ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்

466 views
Skip to first unread message

ஞானபாரதி

unread,
Jan 7, 2011, 2:06:38 PM1/7/11
to தமிழ் மன்றம்
ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
த. ஞான பாரதி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை

இன்று தமிழ்ச் சமூகம் பல்வேறுவிதமாக ஆண்டாண்டுகாலமாக போற்றிப் பாதுகாத்த
அடையாளங்களை இழந்தும் புதுவித அடையாளங்களை ஏற்பதும் தான் சரியான பாதை
என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல நூற்றண்டுகளாகவும் நாம் நம்
அடையாளங்களை இழந்து வந்தாலும் தற்காலத்தில் இவ்விழப்பு பெரிய அளவில்
நடைபெற்று வருகிறது.

தமிழாக்கம் செய்த பிற மொழிச் சொற்களின் மூலப்பொருள் தேடி அதையே, முடிந்த
அளவிற்கு, அம்மொழியில் குறிப்பிடும்படியே, வெளிப்படுத்தும் நிலைமை
வந்திருக்கிறது. சேகரன், சேகர் என்றாகி இப்பொழுது ஷேக்கர் என்று
அறிவுடையோர் என்று அறியப்படுபவர்களால் அழைக்கப்படுகிறது. பல சொற்கள்
சாந்தி-ஷாந்த்தி, வசந்தி-வசந்த்தி, சந்திரன்-ச்சந்திரன், அசோகன் -அசோக்,
என்றாகி கணேசன்-gaணேசன்-gaணேஷ், தமயந்தி-dhaமயந்தி-dhaமயந்த்தி என்று
மாற்றமடைந்து வருகிறது. இவை போன்ற சொற்களை உச்சரிக்கத் தெரிந்தும்
அவர்தம் மொழியால் அம்மக்களாலே எழுதமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

பாவம்-baaவம், பால்-baaல், பாஸ்- baaஸ், என்ற நாள்தோறும் பயன்படும்
சொற்களின் வேறுபாடுகளை எழுத்தால் தெளிவுறுத்த முடியாமல் இருக்கின்றோம்.
கீதா, கோபி, பாரதி (Keedhaa, kobi, paaradhi) என்பவை இன்று Geetha,
Gopi, Bharathi என்று உச்சரிக்கப்படுகின்றன. சங்கீதம், சாந்தம்,
அசோகவனம் என்பவை சந்கீத்தம், சாந்த்தம் அசோக்கவனம் என்று முதன்முதலில்
நம் சமூகத்தில் அறிமுகப்பட்டிருந்தால் வன்மையானவையாக கருதப்பட்டு
அடையாளம் காணப்படாமலேயே நம்மைவிட்டு போயிருக்கும். இன்று நாமே இவற்றை
மாற்றி உச்சரிக்க முயல்கிறோம்.

உலகமயமாக்கல்: கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது கொணர்ந்திங்கு
கொட்டப்படுகிறதாகியுள்ளது. இதில் நல்லவை பலவும் உள. தயாரித்த பொருட்கள்,
விதவிதமான நுணுக்கமான சொற்கள், கலை என யாவும் தமிழருக்கு என்றாகாமல்,
தமிழ்ப்படுத்தப்படாமல் திணிக்கப்படுகிறது. மறுப்பேதும் இல்லாமல்
ஏற்றுக்கொள்ளும் நிலையில் சமூகம் இருக்கிறது.

விளைவு, உச்சரிக்கத் தெரியாத நிலையிலும் பிறமொழிச்சொற்களை அம்மொழி பேசும்
மக்களின் பேச்சு முறையிலேயே பேச முயல்கிறோம். firstu, flightu, faastu,
frontu, என்று faகரம் அறிமுகமானது. straight, bright, prepaid என்று
இலக்கண வரைமுறைகளை மீறி உச்சரிக்க கற்றுக்கொண்டோம். கண்டோன்மென்ட்
என்பதில் ணகரம் அடுத்துவரும் டகரம் மெலிந்து வரும் என்ற இலக்கண விதியை
மாற்றி ணகரம் அடுத்த டகரத்தை வல் எழுத்தாக உச்சரிக்கின்றோம்.

தமிழ் எழுத்துக்கள்: தூய தமிழில் 247 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
தொல்காப்பியம் வகுத்த நெறிமுறைகளை தவறாத வரையில் 247 எழுத்துக்கள்
நிறைவைத் தந்தன. ஆனால், அவ்விதிகளைத் தளர்த்தத் தொடங்கியதால், ஸ, ஜ, ஷ,
ஹ என்ற சொற்களை ஏற்றோம். அதனால் 299 எழுத்துக்கள் என்றானது. இப்பொழுது
தமிழக அரசு ksha மற்றும் ssa என்பனவற்றிக்கு இரு எழுத்துக்களையும் அதனால்
24 உயிர்மெய் எழுத்துக்களையும் தமிழுடன் இணைத்துள்ளது. இன்று தமிழக
அரசின் ஆணையின்படி தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 325.

இன்று மேலும் ஒரு ஒலி பயன்பாட்டில் உள்ளது. துரித உணவகம் என்பதை விட
fast food என்றே எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ளதை உச்சரிக்கத்
தெரிந்தும் தமிழ் எழுத்துக்களால் எழுத முடியாததால் ஃபகரத்தை
உருவாக்கினர். விளைவாக, உச்சரிக்கும்படியே ஃபாஸ்ட் ஃபூட் (ஃபூடு) என்று
எழுத முடிகிறது. ஆக, 1 +12 என்று 13 எழுத்துக்களும், சேர்ந்து தமிழின்
பயன்பாட்டில், அட்டவணை படுத்தினால், 338 எழுத்துகள் உள்ளன. கூடுதலாக
இத்தனை எழுத்துக்கள் சேர்க்கப்பட்டும் இன்றைய தேவைகளை தமிழில் எழுதி
இயம்ப முடியுமா?

சோனி தொ.கா. பெட்டியின் புது வடிவத்தின் பெயர் - பிரவியா அல்லது ப்ரவியா
என்பதை சரியாக உச்சரிக்க (Bravia) என ஆங்கிலத்தில் அருகே எழுத
வேண்டியிருக்கிறது. . ஸ்டார் மூவிஸில் வந்த படத்தின் பெயர் டீப் ப்ளூ
சீ. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை ஒழுங்காக உச்சரிக்கவும்
முடியவுமில்லை. .ஒரு கடையின் பெயர் பிக் பாய். இதை Big Boy, Big Paai,
Bik Boy, Bik Paai, Pig Boy, Pig Paai, Pik Boy, Pig Paai என்ற
குழப்பத்துடன் படித்து சரியான ஒன்றை கண்டறிய வேண்டிய நிலை இந்திய
மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இதுவே big pot
என்றிருந்தால் 16 விதமான சொற்களில் இருந்து சரியானதை கண்டடுக்க
வேண்டும்.

இதுபோல பல சொற்களும் தொடர்களும் மொழிமாற்றம் இன்றி வருகின்றன.
இச்சிக்கல்களை தமிழ் வழியே எப்படி தீர்ப்பது என்று எண்ணாமல் அந்நேரத்தில்
தனக்கு ஆங்கிலம் போதும் என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு வந்ததால்
இச்சிக்கல் இன்றுவரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், 1) 247 எழுத்துக்களை மட்டுமல்லாமல் 338 எழுத்துக்களைக்
கொண்டும் (மற்ற இந்திய மொழிகளில் 500 ம் மேற்பட்ட எழுத்துக்கள்
இருக்கும்போது) அல்லது பெரும்பாலான அறிவியல் மற்றும் பிறமொழிச் சொற்களை
எழுத முடியாது என்பது தெளிவு. 2) தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் தமிழை
இன்றைய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. 3) உலக மொழியாக இன்றும்
நாளையும் இருக்கப்போவது ஆங்கிலம் மட்டுமே. அறிவியல், தொழில் நுட்பம்,
போன்றவை ஆங்கிலம் சார்ந்ததாகவே உள்ளது - இனியும் இருக்கும். 4) தமிழில்
புதியவை எல்லாம் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே உருவாக்கப்பட்டு
வருகிறது - நீளமான காரணப்பெயர்களை மக்கள் விரும்புவதில்லை.

எனவே, தமிழ் இலக்கணத்தை மீறி தமிழ் மட்டுமே தெரிந்தவரும் பிறமொழிச்
சொற்களை பொதுவாகப் பேசி வரும் நிலையில், ப்ரிபெய்டு, ஹுண்டாய், போன்றவை
பழக்கப்பட்ட நிலையில், உலகமயமாக்களில் ஏராளமானவற்றை அறிந்துவரும்
நிலையில், அறிவியல் மற்றும் நுட்பத்தில் தமிழை முன்னிலைப்படுத்தாத
நிலையில், தமிழ் ஆசிரியர்களுள் பலர் தமிழை தெளிவுற கற்றுக் கொடுக்காத
நிலையிலும், பல தமிழாசிரியர்கள் நன்கு கற்றுக்கொடுத்தும் மாணவர் தெளிவாக
உச்சரிக்கத் தெரியாத நிலையிலும், தமிழை முன்னிலைப்படுத்தாத அமைப்புகள்
(அரசு முதல் அமைப்பு வரை) உள்ள நிலையிலும், தமிழை, பிற மொழியை
ஆங்கிலத்தில் எழுதுவது போல் தமிழில் எழுத முடியும் என்ற நிலை
வரவேண்டுமென்பது அவசியமாகிறது.

புதியனவற்றை, தேவைகளை தானே உருவாக்காத சமூகமாக இருக்கும் நிலையில்,
ஆங்கிலமே என்றும் உயர்ந்திருக்கும் என்ற நிலையில் தமிழர் பிறவற்றை, பிற
செயல்களை, பிற இடங்களை, தெளிவுடன் எழுத, எழுதியதை குழப்பமின்றி படிக்க,
இணையவழி மொழிபெயர்ப்பு (இருவழியிலும்) போன்றவற்றில் சீருடன் செயல்பட
தமிழில் சில எழுத்துக்களை சேர்ப்பது அவசியம்.

18 மெய் எழுத்துக்களுடன் ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகரமும் ஏற்கனவே
பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும், (ங்)க, (ண்)ட, (ந்)த, (ம்)ப
என்பவைகளுக்கான மெயஎழுத்துக்களைச் சேர்த்தால் 27 மெய்யெழுத்துக்களுடன்
தெளிவாகப் பல தமிழல்லாத, தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படாத, சொற்களை
எழுத, படிக்க முடியும்.

தமிழுக்குரிய ஒலிகள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ - க, ச, ட, த, ப, ற - ங், ஞ ந, ண,
ம, ன - ய, ர, ல, வ, ழ, ள
இதில் க, ச, ட, த, ப என்ற எழுத்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளைக்
கொண்டு ஒலிக்கின்றன.
(க்)க –(ங்)க
(ச்)ச - ச –(ஞ்)சு (ஜு)
(ட்)ட – (ண்)ட
(த்)த – (ந்)த
(ப்)ப – (ம்)ப

மேலும் தமிழில் பொதுவாக மூன்று பிறமொழி ஒலிகள் பயனில் உள்ளன.


ஃப
புதிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் உருவத்தோடு இருப்போதோடல்லாமல்,
ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகர எழுத்துக்களையும் தமிழ் வழிப்படுத்தலாம்.
அவ்வாறு இருந்தால் அனைவராலும் எளிதில் படிக்க முடியுமென்பதோடு நம்மொழி
ஒரு ஒழுங்கமைப்புடனும் இருக்கும். மாறாக, டியாக்ரிடிக் குறியீடுகளைப்
பயன்படுத்தினால் கீழ் வரும்படி எழுதப்பட்டு தமிழ் மிக விரைவில் பயனற்று
போகும். எ.கா ப்2ரவியா, டீ2ப்1 ப்2ளூ சீ2. பி2க்2 பா2ய்.

தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் அறிவியலார்கள் வரை இந்த சிக்கல்களை தமிழில்
தீர்வாக்காமல் அத்தேவைகளை தாங்கள் சந்திக்கும் போது அந்நேரங்களில்
ஆங்கிலத்தை தயக்கமின்றி பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் தெரியாதவர்க்கு,
தமிழை பயன்படுத்த விரும்புவோருக்கு தீர்வுகள் முழுமையாக இல்லாத நிலையே
காணப்படுகிறது. ஆங்கிலம் தெரியாத பலகோடி மக்கள் வாழும் தமிழகத்தில்
ஆங்கிலமொழியின், அவ்வெழுத்துக்களின் தாக்கம் இல்லாமலும் தீர்வு காணுதல்
அவசியமாகிறது.

ஆங்கிலத்தில் தமிழ் எழுதப்படும் நிலை
தகர, டகர பயன்பாடு சமஸ்கிருதத்தில் வேறுபட்டு பார்க்கப்படவில்லை
என்பதால் Bharat - Bharath, - Maruti - Maruthi, Anandi- Anandhi -
அவர்களுக்கு வேறு பல எழுத்துக்கள் இருந்ததால், அவற்றை எழுத ஆங்கிலத்தில்
தேவையான எழுத்துக்கள் இல்லை என்பதால் தகரமும் டகரமும், ஆங்கிலத்தில்
எழுதும்போது, ஒன்றாக்கப்பட்டன. தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் தகர, டகர
வேறுபாட்டுடன் எழுத முடியுமென்றாலும் ஒன்றாகவே எழுதப்பட்டன - Tanjore,
Pudukkottai, Dindigul, Gingi, என்று தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்,
திண்டுக்கல்லும்,செஞ்சியும் சிதைக்கப்பட்டன.

விளைவு. அடையாளம் இழந்தோம். தனிநபரின், இடங்களின், ஊர்களின் பொருட்களின்
பெயர்கள் திரிக்கப்பட்டன. மேலும் தமிழர் என்ற அடையாளத்தை விட மற்ற
அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டன. சமயம், இசை, அரசு என்பவற்றிலிருந்து
தமிழ் விலக்கிவைக்கப்பட்டது. இன்று அரசு முதல் அமைப்பினர் வரை என பல
இடங்களில். ஆங்கிலத்திலிருந்து தமிழ் படிக்கப்படுகிறது.

இணையவழி மொழிபெயர்ப்பின் அவசியமும் தமிழில் நடைமுறைப்படுத்த
செய்யவேண்டியனவும்
இன்று இணையம் வாயிலாக உலகம் தொடர்புகளால் பின்னிப்பிணைந்திருக்கிறது.
இத்தொடர்புகள் உறவு, எல்லை மற்றும் மொழி என்பவனவற்றை தாண்டி
நடைபெறுகின்றன. இந்த தொடர்புகள் நாளுக்கு நாள் பன்மடங்கு பெருகும்
என்பது தெளிவு. இணையம் மக்களை எழுத்து, ஒலி மற்றும் காட்சி என பல்வேறு
விதமாகத் தொடர்புகொள்ளச் செய்கிறது. எழுத்து மூலம் தொடர்பு கொள்ளுதல் மிக
எளிமையானதுடன் பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இணையத்தின்
வேகம் அதிகரிக்கவே ஒலி மற்றும் காட்சிகளின் மூலம் தொடர்பு கொள்ளுதல்
சாத்தியமாகிறது. ஆனால் பிறமொழி பேசுவோரிடம் ஒலியின் மூலம் தொடர்பு
கொள்ளுவது இயலாததாகிறது. காட்சிகளின் மூலம் அதாவது முகபாவனை மற்றும்
உடல் அசைவுகளை மட்டுமே கொண்டு ஓரளவிற்கே நாம் பரிமாற்றம் செய்யமுடியம்.
ஒலியும் கூடவே இணையும்போது பரிமாற்றம் சிறப்புறுகிறது. ஆனால் தொடர்பு
கொள்ளுபவர் வேறொரு மொழி பேசுபவராக இருக்கும்பொழுது ஒன்று அவருக்கு
தெரிந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஒலி எழுத்தாக
மாற்றப்பட்டு, மற்றொரு மொழியின் எழுத்துக்களாக மொழிமாற்றம் அடைந்து பிறகு
அந்த மொழியில் ஒலிக்கவேண்டும். எனவே எழுத்துக்களே மொழிமாற்றத்திற்கு
அடிப்படையாக அமைகிறது.

இணையவழி மொழிமாற்றம் என்பது ஆங்கிலத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.
அதாவது சீன மொழியிலிருந்து அரபு மொழிக்கு மாற்றவேண்டுமானால், சீன மொழி
முதலில் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு அதன் பிறகு அரபு மொழியாகிறது. இதே
நிலையிலேயே அரபு மொழி சீனத்திற்கு மாறும்போது ஆங்கிலம் வாயிலாக
நடக்கிறது. ஒருவேளை, ஒருசில சீன மொழிச் வார்த்தைகள் அரபு மொழியில்
இல்லையென்றால் அச்சீன வார்த்தைகள் அரபு மொழி எழுத்துக்களுக்கிடையில்
ஆங்கில எழுத்துக்களில் எழுதப்படும். எனவே இணையவழி மொழிமாற்றத்தில்
ஏற்கும் மொழிளில் தகுந்த சொற்கள் இல்லாத நிலையில் அச்சொற்கள்
ஆங்கிலத்தில் அமையும்.

முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும். தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம். தமிழக அரசு, உத்தமம் போன்றவை திணித்த,
பொதுவாக ஒலிக்கவும் எழுதவும் பயன்படுத்தப்படாத ஒலிகளுக்கான எழுத்துக்களை
நீக்க வேண்டும்.

இது அறிவியல் மற்றும் பல நுட்பங்களை தமிழ் வழியே கற்க பெரிதும்
பயன்படும். ஆங்கில எழுத்துக்களை தனித்தனியே படிக்கத்தெரிந்தும் ஆங்கில
வார்த்தைகளை படிக்க முடியாதோர் மட்டுமல்லாது ஆங்கிலத்தை தமிழில்
எழுதிப்படிப்போருக்கும் பெரிதும் பயன்படும். பல்வேறு மொழிகளை
ஆங்கிலத்தின் துணையின்றி கற்க முடியும்.

இவ்வாறு செய்தால் எங்கும், எதிலும், எவரும் எளிதான முறையில் பலவற்றை
தமிழ் மூலம் கற்று, கண்டு, செய்து, அறிந்து செயல்படுத்தலாம்.

Govindasamy Thirunavukkarasu

unread,
Jan 7, 2011, 2:25:38 PM1/7/11
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,

2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
த. ஞான பாரதி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை

 

 முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம்.   எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை  தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும்.  

சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக  புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான் இருக்க முடியும்.

 
தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும்  தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள் பொருட்டன்று.


அன்புடன்
 
அரசு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


ஞானபாரதி

unread,
Jan 8, 2011, 1:23:25 PM1/8/11
to தமிழ் மன்றம்
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
பிறமொழிகள் மற்றும் அறிவியல் சொற்கள் ஆகியவற்றிற்கும் தான். டால்ஃபின்
என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம்
வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை.
எத்தனை எத்தனை உயிரினங்கள் உலகில். நாம் பெயரிட்டு அழைப்பது ஆயிரங்களில்
தான் இருக்கும். ஆனால் கண்டறியப்பட்ட அத்தனை உயிரினங்களுக்கும் உள்ளூர்
பெயர்கள் பல இருக்குமென்றாலும் பொதுவான ஒரு அறிவியல் பெயரும்
இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?
நம் அறிவு பரந்திருக்கிறது அதை நம்மால் எழுத முடியவில்லை. பொதுமக்கள்
கூட தாம் ஒலிப்பதை தெளிவுற எழுதமுடியாவண்ணம் இருக்கின்றனர்.

தமிழல்லாதவரும் தமிழை பிடிக்காதவரும் கடந்த 700 ஆண்டுகளாக, சில
பத்தாண்டுகளைத் தவிர, ஆட்சியில் இருந்தனர், இருக்கின்றனர். காலங்கள்
மாறிவிட்டன. மீளமுடியா நிலைக்கு உலகின் பழமொழிகளும் வந்துவிட்டன. உலகை
ஆளும் என்றிருந்த மொழிகள் இன்று அடையாளங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அல்லது தமிழ் ஆர்வலர் தலைமையில்
இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் என்ற காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கல்
என்பதை பிடித்தோ பிடிக்காமலோ ஏற்றுக்கொண்டு விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து வைத்தது மூடத்தனம். இரண்டு செயல்கள்
நடந்தன. எதிரியால் எளிதாக மக்களைக் கொல்ல/நசுக்க முடிந்தது -
கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களே பிழைத்தார்கள். நான், மலையாளத்தை நம்
கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.

தகவமைத்துக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலகை நமதாக்க வேண்டும் => மேலெழுந்து நிகராக வரவேண்டும் => ஏற்றுக்கொள்ள
வேண்டும் => அழிந்துபோக வேண்டும்
என்பதே நியதி.

பாரதி

On Jan 8, 12:25 am, Govindasamy Thirunavukkarasu


<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புடையீர்,
>

> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
> > ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> > த. ஞான பாரதி
> > மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> >  முடிவுரை
> > தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
> > நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
> > நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம்.   எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
> > (ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை  தமிழ்
> > ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
> > தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
> > எழுத்துரு செய்தல் வேண்டும்.
>

> *சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக


> ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத
> உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக
> புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு
> வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான்

> இருக்க முடியும்.*


>
> > தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
> > செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
> > தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
> > செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
> > மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
>

> *அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள


> வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும்  தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு
> என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள்
> பொருட்டன்று.
>

> அன்புடன்*
> *அரசு*


>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 2:48:20 PM1/8/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள ஞானபாரதி,
 
தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
ஆகாது. பின்னர் விரித்துக் கூற முடியும்.
டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
எந்தக் குறையும் இல்லை. ஆங்கில எழுத்துகளிலேயே
எழுதி Dolphin என்று எழுதி ஒலித்தாலும் ஆங்கிலேயன்
புரிந்துகொள்ள மாட்டான். பிபிசி தொலைக்காட்சிகளைப்
பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
தமிழில் தேனீர் காப்பி என்பதில் வரும் காப்பிதான் coffee
என்னும் ஒலிப்பு வர வேண்டியதில்லை. இதே சொல்லை
ஒவ்வொரு மொழியாளனும் ஒவ்வொரு விதமாகத்தான்
ஒலிக்கின்றான். முதலில் இந்தத் தாழ்வு உளப்பான்மை
மாற வேண்டும் (இது தாழ்வு உளப்பான்மை அல்ல
என்று எதிர்க்கருத்தாடலாம்). Exonym என்றால் என்று
தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எல்லா
மொழிகளும் இல்லாவிட்டாலும் ஒரு 10-15 உலக
மொழிகளிலாவது எப்படிப் பல ஒலிகளும் சொற்களும்
வழங்குகின்றன என்று அறிதல் வேண்டும்.
 
தமிழில் ஒரேயொரு புதிய எழுத்தும் தேவை
திரிபுகள் வரும்தான் ஆனால் அது தமிழில்
மட்டும் நிகழ்வதில்லை.
 
டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
(taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
என்ன தவறு? எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
எழுத்தும் இல்லாமல் டா'ல்ஃவின் எனலாம்.
ஆனால் இப்படி மெல்லொலிக்கு எவ்வகையில்
தனிக் குறிப்பு தந்தாலும் தமிழ் முறை சிதையும்.
தமிழ் ஒலிப்பொழுக்கம் சீர்குலையும்.
 
//ஒரு அறிவியல் பெயரும்

இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?//
ஐபீசுக்கசு ரோசாசயனன்சு என்று கூறலாம் என்று
ஆணித்தரமாகக் கூறமுடியும். ஆனால் அடிப்படையில்
நேர்மையுடன் அணுகாதவர்கள் வேண்டுமென்றே
aaaybeeesoooookkaaasoooo என்று பழிப்பர். அது அவர்கள்
பழித்து புரட்டும் உத்தி என்று எண்ணி விட வேண்டியதுதான்.
 
நீங்கள் கூறும் ஹைபிஸ்கஸ் என்பதை Hybisgus ஆ Hibyskus ஆ
சரியான சொல்லான Hibiscus ஆ என்று எப்படி அறிவது.
ஏதோ ஓரிடத்தில் ஒப்புமை நிறுத்தியே ஈடானவை என்று
கொள்ளப்போகிறோம். ஆகவே நமக்கு நம் மொழியின் இயல்பின்படி
ஒலிக்க எது கூடியமட்டிலும் இணக்கமாக உள்ளதோ
அப்படி இருந்தால் போதுமானது. மேற்கொண்டு அதைப்பற்றி
அறிவதில் கவன செலுத்துவோம். பெயரிலேயே நிற்கவேண்டாம்.
இதே ஐபீசுக்கசை இத்தாலிய
மொழியில் அவர்கள் L'Ibisco என்றும், அச்சொல் வந்த மூல
மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
விதமாகக் கூறுகின்றனர். அப்படியே முதல் ஒலி
காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
ஃகைபிசிக்கசு என்று இகரம் இட்டும் எழுதலாம்.
எனவே பற்பல வழிகள் உள்ளன.
 
தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
அலச முடியும். இதில் சிக்கனம் உள்ளது (இது அறிவியலில்
போற்றப்படும் பண்பு), எளிமை இருக்கின்றது, ஒண்மை
(அறிவுடைமை) இருக்கின்றது. "சரியான" ஒலி என்று
அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை. அது ஒவ்வொரு
மொழியில் ஒவ்வொருவாறு இருக்கும், ஒரே மொழியுள்ளும்
இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.
எனவே தேவை இல்லாமல் நாம் அலட்டிக் கொள்கிறோம்.
செய்தியை விரிப்பதை விட்டுவிட்டு, அற்பங்களில்
அல்லல் படுகின்றோம். இந்த அற்பங்களுக்காக நம் மொழியையே
குலைக்க முற்படுகின்றோம்.
 
அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள். கல்வெடுகளில்
உள்ள மொழி பொதுமக்கள் மொழி என்பது ஏலாது
என்பது என் கருத்து.
அரசருக்கு நெருக்கமான, தமிழைப் போற்றாத
ஏதோ ஒரு சில சிறுபான்மையர்களின் மொழி வழக்குகள்
விரவிய மொழி நடை என வேண்டுமானால் கொள்ளலாம்.
நாம் பரம்பரையாக பெறிருக்கும் தமிழ் பொது மக்களிடம்
இருந்து வந்த தமிழைத் தலையாகக் கொண்டது.
தமிழில் மட்டும் அல்ல வட இந்தியாவிலும் பொதுமக்கள்
மொழி வேறு, சமசுக்கிருதக் கலப்பு நிறைந்த
"மதம் சார்ந்தவர்கள்" மொழி வேறு.
இதையெல்லாம் நடுநின்று உண்மையா என்று அலச
வேண்டும். என் கணிப்புகள் பிழையெனில் திருத்திக்கொள்ளக்
கடவேன், ஆனால் அறிவியல்-கலைகள் சார்ந்த எதிலும்
100% தமிழழெழுத்துகளை மட்டுமே கொண்டு அழகாக
எல்லாவற்றையும் எழுதிப் படித்து உட்கொள்ளலாம்.
கிரந்தம் அறவே  வேண்டியதில்லை.
 
எளிமையான ஒண்மையான தமிழோடு வாழ்ந்தால்
வாழ்வோம் என்பது மட்டுமல்ல
சிறப்போடு ஓங்கி உயர்ந்து வாழ்வோம். எளிமையே
வலிமை - இது ஒரு முரண்தொடர்போல் இருக்கும்.
எளிமையே ஒண்மை. மூச்சு வீணாகாமல் சிக்கனமாக
இருப்பதே அறிவுடைமை. ஒலிநுட்பங்களை நன்குணர்ந்து
அவற்றின் இயைபு இணக்கங்களை நன்குணர்ந்து அறிந்து
அமைக்கப் பெற்றுள்ள தமிழ் மொழி வாழ்மொழி. குறைந்தது
2500 ஆண்டுகளாவது சீரோடும் சிறப்போடும் கவினோடும்
உயிர்ப்போடும் வாழ்மொழி. இன்றைக்கும் வரும்
நூற்றாண்டுகளுக்கும் நமக்கு உகந்த மொழி.
 
அன்புடன்
செல்வா
 
 
 
 
2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

அன்புடன் புகாரி

unread,
Jan 8, 2011, 3:34:04 PM1/8/11
to tamil...@googlegroups.com
இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா? என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!

2011/1/8 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>--
image
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 5:43:58 PM1/8/11
to tamil...@googlegroups.com


2011/1/8 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா? என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!
 
 
அன்புள்ள புகாரி,
 
ஆய்த எழுத்து தொன்றுதொட்டு வருவது. ழ, ள, ற, ன என்பன கூட
பின்னால் சேர்த்தவை என்ற கருத்தும் சிலர் சொல்வர். வகரமே
கடையெழுத்து என்பர்
இதெல்லாமும் தமிழ் அகரவைசையில் அவ்வெழுத்துகள்
இருக்கும் அமைப்பிடத்தைப் பொருத்தது அவரவர்
கொள்ளும் "கருத்து". தமிழ் என்று அறியும் அம்மொழியின்
ஏறத்தாழ 2000-2500 ஆண்டுகள்
வரலாற்றில் தொன்றுதொட்டு வருவன இவ்வெழுத்துகள்.
அதற்கு முன் அம்மொழி, அம்மொழியாக வாழ்ந்தது
சில நூற்றாண்டுகளாகவா அல்லது பல நூற்றாண்டுகளாகவா
என்பதெல்லாம் "உய்த்தறிவது". அல்லது அந்தமான்
தீவில் அண்மையில் 50,000,-70,000 ஆண்டுகளாய்
வாழ்ந்து முற்றுமாய் அற்றுப்போன "போ" மொழி போல
பல வாழ்ந்திரா விட்டாலும் தமிழ் ஒரு மொழியாக
4,000-5,000 ஆண்டுக்ளேனும் வாழ்ந்திருக்குமா என்பதெல்லாமும்
வெறும் கற்பனையே (உறுதி பயக்கும் சான்றுகள்
கிட்டாதால்).
 
என் கருத்து தொன்மையைப் பற்றியதே அல்ல, புகாரி.
தமிழ்மொழி கடந்த 500 ஆண்டுகளில்தான்
தோன்றிய மொழி,  அண்மைக் காலத்திய
மொழி எனினும், அதின்
நிறைவும் அறிவார்ந்த உள்ளொழுக்கமும்,
ஒலிநுட்புணர்வும்,  உள் இயைவும்
இலக்கணச் செழுமையும், சொல்வளமும்
அறிவியல் வளர்ச்சி முதல்
பலகலை வளர்ச்சிக்கு உகந்தது.
பிறமொழிகளுக்கும் அவர்கள்
மொழிக்கான இப்படியான நுட்புயர்வுகள்,
பெருமைகள் இருகக்கலாம்,  அதல்ல
இங்கு பேச்சு.
ஏறத்தாழ பல மொழிகளுக்கு
இருக்கும் தன்னுரிமை தமிழுக்கும் இருக்க வேண்டும்
என்பதும், அப்படியே பிறமொழிகளுக்குத்
தன்னுரிமை இல்லாவினும் தமிழ் தன்
தன்னுரிமையைக் காப்பது கடமை.
 
தமிழில் புதிய கருத்துகளை, கலை, அறிவுச் செல்வங்களை,
பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கியேனும்
எழுதுவது வேறு, ஆனால் அதன் டி.என்.ஏ-வையே
(மரபணுவையே) மாற்ற வேண்டும் என்பது வேறு.
புதியதெல்லாம் புதுமை அல்ல. எது புதுமை, எது
பயன் தரும் (உள்ளழியா பயன் தரும்) என்று
அறிந்து ஏற்றல் வேண்டும். பிறமொழிச் சொற்களைத்
தமிழில் எப்படி வழங்க வேண்டும் என்னும் செம்முறை
தமிழில் உள்ளது.  அதன் அறிவுடைமையும், காலத்தால்
அத்தனை முன்னமே எடுத்து கூறிய முன்மையும்
எனக்கு மிக வியப்பாக உள்ளது. 
 
இவற்றை  ஏற்பாரும் இருப்பர் தூற்றுவாரும்
இருப்பர்.  அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
தமிழின் ஒண்மை என்றும் ஒளிரும். என்றும் இனிக்கும்.
 
அன்புடன்
செல்வா
 
 
 
 
 
 
 
நான் தொன்மை கிரந்தத்தை வேண்டாம் எனக் கூறவில்லை.
கிரந்தம் கலந்துதான்

N. Ganesan

unread,
Jan 8, 2011, 5:48:01 PM1/8/11
to தமிழ் மன்றம்

On Jan 8, 2:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா?

> என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!...
>

கவிஞரே,

ஆய்த எழுத்து பழையது. ஆனால் ஒரு எழுத்தைத் தொடர்ந்துதான் வரும்.

ஃபரூக், ஃபாத்திமா, என்று எழுத புதிதாய் விதி செய்தோம்
- மிக அண்மைக் காலத்தில்.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2011, 6:07:04 PM1/8/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++


2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Jan 8, 2011, 8:42:44 PM1/8/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

//பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?//

ஞானசம்பந்தன், அழகப்பன், வள்ளி, யாழினி, கண்ணப்பன் ஆகியவும்
பெயர்ச்சொற்கள்தாமே. அல்லவா?
வேற்றுமொழிப் பெயர்ச்சொல்லுக்காக தமிழை
அறுப்பதா? 
 
2011/1/8 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
 
டாட்டா, இட்டாட்டா, உட்டாட்டா எல்லாம் சரிதான்.
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
உரூபாய் போதுமே. ரூபாய் என்றும் எழுதலாம், பிழை என்று நினைப்போர்
உரூபாய், உருபா என்று எழுதலாம்.
 
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
அரம்பை என்று கேள்விப்பட்டதில்லையா?
 
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே
என்று வரும் (அபிராமி அந்தாதி).
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++
 
 
அறிவியல், மதம், பெயர்ச்சொல், வணிகச் சொல் என்று
எதையாவது சொல்லி தமிழைக் குலைக்க வேண்டும்
அதுதானே குறி? அல்லவா?
 
மது, திலக் என்று தங்கள்
மொழியில் இருக்கும் ஒலிகளைக் கொண்டே வழங்கும் 
சொற்களைத் தெளிவாக ஆங்கிலத்தில் பலுக்க முடியாது.
ஏனெனில் ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பின்
படியேதான் ஒலிக்கும். Jack என்பதை பிரான்சிய மொழியில்
எப்படி ஒலிப்பர்? இடாய்ச்சு மொழியில் (செருமானிய மொழியில்)
எப்படி ஒலிப்பர், ஏறத்தாழ 500 மில்லின் மக்கள் பேசும்
எசுப்பானியத்தில் எப்படி ஒலிப்பர்? ஆங்கிலத்தோடு
(மொழி அடிபப்டையில்) நெருக்கம் கூடிய அவர்களே ஒலிக்க
இயலாது. நாம் சாக் (chaak என்று ஒலிப்பு) ஒலித்தால்
ஆ-ஊ என்று குதிப்பதா? ஏன் சியார்ச் என்றால் என்ன தவறு
George என்பதை மேலே கூறிய மொழியர் எப்படி ஒலிப்பர்?
சியார்ச் புழ்சு என்றால் சிரிப்பு வந்தால் சிரித்துக்கொள்ளுங்கள்,
அந்த மகிழ்ச்சியால் உங்கள் ஆயுள் கூடினால், அதுவே தமிழ்
வழக்கால் அவர் செய்த புண்ணியமாகும் :)
 
தமிழில் டாடா என்றால் TaaDaa என்று ஒலிக்கும் என்று தெரிந்தும்,
டாட்டா என்று எழுதினால் Taataa என்று ஒலிக்கும் என்று அறிந்தும்
வேண்டுமென்றே தமிழ் ஒலிப்பைக் கெடுத்து மகிழும் மக்களிடம்
என்ன சொன்னாலும் எடுபடாது. அதனால் கவலைப்படவும் தேவை
இல்லை ஏனெனில் அறிவடிப்படையிலோ, அறநீர்மையுடனோ,
தமிழின் நலத்தையும் உரிமையையும் போற்றிப்பேணும் விதமாக
இவர்கள் உரையாட மாட்டார்கள்.
 
இட்டாட்டா அல்லது உட்டாட்டா என்றாலும் வழங்கு
மொழியின் முறைப்படி சரியே. திரிபுதான், ஆனால் அது
போன்ற திரிபுகள் எல்லா மொழியிலும் நிகழ்வதே. ஒலிப்பின்
படி டாட்டா என்பது போதுமான அளவு சரியே. அரம்பை,
இராமன், வீமன்  என்பது போல இட்டாட்டா. 
 
 
செல்வா 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2011, 9:19:54 PM1/8/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே
 
அப்பன் வைத்த மாடசாமி என்னும் பெயரை நெடுஞ்சுழியன் என்று  மாற்றி  வைத்துக் கொண்டு தமிழை வளர்ப்பதாயும் பாதுகாப்பதாகவும்  நாடகம்  ஆடுகிறார். 
 
பெரியார் ராமசாமி என்றுதான் தன்னைக் கூறிக் கொண்டார்.
 
தமிழில் பலருக்கு நான்கு வரிகள் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++
2011/1/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 6:07 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///
 
 
பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ?  அல்லது இடாடா தொழிற்சாலையா ?  அல்லது அடாடா தொழிற்சாலையா ?
 
பெயர்ச் சொல் : ரூபாய் -  உரூபாயா அல்லது இரூபாயா ?  அல்லது அரூபாயா ?  
 
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
 
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
ராஜேந்திரன்
 இதை ஆங்கிலத்தில் எழுதி காட்டுங்க ஐயா
இல்லை தமிழ் என்பதையாவது?
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

naa.g...@gmail.com

unread,
Jan 9, 2011, 12:08:04 AM1/9/11
to அன்புடன், tamil...@googlegroups.com

On Jan 8, 8:19 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *வேந்தரே*
> **
> *அப்பன் வைத்த மாடசாமி என்னும் பெயரை நெடுஞ்சுழியன் என்று  மாற்றி  வைத்துக்
> கொண்டு தமிழை வளர்ப்பதாயும் பாதுகாப்பதாகவும்  நாடகம்  ஆடுகிறார். *
> **
> *பெரியார் ராமசாமி என்றுதான் தன்னைக் கூறிக் கொண்டார்.*
> **
> *தமிழில் பலருக்கு நான்கு வரிகள் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.
>  *
> **
> *ஜெயபாரதன்.*
>

ஜெயபாரதன் ஐயா,

நான் இன்று படித்த வலையிடுகை. திமுக ஆட்சி தமிழ்க்
கல்வியைக் காமெடி ஆக்கியது பற்றியது.

http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_08.html

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 9:45:04 AM1/9/11
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.  
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ?  எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !
 
 
அட தேவரே
 
என் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 9:54:51 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ரஷ்ய மேதை டால்ஸ்டாயை எப்படிக் கோமாளித்தனமாக  எழுதுவது : 
 
உருசிய மேதை உடால்சுடாய்,   அல்லது
 
இரசிய மேதை இடால்சுடாய்.
 
 
ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++++++
2011/1/8 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 10:01:14 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
நீங்கள் சொல்லுங்கள் தமிழுக்கு அது இகழ்ச்சியா?!!
இப்படியெல்லாமா?!!! அப்போ உங்கள் "கோமாளித்தனம்"
"தாலிபானியம்", "போக்கிரித்தனம்" எல்லாம் தமிழுக்கு மட்டும்
அல்லவா? தமிழ் என்பதே இகழ்ச்சியோ?!!
 
 
மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.  
 
ஏன் இது தமிழுக்கும்தானே? நீங்கள் எத்தனை பிறழ்வாக
சிந்திக்கின்றீர்கள் என்பது இந்த சிறு மடலில் உள்ள சில
வரிகளே காட்டும்!!
 
செல்வா
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ?  எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !
 
 
அட தேவரே
 
என் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
 
தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 10:19:10 AM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

ரஷ்ய மேதை டால்ஸ்டாயை எப்படிக் கோமாளித்தனமாக  எழுதுவது : 
 
உருசிய மேதை உடால்சுடாய்,   அல்லது
 
இரசிய மேதை இடால்சுடாய்.
 
 
உருசிய மேதை தால்சிட்டாய் :) அல்லது உருசிய மேதை டால்சிட்டாய்.
உண்மையில் அவருடைய பெயர் Лев Никола́евич Толсто́й இதை
ஆங்கிலேயன் Leo Tolstoy என்கிறான். ல்யெவ் (லியெவ்)  தொல்ஃச்தொய்
என்பது இன்னும் சற்று நெருக்கமான ஒலிப்பு (மிகு துல்லியம் அல்ல).
முதல் மொழியைப் பின்பற்றி தமிழில் எழுத வேண்டும் எனில்
லியெவ் தொல்சிட்டொய் என்று எழுதலாம். ஆங்கில ஒலிப்பைப்
பின்பற்றி எழுதினால் லியோ டால்சிட்டாய் என்று எழுதலாம்.
தமிழில்  இலியோ தால்சிட்டாய் என்றும் எழுதலாம்.
 
தமிழில் எழுதும் பொழுது மட்டும் நீங்கள் இன்று சொன்ன
"பொன் மொழி" ப்பார்வை கிடையதா ?
 
//மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.   //
 
உங்கள் பேச்சில் தமிழ்க்கண்ணுக்கு சுண்ணாம்பு
பிறமொழிக் கண்ணுக்கு வெண்ணெய் என்னும்
உயர் "பண்"பைப் பற்றி நல்லதாக என்ன சொல்ல முடியும்?!!
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 12:53:53 PM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
கனடாவில் டல்ஹௌஸி பல்கலைக் கழகம் உள்ளது.  அதைத்  தமிழில்  உடல்கவ்சி என்று கொலை செய்வோமா ?  அல்லது தல்கவ்சி என்று   சொல்வோமா   ?   
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++

2011/1/9 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

ஞானபாரதி

unread,
Jan 9, 2011, 1:20:00 PM1/9/11
to தமிழ் மன்றம்
பேரா. செல்வா,

> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.

உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.

> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.

யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?

> பிபிசி தொலைக்காட்சிகளைப்
> பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
> ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.

அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.

> டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> என்ன தவறு?

யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?

> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?

தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே! எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.

> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.

தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!

> இதே ஐபீசுக்கசை இத்தாலிய

> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல


> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.

நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.

> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.

புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?

> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.

ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.

> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.

இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!

> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.

கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு
மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.

> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.

இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.

நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும்
என்றுதான் நான் கூறிவருகிறேன்.

தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்கு
பதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து
கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.

மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண
வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன். வீட்டிலும்
அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
அன்புடன்
பாரதி

On Jan 9, 12:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:

> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல

> நாம் பரம்பரையாக ...
>
> read more »

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 1:28:03 PM1/9/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
கனடாவில் டல்ஹௌஸி பல்கலைக் கழகம் உள்ளது.  அதைத்  தமிழில்  உடல்கவ்சி என்று கொலை செய்வோமா ?  அல்லது தல்கவ்சி என்று   சொல்வோமா   ?   
 
 
ஜெயபாரதன்.
 
 
டல்கௌசி, டல்ஃகௌசி, டல்கவ்சி, டல்ஃகவ்சி, இடல்கௌசி, இடல்ஃகௌசி, தல்ஃகௌசி என்று எத்தனையோ வகையில் சொல்லலாம்.
 
மெல்லொலி டகரம் முதன்மை எனில் இடல்கவ்சி அல்லது  இடல்கௌசி எனலாம்.
 
இடையே வரும் காற்றொலி ககரம் முகனை என்றால் டல்ஃகௌசி
அல்லது தல்ஃகௌசி எனலாம்.
 
இரண்டும் முகனை என்றால் இடல்ஃகௌசி எனலாம். இது மிக நெருக்கமான
ஒலிப்பு. முதலில் இகரம் வருவது புறப்பெயரை (exonym) உள்வாங்கும்
முறைப்படி ஏற்கத்தகக்து. இலண்டன் என்பது போல. இதே இலண்டன் என்னும் பெயர்ச்சொல்லை ஐரோப்பிய மொழிகளே எப்படி தங்கள் மொழிக்கு
ஏற்ப மாற்றியும் பின்னொட்டு இட்டும் எழுதுகிறார்கள் என்று எடுத்துக்காட்டியுள்ளேன்.
 
உங்கள் கேள்விகளுக்கு விடை பகர்ந்தது மாதிரி, நான் கேட்ட் கேள்விகள்
ஒரு 4-5 உக்காவது நேர்மையுடன், அறிவுநாணயத்துடன் விடை பகருங்கள்,
முடிந்தால்.  என் கேள்விகளுக்கு விடை பகராவிடினும் வேந்தன் அவர்கள்
கேள்விகளுக்காவது விடை பகருங்களேன்!
 
பற்பல மொழிகளுக்கு இருக்கும் உரிமை தமிழுக்கு இருக்கக்கூடாதா?
உங்கள் கருத்து செல்லாக் கருத்து! செல்லாமையை உணரவோ,
அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளவோ மறுக்கின்றீர். அது உங்கள்
விருப்பம் :)
 
செல்வா

ஞானபாரதி

unread,
Jan 9, 2011, 1:28:14 PM1/9/11
to தமிழ் மன்றம்

> பிறமொழிச் சொற்களைத்
> தமிழில் எப்படி வழங்க வேண்டும் என்னும் செம்முறை
> தமிழில் உள்ளது.  அதன் அறிவுடைமையும், காலத்தால்
> அத்தனை முன்னமே எடுத்து கூறிய முன்மையும்
> எனக்கு மிக வியப்பாக உள்ளது.

பாரதியார் காலம் வரை அதை கடைபிடித்தோம். விடுதலை பெற்றதும் அதை
விட்டுவிட்டோமே !!!

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 1:39:10 PM1/9/11
to tamil...@googlegroups.com


2011/1/9 ஞானபாரதி <dgbha...@gmail.com>
இல்லை, பாரதியும் அவருக்கு முன்னரும் பலர் உரைநடையில்
கைவிட்டுவிட்டு பிறந்து எழுதியுள்ளனர் ஆனால் உயர்நடை
என்று வரும்பொழுது ஓரளவுக்கோ முழுவதுமோ தமிழ் முறையைக்
கைக்கொண்டுள்ளனர். ஆனால் இவையெல்லாம் நடுநின்று தீர அலச
வேண்டியவை.
 
சிலரோ பலரோ விட்டுவிட்டார்கள் என்பதற்காக
எல்லோரும் விட்டுவிட்டார்கள் என்றாகாதே.
சொல்லப்போனால் நானும் ஹைட்ரஜன் என்றுதான்
எழுதினேன், ஆனால் ஐதரசன் என்பதன் எளிமையும் இயல்பும், உலகில் பலரும் பலவிதமாகக் கூறுவதை அறிந்தும் நேர்மையுடன் என்னைத் திருத்திக்கொண்டேன்.
 
மூச்சுச் சிக்கனமும், நுட்பமாய்ப் பேரினிமை
ஒளிர்வதையும் உள்ளுணர்கின்றேன். தமிழின் சிறப்பு அதன் எளிமை,
இனிமை, ஆழ்ந்த சொல்வளம், பொருள்கோண்மரபு,
ஒலிநுட்பம் நுணுகியுணர்ந்து முறைமைகள் வகுத்தது முதலாவை.
 
அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Jan 9, 2011, 3:12:47 PM1/9/11
to tamil...@googlegroups.com
2011/1/9 ஞானபாரதி <dgbha...@gmail.com>
பேரா. செல்வா,


> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.
உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.
 
சொற்களைக் கடன்வாங்குவதும், புதிய சொற்களை ஆக்கிக்கொள்வதும்
மாற்றம் ஆகாதா? ஏன் J என்ற ஆங்கில ஒலிக்கு நேரான ஒலிப்பை
இடாய்ச்சு மொழி (செருமானிய மொழி), எசுப்பானியம், பிரான்சியம்
ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்கள் Japan என்பதை ஆங்கிலேயன்
சொல்லக் கேட்டிருக்கவில்லையா?  உலகில் பல மொழிகளைப்
பேசும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் J என்னும்
ஒலியை ஒலிப்பதில்லை. மாற்றம் என்பதற்காகவே மாறுவது தேவையா
அலல்து மாற்றம் என்பதெல்லாம் வளர்ச்சி என்னும் மயக்கமா?
தமிழில் ஏராளமான மாற்றங்கள் நிகழந்துகொண்டே இருக்கின்றன.
மரபணுவை (டி.என்.ஏ) மாற்றி குரங்கானால்தான் (அதாவது
வேறு இனமாக) மாற்றம் என்று கொள்ள முடியுமா? தமிழ் தன்
வரலாற்றில் (2500 ஆண்டுகள் வரலாற்றில் பற்பல
மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. தமிழ் எழுத்துகள் 30 + ஆய்தம்+
குற்றியலுகரம் + குற்றியலிகரம். இப்பொழுதும் Cap என்பதை
கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
டா'ல்ஃவின் என்று எழுதி அதே ஒலிப்பைக் காட்டலாம். இதுவும் தேவை
என்று சொல்ல்வில்லை. தேவை என்று வாதிடுவது அறியாமை
(ஏன் அறியாமை என்றால், அதே ஒலிப்பில்தான் இருக்க வேண்டும்
என்று எந்தக்கட்டாயமும் இல்லை. அதே போல உள்வாங்கும் மொழியோடு இயைந்து செல்லும் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உணரரது இருப்பது; இன்னும் பல காரணங்களும் உண்டு)
 
 

> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.
 
 
யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
 
பிற மொழியாளர்கள்;
 
Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin, Deilf
Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit
 
முதல் ஒலியும், பின்னொட்டு ஒலியும், இடை ஒலியும்
எல்லாமும் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக
இருப்பதைப் பாருங்கள். ஆங்கிலத்திலேயே முதல்
அசையை Da, Do, Dow என்பது போல பலர் பலவிதமாக ஒலிப்பர்.


> பிபிசி தொலைக்காட்சிகளைப்
> பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே

> ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
 
அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.

 
அல்ல!!   இந்தியர்கள் (இதே போல பிற பல நாட்டவர்கள்),
ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கே கனடாவில் கீழே
எழுதிக்காட்டுவர். அவர்கள் பேசும் ஆங்கிலம் இவர்களுக்குப்
புரியாது!! அப்ப்ழி இருக்கையிலே தமிழிலே நாம் பேசும் பொழுது
ஏன் அத்தனை ஒலிப்புத்துல்லியம் பார்க்க வேண்டும்?
இது ஒரு தாழ்வுமனப்பான்மை அல்லது அடிமை உளப்பான்மை.
இயல்பாய் கமலம் போன்ற சொற்கள் இயைந்து வந்தால் சரிதான்.
 
 

> டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> என்ன தவறு?
யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
 
சரியான ஒலிப்பைக் கொடுத்துள்ளேன். பகரமோ பிற வல்லின
எழுத்தோ வல்லொலியாக ஒலிக்கும் இடம் இரண்டே
1) சொல்லின் முதல் எழுத்தாக வருதல்
2) அந்த வல்லின எழுத்துக்கு முன் வல்லின ஒற்று (புள்ளி வைத்த
எழுத்து) வருதல்.
 
மற்ற இடங்களில் வல்லின எழுத்து மெலிந்தே வரும்.
பாடு என்னும் சொல்லில் வரும் டு மெலிந்தே ஒலிக்கும்.
ல் என்பது வல்லின ஒற்று அல்ல ஆகவே அடுத்து வரும்
பகரம் மெலிந்தே ஒலிக்கும். பல்கிப் பெருத்தது என்பதில் வரும்
-ல்கி என்பது lgi என்றுதான் ஒலிக்கும். கல்கி என்பது kalgi
என்றுதான் ஒலிக்கும். எப்படி பிறமொழிச் சொற்கள் தமிழின்
சீரொழுக்கமான ஒலிப்பு விதிகளை சிதைக்கின்றது என்பதற்கு
கல்கி கிழமை இதழ் (வார இதழ்) -இன் பெயரே போதுமான
சாட்சி. இங்கு கிரந்தம் எல்லாமும் கூடக் கிடையாது.
உல்குபொருள் = ulguporuL. , வெல்கின்றான் = velginRaan.
ல் என்னும் எழுத்துக்கு அடுத்து வரும் கு, கி என்னும் வல்லினங்கள்
மெலிந்தே ஒலிக்கும்.
 

> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
 
தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே!  எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.
 
ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கேட்ககூடும். சொல்ல்வும்
கூடும்.
எப்படியாயினும் வழங்குமொழியின்
இயல்பின்படியேதான் ஒலிக்கும் வழங்கும் மொழியில்
இயல்புக்கு ஏற்றவாறு மாறியே வழங்கும்.
 
 

> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.
தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!

> இதே ஐபீசுக்கசை இத்தாலிய
> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல
> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.
 
நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.
 
நான் கூறுவதும் அறிவியற் பெயரே. அறிவியற் சொல்லை
தமிழ் போன்ற ஒலியெழுத்துகளால் குறிப்பிடப்பெறும் பொழுது
தமிழ் வழக்கின் படிதான் வழங்க முடியும். எழுத்துக்கோவை வேறு
அது தரும் ஒலிப்பு வேறு. அறிவியற்பெயரை, உரோமன் எழுத்துகளிலேயே
தரும் ஐரோப்பிய மொழிகள் வெவ்வேறாகத் தருவர். இலத்தீனிலேயே
பிறைக்குறிகளுக்குள் தரும் வழக்கமும் உண்டு. இதே
ஐபீசுக்கசு இடாய்ச்சு மொழியில் (அறிவியற்பெயராக Hibiskus என்று
k இட்டுக் குறிக்கிறார்கள், இலத்தீன் பெயர்களை பிறைக்குரிகளுக்குல்
கொடுப்பதையும் பார்க்கவும் (http://de.wikipedia.org/wiki/Hibiskus)
அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது
(எழுத்துக் கோவையில் சீர்மை இருக்கலாம்). அறிவியற்பெயரையும்
இக்காலத்தில் அவரவர் அவரவர் மொழியில் வழங்குகின்றனர் (முன் போல்
இல்லை.
 

> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?

> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.
 
ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.
 
கேட்போம் :)
 

> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.
 
இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!
 
அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
இராசேந்திரன் என்பது இன்னும் அழகு.  எளிமையைப் போற்றிப்
பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
உணரலாம்.
 
 

> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
 
கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு

மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.

அடக் கடவுளே!! அறிவியலுக்குத்தான் இந்த எளிமை, தமிழ் முறை
மிக முக்கியமானது. அறிவியலிலே வரையறை செய்து சீருடன்
உரையாடும் அறிவுத்துறை. அங்குதான் மிக எளிது. நான் இருப்பதும்
அறிவியல் சார்ந்த பொறியியல். எங்கும் எனக்கு இடர் இருந்ததில்லை.
வருங்கால தொழில்நுட்பத்தைக் கணக்கில் கொண்டால் உடனுக்குடன்
எந்தத் தமிழ்ச்சொல்லுக்கும் (அறிவியலாகட்டும் பிற துறைகளாகட்டும்),
ஈடான பன்மொழி பெயர்ப்புகளைத் தரும்.
அவை மில்லியன் சொற்கள் எனினும் ஒரு பொருட்டே அல்ல.
நமக்கு ஆழப் புரிந்து நமக்கு எளிமையாகப் புழங்குமாறு உள்ளதா
என்பதைப் பற்றியே நாம் கவலைப் பட வேண்டும். உழைத்து
நூல்கலையும் பிறவற்றையும் படைக்க வேண்டும்.
 
 
> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.
இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.

நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும் என்றுதான் நான் கூறிவருகிறேன்.
 
தேவை இல்லை என்பதை நடுநின்று கேட்போருக்கு உணர்த்த முடியும்.


தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்குபதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.

இதுவும் (U+0bb6) தேவை என்றுதான் மயக்குகிறார்கள்!!
 
ஞானபாரதி தனி எழுத்துகள் தருவது மிக மிகப் பெரும் பிழை!!
தமிழை முற்றுமாய் சீரழிக்கும்.
 
 
மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன்.
வீட்டிலும் அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
 
 
 
கிரந்தம் இல்லாமல் எத்தனையோ பேர் நாளும்
பேசுகிறார்கள் ராசா, ரோசா, சின்ன ராசு, தங்கராசு,
புசுப்பா, ரமேசு, சரசு என்று.
வெறும் 2000 ஆண்டு இலக்கணம் என்பதல்ல, நம் மொழியை
2000+ ஆண்டுகளாக வாழ்மொழியாய் வாழ
உதவிய, உதவிக்கொண்டிருக்கும் யாப்புச் சட்டம். 
இதில் மாற்றங்கள் நடந்து வந்துள்ளன
ஆனால் எழுத்துகளில் மாற்றம் இல்லை.
ஒரு 5-10% மக்களும் அவர்களைச் சார்ந்த
ஊடகங்களும் தமிழை நாளும் கொலை செய்துகொண்டு வருகின்றன
என்பது நடப்பு என்பதையும் அறிவேன். இவை
மாறிப் பெரும்பாலோருடைய தமிழ் முறையைப் பேணினால்,
இன்னும் நன்றாக முன்னேறுவோம்.
 
அன்புடன்
பாரதி

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 9, 2011, 4:40:13 PM1/9/11
to anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
///ஆங்கிலம் என் முகத்தில் தினமும் துப்புவதை நான் ஏற்க வேண்டும். அவன் முகத்தில் நான் துப்பினால் அது என மேல் தான் புழூதியா?. நல்லா இருக்கு உங்க ஏரணம்///
 
வேந்தரே,
 
அமெரிக்க டாலர் கிடைத்தால் அந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ளலாம் இல்லையா ? 
 
ஏன் தமிழில் பேசிக் கொண்டு அமெரிக்காவில் பிழைக்கலாமே !
 
உமது பெயரை ஆங்கிலத்தில் எழுத முடியா விட்டால்  என்ன ?  நீர் என்ன நியூட்டனா ?  ழகரத்தை வேறு மொழியில் எழுதா விட்டால் என்ன ?  வானிடிந்து  விடுமா ? 
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++

2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


9 ஜனவரி, 2011 12:47 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

பக்கத்தில் இருப்பவன் புழுதியைப் பூசிக் கொண்டால் நாமும் பூசிக் கொள்ள வேண்டுமா ?
 
நீங்கள் சிந்தனை சிற்பி  நாத்திகர் அல்லவா ?
 
தமிழில் ழகரம் இருப்பதால் உங்கள் தலையில் ஒளிவட்டம் சுழல்கிறதா வேந்தரே !!!
 
 
ஐயா
உலகின் எந்த மொழியும் மற்ற மொழிகளின் சொற்களை எழுத முடியாது என்ற உண்மையை  நீங்க ஏற்க மாட்டாமல் ப்ழுதி, ஒளிவட்டம் என எதைதையோ சொல்லுறீங்க
 
என் பெயரை ஆங்கிலத்தில் எழுத முடியாது என ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்
 
ஆங்கிலம் என் முகத்தில் தினமும் துப்புவதை நான் ஏற்க வேண்டும். அவன் முகத்தில் நான் துப்பினால் அது என மேல் தான் புழூதியா?. நல்லா இருக்கு உங்க ஏரணம்
 
இங்லிஸ் மொழியை ஆங்கிலம்னு சொன்னால் வெள்ளையன் நம்மை பீரங்கி வைத்து பிளப்பானா?
 
 
 
 
 
 
 
 

 
ஜெயபாரதன். 
 
+++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


9 ஜனவரி, 2011 9:45 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///
 
வேந்தரே,
 
இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
 
மீண்டும் உங்களுக்கு நான் சொல்லுவது புரியவில்லை
 
மற்ற மொழிகளில் குறை இருக்கும் போது தமிழை ஏன் கிண்டலிக்கிறீர்கள்?
 
>பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ?  அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
 
>>பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
 
 
மற்ற மொழிகளும் அறுக்கின்றன என்று சொல்லவந்தேன்
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

அன்புடன் புகாரி

unread,
Jan 10, 2011, 12:49:43 AM1/10/11