குவைத்தில் பெரியார் பெருந்தொண்டர் தாக்கப்பட்டார்

5 views
Skip to first unread message

திருச்சி: அமானுல்லாஹ்

unread,
Nov 14, 2010, 6:05:44 PM11/14/10
to thanthaiperiyar, தென்றல், tamilblogg...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, tmmk...@googlegroups.com
குவைத்தினில் இருபது ஆண்டுகளாக பெரியாரின் கெர்ளகைகளை தனியொரு ஆளாய் இருந்து கொண்டு பெரியாரின் தொண்டனாக இருந்து வருபவர் செல்ல பெருமாள் அவர்கள். கடந்த காலங்களில் இருமுறை தலைவர் வீரமணி அவர்களை குவைத்திற்கு அழைத்து வந்து சிறப்புற இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்தவர். பெரியார் பன்னாட்டு மையத்தின் சார்பாக சமூகநீதிக்கான விருதும் ஒருஇலட்ச ரூபாய்க்கான பரிசும் பெற்றவர். 

அண்ணா அவர்கள் எழுதிய கம்பரசம் நூல் சொற்பொழிவு மற்றும் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவணகாவியம் நூல்சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகளை நடத்தியவர். சமீபத்தில் தீபாவளி தமிழர் பண்டிகையா என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். ஆரிய சூழ்ச்சிகளுக்கு மத்தியில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இருப்பவர். பார்ப்பன சக்திகளின் பின்புலத்தில் இயங்கும் தமிழோசை என்னும் அமைப்பினர் இவர்மீது நீண்ட காலமாகவே வெறுப்புணர்வோடு இருந்து வந்துள்ளனர். 

அவர்களுக்கு தோதாக இஸ்லாமிய சமூகத்தில் இருந்த ஒரு கருப்பு ஆடு அதற்கு சாராயம் வாங்கி கொடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை குவைத் சிட்டி கூடல் நகரில் பொதுமக்கள் சூழ இருந்தும் மது போதையில் இருந்த அந்த இஸ்லாமிய கருப்பு ஆடு யாரும் எதிர் பாராத வகையில் திடீரென்று தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது. சுதாரித்து கொண்ட இஸ்லாமியர்களும், தாய்மண் கலை இலக்கியப் பேரவையினரும் தாக்குதல் நடத்தியவனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். தாம் அனுப்பிய அம்பு மாட்டிக்கொண்ட பின் தூரத்தில் இருந்த தமிழோசையின் நிர்வாகிகள் வந்து அவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கடைசி வரை நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிக்காமலும், தாக்கியது சரிதான் என்கிற வகையிலும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கலைந்து சென்றுவிட்டனர்.  

கருங்காலிகளால் தாக்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் செல்லபெருமாள் அவர்களுககு வயது 60. தாக்குதல் நடத்திய கருங்காலிக்கு வயது 35. கிழவனை அடித்துவிட்டதாக பெருமை அடித்துகொள்ளும் இந்த சிறுமதியுடையவனையும் அவனை தூண்டிவிட்ட கயவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம். 

செல்லபெருமாள் 
காப்பாளர்
பெரியார் நூலகம்
தொலைபேசி: 00965 - 97592352
வேதனையுற்றிருக்கும் இப்பெரியவருக்கு ஆறுதல் சொல்வீர்.

தோழமையுடன் 
மனிதநேயமுள்ளவன்
திருச்சி

--
"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவன் என்னைச்சேர்ந்தவன்." - சே
Reply all
Reply to author
Forward
0 new messages