[பின் குறிப்பு: இந்த வகைச் சொற்களின் அமைப்பைப் பற்றி ஏற்கனவே நெடுநாள் முன்பு இங்கே உள்ளூர்க்குழுவில் என் கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன். … ] ///
++++++++++
அண்மையில் … இணையத்தில் …
1. தேமொழி சொன்னது:
/// Similar to saying she is Doctor Rajam but but she is not a medical practitioner. ///
2. வேல் முருகன் சொன்னது:
/// இவையெல்லாம் இயல்பிலிருந்து திரிந்த/விலகிய பொருட்களைக்குறித்த தொடர்கள்/தொகைகளாக எனக்குப்படுகின்றன. (தொகை, தொடர் என இரண்டிலும் காட்டுகள் உள்ளன என்று நம்புகிறேன்] ///
3. முனைவர் பாண்டியராஜா சொன்னது:
/// இக் கூற்றுகளின் கட்டமைப்பு பற்றி சொல்லத் தெரியவில்லை. ஆனால் தாங்கள் கொடுத்த்து போலவே இன்னும் சில தொடர்களைச் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.
வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் - கலி 147/37
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ - புறம் 32/2
ஊரா குதிரை கிழவ - புறம் 168/14
வாடா தாமரை சூட்டுவன் நினக்கே - புறம் 319/15 ///
4. முனைவர் கண்மணி சொன்னது:
///
1.வேளாப் பார்ப்பான் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
3. எழாஅப் பாணன் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
4. பறாஅக் குருகு (கலித்தொகை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
5. சூடா நறவு (பரிபாடல்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர்
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர்
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)= இதில்் தொகையே இல்லையே.
8. பத்தி கோணாத கோணம் = இதில் தொகை எங்கே இருக்கிறது?.
நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர்
Sorry.இது இடப்பெயர் இல்லை.
///
5. முனைவர் கணேசன் சொன்னது:
/// செய்யாப் பாவை
பாடாத கந்தருவம், பத்தி கோணாத கோணம் - அந்தகக்கவி சேலத்தின் தாகந்தீர்த்த செழியனுக்கு அனுப்பின பாடல்
புனைவிலக்கியம் =Fiction, செய்யாப்பாவை, ஊராக்குதிரை, வாடாவஞ்சி, .... போல Non-fiction என்பதை புனையாப் புனைவு/எழுத்து/இலக்கியம் என மொழிபெயர்க்கலாம் ///
6. வேந்தன் அரசு சொன்னது:
/// கேளா ஒலி. (அல்ற்றா சோனிக் சவுண்ட்) ///
நான் சொல்வது: மேற்காணும் எல்லாமே மிக அருமையான தரவுகள் / எடுத்துக்காட்டுகள். எல்லாருக்கும் மிக்க நன்றி.
++++++++++
/[இடைப்பிறவரல்}
இங்கே உள்ளூர்க்குழுமத்தில் ஒருவர் இவ்வகைச் சொற்களின் கட்டமைப்புப் பற்றி என்னைச் சாடியிருக்கிறார். அவர் ஆகுபெயர் என்றார், நான் இல்லை என்றேன். மேலும் சொல்லி … தன் பகுப்பு முறையின் வழியே தான் நிற்பதாகவும் … நான் என் பகுப்புமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் … நான் தமிழிலக்கணத்தைத் தவறாகக் கற்பிக்கக்கூடாது என்றும் கண்டித்துவிட்டார்!!! ;-) ;-) ;-)
ஒரு தொகையையோ தொடரையோ பிரித்து அங்கே உள்ள ஒரு சொல்லைப் பிரித்தெடுத்து ... அவர் செய்த இலக்கண ஆய்வு என்னை மிரட்டுகிறது!!! :-)
அய்யோ! அய்யோ! … பள்ளிப்பருவத்திலிருந்து எனக்கு இலக்கணம் கற்பித்த தமிழாசிரியர்களே, எல்லாரும் எங்கே போனீர்கள்?!
[இடைப்பிறவரல்] /
++++++++++
இந்த வகைத் தொகைச்சொற்களைப் (compound words) பற்றிக் கேட்ட அயலவருக்கு மறுமொழி எழுதிக்கொண்டிருக்கிறேன். அதை முடித்து அவருக்கு அனுப்பியபின் இங்கே தமிழ்க்குழுமங்களில் பகிர்ந்துகொள்கிறேன்.