செப்பு செம்பு சொம்பு

196 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 3, 2014, 1:01:21 PM2/3/14
to தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, thami...@googlegroups.com
ஓர் மடலில் திருமதி இராஜம் அவர்கள் எழுதினார் 

இராம.கி ஐயா குறித்த 'பூட்டிய பெட்டி'யைக் குறிப்பதுபோல ஒரு பழைய சொல் இருக்கு. அது "செப்பு." ஆனால், அதை இன்று வங்கிகளிலோ பிற வணிகச் சூழலிலோ பயன்படுத்த இயலாது -- சிறுமிகளின் விளையாட்டுப் பொருள் என்று சிரிப்பார்கள். சொற்கள் இப்படித்தான் காலப்போக்கில் மாறும், என்ன செய்ய?


செப்பு யெனும் வினைசொல் உள்ளதைப் பலரும் அறிவர் 
ஆக அதனை இங்கு குறிக்க வரவில்லை அது வேறு

அருங்கல செப்பு எனும் தலைப்பினில் ஓர் நீதி நூல் உள்ளது ஓர் சமண முனி  இயற்றியது

அது நல்ல பயனுள்ள நீதிகளை தொகுத்து சேமித்து வைத்த ஓர் நன்கலம் எனும் கருத்தில் தான்  அதன் ஆசிரியர் பெயர் தந்துள்ளார்

எனவே சேமிப்புக்கான ஒர் கலத்தை மங்கல பொருள் தாங்கும் நிலையில் "செப்பு."என்பது ஒர் சிறப்பான சொல்லே ஆகும் எனலாம்  

                       ஆனால் செப்பும் செம்பும் ஒன்றே (செப்புக்கலம்)

செம்பொன் >>> செம்பு  = சிவந்த நிறமுடைய ஓர் பொன்
இரும்பொன் >>>> இரும்பு  = இருள் (கரிய) நிறமுடைய ஓர் பொன்
பசும்பொன் >>> பசிய = மஞ்சள் நியமுடைஒய ஓர் பொன் = தங்கம்
                        [பொன்= மாழை (மெடல்) எனக்காட்டுவார் திரு இராமகி அவர்கள்]

சிவந்த நிறமான பொன்னாம் செம்பு கொண்டு செய்யப்பட்ட கலம்
ஆகுபெயர் நிலையில் செம்பு எனவெ வந்து  பின் ஏனோ திரிந்து சொம்பும் ஆகியது 

செம்பினால் செய்யப்பட்ட கலம் >> கலசம் எனவும் மாறியது

சில போது செம்பினால் செய்யப்பட்ட கலம் செப்பு எனவும் திரிந்தது எனலாம்

இந்த செப்பே வேறு வழியில் ஒர் இணை பொருள் காட்ட சொப்பு என பயன்பட்டது

சொப்பு யென்றால் தான் அதுவும் இன்னாளில் சிறுமைப் பொருள் தாங்கி பயனில் உள்ளது மெய்யே

ஆனால் பழம் சொற்களை மீட்பதற்கு இன்னாளைய பார்வை என்ன என பார்ப்பது 
அவசியம் அவசியம் அற்றது என்பது தனிப்பட்டவர் கருத்து 

மின் தமிழின் (மடலாடல் குழு)  தொடக்க நிலையில் அதற்கு பெயர் ஒன்று வைக்கும் விவாதத்தில்
ஈழத்தைச் சேர்ந்த ஓர் நண்பர் காட்டியபடி முதுசொம் அதாவது பழம் பண்பாடுகள் திரளும் ஓர் கலம்
எனும் பொருளில் முடிவு எடுக்கப்பட்டது என நினைவு

சொம்பு (செம்பு) போல் வளரும் வடிவ ஒற்றுமையால் ஒர் கிழங்கும் சேம்பு என பெயர் பெற்றுள்ளது

நூ த லோ சு
மயிலை

rajam

unread,
Feb 3, 2014, 2:06:22 PM2/3/14
to தமிழ் மன்றம், Sivakumar M A
மதிப்பிற்குரிய நூ த லோ சு ஐயா,
வணக்கம். 

யான் குறித்தது குறுந்தொகைப் பாடல் #9:2-3

மடை மாண் செப்பின் தமிய வைகிய
பெய்யா-ப் பூவின் மெய் சாயினளே” 

'அருங்கலச் செப்பு' என் நினைவில் இருந்தது என்றாலும் அதுக்கும் முந்தைய இலக்கிய வழக்காற்றை மக்கள் நினைவுக்குக் கொண்டுவர முயன்றேன். 

பிற பின்னர், தேவையானால். 

தமிழ்மன்றத்தில் யான் இடும் பதிவுகளைப் பிற குழுமங்களில் நயநாகரிகம் இல்லாத கயவர்கள் நக்கினால் அதுக்கு யான் பொறுப்பில்லை. 

இப்படிக்கு,
தமிழாசிரியை ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2014, 8:42:36 PM2/3/14
to தமிழாயம், தமிழ் மன்றம், வல்லமை, mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan
காப்பர் குப்ரஸ் என ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படுவதால் செப்பு என்பதே செம்பு ஆகியிருக்கும். 


3 பிப்ரவரி, 2014 1:01 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages