![]() |
| Having trouble viewing or submitting this form? | |
| |
| I've invited you to fill out a form: |
| 7th University of Malaya International Conference on Discourse and Society மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புலத்தின் 7ஆவது சமூக உரைக்கோவை மாநாடு (தமிழ் ஆய்வரங்கம்) |
| இம்மாநாட்டில் முதன்முறையாக தமிழ்மொழியில் சிறப்பு நிகழ்வாக ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வரங்கம் ஆகஸ்டு 1ஆம் நாள் (வியாழன்) காலை மணி 8.30 முதல் மாலை 4.30 வரை Holiday Villa தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது. தமிழ்ழொழியைப் பொருத்தவரை உரைக்கோவை என்பது புதியதொரு துறையாக இருக்கின்றது. இது தொடர்பான விழிப்புணர்வையும் இது சார்ந்த ஆய்வுகளும் ஆய்வுக்கான வழிகாட்டுதல்களும் இந்த ஆய்வரங்கில் இடம்பெறும். முதுகலை; முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் அல்லது தொடங்கும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஆய்வரங்களில் கலந்து கொண்டால் பயனாக அமையும். இந்த ஆய்வரங்கில் கீழ்க்காணும் துறைகள் தொடர்பான விளக்கங்களும் ஆய்வு செய்வதற்கான நிரப்பிடங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் ஆய்வுக் கட்டுரைகள் படைத்தலும் கேள்வி-பதிலும் நடைபெறும். • காட்சித் தொடர்பாடலும் உரைக்கோவையும் (Visual communication and discourse) • மொழியியல் நிலத்தோற்றம் (Linguistics landscapes) • மொழியும் சமூகமும் (Language and society) • மொழியும் ஆற்றலும் (Language and power) • மின்னியல் ஊடகமும் உரைக்கோவையும் (Digital media and discourse) • பாலின உரைக்கோவை (Gendered discourse) • மின்னியல் ஊடகமும் மக்கள் பண்பாடும் (Digital media and popular culture) • பண்பாட்டு பல்வகைமையும் ஊடாடலும் (Cultural diversity and interactions) • மொழியும் அடையாளமும் (Language and identity) • மொழி, சமயம், அடையாளம் (Language, religion, and identity) • மொழி வகைகள், பன்மொழிச் சூழல், பண்பாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் (Language varieties, multilingualism, and cross-cultural communication) • மொழியியல் நிலத்தோற்றமும் காட்சித் தொடர்பாடலும் (Linguistic landscape and visual communication) • எழுத்தறிவும் கல்விக்கொள்கைகளும் (Literacy and educational policies) • நிபுணத்துவ உரைக்கோவையும் சிறப்பு நோக்கங்களுக்கான மொழியும். இந்த ஆய்வரங்கில் முதன்மை உரை வழங்குவதற்குச் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த; தமிழ் மொழியியல் துறையில் மிகச் சிறந்த அறிஞராகத் திகழும் மேநாள் பேராசிரியர் முனைவர் தெய்வசுந்தரம் அவர்கள் சிறப்பு வருகை புரியவிருக்கிறார். இவ்வாய்வரங்கில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் இணைக்கப்பட்டிருக்கும் கூகள் பாரத்தை நிறைவு செய்து அனுப்பவும். ஆய்வரங்கின் பங்கேற்பாளர் பதிவுக் கட்டணமாக ரி.ம 200 செலுத்த வேண்டும் (கோப்பு, உணவு, எழுதுபொருள்கள் வழங்கப்படும்) பங்கேற்பாளர்களுக்கு அனைத்துலக நிலையிலான பங்கேற்பு நற்சான்றிதழ் வழங்கப்படும். பதிவு இறுதி நாள் : 15-07-2019 தொடர்புக்கு, முனைவர் மலர்விழி சின்னையா (0193841849) முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் (0192267579) பணம் செலுத்தும் பொருளக எண்: Name of recipient: Bendahari Universiti Malaya Account number: 98905000001204 (பங்கேற்பாளர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தியவுடன் ரசீதை மேற்காணும் எண்கள் ஒன்றிற்கு புலனம்வழி அனுப்பவும்) * பதிவு உறுதியான பிறகு கல்வி அமைச்சில் இருந்து கடிதம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். |
|
This form was created inside of University of Malaya. Report Abuse - Terms of Service - Additional Terms |
| Create your own Google Form |