Fwd: 24-07-2022 திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

6 views
Skip to first unread message

Prasannam Narayanaswamy

unread,
Jul 24, 2022, 2:04:08 AM7/24/22
to sadgo...@googlegroups.com, iampresanam, trichyp...@gmail.com, tamilamutham, agavale...@gmail.com, prasannam-...@googlegroups.com

Subject: 24-07-2022 திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்
To: n.prasannam <n.pra...@gmail.com>, <trichyp...@gmail.com>, iampresanam <iampr...@yahoo.co.in>


1 Sunday.gif


1a Sunday 1.jpg


Wait, *

 

Animated Picture

 

24-07-2022  திருச்சி .பிரசன்னாவின் இன்றைய குறுந்தகவல்

 

 

2.gif


24722t.JPG




24722e.JPG




24722TDJ.JPG



துளசியின் மகிமையை முழுவதும் வர்ணிக்க இயலாது என்றாலும், பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும் எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதமடைவோம்.

துளசியை வணங்குவதால் விளையும் பயன்கள்:

துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம். துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர்.

துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ, அல்லது அது இருக்கும் வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் ஒரு பிராமணனை கொன்ற பாவத்தில் இருந்தும் கூட, விடுதலை பெறுகிறான்.

துளசி உள்ள காடுகள் வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார். துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. அதுவும் அல்லாமல் எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது.

துளசியின் வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி உள்ள இடங்களில் கிருஷ்ணரும், மற்ற எல்லா தெய்வங்களும் வசிப்பார்கள். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத் தைலமோ ஏற்பதில்லை.

துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார். சொல்லப் போனால் அவருக்கு செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. அத்தோடு, அவர் எல்லா இலக்கியம் மற்றும் புராணங்களையும் படித்தவர் ஆகிறார்.

கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்கள்.

துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் (பிறவித் தளையிலிருந்து) விடுவிக்கிறாh. துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம்.

துளசி பறிக்ககும் போது சொல்ல வேண்டிய  மந்திரம்

 “ துளஸி அம்ருத ஸம்பூதே ஸதாத்வம் கேசவப்ரியே  
  கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ ஸோபனே

#மந்திரத்தின்_பொருள்

துளசியே!  அமிர்தத்துடன் உண்டானவள் நீ,  கேசவனுக்கு பிரியமானவள் நீ, மங்கலம் மிக்கவள் நீ, உன்னை கேசவனின் பூஜைக்காக பறிக்கிறேன்! எனக்கு வரம் தா..!

ஒவ்வொருவரின் இல்லத்திலும் துளசிமாடம் வைத்து பகவானுக்குப் பிர்யமான துளசியை துதித்து, துளசியால் பகவானை ஆராதித்து பகவானின் க்ருபையை பெருவோம்.

ஹரேகிருஷணா
ராதேகி௫ஷ்ணா

 

 

 

 

 

திருச்சி நா.பிரசன்னா

 

 

=

Reply all
Reply to author
Forward
0 new messages