் தாக்கத்தால் இயல்பாயிருந்தது. கனக அரசர் விண்ணவப் பெயரையே கொண்டிருந்தார். சிங்கள அரசன் விசயனின் மகன் வசுதேவன் என்பதையும் இங்கு எண்ணிப்பார்க்கவேண்டும்..சிலம்பில் கனகன் விசயன் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் என்பதுபோல், இனக்குழுப்பெயர் முதலிலும், இயற்பெயர் முடிவிலும் வந்திருப்பதாய்க் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர் இது புரியாது கனகன், விசயன் என்று இரண்டு பெயராகவே சொல்லித் தருவர். இதுவென்ன குப்பன், சுப்பன் போலவா? சேரன் ஒருவன், செங்குட்டுவன் இன்னொருவனா? சிறைப்பிடித்துவந்த ஆரிய அரசர் எல்லோரையும் கண்ணகி கோயில் குடமுழுக்கின் போது சேரன் விட்டுவிடுவான். எனவே அதற்கப்புறம் வசுதேவக் கனகனோ, அன்றி அவன் தந்தையோ வடக்கே விதிசா/பாடலிபுத்தம் போய் தேவபூதியைக் கொன்று கனக அரசை நிறுவ முயற்சி செய்திருக்கலாம்.
 
பாகதச் சான்றில்லாமல் சிலம்பாற் கொண்ட கருதுகோள்களை நிறுவிக்க இயலாது. சுங்க, கனக அரசரின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னுங் கிடைக்கவில்லை. பாகத நூல்கள் குறைந்தே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. சங்கத நூல்களே எங்குபார்த்தாலும் இழைகின்றன. மோரியர் வரலாறு எழுதினால், அதற்கப்புறம் குப்தர் வரலாற்றிற்கு, பொதுவான வரலாற்றாசிரியர் ஓடி விடுகிறார். இடையில் பெருத்த இடைவெளி யாருக்கும் தோன்றவில்லை. சங்ககால வரலாறு எழுதவேண்டுமானால் இந்த இடைவெளி பாகத வாயிலாய் நிரப்பப்படவேண்டும். அன்றேல் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்கவேண்டும். 
 
பூமிமித்ரன் காலம் பொ.உ.மு.66-52
நாராயணன் காலம் பொ.உ.மு.52-40
சுசர்மன் காலம் பொ.உ.மு.40-30 [பஞ்சதந்திரம் எழுந்த காலம் இவன் காலமே. “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற கட்டுரைத்தொடரை என் வலைப்பதிவிற் படியுங்கள். பஞ்சதந்திரத்தை வைத்தும் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்தால் தமிழர் வரலாறு “காலி” என்றெண்ணி திரு நாகசாமியும் அவர் சீடரும் முயல்கிறார் போலும். ”சிலம்பு 6 ஆம் நூற்றாண்டு நூல்” என்ற தன் கருத்தை வலியுறுத்தி, அவர்சொன்னார், இவர்சொன்னாரென வழக்கம்போல் இலக்கியக்காணிப்பை மட்டுமே தொகுத்துத் தற்குறிப்பேற்றஞ் செய்யாது ஏரண வரிதியோடு (with logical flow) ”இவ்விவற்றால் இப்படி, இதுபோல் அமைகிறதென்று” தானே அலசிச் சான்றுகள் கொடுத்து ஒரு கட்டுரையை நண்பர் நா.கணேசன் என்றெழுதப்போகிறார்?]
 
 
இனி சேரர் குடிக்கும் காட்சிக்காதை 156-164 வரிகளுக்கும் வருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
 
 
Sent: Sunday, August 07, 2016 9:01 AM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 

iraamaki

unread,
Aug 11, 2016, 6:31:17 AM8/11/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம். (செங்குட்டுவனை மட்டும்  பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்.)
 
சங்ககாலச்சேரரில் சுள்ளியம்பேரியாற்றங்கரையில் குடவஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன்குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரையில் கொங்குவஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சி புரிந்தார். குடவஞ்சி, கொங்குவஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுதுபிரிந்தன? தெரியாது. அதேபொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வங்கடுங்கோவிற்கு வாழியாதன் பெயர்முடிவுமுண்டு.) நமக்குக்கிடைத்த பாடல்களின்படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன். (மாவலியாதன்/மகாபலி, பெருகலாதன்/ - ப்ரஹ்லாதன் என்ற தொன்மக்கதையாரும் இவர்குடியினரே என்றுசிலர் சொல்வர்.) 2 கிளையினரின் ஆட்சிக்காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியப்படும். ஒருசேரன் காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச்செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்றுகொண்டு மற்றசேரரின் காலத்தைச் சிலம்புக்கால ஆய்வின்மூலம் குறித்தேன்.
 
மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு மூவேந்தரும் தொடர்ந்துபந்தாடிய மேட்டுநிலமாகும். கொங்குநாட்டை வேளிராண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்த வரை ”த்ராமிரசங்காத்தம்” நீண்டகாலந்தொடர்ந்தது. என்றைக்குக் கொங்குவேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவுகொண்டாடிச் சேரர் தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அந்நேரத்தில் ”பித்துண்டா” எனுங் கொங்குக்கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இது நடந்திருக்கலாம். கொங்குக்கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார். காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அகநானூறு 31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்கவேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப்படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistensy) நாடுவதால் நான் செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிதுசிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப்பத்திலில்லாத சேரர்காலத்தை இன்னும் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப்பிரிவுகளை ஒருவித மூன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம். It has still not reached a definitive stage. 
 
வானவரம்பன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190 - 143 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்திலேயே அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே சுங்கர்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின்பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத்தொடரையும் படியுங்கள்.
 
 
இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர், நூற்றுவர்கன்னர் தான். பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புபவனில்லை. அப்படிச்சொல்வது தேவையற்ர ”பௌராணிகப்” பார்வை. காலப்பொருத்தமின்றிக் கௌரவருக்குச் சேரர் பெருஞ்சோற்றுமிகுபதங் கொடுத்தாரென்பது விழுமியங்கள் வழியாகவும் பொருந்தவில்லை. ”தம்நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர்நினைத்து, போரிலிறந்தவருக்காகச் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரேகுலம் போலத்தான்” என ஊருக்கேயுணர்த்திச் சேரன் நட்பும் சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன்குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.
 
உதியன்சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப்பழனியே பழம்பொதினி. அதனடிவாரத்தில் ஆவினன்குடியுள்ளது.) ஆவியர்குடியோடு சேரர்குடியினர் கொடிவழிதோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ் சொல்வர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. இவனுக்கு 2 மனைவியர். தன்தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) முத்தமகள் பதுமன்தேவியை முதல் மனைவியாகப் பெற்றான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென 2 மக்கள் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச்சோழன் மகள் நற்சோணை. (= சோணாட்டுக்காரி; பொன் போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. பொன்னிறத்திற்கும் சோழருக்குமான தொடர்பை நாம் உணர்ந்தோமில்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைப் பார்த்தால் ஐயை விதுப்பெயராயும், நற்சோணை பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்படவில்லை. அக்காதை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ செங்குட்டுவனின் தம்பியென நம்பமுடியவில்லை. 
 
”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”
 
என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். மணக்கிள்ளி யார்? மருவல் = தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage - போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற்பொருளில் இன்னொருசொல் மணத்தலாகும். ஒருகுடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங்கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப்பெயரைப் பதிகம் பாடியோர் இயற்பெயராக்கி விட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலேயுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும். 
 
சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச்சோழன் தித்தனாவான். யா, இருளைக்குறிக்கும் இற்றல்=போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/போக்குகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்>ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்பது வடபுலமொழிகளில் சூரியனைக்குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப்பெயர்கள் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும்போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர்பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக்கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்தவஞ்சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச்சோழனென்று சிலம்பு புகலும்.  சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச்சோழனாவான். 
 
அதேபொழுது தித்தனின் மகன் பட்டஞ் சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோகாரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம்வேறாகி உறையூரைவிட்டு விலகித் தந்தையின் வளநாட்டுத்துறையான கோடிக்கரையில் வீரவிளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சிலகாலங்கழிப்பான். தித்தனுக்குப்பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/வழிகளில் வேல்வீசுந் திறன் கொண்ட கிள்ளி) என்றபெயரில், வெளியன் உறையூராண்டான். நெடுஞ்சேரலாதன் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் தித்தன்வெளியனெனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப்படும் போர் மச்சான்-மைத்துனன் இடையெற்பட்டதாகும். பெருவிறற்கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச் சண்டைகூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு மாமன்மகனைப் (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக்காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்தபிறகாவது, சிலம்பைச் சங்கம்மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பாது ஒழியலாம்.
 
பல்யானைச் செல்கெழு குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. வேந்தனாகாததால், வானவரம்பனெனும் பட்டமுங்கொள்ளாதவன். நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டு காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்தபோதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்தைத்தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்கு அப்புறம் இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப்பொறுப்புக் கொண்டவரே நீண்டகாலம் ஆட்சிசெய்தார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்பானமுறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலம் வேந்தனாகியிருக்கிறான்.  
 
அடுத்தது களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன்காலம் பொ.உ.மு. 131-107. இவன் இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்தபின்னால், மூத்தாள்மகனுக்கும், இளையாள்மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப்பட்டஞ் சூட்டியிருக்கவேண்டும். இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரல் வானவரம்பனென்ற பட்டஞ் சூடி அரசுகட்டிலேறியிருக்கலாம். இவனுக்கு இன்னொருபெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம். 
 
 புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்துபட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால்வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற்கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பாலறிவோம். முதற்கரிகாலனையும், அடுத்தவனையும் குழப்பித் தமிழாசிரியர் தடுமாறுகிறார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு. ஆழ ஆய்ந்தால் 62 ஆம் பாட்டில் இறந்ததாய் விவரிக்கப்படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனென விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? .
 
நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்றகூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதைவைத்துப்பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதனென்றும், கடைத்தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பு வரும்.  
 
செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பார்ப்போம். ஆடுகோட்பாடு என்பதற்கு பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டுவந்தவனெ”னப் பொருள்சொல்லும். பழங்காலப்போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டுவருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.
 
பெரும்பாலும் இவன்காலம் பொ.உ.மு. 106 - 75 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வந்திருக்கிறான். அதுவுமல்லாது வானவரம்பனென்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, August 10, 2016 11:03 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அன்பின் கணேசன் ஐயா,
சகர் (சாகர்) வேறு சாக்கியர் வேறு
​..
புத்தர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். நான் கூறவருவது இராம.கி ஐயா குறிப்பிட்ட இந்தோ-சித்திய  சகர் எனும் நாடோடி இனத்தவரை.

https://en.wikipedia.org/wiki/Saka

iraamaki

unread,
Aug 13, 2016, 5:35:49 AM8/13/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
சேரர்குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தியைச் சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கிருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயர் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் அண்ணனைச் செங்குட்டுவன் என்றாரே?) ஆதன்குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன்மகன் நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவனாவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரே செய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரலெனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என்செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கியிருக்கிறார். அதேபொழுது ஒருவருக்கொருவர் முரணிப் பொருதியுமிருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், மைத்துனன் என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவதாயிற்றே?        
 
இனி இரும்பொறைக்கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைதான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்குமுன் சேரர் கருவூரிலில்லாதது தெரியும். (சங்ககாலமென்றாலே கொங்குவஞ்சியை வலிந்திழுப்போருக்குத்தான் புரியமாட்டேனென்கிறது.) அடுத்து அந்துவன் சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-147. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திலிருந்த போது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங்காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” எனவரும். பலரும் ஒருதந்தையை அடையாளங்காண்பதிற் சரவற்படுவர். பெருமுயற்சிக்கப்புறம் அது விளங்கியது.
 
தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக்குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண்விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்றுகுறிப்பார். வலியுள்ள ஆண்மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும்போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்றமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டிவைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச்சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.
 
”வேளிரைத் தொலைத்து நிலஞ்சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன்பட்டன. சங்ககால முடிவில் கொஞ்சங் கொஞ்சமாய் வேளிர் ஒழிக்கப்பட்டார். Eventually the segmentary states were unified into 3 large states. சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்றுவரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழுவரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப்பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினாலும், உச்சகட்டம் நடுவிலிருந்த காலந்தான். இப்புரிதலை அடையாமற் செய்வதற்கே பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டென்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத்தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான்.   .  
 
அடுத்துச் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை
 
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
 
என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் காரவேலன் சூறையாடியாதற்குப் பழிவாங்கும் முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம். மொத்தத்தில் வாழியாதன், அவன் மகன், பேரன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனையும், செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்தகாலமே ஆண்டார். ஆனாற் சேரர்குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையில் உறுதி செய்யப்பட்டது புகளூர்க்கல்வெட்டின் மூலமாகும்.
 
முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்
 
என்றுவரும் புகளூர்க்கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறை குறித்தது. பெருங்கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலமென்பது கற்பனையில்லை. [“சங்க இலக்கியமென்பது room போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற்செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் அதே). அதேபோற்றான் “சிலம்பு கற்பனைப்புதினம். 6 ஆம் நூற்றாண்டில் room போட்டுயோசித்தார்” என்று திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார். மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகளென்று இருவருஞ் சொல்கிறார். தேமேயென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.] “இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக்காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவன் பொ.உ. 3 ஆம் நூற்றாண்டென்பார்.   
 
அடுத்து வருவது வாழியாதன் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப் பாதையின் காணிப்பரான அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதிசெய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கு அடையாளமாகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.
 
மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமானஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்துகிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ்சேரல் இரும்பொறையுடன் போருடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.
 
கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.
 
என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒருதம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச்சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம்பத்தின் பதிகம் அடையாளங்காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம்பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப் புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல் தந்தை குட்டுவன் சேரல் இரும்பொறையே. 
 
இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசிகீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ்செய்து உழிஞைப் போருக்குப்போய் வெற்றிபெற்று மண்ணுமங்கலஞ் செய்து வரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்தநான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். ஆயினும் உன்வீரர் குற்றமாய்க்கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத்தீரக் கவரிவீசிச் சிறப்புச்செய்தாய். முரசைப்பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார். (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள்.) . .
 
 
அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம்பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர் மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.
 
இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இருவேந்தரையும், விச்சிக்கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன்பின், சோழவளநாட்டில் பங்காளிச்சண்டை பெருகியது. உறையூர்மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித்தவிப்பதை என்னால் ஏற்கவியலாது. கோப்பெருஞ்சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொரிடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழ் இருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்களைக் கவர்ந்து பலருக்கும் பிரித்துக்கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டுவந்தவன் சிலம்பின்படி செங்குட்டுவனேயாவான்.).
 
தவிரக் கொங்குவஞ்சியில் சதுக்கபூதத்தை நிறுவிச் சாந்திவேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம் (சாந்திசெய்தலென்பது குறிப்பிட்ட படையல்கள்மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள்மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச்சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்கபூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்கபூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்கபூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
   .  
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.
 
அன்புடன்,
இராம.கி.
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்

வேந்தன் அரசு

unread,
Aug 14, 2016, 6:40:33 PM8/14/16
to தமிழ் மன்றம், மின்தமிழ், tamil_ulagam, தமிழாயம்
நற்றிறம் படரா கொற்கை வேந்தன் என்றதால் தீத்திறம் அதன் எதிர்மறைச்சொல்லாகிறது

13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 5:35 அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Aug 15, 2016, 9:04:06 AM8/15/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com

iraamaki

unread,
Aug 15, 2016, 9:08:48 AM8/15/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப்பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர்பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குந்தெரியாது. இன்றுங் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையிற் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர்பெயர் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங் கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை. சிலபெயர்கள் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.
 
(ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே.இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ சொல்லக்கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்லவேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக்கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு.சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு..வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம்.) 
 
சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணமுண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான முன்னீடுகளில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்குவரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத்தரவுகளை வறட்டுத்தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகரமுடியாது. சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.
 
குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப்பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல்பிறக்கோட்டிய செயல் அடுத்தசில ஆண்டுகளில்நடந்தால், பரணர் அதைச்சொல்வார். கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயதுவரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறென்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடுநாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார். என்கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” எப்படி நம்புகிறீர்கள்? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச்சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட்படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவுதான் காரணம்.   
 
இன்னொருபக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக்கூட்டிச் செங்குட்டுவன்வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச்சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்தநூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் - கணியன்பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர்போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலைபடுகிறது. இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம். .
 
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
 
இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒருமுறையே செங்குட்டுவன் வடக்கேபோனதாய் எண்ணிக்கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக்காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டியநாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன்மகனை சோழவளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச்சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக்கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாயிருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.
 
சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்குமேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர்கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்யமுடியவில்லை. கொங்கணரை அடக்கியதற்கு அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக்கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா?  
 
அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்குமேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர்வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர்பார்வையில் அதைப்படித்த அறிஞர் மிகக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்து வந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகல் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராயவேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக்கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவென்பது என் கருத்து] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்குவஞ்சியைத் தொலைத்து அந்துவஞ்சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.
 
அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ்சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலிலிருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம் பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு..112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும்.    
 
[சசிகாந்த் போல ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்தவுடன் கன்னபெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கத்தை ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத்துத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை ஒப்புக்கொள்ளார். தவிர, இவரையும் கடந்துவந்தால் கல்வெட்டில் அச்செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர்கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழியேதான் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங்கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோன்ற உழிஞைப்போர் அற்றை நிலையில் கடல்வழியே படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா?]
 
கொடுங்கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ்பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப்பகுதிகளில் ஆட்சிசெய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்கநாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.
 
கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ்கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனி வேங்கடசாமியும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்காலத்தில் தமிழ் பேசினார். பின் கொஞ்சங் கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர்தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசிவரை (1950 வரை) தமிழராகவே தங்கிப்போனார். இந்தியவிடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப்பட்டார். இப்பகுதிகளுக்கு வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபொழுதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார்..    
 
கொங்கணர், கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைகளுக்குத் தெற்கேயிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்தியமலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடமெஞ்சியது. காரவேலன் தன் பாகதக்கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக்குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகதகுமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவுபடுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.
 
”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன்செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்டமுடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரியமன்னருக்கு எதிரே நீயொருவனேநின்ற போர்க்கோலம் என்விழியில் அப்படியேநிற்கிறது” என்று வில்லவன்கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பது அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம்பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று சொல்வதில்லையா? (ஆயிரமென்பது தமிழ்வேர்கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங் கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்>ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும். வேறொருமுறை பார்ப்போம்.) 
 
நாலாங் கேள்வியில் நெடுங்காலம் செலவழித்துவிட்டோம். இனி அடுத்த கேள்விக்குப் போவோம்.

iraamaki

unread,
Aug 15, 2016, 11:30:13 AM8/15/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
திரு.நா. கணேசன்,
 
நானும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.  இந்த name dropping ஐ எப்பொழுதுதான் விடப்போகிறீர்கள்?
 
பர்ரோவும் எமனோவும் என்ன கடவுள்களா? அவர்களும் ஆய்வாளர் தாமே? அவர் எழுதியதெல்லாம் வேதவாக்கா?  Every scientific assertion can be challenged in this world. நாளைக்கு நான் எழுதியதை மறுப்பதற்கும் யாரோவொருவர் வருவார். அது இயற்கை.  நம்மூரில் நக்கீரனென்ற ஒருவன் இருந்தானாம். கதை உங்களுக்குத்  தெரியுமென எண்ணுகிறேன். ”ஆயிரம் தமிழல்ல” என்றால் அதை உங்கள் வாக்கால் நிறுவுங்கள். ”அது தமிழ்” என்பதை என் வாக்கால் நான் நிறுவுகிறேன். அதைவிட்டு வெறுமே அவரைக்கூப்பிட்டு இவரைக்கூப்பிட்டுச் செய்துவிடலாமென எண்ணாதீர்கள்.
 
அப்புறம் ”சிலப்பதிகாரம் ஒரு நாவல்” என்று சொல்வதில். அத்தனை மகிழ்ச்சி கொப்பளிக்கிறதோ? ஏன் ”இராமாயணம் ஒரு நாவல்”, ”மகாபாரதம் ஒரு நாவல்” என்று சொல்லிப்பாருங்களேன்?  (அப்படி உங்கள் கூற்றுக்களில் ஒருநாளும் நான் பார்த்ததில்லை.) நாவலுக்கும் காப்பியத்திற்குமுள்ள வேறுபாடு  உங்களுக்குத் தெரியுமா? அதையும்போய் திரு. நாகசாமியிடம் கேளுங்களேன்?
 
இராம.கி. 
 
Sent: Monday, August 15, 2016 7:04 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
On Monday, August 15, 2016 at 6:08:49 AM UTC-7, இராம.கி wrote:. இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பது அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம்பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று சொல்வதில்லையா? (ஆயிரமென்பது தமிழ்வேர்கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங் கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்>ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும். வேறொருமுறை பார்ப்போம்.)
 
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 
 
பர்ரோ போன்றோர் எழுதியுள்ளனர். நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பதும்.
 
சிலப்பதிகாரம் என்ற நாவல் பற்றி எழுதுங்கள். ஆயிரம் என்பது ஸஹஸ்ரம் என்னும் ஆரிய மொழிகளின் சொல்.
 
நா. கணேசன்

iraamaki

unread,
Aug 18, 2016, 11:23:27 AM8/18/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
பலருமெழுப்பிய குறுக்குவினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாங்கேள்விக்கான நீளவிடையில் தோய்ந்துவிட்டேன். பொறுமைக்கு நன்றி. அடுத்தகேள்விக்கு வருவோம். ”கானல்வரியில் மாதவி மாலையைப் பாடுவதில் ஏதேனுங்குறிப்புண்டா? ’மாலை’ வசந்தமாலையைக் குறிக்குமா?” என்று திரு.முகுந்தன் ஐயப்பட்டது சரிதான். வசந்தமாலையெனும் முழுப்பெயரன்றி, மாலையெனும் விளிப்பெயர் சொல்லி கானல்வரி முழுக்கச் சிலேடையாய் ”பேறுகாலத்தில் நம்வீட்டில் நடந்த கள்ளங்கள் எனக்குத் தெரியும், நீ இப்படிச் செய்யலாமா?” என்று கோவலனுக்குச் சுருக்கென உறைக்கும்படி மாதவி உணர்த்துவாள்.
 
”மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்பதன் பின்வரிகளில், எத்தனை மாலைகள் வரும் தெரியுமா? தவிர, கணவனெனத் தான் நினைத்தவன் செய்ததைக் குத்திக்கேட்பாள். குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, கோவலன் முணுக்கெனச் சினந்துபோவான். புகார்க்காண்டத்தில் வசந்தமாலையின் சூழ்க்கும இருப்பு மேலோட்டமாய்ப் படிப்போருக்கு விளங்காது. ஆழ்ந்து படிப்போருக்கே விளங்கும். இச்சுருக்க மறுமொழியோடு நகர்வதற்கு என்மனம் ஒப்பவில்லை கானல்வரியின் பின்பகுதி விளக்காப்படாவிடில் சிலம்பின் முகனக்காதை புரியாது. அது ஏதோ பாட்டுங் கேளிக்கையுமான பகுதியென்றே பலரும் எண்ணுகிறார். கிடையாது. நெய்தலின் சோகம் அதனுளுண்டு. முன்சொன்ன தமிழாசிரியர் திரு.பழநியைத் தவிர வேறுயாரும் கானல்வரிக்குப் பொருளெழுதி நான்கண்டதில்லை. அவர்நூலைப் பார்த்தே நானும் புரிந்தேன். இப்பொருளை நானும் வேறிடத்தில் எழுதியதில்லை.   
 
வசந்தமாலை, மாதவி என்ற இருபெயர்களுமே தமிழரை மயங்கடித்த குருக்கத்தியைக் குறிக்கும். 2009இல் எழுதிய ”கண்ணகி. கோவலன், மாதவி - பெயர்ப்பின்புலம்” என்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள். (இதுவும் திரு.நா.கணேசனை மறுத்தெழுதியதுதான். சிலம்பு பற்றிய கணேசன்மடல்களைப் படித்தால் ஒன்றுபுலப்படும். சிலம்பை இழித்துரைப்பதில் அவருக்கென்னவோ அவ்வளவு விருப்பம். தான் சொன்னதைச் சரியென நிறுவ, எந்த வானத்தையும் வில்லாய் வளைப்பார். அதிற் பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency) என எதுவும் பாரார்.)
 
 
பசந்தத்தில்/வசந்தத்தில் மாலுவது (மலர்வது/மயங்குவது) வசந்தமாலை. இக்கூட்டைச் சுருக்கி வசந்தாள், வசந்தி, வாசந்தி என்றெல்லாம் இன்று பெயர்வைத்துக்கொள்வார். ஆனாற் பலரும் அச்சொற்கள் குருக்கத்தியைக் குறிப்பதையுணரார். வசந்தகாலத்தைக் குறித்ததெனக் குறைப்படப் பொருள்சொல்வார். ”ஜலசமுத்ரத்தைச்” சுருக்கி சமுத்ரமென்கிறார் பாருங்கள். அதுபோன்ற குறைப்புரிதல் அதுவாகும். மயக்கந் தருபவள் மாதவி; வசந்தத்தில் மால்க்குபவள் வசந்தமாலை. வசந்தாள், வசந்தி, வாசந்தியென்று சுருக்கி விளிப்பதுபோல் மாலையென்றும் அவள் பெயரைச் சுருக்கலாம். ”மாலை”யெனும் விளிப் பெயரைத் தன் கானல்வரியினூடே இருபொருள்படப் பலவிடங்களிற் பொருத்தி மாதவி கோவலனைக் குத்திக்காட்டுவாள்.
 
கானல்வரிப்பாட்டிற்கான உரையாசிரியர் விளக்கங்களை வேங்கடசாமி நாட்டார்நூலிற் பார்த்துக்கொள்ளலாம். வசந்தமாலை குறித்தெழும் உட்பொருளைமட்டுமே இங்குகுறிக்கிறேன். குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த) தாரம்(நி) பொருந்திய தமிழிசை அடிப்படை அறிய எழுசுரங்கள் பற்றிய என்தொடரைப் படிக்கப் பரிந்துரைப்பேன்
.
 
கோவலன் முதலில் கானற்பாணியில் (முல்லையந்தீம்பாணி -மோகனம்- போல் இதுவும் ஒரு திறப்பண் தான். ச க1 ம1 த1 நி1 என்ற 5 சுரங்களில் இப்பண் அமையும்.) யாழால் கருவியிசையெழுப்பி, பின் “திங்கள்மாலை வெண்குடையான் சென்னிசெங்கோல் அதுவோச்சி” என்று கானல்வரிப்பாட்டை இசையோடுதொடங்குவான். தன்வரிகளின் உள்ளடக்கமாய், ”என் நடத்தையைக் கண்டுகொள்ளாதே! அப்படி இப்படித்தான் நான் உன்னோடிருப்பேன்” என்று சொல்வான். அவன்பகுதி வரிகளைத்தவிர்த்து மாதவியின் கானல்வரி மறுமொழிக்கு மட்டுமே இங்கு பொருள்சொல்கிறேன்.
 
இதுபோன்ற இரண்டாம்பொருள் (இறைச்சிப்பொருள்) கொள்ளலில் ”காவேரிவழியே மாதவி மனச்சான்றோடு பேசுகிறாள்” என்றே கொள்ளமுடியும். அதைக்கோவலனும் புரிந்துகொள்வான். அப்புரிதலில் தான் கோவலனுக்குக் கோவமெழும். கானல்வரி படிக்கும்நாம் உள்ளிருக்கும் உருவகத்தை விடாது பிடித்துக்கொள்ளவேண்டும். முதலில் வருவது 3 தாழிசையாலாகும் ஆற்றுவரியென்பர். ஆற்றைப் பாடுவது போல், மாதவி தனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவிற் போட்டுடைப்பாள். (முந்தைக் கடலாடுகாதையின் கடைசி அடிகளின் படி) காட்சியோரத்தில் அமளிக்கு (படுக்கைக்கு) அருகில் வசந்த மாலை வருத்தத்தோடு நிற்கிறாள். (ஏதோ, நடக்கப்போகிறதென்று குறுகுறுத்த அவள்நெஞ்சம் வருத்தபடாது என்செய்யும்?
 
கீழே வரும் தாழிசைகளில் இருபொருள்கள் உள்ளன. ஒன்று இயற்பொருள். இன்னொன்று இறைச்சிப் பொருள். இயற்பொருள் மாலை நேரத்தையும். இறைச்சிப்பொருள் வசந்தமாலையையுங் குறிக்கும். பாடுவோளுக்கும், கேட்போனுக்கும், அருகிலிருந்து கவனிப்போளுக்கும் புரிந்துதான் பாட்டு வெளிப்படுகிறது. மூவரிடையே நடப்பது ஒரு நாகரிகமான சண்டை. இருவர் தம் கருத்தைச்சொல்கிறார். ஒருத்தி உம்மென்று வருந்திநிற்கிறாள். என்னவிருந்தாலும் மாதவி இயமானியல்லவா? இனிப்பாட்டிற்குள் வருவோம்.
 
வேறு
25.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.
 
26.
பூவார்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி
 
27.
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி
 
”ஏ, காவேரி (மாதவியின் மனச்சான்று), வண்டுகள் பக்கத்தில்வந்து சிறக்க ஒலிசெய்ய, மணிகளையும், பூவாடைகளை போர்த்துக்கொண்டு, கருங்கயற்கண்ணை (இக்கண்தான் முதலிற் கண்ணகியிடமும், பின் மாதவியிடமும் கோவலனைக் கவிழ்த்தது.) விழித்து, அசைந்து, நடந்துவந்தாய். ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன்கணவனின் செங்கோல் (அதாவது நேரொழுக்கம்) வளையாதென்று அறிந்தே..
 
ஏ காவேரி, பூக்கள்நிறைந்த சோலைகளில் மயில்களாட, அதுபுரிந்து குயில்கள் இசைபாட, விரும்பத்தக்க வசந்தமாலை (காமர் மாலை) உடன்வந்து அருகே அசைய நீ நடந்தாய், ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன்கணவனின் நாமவேற்றிறங் (புகழ்பெற்ற வேற்றிறம்; வேறொன்றும் இல்லை சொல்தவறானென்று ஊரில் கோவலனுக்கிருந்த மதிப்பு) கண்டு அறிந்தே.
 
ஏ காவேரி, அவன் குலமகவை வளர்க்கும் தாயாகி (மேகலைபிறந்து ஓரிருமாதங்கள் ஆனபின் கானல்வரிநடந்தது) அவர்குலம் வாழவைக்கும் பேருதவியில் ஒழியாதிருந்தாய். (கண்ணகிக்குப் பிள்ளை இல்லை. மேகலையே கொவலன்குடிக்கு முதற்பிள்ளை, இனியும் பிள்ளைகள்பிறந்து குடிதழைக்கலாம் எனவுணர்த்துகிறாள்). ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? ஆழியாளும் வெய்யோன்போன்ற அவன் அருளால் தன் உயிரோம்பும் என்றே.
 
வேறு
”உன்னை முற்றும் நம்பினேன்; நீ நம்பிக்கை காட்டினாயா?” என ஆற்றுவரியில் மாதவி தொடங்குகிறாள். இனி 3 தாழிசையாலான சார்த்துவரி. இது கோவலனோடு அவள் செய்யும் நேர் உரையாட்டு. முதல் இருவரிகளில் ”மாலை”பற்றிய கேள்வியும், அடுத்த இருவரிகளில்.”எங்களூரை எப்படி எண்ணிணாய்? முயன்றால் எதையுங் கண்டுவிடுவோம்” எனும் விடைக்கூற்றும் வருகிறது..
 
28.
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர்ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ்கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரேஎம்மூர்.
 
29
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம்ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப்பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரேஎம்மூர்.
 
30
உண்டாரை வெல்நறா ஊண்ஒளியாப் பாக்கத்துள் உறைஒன்றுஇன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம்ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல்நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்து஡ர்க்கும் புகாரேஎம்மூர்.
 
ஐய, திங்களின் வாள்முகங்கொண்ட வசந்தமாலையிடம் செவ்வாய் மணிமுறுவல்பெறுவது ஒவ்வாதெனினும், முத்துவாங்குவதுபோல் மன்மதனாய் நாளும் நீர் வந்தீர். நறுமணங்கொண்ட இக்கழிக்கானலில் (பிச்சாவரம் போன்ற இடம்) வீங்கிய ஓதத்தால் வந்துசேரும் முத்துக்களுக்கு கானற்பூ மாலைகளால் விலைசொல்வோர்போல் மீளுகின்ற புகார் எம்மூராகும். (”எங்களைக் குறைத்து மதிப்பிடாதே. முத்திற்கும் விலையுண்டு. இச்செய்தியை எப்படியோ அறிந்தேன்” என்கிறாள். எப்படி என்பதை இளங்கோ கடைசிவரை சொல்லவேயில்லை.)
 
ஐய, வன்பரதர் பாக்கத்தில். மறையிடங்களிற் கூடுவாரை (உன் கூடலை), மகளிரின் சிவந்தகைகளில் வளைகள் கழலுவதை, ஏழையோம்நாங்கள் எங்கு எப்படி அறிகோமென எண்ணினையோ? நீரீற் கிடக்கும் மீன்மேல் நிறைமதிமுகம் தெரிவதுபோல் நீள்புன்னையரும்பிப் பூப்பாரங் கிடக்கும் கொம்பின்மேல் வெள்ளையன்னம் ஏற (நீ அவளோடு கூடியதையறிய), ஆம்பற்பூவின் ஊடே வண்டுகள் ஊதுவது எம்மூராகும். (வெளியேதெரியாத ஒன்றைச் சிலரறிந்து தம்முள் பேசிக்கொள்வது அம்பலாகும். இது அலருக்கு முந்தைய நிலை. இங்கு அம்பல் ஆம்பலாய் நீண்டு சிலேடையானது. வண்டுகள் போல் அம்பலினூடே ஊதி அறிந்துகொள்வது எம்மூராகும். ஆம்பலந்தீங்குழல் என்பதும் நெய்தல்நிலத் திறப்பண்தான். இதை இந்தளமென்பர். இந்தோளம் என்பது இற்றைப்பெயர்.சுரவரிசை சக1ம1த1நி1 என்றாகும்.)
 
ஐய, உண்டாரை வெல்லும் நறவும், ஊணும் ஒழியாத பாக்கத்துள் (கணிகையர் வீட்டை உருவகஞ்செய்கிறாள்), ஒரு மருந்தின்றி அமையாத காமநோயை மாதருக்குத் தருகிறாயென்பதை எங்கு எப்படி நாங்கள் அறிகோமென எண்ணினாயோ? புண்தோயும் நீண்டவேலால் குத்தப்பட்ட யானைவிழிகளில் நீர்மல்க, சேர்த்துவைத்த வண்டலைக் கடல்திரைகள் அழித்தும், மாதர் தம் கைகளால் மணல்முகந்து கடல்தூர்க்கும் புகாரே எம்மூராகும்.
 
வேறு
அடுத்தது திணைநிலைவரியாகும். நெய்தல்திணையில் நடக்கும் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் இங்கு 6 தாழிசைகளிற் பேசப்படுகின்றன. தலைவி தன் நிலைக்கு இரங்குகிறாள்.
 
31
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.
 
32
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.
 
33
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?
 
34
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ?
 
35
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.
 
36
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.
 
வளைந்த சுரிகளாற் (waves) பின்னிய ஐம்பாற்சடையாளே! துணையோடுபொருந்தி விளையாடும் புள்ளிநண்டையும் நோக்கி, பூக்கொத்துக்கள் செறிந்த சோலையில் என்னையும் நோக்கி, உணர்வொழிந்து போன (ஓவென்ற அலைச்சத்தங் காட்டும்) நீர்ச்சேர்ப்பனின் இயல்பை நான் உணரமாட்டேனா, என்ன?
 
அழகிய மென்கொத்துக்களை உடைய அடப்பங்கொடிகளே! அன்னங்களே! தாமும், தம் தண்ணருளும் தம்குதிரை பூட்டிய தேருமென எம்மைநினையாது போனாரோ? அப்படி விட்டகன்றாலும், நம்மை மறந்தவரை நாம் மறந்துவிடுவோமோ, என்ன?
 
இனிய கள்திளைக்கும் வாயுடைய நெய்தல் மலரே! வருத்தம் மிகுவிக்கும் வசந்தமாலையாற் புலம்பும் என் கண்ணைப்போல், துன்பம் கலக்கையில் துயில்பெறுவாயோ? நீ காணும் கனவில் வன்கணாரின் காடுகள் வரக் காண்பதை அறியாயோ?       
 
தெளிந்த நீர் ஓதமே! பறவையின் இயல்போல் விரைவாகிச் சென்ற குதிரைபூட்டிய தேர்ச்சக்கரம் போனவழியெலாம் நீ சிதைத்தாய்! மற்றென்ன செய்கோம்? அப்படிச்சிதைத்தும் அலர்தூற்றி உள்ளாரோடு எதையும் உணராது இங்குள்ளாய்! மற்றென்ன செய்கோம்?
 
நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தேரின் சக்கரம் ஊர்ந்தவழி சிதைய ஊர்க்கின்ற கடலோதமே! பூந்தண் பொழிலே! புணர்ந்தாடும் அன்னமே! ஈர்ந்தண் துறையே! ”(வசந்தமாலையோடு சேர்வது) தகாது” என்று சொல்லமாட்டீரா?
 
கடலோதமே! நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தோள் ஊர்ந்தவழி ஊர்ந்தாய்; இருப்பினும் வாழி! மற்று எம்மோடு உறவு தீர்ந்ததுபோல் தீர்ந்துவிட்டீரோ? வாழி
 
வேறு
அடுத்தது ஆறு தாழிசைகளாலான மயங்குதிணை நிலைவரி.
 
37.
நன்நித்திலத்தின் பூண்அணிந்து நலம்சார்பவளக் கலைஉடுத்துச்
செந்நெல்பழனக் கழனிதொறும் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
புன்னைப்பொதும்பர் மகரத்திண் கொடியோன்எய்த புதுப்புண்கள்
என்னைக்காணா வகைமறைத்தால் அன்னைகாணின் என்செய்கோ?
 
38
வாரித்தரள நகைசெய்து வண்செம்பவள வாய்மலர்ந்து
சேரிப்பரதர் வலைமுன்றில் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
மாரிப்பீரத்து அலர்வண்ணம் மடவாள்கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக்கொடுமை செய்தார்என்று அன்னைஅறியின் என்செய்கோ?
 
39
புலவுற்றுஇரங்கி அதுநீங்கப் பொழில்தண்டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச்செம்மல் மணம்கமழத் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
பலஉற்றுஒருநோய் துணியாத படர்நோய்மடவாள் தனிஉழப்ப
அலவுற்றுஇரங்கி அறியாநோய் அன்னைஅறியின் என்செய்கோ?
 
வேறு
40
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?
 
41
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?
 
42
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?
 
நன்முத்தால் பூணணிந்து நலஞ்சேர்ந்த பவளமேகலையையுடுத்துச் செந்நெல் பழனக்கழனி தோறும் திரும்பத்திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே [இது கோவலனைக் குறிக்கும். மேகலையைப் பெண்மட்டும் இன்றி, ஆணும் உடுத்தினான் போலும். மேகலை நடுவே செம்பவளமோ (பவளமேகலை), செம்மணியோ (மணிமேகலை) இருக்கலாம்.] புன்னை செறிந்த சோலையில் மகரத் (சுறாமீன்) திண்கொடியோன் (காமன்) எய்த புதுப்புண்கள் (வசந்தமாலையின் காமத்தால் ஏற்பட்ட புண்கள்) என்னைக் காணாவகை மறைத்தால், அதனைத் தாய் (சித்திராபதி) அறிந்தால் என்ன செய்வாய்?    
 
வளந்த செம்பவள உயிரியின் வாய்திறந்து பெற்ற கடல்தரளங்களால் (முத்தல்ல. உருண்ட பவளம். வேதியலின்படி முத்தும் பவளமும் CaCO3 தான். மாசுகளால் வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றன.) நகைசெய்து சேரிப்பரதர் வலைகள்கிடக்கும் முன்றிலில் திரும்பத்திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! மழைக்காலப் பீர்க்க மலரின் (பசலை) நிறத்தை மடவாள் கொள்ள (இங்கு மாதவி தன்னைக் குறிப்பிடுகிறாள். அதிர்ந்து வெளுத்த நிறம். திகைப்பவர்க்கும் இது ஏற்படும்.) ”தலைவனையும் மீறி இக்கொடுமை யார்செய்தார்?” என்று என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?
 
புலவுநாற்றமிரங்கி அதுநீங்கப் பொழிற்சோலையிற்புகுந்து உதிர்த்த கலவைச்செம்மலின் (கீழேவிழுந்த பல்வேறு பூக்களின் கலவை).மணங்கமழத் திரும்பத்திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! பலவுமுற்று, இன்னநோயெனத் துணியாத படர்நோய் மடவாள் தனியே உழந்துகிடக்க, ”மெலிந்துபோய் இரங்குவதாய் யாரும் அறியாதநோய்” என என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?      
 
முறுக்குவிரிந்தமலர் சூடிய குழலாளே! இளைய இருள் பரந்தது. பகல்செய்வோன் மறைந்தான். களைவதற்கரிய தனிமை நீரை எம்கண்கள் பொழிந்துகுக்கின்றன வளைநெகிழ, நெருப்பினைச் சிந்திவந்த இம் மருள்மாலை (வசந்தமாலை) நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டில் இருப்பாளோ?
 
புதுநிலவை ஒக்கும் முகமுடையவளே! கதிரவன் மறைந்தான், காரிருள் பரந்தது, உதிர்ந்த மலரையொக்கும் மையுண்ட கண்கள் துன்பநீரை உக்குக்கின்றன. தன் அறிவை உமிழ்ந்து செல்வத்தை விழுங்கிவந்த இம் மருள்மாலை போனவர் நாட்டில் இருப்பாளோ?
 
அவிழ்ந்த மலர்களை உடைய குழலாளே! பறவைகளின் பாட்டுகள் அடங்கின. பகல்செய்வான் மறைந்தனன். நிறுத்தமுடியாத நோய் கூர்ந்துவர நெடுங்கண்ணீர் உகுத்தன. மறவை(எதிரி) போல் என் உயிர்மேல்வந்த இம் மருள்மாலை என்னைத் துறந்தவர் நாட்டில் இருப்பாளோ? 
 
வேறு
இவ்வளவு நேரம் கோவலனைச் சாடியவள் “நம்மைவிட்டு இவன் போய்விடான்” என்ற நம்பிக்கையோடு, அவன் குணங்களைச்சொல்லிச் சாய்வதால், இது 3 தாழிசைகளால் ஆன சாயல் வரி.
 
43.
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
 
44
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.
 
45
அன்னந் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.
 
தாழையை வேலியாயுடைய இக்கழிவாய் வந்து எம் விளையாட்டை அழித்துப் போனார்; அப்படிப் போனவர் நம் மையல்மனத்தை விட்டு அகல்வாரல்லர்
 
கழிக்காட்டை வேலியாயுடைய இக்கழிவாய் வந்து நீ கொடுவென்று ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம்.மான்நேர் பார்வையை மறக்கமாட்டார்
 
அன்னம் துணையோடு நான் ஆடக்கண்டு நேற்று என்னைநோக்கி ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம் பொன்போன்ற தேமலைக் கண்டபின் நம்மைவிட்டுப் போகார். 
 
வேறு
அடுத்துவருவது இன்னதென்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாது பொதுவாய் இயற்கையிடஞ் சொல்லும் முகமில்(லாத) வரி.
 
46.
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.
 
குருகே (கொக்கு, நாரை போன்றன) எம்மிடம் வந்து அடையாதே! என் கழிக்கானலுக்கு வந்து அடையாதே உடை அலைகளையுடைய சேர்ப்பனுக்கு நான் உற்ற நோயைக் கூறுவாயாக!
 
வேறு
 
47 (கட்டுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.
 
அப்படி வாய்ப்பாட்டுப் பாடிய இழையுடை. (இங்கே ஆடை மாதவிக்கு ஆகுபெயரானது. இழை = linen. இச்சொல்லின் பிறப்புரைத்தால் அது பெரிதும் நீளும். வேறிடத்திற் தனிக்கட்டுரையிற்
சொல்வேன்.) பின்னர் யாழில் தன் காந்தள் மெல்விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலையால் (இதைத் தேவார காலத்திற் காந்தாரப் பண்ணென்பர். இற்றைப்பெயர் இரு மத்திமத் தோடி ச-ரி1-க1-ம1-ம2-த1-நி1. கைக்கிளை குரலாதல் என்பது தலைமைப் பெரும்பண்ணாகிய செம்பாலையில் - அரிகாம்போதியில் - கைக்கிளையை - க2 - குரலாகக் (ச) கொண்டு பண்ணுப்பெயர்த்தால் செவ்வழிப்பெரும்பண் கிடைக்கும். தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2 - முனைவர் வீ.ப.கா. சுந்தரம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பக்கம் 202. தமிழிசை பற்றி இங்கு நான் மேலுஞ்சொன்னால் நீளும். செவ்வழிப்பாலையும், கீழேவரும் விளரிப்பாலையும் வருத்தத்திற்கும், இரங்கலுக்கும் உரியவை. மாலை நேரத்தில் பாடக்கூடியவை.) கருவியிசையெழுப்பி அதை முறையோடு பாடிப் பின் வேறொரு பண்ணிற் பெயர்த்து வாய்ப்பாட்டெடுப்பாள்.
 
வேறு
கீழே வரும் நாலுமே முகமில் வரி
 
48.
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.
 
49
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.
 
50
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
 
வேறு
 
51
தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்      .
 
வசந்தமாலையே! நுளையரின் விளரிப்பாலையில் (விளரி குரலாகப்பிறப்பது. இதை விளரிப்பண் என்றுஞ்சொல்வர். இக்காலத்தில் தோடி இராகமென்பர். இதன் சுரவரிசை சரி1க1ம1 ப த1 நி1. இதை ஒரு மண்டிலத்துள்/ஸ்தாயியுள் அமைத்தும்பாடலாம். அன்றேல் ஒரு மண்டிலத்திலிருந்து இன்னொரு மண்டிலம் விரவியும் பாடலாம். மெலிவு, சமன், வலிவு என்று 3 மண்டிலங்களில் வலிவு மண்டிலத்திற் பாடுவது எல்லா மகளிர்க்கும் முடியாது.) சமன் இளியிற் (ப) தொடங்கிக் வலிவு கைக்கிளையிற் (க1) கொள்ளும்படி முடித்தாயோ? அப்படி முடித்தாயானால், கொள்வதில் வல்லையாவாய்! (வலிந்த இவனைக் கைக்குள் கொண்டவளுமாவாய்) வசந்தமாலையே! என் ஆவியையுங் கொள் (என் ஆவியையும் நீயே வைத்துக்கொள்.)
 
வசந்தமாலையே! என்னைப் பிரிந்தவர் பரிந்துரைத்த பேரருளின் நிழலிலிருந்து ஏங்கி வாழ்வாரின் உயிரைச் சூழ்ந்துள்ளாய். அப்படிச் சூழ்ந்துள்ளாயெனில், உ:ள்ளிருக்கும் நிறைவடையா வேந்தன் (கோவலன்) மதிலுக்கு வெளியிருக்கும் வேந்தனுக்கு (காத்திருக்கும் customer) என்ன உறவாவான்?
 
வசந்தமாலையே! தும்பநோய் மிக, பகல்செய்வான் வீழ, உலகோர் கண்புதைப்ப, நீ வந்தாய், நீ அப்படியாயின் அவர் உன்னை மணந்தவர் ஆயின், உலகம் நல்லது அடைந்தது வாழி! (மாதவி
வசந்தமாலையைச் சூளுரைத்துச் சவிக்கிறாள்.)
 
பெருங்கடல் தெய்வமே! தீயைப் பரப்பிவந்த செல்லள் மருள்மாலை (எனக்கு வேண்டிய வசந்தமாலை) என்னைத் தூக்காது (தொங்கவிடாது) துணிந்த இத் துயர்மிஞ்சும் கிளவியால், ”பூக்கமழ் கானலில் நானிட்ட என் பொய்ச்சூள் பொறுக்கு” என்று உன் மலரடி வணங்குகிறேன்.   
   .
இந்த வரிகள் எல்லாமே கோவலனையும், வசந்தமாலையையும் வைத்துக்கொண்டு அவர்முன்னே மாதவியிட்ட குமறல்கள் தான். இதற்கு அப்புறம் கோவலன் அங்கிருப்பானா, என்ன? “கானல்வரி யான்பாடத் தானொன்றின் மேல் மனம்வைத்து (வசந்தமாலையோடு நடந்ததை மனம்வைத்து) மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாள்” என்று ஏவலாளருடன் சூழ்தர கோவலன் போகிறான்.
 
ஆக யாழிசைமேல் வைத்துக் கோவலனின் ஊழ்வினை வந்து உருத்தது.
 
அன்புடன்,
இராம.கி..
 
Sent: Tuesday, August 16, 2016 4:11 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
நன்றி ஐயா... எனக்கு வரும் ஐயங்களை இங்கே பதிகின்றேன்.. நேரம் கிடைக்கும்போது நீங்கள் விளக்கமளித்தால் போதும்.

நன்றி
முகுந்தன்

iraamaki

unread,
Aug 23, 2016, 8:17:17 PM8/23/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்பிற்குரிய முகுந்தன்,
 
ஏற்கனவே பலருங்கேட்ட ஐயங்களைச் சேர்த்துவைத்துள்ளேன். கானல்வரியை முடித்து (படித்தீர்களோ?),  ஊர்காண்காதையில் ”மதுரைக்கோட்டையில்  கணிகையர் வீதியைப் பார்த்தது” பற்றி எழுதத்தொடங்கினேன். இடையில் சொந்தவேலையொன்று வந்துவிட்டது. இதுமுடிய ஒரு கிழமையாகும். முடிந்த பின் வந்தெழுதுகிறேன். உங்களின் இந்த ஐயங்களையுங் குறித்துக்கொள்கிறேன்.
 
மூலத்தையேப் படிக்காது, ”மூல ஆசிரியரை முட்டாளெ”னச் சொல்லி, வழியாசிரியரை வைத்து, ஆங்கிலத்தில் தமிழையலசும் அரைகுறை வேலைக்கு அருள்கூர்ந்து போகாதீர் என்று வேண்டிக்  கேட்டுக்கொள்வேன்.  மூலத்தைக் கசடறக் கற்க. பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency)  ஆகியவற்றை  இதனோடு பொருத்தி உள்வாங்குக.
 
உங்கள் எல்லோரின் கேள்விகளால் மூலத்தைத் திரும்பவும் படிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தமைக்கு நன்றி.
 
அன்புடன்,
இராம.கி..
 
Sent: Tuesday, August 23, 2016 4:31 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அன்பின் இராம.கி ஐயா,
மேலும் சில ஐயங்களை இங்கே தருகின்றேன்.. (தற்போது விடையளிக்கவேண்டியதில்லை.. )


12.
கட்டுரை காதை

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே: அவ் ஊர்ப்
பாசிலை பொதுளிய போதி மன்றத்து;

இங்கே போதி மரம் என்பது அரச மரம் என்ற கருத்தில் வருமா. அல்லது புத்தம் சம்பந்தமாக வருகின்றதா? திருந்து தொழில் மறையவர் என ஏன் குறிப்பிடப்படுகின்றது?

அரச மரத்தைப் போதிமரம் என்று அழைப்பது புத்தர் ஞானம் பெற்றதாலா?
 
(நாடுகாண் காதை - பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
- இங்கே பௌத்தம் தொடர்பாக வருகின்றது.)

13.
காட்சிக் காதை
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,

கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்;
கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;
தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்


நடுகல் காதை
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
...............
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,

காட்சிக்காதையில் கடற்கடம்பு எறிந்தவன் எனக் கூறப்படுவது செங்குட்டுவனாகத் தானே இருக்கவேண்டும்? நடுகல் காதையி கடற்கடம்பு எறிந்தவன் இறந்துவிட்டான் என ஏன் குறிப்பிடப்பட்டிருக்கின்றது? இங்கே நெடுஞ்சேரலாதன் குறிப்பிடப்படுகின்றானா?

14.

வழக்குரை காதை
கோப்பெருந்தேவி கூறுவது
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம்
பகல் வீழும்
கடுங் கதிர் மீன்
: இவை காண்பென்-காண், எல்லா!’

..................
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;



கட்டுரை காதை
மதுராபதி தெய்வம் கூறுவது
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து
ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே




புறநானூறு 229
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவில்

முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக்கயங்காயப்

பங்குனியுய ரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால்
விசும்பி னானே
அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயி னன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்
காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோ ருலக மெய்தின னாகலின்
ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்
தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்
களந்துகொடை யறியா வீகை
மணிவரை யன்னமாஅ யோனே.

(சிலர் இப்பாடலில் வரும் எழுநாள் என்பதை ஏழு நாட்கள் எனக் கூறுகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் எழுநாள் என்பது பலநாள் என வரலாமா? எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள்
இதில் வரும் எழுநாள் ஏழு எனப் பொருள்படும்)
 
இந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பேதும் உண்டா?
(வார்த்திகனைச் சிறையிடும் காலத்தில் விண்மீன் விழுந்திருக்கலாம். அதைவைத்து மாந்தரஞ்சேரல் இறப்பும், மதுரை எரியும் நாளும் சோதிடர்கள் எதிர்வுகூறியிருக்கலாம்.. )

15. செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் பாடியில் இருக்கையில் மாடலன் வருகின்றான்.
அங்கே
மாதவி மடந்தை
கானல்- பாணி கனக- விசயர்- தம்
முடித் தலை நெரித்தது;
என்பதன் விளக்கத்தை செங்குட்டுவனுக்கும் மற்றைய அரசர்க்கும் கூறுகின்றான். பின்பு
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை எனக் கேட்க பாண்டிய நாட்டில் நடந்ததைக் கூறுகின்றான்.

பின்பு இரவு வந்தது.
செங்குட்டுவன் வேறொரு இடத்திற்குச் செல்கின்றான்.

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும் பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
சித்திர விதானத்து, செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,


அங்கே மாடலனை அழைத்து
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ?

எனக் கேட்கின்றான்.

பாண்டிய நாட்டைப் பற்றி ஏனைய அரசர் முன் கேட்ட செங்குட்டுவன் , சோழ நாட்டைப் பற்றி மாடலனைத் தனியே அழைத்துக் கேட்கின்றான். இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா?

நன்றி

iraamaki

unread,
Sep 12, 2016, 12:24:01 AM9/12/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அடுத்து, ஊர்காண் காதையின் படி, மதுரைக்கோட்டைக்குள் கணிகையர்வீதியைப் பார்த்ததுபற்றி இங்கோர் கேள்வி கேட்கப்பட்டது. மேலோட்டமாய் அதற்கு மறுமொழிப்பது முறையில்லை. எப்படி இந்திரவிழவூரெடுத்த காதையில் இளங்கோ புகாரை விரித்துச்சொல்கிறாரோ, அதேபோல் ஊர்காண்காதையில் மதுரையைச் சொல்வார். புறஞ்சேரியிறுத்த காதையில் வைகையைக் கடந்து கவுந்தியும், கோவலனும், கண்ணகியும் தென்கரையடைந்தது சொல்லப்பெறும். கோட்டை அகழிக்கு வைகையிலிருந்து ஏரிகள்வழி நீர்வந்திருக்கலாம். ”வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பெ”ன ஊர்காண்காதை கணுக்கிய (connected) ஏரிகளைக் குறிக்கும். அப்படியோர் இயலுமை இருந்ததாற்றான் மதுரை ஒரு தலைநகராய் அன்று நிலைத்தது போலும். பழமதுரையை அடையாளங் காணக் கூகுள்முகப்பின் வழி தேடினால், இற்றைத்தடத்திற்குச் சற்றுமேற்கில் ஏரிகளூடே அற்றையாற்றுத்தடம் உள்ளதோவென ஐயந்தோன்றும். தவிரக் கீழச் சிலைமான்- கொந்தகை- பொட்டப்பாளையம் சாலையின் 2 மருங்கும் மணலூர் ஏரியும், கீழடி ஏரியும் பெரிதாய்த் தென்படும். இவற்றின் தொடர்ச்சியாய் சில குளங்கள் மேற்கிலும், வட மேற்கிலும் வட்டமாய்த் தெரியவரும். கீழடித்தொல்லாய்வு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் இவ்விவரிப்பை ஆழ்ந்தறிவது நன்மைபயக்கும். இத்தொல்லாய்வோடு, ஒரு நீர்ப்பாசன வல்லுநரும், ஒரு புவியியல்/மண்ணியல் வல்லுநரும் தொல்லாய்விற்கு உறுதுணையாய் இங்குள்ள ஆறு, ஏரிகளின் பழந்தடங்களை ஆயவேண்டும். இனி நீளமான ஊர்காண்காதையை விரிவாக உரைவீச்சைப்போல் நாலைந்து பகுதிகளாய்ப் பார்ப்போம்.
------------------------------------
வெளிப்பக்கத்தோட்டத்திலும்,
பிறங்கித்தெரியும் நீர்ப்பண்ணையிலும்,
விளைந்துதொங்கும் கதிர்க்கழனியிலும்,
இருக்கும்புள்கள் எழுந்து ஒலிசெய்ய,
பகைவேந்தர் தலைகுனியும்படி
வாளேந்தும் செழியனின் ஓங்குயர் கூடலின் ஊர்த்துயிலை
(வைகறையில் குளத்தாமரைப் பொதிகளை அவிழ்க்கும்)
ஞாயிறு தோன்றியெழுப்ப,
நுதல்விழிப் பார்வைகொண்ட இறைவன் கோயிலிலும்,
உயரப்பறக்கும் கருடனில் ஊர்வோன் நியமத்திலும்,
ஏர்த்திறன் உயர்த்திய வெள்ளையன் நகரத்திலும்,
கோழிச்சேவற் கொடியோனின் கோட்டத்திலும்
அறத்துறைவிளங்கிய அறவோர் பள்ளியிலும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலிலும்,
வெண்சங்கோடு, வகைபெற்றோங்கிய காலைமுரசின் கனைகுரல் ஒலிக்க,
மதக்கடமைகளில் ஆழ்ந்த காவுந்தி ஐயையிடங்
கோவலன் சென்று கைதொழுதேத்தி,
“தவஞ்செய்பவரே! நெறிவிலகியோரின் குணங்கொண்டவனாகி,
நறுமலர்மேனியள் (கண்ணகி) நடுங்குதுயர் எய்யும் படி,
அறியாத் தேயத்தாரிடை வந்துசேரும் சிறுமையுற்றேன்.
தொன்னகர் மருங்கே மன்னருக்கடுத்த வணிகருக்கு
என்நிலை உணர்த்தி நான் திரும்பும்வரை,
இவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாகலின்,
இதைச் செய்வதில் உங்களுக்கு ஏதம் (சரவல்/சிரமம்) உண்டோ?”
என்றுசொன்னதும், கவுந்தி கூறுவாள்:
 
”காதலியோடு துன்பமுற்று, தவத்தோர் மருங்கில் இருப்பவனே!
தீவினையூட்டும் வன்முறையிலிருந்து நீங்குவீரென
அறந்துறைமாக்கள் அழுந்திச்சாற்றி நாக்காலடித்து வாய்ப்பறை அறையினும்,
கட்டிலா மக்கள் தம்மியல்பிற் கொள்ளார்.
தீயகொடுவினை ஏற்படுகையில் பேதைமையைக் கட்டாக்கிப் பெருந்துன்பமடைவர்.
போக்கவியலா வினைப்பயன் அடையுங்கால்,
கற்றறிந்தோர் கைப்பிடியுங்கொள்ளார். பிரிவாலும், புணர்ச்சியாலும்,
உருவிலாக் காமன் தருவதாலும் வருந்துன்பம்
புரிகுழல்மாதரைப் புணர்ந்தோர்க்கன்றி,
தனித்துவாழும் உரநெஞ்சர்க்கில்லை.
பெண்டிரும் உண்டியுமே இன்பமென உலகிற்கொண்டோர்
கொள்ளவியலாத் துன்பங்கண்டவராகி
முனிவர்விலக்கிய காமஞ்சார்ந்து அதன்மேற் கொள்ளும் பற்றாலுழந்து,
ஏமஞ்சாரா இடும்பையெய்துவர்.
இற்றையில் மட்டுமின்றித் தொன்றுதொட்டும் இப்படிப் பலரிருந்தார்.
தந்தை ஏவலில் மாதுடன் கானகஞ்சென்ற வேதமுதல்வனைப் பயந்தவனும் (திருமாலும்)
காதலிநீங்கியதால் கடுந்துயர் அடைந்ததை நீயறியாயோ? இது பலரறிந்த நெடுமொழி அன்றோ?
வல்லாடுதாயத்தில் மண்ணரசிழந்து மனையொடு வெங்கானடைந்தோன் (நளன்)
காதலாற் பிரிந்தானல்லன்; காதலியும் தீமையாற் சிறுமையுற்றாளல்லள்.
இருப்பினும் அடர்கானகத்தில் இருள்யாமத்தில் அவளைவிட்டு நீக்கியது வல்வினைதானே?
தமயந்தி பிழையெனச் சொல்லமுடியுமோ?
நீ அவரைப் போன்றவனல்லன்.
உன்மனையோடு பிரியாவாழ்க்கை பெற்றாயன்றோ?
(மாதவியோடு தனக்கு நிகழ்ந்ததைக் கவுந்தியிடம் கோவலன் சொல்லவில்லை.)
எனவே இவளைப்பற்றி வருந்தாது பொருந்தும் வழியறிந்து
மன்னவன் கூடலுக்கேகிப் பின் ஈங்கு போதுவாயாக” என்றலும்
 
கட்டுவேலிசூழ்ந்த காவற்காட்டோடு வளைந்துகிடக்கும்
நீர்ப்பரப்பின் வலப்பக்கம் புணரும் அகழியின் கீழ்
பெருந்துதிக்கை கொண்ட யானைகள்
கூட்டமாய்ப் பெயரும் சுருங்கைவீதியின் மருங்கிற்போய்
ஆங்கு
ஆயிரங்கண் இந்திரனுடைய அருங்கலச்செப்பின் வாய்திறந்ததுபோல்
தோற்றும் மதிலகவரப்பின் (= gate complex.) முன்னே
அகழியும், சுருங்கைவீதியும் அதற்கப்பால்
இலங்குநீர்ப் பரப்பும், ஆற்றின் மருதந்துறையும்
இருப்பதைச்சொல்லி,
அவற்றை ஆட்சிசெய்யும் செல்வரையும் பொதுமகளிரையும்
(0600-1000 மணி) காலை, (1000-1400 மணி) பகல், (1400-1800 மணி) ஏற்பாடு என்ற
முதுவேனிற் சிறுபொழுதுகளிற் பொருத்தி,
ஆடித்திங்கள் முடியுங் காலமாகையால்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என
முடிந்துபோன பெரும்பொழுதுகளை நினைவுகூர்ந்து,
இளங்கோ கணிகை வீதியை விவரிக்கத்தொடங்குவார்.
 
[மேலே கோயில், நியமம், நகரம், கோட்டமென்ற ஒருபொருட்சொற்களில் கோயிலை மட்டும் இன்று புழங்கி, மற்றவற்றை இழந்திருக்கிறோம். அறவோர்பள்ளி என்பது வேதம், சிவம், விண்ணவம், அற்றுவிகம், செயினம், புத்தம் என்ற எல்லா நெறியாரின் பள்ளிகளைக் குறிக்கும். காவுந்தியின் உரை சமணிரின் பொதுவான உரை. அதைச் செயினத்தின் விதப்பான உரையென்று சொல்லமுடியாது. காவுந்தி சமணத்தின் உள்கட்டுமானத்தில் இன்னுஞ் செல்லாதவராய், அதேபொழுது செல்லமுயன்று கொண்டிருப்பவராகவே தெரிகிறது. இராமன், நளன் கதைகள் காப்பியம் நடந்த காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்கின்றன. வேதமுதல்வனென்ற கூற்று இராமனை வேதநெறியோடு அந்தக்காலச் சமணநெறியார் தொடர்புறுத்தியதும் தெரிகிறது. ஒருவேளை காப்பியக்காலம் சமண ராமயணங்கள் எழுவதற்கு முந்தைய காலமோ, என்னவோ? சமண இராமாயண நூல் எப்பொழுதெழுந்தது என்று பார்க்கவேண்டும்.
 
இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க்காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கைவீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்தசாற்றங் கூட இப்படிக்காட்டாது.) கோவலன் கோட்டைவாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற்சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழுவிவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரைகாதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? செழியன் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாய் இருக்குமோ?]
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, September 07, 2016 5:01 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
நன்றி ஐயா


On Wednesday, September 7, 2016 at 4:28:00 PM UTC+5:30, இராம.கி wrote:
அன்பிற்குரிய முகுந்தன்,
 
வேலைகள் ஓரளவு முடிந்தன. உங்களுக்காக இப்பொழுது ஊர்காண்காதையில் மூழ்கியுள்ளேன்.  மூதூருக்குள் கணிகையர் வீதியிலல்லவா முதலிற் தொடங்குகிறான்?  கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டும். வேடிக்கையாகச் சொன்னால், இப்பொழுது பாதிக்கிணறுதான் தாண்டியுள்ளேன். முழுக்கிணறும் தாண்டியபிறகு எழுதலாமென்றிருந்தேன். இன்னும் ஓரிரு நாட்களாகும்.
 
கூடவே அவ்வப்பொழுது பழந்தமிழ் எண்களைப் பற்றிய சிந்தனையும் குறிப்பும்  ஓடிக்கொண்டிருக்கிறது. ”பின்னாற் பார்த்துக்கொள்ளலாம்” என்ற சோம்பலில் நெடுநாட்கள் இதையெழுதாது தள்ளிப்போட்டுவிட்டேன். இனியும் அப்படிச் செய்யக்கூடாது. இன்றைக்குத் தமிழில் ஆயிரம் இல்லையென்பவர் (அவர் இலக்கம். கோடியையெல்லாம் என்றோ மறுத்துவிட்டார் போலும்), நாளைக்கு நூறையும் இல்லையென்று சொன்னாலுஞ் சொல்வார். 
 
எனவே அந்தக் கட்டுரையையும் தள்ளிப்போடக் கூடாது. நாளும் பொழுதும் விரைவாய்ப் போகின்றன. கடக்கவேண்டிய தொலைவு கூட இருக்கிறது. ஆய்வுப்பணிகளும் ஏராளமாய்க் கிடக்கின்றன.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, September 07, 2016 3:43 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
அன்பின் இராம.கி ஐயா,
வேலை முடிந்துவிட்டதா? உங்கள் விளக்கங்களுக்காகக் காத்திருக்கின்றேன்.. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.


iraamaki

unread,
Sep 12, 2016, 8:27:32 PM9/12/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
இனிப் பரதகுமாரரும் (bourgeoisie. விலையைப் பரத்துவோர் பரதர்), அரசகுமாரரும் (king's relatives) வந்துசெல்லும் கணிகையர்வீதியின் நீள்விவரிப்பு வருகிறது. நீளத்திற்குப் பொறுத்துக்கொள்ளுங்கள். வேறுவழியில்லை. இதைச் சுருக்கினாற் சுவைபோய்விடும். பொதுவாக எல்லாக் கடைகளின்மேலும் “ அது என்ன கடை?” என்றுதெரிவிக்க (இக்கால விளம்பரம்போல்) கொடிகள் அக்காலத்திற்பறக்கும். அதையொட்டிப் பொதுமகளிர் வீடுகளின்மேல் கொடிகளசைவது இங்கு சொல்லப்படுகிறது. கோட்டைக்கருகில் வந்தவுடன் கோவலன் பார்வையிற்படும் முதல்விவரிப்பே பொதுமகளிர் பற்றியாவதால், “பாம்பின்கால் பாம்பறியும்” எனப் புரிந்துகொள்கிறோம். கணிகையர் பாவனைகளிற் பழக்கப்பட்ட கோவலனுக்கு சட்டென அதுதானே புலப்படும்? என்ன சொல்கிறீர்கள்?
 
காலைப் போதில்,
மேற்குக்காற்று விரைந்துவீசக் கொடிகளசையும் தெருவின்
பொதுமகளிர் தம் காதற்செல்வரோடு,
நீர்பெருகிவரும் வையை மருதந்துறையில்
அதன் விரிபூந் துருத்தியின் (finger jetty with wild flowers)
வெண்மணல் அடைகரையில்,
நீரில் ஓங்கிய மாடங்கொண்ட நாவாயை இயக்கி,
பூக்கள் நிறைந்த புணையைத் தழுவிப்
புனலாடியமர்ந்து பொழுதுபோக்கி,
 
பகற் பொழுதில்
மூதூருக்குள் வந்து
தண்ணறும் முல்லையையும், தாள்நீர்க் குவளையையும்,
கண்ணவிழ் நெய்தலையும் கூந்தலில் பொருந்தச்சூடி,
தாதுவிரிந்த தண்செங்கழுநீர்ப் பிணையலைக்
கொற்கை முத்துமாலையோடு பூண்டு,
தெற்கேயுள்ள பொதியிலின் சந்தனச்சேறை மெய் முழுதும் பூசி,
பொற்கொடி மூதூரின் (மதுரை) பொழிலை ஒட்டியமர்ந்து பொழுதுபோக்கி,
 
எற்பாட்டு நேரத்தில்,
இளநிலா முற்றத்தில்,
தன் அரையின்மேல் பூப்பின்னிய அரத்தப்பட்டை உடுத்தி,
வால்போல் தொங்கும் கூந்தலில், வெட்பாலைப்பூ பொருந்திய,
சிறுமலையின் செங்கூதாளமும், நறுமலர்க்குறிஞ்சியின் நாள்மலரும், வேய்ந்து,
குங்குமச் செஞ்சாந்தை கொங்கையில் இழைத்து,
செந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்,
செங்கொடு வேரியின் செழும்பூ மாலையை
அழகிய பவளக்கோவை அணியொடு பூண்டு,
தாங்கொண்ட கோலத்தின் தகையைப் பாராட்டும்படி
மலர்ப் படுக்கையின் மேலிருந்து,
 
மலைச்சிறகை அரிந்த வச்சிர வேந்தனான இந்திரனிடம்
ஆரவாரம் மிகுந்த மதுரை நகரின் செவ்வணி காட்டும்
கார்கால அரசன் வாடையோடு வருகின்ற காலத்திலுமின்றி,
 
சிற்ப வல்லோராற் செய்யப்பட்ட முகில்தோய் மாடத்தில்
குருங்கண் சாளரப் பக்கலில் அகில் விறகு நெருப்பிற்கருகே,
நறிய சாந்து பூசிய மார்புடைய மாந்தரோடு கூடி அமருங் கூதிர்க் காலத்திலும்,
 
வளமனை மகளிரும், ஆடவரும் விரும்பி இளநிலா முற்றத்தில்
இளவெயிலை நுகரும்படி விரிகதிர் மண்டிலம் தெற்கே போக
வெண்முகில் அரிதில் தோன்றும் முன்பனிக் காலத்திலும்,
 
அதுவுமின்றி,
 
உயர்ந்து பரந்த ஆற்று வளைவுகளில் தொண்டுசெய்யும் ஊழியரிட்ட
அகில், துகில், ஆரம், வாசம், தொகுத்த கருப்பூரம் ஆகியவற்றின் மணஞ்சுமந்து
உடன்வந்த கீழைக்காற்றோடு புகுந்து, பாண்டியன் கூடலில்,
வெங்கண் நெடுவேளின் வில்விழாக் காணும் பங்குனி முயக்கக் காலத்தில்
பனியரசு எங்கேயிருக்கிறான்?- என்றபடியும்,
 
குருக்கத்திக் கோதை தன் கொழுங்கொடியை எடுப்ப,
இளமரக்காவும் நந்தவனமும் நறுமலர்களை ஏந்தத்
தென்னவன் பொதியமலைத் தென்றலோடு புகுந்து
மன்னவன் கூடலில் மகிழ்துணையைத் தழுவும்படி
இன்னிளவேனில் எங்குதான் உள்ளதென்றும்
 
கொடியுருவுடைய மகளிர் தம்மேல் உரிமை கொண்ட பெருங் கொழுநரோடிருந்து
பருவங்களை எண்ணும் காலத்தில்
கன்றுகளமரும் ஆயத்தோடு களிற்றினம் நடுங்க,
வெயில் நிலைபெற்ற, குன்றுகள் நிறைந்த நன்னாட்டின்
காடுகளிட் தீ உண்டாகும்படி அழலை மூட்டி,
கோடையொடு புகுந்து கூடலை ஆண்ட வேனில் வேந்தன்
 
வேற்றுப்புலம் படர முயல்கின்ற
மிக்கவெயிலுடைய கடைநாளில் 
 
கூடார வண்டியும் (வையம் = wagon), பல்லக்கும், மணிக்கால் படுக்கையும்,
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,
பொன்னாலான வெற்றிலைப் பெட்டியும், தம் அரசன் கொடுத்த கூரிய நுனிவாளும் எனப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கையில்
 
பொற்றொடி மடந்தையரின் புதுமணம் புணர்ந்து,
செம்பொன் வள்ளத்தில்
சிலதியர் (வேலைக்காரர்) ஏந்திய இனியதேறலை மாந்தி மயங்கி,
”வரிங்காரம்”(=ரீங்காரம்) பாடும் வண்டினத்தை அவை பொருந்துமிடத்தில் அன்றியும்,
நறுமலர் மாலையின் வறிய இடத்திலுங் கடிந்து,
 
ஆங்கு
 
இலவு இதழ் போலும் செவ்வாயில்
இளமுத்துப் போலும் பற்கள் அரும்ப,
ஊடற் காலத்துப் போற்றாது உரைத்த
கருங்குவளைக் கண்ணாரின் கட்டுரை எதற்கும்
நாவால் அடங்காத நகைபடுங் கிளவியும்,
 
அழகிய செங்கழுநீர்ப்பூவின் அரும்பை அவிழ்த்தது போல்,
செங்கயல் நெடுங்கண்ணின் செழுங்கடைப் பூசலும்,
கொலைவில் போன்ற புருவக் கோடிகள் சுருளத்
திலகம் பதித்த சிறுநெற்றியில் அரும்பிய வியர்வைத் துளியும்
 
எனச்
 
செவ்வையான இருப்பை எதிர்பார்க்கும் செழுங்குடிச் செல்வரோடு,
நிலத்தைப் புரக்கும் அரசருக்கு மகிழ்ச்சிதரும் வீதியும்.
 
[இனி என் குறிப்புக்கள். வைகைநீரில் மாடங்கொண்ட நாவாயென்பதால் கோடையிலும் ஆற்றில் பெருவெள்ளம் தேங்கியது புலப்படும். இன்று மதுரைக்கருகில் கிட்டத்தட்ட மணலாறு தான் இருக்கிறது; அன்றேல் சாக்கடையும், சவர்க்கார நுரை கலந்த கழிவுநீரும் தான் வைகையிற் பாய்கிறது. மதுரைக்கு அப்புறம் இன்றிருக்கின்ற கடை மடை வேளாண்மை கடினம் தான்.
 
மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு. இன்னும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. மூதூருக்கு மருதந்துறை (மருதை) என்ற பெயரும், கோட்டையின் உள்ளிருந்த அரசவூருக்கு மதிரை என்ற பெயரும் இருந்திருக்கலாம். மருதை, மதிரை என்ற இரண்டும் மருவி மதுரை என்றாகியிருக்கலாம். தென்மதுரை, கவாடபுரம், கொற்கை, மணலூரென வந்தது உண்மையானால், கொற்கையே பாண்டியரின் தோற்றம் என்பதும் உண்மையானால், மூதூரும் கோட்டையும் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு. கீழடியின் தொல்லாய்வே அதை நமக்கு வெளிப்படுத்தவேண்டும்.
 
ஏற்பாட்டு நேரப் பொழுதை இற்றைத் தமிழில் மறந்து மாலையையும், யாமத்தையும் நீட்டிச் சொல்லுவது பெருஞ்சோகம். படித்தோர் இப்பிழையை மாற்றினால் மற்றையோருக்கும் பிழையைச் சொல்லிச் சரிசெய்ய முடியும். 6 சிறுபொழுதுகளை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
 
அரத்த நிறம் என்றதால் சீனப்பட்டை சட்டென இங்கு அடையாளங் கண்டுகொள்கிறோம். கி.மு.,80 வாக்கில் இது புழங்கியது ஓர் அரிய வரலாற்றுக்குறிப்பு. தவிர, காடுகாண்காதையை விவரிக்கையில் சிறுமலைக்காடு, கோடைக்கானல் பற்றிச் சொன்னேன். இங்கும் சிறுமலை சொல்லப்படுகிறது. சிலம்பின்வழிச் சிறுமலையை அடையாளங் காணாது, கவுந்தியைக் கர்நாடகத்திற்கும், திருவரங்கத்தைச் சீரங்கப்பட்டினத்திற்கும் கொண்டு போவாரை என்சொல்வது? மஞ்சள் கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும்.   
 
குறிஞ்சியென்பது கோடைக்கானல் பேருயர மலைகளிற் பூப்பது. செங்கூதாளம் நடுத்தர உயரங்கொண்ட சிறுமலையில் கிடைப்பது. வெட்பாலை விராலிமலையிலிருந்து மதுரை வரும் வரையுள்ள பாலை நிலத்திற் கிடைப்பது மூன்றையும் சேர்த்துச்சொல்வது ஒருவித திணைமயக்கம். ஆனால் ஒரு நளினம் அதில் தென்படுகிறது. எந்தத்திணையும் இன்னொன்றிற்குச் சளைத்ததல்ல. செங்கொடு வேரி என்பது இன்னுஞ் சரியாக அடையாளங்காணாத ஒரு புதலியற் சொல். சிலப்பதிகாரத்தைப் புதலியற் கண்ணோட்டத்தோடு படித்து ஓர் ஆய்வு வரக்கூடாதா? - என்ற ஏக்கம் எனக்குண்டு.
 
அடுத்துச் சங்க இலக்கியத்திற் பலவிடங்களில் கூறப்படும் புணையையும் நாம் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை. மரத்தோணிகள் மட்டும் நீரைக் கடக்கப் பயனுறவில்லை. மிதக்கும் புற்கட்டுகளும் பயன்பட்டன. குறிப்பாகக் கோரைப்புற் கட்டுகள். வளைபொருள் சுட்டும் கொடுக்குப்புற்களைக் கொறுக்குப்புற்களென்றும் அழைத்தார். கொடு>கோடு>கோறு>கோறை>கோரை என்றும் இச்சொல் திரியும். (கோரை அதிகமாய் விளைந்த இடம் கொற்கை. அப்பெயர் அப்படி எழுந்ததுதான். இற்றைத் தமிழ்நாட்டிற் பலவிடங்களில் -சென்னை வேளச்சேரிக்கப்புறம் பள்ளிக்கரணை போகும் வழியிலுள்ள சதுப்பு நிலம், சிதம்பரம்-சீர்காழி வழியில் கொள்ளிடந்தாண்டி வரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்குச் சற்றுமுந்தையப் பத்தமடை - எனப் பல பகுதிகளிற் கோரை செழித்துவளர்கிறது. கோரைகளிற் கனம், சன்னம், கோலெனப் பல்வேறு விதப்புகளுண்டு. கோரைப் புற்கட்டுகளைப் புணைத்துச் (>பிணைத்து) செய்தது புணை..”கொழுங்கோல் வேழத்துப் புணை” என்று அகம் 186-12 இலும், அகம் 152 இலும் பரணர் சொல்வார். கொழுங்கோல்= கொழுத்தகோல். வேழம்= கொறுக்கம் புல்தட்டை. (வெள்ளைநார்த்தட்டை வேழமாகும். இது ஒருவகை நாணல். வேழம் என்ற சொல்லைக் கரும்பிற்கும் நாம் பயன்படுத்துவதாற் குழம்புகிறோம்.) ”புணை” என்ற சொல்லின் கீழ் 38 இடங்களுக்குமேல் சங்ககாலக் குறிப்புக்களுண்டு. அவற்றை ஆய்ந்தால் பலன்கிடைக்கும்.
 
எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அஸ்டெக், மாய, இங்க்கா, (ஈசுடர்தீவு போன்ற) பாலினீசியப் பழம் நாகரிகங்களிற் புழங்கிய reed-ship, read boat ஆகியவை ”புணை”ப் பெயரில் நம்மூரிலும் இருந்தன. அழகன் குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச்சில்லில் கீறியிருந்த ஓவியமும் புணையையே காட்டியது. புணைநுட்பியல் மேற்சொன்ன நாடுகளின் தனித்தனியாக எழுந்திருக்க வாய்ப்பில்லை. அதேபொழுது எங்கு முதலிலெழுந்ததெனவென்றும் இன்னும் அறியப்படவில்லை. இவற்றைக் கட்டும் நுட்பம் சில நாடுகளில் மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. இவற்றைக்கொண்டு பெருங் கடல்களையும் மாந்தர் ஒருகாலத்திற் கடந்திருக்கலாம் எனக் கடலியல் ஆய்வாளர் எண்ணுகிறார். இற்றைக் கப்பல்நுட்பியல் கூடப் புணை நுட்பியலிலிருந்தே வளர்ந்திருக்குமென எண்ணுகிறார். ஹெர்மன் தீக்கன் சொல்வதுபோல் 9 ஆம் நூற்றாண்டில் “room" போட்டு யோசித்துச் சங்க இலக்கியத்தை ஏழெட்டுப் புலவர் எழுதியிருந்தால் அழிந்துபோன புனையை எப்படி எழுதினார்? மாயமா? மந்திரமா? தீக்கனின் கூற்று ஒரு நம்பமுடியாத கற்பனையாகவேயுள்ளது. ஆனால் அக்குவேறு ஆணிவேறாக அவரை மறுப்பதற்கு எந்தத் தமிழறிஞரும் இதுவரை முயற்சி செய்யவில்லை.
 
முத்துமாலை போலவே பவளக்கோவையும் பெரிதும் விரும்பப்பட்டிருக்கிறது. பவளம் சோழநாட்டின் சிறப்பு. கடலுயிரியான சங்குப்பூச்சி, இராமேசுரத்திற்கு வடக்கே பவளத்தை உருவாக்குகிறது. தெற்கே முத்தை உருவாக்குகிறது. இவையிரண்டுமே பூச்சிகளின் வேலையும், ஊடே கிடைக்கும் இரும்பு மண்ணூறல் (mineral) தூசும் விளைவிக்கும் மாற்றங்கள் தான். இதையும் உயிரியல், வேதியல் கண்ணோட்டத்தோடு சுற்றுச்சூழல் சார்ந்து ஆய்ந்துபார்க்கவேண்டும். இதையெல்லாஞ் செய்யாமல் தமிழாய்வு எங்கோ போய்க்கொண்டிருப்பது நமக்கு வருத்தமே தருகிறது.
 
மழைக்கடவுள் இந்திரனிடம். மதுரையில் மழைநீர் சிவந்தோடுவதை, அதன் அணியைக் காட்டுவதோடு, அதுவரையிருந்த முதுவேனிலைத் தணிப்பதாய்ச் சற்று வாடையையும் கார்காலம் கொண்டுவரும். இது இங்கு அழகாய்ச் சொல்லப்பெறுகிறது. 
 
முகில்தோய் மாடம் என்பது உயர்வுநவிற்சியணி. ஆனால் பெரிய கட்டிடங்கள் மதுரையில் இருந்திருக்கலாம். எவ்வளவு பெரியவை என்பது தொல்லாய்வின் வழி ஓரளவு தெரியலாம். காத்திருப்போம். கூதிர்க்காலம் என்பதைத் தமிழகத்திற் பலரும் தவறாகவே புரிந்துகொள்கிறார். அது autumn. குளிரடிக்கும் காலமல்ல. கூதிரும் கூதலும் வெவ்வேறானவை.. 
 
விரிகதிர் மண்டிலம் தெற்கே போகும் முன்பனிக் காலத்தில் (புரட்டாசி, ஐப்பசி) இன்றும் இளநிலா முற்றங்களில் வெளியேயிருக்கும் விருப்பங்கள் தமிழருக்குண்டு. இக்காலத்தில் வெண்முகில் அரிதில் தோன்றுமென்பது அரிய வானியல் அவதானிப்பு.
 
ஓங்கிரும் பரப்பைப் பெருங்கடலென்றும் வங்க ஈட்டத்தை நாவாய்த்திரள்களென்றும் தொண்டியோரைத் தொண்டித் துறைமுகத்தோடு தொடர்புறுத்தியும் உரைகாரர் சொல்வதை நானேற்கத் தயங்குவேன். இச்செய்திகளுக்கும் தொண்டித் துறைமுகத்திற்கும் தொடர்பிருப்பதாய் நானெண்ணவில்லை. பாண்டியரின் தொண்டி, சங்ககாலத் துறைமுகமல்ல; இடைக்காலத்தது. அன்றிருந்த துறைமுகங்கள் கொற்கை, அழகன்குளமெனும் மருங்கூர்ப்பட்டினம் போன்றவை தான். அகில், கீழைநாடுகளிலிருந்து வந்த நறுமண விறகு; துகில்: உள்நாடு, வெளிநாடெனப் பல இடங்களிலிருந்துவந்த ஆடை; இங்கே துணியின் மணம் பேசப்படுகிறது. வேறொரு ஆசிரியர் இதைப்பேசி நான் கேள்விப்படவில்லை.
 
ஆரமென்பது சந்தனம். பாண்டியிலும், சேரலத்திலுங் கிடைத்தது; நாவாய் மூலம் பாண்டிக்கு வந்ததல்ல. வாசம், பல்வேறிடங்களிலிருந்து பெற்ற மணப்பொருள். கருப்பூரம் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கிறங்கியது. அடியார்க்குநல்லார் பல்வேறு அகில்களையும், துகில்களையும் ஆரங்களையும், வாசங்களையும் கருப்பூரங்களையும் விதப்பாய் விவரிப்பார். அவற்றை அடையாளங் காண்பதே ஒரு பெரிய ஆய்வு. இப்படிவந்த உள்நாட்டு, குணகடல்நாட்டு, குடகடல்நாட்டுப் பொருள்களை எல்லாஞ் சேர்த்து நாவாயோடு தொடர்புறுத்துவது கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது. வைகையின் பெரும்பரப்பு ஆற்றுவளைவுகளில் செல்வரும் மகளிரும் ஆங்காங்கு தங்கி, அடித்தொண்டரை வைத்து நறுஞ்சரக்குகளை விரவி இன்பங் களிக்கிறார். அப்படித்தான் நானிங்கு பொருள் கொள்கிறேன்.
 
தவிர, இங்கே வெங்கண் நெடுவேள் வில்விழாவைக் காமனோடுதொடர்புறுத்தியே உரைகாரர்சொல்வர். ஆனால் வெம்மையான கண் என்பது காமனுக்கு ஒத்துவருமா? காமன் கனிவானவன் அல்லவா? முருகனின் கதைப்படி, சூரபன்மனையும், அவன் தம்பியரையும் முருகன் தோற்கடித்துப் பின் அமைதியுற்று பங்குனி உத்திரத்திற்கு (பங்குனிமுயக்கநாள் அதுதான்.) தேவயானையைக் கைப்பற்றுவான். வெவ்வேறுகோயிற் கடவுள்களுக்கும் பங்குனி உத்திரத்திற்றான் திருமணவிழாக்கள் நடக்கும். வெங்கண் நெடுவேள் வில்விழா என்பது வெம்மையான கண்கொண்ட முருகவேளின் கைவேலும் வில்லும் வெற்றிபெற்ற விழா. அற்றைக்காலத்தில் பின்பனியின் பெரும்பொழுதில் பங்குனி உத்திரம் ஆண்பெண் தழுவலில் தமிழர்கள் முயங்கிக் கிடக்க ஊக்கந் தந்திருக்கலாம்.
 
உறையூரிலிருந்து மதுரை வரும்போது குன்றுகள் நிறைந்தே காணப்படும். (கூகுள் முகப்பைப் பாருங்கள்.)குன்றுகள் நிறைந்த நன்னாடு என்பது சரியான விவரிப்பு. காவிரி வழியே புகையின கல் (ஹோகனேக்கல்) போகும் வரை ஆற்றிற்கருகில் குன்றுகள் அவ்வளவு தென்படாது. இதற்கப்புறமும் வடகொங்கிற்குச் சிலம்புக்கதையைச் எடுத்துச்செல்வோருக்கு என்னசொல்லி விளங்கவைப்பது?    
 
பொதுவாக அமெரிக்கக் கலிபோர்னியாக் காடுகள் மாதிரி மரங்கலுரசிக்கொண்டு தீயூண்டாவது ஓரிடத்தின் அளவுகுறைந்த ஈரப்பதத்தை ஒட்டியதாகும். அப்படியாயின், அக்காலத்தமிழகத்தின் வெதணம் (climate) எப்படியிருந்தது? குறுகுறுப்பான கேள்வியல்லவா? அக்கால வெதணத்தைக் கண்டுபிடிக்கப் புதலியலின் பூந்தாது அலசல் botanical pollen analysis), வேதியலின் இசையிடப்பு அலசல் (chenical isotope analysis) போன்றவற்றால் பழம் ஏரிகளிலும், ஆற்றுப்படுகைகளிலும் ஆழமாய் மண்கூற்றை (soil sample) எடுத்து ஆய்வுசெய்யமுடியும். நம் போகூழோ என்னவோ, அதுபோன்ற ஆய்வுகள் நம்மூரில் நடத்தப்படுவதே இல்லை. வெறுமே இந்த இலக்கியங்களை வைத்துக்கொண்டு ”தமிழன் நாகரிகம், அப்படி, இப்படி” என மேடைதோறும் அளந்துகொண்டிருக்கிறார். உணர்வே உண்மையாகாது என்று இவர்களுக்கு எப்பொழுதுதான் புரியும்? மாறாக இலக்கியங்களை ஆதாரமாக்கி இதுபோன்ற அறிவியல் ஆய்வுகளைச்செய்து உண்மையை எடுத்துக் கூறினாற்றான் உலகம் எடுத்துக்கொள்ளும். தமிழறிஞர் என்று மாறுவாரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன். "மடைத்தலையில் ஓடுமீனோட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு".
 
வெற்றிலை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நமக்கு வந்த பயிர்க்கொடி. சில்ம்புக்காலத்திலேயே அது நமக்கு வந்துவிட்டது குறிப்பான செய்தி.
 
கூரிய நுனிவாளை அரசன் செல்வர்க்குக் கொடுத்தானா, பொதுமகளிர்க்குக் கொடுத்தானா என்று என்னால் மேலே விளங்கிக்கொள்ள முடியவில்லை. அறிந்தோர் விளக்கிக் கூறினால் ஓர்ந்துபார்ப்பேன்.
     
இனிய தேறலென்பதும் பல்வேறு வகைப்பட்டது. என்னென்ன வகைகள் பழந்தமிழரிடம் புழக்கத்திலிருந்தன என்பதையும் புதலியல் (botony), உயிரியல் (biology), வேதியல் (chemistry) பார்வையில் ஒரு உயிர்வேதிப்பொறியாளர் (biochemical engineer) ஆய்ந்துபார்க்கவேண்டும்.
 
இனி மதுரையின் அடுத்த வீதிகளுக்குப் போவோம்.
 
அன்புடன்,
இராம.கி.
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்

iraamaki

unread,
Sep 21, 2016, 9:59:40 AM9/21/16
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
கோட்டைக்குள் சொல்லப்படும் முதல்விவரிப்பு செல்வர்வீதியெனக் கொள்ளாமைக்குக் காரணமுண்டு. மதுரைக்குள் நுழைகையில் கோவலன் அகவை பெரும்பாலும் 21-23. (கண்ணகிக்கு 17 -19.) தான் கோவலன் இதுநாள்வரை ஏற்றுமதி/இறக்குமதி வணிகஞ்செய்தாலும், தந்தையின் உள்நாட்டு வணிகத்தில் மதுரை வாடிக்கையாளர், தொடர்பாளர் விவரங்கள் ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அப்படித் தெரிந்தவரிடஞ் செல்லக் கோவலனுக்கு விருப்பமிருந்தால், ”மன்னர்பின்னோரைக் கண்டு தங்க ஏற்பாடு செய்யும்வரை இவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று காவுந்தியிடம் கோவலன் சொன்னதின் பின், முறையாகக் கோட்டைக்குள் போனவுடன் விசாரித்துச் செல்வர் வீதிக்குப் போயிருப்பான். அப்படியின்றி அவன் ஊர்சுற்ற முற்பட்டதால், தெரிந்தவரிடம் அடைக்கலந்தேடுவது அவன் குறிக்கோள் அன்றெனப் புரிகிறது. தன்னிலை வெட்கம் பிடுங்கித் தின்றதால், மதுரையை நோட்டம் பார்க்க முற்படுகிறான். இப்பாவனை கொண்டவன் செல்வர் வீதிக்குப் போகமாட்டான். (யாரேனும் அடையாளங் கண்டால் என்ன செய்வது?) எனவே முதலிற் பார்த்தது கேளிக்கையாடும் மருதந் துறையும், செல்வர் வந்துசெல்லும் பொதுமகளிர் வீதியெனவும் பொருள்கொள்கிறோம்..
 
இனிக் கலைவல்லார் நிரம்பிய இருவீதிகளைப் பார்க்கப் போகிறோம். மதுரையில் 2/3 வீதிகள் கணிகையரையொட்டி இருந்தனபோலும். பரத்தையென்ற சொல்லிற்குத் தமிழிற் இருபொருள்களுண்டு. ஒரு பொருள் பரம் = மேடை; பரத்திலாடுபவள் பரத்தை; பரத்திலாடும் நாட்டியம் பர(த்)தநாட்டியம். (பரத்து நாட்டியத்தின் தமிழ்த்தோற்றம் அறியாது ”பரத முனிவர் அவரின் சாஸ்திரம், அது, இது” என்பது சிலர் பின்னாற் கட்டிய தொன்மம்.) இன்னொரு பொருள் பரர்/பலரைத் தழுவும் பரத்தை. இரு பொருளும் ஒரே மாந்தரிடம் இருக்கத் தேவையில்லை. அதேபோது சிலரிடம் சேர்ந்திருக்கலாம். நம்மிற் பலரும் இப்பொருள்வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதிருக்கிறோம். சங்ககாலத்தில் இல்லக்கிழத்தி, இற்பரத்தை (concubines), பொதுப்பரத்தை (prostitutes) என 3 வகையாய்ப் பெண்கள் அறியப்பட்டார். எல்லாப் பரத்தைகளும் நுண்கலையாளரில்லை. எல்லா நுண்கலைப் பெண்களும் பரத்தைகளில்லை. .
 
இன்னொரு செய்தியை இங்கே சொல்லவேண்டும். ”ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்” என்ற இல்லற ஒழுக்கம் சங்ககாலக் குமுகாயத்தில் பெரிதும் இருந்தாலும் செல்வரும், அதிகாரத்தில் இருந்தோரும் என ஆண்மக்கள் மீறிய குறிப்புக்களுமுண்டு. இல்லையெனில் இற்பரத்தையும், பொதுப்பரத்தையும் இலக்கியங்களிற் பேசப்பட்டிருக்க மாட்டார். ”சாத்தாரமக்கள் இம்மரபை மீறினாரா?” என்பதற்கும், பெண்கள் இதைமீறினார் என்பதற்கும், ஒரு சான்று கூடக் கிடைக்கவில்லை. எனவே சங்ககாலக் குமுகாய உள்ளடக்கம், ஆணாதிக்கம் மிகுந்த வருக்கக் குமுகாயமாகவே (class soceity) தோற்றுகிறது. ஒருபக்கம் குறிஞ்சியிலும், முல்லையிலும் வேடுவச்சேகர (hunter-gatherer) வாழ்க்கை. இன்னொருபக்கம், முல்லை, மருதம், நெய்தல் திணைகளில் வருக்கக் குமுகாய எழுச்சி எனக் கலவையாகவே சங்கக் குமுகாயம் இருந்தது.. கூடவே நகரஞ் சார்ந்த விழுமியங்களும் (city based values) தோன்றிவிட்டன. 
 
இன்றும் நாட்டுப்புறங்களில் சாத்தார மக்களிடையே இல்லற ஒழுக்கத்தை மீறியார் முகத்திற் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவரைக் கழுதையிலேற்றி ஊரரங்கில் வலம்வர வைப்பது தண்டனையாய்க் கருதப்படுகிறது. (ஊரின் 4 வீதிகளும் அரக்கப்பட்ட காரணத்தால் அரங்காயிற்று. பிற்காலச்சோழர் காலத்தில் கோயிலைச்சுற்றி தேரோடும் நாற்பெரும் வீதிகளே ஊரின் அரங்காகும். இந்த அரங்கு, பொதியிலில் / அம்பலத்தில் முடியும். பொதியிலும் கோயிலும் அருகருகே ஒன்றைப்பார்த்து இன்னொன்றிருப்பதை இன்றும் பலவூர்களிற் காணலாம்.) இக்குற்றத்திற்கு இன்னொரு தண்டனையுமிருந்தது.
 
தமிழிற் சுடுமண் என்பது செங்கலைக்குறிக்கும். நாகரிகம்வளர்ந்த நிலையில் எல்லாக் கட்டுமானங்களுக்கும் செங்கல் பயன்பட்டதால், அறத்தொடு நிற்கும் (ஒழுக்கக்) கட்டுமானத்திற்கும் (”படிதாண்டாப் பத்தினி’ என்ற பழமொழிக்கும்) இதுவே குறியீடானது. ஒழுக்கத்தை மீறிப் படிதாண்டியோர் செங்கற் சுமந்து அரங்கைச் சுற்றிவருவது வடுவாக / தண்டனையாகக் கருதப்பட்டது. இதில் பரத்தைக் கொடி பறந்த வீட்டினர்க்கு மட்டுமே விதிவிலக்குண்டு. அதுவே அவர்க்குச் சிறப்புமாயிற்று. மணிமேகலை காப்பியத்தில் ”உதயகுமாரனின் பொற்றேரில் எல்லோரும் அறிய மணிமேகலையை ஏற்றேனாகில், என் சிறப்புப் போய்விடும். நான் சாத்தாரப் பெண்கள் போலாகி
 
சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபினள்
 
ஆவேன்” என்று சித்திராபதி வஞ்சினம் சாற்றிப்போவாள். படிதாண்டும் வடு என்பது இற்கிழத்திகளுக்கானது. வடுநீங்கு சிறப்பென்பது பரத்தைகளுக்கானது. இதே கருத்தில் சிலப்பதிகாரத்தின் ஊர்காண் காதையில் 146 ஆம் வரியெழும். (இக்கருத்தை இதுவரை ஒழுங்காய் விளக்கிய எவ்வுரையையும் பார்த்தேனில்லை.) அடுத்து உரைவீச்சில் வருவது ஆடல் மகளிரின் வீதிபற்றிய விவரிப்பாகும். ஆடற் கணிகையருக்கு உரிய சிறப்பையும், நாட்டியக் கூறுகளையும், இசைக்கூறுகளையும் கூறி இவ்வகைப்பெண்கள் மற்றோரைக் கவர்ந்திழுக்கும் பாங்கையும் கூறுகிறது. 
 
சுடுமண் ஏறாத,
வடுநீங்கு சிறப்புக்கொண்ட,
முடியரசுகூட ஒடுங்கிப்போகும் கடிமனை வாழ்க்கையில்,
”வேத்தியல், பொதுவியல்” என்ற இருதிற இயல்பினை அறிந்து,
சிறிதும் வழுவாத மரபில்,
ஆடல், பாடல், பாணி, தாளம், உடனுறும் குயிலுவக் கருவி ஆகியவை உணர்ந்து,
(நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலெனும்) நால்வகை அவிநயக் களத்தில்,
[குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) எனும்]
7 சுரத்தில் எய்தியதை விரிக்கும் பெருஞ்சிறப்புடைய,
தலைக்கோல் பெற்ற அரிவை (19-24 அகவை),
வாரம்பாடும் தோரியமடந்தை (15-18 அகவை),
தலைப்பாட்டுக் கூத்தி,
இடைப்பாட்டுக் கூத்தி
என 4 வகையாருமான நயத்தகு மரபைச்சார்ந்து,
1008 கழஞ்சை நாளுந் தவறாதுபெறும், முறைமைவழுவாத,
தாக்கணங்கை ஒப்பியோரின் நோக்குவலைப்பட்டுத்
தவத்தோராயினும்,
நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையோரும்,
காமவிருந்தை முன்பறியாப் புதியோராயினும்,
தம் பெறுதற்கரிய அறிவு கெட்டழியும்படி,
நாள்தோறும் ஏமத்தின் இனியதுயிலில் வந்துகிடக்கும்,
பண்ணையும் கிளியையும் பழித்த தீஞ்சொல்லையுடைய,
64 கலைவல்லோரின் இருபெரும் வீதிகளும்
 
வையமும், பாண்டிலும், மணித்தேரில் பூட்டுங் கொடிஞ்சியும்,
மெய்புகும் கவசமும், விழைமணி பொருத்திய அங்குசமும்,
தோல்புனைச் செருப்பும், அரைப்பட்டிகையும் (waist belt),
வளைதடியும், மிகுந்த வெள்ளையான கவரியும்,
அம்பு தடுக்குங் கேடயம், வாள் தடுக்குங் கேடயம், பன்றிமுட் கேடயம், குத்துக்கால், என செம்பிற் செய்தனவும்,
வெண்கலத்திற் செய்தனவும்,
புதிதாய் முடிந்தவையும், பழுதிருந்து சரிசெய்யப்பட்டனவும் (reconditioned), வேதித்து வெளிவந்தவையும்,
தந்தம் கடையும் தொழில் சார்ந்தவையும்,
பல்வேறு வாசப்புகைப் பொருள்களும்,
மயிர்ச்சாந்திற்குத் தேவையானவையும்,
பூவால் புனையப்படுவனவும்
என வேறுபட்டுத் தெரிவறியா அளவிற்கு வளங்கள் கலந்துகிடக்கும்
(அரசன் கூட விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்
 
மேலே வேந்தரரங்கில் ஆடும் ஆட்டத்தை வேத்தியலென்பது தட்டையான விவரணையாகும். வேந்தர்க்கான அறங்களை உணர்த்தும் நாட்டியமென்பதே சரியான பொருள். எல்லாப் பொதுவிடத்தும் பொதுமையாக ஆடக்கூடியதல்ல. சார்ந்தோர்கூடிய அரசகளத்தில் அவனுக்கு மட்டுஞ் செய்வது வேத்தியலாகும். பொதுவரங்கில் எல்லோர்க்கும் பொதுவான அறங்களைச் சொல்வது பொதுவியலாகும். “அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி” என்ற அரியநூலை முனைவர் வெ.மு.ஷாஜகான்கனி எழுதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இன்னும் விளக்கம் அதிற் கூறப்பட்டுள்ளது. பாணி என்பது பண்ணும் முறை. நட்டுவனாரின் விதப்பு அடவுகளைக் குறிக்கும். காட்டாகப் பந்த நல்லூர்ப் பாணியென்பர். ஒரே பாட்டிற்கு வெவ்வேறு விதமாய் அவிநயஞ்செய்து படைப்பாற்றலைக் காட்டுவர். இதில் நட்டுவனார், நாட்டியமாடுவோர் ஆகியோரின் படைப்பாற்றல் வெளிப்படும். தாளம் ஆடலுக்கு அடிப்படை. நுணுகிய அசைவுகளை நிருணயிக்கும் தாளத்திற்குத்தக்க ஆடவேண்டும். குயிலுக்கருவி என்பது கூடச்சேரும் ”இசை வாத்தியங்களைக்” குறிக்கும். எந்த அவிநயமும் நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலென்ற 4 வகைகளுக்குள் அடங்கும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் 7 சுரத்தில் எல்லா இசைகளும் அமைகின்றன. (இச்சுரங்களைச் ச, ரி, க, ம, ப, த, நி என்று இன்று அழைக்கிறோம்.) பார்க்க:
தலைக்கோலென்பது ஆட்டத்திற் சிறந்தவளைக் குறிக்க வேந்தன் தந்த பட்டம். தண்டமென்பது நட்டுவனாரின் கைக்கோலைக் குறிக்கும். தண்டியமென்பது நாட்டியப் படிப்பைக் குறிக்கும். முதல், வாரம், கூடை, திரள் என்பன தாளத்தின் 4 நடைகள். முதல்நடை தாழ்ந்துசெல்லும். திரள்நடை மிகமுடுகியது. வாரநடையே பாட்டிற்குச் சிறந்ததென்பார். வாரநடை வேகம் முதல் நடையினும் 2 மடங்காகும். கூடைநடை 4 மடங்கு. திரள்நடை 8 மடங்கு. தோரியமடந்தை = பாடல், பண், தாளம் போன்றவை அமைத்து ”எது எப்படிச் சேரவேண்டும்?” என்ற வரிசை முறையை அமைப்பவர் (இசையமைப்பாளர்). தோர் = வரிசை; தோரியம் = வரிசையொழுங்கு தோரணை = காரணகாரிய வரிசையொழுங்கு. தலைப்பாட்டுக்கூத்தி = நாட்டியந்தொடங்கையில், தலைவிக்குமாற்றாய் நடுவிலாடும் மாற்றாளி (substitute dancer). இடைப்பாட்டுக்கூத்தி = தலைவிக்கும், மாற்றாளிக்கும் உடன்வந்து இடையாடும் கூத்திகள். இவரை அடுத்தாடிகள் (assistant dancers) என்றுஞ்சொல்வர்.
 
1 கழஞ்சு ஏறத்தாழ 5.2 கிராம் எடையைக் குறிக்கும். 1008 கழஞ்சுப்பொன் 5.2 கிலோகிராம் எடைகொண்டது. இதன் பொன்மை 9.625 மாற்றா (22 caret), 7.875 மாற்றா (18 caret) என்று தெரியாது. ஒவ்வோராட்டத்திலும் இவ்வளவு பொன் பெறுமளவிற்குத் திறமையானவளென இங்கே குறிப்பிடப்படுகிறது. அணங்கு = ஒருவர் மேலேறிய ஆவி/பேய் (spirit). அணங்குதல் = மேலுறுதல்; தாக்கணங்கு = மோகினிப்பேய்; தன்னழகால் யாரையுந் தாக்கி ஆட்கொள்ளும் திறம்பெற்றதாய் எண்ணப்பட்ட தொன்மம் இங்கு சொல்லப்படுகிறது; நோக்குவலை = பார்வையாற் கட்டப்படும் வலை; நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையர் = பெண்குறுநகையைப் பதம்பார்த்து, தேன்குடி வண்டுபோல் வந்துசேரும் இளையர்; ஏமம் = safety; 64 கலை வல்லோர் = 64 கலைகளிலுஞ்சிறந்த வல்லமையாளர்
 
வையம் = சுமையேற்றப்பயன்படும் கூடாரவண்டி (wagon, van). ”அந்த van ஐக் கூப்பிடப்பா” என்பதற்கு நல்லதமிழில் “அந்த வையத்தைக் கூப்பிடப்பா” எனலாம். பாண்டில் = கிண்ணி போன்ற தட்டின்கீழ் அச்சும் சக்கரங்களும் பொருந்திய திறந்த வண்டி. சுமையேற்றாது, ஓரிருவர் வேகமாய்ப்போகப் பயன்படும். ஒற்றைமாட்டு வண்டிகள் இதிலடங்கும். மணித்தேர்க்கொடிஞ்சி = தேரோட்டும் துரவர் (diver) உட்காரும் ஒட்டுகை (attachment). We call this a driver seat. அம்புகளிலிருந்து துரவரைக்காக்க ஒருபலகையும் முன்னிருக்கும். மெய்புகு கவசம் = தோலாலும், மெல்லிய மாழையாலும் ஆகி உடம்பின்மேல் அணியுங்கவசம். வீழ்மணித்தோட்டி= மணிகள் தொங்கும் அங்குசம். அதள்புணை அரணம் = தோலாற்செய்த கைத்தாளம் (hand clove). "ஏய், அக் கைத்தாளங்களை எடுத்து வா” என்று ”குளோவ்ஸிற்கு” மாறாய் ஆளலாம். அரியா யோகம் = அரைப்பட்டிகை (waist belt). இதையும் தொலைத்தோம். வளைதரு குழியம் = வளைதடி. குழித்தல் = குத்துதல். வால்வெண் கவரி = இமையத்திற்கருகிலுள்ள கவரிமா எருமையின் மயிராலான வெண்கவரி. காற்றுவீசப்பயன்படுத்துவது. சாமரமென்றுஞ் சொல்வர். இனிப் புதிதாகவும், பழுதைச் சரிசெய்தாகவும், கொல்லன்பட்டறையிலான செப்புக்கேடயங்களையும், வெண்கலக்கருவிகளையும், வேதித்து உருவானவையும் (chemicals), கடைந்த தந்தப் பொருட்களையும், பல்வேறு வாசனைப்புகைப் பொருட்களும், மயிர்ச்சாந்திற்குத் தேவை ஆனவையும், பூவால் புனையப்படுவனவும் என வேறுபட்டுத் தெரிவு அறியா அளவிற்கு வளங்கள் கலந்து கிடக்கும் (அரசனும் விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்
 
என்று சொல்கிறார். ஊர்காண்காதையின் அடுத்த பகுதியில் மணிகளைப் பற்றியும், பொன்னைப் பற்றியும் பார்ப்போம்.
 
அன்புடன்,
இராம.கி.
 
 
 
Sent: Thursday, September 15, 2016 2:10 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
 
நன்றி இராம.கி ஐயா,


இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க்காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கைவீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்தசாற்றங் கூட இப்படிக்காட்டாது.) கோவலன் கோட்டைவாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற்சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழுவிவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரைகாதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? செழியன் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாய் இருக்குமோ?]


ஐயா, எனது கருத்துப்படி கோவலன் கோட்டைவாயிலுக்கு வராமல் சுருங்கை வழியால் தான் கோட்டைக்குள் நிழைகின்றான்..

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,

கோவலன் கோட்டைக்கு வெளியேறும் வழியைப் பாருங்கள்

காவலன் பேர் ஊர் கண்டு, மகிழ்வு எய்தி,
கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்து-என்.

 
இவ்வாசலால் தான் கண்ணகியும் மாதரியும் சென்றனர்.
நாள் கொடி நுடங்கும்
வாயில்
கழிந்து; தன் மனை புக்கனளால்

(எனது 11 ஆம் கேள்வியைப் பாருங்கள்.)


மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு.
 
புறஞ்சிறை மூதூரில் இரவு தங்கி, காலையில் கோவலன் மதுரை செல்வது பற்றி கவுந்தியடிகளிடம் கேட்கும்போது
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும்,

எனக் குறிப்பிடுகின்றான். கோட்டைக்கு வெளியே உள்ள பகுதி புறஞ்சிறை மூதூர் எனவும் கோட்டைக்குள்ளுள்ள பகுதி மூதூர் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன்.
மூதூர் என்பது கூடலின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages