முகுள் / முகுளம் - அரும்பு, மொட்டு; முகை - அரும்பு, முசிறு - சிறு செவ்வெறும்பு, முடங்கல் - சிறுமை, முண்டு - சிறு வேட்டி, முரியல் - துண்டு, முழங்கை - குறுகிய கை, முழுக்கு - உடல் சிறுக்க நீரில் குளி, முளை / முளையான் - குழந்தை, முறி - துண்டு, தளிர், பாதி, முறுவல் - குறு நகை, முனை - நுனி, மூசு - பிஞ்சு, இளங்காய், மூரி - துண்டம், மூழ்/ முகிழ் (யாழ்) - அரும்பு,
மிடித்தல் - குறைவுறுதல்,
மெல்ல / மெதுவாக - சிறிது சிறிதாக
மொக்கு / மொட்டு - அரும்பு, மொந்தை - சிறு பானை, சிறு ஏனம்.
மக / மகவு - பிள்ளை, குழந்தை, மகி - உருவில் சிறிய தேவாங்கு, மட்டம் - சிறுமை, மடர்பாளை - பூ அரும்பிய பாளை, மடி - சிறுகும் படி வளைத்து சுருட்டல், மழ - இளமை, குழந்தை, மறி - சில விலங்கின் குட்டி.
மறை - தொலைவு நீள நீள காட்சி சிறுகச்சிறுக சிறுத்து பார்வையில் இருந்து மறைதல். இது பார்வைக் கோளாறால் நிகழ்வது. முதல் இரயில் பெட்டி பெரிதாகத் தோன்றும் அதேநேரம் தொலைவு காரணமாக கடைசி பெட்டி சிறுகத் தோன்றும். உண்மை இவ்வாறு இருக்க ஒளிவு என்று சொல்லாமல் எல்லாவற்றுக்கும் மறைப்பு, மறைவு என்று ஒரு பொருளின் காட்சி இன்னொன்றி பின்னே ஒளிவதையும் மறை என்று மக்கள் தவறாக குறிப்பிட்டு வந்துள்ளனர். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து என்று ஆண்டாள் சரியாக சொல்லாட்சி புரிந்துள்ளாள் மறைந்து என்று தவறாக சொல்லவில்லை என்பதை நோக்கவேண்டும்.