Fwd: FW: KODUMANAL article IN FRONTLINE

5 views
Skip to first unread message

sasikala murugavel

unread,
Jul 2, 2013, 7:31:43 AM7/2/13
to tamilep...@googlegroups.com, AASAI REACH
Dear All

My brother had visited this place and thought of sharing these photos and articles of interest.

Sasikala.c

---------- Forwarded message ----------
From: <meignana...@kotak.com>
Date: 2013/7/1
Subject: FW: KODUMANAL article IN FRONTLINE
To: csasi...@gmail.com



From: Viswanathan Vadivu [mailto:vishwa...@gmail.com]
Sent: Monday, June 10, 2013 4:18 PM
To: Rajkumar R
Cc: Lathish N; Subramaniam Gopalakrishnan; ravindran ck; Meignanamurthy C (Consumer Bank, KMBL); senthil raajan; avsenthill; ponnusamy ponnusamy; ramkumar ramkumar; .; Durai samy; hemanth kumar; karthi keyan; Siva Osprey
Subject: Re: KODUMANAL article IN FRONTLINE

வணக்கம் நண்பர்களே,

கொடுமணல் - ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது.  மூதாதையர் வாழ்ந்த பயன் பயன்படுத்திய இடத்தையும் தடயங்களையும்  தினமலர் ஹிந்து நாளிதழ்கள் கடந்தவாரங்களில் வெளியிட்டன. இரண்டு வாரங்களாக திட்டமிட்ட பயணம் நேற்றுதான் சாத்தியமானது. நேற்றைய பயணம்  மிகவும் ஆச்சர்யமாகவும், கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. இவ்வளவு அருகிலே திருப்பூரில் இருந்துகொண்டு இருந்தும் இத்தனை நாள் இதைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கிரோமே என்று.    நாங்கள் சென்றபொழுது,  இரண்டு வாரங்களுக்கு முன்னால் வருகைபுரிந்திருந்தால் ஆய்வுப் பணிகளையும், ஆய்வில் கிடைத்த பொருட்களையும் பார்த்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார். மேலும் இது குறித்த தகவல்களைப் பெற சோமு என்பவரை பாருங்கள் என்று கூறினார். புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது அவரைப்பார்க்கலாமா வேண்டாமா என்று 
யோசித்தது அவரைப்பார்த்து உரையாடியபின் தவறு என்று உணர்ந்தோம்.

 சோமு அவர்கள் இருக்கும் இடத்திற்குச் 
சென்றவுடன் மிகவும் எளிமையான கொங்குமண்டல விவசாயி ஒருவரை காண்பித்து இவர்தான் என்றார்கள். வந்த காரணத்தை சுருக்கமாகக் கூறினோம். நீங்கள் இடத்தைப் பார்வையிடச் செல்லும்போது என்னை அழைத்திருந்தால் நானும் உங்களுடன் வந்து எல்லவற்றையும் விளக்கமாகக் கூரியிருப்பேனே என்றார். அவருடைய நிலத்தில்தான் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெற்றதாகக் கூறினார்.
அறிமுகப்படலத்தில் அவர் பெயர் சோமு என்கிற இராமச்சந்திரன்  அந்தப் பகுதியின் தற்போதைய மணியகாரர் (VAO) என்றும் திருப்பூரில் computerised embroidery தொழில் செய்து கொண்டு இருக்கிறார் Msc மற்றும் LLB பட்டதாரி என்பதை தெரியப்படுத்தினார். மனதுக்குள் நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்த இடத்தில தேங்காய் களமும் ஆயில் மில்லும் உள்ளதாக கூறினார். இவ்வளவு எளிமையா என்று வியப்பு (வெளியில் காட்டிக்கொள்ளவில்லை). பேசப் பேச அவருக்கு இந்த அகழ்வாராய்ச்சி குறித்த 
ஆழமான அறிவும் அவருடைய ஈடுபாடும் முயற்சியும்  அவர்பால் மிகுந்த மரியாதையை எங்களுக்கு
ஏற்ப்படுத்தியது. புகைப்படத் தொகுப்புகள், பத்திரிகையில் வந்த செய்திகள் என்று 
ஒரு மணி நேரம் எங்களுக்காக பொறுமையாக நிறைய விளக்கங்கள் கொடுத்தார். இடையே சுவையான தேநீரும் கிடைத்தது. (அந்தக் கிராமத்தில் ஒரு டிக்கடை கூட இல்லை)

இரண்டாயிரத்து  ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதயர்கள் ரோமானியர்களுடன் வணிகம் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.  உலகம் முழுவதிளிமிருந்து ஆராய்ச்சியாளர்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தந்து அடிப்படை வசதிகள் இல்லாத இந்தச் சிறிய கிராமத்தில் தங்கி ஆய்வுகள் செய்கிறார்கள் என்று கூறினார். மாணவிகள் பெண்கள் தங்கி ஆராய்ச்சிகள் செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று கூறினார். தற்போதைய 
மாவட்ட ஆட்சியர் இங்கு வந்தபோது இதற்கான வசதிகளுடன் ஒரு காட்சிக்கூடம் அமைத்துத் தருவதாக உருதியளித்திருப்பதாகக் கூறினார். சங்ககாலத் தமிழர்களுடைய தொழில் மதிநுட்பத்தையும் 
கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்டதையும் மிகவும் சிலாகித்துப் பேசிகொண்டிருந்தோம். அப்போதே 
பருத்தி நூல் நெசவு செய்ததர்க்கான சான்றுகள் பற்றிய பேச்சின் போது, இன்றைய திருப்பூரின் வளர்ச்சியை மனம் தொடர்பு படுத்திப் பார்த்தது.
 
இடையே அவருக்கு  வறட்சி நிவாரணப் பணிக்கான வேலைகள் குறிக்கிட்டதால் அவரிடம் விடைபெற்றோம். கடந்த இருபது வருடங்களாக இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமது நேரத்தையும் பொருளையும் அளித்துக்கொண்டிருக்கும் இவரை நமது Tirupur Nature Society துவக்க விழாவிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு நக்கீரன் தளத்தில் எடுக்கப்பட்ட விபரங்களைக் கொடுத்துள்ளேன்.

நன்றி,
விசு.

கொசுறு: இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய தேர்வுக்கு கடந்த ஆண்டு அவருக்கு VAO பதவி கிடைத்துள்ளது. கொடுமணல் ஊரட்சித்தலைவராக அவருடைய தம்பியை போட்டியின்றி அந்தஊர் மக்கள் தேர்வு செய்து அவருடைய குடும்பத்தை  ஊர்மக்கள் மரியாதை செய்துள்ளனர்.

.தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013


 

 


உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது. 

15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழ்ப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன. 

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும். 

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். 

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்ற்ய்க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. 

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உரவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.

இவ்வகழாய்வில் ஆய்வு மாணவர்களான முனைவர். வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், பா.பாலமுருகன், ஜி.பால்துரை ஆகியோரும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர். தி.சுப்பிரமணியன் அவர்களும் பங்கு பெற்றனர். இவ்வகழாய்விற்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சந்திர கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

செய்தி: எம்.வடிவேல்



On Mon, Jun 10, 2013 at 11:36 AM, Rajkumar R <rrajkum...@gmail.com> wrote:
அருமையான வாய்ப்பை  தவரவிட்டதற்காக வருந்துகிறேன். பகிர்தலக்காக மிக்க நன்றி 

RR 


On 10 June 2013 10:31, Lathish N <lath...@yahoo.com> wrote:
Dear Sir, 

Thanks For Sharing The Info...But I Think This Is Incomplete ........

Lathish .T.N.

--- On Mon, 6/10/13, Subramaniam Gopalakrishnan <gopal...@gmail.com> wrote:

From: Subramaniam Gopalakrishnan <gopal...@gmail.com>

Subject: KODUMANAL article IN FRONTLINE
To: "Viswanathan Vadivu" <vishwa...@gmail.com>
Cc: "ravindran ck" <ckravi...@gmail.com>, "Meignanamurthy C //Kotak /Bank" <meignana...@kotak.com>, "senthil raajan" <srad...@gmail.com>, "Lathish. N." <lath...@yahoo.com>, "avsenthill" <avsen...@gmail.com>, "ponnusamy ponnusamy" <aruln...@gmail.com>, "ramkumar ramkumar" <velk...@gmail.com>, "." <nalls...@gmail.com>, "Rajkumar R" <rrajkum...@gmail.com>, "Durai samy" <adsa...@gmail.com>, "hemanth kumar" <heman...@gmail.com>, "karthi keyan" <ckwk...@gmail.com>, "Siva Osprey" <siva....@gmail.com>
Date: Monday, June 10, 2013, 9:33 AM

Dear Friends,

FYI

Gopal



DISCLAIMER:
This communication is confidential and privileged and is directed to and for the use of the addressee only. The recipient if not the addressee should not use this message if erroneously received, and access and use of this e-mail in any manner by anyone other than the addressee is unauthorized. If you are not the intended recipient, please notify the sender by return email and immediately destroy all copies of this message and any attachments and delete it from your computer system permanently. The recipient acknowledges that Kotak Mahindra Bank Limited may be unable to exercise control or ensure or guarantee the integrity of the text of the email message and the text is not warranted as to completeness and accuracy. Before opening and accessing the attachment, if any, please check and scan for virus.


Reply all
Reply to author
Forward
0 new messages