ண,ந, ன என்பவை வல்லினம் பிறக்கும் இடத்திலேயே பிறக்கும் மெல்லினம் என்பதால் எளிதாகச் சொல்லிக்
காட்ட இயலும். ஆனால் ல, ள, ழ என்பன இடையினம். இவற்றைக் கூற இதே முறையைப் பயன்படுத்த
முடியாது. லகரத்தைப் பல்லணை லகரம் என்று சொல்லலாம் ஆனால் அதனால் கேட்பவர் புரிந்துகொள்வார்
என்று சொல்ல இயலாது. ளகரம் என்பது நாவளையொலி, இதனை வலிந்த நாவளையிலி ளகரம் என்றும்,
ழகரம் என்பதைக் குழைந்த நாவளையொலி ழகரம் என்றும் சொல்லலாம். ஆனால் பொதுமக்களுக்கு
உடனே புரிய லகரத்தைப் 'பல்'-லகரம் என்றும், ளகரத்தை வள்ளி-ளகரம் என்றும், ழகரத்தைத் தமிழ் ழகரம் என்றும் சொல்லாம். வள்ளி என்பது வல்லியா வள்ளியா என்னும் குழப்பம் ஏற்படலாம், என்பதால் வளையல்
ளகரம் எனலாம். (அதாவது பல்லை ஒட்டி இருப்பதால் பல்லகரம் என்றும், வளைவதால் வளை-ளகரம், தமிழின் சிறப்பு ழகரம் என்பதால் தமிழ்-ழகரம் என்று குறிக்கலாம்).