இன்றய தென்னை மரத்தை பண்டு தெங்கு என்றே அழைத்தனர். இதற்கு இலக்கிய சான்றுகள், செப்பேட்டு சான்றுகள் உள்ளன. ஏன் இதை தேங்காய் என்கிறோம்? தென்னங் காய் தானே சரி?
வட இந்தியர் நோக்கில் தென் இந்தியாவில் வளரும் மரம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அதனால் தெற்கை குறித்து தென்னை என்ற குறிப்பு பின்னாளில் எழுந்திருக்கலாம்.
தேங்காய் என்பதே சரி ஏனெனில் தெங்கங்காய் என்பதே மக்கள் வழக்கில் தேங்காய் என திரிந்துள்ளது. தெங்கு என்ற சொல் வழக்கொழிந்து தென்னை என்று இன்று வழங்கினாலும் தெங்கு என்ற சொல் தேங்காய் எனும் சொல்லில் இன்றும் மறைந்து வழங்குகிறது. தென்னகாய் என்று மக்கள் மனதில் பதியாததுவே தேங்காயை வாழச் செய்துள்ளது. ஆனாலும் தென்னங்காய் என்பதும் சரியான வழக்கு தான்.