(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8
கன்னடச் சொற்கள் உணர்த்தும் தமிழ்த்தாய்மை
கன்னடச் சொற்களைப் பார்ததால் ஆராயாமலேயே அவை தமிழ் அல்லது தமிழில் இருந்து மாற்றம் பெற்றவை எனலாம். எனவே, கன்னடத்தின் தாய் தமிழ் என்பது சொல்லாமலே விளங்கும்.
அச்சொற்கள் சிலவற்றைப் பின்வருமாறு பார்ப்போம்
ஆடை அணிப் பெயர்கள், இடப்பெயர்கள், உறவுப்பெயர்கள், ஐம்பூதப் பெயர்கள், கருவிப்பெயர்கள், கனிமப்பெயர்கள், காலப் பெயர்கள், சினைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், நிறப்பெயர்கள், பறவைப்பெயர்கள், விலங்குப் பெயர்கள், நீர்வாழ்வனவற்றின் பெயர்கள், ஊர்வனவற்றின் பெயர்கள், பூச்சிகளின் பெயர்கள், மரம் செடி கொடிகளின் பெயர்கள் என்று நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் பெரும்பாலானவை தமிழாக அல்லது சிதைந்த தமிழாக அல்லது பேச்சுத் தமிழாக உள்ளமையை உணரலாம். ஆயிரம் கன்னடச் சொற்கள், தமிழ்-கன்னடச் சொற்கள், கன்னடம் – தமிழ்ச்சொற்கள் என்ற வகையில் இணையத்தில் நாம் பார்த்தால் இவை எளிதில் புரியும். எனினும் சான்றிற்காக அவற்றில் சிறு பகுதியைப் பின்வருமாறு அறியலாம்.
இகரம் எகராமாக மாறுதல், ‘ப’ வரிசைச் சொற்கள் ஃக(ha) வரிசைச் சொற்களாக மாறுதல், இறுதி மெய்யெழுத்து மறைதல், இறுதி எழுத்து எகராமாக மாறுதல், இறுதி எழுத்து உகரம் ஏறி வருதல், தமிழ்ப் பேச்சு வழக்காக மாறுதல் முதலிய காரணங்களால் கன்னடமாக மாறியுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அகத்தி – அகசெ
அகத்தி – அகசெ
அகப்பை – அகப்பெ
அகம் – ஆகெ
அகழி – அகழ்
அக்கம்(தானியம்) – அக்கி
அக்கா – அக்கா/ அக்க
அங்காடி- அங்காடி
அடம்பு – அடும்பு
அடவி – அடவி
அடி -அடி
அடைக்காய் -அடிகே
அடைப்பம் – அடப்ப
அட்டிகை – அட்டிகெ
அட்டை – அட்டெ
அணல் (தாடி) – அணல்
அணில் – அலிலு
அணை – அணெ
அணைக்கட்டு – அணெக்கட்டு
அண்டை – அண்டெ
அண்ணன் – அண்ண
அத்தன்- அச்சன் – அச்ச
அத்தி – அத்தி
அத்தை – அத்தெ
அந்தி – அந்து
அப்பம் – அப்ப
அப்பளம் – அப்பள
அப்பன் – அப்ப
அம்பலம் – அம்பல
அம்பாரி – அம்பாரி
அம்பி – அம்பி
அம்பு – அம்பு
அம்மணி – அம்மண்ணி
அம்மி – அம்மி
அம்மை – அம்ம
அம்மை – அம்ம
அரசு – அரசு
அரண்மனை – அரமனெ
அரத்தம்/இரத்தம் – ரத்த
அரம் – அர
அரிசி – அக்கி
அருகு – அருகு
அலர்- அலர்
அல்ல – அல்ல
அவரது – அவர
அவரை – அவரெ
அவரை அவரெ
அவர் – அவரு
அவர்களது- அவர
அவர்கள் – அவரு
அவல் – அவல்
அவள்- அவளு
அவனது – அவன
அவன் – அவனு
அவன் – அவனு
அளை(தயிர்) – அள
அறை – அறெ
ஆகாயம் – ஆகாசம்
ஆடாதோடை – ஆட்சோகெ
ஆண்டி – ஆண்டி
ஆதனை – ஆதலு
ஆதனை – ஆதலு
ஆந்தை – ஆந்தெக
ஆப்பு – ஆபு
ஆமை – ஆமெ
ஆம்பல் – ஆபல்
ஆம்பல் – ஆபல்
ஆர் – ஆரெ
ஆல் – ஆல
ஆள் ஆளு
ஆனை நெருஞ்சி – ஆனெ நெக்குலு
இடம் – இடெ
இடுக்கி – இடுக்களள்
இடுக்கு – இடுகு
இடை / நடு – நடு
இட்டலி – இட்டலி
இண்டை – இண்டெ
இதழ் – எசன்
இமை – எமெ
இரவு – இருள்
இராத்திரி – ராத்ரி
இரை – எரெ
இலந்தை -எலச்சி
இலுப்பை – இலுப்பெ
இலை – எலெ
இல்லை – இல்ல
இல்லை – இல்லா
இளநீர்- எளநீரு
இறகு – எறகெ
இறக்கை – ரெக்கெ
ஈசல் – ஈச்சல்
ஈட்டி – ஈட்டி
ஈருள்ளி – ஈருள்ளி
ஈர் – ஈர்
உகிர் – உகுர்
உக்களம் – உக்கட
உச்சி – உச்சி
உடுப்பு -உடுப்பு
உடை – உடெ
உண்டி – உண்ணி
உதடு – ஒதடு
உப்பு – உப்பு
உமி – உம்மி
உம்பளம் – உம்பளி
உருக்கு – உர்க்கு
உரைகல் – ஒரகல்
உலக்கை ஒலக்கெ
உலை(சூளை) ஒலெ
உழுந்து – உத்து
உளி – உளி
உறி – உறி
ஊட்டம் – ஊட்ட
ஊட்டு – ஊட்ட
ஊமை – ஊமெ
ஊர் – ஊரு
ஊர்தி – உர்தி
ஊற்று – ஊட்டெ
எச்சில் – எஞ்சல்
எண்ணெய் – எண்ணெ
எருது – எத்தெ
எருமை – எம்மே
எலுமிச்சை – எலிமிச்சை
எலும்பு – எலுபு
எல்லா – எல்லா
எல்லை – எல்லெ
எள் – எள்
என் – நன்ன
ஏதோ – ஏனோ
ஏரி – ஏரி
ஐயன் – அய்ய
ஒடு – ஒடு
ஒட்டை – ஒட்டெ
ஒரல் – உரல்
ஒளவை / அவ்வை – அவ்வ
ஓடம் – ஓட
ஓடு – ஓடு
ஓலை – ஓல
ஓலைக்காரன் – ஓலெகார
கஞ்சி – கஞ்சி
கடம்பை – கடம்ப
கடல் – கடல்
கடிகாரம் – கடியாரா
கட்டடம் – கட்டட
கட்டி – கட்டி
கணவன் – கண்ட
கண் – கண்ணு
கதிர் – கதிர்
கத்தி – கத்தி
கரடி – கரடி
கரி – கரி
கரும்பு – கப்பு
கரை – கரெ
கலம் – கல
கவண் – கவணெ
கவல் – கவை
கழல் – கழல்
கழனி – கழனி
கழுதை – கத்தை/கத்தெ
கழுத்து – கத்து
களை – களெ
கள் – கள்
கள்ளி – கள்ளி
கறி – கறி
கறுப்பு – கப்பு
கனம் – கன
கன்று – கறு
கன்னம் – கன்ன
கா – கா
காக்கை – காகெ
காடு – காடு
காட்டு மல்லிகை – காடு மல்லிகெ
காணி – காணி
காம்பு – காவு
காய் – காய்
கால் – காலு
கால் – கால்
கால்(காற்று) காலி
காவல்காரன் காவலுகார
கிட்டி – கிட்டி
கிளி – கிளி
கிளை / கொம்பு – கொம்பெ
கிணி – கினி
கீரை – கீரெ
குச்சு – குச்சு
குடம் – குட
குடி – குடி
குடிசை – குடிச
குடும்பம் – குடும்ப
குண்டி – குண்டெ
குதி – குதி
குதிரை – குதுரெ
குப்பி – குப்பி
குயில் – குகில்
குருடன் – குருட
குலை – கொலை
குழல் – கொழல்
குழி – குணி
குழி – குழி
குளம் – கொள
குளம்பு -கொளக
குளவி – குளவி
குன்றம் – குட்ட
கூகை – கூகெ
கூடாரம் – கூடாரம்
கூடை – கூடெ
கூந்தல் – கூதல்
கூழ் – கூழ்
கூனி – கூனி
கெட்ட – கெட்ட
கெட்டது – கெட்டது
கொக்கி – கொக்கெ
கொக்கு – கொக்கரெ
கொட்டகை -கொட்டகெ
கொட்டாரம் – கொட்டார
கொட்டை – கொட்டெ
கொண்டை – கொண்டெ
கொத்தளம் – கொத்தள
கொத்து – கொத்து
கொத்துமல்லி – கொத்துமி
கொப்பு -கொப்பு
கொம்பு – கொம்பு
கொல் கொல்லு
கொழுப்பு – கொப்பு
கொன்றை – கொன்னெ
கேணி – கேணி
கேள் – கேளு
கோடரி – கோடலி
கோடை – கோடெ
கோட்டை – கோடடெ
கோதுமை – கோதி
கோல் – கோல்
கோழி – கோலி
கோனை – கோனெ
கை – கெய்
சட்டி – சட்டி
சட்டுவம் – சட்டுக
சட்டை – சட்டெ
சணல் – சணபு
சண்பகம் – சம்பகி
சப்பாத்திக் கள்ளி – சப்பாத்திக் கள்ளி
சமயம் – சமய
சல்லடை – சல்லடி
சாடி – (ஞ்)சாடி
சாட்டை – சாட்டி
சாமை – சாமெ
சாயங்காலம் – சாயங்கால
சில்லி – சில்லி
சிறுத்தை – சிறத்தெ
சிறை – செரெ
சீத்தா – சீத்தா
சீப்பு – சீப்பு
சீமை – சீமெ
சுடுகாடு – சுடகாடு
சுறா – சொற
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி – இனிய உதயம், ஆகட்டு 2025
(தொடரும்)
கைகள் இரண்டு ஊருக்குதவ
குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
கைகள் இரண்டு ஊருக்குதவ
கால்கள் இரண்டு நல்வழி நடக்க
கண்கள் இரண்டு கனிவாய்க் காண
செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க
நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச
வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!
வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!
குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச் சொல்லித் தரவேண்டாவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும் – 1 :
மூவாத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலாகத் திகழ்வது சாவாப் புகழ் கொண்ட தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் உண்மையான சிறப்பை இன்னும் தமிழர்களே அறிந்திலர். அவ்வாறிருக்கப் பிறர் எங்ஙனம் அறிவர்? தொல்காப்பியச் சிறப்பை மறைக்கும் வண்ணம் ஆரிய வெறியர்கள் பாணினியத்தை உயர்த்தியும் அதன் காலத்தை முன்னுக்குக் குறிப்பிட்டும் பிற வகைகளிலும் எழுதி வருகின்றனர். தொல்காப்பிய நூற்பாக்கள் சிறப்பு குறித்தும் பாணினியின் அட்டாத்தியாயி நூற்பாக்கள் குறித்தும் ஒப்பிட்டு எழுத முதலில் எண்ணினேன். இந்நூல் கிடைக்கவில்லை. முனைவர் மீனாட்சி எழுதிய இந்நூலை வெளியிட்ட உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் இருப்பில் இல்லை என்றனர். ஆதலின், எளிய முறையில் இரு நூல்கள், நூலாசிரியர்கள் குறித்து எழுதுவதே ஏற்றது எனக் கருதி இக்கட்டுரை அவ்வாறு அமைகிறது.
தொல்காப்பியப் பிரிவுகள்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது ஒன்பது இயல்களை உடையது.
பொருளிலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு. பொருளதிகாரத்தில் தொல்காப்பியர் “வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” என்பதுபோல் முன்னோரை 287 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவருக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்களும் பொருள் வகைப்பாட்டைக் குறித்துள்ளனர் எனலாம்.
நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு,
மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம்
உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம்,
தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.
1. நூல் மரபு, 2. மொழி மரபு, 3. பிறப்பியல், 4. புணரியல், 5 தொகை மரபு, 6 உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளி மயங்கியல், 9. குற்றியல் உகரப் புணரியல் ஆகியன எழுத்ததிகார இயல்கள்.
கிளவி ஆக்கமே, கிளர் வேற்றுமையே
ஒளி வேற்றுமை மயக்கத்தோடு, விளி மரபு,
தேற்றும் பெயர், வினைச் சொல், சேரும் இடை, உரிச்சொல்,
தோற்றியிடும் எச்ச இயல், சொல்.
1. கிளவியாக்கம், 2. வேற்றுமை இயல், 3. வேற்றுமை மயங்கியல், 4. விளிமரபு, 5. பெயரியல், 6. வினையியல், 7. இடையியல், 8. உரியியல், 9. எச்சவியல் ஆகியன சொல்லதிகார இயல்களாம்.
ஈட்டும் அகத்திணையும், ஏய்ந்த புறத்திணையும்,
காட்டும் களவு இயலும், கற்பு இயலும் மீட்டும்
பொருள் இயல், மெய்ப்பாடு, உவமம், போற்றிய செய்யுள்,
மரபு இயலும், ஆம் பொருளின் வைப்பு.
1. அகத்திணை இயல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. மெய்ப்பாட்டியல், 7. உவமை இயல், 8. செய்யுள் இயல், 9. மரபியல் ஆகியன பொருளாதிகார இயல்களாகும்.
எழுத்து அதிகாரத்துச் சூத்திரங்கள் எல்லாம்
ஒழுக்கிய ஒன்பது ஒத்துள்ளும், வழுக்கு இன்றி
நானூற்று இரு-நாற்பான் மூன்று என்று நாவலர்கள்
மேல் நூற்று வைத்தார் விரித்து.
தோடு அவிழ் பூங்கோதாய்! சொல் அதிகாரத்துள்
கூடிய ஒன்பது இயல் கூற்றிற்கும் பாடம் ஆம்
நானூற்று அறுபத்து நான்கே நல் நூற்பாக்கள்
மேல் நூற்று வைத்தனவாமே.
கிளவி ஓர் அறுபான் இரண்டு; வேற்றுமையில்
கிளர் இருபஃது இரண்டு; ஏழ்-ஐந்து
உள மயங்கு இயலாம்; விளியின் முப்பான் ஏழ்;
உயர் பெயர் நாற்பதின் மூன்று;
தெளி வினை இயல் ஐம்பானுடன் ஒன்று;
செறி இடை இயலின் நாற்பான் எட்டு;
ஒளிர் உரி இயல் ஒன்பதிற்றுப் பத்துடன் எட்டு;
ஒழிபு அறுபான் ஏழ்.
பூமலர் மென் கூந்தால்! பொருள் இயலின் சூத்திரங்கள்
ஆவ அறு நூற்று அறுபத்து ஐந்து ஆகும்; மூவகையால்
ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃது என்ப,
பாயிரத் தொல்காப்பியம் கற்பார்.
ஒவ்வோர் அதிகாரத்திலும் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை உரையாசிரியர்களுக்கிணங்க மாறுபடுகின்றன. ஒவ்வோர் உரையாசிரியரின் குறிப்பிற்கு இணங்க இயல்வாரியாக இவ்வெண்ணிக்கை கீழே சுட்டிக் காட்டப்படுகிறது.
உரையாசிரியர் | இயல்கள் | மொத்தம் | ||||||||
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | ||
1.எழுத்து அதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 33 | 49 | 21 | 40 | 30 | 30 | 93 | 110 | 77 | 483 |
நச்சினார்க்கினியர் | 33 | 49 | 20 | 30 | 93 | 39 | 69 | 78 | 483 | |
2. சொல்லதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 62 | 17 | 35 | 37 | 43 | 49 | 48 | 99 | 66 | 456 |
சேனாவரையர் | 61 | 22 | 34 | 37 | 43 | 51 | 48 | 100 | 67 | 463 |
நச்சினார்க்கினியர் | 62 | 22 | 35 | 37 | 43 | 51 | 48 | 98 | 67 | 463 |
தெய்வச்சிலையார் | 60 | 21 | 33 | 36 | 41 | 54 | 47 | 100 | 61 | 453 |
3. பொருளதிகாரம் | ||||||||||
இளம்பூரணர் | 58 | 30 | 51 | 53 | 52 | 27 | 38 | 235 | 112 | 656 |
நச்சினார்க்கினியர் | 55 | 36 | 50 | 53 | 54 | – | – | – | – | 248 |
பேராசிரியர் | 0 | 0 | 0 | 0 | 0 | 27 | 37 | 243, | 110 | 417 |
சில நூற்பாக்களை 2 அல்லது 3 ஆகப் பிரித்தமையால் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுள்ளன. மொத்த நூற்பாக்கள் இளம்பூரணாரின் கருத்துக்கு இணங்க 1595உம் நச்சினார்க்கினியர் ஆகியோருக்கு இணங்க 1611-ம் ஆகும்
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
என்றும் இணைந்து வாழ்வோம்!
(“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.)
உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர்
என்று சேர்ந்து வாழ்வோம் – நாம்
என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த
வீடும், நாடும் கடந்த உலகம்
ஒன்று என்று வாழ்வோம் – நாம்
ஒன்று பட்டு வாழ்வோம்!
நிறமென்ன உருவென்ன
பிறப்பென்ன தொழிலென்ன
எல்லாம் ஒன்று என்போம்
எல்லாம் ஒன்று என்போம்!
பகையில்லை போரில்லை
இழிவில்லை தாழ்வில்லை
என்று இணைந்து வாழ்வோம் – இனி
என்றும் இணைந்து வாழ்வோம்!
புதிய பாடல்கள் இல்லாமல் இருக்கின்ற மெட்டுகளில் ஏன் பாடவேண்டும் எனச் சிலர் எண்ணலாம்.தெரிந்த மெட்டில் தமிழுணர்வுப் பாடல்களைச் சொல்லித் தந்தால் பதிவது எளிதாக இருக்கும். அதன் பின்னர் நாம் புது புது பண்களில் பாடல் சொல்லித் தரலாம்.!
– இலக்குவனார் திருவள்ளுவன்