கல்வெட்டு 1:1 > கணிய் நந்த அஸிரிய்இ குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்
கல்வெட்டு 1:2 > கணிய் நத்திய் கொடிய்அவன்
கலவெட்டு 1:3 > கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்
கல்வெட்டு 1:4 > கணிஇ நதஸிரிய் குவ[ன்] -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்
மறுகால்தலை: கல்வெட்டு 6:1> வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்.
மேட்டுப்பட்டி: கல்வெட்டு 9:6> சந்தந்தை சந்தன்
மேட்டுப்பட்டி கல்வெட்டுகள் பலவற்றில் அந்தை என்பதற்கு பிச்சை கொண்டு வாழும் பிராமணத் துறவி என்று (clairvoyant) விளக்கம் சொல்லிவந்த இராமச்சந்திர பாபுஜி இந்த கல்வெட்டை மட்டும் ஆசீவக துறவி என்றார்.
அழகர்மலை: க ல்வெட்டு 12:12 > கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்
ஆனைமலை: கல்வெட்டு 19:1> இவகுன்றது உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் / அத்துவாயி அரட்டகாயிபன்
/// கணி பிராமணரை குறிப்பது///எந்த கல்வெட்டு கலைச்சொல் அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?

On Mon, Apr 26, 2021 at 4:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:/// கணி பிராமணரை குறிப்பது///எந்த கல்வெட்டு கலைச்சொல் அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?எந்த அகராதியிலும் கிடையாது.

முனைவர் தேமொழி,
நல்ல காட்டு (“கணிமுற்றூட்டு”), நல்ல கருத்து.
நன்றி.
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/2744341b-fffe-4132-b210-6d4b8ceaabd8n%40googlegroups.com.
On Monday, April 26, 2021 at 7:27:17 AM UTC-7 sseshadri69 wrote:On Mon, Apr 26, 2021 at 4:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:/// கணி பிராமணரை குறிப்பது///எந்த கல்வெட்டு கலைச்சொல் அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?எந்த அகராதியிலும் கிடையாது.மேலும்:----- ஆசாரக் கோவை வழியாக எவ்வாறு வானியல் கணிக்கும் தொழில் ஒருசாரருக்கு என ஒதுக்கப்பட்டது என அறியலாம்.“அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லாஅந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்என்றும் பிழைப்ப திலை. (92)பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.------------------------------------இனி நீங்கள் இதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று எண்ணும் கல்வெட்டுக் கலைச்சொற்களுக்கு ஒரு தனி அகராதி எழுதிவிடுதல் நலம்.அல்லது என் அகராதிப்படி இதன் பொருள் இதுவாக இருக்கிறது என்றோ உங்கள் பொருள் விளக்கத்தில் குறிப்பிடுதலும் நன்றே.நான் கல்வெட்டு தொல்லியல் என்பவற்றை ஏதோ ஆர்வத்தால் படித்துக்கொண்டிருப்பவள், அத்துறையில் கற்றுத் துறைபோகிய வரலாற்று ஆய்வாளர் அன்று. ஆயினும் உங்கள் பதிவுகளில் எதிர்பாரா விளக்கங்களைக் காண்பது வழக்கமாகவே உள்ளது.