தப்பு, தப்பி என்பதன் பொருள்

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 13, 2024, 3:26:48 AM (9 days ago) Jul 13
to தமிழ் மன்றம்
தப்பு, தப்பி என்பதன் பொருள் 

தப்பு (escape) இதற்கு சொற்பிறப்பியல் பேராக முதலியில் வேர் பொருள் தரப்படவில்லை. நாம் தான் அதை ஆராயவேண்டும். முதல் ஆங்கில அகராதியை சாமுவேல் ஜான்சன் 1755 இல் வெளியிட்டார். ஆனால் அதுவே தரமானது என்று எவரும் பிடித்துக் கொண்டிருக்க வில்லை. அதற்கு பின் இன்னும் சில அகராதிகள் வந்தன. அவற்றுக்கும் கல்வியாளரிடையே மதிப்பு ஏற்படவே செய்தது. ஆதலின் தமிழுக்கு நாம் யாரும் ஆராயலாம் தப்பில்லை.

தல் > தள் - விலகல் கருத்து.  தள்ளிப்போ என்றால் விலகிப்போ என்று பொருள். இனி, தல் + பு = தப்பு. பிடிபடும் நேரத்தே விலகுவதால் அகப்படாமல் போவதைத் தப்பித்தல் என்று குறித்தனர். இதை பிறழ்தல், பிசகுதல் என்றும் கூறலாம். இவையும் விலகல் கருத்து கொண்டவையே. இருக்க வேண்டியபடி இல்லாமல் விலகிப் போவதை தப்பு (wrong) இதாவது தவறு, பிழை என்கிறோம். இதுவும் விலகலே. இதை தெற்று என்பர் மலையாளிகள். தெற்று  போல தெறி என்பதும் பிளந்து விலகுவதால் அவ்வாறு குறிக்கப்படுகிறது.


image.png

     

Seshadri Sridharan

unread,
Jul 14, 2024, 11:16:43 AM (8 days ago) Jul 14
to தமிழ் மன்றம்
 ஈழத்தவர் Gunapalan Nadarajah
Top contributor
தெள்ளு, தத்துவெட்டி போன்ற பூச்சியினங்கள் துள்ளிப்பாயும். அதை தெறிக்கின்றது என்போம்.
Reply all
Reply to author
Forward
0 new messages