1. தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) + 2. ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43: இலக்குவனார் திருவள்ளுவன்

537 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 1, 2022, 7:28:33 PM1/1/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, kanagad...@gmail.com, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, sa...@thehindutamil.co.in, saralas_k...@yahoo.com, see...@gmail.com, su.ariv...@gmail.com, tamizham...@gmail.com, thagadoo...@gmail.com, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, vidutha...@gmail.com, vaani...@gmail.com, vaiyai...@gmail.com, Vijaya Raghavan, riaz66...@gmail.com, vrtami...@gmail.com, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com
பொறுத்தருள்க. துறைப்பெயர்களின் அட்டவணைப் பதிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பதிவு ஏற்படவில்லை என மறுபதிவிட்டால் கண்களுக்குத் தெரிகிறது. பின்னர் மறைகிறது. பின் தெரிகிறது. மறைகிறது. எனவே, இணைப்பை அளிக்கிறேன்.

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43: இலக்குவனார் திருவள்ளுவன்


தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)



(தந்தை பெரியார் சிந்தனைகள் 30 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 31

3. மொழிபற்றிய சிந்தனைகள்

3. மொழி

மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன்.

(1) மொழி பற்றியவை: (அ) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

(ஆ) மொழியின் தத்துவத்தைப்பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்தந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்தந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். இதைத்தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.

(இ) தேசிய மொழி என்றாலே நாட்டுமொழி என்றுதானே பொருள்? அப்படிப்பார்த்தால் சுதந்திரத்தமிழனுக்குத் தமிழ் அல்லாத வேறு எந்த மொழியும் அன்னியமொழிதானே? அப்படியிருக்க இன்று தேசியமொழி என்பதும் தேசம் எவன் ஆதிக்கத்திலிருக்கின்றதோ அவன் மொழியாகத்தானே ஆக்கப்பெற்றிருக்கிறது? தமிழனுக்குத் தமிழ்நாடுதானே தேசம்? தேசம் என்றால் நாடு என்றுதானே பொருள்?

(ஈ) எதற்கெடுத்ததாலும் பெருமையையே பேசிக்கொண்டு தாய்மொழி, வெங்காயம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உலகத்தோடு போட்டியிடமுடியும்? உலகமே ஒருமொழிக்கு வரவேண்டும். அப்போதுதான் உலகமக்களோடு போட்டிபோட்டுப் பழக வாய்ப்பு ஏற்படும்.

(உ) மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்? அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

(ஊ) மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது. அரசின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடையதாயினும் அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் (இன்று தமிழ்மொழி இந்திய அரசியல்மொழியாகச் செய்ய கலைஞர் ஆட்சி முயன்று வருகின்றது).

இவற்றால், தந்தை பெரியார் அவர்கள், பயன்படும் முறையால்தான் ஒரு மொழியின் பெருமை அமைகின்றதேயன்றி வேறு எவற்றாலும் மொழிக்குப் பெருமை இல்லை என்ற கருத்துடையவர் என்பதை நாம் அறிய முடிகின்றது.

(2) தமிழ்: தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்ததுபோல வேறு எந்த மொழியையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்தததில்லை. ஒரு காவியத்தில் அல்லது புராணத்தில் இம்மொழிப்புகழ்ச்சி இடம் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக,


பொருப்பிலே பிறத்துதென்னன்
புகழிலே கிடந்துசங்கத்து

இருப்பிலே இருந்துவையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்(1)

என்று பாடுவார் வரந்தருவார். ‘தமிழ்விடுதூது’ ஆசிரியர் ‘தித்திக்கும் தெள்ளமுது’, ‘முத்திக்கனி’, ‘புத்திக்குள் உண்ணப் படுந்தேன்’ என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவார். ஆனால் தந்தை பெரியாருக்கு இம்முறை மனத்திற் குகந்ததாக இல்லை. தமிழ் மொழிபற்றி அவரது சிந்தனைகள்:

(கதமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழிவரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும் சமயத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.

(ஙதமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலகனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கியதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையடைந்துவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ்வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் செய்யும்.

(சதமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாளவேண்டிய மொழியாகும். நாகரிகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்ற வண்ணம் தமிழையும் கெடுத்து விட்டார்கள். . . நாம் காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ் மொழியைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பழங்கால அநாகரிகத்திற்கேற்றவற்றை மாற்றி இக்கால நாகரிகத்திற்கேற்றபடி சீராக்க வேண்டியது அவசியம்.

(ஞநான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய் மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்று முயன்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்.

(டதமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறேன் என்றால் இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாதே என்ற கவலையினால்தானே தவிர, தமிழை மிகவும் உயர்ந்த மொழி, எல்லாவல்லமையும் பொருந்திய மொழி என்று நினைத்து அல்ல.

(ணதமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய, அறிவுவாதியாக ஆகமுடிவதே இல்லை. அது மாத்திரமேயல்லாமல் எவ்வளவுக்கெவ்வளவு தமிழில் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகிறன்றதே தவிர, முன்பக்கம் பார்க்கமுடிவதே இல்லை. (குறிப்பு 2)

(த) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப்பார்வை ஏற்படுகிறது. தமிழ்படித்துவிட்டால் பின் பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப்புலவனும் மேதையும் தமிழ்ப்படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆய்விடுகின்றான்! தமிழனுக்கு உயிர் அவனது இலக்கியங்கள்தாம். இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமயஉணர்ச்சியோடு பழமைக் கற்பனைகளே அல்லாமல், அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட, இலக்கியங்களைக் காண்பது அமாவாசையன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது. (குறிப்பு 3)

(ந) தமிழை- (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப் பெறாத) தமிழ்மூல நூல்களைத் தனித்தமிழ் இலக்கியநூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ்ச்சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனைத்தைச் சிறு கருத்தை உருப்பெருக்கி வைத்துத்தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? (குறிப்பு 4)

(ப) தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் – நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுபோன்று தலைதுாக்க முடியாமல் செய்து வருகின்றன. (குறிப்பு 5)

(ம) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?(குறிப்பு 6) 

 (3) ஆங்கிலம்: இம்மொழிபற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தீர்க்கதரிசனமானவை. பொறுப்பிலிருக்கும் கட்சி அரசு ஆலோசித்துச் செயற்படுதல் இன்றியமையாதது. தந்தையின் சிந்தனைகளில் சில:

(அ) இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலகத் தொடர்பு இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்குத் தேசம், நாட்டுக்கு நாடு இப்போதுள்ள தூரத்தில் இருக்காது; கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. இந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும்கூட வேலை இருக்காது.

(ஆ) தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது, பயன்படக்கூடியது என்று என்னைக்கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. ஆங்கிலமே தமிழரின் பேச்சுமொழியாக ஆகுங்காலம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.

(இ) தமிழின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச்சமயம் தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்கமுடியாது. தமிழ் வடமொழியை விட, இந்திமொழியைவிடச் சிறந்ததென்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனாமொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாவது (குறிப்பு 7)   [குறிப்பு 10] அவசியம் என்றும், ஆங்கிலமே நமது பேச்சுமொழியாவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் ஆங்கிலம் அறிவு மொழி மாத்திரம் அல்லாமல் அஃது உலகமொழியுமாகும்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்- (வரந்தருவார்)

குறிப்பு 2. நான் திருப்பதியில் பணியாற்றியபோது தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து கற்று முதல்வகுப்பு பெறவேண்டும் என்று வற்புறுத்துவேன். இது தமிழாசிரியனாகப் போவதற்காக அல்ல என்றும், தேர்வுகள் எழுதி வங்கி அலுவலர், முதல் வகுப்பு அலுவலர், இ.ஆ.ப. அலுவலர் பணிக்குச் செல்ல முயலவேண்டும் என்றும் அதற்காகப் பொது அறிவு பெறும் வழிகளைக் காட்டியும் அறிவுறுத்துவேன். பொருளாதாரம், தத்துவம், கணிதம், அறிவியல் படிப்போர் எங்ஙனம் பிறதுறைகளில் பணியாற்றுகின்றனரோ அவ்விதம் பணியாற்றவேண்டும் என்றும் ஆற்றுப்படுத்துவேன். இதன்பலனை அப்பொழுதே நேரில் கண்டேன்.

குறிப்பு 3. எந்தத் துறைக்கும் போகமுடியாதவன்தான் தமிழுக்கு வருகிறான். அவனது அறிவுக்குறை பிறதுறைகட்குச் செல்லும் உந்தல் இல்லாமல் செய்துவிடுகிறது; தமிழாசிரியர் அலுவல் தவிர பிறதுறை அலுவலுக்குப் போகும் ஆசை இல்லாமல் செய்து விடுகின்றது.

குறிப்பு 4. 17 ஆண்டுகள் ஆந்திரத்தில் பணியாற்றினாலும் என் தாய்மொழியாகிய தெலுங்கைக் கற்கும் ஆசை ஏற்படவில்லை. அறிவியல் ஆசிரியர்களின் துணை கொண்டு தாவரஇயல், விலங்கியல், உயிரியல் போன்ற துறைகளில் அறிவு பெற்றேன். அத்துறைகளில் நான் ஐந்து அறிவியல் மூலநூல்களை எழுதி வெளியிட்டேன். ஒரு பெரிய கல்வியியல் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டேன். “பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற பாரதியாரின் வாக்கு எனக்கு இத்திசையில் செல்ல உந்தல் கொடுத்தது.

(குறிப்பு 5.) இது பின்னர் விளக்கப்பெறும். 

(குறிப்பு 6)  இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.

(குறிப்பு 7) இது கருத்து வேறுபாட்டுக்கு உரியது. மேல்மட்டத்திலேயே நம்சிந்தனை போய்க் கொண்டுள்ளது. அடிமட்டத்தில் சிற்றூர்மக்கள் நிலையில் இஃது இடையூறாக முடியும் என்பது வெள்ளிடை மலை.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Seshadri Sridharan

unread,
Jan 1, 2022, 9:30:49 PM1/1/22
to தமிழ் மன்றம்

தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் . சுப்பு(ரெட்டியார்)

 

 

தந்தை பெரியார் சிந்தனைகள் 31

3. மொழிபற்றிய சிந்தனைகள்

3. மொழி

மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன்.

(1) மொழி பற்றியவை: (மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

 

முதல் எடுப்பிலேயே புரியவில்லை என்று சொல்லி தப்பிக்கின்றார். இனக்குழு அடையாளம் போய் அது மொழியினம் என்று அடையாளப் படுவதாயிற்று. தமிழ் வேந்தர் காலத்தில் மொழி இன அடையாளமாகக் கருதப்படவில்லை. ஆனால் விசயநகர வடுகர் ஆட்சியில் மொழி  வேற்றுமைக்கு அடையாளமாக  நின்றது. சிந்துவெளி காலத்தில் மக்கள் மொழிக்காப்பு உணர்வு  தான் பிற சொற்களையும் ஒலிப்புமுறைகளை ஏற்று தமிழை தமிழரே அழித்தனர்.

 

There are three cardinal socio-political principles which should never be violated. First, people should not be retrenched from their occupations unless alternative employment has been arranged for them. Secondly, people should not be forcibly converted from one religion to another. Thirdly, no mother tongue should be suppressed. Occupation, spiritual practice and mother tongue are very important to human beings. If the sentiments associated with them are hurt, human beings will be deeply affected. So, you should never violate these cardinal socio-political principles.      

Thirdly, no mother tongue should be suppressed. If a mother tongue is suppressed, the consequences are most dangerous. Take the example of Pakistan. When Pakistan was formed, Urdu was declared the national language. But the actual language position of undivided Pakistan – that is, East Pakistan and West Pakistan – was that 60% of the population spoke Bengali and 40% spoke Hindi, Baluchi, Punjabi or Urdu. When Urdu was declared the national language, East Pakistan revolted and this led to the division of Pakistan. There was a famous song at the time:

Orá ámáder mukher bháśá keŕe nete cáy…
[They are intent on snatching away the language of our mouth…]

This song aroused the sentiments of the people, and the whole country became united around the issue of their mother tongue.
In India, Hindi has been imposed on non-Hindi speaking people, resulting in much ill-feeling between many states and the centre. The imposition of Hindi amounts to Hindi imperialism, and those who do not speak Hindi feel suppressed. The important languages of Bihar, for example, like Bhojpuri, Maethilii, Angika, Magahii and Nagpuri, have been suppressed in favour of Hindi. The people of Bihar do not even know the pronunciation of Hindi words because they speak with their own intonation. Other languages like French in Canada, Basque in Spain and Sicilian in Sicily have also been suppressed.
The psychology of suppression undermines the progress of a country. People will eventually revolt against it and restore unity. The sentiments of people cannot be forcibly suppressed for a long time. Human beings best express themselves through their mother tongue. If people's mother tongue is suppressed, it is equivalent to strangling them. The suppression of people's mother tongue is a sin.     
 

 What does mother tongue mean? That language in which we can freely, smoothly and spontaneously express our ideas in an unobstructed environment, just as we feel loving closeness with our own mother while in conversation, is our mother tongue. For example, a man in Purnia will talk to some of his close friends only in Angika language, not in any other language.       

Languages should be utilized in day to day life and in all related activities. In all spheres of life – offices, courts, railways, airports, trade, commerce, and private concerns – the medium of expression should be the mother tongue. In the educational sphere there should be no bar in learning languages other than one's mother tongue to expand the horizon and depth of one's knowledge. However in the practical field, where there is some special or technical necessity, whether in public or private life, the compulsory use of one's mother tongue may create confusion. In such circumstances an appropriate common language may be used.    (from Prabhat Ranjan  Sarkar speeches) 

 

(மொழியின் தத்துவத்தைப்பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்தந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்தந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். இதைத்தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது மொழி வேண்டுமென்றால் அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும். 

ஈவேரா மனித வாழ்க்கையை காட்டுமிராண்டி காலத்திலேயே வைத்து சிந்திப்பதால் இப்படி ஒரு குழப்படி. 

(தேசிய மொழி என்றாலே நாட்டுமொழி என்றுதானே பொருள்? அப்படிப்பார்த்தால் சுதந்திரத் தமிழனுக்குத் தமிழ் அல்லாத வேறு எந்த மொழியும் அன்னிய மொழிதானே? அப்படியிருக்க இன்று தேசியமொழி என்பதும் தேசம் எவன் ஆதிக்கத்திலிருக்கின்றதோ அவன் மொழியாகத்தானே ஆக்கப்பெற்றிருக்கிறது? தமிழனுக்குத் தமிழ்நாடுதானே தேசம்? தேசம் என்றால் நாடு என்றுதானே பொருள் 

இந்தியா ஒரு கூட்டுக் கலவை  நாடு. அரசியலமைப்புப்படி தான் இந்திய ஒரு நாடு.  இதில் தனியே ஒரு தேசிய மொழி என்று ஏதும் இல்லை. எதோ ஒரு மொழியை  தேசிய மொழி என்று அறிவிப்பது அரசியலமைப்பை தகர்த்துவிடும்.

(எதற்கெடுத்ததாலும் பெருமையையே பேசிக்கொண்டு தாய்மொழி, வெங்காயம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உலகத்தோடு போட்டியிடமுடியும்? உலகமே ஒருமொழிக்கு வரவேண்டும். அப்போதுதான் உலகமக்களோடு போட்டிபோட்டுப் பழக வாய்ப்பு ஏற்படும் 

போட்டி என்பதே ஒரு capitalist  சொல். வணிகத்தார் தான் பணப் பேராசையில் அடுத்தவர் சந்தையை கைப்பற்ற போட்டிபோடுகின்றனர். ஆனால் சந்தை என்பது அந்தந்த உள்ளூர்மக்களுக்கு சொந்தமானது. தமது சந்தையில் தமது பொருள்தேவை நிறைவேற்றப்படுதலே தற்சார்பு, தன்னிறைவு ஆகும்.

(மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்? அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும் 

மேற்சொன்ன கருத்துக்களுக்கும் இதற்கு எவ்வளவு முரண் ?

(2) தமிழ்: தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்ததுபோல வேறு எந்த மொழியையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்தததில்லை. ஒரு காவியத்தில் அல்லது புராணத்தில் இம்மொழிப்புகழ்ச்சி இடம் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக,

என்று பாடுவார் வரந்தருவார்தமிழ்விடுதூது ஆசிரியர் தித்திக்கும் தெள்ளமுது’, ‘முத்திக்கனி’, ‘புத்திக்குள் உண்ணப் படுந்தேன் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவார். ஆனால் தந்தை பெரியாருக்கு இம்முறை மனத்திற் குகந்ததாக இல்லை. தமிழ் மொழிபற்றி அவரது சிந்தனைகள்:

(தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழிவரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும் சமயத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்

 

மொழி என்பது பல புலன்களின் (faculty) பதிவு. அதில் சமயமும் ஒன்று, சமயம் வளர்ந்த காலத்தில்  சமயத்தவர் தமது ஆக்கங்களை தமிழில் செய்தனர். அது அவரது உரிமை. சமயம் வேண்டும் பிற்கால மக்களுக்கு அது பயன்படப்போகிறது. முன் னேற்றம் எந்த துறையில் வேண்டுமோ அதில் புதிதாக ஆக்கங்களை செய்து கொள்ளலாம். அதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றை அழித்தால் தான் மொழிக்கு முன்னேற்றம் என்பது மக்களை முட்டாளாக்கும் கருத்து.  

(தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலகனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கியதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையடைந்துவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ்வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் செய்யும்.  

 

மொழி என்பது ஒரு பதிவு (registry) என்பதை ஈவேரா மறந்து இப்படி எல்லாம் பிதற்றுகிறார். 

(தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாளவேண்டிய மொழியாகும். நாகரிகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்ற வண்ணம் தமிழையும் கெடுத்து விட்டார்கள். . . நாம் காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ் மொழியைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. பழங்கால அநாகரிகத்திற்கேற்றவற்றை மாற்றி இக்கால நாகரிகத்திற்கேற்றபடி சீராக்க வேண்டியது அவசியம் 

தமிழகத்தில் மலையகத்தில் (குறிஞ்சி) வாழும் மக்கள் தவிர வேறு  எவரும் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்பவர்  அல்லர். மொழி என்பது ஓடும் ஆற்றைப்போன்றது. ஒரு ஆறு ஓடும் நிலத்திற்கு தக அதன் நீரின் நிறம் சுவை மாறி இருக்கும். அது போலவே மொழி ஒவ்வொரு காலகட்டத்தை கடந்து வரும் போதும் அந்தந்த காலத்தின்  அடையாளங்களை தன்னகத்தே பெற்று வரும். இக்காலத்திற்கு ஏற்ப மொழியில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் அது இக்கால மக்களின் குற்றம். அதற்கு பழைய கால மக்களை எப்படி குறை சொல்ல முடியும். அது முட்டாள்தனத்தின் உச்சம் அன்றோ?

(நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய் மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்று முயன்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம் 

மேற்சொன்ன கருத்துக்களுக்கு இது எவ்வளவு முரண்படுகிறது.

(தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறேன் என்றால் இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாதே என்ற கவலையினால்தானே தவிர, தமிழை மிகவும் உயர்ந்த மொழி, எல்லாவல்லமையும் பொருந்திய மொழி என்று நினைத்து அல்ல.

(தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய, அறிவுவாதியாக ஆகமுடிவதே இல்லை. அது மாத்திரமேயல்லாமல் எவ்வளவுக் கெவ்வளவு தமிழில் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகிறன்றதே தவிர, முன்பக்கம் பார்க்கமுடிவதே இல்லை. (குறிப்பு 2)  

மொழியின் தோற்றம், இயங்கு நிலை பற்றிய புரிதலில் ஈவேராவிற்கு அதிக குழப்பம் உள்ளது புலனாகிறது.

(தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப்பார்வை ஏற்படுகிறது. தமிழ்படித்துவிட்டால் பின் பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப்புலவனும் மேதையும் தமிழ்ப்படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆய்விடுகின்றான்! தமிழனுக்கு உயிர் அவனது இலக்கியங்கள்தாம். இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமயஉணர்ச்சியோடு பழமைக் கற்பனைகளே அல்லாமல், அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட, இலக்கியங்களைக் காண்பது அமாவாசையன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது. (குறிப்பு 3)  

அப்படியானால் தமிழில் படிக்காத தமிழரல்லாதவர் எல்லாம் முன்பக்க பார்வை பெற்றவராக அல்லோ இருத்தல் வேண்டும்? பக்கத்துக்கு நாட்டு தெலுங்கனோ கன்னடனோ அப்படி இல்லையே ஏன்? 

(தமிழை- (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப் பெறாத) தமிழ்மூல நூல்களைத் தனித்தமிழ் இலக்கியநூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ்ச்சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி அறிவு பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனைத்தைச் சிறு கருத்தை உருப்பெருக்கி வைத்துத்தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? (குறிப்பு 4)  

அவ்வக்காலத்தே வாழ்ந்த மக்கள் தமது தேவைக்கு தக்க மொழியில் ஆக்கம் செய்தே வந்துள்ளனர். காட்டாக தமிழில் சித்தமருத்துவம், கணிதம், சோதிடம் முதலாய நூல்கள். இக்காலத்தே ஐரோப்பியரால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட புலங்களை பழங்கால தமிழ் நூல்களில் தேடுவதே ஒரு முட்டாள்தனம் தானே? 

(தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள்நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுபோன்று தலைதுாக்க முடியாமல் செய்து வருகின்றன. (குறிப்பு 5)

 

அக்கால இலக்கியங்கள் அக்காலத்தின் பதிவுகள் இதற்கு முழு மொழி அமைப்பையே புழுத்தல்  என்று ஒதுக்கி குற்றம் கூறுவது ஏதோ ஒன்றை மறைக்க ஏதோ ஒன்றை சொல்லி திசை திருப்புவது ஆகும். தமிழனை தலையெடுக்காமல் செய்வது தெலுங்கு வடுகர் ஆதிக்கமே. இந்த வடுகர் ஆதிக்கமே அந்த ஏதோ ஒன்று.

(தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லைஓர் எடிசன் தோன்றவில்லைஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?(குறிப்பு 6) 

 

ஈவேராவின்  கால ஒப்பீடே தவறு. அந்த ஆரியம் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக பல்லவர், வாணர் உள்ளிட்ட வடுகராலேயே புகுத்தப்பட்டது. படையெடுப்பை தடுக்க முடியாத ஒரு இனம் அடிமை இனம் என்பதற்கு தமிழ் இனமே சான்று. அறிவியல்  அறிஞர்கள் வேறு அவர் கண்டுபிடிப்புகளை உற்பத்தி முறையில் சந்தைப்படுத்தும் capitalist  வேறு என்ற வேற்றுமை அறியாத முட்டாள் பேச்சு இது. உண்மையில் பணப்பேராசை கொண்ட capitalist தான் அறிவியல் கண்டுபிடிப்பை மக்களுக்கு கிடைக்கச் செய்கிறான்.

 (3) ஆங்கிலம்: இம்மொழிபற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தீர்க்கதரிசனமானவை. பொறுப்பிலிருக்கும் கட்சி அரசு ஆலோசித்துச் செயற்படுதல் இன்றியமையாதது. தந்தையின் சிந்தனைகளில் சில:

() இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலகத் தொடர்பு இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்குத் தேசம், நாட்டுக்கு நாடு இப்போதுள்ள தூரத்தில் இருக்காது; கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. இந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய மொழிக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும்கூட வேலை இருக்காது.   

 

உலக மொழி என்பதும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே தான் இருக்கும். எனவே இப்போதுள்ள ஆங்கிலம் சுவடு தெரியாமல் காணாமலும் போகும்.

() தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது நல்லது, அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது, பயன்படக்கூடியது என்று என்னைக்கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. ஆங்கிலமே தமிழரின் பேச்சுமொழியாக ஆகுங்காலம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்

 

தமிழர் தமிழராக இருக்கவே கூடாது என்ற எண்ண ஓட்டம் மேலோங்கி நிற்கிறது. இது தான் ஈவேரா வை தமிழ் இனப்பகை என்று காட்டுகிறது.

() தமிழின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச்சமயம் தமிழ்ப்பண்பாடு மூலமோ நாம் உலகமக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்கமுடியாது. தமிழ் வடமொழியை விட, இந்திமொழியைவிடச் சிறந்ததென்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு ஐயமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனாமொழியாகவும் இருந்தாக வேண்டும் என்றும், ஆங்கில எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளாவது (குறிப்பு 7)   [குறிப்பு 10] அவசியம் என்றும், ஆங்கிலமே நமது பேச்சுமொழியாவது நலம் பயக்கத்தக்கது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் ஆங்கிலம் அறிவு மொழி மாத்திரம் அல்லாமல் அஃது உலகமொழியுமாகும்.    

இது ஒரு மாயத் தோற்றம் தமிழர் எவரும் இந்த பேச்சிற்கு மயங்கவேண்டாம்.

Reply all
Reply to author
Forward
0 new messages