77 ன் மேல் செல்லாநின்ற யுவ வருஷம் ஆடி மாதம் 2 நாள் சங்ககிரி ராஜ்யத்தில் _ _ காவேரிப்பாக்கமான விக்ரம சோழ சதுர்வேதி மங்கலத்து நகரத்தார் நடுத்தெருவில் கேசவப்பெருமாள் கோயிலுக்கு இத்தெருவில் வைஸ்ய வாணிகர் தர்ம்ம தாவள அபயதா
வள நகரத்தார் பண்ணிக் கொடுத்த தர்ம்மஸாஸனம் எங்கள் தெருவில் கல்லியாணப் பணம், யாத்திரைப்பணம் கைவிடு மோதிரப்பணம் பூசை பொன் வகை பத்துக்கு மூன்று பணம் இந்த வகைப்படியிலுள்ளது எங்கள் தெருவில் கேசவப்பெருமாள் கோயிலுக்கு திருப்பணிக்கும்
விளக்கம்: சக ஆண்டு 1377 கிபி 1455 இல் நாற்கடலை எல்லையாக கொண்ட விசயநகர வேந்தர் இரண்டாம் தேவராயரான வீரபிரதாப தேவரின் மகன் மல்லிகார்ச்சுணராயர் ஆட்சிசெய்த போது யுவ ஆண்டு ஆடி மாதம் 2 ஆம் நாள் சங்ககிரி அரசில் அடங்கிய காவேரிப்பாக்கமான விக்ரமசோழ சதுர்வேதி மங்கல நகரத்து வணிகர்தம் நடுத் தெருவில் உள்ள கேசவ பெருமாள் கோவிலுக்கு வைசிய வணிகரின் தர்மதாவளத்தாரும் அபயதாவள வணிகரும் சேர்ந்து செய்து வைத்த அற ஆவணம் யாதெனில் எமது தெருவில் தண்டப்படும் திருமண வரி, திருச்செலவு வரி, மோதிர வரி ஆகியன பூசை பொன் வகையில் பத்திற்கு மூன்று பணம் என்ற மேனிக்கு எமது தெரு கேசவ பெருமாள் கோயில் திருப்பணிக்காகவும் உபயத்துக்கும் பயன்படுத்திக் கொள்வதாக விட்டோம். இந்த அறத்தை தடுக்க நினைப்பவர் கங்கை கரையில் காரம் பசுவை கொன்ற பாவத்தையும் பிராமணரை கொன்ற பாவத்தையும் அடைவாராக என்று வணிகர் கணக்கன் எழுதி கொடுத்துள்ளார். இக்கல்வெட்டில் வணிகர் திருமண வரி, திருச்செலவு வரி, மோதிர வரி தண்டும் உரிமை பெற்றிருந்தனர் என அறிய முடிகிறது.
பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி 27, பக்கம் 237