வனம் என்றால் கடக்கக் கடினமான காடு

4 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 11, 2024, 8:09:20 AM (11 days ago) Jul 11
to தமிழ் மன்றம்
image.png

கடப்பதற்கு எளிமையல்லாத கடுமையான அமைப்புள்ளது என்பதால் கடு > காடு எனப்பட்டது. கல் > கள் > கட்டு > கடு என்ற திரட்சிக் கருத்தை  உண்டாக்கும். கட்டை கடினமான தடி. 

வல் > வன் என்றால்  கடினம். வனம் என்றால் கடக்கக் கடினமான காடு.   

கால் > கான் > கானப்பேரெயில் என்றால் கடுமைவாய்ந்த பெரிய கோட்டை. கானகம் என்றால் கடுமையான காடு. 

குவ்வு > குவி > குப்பு > குப்பை என்பதும்  திரட்சி பொருள் கொண்டதே. குப்ரம் என்பது திரட்சியால் கடுமை எய்திய என்ற பொருளுடையது.

தாவங்கட்டை என்றால் உறுதியான தாடை இதாவது,  கடுமையான மோவாய்கட்டை. தாவம் கடுமை கருதி காட்டைக் குறித்தது. 

அல் > அள்(ளு) திரட்டி எடு. அள் > அட் > அடர்வி > அடவி. சமசுகிருத சொற்களுக்கு தமிழே வேராக உள்ளது இங்கு தெளிவு. காடுகளில் 3 அடிக்கு மேலும் அதற்கு மேலும் வளர்ந்த புதல்களால் காட்சி மறைப்பு மட்டும் அல்ல தாண்டுவதும் கடினம் ஆகும். இயல்பாக தரையில் நடந்து கடப்பது போல எளிதாக கடந்து விட முடியாது என்பதால் கடு > காடு எனப்பட்டது.

வையவித்து என்றால் கடுக்காய். இதில் வைய என்பது கடுமையை குறிக்கிறது. வயிரிப்பு   என்றால் கடினமாகை, இறுக்கம். ஆக ஆங்கிலத்தில் குறிக்கப்படும் wild > வயில்து கடுமையைத் தான் குறிக்கிறது என்று கொள்க.     

  1. अटवी - அடவிअरण्यम् - அரண்யம்काननम् - கானனம் कुब्रम् - குப்ரம்दावः - தாவवनम् - வனம்विपिनम् - விபினம் 

Reply all
Reply to author
Forward
0 new messages