வெங்கனூர் பழமலைநாதர் கோயில் இரு கல்வெட்டுகள்

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 19, 2026, 7:08:54 AMJul 19
to தமிழ் மன்றம்
பெரம்பலூர் மாவட்டம்
வெங்கனூர் பழமலைநாதர் கோயிலில் இரு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
◾ முதல் கல்வெட்டு
இடம்: வெங்கனூர் (வேப்பந்தட்டை வட்டம்) பழமலை நாதர் கோயில் கோபுர வாயில்
மன்னர்: விஜயநகர மன்னர் வேங்கடபதி தேவ மகாராயர் (1582-1614)
செஞ்சி வெங்கலப்ப நாயக்கர்
ஆட்சியாண்டு: சகவருஷம் 1545
காலம்: கி.பி. 1623
க.ஆ.அ.எண்: 1/1913,தெ.இ.க.மடலம்28,
2010 எண்.1
♦️கல்வெட்டுச் செய்தி
துறையூர் பாளையக்காரர் எறம ரெட்டியாரின் மகன் லிங்காரெட்டியார் என்பவர் வெண்கலூரில் பழமலைநாத சுவாமி, பெரியம்மை நாச்சியார் ஆகிய தெய்வங்களுக்கு கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், உள்பிரகாரம், இரண்டாம் பிரகாரம், கோபுரம் ஆகிய அனைத்து கட்டிடங்களுடன் கோயில் கட்டியுள்ளார். இதில் பூஜைப்பணி செய்கின்ற பிராமணர்கனையும் நிருவாகப் பணி செய்ய பொற்பண்டாரம், மாளிகை கூறு ஆகிய அதிகாரிகளையும் நியமித்துள்ளார். மகதமண்டலத்து கன்னி வளநாட்டு, வன்னாடாகிய வெண்பார் நாட்டில் வெண்கனூர் இருந்துள்ளது.
விஜயநகர மன்னர் வேங்கடபதி தேவர் மகாராயரின் காலத்தில் செஞ்சி நாயக்கரான வெங்கப்ப நாயக்கரின் கீழ் இப்பகுதி இருந்துள்ளது. செஞ்சி நாயக்கருக்கும், நாட்டார்களுக்கும் தர்மமாக அவர்களின் நாட்டடிமையாக லிங்கா ரெட்டியார் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளார். இவர் பண்ட குலத்தில் உதித்தவர், வல்லகோல் எறமுரெட்டியாரின் மகன் எனக் குறிப்பிடப்படுகிறார். வல்லகோல் என்பது கன்னடத்தில் பெளகொள-வெள்ளைக்குளம் எனப்படும் சரவணபெல்கோலா என்ற ஊரைக் குறிக்கும். எனவே துறையூர் பாளையக்கார ரெட்டியார்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்பது புலனாகிறது. வெண்கனூர் என்ற பெயர் வெங்கனூர் என மருவி விட்டது. பழமலைநாதர் என்ற பெயர் தற்பொழுது விருத்தகிரிஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறது.
♦️கல்வெட்டு
1) சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ
2) மஹாமண்டலேஸ்வரன் அரி
3) ய ராய விபாடன் பாஷைக்குத்
4) தப்புவராயர் கண்டன் கண்
5) ட நாடு கொண்டு கொண்ட
6) நாடு குடாதான் பூறுவ தெ
7) க்ஷண பச்சிம உத்திர சதுர் சமு
😎 த்திராதிபதி ஸ்ரீ வேங்கடபதி தே
9) வ மகாராயர் பிறுதிவி ராச்சியம்
10) பண்ணி யருளா நின்ற சகாற்
11) த்தம் சதருள சயரு -இதன் மேல் செல்
12) லா நின்ற உதிரோற் காரி è வைகாசி
13) மீ" ங மகத மண்டலத்து கன்னிவ
14) ள நாட்டு வன்னாடாகிய வெண்பார் நா
15) ட்டில் செஞ்சி வெங்கப்ப னாய
16) க்கரயனுக்கும் னாட்டவர்க்கும் தன்ம
17) மாக நாட்டடிமையான செகனப்பிற
18) கண்டராய வேசியர்புயங்க சங்கிறாம
19) தனஞ்செய பண்டகுலத்துதித்த வ
20) ல்லகோல் எறமு ரட்டியார் புத்தி
21) ரன் லிங்கா ரட்டியார் தன்மமா
22) னது இவ்வருஷத்து ரிஷப நாய
23) ற்று பூறுவ பக்ஷத்து துவாதெ
24) சியும் அத்த நட்சத்திரமும் பெற்ற கு
25) ருவாரத்து னாள் விற்தாசலத்துக்கு பி
26) றுதி னாமமான வெண்கனூரில் உடைய
27) வர் பழமலை னாத சுவாமியார் பெரியம்மை
28) நாச்சியார் முதலான தேவதையளையும்
29) உற்சப விக்கிறகங்கள் விக்கினேசுரன் முதல்
30) சண்டேசுரன் பரியந்த முண்டான விக்
31) கிறகங்களையும் இன்னாளில் இந்த திதி வா
32) ர நக்ஷத்திரத்தில் பிழை பொறுத்த குருக்கள்
33) கைய்யினாலே ப்ரதிஷ்டை பண்ணி வித்து பூசை னைவே
34) த்தியமும் நடத்திவிச்சு கெற்பகிறகம் அற்தம
35) ண்டப மகாமண்டபம் நிற்த மண்டபம் உள்
36) ப்பிறகாரம் இரண்டாம் பிறகாரம் கோபுர முதலா
37) ன இதில் தென்புற மகாமண்டபம் உள்
38) கயிங்கிலியமும் செய்துமுடி
39) ச்சு தானம் பரிகலம் உண்டு ப
40) ண்ணிவிக்கையில் தானம் ஏ
41) ற்ப்பாடாநது சிவத்துவிசக் கோத்
42) துக்கு திருத்தோணிபுரம் ஞானசி
43) காமணி திரு அனந்தீஸ்வர பண்டிதரா
44) ன பராசல கோத்தரத்து போதாயன சூத்
45) திரத்து ஆபத்தூத்தாருணப் பெருமாள்
46) புத்திரன் புழைபொறுத்த குருக்களுக்கு
47) இன்னாயனார் திருனாமத்துக் காணி
48) யாக முப்பது வட்டகையும் தான
49) ம் நிறுவாகம் இரண்டும் பூசை சைவா
50) சாரம் கோயில் னாயக மாட்டேறும்
51) இப்பிறம வெள்ளாங்கோத்துக்கு
52) க்ஷிதி பால கோத்திரத்து பண்ட குல
53) வல்ல கோல் லிங்கா ரட்டியார் புத்திரன்
54) அண்ணாமலை ரட்டியார்க்கு முப்பது வ
55) ட்டம் இரண்டு நிறுவாகமும் பொற்பண்டார
56) மாளிகைக் கூறும் இன்னாயனார் கோயில்
57) ஆதிசண்டேஸ்வரர் பட்டையமாகக் கட்டளை
58) யிட்டபடியினாலே இதுக்குண்டான மண் மனை
59) நஞ்சை புஞ்சை இலக்கைப்படி பிற சாத மு
60) தலான சகல சுவந்திர சுவாமிய
61) ங்களும் அனுபவித்துக் கொ
62) ண்டு அவரவற்கு கோயில் துறைக் கு
63) ண்டான ஊழியங்களும் செய்து மு
64) டித்துக் கொண்டு இந்தப் படிக்குப்
65) புத்திர பவுத்திர பாரம் பரியமாகச் ச
66)ந்திராதித்தவரையும் அனுபவித்துக்
67) கொண்டு வரக் கடவாராகவும்//உ.
◾ இரண்டாம் கல்வெட்டு
இடம்:வெங்கனூர் (வேப்பந்தட்டை வட்டம்)பழமலை நாதர் கோயில் கோபுர வாயில்
அரசர்: மூன்றாம் ஸ்ரீரங்கன் (1642-1672)
ஆட்சியாண்டு: சக வருஷம் 1591
காலம்: கி.பி. 1669
க.ஆ.அ.எண்: 2/1913,தெ.இ.க.மடலம்.28,2010,எண்.2
♦️கல்வெட்டுச் செய்தி
வெண்கலூர் பழமலைநாத சுவாமியார், பெரியம்மை நாச்சியார் கோயில் பூஜை நெய்வேத்தியத்திற்காக வெண்கலூரில் உள்ள குடியானவர்களான ரெட்டிகள், வெள்ளாழர், கொடிக்கால்காரர், பெரியம்மை பாளையம் முதலான குடியானபேர்களும் கொடுமுடிகள், செட்டி, வர்த்தகர், கைக்கோளர், சேணியர், செக்குக்காரர், எருத்துக்காரர் உள்ளிட்ட காசாய வர்க்கத்தாரும் பிராமணர் முதலாகிய சாதிவகையைச் சேர்ந்த பலரும் வல்லக்கோல் எறுமரெட்டியார் மகன் விருத்தாசல ரெட்டியாருக்கு புண்ணியமாக நஞ்சை புஞ்சை நிலத்துக்கு இரண்டு பணமும்,குழி ஒன்றுக்கு ஒரு நாழி தானியமும், தறி ஒன்றுக்கு ஒரு பணமும், காசாய வர்க்கத்தார் தலைக்கட்டுக்கு ஒரு பணமும் கொடுத்து கோயில் பூஜை வழிபாட்டை நடத்த ஏற்பாடு செய்தனர்.
♦️கல்வெட்டு
1. உ சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீமன்
2. மஹா மண்டலேஸ்வரந் ஸ்ரீ
3. சீரங்க தேவ மகராயர் பிறு
4. திவி ராச்சியம் பண்ணி அரு
5. ளா நின்ற சகாற்தம் வருஷம்
5. சதருளகூயக இதன்மேற் செல்
7. லா நின்ற சவுமிய இரு சித்திரை
8. மீ யஅ * தெசமியும் அதைய நஷ்ஷெத்
9. திரமும் பெற்ற குரு வாரத்து னாள்
10. வெண்கலூர் பழமலை னாத சுவாமியார்
11. பெரியம்மை னாச்சியார் கோயில் பூசை
12. நைவேத்தியத்துக்கு வெண்கனூற் குடி
13. யானவர்கள் உள் கடையாக ரெட்டியள்
14. வெள்ளாழர் கொடிக் காற்காறர் பெரியம்மை
15. பாளைய முதலான குடியான பேரும்
16. கொடு முடியன் செட்டி வர்த்தகர் கைக் கோளர்
17. சேணியர் செக்காரர் எருத்துக்காறர் முதலான
18. காசாய வற்கத்தாரும் விறும்ம முதலாகிய
19. சாதிவகையுண்டான சாதி பலவகைப் பேருமாகக் கட்டளையிட்ட
20. தன்மமானது வல்ல கோல் எறம ரட்டியார் புத்திரன்
21. விறுத்தாசல ரட்டியார் புண்ணியமாக
22. வெண்கனூர் வயற்காட்டு நஞ்சை நஞ்சைத்
23. தரப்புஞ்சை முதலாகியது எது பயிரேறினா
24. லும் விளைஞ்ச நிலத்துக்கு கூ க-க்கு உ ஆக கட்டளை
25. யிட்ட படியினாலே வயற்காட்டில் நஞ்சை புஞ்சை காய் தா
26. னிய முதலானதும் உள்க்குடி பிறவடைக் காறர் முத
27. லான பேரும் குழியொன்றுக்கு நாழியாக அன்னேரம்
28. அன்னேரம் விளைஞ்சதானியம் குடுத்து வரக்
29. கடவோமாகவும் தறிகாறர் தறிக்கு ஒரு பணமும்
30. காசாய வற்கத்தார் தலைக்கட்டுக்கு ஒரு பணமுமாக
31. வருஷாவதி குடுத்து வரக் கடவராகவும் கைச்சித முதலாகிய
32. ராணுவத்துப் பேரும் இந்தப்படி குடுத்துவரக் கடவோமாகவும்
33. இந்த தன்மம் சந்திராதித்தவரையும் நடத்தி வரக் கடவராகவும்
34. இந்த தன்மம் பரிபாலனம் பண்ணி நடத்தின பேரும் செய்த பேரும்
35. சோடச தான முதலாகிய மகா தானமும் கெங்கை கரையிலேயும்
36. பழ மலைநாத சுவாமியார் பெரியம்மை னாச்சியார் சன்னதியிலேயும் பண்
37. ணின பலன் உண்டாகி அபிவிற்தியாகக் கடவராகவும் இந்த தன்மம்
38. உமாபதி ரட்டியார் செய்விச்சது இது கோயிற் கணக்குப் பிள்ளை
39. இனிய பெருமாள் எழுதின எழுத்து உகுருபாதந் துணை உ.
◾
துணை நூல்:
பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் , செப்பேடுகள்
பேராசிரியர் முனைவர் இல.தியாகராஜன்
2017
Reply all
Reply to author
Forward
0 new messages