இணையத்தமிழ் - நிறையும் குறையும் : 12ஆவது இணைய மாநாட்டுக் கட்டுரை

283 views
Skip to first unread message

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jan 8, 2013, 6:00:12 PM1/8/13
to thiru thoazhamai
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Elangovan N

unread,
Jan 8, 2013, 7:16:21 PM1/8/13
to tamil_...@googlegroups.com, tamilmanram
புள்ளி விவரங்கள் நன்று. பலபேர் தமிழ்தான் எல்லாவகையிலும்
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது
என்று பரப்புரை செய்கிறார்கள். வெற்றுப் பீற்றல் மாதிரி எனக்குத் தோன்றும்.
இதில் மேலும் நகைச்சுவை என்ன என்றால் இதையே தமிழ் வளர்ச்சி
என்றும் சொல்லுவர். உண்மையில் தமிழ் வளர்ச்சி என்பது பாதாளத்தை
நோக்கிப் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. அதை முறையே கவனிப்பார் இல்லை. கல்வியை ஆங்கிலத்தில் தருவதே, தாய்மொழியை வளர்க்கும் என்பது பகுத்தறிவாளர்களின் தலைமைக் கோட்பாடாய் இருக்கிறது. இந்த நிலையில் திருத்தமான தமிழ்  என்பது கனவாய்ப் போய்விடுமோ என்ற ஐயம் வலுத்து வருகிறது. *பகுத்தறிவு* வளர வளர
தமிழ் மொழி தாழ்ந்து தாழ்ந்து போய்க் கொண்டே இருக்கும். இதுதான் பகுத்தறிவுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு. இதனைச் சரியாகத் தமிழ்க்குமுகம் உணர்ந்தால் ஒழிய, தமிழ் வளர வழியில்லை என்ற நிலையே இருக்கிறது. தமிழ் வளர்ச்சி என்ற பீற்றல் பாடல்களை இக்கட்டுரை கட்டுப்படுத்தும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/1/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jan 8, 2013, 7:23:23 PM1/8/13
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
மிக்க நன்றி.
 மேற்கோளில் இட்டிருந்தாலும் பகுத்தறிவு என்று சொல்வதை விடப் போலிப் பகுத்தறிவும் சமய வெ றியும் என்று சொல்லலாம்.
பாதாளத்தை நோக்கிச் செல்லும் தமிழ்த் தளர்ச்சி, தங்களைப் போன்றவர்களின் இணையப் பணி பெருகும் பொழுது வளர்ச்சிப் பாதையில் செல்லும்.

2013/1/9 Elangovan N <nela...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

iraamaki

unread,
Jan 8, 2013, 8:16:17 PM1/8/13
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
வாழ்த்துக்கள் திருவள்ளுவன். நல்ல கட்டுரை. இணையத்தில் தமிழ் ஆக்கங்களின் உண்மைநிலைகளை எடுத்துரைக்கிறது. 
 
தவறுகளைத் தவறென்று சொல்ல நம்மிற் பலருந் தயங்குகிறோம். வெற்றுப் பீற்றல்களில் ஆட்பட்டுக் கிறங்கிப்போய் உண்மைநிலை உணராதிருக்கிறோம்.
 
தமிழாய்வும் மேம்படாதிருக்கிறது.  வெறுமே ”பட்டிமன்றம், பாட்டரங்கம், ஒட்டிவெட்டிப் பேசுதல், தனியார் புகழ்ச்சி பாடுதல், அரட்டை” என்று ”தமிழறிந்தோர்” பொழுது போகக் கூடாது. கொஞ்ச காலம் இவற்றை மூட்டை கட்டி வைத்து, செழுமையான நடையில் ஆக்கமான முறையில், தந்தமக்கு எளிதாகிய புலங்களில் கட்டுரைகள் படைத்துத் தமிழ் விக்கிப்பீடியாவிற் சேர்க்கவேண்டும்.  விக்கிப்பீடியா பற்றிய புரிதல் தமிழ் வலைப்பதிவர்கள் நடுவே பெரிதும் பரவவேண்டும்.  தமிழின் மேல் அக்கறை கொண்டோர் மேலும் எழுச்சியுற வேண்டும்.  வலைப்பதிவு, மடலாடல் மட்டுமே நம் குறிக்கோள் ஆகிவிடக் கூடாது. தமிழ் என்றால் கதை, துணுக்கு, புதுக்கவிதை, திரைப்படம், கேளிக்கை, அரட்டை, “மாமு, மச்சி” என்று ஆகிவிடக்கூடாது. நம்முடைய போகூழ், இணையத்தில் அப்படிப் பலராலும் ஆகிக்கொண்டிருக்கிறது.  மற்ற மொழிகளில் அந்த நிலை பெரிதும் குறைவு. உருப்படியான ஆக்கங்கள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன.
 
10 கோடி மக்களில் ஒரு பத்தாயிரம் பேர் ஒன்று சேர்ந்து செயலாற்றுவது அப்படியொன்றுங் கடினமானதில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் தமிழ்  விக்கிப்பீடியாவின் மொத்தக் கட்டுரைகள் இருமடங்காகவும், இருப்பவை இன்னுஞ் செறிவாகவும் ஆக்கப்பட வேண்டும். பல்வேறு துறையினரும் அதிற் பங்குபெற வேண்டும். நாம் கலந்துரையாடும் இடங்களிலெல்லாம், தமிழர் கூட்டங்களில் இச்செய்தியைப் பரப்பிப் பங்களிப்பைக் கூட்டுவோம். அதுவே நாட்பட நிலைத்து நிற்கும் பணியாகும்.
 
அன்புடன்,
இராம.கி.

C.R. Selvakumar

unread,
Jan 8, 2013, 9:39:16 PM1/8/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
அன்புள்ள திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே,

அருள்கூர்ந்து நான் சொல்ல இருப்பதைத் தவறாக நினைக்க வேண்டாம்.

நீங்கள் செய்திருப்பது கூகுளிள் தேடற்கருவியில் சொற்களைத் தந்து
அது தரும் மொத்த  "எண்ணைக்கை"யைக் கொண்டு உங்கள்
முடிவுகளுக்கு வந்துள்ளதாகவே உணர முடிகின்றது. இது உண்மையா
என்று உறுதி செய்யுங்கள்.

பொதுவாக "ஆய்வு" என்று வரும்பொழுது, 
தரவுகள் எப்படி எந்த அணுகுமுறையில்
திரட்டப்பட்டன, அவற்றில் நேரக்கூடிய பிழை எல்லைகள் என்ன 
என்பது பற்றிய  குறிப்புகள் இருக்க வேண்டும். அப்படி இக்கட்டுரையில்
இல்லை.

நீங்கள் கூகுளில் தேடற்கருவி
தந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் உங்கள் அட்டவணை,
வட்டைப் படங்கள் (பைச் சார்ட்டு) முதலியன தந்திருந்தால், அதிலும்
சில போதாமைகள் இருக்கின்றன.

சில எடுத்துக்காட்டுகள்:

kananda literature என்னும் சொற்களை இட்டுத் தேடினால் 34.5 மில்லியன்
பொறுக்குகள் கிட்டும். ஆனால் மேற்கோள் குறிகளுக்குள்
"kannada literature" என்று இட்டுத்தேடினால் 239,000 மட்டுமே
கிட்டும். இதே போல "tamil literature" என மேற்கோள்
குறிகள் இட்டுத் தேடினால் 1,240,000 பொறுக்குகள் கிட்டும்
(கன்னடத்தைப் போல் 5 மடங்கு அதிகம்). இதே போன்று
உங்கள் பிற தரவுகளும் பெரும்பாலும் பிழையான
முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்.

மேலும் கூகுள் பொறுக்குகள் (தேர்வுகள்) போதிய தரவும் அல்ல.

அருள்கூர்ந்து நான் சொல்ல வந்ததை எண்ணிப்பாருங்கள்.

அதே போல தமிழ் விக்கிப்பீடியா உலக மொழிகள் வரிசையில்
61 ஆவதாக உள்ளது என்னும் கூற்று  'கட்டுரைகளின்"  "official count" .
என்பதைக்கொண்டு கூறும் ஒன்று.
பல மொழிகளில் (இந்தி, மராத்தி, தெலுங்கு முதலியனவற்றில்)
பல்லாயிரக்கணக்கான "கட்டுரைகளில்" தலைப்பைத் தவிரவோ,
உள்ளே ஓரிரு எழுத்துகளைத்தவிரவோ அதிகம் ஏதும் இல்லாதனவும்
கட்டுரைகளாக காணப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில்
அப்படியான கட்டுரைகள் உடனே நீக்கப்படும். ஒருவரிக்கட்டுரைகளை
தமிழ் விக்கிப்பீடியா வரவேற்பதில்லை (வெறும் எண்ணிக்கையைக் கூட்டிக்
காட்டும் நோக்கில் எழுதபப்டுபவை). தானியங்கி வழியாக
சில மொழிகளில் "இது 1930களின் வரலாறு", "இது 1940களின் வரலாறு"
என்று வெற்றாகக் கட்டுரைகள் இயற்றி ஏற்றியிருக்கின்றனர். 
இப்படியெல்லாம்
தமிழில் "வெற்றுக் கட்டுரைகள்" ஏற்றப்படுவதில்லை.

சராசரி கட்டுரையின் நீள அளவீட்டில் (இது பெரிய தர அளவீடு என்று
சொல்லவில்லை) தமிழ் உலக மொழிகளில் 10-ஆவது உள்ளது
(கடைசியாகக் கிடைக்கும் மே 2010 தரவுகளின் படி). 
0.5 கிலோபைட்டு, 2 கிலோபைட்டு
நீளமுள்ள கட்டுரைகள் என்னும் அளவீட்டிலும்,
தமிழ் உலக மொழிகளில் முறையே
22, 27 ஆவது. 

தெலுங்கு விக்கியில் சராசரி கட்டுரையின் பைட்டு அளவில் உலக மொழிகளில்
103 ஆவதாகவும், 0.5 கிலோபைட்டு, 2 கிலோ பைட்டு நீளக் கட்டுரைகள்
அளவீட்டில் உலக மொழிகளில் முறையே 150 ஆவதாகவும்  113 ஆவதாகவும் உள்ளது.

இந்தியானது சராசரி பைட்டு அளவில் உலக மொழிகளில் 81 ஆவதாகவும்
0.5 கிலோபைட்டு அளவீட்டில் 114 ஆவதாகவும், 2 கிலோபைட்டு அளவில்
99 ஆவதாகவும் உள்ளது. 
இவற்றோடு தமிழை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தமிழ் விக்கிப்பீடியாவில் இப்படியான "தர" அளவீடுகளைப் பல
ஆண்டுகளாக ஒப்பீடு செய்து,  அங்கே பதிவிட்டும் வருகின்றோம்.

இந்திய மொழிகளில் பிறமொழியாளர் (Shiju Alex)  செய்த மதிப்பீட்டின் படி
தமிழே முதலாவதாக நிற்கின்றது. இதனால் பெருமை கொள்ள
வேண்டும் என்று சொல்லவில்லை.தமிழ்  செல்ல வேண்டிய
பாதை நீளமானது. ஆனால் பிழையாகவோ, மேலோட்டமான
'தரவுகளின்" அடிப்படையிலோ கருத்துப் பரப்புரை
செய்ய வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.

நீங்கள் சொல்வது போல தமிழ் அப்படித் தாழ்ந்த நிலையில் இல்லை!!

அன்புடன்
செல்வா


2013/1/8 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar 

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jan 9, 2013, 6:02:41 AM1/9/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
அன்புசால் இராம.கி. அவர்களுக்கும் பேராசிரியர் செல்வா அவர்களுக்கும் நன்றி.
திரு இராம.கி. அவர்கள் குறிப்பிட்ட எண்ண ஓட்ட அடிப்படையில் வெற்றுப் புகழ்ச்சியை விடஉண்மையான ஆக்கம் வேண்டும் என்பதற்காகத்தான்  இக்கட்டுரை அளித்தேன்.
பேரா. செல்வா அவர்கள் கருத்திற்கு ஓரளவு உடன்படுகின்றேன். இதனை என் கட்டுரையில்
எல்லாப் புள்ளி விவரங்களும் தொடர்பான சொற்களும் இயம்பியதை இயம்பலும் அடங்கிக் கூடுதலாகவே இருக்கும். என்றாலும் எல்லாவற்றிற்கும் இவ்வாறுதான் புள்ளி விவரங்கள் அமையும் என்பதால் இவ்வெண்ணிக்கைகளின் அடிப்படையில்தான் ஒப்புமை காண இயலும்
 எனக் குறிப்பிட்டிருந்தேன். சூத்திர இலக்கியம் பற்றிய விவரத்தை எடுத்த பொழுது அடுத்து வந்த இவ்வரிகளும் இங்கு இடம் பெறாமல் போய்  விட்டது.  ஆனால்,அரங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

நான் வெவ்வேறு வகையில் தேடினேன் என்பதை உணர்த்தத்தான் தேடு சொற்களையும் குறிப்பிட்டுள்ளேன். மேலும்,  விக்கிபீடியாவில் சில பக்கங்கள் கொண்ட பிற மொழிப் படைப்புகளுக்கு
 விரிவான கட்டுரை இருப்பின் வரவேற்கப்படும் என்பது போன்று இடம் பெறுவனவும்  கணக்கில் சேருமா எனத் தெரியவில்லை.  நான் மிகுதியாக விக்கிபீடியாவில்  தேடி உள்ளேன். ஆங்கிலத்தில் பக்கங்களாக உள்ள படைப்பு தமிழில் ஒன்று அல்லது இரு வரிகள் கொண்ட பத்தியாக உள்ளது. இவற்றை எல்லாம் எண்ணிக்கையில் சேர்த்துப் பயனில்லை என்பது என் எண்ணம். நான் தமிழில், ஆங்கிலத்திற்கு இணையான முழுமையான படைப்பைத் தராத பொழுது குறை கூடக்கூடாது என்பதால்தான் இதனைக் குறிப்பிடுவதில்லை.  கூகுள் தரவுகளை நம்பகமானதாக ஏற்க இயலாது என்பதால்தான் மேலே குறிப்பிட்ட கருத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.
நான் கட்டுரை வாசித்து வந்தபின்பும் மீண்டும் தேடலில் ஈடுபட்டு அதன்பின்னரே கட்டுரையை  வலைப்பூவில் இட்டுள்ளேன்.

தரவுகள் சரியா, தவறா என முடிவெடுக்க முடியாவிட்டாலும், தமிழ் பற்றிய புள்ளிவிவர மயக்கத்தால் நாம் வளர்ச்சிப்பாதையில் செல்லாமல் இருக்கிறோம் என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.
சொல்லாக்கங்கள் குறித்துக் கட்டுரை அளிக்க இருந்த நான் இத்தலைப்பில் கட்டுரை அளித்ததும் இந்நோக்கத்தில்தான்.
மேலும்,   பல முறை இது போன்ற தேடல்முயற்சிகளில் ஈடுபட்டு  அதன் அடிப்படையில்தான் கட்டுரை அளித்துள்ளேன்.
தமிழ், கன்னடம் முதலான தமிழ்க்குடும்ப மொழிகளை விட்டு விடுங்கள்.
சமசுகிருத மொழி பற்றிய பதிவு ஒப்பிட இயலாத அளவு கூடுதலாக உள்ளது அல்லவா? இந்தியில் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிக மிகக் குறைவாக உள்ளனவும் தமிழில் இந்தி இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிகுதியாக உள்ளனவும் உண்மைதான். இது குறித்து ஒரு நூல் எழுதலாம். ஆனால், பக்க வரம்பு கருதி கட்டுரையாக அளித்துள்ளேன்.

அதே நேரம் விக்கிபீடியாவின் பணி மிக மிகப் பாராட்டிற்குரியது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு விக்கிபீடியாவின் பணிதான் மிக முதன்மையாக உள்ளது.  எனவே, நான், அதனைக் குறைத்துக்கூறுவதாக எண்ண வேண்டா. பொதுவாக உண்மையான முன்னேற்றத்தைப் பற்றி மட்டும் கருத்து செலுத்தாமல் போலிப் புகழ்ச்சியில் மயங்கித் தமிழைத் தளர்ச்சிப்பாதையிலலேயே அழுத்திவிடக்கூடாது என்பதே அடிப்படை நோக்கம். 

உங்களிடம் வழக்கம்   போல் பின் வரும்  செய்திகள் குறித்த
கருத்‌தை எதிர்பார்த்தேன்.

http://thiru2050.blogspot.in/2012/12/blog-post_5703.html

http://thiru2050.blogspot.in/2012/11/job-priority-to-tamil-medium-students.html

படிக்கவில்லையா?

தமிழ் ஆக்கப் பணிகளில் உள்ள குறைளைக் களைந்து நிறை காணும் பணிகளில் இணைவோம்.

2013/1/9 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

C.R. Selvakumar

unread,
Jan 9, 2013, 9:58:29 AM1/9/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
அன்புள்ள திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே,

வணக்கம்.

இந்த கூகுள் தேடல் முடிவுகள் ஒரு பொறுப்பான தரவு இல்லை ஐயா!

பொழுது போக்குக்காக நானும் பல ஆண்டுகளாக ஓரிரு மணித்துளிகள் 
அவ்வப்பொழுது செலவிட்டு, இம்முடிவுகள் தரும் தரவுகளைக் குறித்தும்
கூட வைத்திருக்கின்றேன். ஆனால் இவை ஏறத்தாழ எந்தப் பயனுடைய
முடிவுக்கும் கொண்டு செல்ல உதவாதவை. 

கீழ்க்கண்ட உங்கள் கூற்றுக்கு என்ன சான்று ?

//தமிழ், கன்னடம் முதலான தமிழ்க்குடும்ப மொழிகளை விட்டு விடுங்கள்.
சமசுகிருத மொழி பற்றிய பதிவு ஒப்பிட இயலாத அளவு கூடுதலாக உள்ளது அல்லவா? இந்தியில் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிக மிகக் குறைவாக உள்ளனவும் தமிழில் இந்தி இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிகுதியாக உள்ளனவும் உண்மைதான். இது குறித்து ஒரு நூல் எழுதலாம். ஆனால், பக்க வரம்பு கருதி கட்டுரையாக அளித்துள்ளேன். //

"சமசுகிருத மொழி பற்றிய பதிவு ஒப்பிட இயலாத அளவு கூடுதலாக .." ???!!! அப்படியா?!

இந்தியில் தமிழைப் பற்றி இலை என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
ஆனால் இது பற்றிப் பேசத் தேவை இல்லை
தமிழை விட சமற்கிருதம் பற்றி ஆங்கிலத்தில்  அதிகம் இருக்கும் என்பதும் 
பெரிய செய்தி இல்லை (சமற்கிருதம் இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்
சேர்ந்த மொழி). 
ஆனால் இவற்றை எல்லாம் கூகுள் தேடல்வழி சொற்தேடல்களாகச் செய்வது
ஏறத்தாழ வீண் வேலை (பொழுதுபோக்குக்குச் சரிதான்). நான் சொல்ல வந்தது
ஆய்வின் அடித்தரவாகக் கொள்ளத்தக்கன அல்ல (மேலான பிற வடிகட்டுகள் இல்லாமல்)
என்பதே. இதைப் பற்றி மேலும் சொல்லலாம் என்றாலும் அது தேவையே இல்லை.

வெறும் சொற்தேடல்கள் என்று கொண்டாலும். கூகுள் இசுக்காலர் (Google Scholar)
வழிதேடினாலும் (இதுவும் பொறுப்பற்ற மேலோட்டமான செயல் எனினும்):
Sanskrit என்னும் சொல்லுக்கு 235,000 -மும், Tamil என்னும் சொல்லுக்கு 385,000 -மும்
கிட்டுகின்றது.  நீங்கள் "இலக்கியம் பற்றிய பதிவு" என்று கூறுவது சரியாகாது!
சொல்லின் பொறுக்கு (தேடற் கருவியின் முடிவுகள்) என்று சொன்னால் சரி.
ஆனால் அதிலிருந்து பெரிதாக கருத்துக்கணிப்பு செய்தல் தவறாகும்.

கூகுள் இசுக்காலர் தேடற்கருவிவழி:

"Sanskrit literature" 12,200
"Tamil literature" 4,230
"Hindi literature" 2,630

"English literature" 471,000
"Spanish literature" 21,800
"German literature" "65,400"
"French literature" 63,600

(இவை இணையத்தில் இம்மொழிகளின் பதிவுவீச்சு என்று சொல்ல வரவில்லை).

பொது கூகுள் தேடலில் 
"Sanskrit literature" 2,790,000
"Tamil literature"4,330,000
"Hindi literature" 731,000
"vedic literature" 364,000
"Thirukkural" 504,000

இதைக்கொண்டெல்லாம் எந்த முடிவுக்கும் நான் வருவது பொறுப்பான செயல் ஆகாது. ஆனால் 
இவற்றின் அடிப்படையில் 
உங்கள் கட்டுரையில் உள்ள தகவல்கள் சரியானவையா என்னும்
ஐயம் எழுகின்றது.
(நீங்கள் வேறு வழிமுறையைக் கையாண்டீர்களா?)

தமிழ் வளர்ச்சிக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இராம.கி ஐயாவும்
இராச்குமார் பழனிச்சாமி அவர்களும் இன்னும் மிகப்பலரும் அண்மையில் நடந்த
கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
அவற்றில் ஒரு 10% -ஐச் செயற்படுத்தினாலே பெரும் முன்னேற்றத்தைக் காணலாம்.

இந்திய மொழிகளில் தமிழின் நிலை  பலரும் நினைப்பது போல்
"அதள பாதாளத்தில்" இல்லை!! 
ஆனால் இன்னும் பன்மடங்கு பல்லாயிரம் மடங்கு வளரவேண்டும் என்பது
உண்மை. 
மெய்யான நல்லாய்வு, கருத்தாழம் மிக்க அறிவியல், இலக்கிய சிந்தனைகள்
இன்னும் பெருக வேண்டும்.
தமிழைக் கல்வி, அறமன்றம், ஆட்சிநடத்தல், வணிகம், வழிபாடு போன்ற
களங்களில் நூறு மடங்காக வளர்த்தெடுப்பது தேவை. நாம் செய்ய
வேண்டிய பணிகள் நிறைய உள்ளன அவற்றுக்கு மிக முக்கியமான சில
அடித்தேவைகள்: கூட்டுழைப்பின் அருமையை உணர்ந்தல்,
அறிவார்ந்த அறமான வழிகளில்
பொது நோக்குக்காகத் தன்னலத்தைக் குறைத்துக்கொண்டு செயலாற்றல்
ஆகியவை மிக முகனையாவை. நீல் ஆம்சிட்ராங்கு தனி
மாந்தனாகப் போய் நிலாவில் கால்பதித்துவிட்டு வந்துவிடவில்லை!
நாம் உண்ணும் சோறும் கூட நாமாக பயிர்செய்து, போரடித்து
சமைத்தது அன்று! 

சிறுதுளி பெருவெள்ளம் அதே போல சிறுசிறு அழிப்புகள் பேரழிப்பாகவும்
ஆகும்!! 

இறுக்கம் என்பது அளவிறந்து இருக்க வேண்டாம்.  
ஆனால் எந்த ஒழுக்கமும் வேண்டாம் என்னும் போக்கும் தமிழை 
மிகவும் சீர்குலைத்து வருகின்றது! 3,000 ஆண்டுகள் செழித்து வளர்ந்து
வந்துள்ள நம் தமிழ் மொழியைச் சின்னா பின்னம் ஆக்குவதே
குறியாக இருக்கின்றார்கள் சிலர்! 

அன்புடன்
செல்வா





2013/1/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>

தமிழ், கன்னடம் முதலான தமிழ்க்குடும்ப மொழிகளை விட்டு விடுங்கள்.
சமசுகிருத மொழி பற்றிய பதிவு ஒப்பிட இயலாத அளவு கூடுதலாக உள்ளது அல்லவா? இந்தியில் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிக மிகக் குறைவாக உள்ளனவும் தமிழில் இந்தி இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் மிகுதியாக உள்ளனவும் உண்மைதான். இது குறித்து ஒரு நூல் எழுதலாம். ஆனால், பக்க வரம்பு கருதி கட்டுரையாக அளித்துள்ளேன்.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jan 9, 2013, 10:36:50 AM1/9/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு
வணக்கம்.
புள்ளிவிவரம் தொடரபாக மாறு பட்ட எண்ணம் இருப்பினும்  தமிழ் பயன்பாடும்  தமிழ் பற்றிய பயன்பாடும் நிறைவாக இல்லை என்பதே உண்மை.  நீங்கள் வெவ்வேறு வகையில் வலியுறுத்துவது போல் பிழையில்லா , கலப்பில்லா தமிழ் நடை ஒன்றுதான்
 மொழியும் இனமும் நிலைக்க வழி வகுக்கும் என்பதே உண்மை. (உடன்பாட்டுக்கருத்துகளில் தொடர்ந்து இணையலாம்)

நிறைவாக
2013/1/9 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:
Reply all
Reply to author
Forward
0 new messages