செங்கம் நடுகற்கள்

18 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Feb 28, 2021, 4:16:07 AM2/28/21
to தமிழ் மன்றம்

image.png

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்கு யாண்டு மூன்றாவது வயிரமேக வாணகோவரையர் சேவகன் மீகொன்றை நாட்டு மலையானருடைய செம்பத் தொண்டன் மகன் காரி பெருமான் பாசாற்றெருமைத் தொறு எயினாட்டார் கொள்ளப் பாசாற்றார் பூசலிடப் பூசல் சென்று கோவூ ர் நாட்டு சிற்றிடையாற்று முது கொன்றை மூக்கின் மீமலை அயங்கயக்கரையிற் சென்று முட்டி மலையனாருடைய செம்பர் ம கன்னான காரி பெருமான்ணன (உ)ரையிலம்பு மாள எவ்விப் பத்திர முருவி எதிரே சென்று பட்டான்.


விளக்கம்: கம்பவர்மப் பல்லவனுடைய 3ம் ஆட்சி ஆண்டில் வயிரமேகவாண கோவரயருடைய படைத்தலைவன் (சேவகன்) மீகொன்றை மலையானருடைய செம்பத் தொண்டன் படையாள் (மகன்) காரிபெருமான் என்பவன் எயிநாட்டார் பாசாற்று எருமைத் தொறு கொள்ளப் பாசாற்றூ ரார் பூசலிடப் (சண்டையிட) அங்கு சென்று கோவூர் நாட்டின் சிற்றிடையாற்று முது கொன்றை மூக்கின் மீமலை அயங்கயக்கரையிற் (குளக்கரையில்) சென்று போரிட்டு மலையனாருடைய செம்பர் மகன்னான காரி பெருமான் தன் உரையில் அம்பு தீர (மாள) கத்தி உருவி எதிர்த்து நின்று போரிட்டு வீரசாவடைந்தான்.
Reply all
Reply to author
Forward
0 new messages