சொற்கள் - ஐயம்

604 views
Skip to first unread message

Elangovan N

unread,
Sep 19, 2013, 10:52:49 PM9/19/13
to tamilmanram
முனைவர் இரா.திருமுருகனின், "இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்"
என்ற மின்னூலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில், "சங்கிலி" (chain) என்ற சொல்லை அயற்சொல் என்கிறார்.
இது சரியா? 

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: மேலும் அவர் அயற்சொல் என்று காட்டும் பல 
சொற்களில் ஐயம் இருக்கிறது..( காலி, சரிகை, சேமம.........)

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 20, 2013, 1:38:46 AM9/20/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
சங்கம் மக்கள் இணையும் இடம் அல்லது அமைப்பு. அதுபோல் இணைக்கப்பபயன்பட்டது
சங்கிலி. கூகுள் அஞ்சல் சரியாக வேலை செய்யவில்லை. சரியானதும் விரிவாக
விளக்குகின்றேன்.
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to tamilmanram...@googlegroups.com.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>

--
*அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்
பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
பொறுத்தருள்க.

*அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
*இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652*
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

*www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com*

rajam

unread,
Sep 20, 2013, 12:58:36 PM9/20/13
to tamil...@googlegroups.com
குறிப்பிட்ட சொல்லை "இது அயற்சொல்" என்று குறிக்கும்போது என்ன விளக்கம்/காரணம் தருகிறார்? அது தெரிந்தால் மேற்கொண்டு சொல்லலாம். 

நன்றி,
ராஜம் 

Elangovan N

unread,
Sep 20, 2013, 10:27:06 PM9/20/13
to tamilmanram
அம்மையீர், 

இரா.திருமுருகன் விளக்கம் ஏதும் தரவில்லை. 
அயற்சொல்-தமிழ்ச்சொல் என்ற பட்டியல் மட்டுமே போட்டிருக்கிறார்.

சங்கிலி என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தொடரி என்கிறார்.

மேலும் ப.அருளி அவர்களும் கீழ்க்கண்டவாறு சொல்கிறார் என்று அறிகிறேன்.

//
சங்கிலி < சமற்கிருதம்
  šṛṅkhalā    +

:  தொடர் , தொடரி 

ப. அருளி - ' அயற்சொல் அகராதி ' ( தொகுதி 2 : 2007 :  பக்கம் 57 ) 
//

இவை மட்டுமே கிட்டிய செய்திகள். தங்களின் விளக்கத்தையும்
திருவள்ளுவர் ஐயாவின் விளக்கத்தையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/9/20 rajam <ra...@earthlink.net>

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 21, 2013, 8:56:10 AM9/21/13
to tamilmanram kuzhu, thiru thoazhamai

என்னும் எழுத்து மொழி முதலில் வராது என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் சங்கம் என்பதையே கழகம் என்பர்.  ஆனால், ‘ மொழி முதலில் வரும். (பேரா.சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி  நூலில் விளக்கி உள்ளார்.) இந்த அடிப்படையில் சங்கிலி  தமிழ்ச்சொல் அல்ல என எண்ணுகின்றனர். சங்கம் என்பது இணைந்து இருப்பதைக் குறிக்கிறது. அதுபோல் இணைத்து அமைக்கப்படுவன சங்கிலி எனப்படுகின்றது. நுண்ணிய சங்கிலியே தொடர் எனப்படுவது.  சங்கிலி நுண்தொடர் (சிலப்பதிகாரம் 6.99) என்பதை  விளக்கும் பொழுது சங்கிலி என்பது  வைரச்சங்கிலி எனவும் நுண்தொடர் என்பது நுண்சங்கிலி எனவும் குறிக்கப்பெறுகின்றன. எனவே, நுண்சங்கிலியே தொடர் எனவும்  கண்ணிகளை இணைக்கும் வகையில் அல்லது வளைவுகளை இணைக்கும் வகையில் செய்யப்படுவன சங்கிலி எனவும் கொள்ளலாம்.

சங்கிலி போல் அமைந்த பிரண்டை வகையானது சங்கிலிப்பிரண்டை எனவும் பின்னல் வகை சங்கிலிப் பின்னல் எனவும் குறிக்கப் பெறுகின்றன.

சங்கிலியால் இணைத்த கரண்டியுடன் கூடிய விளக்கு சங்கிலி வட்டகை எனப்படுகின்றது. சங்கிலி வடிவில் அமைந்த கழுத்தணி சங்கிலி வடம் எனப்படுகின்றது. தேர் இழுக்கும் இரும்புச் சங்கிலியும் சங்கிலி வடம் எனப்படுகின்றது.

நீரி ( நீர்வாழ் உயிரினமாகிய) சங்கு என்பதில் இருந்தே சங்கம் தோன்றியது.

பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும்  வளைந்து சங்கு போல் தோற்ற மளிக்கும் முத்திரைக்குச் சங்கு என்றே பெயர்.

இலட்சம்கோடி எனப்படும் பேரெண் சங்கு/ சங்கம் எனப்படுகிறது. இவ்வாறு, சங்கின் அடிப்படையில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. சங்கிலி என்பது நில அளவை ஒன்றின் பெயர்; அதனை அளக்கப்பயன்படும் கருவியின் பெயரும் ஆகும்.

சங்கிலி இலிருந்து சங்கிலிப் பொறியை வேறுபடுத்துவதற்காக அதனை இடங்கணிப் பொறி என்றனர்.

எனவே, சங்கிலியும் சங்கிலி அடிப்பிடையில் பிறந்த சொற்களும் தமிழ்ச் சொற்களே!

காலி என்னும் சொல் எப்பொருளில் அமைந்ததை அயற் சொல் என்கிறார்  எனத் தெரியவில்லை. ஆனால், இதுவும் நல்ல அறிவியல் தமிழ்ச்சொல்லே. ஏனம் அல்லது கொள்கலனில்  பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கும் பொழுது அதை வெற்றிடம் எனக் கூறக் கூடாது என்பதற்காகக்  காற்று தவிர வேறு இல்லாதது என்னும் பொருளில் காற்றை உடையது என்றனர். இதுவே கால் +இ = காலி ஆகும். முக்காலி, நாற்காலி முதலான இடங்களில் வருவன உடலின் கால்பகுதி உறுப்பாக அமைந்த கால் என்பதன்அடிப்படையில் பிறந்த நல்ல தமிழ்ச் சொற்களே!

ஏமத்தின் பொருட்டுச் சேர்த்து வைப்பது சேர்மம் ஆகிச் சேமம் ஆனது. இதுவும் தமிழ்ச்சொல்லே.  ஆய்ந்து  பார்த்தால் பிறவும் தமிழ்ச்சொற்கள் என அறியலாம்.

அருளி அவர்கள் அயற்  சொல்லகராதியில் பல தமிழ்ச்சொற்களை அயற் சொற்களாகக் காட்டியிருப்பார். வருடை என்னும் ஓரையினைத் தொடக்கமாகக் கொண்ட ஆண்டு வருடம்எனப்பட்டது. இதனை வருசம் என்று சொல்லும் பழக்கம் வந்ததும் நம் சொல் அல்ல எனத் தூக்கி எறிகிறோம்.  நம் உடைமையை அடுத்தவன் உரிமைகோரும் பொழுது உரிமையை நிலைநாட்ட வேண்டுமே தவிர அதனைத் தாரை வார்க்கக்கூடாது. ஆனால், சொற்களைப் பொருத்தவரை தமிழ்ச்சொற்களை எல்லாம் அயற் சொற்கள என மயங்கிக் குழம்பி நிற்கின்றோம்.  ஆய்ந்து பார்த்தால் எல்லாச் சொற்களும் தமிழ் குறித்தனவே எனக் கண்டறியலாம்.

2013/9/21 Elangovan N <nela...@gmail.com>

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

rajam

unread,
Sep 21, 2013, 11:38:40 PM9/21/13
to tamil...@googlegroups.com

அன்புள்ள இளங்கோவன்

திருவள்ளுவன் அவர்கள் பல நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளார். 

சங்கம், சங்கு, புலம்புரிச் சங்கம், வலம்புரிச் சங்கம், சங்க தருமன் ... ஆகிய வழக்கு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் உண்டு; அதைத் திருவள்ளுவனும் எடுத்துச் சொல்லியிருந்தார். இந்தச் சொற்கள் குறிப்பவை: சங்குப் பூச்சி, எண்ணலளவையில் ஒரு குறியீடு, மக்கள் குழுமமாகக் கூடும் கூட்டம்

இவற்றின் பொதுத்தன்மை என்ன? சங்குப் பூச்சியின் (சங்கின்) மேற்புறம் முள்ளு முள்ளான கூம்புகளோடு இருக்கும்; அதாவது, சமமான பரப்பில் ஓரிடத்தில் ஒன்று புடைத்து/துருத்திக்கொண்டிருப்பதுபோல. வளைகள் செய்யும்போதும் ஊதுசங்காகத் தயாரிக்கும்போதும் இந்தக் கூம்புகளை அறுத்து வழவழப்பாக்கிச் செய்வது வழக்கமாக இருந்திருக்கலாம். 

இந்தப் பொருளைச் “சங்கம்” என்ற சொல்லுக்கும் பொருத்திப் பார்க்கலாம். மக்கள் கூட்டத்தில் பலர் தம் வழியே போக, ஒரு சிலர்மட்டும் ஓரிடத்தில் திரளாகச் சேரும் அமைப்பு ‘சங்கம்,’ இல்லையா? 

எண்ணலளவையில், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் இடப்பட்ட ஓர் அடையாளக்குறியீடு (unit of measurement) சங்கம். 

நேராகப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் ஒரு முச்சந்தி வருவதானால், அந்தச் சந்தியே ‘சங்கம்’ என்று எடுத்துக்கொள்கிறேன். 

இதைக் கொஞ்சம் நீட்டித்து, “கணு” என்ற பொருளைப் பார்க்கலாம். கரும்பிலும் மூங்கிலும் பிற பயிர்களிலும் 'கணு' இருக்கு. 

சங்கிலி

-------------

சங்கு + இலி == கணு இல்லாதது; இடையில் தடுப்போ துருத்தலோ இல்லாதது. 

ஒரு வகைப்பட்ட வளையமே ஒன்றனுள் ஒன்று நுழைந்து பலவாகத் தொடர்ந்து வருவது சங்கிலித் தொடர். இதைப் பல பழைய உரோம, யவன விளக்குகளில் பார்க்கலாம். தேவையானால் படங்கள் ஒட்டிப் போடுகிறேன்.  இப்போதைய நம் ஊஞ்சல் சங்கிலியிலும் பார்க்கலாம்; புள்ளிக்கோலங்களிலும் பார்க்கலாம்; சங்கிலித் தையல் என்ற தையல் முறையிலும் பார்க்கலாம். இங்கே துருத்தி/புடைத்து நிற்கும் கணுக்கள் இல்லை, அதனால் அவை சங்கு + இலி. 

குரல்வளையின் ஒரு பகுதி ‘சங்கு’ என்று குறிக்கப்படுகிறது. சில ஆண்களுக்கு அந்தப் பகுதி சற்றுப் புடைத்துப் பெரிதாகத் தோன்றும். சில பெண்களுக்குச் சங்குக்கழுத்து என்ற உவமையும் இதனால்தானோ? 

சங்கிலி நுண்தொடர்

——————————————— 

"சங்கிலி நுண்தொடர்" என்ற சிலப்பதிகாரத் தொடர் சங்கிலி = தொடரி என்ற கருத்துக்கு ஆதாரம் அளிக்கவில்லைஒரே வடிவம் பலவாகத் தொடர்ந்து இருப்பதால் ‘தொடரி’ என்ற சொல் ‘சங்கிலி’ என்ற சொல்லுக்குப் பகரம் என்று எடுத்துக்கொண்டாலும் அது ‘சங்கிலி’ என்ற சொல்லின் அடிப்படைப் பொருளைச் சுட்டவில்லை. 

“புலித்தொடர்” என்ற முல்லைப்பாட்டுச் சொல் (வரி 62) ‘சங்கிலி’ என்ற சொல்லைப் புழங்காதது காண்க. 

எனவே சங்கிலி சங்கிலிதான். 

அயற்சொல்? தமிழ்ச்சொல்?

————————————————— 

இந்த மாதிரி ஆய்வு என் அறிவுக்கு அப்பாற்பட்டது!!! அனுமான இயலிலும் ஊகம் செய்வதிலும் எனக்குத் தேர்ச்சி இல்லை!  அதனால் இது தமிழ்ச்சொல் இது அயற்சொல் என்று வரையறுக்க வரவில்லை

சொல் வழக்காற்றைப் புரிந்துகொள்வதற்காக, தமிழ்ச்சொற்களுக்கு அடிப்படையான வேர் *சங்க்(+) என்று எடுத்துக்கொள்கிறேன்.  

śaṅkuḥ என்ற செங்கிருதச் சொல்லின் பொருளையும் பார்க்கலாம்http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.5.apte.2199628 

ஏதோ ஓர் ஒப்புமை இருப்பது புலனாகிறது. 

கொசுறு

————— 

இங்கே சொல்லியிருக்கும் கருத்துகளை மேற்கொண்டு எண்ணிப்பார்க்க முயலவும். 

1. கெல்டிக் முடிச்சுகளுக்கும் (Celtic knots) சீன முடிச்சுகளுக்கும் (Chinese knots) வேறுபாடு உண்டு. முன்னது நம் புள்ளிக்கோலம் போன்றவை. 

2. முடிச்சுகள் என்பவை பல வகைப் பொருள்களால் ஆகிப் பழங்காலத்தில் பாதை தெரிவிக்க உதவியிருக்கலாம்.  காட்டுப்பாதையில் வழி தவறாமலிருக்க வழி நெடுக, புற்களை முடிச்சாகப் போட்டுவைத்துப் போவது பற்றி எங்கோ கேட்ட நினைவு.

3. ‘முடிச்சுகள்’ (knots) கடல்வழிப் பயணிகளுக்கு ஓர் அளவை அல்லவா?  இதே போல சங்கம் என்ற கணுவும்/முடிச்சும் நமக்கு ஒரு நிறுத்தற்குறி; ஓர் அளவை (unit of measurement). 

4. சங்கு என்றவுடன் சோவி என்ற சொல் நினவுக்கு வந்தது. இணையத்தில் தேடியபோது ஒரு வகைக் கூடைப் பின்னல் விளக்கத்தில் இந்தச் சோவி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்கள் (http://payanikkumpaathai.blogspot.com/2011/03/1.html). மகிழ்ந்துபோனேன்! இந்த வகைச் சோவி/சங்கு இல்லாத பின்னல் சங்கிலிப் பின்னல்! 

அன்புடன்,

ராஜம் 

Elangovan N

unread,
Sep 22, 2013, 2:28:29 AM9/22/13
to tamilmanram
2013/9/21 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>

அன்பின் ஐயா,

விளக்கத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.
தங்கள் கருத்துகளோடு முழு ஒப்புமை உண்டு.

//
சொற்களைப் பொருத்தவரை தமிழ்ச்சொற்களை எல்லாம் அயற் சொற்கள என மயங்கிக் குழம்பி நிற்கின்றோம். 
//

அயலா, தமிழா என்ற உரையாடல்களில் வரும் சொற்களின் எண்ணிக்கையையும்,
தமிழை, அயற்சொல் என்று முடிவு கட்டிய சொற்களின் எண்ணிக்கையையும்
ஒப்பிட்டுப் பார்ப்பமாயின், பிந்தியதே அதிகம் என்று கருதக் கூடிய அளவிற்குப் பலரும்
பட்டியல் இட்டிருக்கிறார்கள் என்று  நான் எண்ணுவதுண்டு. அதுவும் அறிஞர்களிடம்
இருந்து இப்படியான பட்டியல்கள் வெளியானால், புழங்குநர் பலரும் அதை நம்பிப் பலவற்றையும்
உதறித் தள்ளுவது இயல்பு. இது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல.

அயற்சொல்லா என்ற ஆய்வு முடிவில் சிறிது ஐயமோ, அல்லது மாற்றுக் கருத்துகளோ
தமிழ் உலகில் இருக்குமாயின், அவ் ஏரணவாரி முடிபை ஆம், இல்லை என்ற 
இருநிலைக்குள் (Boolean state)  இருத்தாமல், முந்நிலை (three-valued-state) (அ) பன்னிலை விடைகளிற் காட்டும்
முறையைத் தமிழ் உலகம் கைக்கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

அயற்சொல்லா என்று கேள்வி கேட்டு,  ஒரு சொல்லை எழுதி, அதன் முன்னர், 
மிகத் தெளிவாகத் தெரிந்தால், ஆம் அல்லது இல்லை என்று போடலும், தெளிவாகத் தெரியாவிட்டாலோ அல்லது 
வலுவான மாற்றுக் கருத்துகள் இருந்தாலோ "இன்னும் முடிவாகவில்லை" என்பது போல போடலும்
தமிழுக்குப் பெரிய பயனளிக்கும். இல்லாவிடில் பல சொற்களை நாம் முற்றிலுமாக இழக்கவேண்டி ஆகிவிடும்.

//
காற்று தவிர வேறு இல்லாதது என்னும் பொருளில் காற்றை உடையது என்றனர். இதுவே கால் +இ = காலி ஆகும்.
//

காலி என்பதற்குப் பசு என்ற ஒரு பொருளையும் காணமுடிகிறது.

"கன்று முட்ட உண்ணச் சுரக்கும் காலி அவை போல
என்றும் முட்டாப் பாடும் அடியார்"

என்ற வரிகள் திருமுறை-7ல் வருகின்றன.(நல்ல உவமை!)

சரம் என்ற சொல் தமிழாக இருக்கையில் சரிகை  என்ற சொல்லை
அயற்சொல் என்று அவசரத்தில் உறுதியிடத் தேவையில்லைய. 

தமிழைப் புழங்குநர் தவற விட்டு மொழிமறைவுக்கு வழிவகுக்கும்
இப்பட்டியல்களை வெளியிடுபவருக்குத் தக்க ஏரணம், முறைமைகளைக் 
கடைப்பிடிக்கும் வழிகளைத் தமிழ் ஆராய்ச்சி/கல்வி நிறுவனங்கள் உருவாக்க,
தங்களைப் போன்றோர் முயற்சிகள் செய்ய வேண்டும்.

People should believe that there are engineering and science methods to present/publish literary findings.

Elangovan N

unread,
Sep 22, 2013, 3:41:45 AM9/22/13
to tamilmanram

2013/9/22 rajam <ra...@earthlink.net>

அன்புள்ள இளங்கோவன்

அன்பின் அம்மையீர்,

தங்கள் மடலை ஒரு முறைக்கு இரு முறை படிக்கும் ஆவல் உண்டானது.
சங்கிலி பற்றிய உங்கள் கருத்துகளைப் பாதுகாத்து வைப்பேன்.

//

சங்கிலி

-------------

சங்கு + இலி == கணு இல்லாதது; இடையில் தடுப்போ துருத்தலோ இல்லாதது. 

//

சங்கின் தன்மையை மிக நுணுகி நீங்கள் விளக்கியிருப்பது படிக்க அருமையாயுள்ளது.

சங்கம் என்ற சொல்லில் உருவானது என்று எண்ணியபோது, என் மனமும்
சங்கு + இலி என்ற பொருள் பிரித்துப் பார்த்தது. ஆனால் சங்கம் < சங்கு என்ற பார்வையில்
இருந்து பொருள் எனக்குப் புலப்படவேயில்லை. மேலும், எங்கள் ஊர்ப்பக்கங்களில்
சங்கிலி என்ற பெயர் கொண்ட ஆடவர்  உண்டு. ஒப்பிலி/உப்பிலி, சங்கிலி, குங்கிலி என்ற பெயர்வரிசையும்,
அறிவிலி போன்ற சொற்களும் மனதில் வந்தன. 

சங்கு + இலி என்றால் இந்தப் பெயர் என்ன சொல்கிறது என்று எனக்குப் புரியவேயில்லை.

தற்போது உங்கள் விளக்கம் கண்டபிறகு அதன் சிறப்பு புரிகிறது. செல்டிக், சீன முடிச்சுகள் பற்றி 
அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. அவற்றின் வேறுபாடும் சிறிது புரிகிறது.
சங்கை ஒரு முடிச்சாக நீங்கள் தந்திருக்கும் பார்வை, எனக்கு மிகப் புதியதாக உணர்கிறேன்.

//
1. கெல்டிக் முடிச்சுகளுக்கும் (Celtic knots) சீன முடிச்சுகளுக்கும் (Chinese knots) வேறுபாடு உண்டு. முன்னது நம் புள்ளிக்கோலம் போன்றவை. 
//

சீன முடிச்சில் சங்கைத் தேடியபோது, நத்தை கிடைத்தது. ஆயினும் இந்த மீன்கள்-முடிச்சு 
மேலும் பொருத்தமாகத் தெரிந்தது. மீன்கள்-முடிச்சின் வழியே, சங்கை, முடிச்சாக நன்கு உணர முடிகிறது.
  
 //
சங்கு என்றவுடன் சோவி என்ற சொல் நினவுக்கு வந்தது. 
//

சோவியையும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. தென்னக் கீற்றில் வாசற் தோரணங்களுக்குப்
போடும் முடிச்சை சோவி என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லையாயினும் அதை
நினைவுக்குக் கொண்டு வந்தது.

அதைவிட, இந்தச் சோவி, எங்கம்மாவும், வீட்டுக்கார அம்மாவும், ஒயர் கூடை போடறேன் என்று
உட்கார்ந்து கொண்டு வயிற்றைக் காயப்போட்ட தருணங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது :-)
இப்ப எல்லாம் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிவிட்டார்கள் :-)

அரிய விளக்கங்களுக்கு மீண்டும் நன்றி.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 22, 2013, 8:40:45 PM9/22/13
to tamilmanram kuzhu, thiru thoazhamai
மனிதர்கள் நடந்து செல்வதைக் கால்நடையாகச் செல்வதாகக் குறிப்பிடுவோம். விலங்கினங்கள் யாவுமே நடந்து சென்றாலும்
 கால்நடை என்னும் பொழுது ஆடுமாடுகளையும் சிறப்பாக மாடுகளையும் குறிக்கின்றது.
 கால்நடையாகிய பசுக்களின் கூட்டம் காலி எனப்படும்.
(காலி என்பது பசுவைக்குறிப்பதல்ல.  பசுக் கூட்டத்தையே குறிப்பது.)
காலி, நிரை, தொறு, கதுப்பு, காலேயம் ஆகிய சொற்கள் பசுக்கூட்டத்தைக் குறிப்பதாகப் பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.
தமிழ் -தமிழ் அகராதியிலும் காலி என்பதற்குப் பசுக்கூட்டம் எனப் பொருள்  குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
எனவே, இப்பொருளிலும் காலி என்பது தமிழ்ச் சொல்லே.

2013/9/22 Elangovan N <nela...@gmail.com>

--

Fakhrudeen Ibnu Hamdun

unread,
Sep 23, 2013, 4:58:52 AM9/23/13
to tamilmantram
காலம் என்பது வடமொழி என்று படித்தேன்

வருமொழி பிறமொழியாயின் ஒற்று மிகாது என்ற விதிப்படி

சங்க காலம் என்றே எழுத வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியா அது?

(சங்கத் தமிழ் தான். சங்க காலம் தான் என்று சொல்லப்பட்டது)

2013/9/23 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

"The more we learn the more we realize how little we know."

அதிகமாய் கற்க அதிகமும் (உ)ணர்வோம்
அதிகுறைவாம் பெற்ற அறிவு

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 23, 2013, 8:29:35 AM9/23/13
to tamilmanram kuzhu
காலம் என்பது தமிழ்ச்சொல்லே. ஒலிப்பின் பொழுது அழுத்தம் ஏற்பட்டதால் அயல்மொழி என எண்ணிவிட்டனர். எனவே, ஒற்றுடன் சங்கத் தமிழ், சங்கக்காலம், என்றே குறிக்க  வேண்டும்.

2013/9/23 Fakhrudeen Ibnu Hamdun <fakhru...@gmail.com>

Pandiyaraja Paramasivam

unread,
Sep 23, 2013, 12:16:08 PM9/23/13
to tamil...@googlegroups.com
கார்ப்பெயல் என்கிறோம். ஆனால் கார்காலம் என்கிறோம். குளிர்காலம் என்கிறோம். ஆனால் மாரிக்காலம்,கோடைக்காலம் என்கிறோம். நல்ல காலம், கெட்ட காலம் என்கிறோம், ஆனால் நல்வினைக் காலம், தீவினைக் காலம் என்கிறோம். செந்தமிழும் நாப்பழக்கம்.
ப.பாண்டியராஜா

rajam

unread,
Sep 23, 2013, 8:55:52 PM9/23/13
to tamil...@googlegroups.com
//செந்தமிழும் நாப்பழக்கம்// 

மக்கள் பயன்பாட்டை மதிக்கிறேன். அதுக்காகப் பழைய இலக்கண நூல்கள் மெனக்கிட்டுச் சொல்லிய 'புணரியல்' விதிகளைப் புறக்கணிக்கவும் முடியாமல் திண்டாடுகிறேனே! தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் முதல் 3 இயல்கள் தவிர மற்றவை இந்தப் புணர்ச்சி விதிகளச் சொல்ல அல்லல்பட்டது ஏனோ? அந்த விதிகளுள் ஒன்றாவது இன்றைக்கு உதவலையா, கடவுளே.

ஐயா, 'காலம்' தமிழ்ச்சொல்லா இல்லையா என்பது பற்றி எனக்குத் திட்டவட்டமாகத் தெரியாது, அதனால் அங்கே புகுந்து புறப்பட எனக்குத் திறமையில்லை, தெம்புமில்லை. கொடுத்ததை எடுத்துக்கொள்கிறேன், அவ்வளவே. 

ஆனால் ... செந்தமிழனின் "நாப்பழக்க"த்துக்கு அடிப்படை இல்லாமல் போகாது என்பதை அவன்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை சொல்கிறது! ;-). நாப்பழக்கத்தினால் புளியைப் புழுதி என்றோ குருவியைக் குரங்கு என்றோ தமிழன் சொல்கிறானா, இல்லையே. ஏதோ தொட்டும் தொடாததுமாய் இருக்கிற ஒன்று அடிப்படையாக இல்லாமல் போகுமா? நமக்குத் தெரியாமல் போச்சு, அவ்வளவே. 

நிற்க. 

குளிர்காலம் (வினை + பெயர்); குளிர்ந்தது, குளிருது ஆகியவை வினைகள், இல்லையா?
கார்காலம் (வினை + பெயர்); கார்க்கின்ற, கார்த்தன என்ற பயன்பாடுகள் இலக்கியத்தில் இருக்காமே, தேடுபொறியின் உதவியால் தேடிப்பார்ப்போமே.

கார்ப்பெயல் (பெயர் + பெயர்)
மாரிக்காலம் (பெயர் + பெயர்)
கோடைக்காலம் (பெயர் + பெயர்)
நல்வினைக்காலம் (பெயர் + பெயர்)
தீவினைக்காலம் (பெயர் + பெயர்)

நல்லகாலம் (பண்பு + பெயர்)
கெட்டகாலம் (பண்பு + பெயர்)

இப்படிப் பார்த்து நான் அமைதிகொள்கிறேன்.

இப்படிக்கு,
ராஜம் 

Pandiyaraja Paramasivam

unread,
Sep 24, 2013, 3:01:07 AM9/24/13
to tamil...@googlegroups.com
மிக்க நன்றி, அம்மையீர்!
நான் இலக்கணம் வேண்டாம் என்று நினைப்பவன் அல்லன். அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். சொல்லப்போனால் SSLCயில் நான் விரும்பிக் கற்றது தமிழ் இலக்கணம்தான் - வித்துவான்.வீ.ப.நடராசன் என் ஆசான். அவர் இட்ட அடித்தளம்தான் இன்றைக்கும் எனக்கிருக்கும் ஓரளவு இலக்கண அறிவுக்குக் காரணம்.   (வினைத்தொகைக்கு உதாரணம் ஆடு மயில் தாவு மான், ஓடு குதிரை என்றெல்லாம் விளக்கம் சொல்லி, ஒவ்வொருவரையும் ஒரு எ.கா. சொல்லச் சொன்னார். எங்கள் desk-இல் பொடியன்கள் மூன்று பேர். நான் அவர்களிடம் கிசுகிசுத்தேன். முதல்வன் எழுந்தான் ; "சுடுசோறு", நடுவில் நான்:"ஊறுகாய்", அடுத்தவன் "பொரிகடலை". ஒரு முறை முறைத்துவிட்டு, "தின்னிப்பசங்களா" என்று திட்டினார். இலக்கணம் வாழ்வுசார்ந்து பயிற்றுவிக்கப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் தாழமையான கருத்து. ஐந்தாம் வகுப்புவரை என் அப்பா control-இல் கிராமத்தில் வளர்ந்தேன். அவர் ஒரு தொடக்கநிலை ஆசிரியர். இரவில் தமிழ் படிக்கச் சொல்வார். அவனைப் பார்த்தேன் என்று வாசிக்கும்போது அந்த 'னை'யையும் அடுத்த  'ப்'-ஐயும் சேர்த்து அழுத்திப் படிக்கச் சொல்வார் (அவனைப் ப்பார்த்தேன்). அவனை பார்த்தேன் என்றால் 'ணங்'கென்று தலையில் ஒரு கொட்டு விழும். 'ப்' எங்கடா போச்சு என்பார். இவ்வாறு அழுத்தி அழுத்திப் படித்துத்தான் ஒற்று விதிகள் மனதுக்குள் போயின. அதனை மனதில் கொண்டுதான் செந்தமிழும் நாப்பழக்கம் என்றேன். முதலில் சிறு வகுப்புகளில்  நாப்பழக்கத்தை ஏற்படுத்துவோம். அப்புறம் வரட்டும் அதன் விதிகள். "தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்று கூறிய பனம்பாரனாரை மறந்துவிட்டோமா? அம்மா! தமிழ் இலக்கணம் இன்றைக்குக் கற்பிக்கப்படும் முறையைத்தான் இவ்வாறு கூறினேன். மற்றபடி உங்களுக்குத் தெரியாதது அல்ல.
ப.பாண்டியராஜா

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Sep 24, 2013, 3:57:04 AM9/24/13
to tamilmanram kuzhu, thiru thoazhamai
பாண்டியராசா அவர்களே பசுமலைப்புலவர் வீ.ப.நடராசனார் மாணாக்கர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நற்பெயர் கூட்டும் வகையில் அயற்சொற்கள், அயல் எழுத்துகள் நீக்கி எழுதுக.

சொற்கள் இடையே எழுத்து சேர்தல் என்பது  ஒரு  சொல்லின் முன்னர் என்னும்  அடிப்படையில்   கருதக்கூடாது. முதல் சொல்லின்  தன்மையைப் பொறுத்தே எழுத்துச் சேர்க்கை அமையும்.. எனவே காலம் என்னும் சொல்லின் முன் எழுத்து சேரும் அல்லது சேரா எனப் பார்க்கக்கூடாது. நிலை மொழி எனப்படும் முதற் சொல்லின் தன்மையைப் பொறுத்தும் வருமொழியான காலம் எந்த நிலையில் சேருகிறது என்பதைப் பொறுத்தும்தான் அமையும். குளிர்காலம்  என்பது மூன்று காலத்தையும் குறிக்கும் வண்ணம், குளிர்ந்த காலம், குளிர்கின்ற காலம், குளிரப்போகும் காலம் என வரும்   வினைத்தொகை அல்லவா? எனவே, வல்லினம் மிகா. நல்ல, தீய, சிறிய, பெரிய  போன்ற சொற்களுக்கு அடுத்து வல்லினம் மிகா.எனவேதான், நல்ல காலம் என வருகிறது. ஆனால், வினைக்கு அடுத்து வல்லினம் மிகும். எனவேதான்  நல்வினைக்காலம், தீவினைக்காலம் என்கிறோம். எனவே காலம் என்னும் சொல்லின் முன்  'க்' வருமா எனப் பார்க்காமல் எந்தெந்த சொற்களுக்கு அடுத்து 'க்'வரும் எனப் பாருங்கள். இலக்கண  நூல் வழி பிறவற்றை அறிந்து கொள்க.

2013/9/23 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 24, 2013, 4:38:35 AM9/24/13
to tamil...@googlegroups.com
On Tuesday, 24 September 2013 06:25:52 UTC+5:30, rajam wrote:
கார்காலம் (வினை + பெயர்); கார்க்கின்ற, கார்த்தன என்ற பயன்பாடுகள் இலக்கியத்தில் .......

சீர்க்கின்ற விண்மிசை நின்று தன் சிலை கால் உற வாங்கிக் 
கூர்க்கும் கணை ஓர் ஆயிரம் கொளுவித் துரந்திட்டுக் 
கார்க்கின்ற மெய் அவுணர்க்கு இறை கடும் தேர் துகள் கண்டான் 
                                                                         -     கந்தபுராணம்

தேவ்

DEV RAJ

unread,
Sep 24, 2013, 4:48:21 AM9/24/13
to tamil...@googlegroups.com
On Tuesday, 24 September 2013 12:31:07 UTC+5:30, Pandiyaraja Paramasivam wrote:
........ஒற்று விதிகள் மனதுக்குள் போயின. அதனை மனதில் கொண்டுதான் .......

ஐயா, அருள் கூர்ந்து தவறாக நினைக்க வேண்டாம்.
மனத்துக்குள், மனத்தில் சரியான வடிவம் என எண்ணுகிறேன் 

அன்புடன்
தேவ்

Hari Krishnan

unread,
Sep 24, 2013, 5:21:07 AM9/24/13
to தமிழ் மன்றம்

2013/9/24 DEV RAJ <rde...@gmail.com>

ஐயா, அருள் கூர்ந்து தவறாக நினைக்க வேண்டாம்.
மனத்துக்குள், மனத்தில் சரியான வடிவம் என எண்ணுகிறேன் 

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்...

மனத்தது மாசாக மாண்டார் நீராடி....

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

rajam

unread,
Sep 24, 2013, 1:10:00 PM9/24/13
to tamil...@googlegroups.com
வணக்கம், முனைவர் பாண்டியராஜா.

//"சுடுசோறு", நடுவில் நான்:"ஊறுகாய்", அடுத்தவன் "பொரிகடலை". ஒரு முறை முறைத்துவிட்டு, "தின்னிப்பசங்களா" என்று திட்டினார். // 

நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளில் வேண்டுமானால் திட்டும் கொட்டுமாக வகுப்புகள் நடந்திருக்கலாம். நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் அப்படியில்லை! வினைத்தொகை என்றால் பொரிகடலை ஊறுகாயோடு, சுடுசோறு, சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, மாறுகண்ணு, ஓடுகாலி ... போன்ற சொற்கள் தாமாக வந்து விழும்! டீச்சர் திட்டியதில்லை. அதனால் ... நான் இலக்கணம் படிப்பித்த போதும் அதே முறையில்தான் வகுப்பு நடத்தினேன். பெயரெச்சம் என்றால் "காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை; காலம் கரவாத வினைத்தொகை பெயரெச்சம்" என்று கிளிப்பிள்ளையாக மழலிவிட்டு, நடைமுறையிலிருந்து எடுத்துக்காட்டுகள் கொடுப்பேன்; அன்றைய ஹிட் (hit) "உலகம் சுற்றும் வாலிபன்." அதுவே முதுகலை வகுப்பாக இருந்திருந்தால் அதே எடுத்துக்காட்டு எப்படித் "தடுமாறு தொழிற்பெயர்" என்று தொல்காப்பியர் சொன்னதைப் புரிந்துகொள்ள உதவும் என்று விளக்கியிருப்பேன் (சுற்றுவது யார்? யாரை? என்று கேட்டு). ஆனால் முதுகலை வகுப்புக்கு இலக்கியம் படிப்பிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. 

//இலக்கணம் வாழ்வுசார்ந்து பயிற்றுவிக்கப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் தாழமையான கருத்து.// 

இதுக்கெல்லாம் "தாழ்ந்து"போகத் தேவையில்லை! உங்கள் எண்ணம்/விருப்பம் நிறைவேறத் தேவையான முயற்சிகளில் நீங்களே ஈடுபடலாமே. என்ன தயக்கம்???

//முதலில் சிறு வகுப்புகளில்  நாப்பழக்கத்தை ஏற்படுத்துவோம். அப்புறம் வரட்டும் அதன் விதிகள். //

ஆமாம். செய்யுங்கள், செய்யுங்கள். எந்த வகை நாப்பழக்கம் எப்படி ஏற்படவேண்டும் என்று வழிகாட்டுங்கள். இளைய தலைமுறைக்கு உதவும், இல்லையா.

//"தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்று கூறிய பனம்பாரனாரை மறந்துவிட்டோமா? //

இல்லையே. யார் மறந்தார்கள்? 

"கடலை சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்போச்சு"; 
"கடலைச் சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்போச்சு"; 

"கடலை சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்பொச்சு"; 
"கடலைச் சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்பொச்சு"; 

எல்லாமே வழக்குத்தமிழ்தானே! என்ன தவறு இருக்க முடியும்

+++++++++++++++++++++

உலகஅமைதிக்காப்புப் பணியில் (Peace Corps) ஈடுபட்ட ஓர் அமெரிக்கர், எனக்குத் தெரிந்தவர், அயலகத்தில் தமிழ் படித்துவிட்டு, தமிழ்நாட்டில் பணி செய்யத் தொடங்கிய நாட்களில் ... ஒரு சிற்றூர் வகுப்பில் ... "ஒனக்கு முலை இருக்கா?" என்று கேட்டுச் சிக்கலில் மாட்டிக்கொண்டாராம். "முலை"க்கும் "மூளை"க்கும் உள்ள ஒலி வேறுபாடு இங்கே சிக்கல். 

//தமிழ் இலக்கணம் இன்றைக்குக் கற்பிக்கப்படும் முறையைத்தான் இவ்வாறு கூறினேன்.//

ஐயா, இன்றைக்குத் தமிழ் இலக்கணம் கற்பிக்கப்படும் முறை சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் ... அதைப்பற்றிக் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதிலோ, புலம்பிக்கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் இல்லை, இல்லை, இல்லவேயில்லை! நல்ல முறையில் மக்களை வழிப்படுத்த உங்களைப்போன்றவர்கள் முன்வரவேண்டும், இல்லையா? 

+++++++++++++++++++++ 

இலக்கிய விளக்கம் எழுதுவது எளிது. அங்கே கற்பனைக்கு இடம் பெரிது. யாரோ ஒருவர் ... "அவள் சொட்டச் சொட்டத் தலைகுளித்து வந்தாள்" என்று எழுதினால் ... ஆகா ... அதைப் படித்துச் சொட்டுச்சொட்டு என்று எதையாவது சொட்டுகிறவர் பலராக இருக்கலாம்! ஆனால், அதே சொட்டு ஆசாமி 1+ 2 = 3 என்று சொன்னாலோ அல்லது 1+2 = 12 என்று சொன்னாலோ அதை "வழக்கு" என்று ஒதுக்க முடியுமா? 

+++++++++++++++++++++

கொஞ்சம் தற்பெருமை: தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு திருமலை என் மாணவர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை! சென்ற முறை மருத்துவத்துக்காக மதுரை போயிருந்தபோது என் தோழி வீட்டில் என் மாணவியர் கூட்டம் வந்திருந்தது என்னைப்பார்க்க. தற்செயலாக வேற்றூரிலிருந்து இன்னொரு மாணவி தன் மகளின் திருமணத்துக்காக இன்னொரு மாணவியைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் அங்கே இருப்பதைத் தெரிந்துகொண்டு என்னிடம் பேசினாள். மகளின் திருமணத்துக்கு வரும்படி அழைத்துவிட்டுப் பழைய கல்லூரி நாட்களைப்பற்றிப் பேசத்தொடங்கி அவள் சொன்னது: "மிஸ், இலக்கணத்தை நீங்கள் சொல்லிக்கொடுத்த பிறகுதான் அதன் சுவையே புரிய ஆரம்பித்தது. எவ்வளவு எளிமையாக விளக்கினீர்கள்!..." என்று எப்படியெல்லாமோ மகிழ்ந்து பேசினாள். அந்தப் பெண்ணின் முகமும் நினைவில்லை; எந்த ஆண்டில் படித்தாள் என்பதும் எனக்கு நினைவில்லை. ஆனால் வகுப்பு நிகழ்வுகள் மட்டும் எங்களுக்கிடையில் ஒரு பிடிப்பை அமைத்துக்கொடுத்திருந்தது. இன்னொரு பெண் சொன்னாள் ... "மிஸ், நான் கவிதை எழுதத்தொடங்கியதுக்கு நீங்களே வினையூக்கி (inspiration)." இதெல்லாம் சும்மா மேடை போட்டுப் பொன்னாடை போர்த்திப் பேசும் நிகழ்ச்சிகள் இல்லை. உள்ளத்து உணர்வுகள் கலப்படமில்லாமல் வெளிவரும் பொழுதுகள்.  

+++++++++++++++++++++

என் வேண்டுகோள்:

பிறருடைய படிப்பு முறை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? குறை சொல்லும் நேரத்தை மாற்றுவழியில் செலவிடுங்கள் -- நீங்களே நல்லதொரு வழிமுறையை வகுத்துக்காட்டுங்கள். 

+++++++++++++++++++++ 

எல்லாம் சரி. //இலக்கணம் வாழ்வுசார்ந்து பயிற்றுவிக்கப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும்// என்று சொன்ன மாதிரி 100% இல்லாவிட்டாலும் ... ஏதோ எனக்குத் தோன்றிய வகையில் "தொல்காப்பிய 'நறுக்'" பகுதிகளில் புணரியியல் விதிகளின் ***அடிப்படைக்***கருத்தை எளிமையாக்கிச் சொல்ல முயன்றிருக்கிறேனே ... அதை யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியலையே ... . 

இப்படிக்கு,
ராஜம் 

Pandiyaraja Paramasivam

unread,
Sep 24, 2013, 1:13:18 PM9/24/13
to tamil...@googlegroups.com, thiru thoazhamai
திருவள்ளுவனார் அவர்களுக்கு மிக்க நன்றி.
எனக்குத் தொல்காப்பியத்தில் மிகவும் பிடித்த நூற்பா இதுதான்:
 
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே.
 
தொல்காப்பியர் மட்டும் இந்த தடுப்பணையை அன்று எழுப்பியிராமல் இருந்திருந்தால் வடவெழுத்துகள் மூலமாகப பல வடசொற்கள் 2500 ஆண்டுகட்கு முன்னரே தமிழில் புகுந்திருக்கும். பிராமிக் கல்வெட்டுகளில் இந்த முயற்சியைக் காண்கிறோம். அண்மையில்கூட அதியமான் நாணயம் என்று சொல்லப்படும் ஒரு நாணயத்தில் 'ஸ' காணப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட்டிருக்கிறது. கீழவளவில் உபாஸஹ என்ற சொல் உபாசஅன் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியரே காரணம் என்பது என் கருத்து. எனவே திருவள்ளுவனார் கருத்து எனக்கு உடன்பாடே. ஆனால் நான் கணிதம் படித்ததின் விளைவாக ஸ, ஹ, ஜ போன்றவற்றில் எனக்கு அவ்வளவு பகைமை இல்லை. ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் தேவையின்றி அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Sep 24, 2013, 1:22:48 PM9/24/13
to tamil...@googlegroups.com
திரு.தேவ் ராஜ், திரு ஹரிகி அவர்களுக்கு மிக்க நன்றி. மனம் என்ற சொல் அத்து சாரியை பெற்று மனத்துள், மனத்தில் என்று வரலாம். Tamil Lexicon இல் மனசு, மனது என்ற சொற்கள் மனம் என்ற பொருளில் காணப்படுகின்றன. அச்சொற்கள் மனசில், மனதில் மனசுக்குள், மனதுள் என்று வரலாம் என நினைக்கிறேன்.
(திரைப்படப் பாட்டைத் துணைக்கு அழைப்பது பற்றிக் குறைகூறாதீர்கள்.)
 
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

மனசுக்குள்ளே தேரோட்ட
மைவிழியில் வடம் புடிச்சான்

வாலி பெரிய இலக்கணப் புலவர் இல்லாவிட்டாலும், மக்கள் வழக்கில் இது இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதே! மீண்டும் பனம்பாரனாரை நினைவுகொள்வோம்.(வழக்கும் செய்யுளும் ஆயிரு..)
நன்றி,
ப.பாண்டியராஜா
 
rajam

unread,
Sep 24, 2013, 7:12:43 PM9/24/13
to tamil...@googlegroups.com
வணக்கம், முனைவர் பாண்டியராஜா.

//"சுடுசோறு", நடுவில் நான்:"ஊறுகாய்", அடுத்தவன் "பொரிகடலை". ஒரு முறை முறைத்துவிட்டு, "தின்னிப்பசங்களா" என்று திட்டினார். // 

நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளில் வேண்டுமானால் திட்டும் கொட்டுமாக வகுப்புகள் நடந்திருக்கலாம். நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் அப்படியில்லை! வினைத்தொகை என்றால் பொரிகடலை ஊறுகாயோடு, சுடுசோறு, சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, மாறுகண்ணு, ஓடுகாலி ... போன்ற சொற்கள் தாமாக வந்து விழும்! டீச்சர் திட்டியதில்லை. அதனால் ... நான் இலக்கணம் படிப்பித்த போதும் அதே முறையில்தான் வகுப்பு நடத்தினேன். பெயரெச்சம் என்றால் "காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை; காலம் கரவாத வினைத்தொகை பெயரெச்சம்" என்று கிளிப்பிள்ளையாக மழலிவிட்டு, நடைமுறையிலிருந்து எடுத்துக்காட்டுகள் கொடுப்பேன்; அன்றைய ஹிட் (hit) "உலகம் சுற்றும் வாலிபன்." அதுவே முதுகலை வகுப்பாக இருந்திருந்தால் அதே எடுத்துக்காட்டு எப்படித் "தடுமாறு தொழிற்பெயர்" என்று தொல்காப்பியர் சொன்னதைப் புரிந்துகொள்ள உதவும் என்று விளக்கியிருப்பேன் (சுற்றுவது யார்? யாரை? என்று கேட்டு). ஆனால் முதுகலை வகுப்புக்கு இலக்கியம் படிப்பிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. 

//இலக்கணம் வாழ்வுசார்ந்து பயிற்றுவிக்கப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் தாழமையான கருத்து.// 

இதுக்கெல்லாம் "தாழ்ந்து"போகத் தேவையில்லை! உங்கள் எண்ணம்/விருப்பம் நிறைவேறத் தேவையான முயற்சிகளில் நீங்களே ஈடுபடலாமே. என்ன தயக்கம்???

//முதலில் சிறு வகுப்புகளில்  நாப்பழக்கத்தை ஏற்படுத்துவோம். அப்புறம் வரட்டும் அதன் விதிகள். //

ஆமாம். செய்யுங்கள், செய்யுங்கள். எந்த வகை நாப்பழக்கம் எப்படி ஏற்படவேண்டும் என்று வழிகாட்டுங்கள். இளைய தலைமுறைக்கு உதவும், இல்லையா.

//"தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்று கூறிய பனம்பாரனாரை மறந்துவிட்டோமா? //

இல்லையே. யார் மறந்தார்கள்? 

"கடலை சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்போச்சு"; 
"கடலைச் சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்போச்சு"; 

"கடலை சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்பொச்சு"; 
"கடலைச் சாப்பிட்டு என் மகனுக்கு வயிறு ஊதிப்பொச்சு"; 

எல்லாமே வழக்குத்தமிழ்தானே! என்ன தவறு இருக்க முடியும்

+++++++++++++++++++++

உலகஅமைதிக்காப்புப் பணியில் (Peace Corps) ஈடுபட்ட ஓர் அமெரிக்கர், எனக்குத் தெரிந்தவர், அயலகத்தில் தமிழ் படித்துவிட்டு, தமிழ்நாட்டில் பணி செய்யத் தொடங்கிய நாட்களில் ... ஒரு சிற்றூர் வகுப்பில் ... "ஒனக்கு முலை இருக்கா?" என்று கேட்டுச் சிக்கலில் மாட்டிக்கொண்டாராம். "முலை"க்கும் "மூளை"க்கும் உள்ள ஒலி வேறுபாடு இங்கே சிக்கல். 

//தமிழ் இலக்கணம் இன்றைக்குக் கற்பிக்கப்படும் முறையைத்தான் இவ்வாறு கூறினேன்.//

ஐயா, இன்றைக்குத் தமிழ் இலக்கணம் கற்பிக்கப்படும் முறை சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் ... அதைப்பற்றிக் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதிலோ, புலம்பிக்கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் இல்லை, இல்லை, இல்லவேயில்லை! நல்ல முறையில் மக்களை வழிப்படுத்த உங்களைப்போன்றவர்கள் முன்வரவேண்டும், இல்லையா? 

+++++++++++++++++++++ 

இலக்கிய விளக்கம் எழுதுவது எளிது. அங்கே கற்பனைக்கு இடம் பெரிது. யாரோ ஒருவர் ... "அவள் சொட்டச் சொட்டத் தலைகுளித்து வந்தாள்" என்று எழுதினால் ... ஆகா ... அதைப் படித்துச் சொட்டுச்சொட்டு என்று எதையாவது சொட்டுகிறவர் பலராக இருக்கலாம்! ஆனால், அதே சொட்டு ஆசாமி 1+ 2 = 3 என்று சொன்னாலோ அல்லது 1+2 = 12 என்று சொன்னாலோ அதை "வழக்கு" என்று ஒதுக்க முடியுமா? 

+++++++++++++++++++++

என் வேண்டுகோள்:

பிறருடைய படிப்பு முறை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? குறை சொல்லும் நேரத்தை மாற்றுவழியில் செலவிடுங்கள் -- நீங்களே நல்லதொரு வழிமுறையை வகுத்துக்காட்டுங்கள். 

+++++++++++++++++++++ 

எல்லாம் சரி. //இலக்கணம் வாழ்வுசார்ந்து பயிற்றுவிக்கப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும்// என்று சொன்ன மாதிரி 100% இல்லாவிட்டாலும் ... ஏதோ எனக்குத் தோன்றிய வகையில் "தொல்காப்பிய 'நறுக்'" பகுதிகளில் புணரியியல் விதிகளின் ***அடிப்படைக்***கருத்தை எளிமையாக்கிச் சொல்ல முயன்றிருக்கிறேனே ... அதை யாரும் கண்டுகொண்ட மாதிரித் தெரியலையே ... . 

கொஞ்சம் தற்பெருமை: தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு திருமலை என் மாணவர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை! சென்ற முறை மருத்துவத்துக்காக மதுரை போயிருந்தபோது என் தோழி வீட்டில் என் மாணவியர் கூட்டம் வந்திருந்தது என்னைப்பார்க்க. தற்செயலாக வேற்றூரிலிருந்து இன்னொரு மாணவி தன் மகளின் திருமணத்துக்காக இன்னொரு மாணவியைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் அங்கே இருப்பதைத் தெரிந்துகொண்டு என்னிடம் பேசினாள். மகளின் திருமணத்துக்கு வரும்படி அழைத்துவிட்டுப் பழைய கல்லூரி நாட்களைப்பற்றிப் பேசத்தொடங்கி அவள் சொன்னது: "மிஸ், இலக்கணத்தை நீங்கள் சொல்லிக்கொடுத்த பிறகுதான் அதன் சுவையே புரிய ஆரம்பித்தது. எவ்வளவு எளிமையாக விளக்கினீர்கள்!..." என்று எப்படியெல்லாமோ மகிழ்ந்து பேசினாள். அந்தப் பெண்ணின் முகமும் நினைவில்லை; எந்த ஆண்டில் படித்தாள் என்பதும் எனக்கு நினைவில்லை. ஆனால் வகுப்பு நிகழ்வுகள் மட்டும் எங்களுக்கிடையில் ஒரு பிடிப்பை அமைத்துக்கொடுத்திருந்தது. இன்னொரு பெண் சொன்னாள் ... "மிஸ், நான் கவிதை எழுதத்தொடங்கியதுக்கு நீங்களே வினையூக்கி (inspiration)." இதெல்லாம் சும்மா மேடை போட்டுப் பொன்னாடை போர்த்திப் பேசும் நிகழ்ச்சிகள் இல்லை. உள்ளத்து உணர்வுகள் கலப்படமில்லாமல் வெளிவரும் பொழுதுகள்.  

+++++++++++++++++++++

இப்படிக்கு,
ராஜம் 

Pandiyaraja Paramasivam

unread,
Sep 25, 2013, 3:57:14 AM9/25/13
to tamil...@googlegroups.com
மதிப்பிற்குரிய அம்மையீர்,
எல்லா ஆசிரியர்களும் தங்களைப் போன்ற ஆசிரியர்களாக - நகைச்சுவை உணர்ச்சியுள்ளவர்களாக - வாழ்வியலை ஒட்டிப் பாடம்நடத்துபவர்களாக - இருக்கவேண்டும் என்பதுவே என் விருப்பமும்.
நன்றி,
ப.பாண்டியராஜா

Elangovan N

unread,
Jul 1, 2014, 11:12:49 AM7/1/14
to tamilmanram

அன்புடையீர்,

உதை, எற்று, இடறல் என்ற மூன்று சொற்களில் Kick என்பதற்குப் பொருத்தமான 
சொல் எது என்று அறிய ஆவல். அன்பு கூர்ந்து தெரிவிக்கவும்.

(பாதத்தால் உந்துவதை உதை என்றும், முன்காலால் முட்டுவதை எற்று என்றும் , 
காலால் தள்ளிவிடுவதை இடறல் என்றும் சொல்ல முடியுமா?)

ஐய மூலம்: காற்பந்தாட்டம்.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 1, 2014, 11:20:33 AM7/1/14
to tamilmantram
நண்பர் இளங்கோவன்,

கால் பந்தை எற்று என்பது ஏற்புடையதாய் எனக்குத் தோன்றுகிறது.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Elangovan N

unread,
Jul 1, 2014, 11:59:57 AM7/1/14
to tamilmanram
அன்பின் ஐயா,
நன்றி.

எல்லோரும் உதை என்றே பெரும்பாலும் எழுதுகிறார்கள். நாளேடுகளில் கூட
அப்படித்தான் காணப்படுகிறது.

காற்பந்தாட்ட காலமான இதில், நிறைய சொற்தேவைகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.
காற்பந்தாட்டத்தில் அதிகம் புழங்கும் சொற்களைச் சரளமாகத் தமிழில் எழுதுவது பற்றி
தேடுகையில் ஏற்பட்ட ஐயங்கள் பல.

Goal = கவல் (நன்றி முனைவர் இராம.கி ஐயா)
Goal Post = கவை, கவற்சாவடி

Corner Kick, Penalty Kick, Goal Kick, Free Kick - இந்த நான்கும் அடிக்கடிக் கேட்கும் சொற்கள்.
இவற்றை எப்படித் தமிழில் எழுதலாம்? நறுக்கென்று இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்குண்டு.

Penalty Kick, Penalty Shoot out - இந்த இரண்டிற்கும் காரண வேறுபாடு உண்டு. எப்படி வேறுபடுத்தலாம்!

மேலும் Header, Throw, Hand Ball, Foul, Equalizer, Tie Breaker போன்ற சொற்களுக்கும் சரளமாக
எழுதச் சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 தாங்கள் இவற்றிற்கும் நல்ல சொற்களைத் தந்தருள்க.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 1, 2014, 3:16:25 PM7/1/14
to tamilmantram
Goal = கோல்,  குறிக்கோல், குறிவலை,  குறிச்சட்டம்,  பந்தாட்டக் குறி.

Goal Post = குறித்தூண்.

Corner Kick = மூலை எற்று. மூலை உதைப்பு, மூலை அடிப்பு, மூலை அடி.

Penalty Kick, தண்டிப்பு எற்று. தண்டனை உதைப்பு

Goal Kick,  குறிக்கோல் எற்று.

Free Kick - உரிமை எற்று.

Penalty Kick, தண்டிப்பு அடி.

Penalty Shoot out - குறிக்கோல் அடிப்பு, கோலடி

Header, மேற்தலை

Throw,  எறி, கையெறி

Hand Ball,  கரப் பந்து

Foul, கால் வாரல், கால் முறிவு

Equalizer, சமப்பாளர், சமப்பாடு

Tie Breaker : இணை முறிவு.

சி. ஜெயபாரதன்.

rajam

unread,
Jul 1, 2014, 3:46:01 PM7/1/14
to tamil...@googlegroups.com
அன்புள்ள இளங்கோவன்,

வணக்கம். தமிழ்ச்சொற்களுக்கும் அவை உணர்த்தும் பொருள்களுக்கும் 1::1 என்ற முறையில் பிறமொழிச்சொற்கள் அமையா என்பது இங்கே எல்லாருக்கும் தெரியும். அதுவும், தரவுத்தளங்கள் (database) பற்றித் தாங்கள் அறிந்திருப்பதனால் ஆங்கிலத்தில் சொல்கிறேன், மன்னிக்கவும். one to many, many to one என்ற relational அணுகுமுறை தேவை. இதைப் பொதுவாகச் சொல்கிறேன், இன்றைய 'கிக்' என்ற ஆங்கிலச்சொல்லைப் பற்றி மட்டுமில்லை.  

1. 
///பாதத்தால் உந்துவதை உதை என்றும், முன்காலால் முட்டுவதை எற்று என்றும் , 
காலால் தள்ளிவிடுவதை இடறல் என்றும் சொல்ல முடியுமா?)///

என்ற தங்கள் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. சில கூடுதல் கருத்துகள். "எற்று" என்பது காலால் செய்யக்கூடிய செயல் மட்டுமன்று, கையாலும் செய்யலாம் என்பதுக்கு "எற்றி வயவர் எறிய ..." என்று தொடங்கும் களவழி நாற்பது (23) பாடலும் கம்பனின் சொல்லாட்சியும் உதவும்.

**********
களவழி நாற்பது (23) 
எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து
நெய்த்தோர்-ப் புனலுள் நிவந்த களிற்றுடம்பு
செக்கர்-கொள் வானில் கருங்கொண்மூ-ப் போன்றனவே
கொற்ற வேல் தானை கொடி-த் திண்தேர் செம்பியன்
செற்றாரை அட்ட களத்து

**********

சட்டென நினைவுக்கு வந்தது ஒரு கம்பராமாயண வரி: "தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே"

முனைவர் பாண்டியராஜாவின் தொடரடைவு இங்கே மிகவும் உதவும். அங்கே தேடவும்.

2. "இடறல்" என்பதில், இடறும் பொருள் அசையாதது; இடறப்படும் பொருள் அசையும். 

3. 
///Goal = கவல் (நன்றி முனைவர் இராம.கி ஐயா)
Goal Post = கவை, கவற்சாவடி///

'கவல்' என்ற சொல் goal என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அணுக்கமான ஒலியைக் கொண்டமைந்தாலும் கவல் == goal என்ற சமன்பாடு கொஞ்சம் நெருடுகிறதே. 'கவர்' என்றாலாவது ஓரளவு பொருந்தும். கவல் என்ற தமிழ்ச்சொல் 'பிளவு' என்ற அடிப்பொருளை உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது. 

கவல், கவட்டை, கவலை ... போன்றவை ஒரு குழு. இவை பிளவுபட்ட நிலையைக் குறிக்கும்.

கவ்வு, கவர், கவவு ... போன்றவை ஒரு குழு. இவை உள்ளடக்கிய நிலையைக் குறிக்கும்.

"கவவு அகத்திடுமே" என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா.

+++++++++++++++ 

சுவையான குறிப்பு. எதுக்கெடுத்தாலும் சங்கத்தமிழ் என்று போகும் எனக்குத் தென்பட்டவை:

(i) பந்து விளையாட்டு என்பது பாவையருக்கேயன்றி ஆடவருக்கு இருந்ததில்லை நம் பழந்தமிழ்ப் பெருநாட்டில்! இந்தப் பந்துப் பெருமோகம் ஆடவருக்காக என்றைக்கு எப்போது எந்த வழியில் புகுந்தது என்று பார்த்து அதற்கேற்பத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

(ii) நம் பாவையர் செய்தது பந்து "எறிந்தது." 

(iii) பந்து "உருட்டியது" பற்றிய குறிப்புண்டு, இப்போது மறந்துவிட்டது.

(iv) தமிழுக்கே உரிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்களைப் புரட்டினால் தெரியும் ... குழந்தைகளின் வளர்ச்சியை அவர்களின் உடல், செயல் ஆகியவற்றின் அடைப்படையில் எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்திருக்கிறார்கள் என்று!

அன்புடன்,
ராஜம்

iraamaki

unread,
Jul 1, 2014, 5:11:06 PM7/1/14
to tamil...@googlegroups.com
உதைத்தல், எற்றுதல் என்பவை ஒரே வகைப் பொருளைத் தரும். இடறல் அவற்றோடு சேராது.
 
உந்துதல் என்பது ”உ” என்னும் வேர்ச்சொல்லின்/பொருளின் படித் தன்வினையாக உயரஞ் செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இன்று அதைப் பிறவினையாகவும் (உயரஞ் செலுத்துதல் என்றும்) நாம் பயன்படுத்துகிறோம். உத்துதல் என்பது உந்துதலின் பிறவினை. உத்துதல் = உயரஞ் செலுத்துதல். உத்துதலின் வழி எழுந்த பெயர்ச்சொற்களில் உத்தரம் என்பதும் ஒன்று. வீட்டின் கூரையைத் தாங்கினாற்போலிருக்கும் beam. அது நல்ல தமிழ்ச்சொல் தான். பலரும் அதைத் தவறாக வடசொல் என்று கொள்கிறார்கள்.
 
உத்தரம் என்பது உயரத்தில் இருப்பது என்ற பொருள் கொண்டு, பின் நீட்சி பெற்று வடக்கேயிருப்பது என்றும் பொருள் கொள்ளும். வடபால் மொழிகளில் அது வடக்கு என்று பயன்படுகிறது. அதே பொழுது அந்த மொழிகளில் உயரம் என்பதற்கு உம்பர்>உப்பர்>ஊப்பர் என்பதே பயன்படுகிறது.
 
உத்தமம் என்பது உயர்நிலை. உத்துதலில் பல்வேறு சொற்கள் இருக்கின்றன. இங்கு அவற்றை முற்படுத்தாது விடுக்கிறேன். (அகரமுதலி கைவசம் இல்லை. அமெரிக்க இடைக்கால வாசம் அதைச் செய்யவிடாது தடுக்கிறது.)
 
உத்துதலின் தொடர்பாய்க் கிளைத்தது உதைத்தல். இதற்கும் உயரச் செலுத்துதல் என்றே பொருள் கொள்ளும். You need to get the ball high as per Tamil meaning; In english it is not, even though it frequently does so.
 
எற்றுதலும் உயரஞ் செலுத்துதலே. எக்குதல் என்பது கிடைமட்டத்தில் தள்ளுதல். எற்றுதலையும், எக்குதலையும் சேர்த்தாற்போல் பொதுச்சொல் தமிழிற் கிடையாது. பேரா. இராசம் சொன்னது போல் எற்றுதல் பாதத்தால்/காலால் மட்டுஞ் செய்வதல்ல. உதைத்தல் என்பது அப்படியில்லை. இற்றைப் பயன்பாட்டில் காலாற் செய்வதை மட்டுமே உதைத்தல் என்கிறோம்.
 
இடறுதல் என்பது இடையில், தடுமாறவைக்குஞ் செயல். "கை இடறுகிறது, கால் இடறுகிறது, நடை இடறுகிறது. என்னவோ தெரியவில்லை, அந்த இடம் இடறவைக்கிறது” - என்ற பல்வேறு பயன்பாடுகள் பார்த்தால் நான் சொல்வது விளங்கும்.
 
பொதுவாக, நான் புரிந்த வரை kick என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் கிடையாது. பொருள் நீட்சியில் உதைத்தலே இன்று பகரியாய்ப் பயன்படுகிறது. அதே பொழுது பந்தை அடித்துதைத்தான் அல்லது உதைத்தடித்தான் என்பது சுற்றி வளைத்ததாய்த் தென்படுகிறது. சில இடங்கள் அடித்தான் என்றும், மற்ற சில இடங்களில் உதைத்தான் என்றுஞ் சொல்கிறோம்.
 
நீங்கள் சொல்லிய மற்ற சொற்களுக்கு கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.

MANICKAM POOPATHI

unread,
Jul 2, 2014, 12:35:20 AM7/2/14
to tamil...@googlegroups.com
பொதுவாக கால்கோள் (kick off) என்பதுண்டு..
ஆடு களத்தின்  ஆட்டத் துவக்கமான kick-offs  என்பவற்றுள்
free kicks  (kinda restart) அதிலும் direct/indirect என்று உண்டு..
இப்படி  நானாவிதத்திலும்  kicks/flings இருப்பதினால்.. குறிப்பான
பெயர்ப்பினோடு கூடிய  சொல்லாக்கங்கள் தேவைப் படலாம்....

~~பூபதி

Elangovan N

unread,
Jul 2, 2014, 11:00:08 AM7/2/14
to tamilmanram
//
அதிலும் direct/indirect என்று உண்டு..
இப்படி  நானாவிதத்திலும்  kicks/flings இருப்பதினால்.. குறிப்பான 
பெயர்ப்பினோடு கூடிய  சொல்லாக்கங்கள் தேவைப் படலாம்....
//

நண்பர் பூபதி, 

உண்மை. நிறைய சொற்கள் தேவைப்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இருந்தால் போதாது.
உலகில் எத்தனையோ துறைகள்  வளர்ந்திருக்கின்றன.

கிரிக்கெட் ஆட்டம் இங்கு சிறந்திருந்தாலும், தமிழில் புழக்கம் இல்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Elangovan N

unread,
Jul 2, 2014, 12:16:56 PM7/2/14
to tamilmanram
அன்பின் ஐயா,

சொற்களுக்கு மிக்க நன்றி.

கோல் என்பதற்கு நான் கவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
கவல் என்பது பற்றி இராம.கி ஐயா விளக்கியிருக்கும் ஏரணம் சிறப்பாக
இருந்தது. பார்க்க: http://valavu.blogspot.in/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

மூலை எற்று, தண்டிப்பு எற்று, உரிமை எற்று ( இதனை Restart என்று நண்பர் பூபதி சொல்வது கவனிக்கத்தக்கது)
இவற்றை இடத்திற்கேற்றாற்போல எழுதவேண்டும். நானும் எழுதுவேன். பழகப் பழகத்தான் இதெற்கெல்லாம்
சொல் அமையும் என்று கருதுகிறேன்.

Tie Breaker : இணை முறிவு என்று நீங்கள் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது. முறி என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்
என்று கருதுகிறேன். (நிலைமுறி என்று சொல்லலாமா என்றும் எண்ணுகிறேன்)

இந்த, penalty shoot out ஐயும் இணை முறி என்றே சொல்லலாம் என்று கருதுகிறேன்.
ஆட்டத்தில் கொடுக்கப்படும் பெனால்ட்டியும், நிலைமுறிக்கத் தரப்படும் பெனால்ட்டியும் வேறு வேறு காரணங்கள்
கொண்டுள்ளன.

மீண்டும் நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Elangovan N

unread,
Jul 2, 2014, 1:02:02 PM7/2/14
to tamilmanram
அன்பின் அம்மா, இராம.கி ஐயா,
வணக்கம்.

தங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுடையதாக இருக்கின்றன.
kick என்ற வருமிடத்து இடம்பார்த்துத்தான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
எற்று என்பதை நான் நினைத்தது போல மிக முழுமையாகப் பயன்படுத்திவிட முடியாது
என்று உணர்கிறேன். 

//one to many, many to one என்ற relational அணுகுமுறை தேவை.//

நன்கு புரிகிறது. நன்றி.

//"இடறல்" என்பதில், இடறும் பொருள் அசையாதது; இடறப்படும் பொருள் அசையும். //

நான் இடறல் என்பதை , வழுவுவது, தடுமாறுவது என்ற பொருள்களில் புரிந்து கொண்டிருக்கிறேன்.
கதைகளில் யானையின் காலால் மனிதன் தலையை இடறும் தண்டனையைப் பற்றிப் படித்திருப்பதால்
அதில் வரும் இடறல் என்னைச் சற்றுக் குழப்புகிறது. யானைக்காலை இடறும் பொருளாகக் கொண்டால்,
இடறப்படும் பொருள் 'மனிதனின் தலை'. இங்கு இரண்டுமே அசைகிறதே என்பதுதான் எனது குழப்பம்.

//'கவல்' என்ற சொல் goal என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அணுக்கமான ஒலியைக் கொண்டமைந்தாலும் கவல் == goal என்ற சமன்பாடு கொஞ்சம் நெருடுகிறதே.
//

கோல் என்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு இராம.கி ஐயா,
கவல் என்று பொருள் கூறி அதற்கான விளக்கமளித்திருந்தார்.
அந்த அஞ்சல்/பதிவைத் தேடி எடுக்க முடியவில்லை.
ஆனால், கவல் பற்றிய அவரின் விளக்கங்களை (http://valavu.blogspot.in/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)
இந்தத் தொடுப்பில் காணமுடிகிறது.

எனது புரிதல்: Goal Post உள்ளடக்கும் பகுதியில் பந்து சென்றால் அது கோல் எனப்படுகிறது.
goal post என்பது கிட்டத்தட்ட கவை அல்லது கவட்டை போன்ற அமைப்பு. நம்மை விட உயரமாக வைத்துப் பார்க்காமல்,
ஐசு ஆக்கி போன்ற விளையாட்டில் காணப்படும் சிறிய goal post ஐப் பார்த்தால் அது கவட்டையை ஒத்திருக்கிறது.
கவட்டைக்குள் பந்து போகும் அந்த நிகழ்விற்கு (event),  (அல்லது கவட்டை, பந்தைக் கவ்விக் கொள்கிறது (க(வ்)வல்)
கவல் என்பது பொருந்துகிறது என்று கருதுகிறேன்.

தாங்கள் கூறியது போல, கவல், கவட்டை, என்ற அடிப்படைகளை வைத்தே இராம.கி ஐயா இச்சொல்லைப் பரிந்துரைத்திருந்தார்.
அதனால், நமது உடல் உறுப்புகள், அவற்றின் செயற்பாட்டு அடிப்படைகளைக் கொண்ட இயல்பான ஏரணம் கொண்ட சொல் என்று எனக்குப்
பட்டதால் நான் அதைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு, மேலும் மாற்று இருந்தால் அருள் கூர்ந்து தருக. அதையும் பயன்படுத்துவோம்.

//பந்து விளையாட்டு என்பது பாவையருக்கேயன்றி ஆடவருக்கு இருந்ததில்லை நம் பழந்தமிழ்ப் பெருநாட்டில்! இந்தப் பந்துப் பெருமோகம் ஆடவருக்காக என்றைக்கு எப்போது எந்த வழியில் புகுந்தது என்று பார்த்து அதற்கேற்பத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம்.
//

இது பற்றி வாய்ப்பு அமையும்போது எழுதுங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அந்தப் பந்து என்ன வடிவில் அந்தக் காலத்தில்
இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதே இனிமையாக இருக்கிறது.

தங்கள் இருவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

iraamaki

unread,
Jul 2, 2014, 7:26:47 PM7/2/14
to tamil...@googlegroups.com
நீங்கள் கேட்ட மற்ற சொற்களுக்கு:
 
Corner Kick = மூலையடி
Penalty Kick = தண்டடி (தென்பாண்டி நாட்டில் காதில் போடும் தண்டடியோடு ஒருவேளை குழப்பம் வரலாம். அது சரியானபடி சொன்னால்
தண்டட்டி.)
Goal Kick = கவலடி
Free Kick = பரியடி
Penalty Shoot out = தண்டுதை/தண்டெற்று
Header = தலையடி
Throw = எறி
Hand Ball = கைபடல்
Foul = அழுகலாட்டம்
Equalizer = சமனீடு
Tie Breaker = முட்டுடைப்பு

From: iraamaki
Sent: Tuesday, July 01, 2014 5:11 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: சொற்கள் - ஐயம்

உதைத்தல், எற்றுதல் என்பவை ஒரே வகைப் பொருளைத் தரும். இடறல் அவற்றோடு சேராது.
 
உந்துதல் என்பது ”உ” என்னும் வேர்ச்சொல்லின்/பொருளின் படித் தன்வினையாக உயரஞ் செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இன்று அதைப் பிறவினையாகவும் (உயரஞ் செலுத்துதல் என்றும்) நாம் பயன்படுத்துகிறோம். உத்துதல் என்பது உந்துதலின் பிறவினை. உத்துதல் = உயரஞ் செலுத்துதல். உத்துதலின் வழி எழுந்த பெயர்ச்சொற்களில் உத்தரம் என்பதும் ஒன்று. வீட்டின் கூரையைத் தாங்கினாற்போலிருக்கும் beam. அது நல்ல தமிழ்ச்சொல் தான். பலரும் அதைத் தவறாக வடசொல் என்று கொள்கிறார்கள்.
 
உத்தரம் என்பது உயரத்தில் இருப்பது என்ற பொருள் கொண்டு, பின் நீட்சி பெற்று வடக்கேயிருப்பது என்றும் பொருள் கொள்ளும். வடபால் மொழிகளில் அது வடக்கு என்று பயன்படுகிறது. அதே பொழுது அந்த மொழிகளில் உயரம் என்பதற்கு உம்பர்>உப்பர்>ஊப்பர் என்பதே பயன்படுகிறது.
 
உத்தமம் என்பது உயர்நிலை. உத்துதலில் பல்வேறு சொற்கள் இருக்கின்றன. இங்கு அவற்றை முற்படுத்தாது விடுக்கிறேன். (அகரமுதலி கைவசம் இல்லை. அமெரிக்க இடைக்கால வாசம் அதைச் செய்யவிடாது தடுக்கிறது.)
 
உத்துதலின் தொடர்பாய்க் கிளைத்தது உதைத்தல். இதற்கும் உயரச் செலுத்துதல் என்றே பொருள் கொள்ளும். You need to get the ball high as per Tamil meaning; In english it is not, even though it frequently does so.
 
எற்றுதலும் உயரஞ் செலுத்துதலே. எக்குதல் என்பது கிடைமட்டத்தில் தள்ளுதல். எற்றுதலையும், எக்குதலையும் சேர்த்தாற்போல் பொதுச்சொல் தமிழிற் கிடையாது. பேரா. இராசம் சொன்னது போல் எற்றுதல் பாதத்தால்/காலால் மட்டுஞ் செய்வதல்ல. உதைத்தல் என்பது அப்படியில்லை. இற்றைப் பயன்பாட்டில் காலாற் செய்வதை மட்டுமே உதைத்தல் என்கிறோம்.
 
இடறுதல் என்பது இடையில், தடுமாறவைக்குஞ் செயல். "கை இடறுகிறது, கால் இடறுகிறது, நடை இடறுகிறது. என்னவோ தெரியவில்லை, அந்த இடம் இடறவைக்கிறது” - என்ற பல்வேறு பயன்பாடுகள் பார்த்தால் நான் சொல்வது விளங்கும்.
 
பொதுவாக, நான் புரிந்த வரை kick என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் கிடையாது. பொருள் நீட்சியில் உதைத்தலே இன்று பகரியாய்ப் பயன்படுகிறது. அதே பொழுது பந்தை அடித்துதைத்தான் அல்லது உதைத்தடித்தான் என்பது சுற்றி வளைத்ததாய்த் தென்படுகிறது. சில இடங்கள் அடித்தான் என்றும், மற்ற சில இடங்களில் உதைத்தான் என்றுஞ் சொல்கிறோம்.
 
நீங்கள் சொல்லிய மற்ற சொற்களுக்கு கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.

Sent: Tuesday, July 01, 2014 11:59 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: சொற்கள் - ஐயம்

அன்பின் ஐயா,
நன்றி.

எல்லோரும் உதை என்றே பெரும்பாலும் எழுதுகிறார்கள். நாளேடுகளில் கூட
அப்படித்தான் காணப்படுகிறது.

காற்பந்தாட்ட காலமான இதில், நிறைய சொற்தேவைகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.
காற்பந்தாட்டத்தில் அதிகம் புழங்கும் சொற்களைச் சரளமாகத் தமிழில் எழுதுவது பற்றி
தேடுகையில் ஏற்பட்ட ஐயங்கள் பல.

Goal = கவல் (நன்றி முனைவர் இராம.கி ஐயா)
Goal Post = கவை, கவற்சாவடி

Corner Kick, Penalty Kick, Goal Kick, Free Kick - இந்த நான்கும் அடிக்கடிக் கேட்கும் சொற்கள்.
இவற்றை எப்படித் தமிழில் எழுதலாம்? நறுக்கென்று இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்குண்டு.

Penalty Kick, Penalty Shoot out - இந்த இரண்டிற்கும் காரண வேறுபாடு உண்டு. எப்படி வேறுபடுத்தலாம்!

மேலும் Header, Throw, Hand Ball, Foul, Equalizer, Tie Breaker போன்ற சொற்களுக்கும் சரளமாக
எழுதச் சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 தாங்கள் இவற்றிற்கும் நல்ல சொற்களைத் தந்தருள்க.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

2014-07-01 20:49 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நண்பர் இளங்கோவன்,

கால் பந்தை எற்று என்பது ஏற்புடையதாய் எனக்குத் தோன்றுகிறது.

சி. ஜெயபாரதன்
2014-07-01 11:12 GMT-04:00 Elangovan N <nela...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Jul 2, 2014, 8:35:09 PM7/2/14
to தமிழ் மன்றம்
தமிழ் மன்றம் மீண்டும் துடிக்கத்தொடங்குது

2 ஜூலை, 2014 7:26 பிற்பகல் அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jul 4, 2014, 8:24:49 PM7/4/14
to தமிழ் மன்றம்

2 ஜூலை, 2014 12:16 பிற்பகல் அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:

அன்பின் ஐயா,

சொற்களுக்கு மிக்க நன்றி.

கோல் என்பதற்கு நான் கவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

இராமகி ஐயா அந்த பொருளில் சொல்லியதாக தோணலையே

கவ்வு என்பதன் வேர், கவல் 
இரண்டாம் வேற்றுமை உருபு : பிரேசில் இரண்டு கவலை போட்டது, கொலொம்பியா ஒரு கவலை போட்டது என்று சொல்வதா?

அதுக்கு கோள் என்றாவது சொல்லலாம். மனதில் கொண்டது கோள்

Elangovan N

unread,
Jul 5, 2014, 11:15:10 AM7/5/14
to tamilmanram
வேந்தரே, நான் இன்னொரு அஞ்சலில் கூறியருந்தது போல
அந்தப் பழைய மடல்/அஞ்சலை என்னால் தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை.
நினைவில் இருந்ததை வைத்தே எழுதினேன். தற்போது உங்களுக்காகத் தேடியதில்
http://valavu.blogspot.in/search?q=goal இந்தத் தொடுப்பு கிடைத்தது. பார்க்க. இன்னும் விரிவாக
இதுபற்றி எழுதியிருந்ததாக நினைவு. (இங்கே கவள்/கவளை என்கிறார் இராம.கி ஐயா. நான் கவல் 
என்று எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற வேறுபாட்டை இப்போதுதான் பார்த்தேன்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

--

வேந்தன் அரசு

unread,
Jul 5, 2014, 3:08:19 PM7/5/14
to தமிழ் மன்றம்
ஆயின் கவள்= goal  என்று காட்டியதாக தோணலை.  

5 ஜூலை, 2014 11:15 முற்பகல் அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages