சிற்பிகள் எபோர் யார்?

982 views
Skip to first unread message

rajam

unread,
Feb 2, 2014, 8:04:58 PM2/2/14
to தமிழ் மன்றம், Arvind Swaminathan, Hari Krishnan
இந்த மாதத் “தென்றல்” இதழில் (http://www.tamilonline.com/வந்த ஒரு நேர்காணலின் ஒரு சிறு பகுதி: 

கேள்வி: “சிற்பிகள் என்போர் யார்?”

பதில்: மனு, மயன், துவஷ்டா, சிற்பி,, விஷ்வக்ஞ என்று ஐந்து பேர். இதில் மனு இரும்பில் செய்பவர்; மயன் மரத்தால் செய்பவர்; துவஷ்டா பஞ்சலோகத்தால் செய்வபவர்; சிற்பி விக்ரகங்களை, இறையுருவங்களைச் செய்பவர்; விஸ்வக்ஞர் தங்க ஆபரணங்களைச் செய்பவர். இந்த ஐந்தொழிலையும் செய்வோர்களுக்கு விஸ்வகர்மாக்கள் என்று பெயர். இவர்களில் ஸ்தபதி என்பது மிக முக்கியமான பொறுப்பு. … ஒரு வீடு கட்டுவது என்றால் அங்கே ஆசாரி வேண்டும். தச்சு வேலை தெரிந்தவர் வேண்டும். அதுபோல மக்கள் வழிபாடு செய்யக் கோவில் வேண்டும்; ஆலயம் கட்ட ஒரு சிற்பி வேண்டும். … 

இந்த நேர்காணல் என் நெடுங்காலத் தேட்டம் ஒன்றுக்கு விடை தந்தது. குறிப்பாக, “மயன் மரத்தால் செய்பவர்” என்ற செய்தி. தமிழ் இலக்கியங்களில் காணும் மயன் பற்றிய குறிப்புக்குச் சரியான பொருள் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். குறிப்பாக, மணிமேகலையில் உள்ள சக்கரவாளக் கோட்டம் பற்றி. இப்போது புரிகிறது. 

பூம்புகாரில், “மயன் பண்டு இழைத்த மரபினது” என்று ஒரு தாமரைப் பீடிகை புகழப்படுகிறது. "மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக்கோட்டம்” பற்றிய விளக்கமும் உண்டு. இதுகொண்டு, மணிமேகலைக் காப்பிய காலத்தில், பூம்புகாரில் மரத்தால் இழைக்கப்பட்ட வடிவங்களைக் கொண்ட ஓர் இடம் இருந்தது என்று தெரிகிறது. அது இப்போது இருக்குமா என்பது ஐயமே. 

மிகச் சிறந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி! 

அன்புடன்,
ராஜம்

பின்குறிப்பு: தென்றல் இதழை இணையத்தின்வழிப் படிக்கப் பதிவு செய்ய வேண்டும். இயன்றால், பதிவு செய்து முழு நேர்காணலையும் படித்துப் பார்க்கலாம்: http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=159&cid=4&aid=9100 



இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 7, 2014, 7:37:19 PM2/7/14
to tamilmanram kuzhu, Arvind Swaminathan, Hari Krishnan, thiru thoazhamai, then...@tamilonline.com

சிற்பக்கலைகள் தமிழருக்கே உரிய தொன்மைக்கலையாகும்.  எனினும்  பிற்காலத்தில் சமசுகிருதம் புகுந்ததால் பழம் பெருமை அறிய முடியாமல் போயிற்று. 10 உரூபாய்க் கல்லைப் 10,000 உரூபாய்க்கு விற்பதில் காட்டும் ஆர்வம், முயற்சி, நாட்டத்தை இவர்கள் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் காட்டாததால்,  தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டை இழக்கின்றன.


மனு, மயன், துவஃட்டா, சிற்பி,, விஃட்வக்ஞ எனக் குறிப்பதில் இருந்தே  இதனைப் புரிந்து கொள்ளலாம். சிற்ப வகைக்குரிய பெயர்களை மாற்றிவிட்டு,  இப்பெயர் சிற்ப மூலவர்களைக் குறிப்பதுபோல் கட்டுரைத்து விட்டனர்.

 

கல்லு முலோகமுஞ் செங்கலு மரமு

மண்ணுஞ் சுதையு  மெழுகு மென்றிவை

பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாகும்.

என்னும் பிங்கல நிகண்டு(பா.411)  மூலம், கல், மாழை, செங்கல், மரம், மண்,சுதை, தந்தம், வண்ணம், கண்ட சருக்கரை, மெழுகு கொண்டு  படிமங்கள் செய்துள்ளதை அறியலாம்.


கற்சிற்பிகள் - கல்வினையர், கற்றொழிலோர் என அழைக்கப்பெறுவர்.


ஏர்த்தொழிலுக்குரியவற்றையும் வீட்டிற்குத் தேவைப்படும் கதவு, நிலை, நாற்காலி,  கட்டில் முதலானவற்றையும் கலைநயத்துடன் செய்யும் மரச்சிற்பிகள் தச்சர்/ மரவினையாளர் என அழைக்கப்பெறுவர். இவர்களையே மயா என்றனர். ( மயா > மயன்)

 

பொன்வினை செய்வோர்  தட்டார் / செங்கொல்லர் என அழைக்கப்பெறுவர்.


பொன்னாகிய ஒளிரும் மாழையில்  அணிகலன்கள் உருவாக்குமிடம் அக்கசாலை எனக் குறிக்கப் பெற்று அங்கே பணியாற்றும்  பொன்வினைஞர் அக்கசாலையர் என்றும் குறிக்கப் பெற்றுள்ளனர்.  (சொன்னகாரர் என்றும் குறிப்பிடப்படுவர்.) இவர்களையே சமசுகிருதத்தில் விஃட்வக்ஞ என்கின்றனர்.


கொல்லர், கருமர், கம்மியர் எனப்படுவோரே மனு என அழைக்கப் பெற்றனர்.


வெண்கலத்தில் உருவாக்குநர் கன்னா்,  கன்னுவர், கஞ்சகாரர் எனப்பட்டனர்.


கருங்கல், ஐம்பொன், மரம் ஆகியவற்றில்  இறைவன்  உருவங்களாகிய படிமங்களைச் செய்பவர்களையே சிற்பிகள் என்றனர்.

 

கற்றச்சர் என்னும் வகையினர் சித்திரோடாவி என்றும் அழைக்கப் பெற்றுள்ளனர்.


கம்மாளர் / கம்மியர் என்பன பொதுப்பெயர்களாகும். எனவேதான், கருமார், தச்சர், கன்னார், தட்டார், சிற்பி ஆகிய ஐவகையினரும் பஞ்ச கம்மாளர் என அழைக்கப் பெறுகின்றனர்.

   

பூணூல் அணிந்தும் சமசுகிருதச் சொற்களைப் பயன்படுத்தியும் தங்களை ஆரிய வழி வந்தவர்களாகக்  காட்டிக் கொள்வதைவிட்டுத், தாங்கள் தமிழர் மரபினர்  என்பதைப் படிம வினைஞர்கள் உணர்ந்தால்  தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தித் தமிழ்ப்பெருமையை நிலைநாட்டித் தமிழ்க்கலைகளை  ஓங்கச் செய்வர்.



2014-02-03 rajam <ra...@earthlink.net>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Feb 8, 2014, 12:54:39 PM2/8/14
to tamil...@googlegroups.com, Arvind Swaminathan, Hari Krishnan
நன்றி, ஐயனே! 

"சிற்பக் கலைகள் தமிழருக்கே உரிய தொன்மைக்கலை" என்று சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை

தாங்கள் குறிப்பிட்ட அத்தனைக் குறிப்புகளும் பண்டை இலக்கியங்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை) இருப்பதை அறிவேன். ஆனாலும், "மயன்" என்ற சொல்லுக்கு விளக்கம் இப்போதுதான் எனக்குக் கிடைத்தது; எனக்கு மகிழ்ச்சி; அதுக்காகத் தென்றல் இதழுக்கு மிக்க நன்றி என்று மீண்டும் சொல்லுவேன். 

பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்து மாணவியாக இருந்தபோது 'மாயன் மொழியியல்' (Mayan lingustics) படித்தேன். அப்போது ... ஆசிரியருக்கே தடுமாறிய சொல்லாராய்ச்சி ஒன்றுக்குத் தமிழ்வழியில் விளக்கம் கொடுத்தேன். அதை நினைவுகூர்ந்து அவரது ஆய்வுக் கட்டுரையில் எனக்கு நன்றி சொன்னார்! 

உண்மை. பல தமிழ்ச்சொற்களையும் அவற்றின் பொருளையும் இழந்துவிட்டோம். மீட்டெடுக்க முயல்வோம். 

இப்படிக்கு,
தமிழாசிரியை ராஜம்

வேந்தன் அரசு

unread,
Feb 8, 2014, 1:05:15 PM2/8/14
to தமிழ் மன்றம், Arvind Swaminathan, Hari Krishnan
>> பூம்புகாரில் மரத்தால் இழைக்கப்பட்ட வடிவங்களைக் கொண்ட ஓர் இடம் இருந்தது என்று தெரிகிறது
. அது இப்போது இருக்குமா என்பது ஐயமே. 

ஐயா கட்டினால் அம்மா கவ்னிக்க மாட்டார். அமமா தானாக எதுவும் செய்ய மாட்டாங்க

ஐயா,  பூம்புகார் போன்ற இடங்களை கட்டியதும், தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் ஒப்படைத்து இருக்கணும்.


8 பிப்ரவரி, 2014 12:54 பிற்பகல் அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Feb 8, 2014, 1:28:44 PM2/8/14
to தமிழ் மன்றம், Arvind Swaminathan, Hari Krishnan
வேந்தன் ஐயா, யான் குறித்தது மணிமேகலைக் காப்பிய காலத்து மயன் இழைத்தது:

///இதுகொண்டு, மணிமேகலைக் காப்பிய காலத்தில், பூம்புகாரில் மரத்தால் இழைக்கப்பட்ட வடிவங்களைக் கொண்ட ஓர் இடம் இருந்தது என்று தெரிகிறது. அது இப்போது இருக்குமா என்பது ஐயமே. ///

யான் குறித்ததில் இந்தக் கால அரசியல் கண்ணோட்டம் இல்லவே இல்லை. 
Reply all
Reply to author
Forward
0 new messages