Fwd: போதும் என்ற மனம்

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Nov 8, 2022, 11:42:29 AM11/8/22
to panb...@googlegroups.com, ira...@googlegroups.com, three Wise Man, yaathis...@gmail.com, tamilep...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tmmk...@googlegroups.com, fro...@googlegroups.com, sathvi...@googlegroups.com, sivan...@googlegroups.com

தமிழர் சமயம்

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் - நல்வழிவெண்பா : 28

விளக்கம் நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

இஸ்லாம்

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி: 6446 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். - நூல்: முஸ்லிம் 1903

கிறிஸ்தவம்  

‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.’ (1 தீமொ 6 : 6)

 உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்.’ (லூக் 3 : 14). 

நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.’ (எபி 13 : 5). 
Reply all
Reply to author
Forward
0 new messages