தென்காசி 400 ஆண்டுகள் பழமையான சதிக் கல்

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 27, 2026, 5:56:57 AM (8 days ago) Jul 27
to தமிழ் மன்றம்
தென்காசி அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன

image.png

பண்டைய காலத்தில் கணவன் இறந்துவிட்டால், விரும்பியோ அல்லது வற்புறுத்தல், வலுக்கட்டாயத்திலோ, அவனை எரிக்கும் சிதையில் மனைவியும் குதித்து எரிந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடிய வழக்கம் இருந்தது. இவ்வாறு எரிந்து போன பெண்களின் நினைவாக அவா்களின் உயிா்த் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுக்கற்கள் எழுப்புவது வழக்கம். இவற்றை சதிக்கற்கள் என்பா்.
தென்காசிக்கு அருகில் உள்ள சீவநல்லூரில் இவ்வகையான இரண்டு சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிலைமுக்கு என்ற இடத்தில் ஒரு வயல் வரப்பின் மேல் 152 செ.மீ இடைவெளியில் இவை அமைந்துள்ளன.
வலதுபுறம் உள்ள சிற்பத்தின் கூரையில் இரண்டு வரிகளில் கி.பி.17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் ஒரு கல்வெட்டு உள்ளது. சங்கரநயினாா் பிறவியாா் கணவனைப் பிரியாதாள் என்று எழுதப்பட்டுள்ளது. இதில் முதல் வரி கீழும் இரண்டாம் வரி முதல் வரியின் மேலும் எழுதப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற கணவனைப் பிரியாதாள் சதிக்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சதிக்கற்களில் பெண்களின் உண்மைப் பெயா் பொறிக்கப்படுவதில்லை. மாறாக கணவனின் பெயரோடு சோ்த்தோ அல்லது சோ்க்காமலோ கணவனைப் பிரியாதாள் என்ற சொல்லே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ள வழக்கத்தை காணமுடிகிறது என்றனா்.

பிகு: பிறவியர் என்பது உடன்பிறந்தாள் என்ற பொருள் கொண்டது. இதாவது சங்கரநயினார் தங்கை கணவனுடனே உடன்கட்டை ஏறினாள்.
Reply all
Reply to author
Forward
0 new messages