கமலும் ராசாவும்
கமலகாசனை பொருத்தவரை இளையராசா அவர் படத்திற்க்கு சரிபாதி பங்கையே தந்து விட்டார். அவர் நடிப்பு 50சதவிகிதமென்றால் ராசாவின் இசை 50 சதவிகிதம்
படம் †ீட் பாடலும் †ீட். இளையராஜாவை விட்டு விலகி வேறு இசைஅமைப்பாளர்களுடன் படம் செய்யும்போது அதில் கமலுக்கு முழு வேலையும் செய்யவேண்டி இருந்தது
இது கமலே சொன்னது.
அவரின்
குரு முதல் கொண்டு "
பறந்தாலும் விடமாட்டேன்",
காக்கிசட்டை "
பூப்போட்ட தாவணி",
தூங்காதே தம்பி தூங்காதே
"
வருது வருது விலகு விலகு" , இவை அனைத்தும்
புதிய பரிமானத்தில் வந்த பாடல்கள் , மெல்லிய பாடல்களாவும் இல்லாமல் தத்துவபாடல்கள் போலும் இல்லாமல்,
பர்லே 50% 50 பிஸகட் போல்
கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம் கலந்து வந்த பாடல்கள். இதில்
கட்டவண்டி கட்ட வண்டியையும் சேர்த்துகொள்ளாம்.
அந்த காலகட்டத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் வந்த "இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள்", வேகு நீளமான பாடல் ஆனால் அந்த இனிமை கேட்பவர்களுக்கு , இன்னும் கொஞ்சம் பாடல் நீளாதா என சொல்ல வைத்த இனிமையான பாடல்.
எனக்குள் ஒருவன், கலைஞன் போன்ற படங்கள் நடிப்பிற்க்காக 100 நாள் இசைக்காக 100 நாள் என ஓடிய படங்கள்.
பாரதி ராசாவின் ஆரம்ப திகில் படங்களான சிவப்பு ரோஜாக்கள்( நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை) டிக் டிக் டிக் போன்ற படங்களுக்கு திகிலூட்டியது இசைராசாவின் இசைதான்.
முழுவதுமே டிஜிடல் வடிவில் இசையமைத்து வெளிவந்த படம், விக்ரம். டிக் டிக் டிக்கிற்க்கு பிறகு துப்பரியும் கதை ஒன்றை கொன்டு வந்த அண்ணே கொஞ்சம் வித்தியாசமா இசை கொடுக்க முடியுமா?? என செல்ல ,கொடுத்துடுவோம். என்று இசைஅமைத்த படம் தான் விக்ரம் (
நான் வெற்றி பெற்றவன் என பாடலில் மட்டுமல்ல டிஜிடல் இசையும்
மக்களின் மனதில் வெற்றி பெற்றுவிட்டது.
அதே தோனியில் இந்தியில் பப்பி லகரீ அவர்கள் டிஜிடல் இசையுடன் மிகுந்த பொருட்செலவில் மூன்று முன்னனி †ீரோக்களை வைத்து படம் எடுக்க பொசுக்குனு படுத்து
கொண்டது. அதிலிருந்தே பாபியை கண்டால் †ிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் ஓட்ட மெடுக்க ஆரம்பிக்க ஒரு நிலையான இசையமைப்பாளர் இன்று வரை பாலிவுட் திரைவுலகிற்க்கு கிடைக்காமல்
நம்ம எ ஆர் ரகும்மான் போய்தான் இதுதான் இசை என்று சொல்ல அப்ப நாங்க இதுநாள்வரை கேட்டதெல்லாம் என்னது என்று புரியாமல்
விழித்தனர்.
குனாவில் அனைத்துமே புதுமையான இசை நன்கு ஆழ்ந்து கேட்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதிலும் பழய மின்விசிர்யின் கரகர சத்தம் கூட இனிமையான இசைதரும் என்று சொன்ன பாடல் வர்ர்ர்ம் வர்ர்ர்ர்ர்ர்ரம் வர்ர்ர்ரம் வரும் வரும் என ஆரம்பித்து
உன்னை நானறிவேன் பாடலின் இசை இதுவரை எந்த படத்திலும் வராத புதுமை,
மேலும் பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க அப்பனென்றும் அம்மை
என்றும் ஆனும்பெண்ணும் கொட்டி வைத்து குப்பையாக வந்த உடம்பு, கடிதம் எழுதியவரே அதை இரசித்து படிப்பது போன்ற பாடல் கண்மனி அன்போடு காதலன் நான் எழுதும்
கடிதமே, அற்ப்புதம் என்ற ஒரு வரியில் நான் இதை சொல்ல மாட்டேன் , மனிதன் உனர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்பது போல் மனிதன் உனர்ந்து கொள்ளாத
அற்ப்புதமான பாடல் என எம் எஸ விஸவநாதன் ஐயா அவர்களே சொன்ன வார்த்தை.ஏனேனில் இந்த சிட்ட்சுவேசனில் பாட்டு மற்றும் பின்னனி இசை யெல்லாம்,
அதற்க்கு
தகுந்தற்போல கிடையவே கிடையாது. ஏதோ 1890 லண்டனில் தெம்ஸ நதிக்கரையில் ஒரு ஆர்கெஸட்ட்ரா நடப்பது போன்ற இசையை கொடுத்து விட்டார்.
நிலாகாயுது நேரம் நல்ல நேரம் பிறகு அப்படி ஒரு செமிவிரச பாடல் ஒன்று வேனும் என சொல்ல நிலாஅது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே என பாடிவிட்டார்
நாயகனின்.
நாயகனை பொருத்தவரை ஒரு அழகான செய்தி!:
நடிப்பில் வேண்டுமானால் காலம் சிலரை ஒதுக்கி விடும் ஆனால் இசை என்றும் யாரையும் தவிக்க விடாது என்ற நியதிகேற்ப்ப
1980ற்க்கு பிறகு கிட்ட தட்ட காணாமலே போய்விட்ட மும்பை ராஜேஸவரி சகோதரிகளை மீண்டும் நான் சிரித்தால் தீபாவளி பாடல் மூலம் ஒரு வலம் வர செய்தவர்
அதில் வரும் இனிய மாலை நேர இராகத்தில் ":நீஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்" மும் சரி,
கமல†ாசனும் இளையராசாவும் இனைந்து பாடிய டைட்டில் பாட்டு தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவர யாரடித்தாரோ , என்ற பாடல்கள்
நாயகனை தேசிய அவர்ட் வரைக்கும் இழுத்து சென்றது.
புண்னகை மன்னன் வித்தியாசமான ஒரு கதையமைப்புள்ள திரைப்படம், அதையும் தன் பாடல்களால் முதலில் படத்தின் பெயரை பிரபலமாக்கி பிறகு திரைக்கு வந்த பிறகும் நடன அசைவிற்கேகென்றே இசை அமைத்து இன்றும் நடன குழுக்களில் ரிகல்சலுக்கு அந்த பாடலை தேர்ந்தேடுக்கும் அளவிற்க்கு நடன அலவுகோளுடன் தந்த இசையும்
மேலும் சிங்களத்து சின்ன குயிலே, என்ன சத்தம் இந்த நேரம் போன்ற இன்னிசை பாடலைகொடுத்து இன்று காதுகளில் ரீங்காரமிட வைத்து விட்டார்.
உயர்ந்த உள்ளத்தில் ஒரு பாடலை கமலும் இளையராசாவும் மற்ற திரைப்பட முக்கிய புள்ளிகளுடன் பாடல் டிஸக…னில்
எங்கே என் ஜீவனே உண்னை கண்டேனே என
மெட்டு போட்டு ராசா பாடிக்காட்டினார். அந்த பாடலுக்கு கமலகாசன் தான் பாடுவதே முடிவு செய்ய பட்டது. அந்த பாட்டின் மெட்டையும் அதன் வரிகளையும் இளையராசா
பாடிக்காண்பித்த பொழுது, கமலாகாசன் அண்ணா அப்படியே கண்டியூ பாடிருங்க என சொல்லி அந்த சூழ்நிலையிலேயே பாடிய பாடல், அதன் பிறகு பெண்குரலுக்காகவும்
மேலும் இசை இனைப்பிற்க்காவும் ஒலிப்பதிவு கூடம் சென்றது.
வாந்தால் மாகாலெட்சுமியே என்வீட்டில் என்றும் அவள் ஆட்சியே அதில் வரும் ராக ஆலாபனைகள் இளைய ராசா சொல்லிக்காட்டும் போது எ ஸ பியே கொஞ்சம் தினறிவிட்டார்.
அதே போல் சலங்கை ஒலி படம் நடனத்தை பற்றியது. நடனம் இசையிருந்தால் தான் முடியும் அந்த படத்தின் ஒவ்வோரு பாடலு வைரமும் அதன் ஒளியும் போல் பினைந்து அமைந்து விட்டது. இது மெளனமான நேரம், இது ஒன்று போதும் மற்றவற்றை பற்றி சொல்ல
கண்ணதாசன் தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த காலம், தமிழ் திரை வாணில் ஒரு ஒளிமயமான நட்சத்திரம் எரிந்து வீழப்போகும் காலம், அவருக்கு ஏறபட்ட நோயின் காரணமாக மரணம் நிச்சயம் ஆனால் மேல் நாடு சென்றால் கொஞ்சம் நாட்களை தள்ளிபோடலாம் என்று அவரின் குடும்ப
டாக்டர். வரதராஜன் சொல்ல கண்னாதாசனும்
சரிப்ப உனது ஆசையையும் ஏன் கெடுப்பானே, பாப்போன் இன்னும் எத்தனை நாள் தான் இந்த கூட்டுக்குள் காற்று வாழும் என சிரிக்க அந்த அறையே மெளனம்
மரியாதை நிமித்தம் இதை அவரை சந்திக்க போன இளைய ராஜ அவருக்குள்ளும் ஒரு ஆசை தோன்றியது.
ஐயா எனக்கு ஒரு பாட்டு வேணும் என்றார். என்ன ராசா இந்த நேரத்தில் கூடவா என டாக்டர் கேட்க சரி அவனுக்கும் ஆசை அதையும் ஏன் கேட்பானே, என சொல்லி ராசா கடைசியாக உணக்கா பேனா எடுக்கிறேன். இந்த மைவழியா என்னோட உயிர் வரிகள் இந்த காகிதத்தில் என புண்னகைத்து விட்டு காட்சி, கதை எதுவும் கேட்காமல்
எழுதி கொடுத்தது. கண்ணே கலை மானே கண்ணின் மணியென கண்டேன் உனை நானே மற்றயாராவது இந்த வரிகளை கையாண்டால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாது. ஜேசுதாஸ மற்றும் இசைகலைஞர்கள் அனைவரும் இந்த பாடல் பாடி முடிந்த பிறகு மனதில் ஒரு பாரத்துடனே வீட்டிற்க்கு திரும்பினர் ஆம் மறுநாள்
செய்தி வந்தது.
கவியரசு இந்த பாடலில் தனது உயிரை தந்து, வெற்று மானிட உடலம் நீக்கிணார் என்று.
இது †ிந்தியிலும் இந்த மெட்டு சூப்ப்ர் †ிட்டு , அங்கும் இளையராசா ஜெசுதாஸ கமல் கூட்டனி தான்.
கடல் மீன்கள் "தாலாட்டுதே வாணம்" பாட்டை காலையில் கௌுங்கள் அன்று இரவு தூங்க போகும் வரை அந்த பாடலும் இசையும் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் நமது காதுகளில்
ஒலித்து கொண்டே இருக்கும். அம்மா வயதிருக்கும் சுஜாதாவிடம் என்ன டூயட் பாட என சொல்ல அதற்க்கு பிறந்த பாடல் இது
இசை காட்சி நடிப்பு என அனைத்தும் சங்கமம் நடத்திய முக்கூடல் இது.
இதற்கு முன்பு நல்லவர்ககெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனசாட்சி என சிவாசிகனேசனின் பாடல் ஒன்று இதே தோனியில் இதே இராகத்தில் வரும் வரும் ஆனால் அது,
குளத்தில் ஒரு கல்லை தூக்கி போட அதில் கிளம்பும் அலையை போன்று வேகம் கொண்டது மேலும் அது இயற்பியல் பாசையில் திரிகோனங்களாக அதன் ஒலிவடிவம் இருக்கும்.
ஆனால் தாலாட்டுதே வானம் என்ற பாடல் குளத்தங்கரையின் அரச மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு புறா தனது அலகால் ஒரு சிறகை தண்ணீரில் உதிர்த்து போட
அது குளத்து நீரி பட்டதும் அதில் ஏற்ப்படும் அலை போன்ர மென்மையான பாடல் "தாலாட்டுதே வாணம்"
மசாலாகதை என்றால் கூட அதில் எதாவது புதுமையான நடிப்பு வேண்டும் என நினைத்து நடித்த படம் ஒரு கைதியின் டைரி, அதில் வரும் எ பி சி நீவாசி எல்லாம் உன் கைராசி போ லே…ி
எனர பாடல் எ ஸ வீ அவர்களின் சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி என்ற (பாடலின் ஜெராக்ஸ ஆனால் நிறைய பேருக்கு இது தேரியாது.
பொதுவாக இந்த ஓரடுக்கு பாடல்கள் திரையிசையில் மலர்வது அபூர்வம் அதிகமாக இது போன்றவைகள் மெல்லிசைகள் எனப்படும் மேடைப்பாடல்களில் மட்டும் தான் இருக்கும்
ஆனால் அதை கூட அரங்கம் ஏற்றிவிட்டார். அன்று எம் எஸ வீ, இன்று இளையராஜா
பொன்மானே பாடலும் இனிமையான பாடல் தானே
நடனத்திற்க்கு பாடல் இசைக்கலாம், மெளனத்திற்க்கு பாடல் இசைக்கலாம், அட காசிக்கு போகும் சந்யாசி என (சந்ரோதயம்) சிரிப்பான காட்சிக்கு பாட்டிசைக்கலாம், ஆனால் ஒரு
சண்டைகாட்சிக்கு இசைக்கலாம்! இடையிடையே பாடல் வரிகளை சொருகிவிட்டு சண்டைகாட்சிகளை எடுக்கலாம்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி(தளபதி) ஆனால் சிலம்பம் ஆடிக்
கொண்டே பாடல் இசைக்க முடியுமா?? முடியுமே., அது பிரபலமாகுமா?? ஆகுமே,. இந்த பிடிங்கோ சாந்துபொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்தூ வைச்சிக்கோ வைச்சிக்கோ மாமா.
இன்னும் வரும் வரும் வரும்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்
--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
091 9819166850
மும்பையிலிருந்து