கீச்சுகள்

0 views
Skip to first unread message

vinoth j s

unread,
Oct 26, 2012, 12:07:48 PM10/26/12
to [MinTamil], [Tamilamutham], [VALLUVANPAARVAI], [பண்புடன்], {காதல் நினைவுகள் !!}
@Power4286
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான்; தணிப்பதும் தனிமை தான்..!
***

@Anandraaj04
பெண்ணுரிமை என்ற பெயரில் வூட்டு எஜமானியை சம்பளத்திற்கான வேலைக்காரியாய் தரந்தாழ்த்தும் இவுகள என்ன செய்ய…!?
***

@selvavanitha
பத்ரிக்கையாளர்களை காவல்துறை தாக்கியதாக வாய்கிழிய பேசும் பு.தலைமுறை அப்பாவி மக்களை அடக்குவதை ஆதரிப்பது என்ன லாஜிக்?
***

@udanpirappe
அண்ணா வளைவு இடிக்கப்படுவதை, நான் செய்தித்தாள் மூலம்தான் தெரிந்துகொண்டேன் -ஜெ#ஹி ஹி, கேக்கும்போதே சிரிப்பு வருதே
***

@oorkkaaran
நம்மாளுக எப்பவும் சூடுபட்டுதான் பாடம் கத்துப்பாங்க! #இன்று பட்டாசு ஆலை. நாளை அணு உலை. :-(
***

@covaialtu
காபி அல்லது டீ குடித்ததும் அடுத்து வரும் பேச்சு "அப்ப நாங்க கெளம்புறோம்". நாமளோ,"இருங்க சாப்பிட்டுட்டு போகலாம்".
***

@aanmagan
சினிமால டவுசர் கழண்டுடுச்சுனா வேஷ்டி விளம்பரத்துக்கு வந்துடறாய்ங்க இந்த நடிகருங்க!
***

@NamVoice
இங்கு பலருக்கு உதயகுமார் போலிசிடம் சிக்காமல் தப்பியதுதான் தலையாய பிரச்சனையாகத் தெரிகிறது.
***

@gpradeesh
அண்ணா வளைவை எனக்கே தெரியாமல் இடித்துள்ளனர் என்று உகாண்டா நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா என்பவர் தெரிவித்துள்ளார்!"
***

@vinoth_tweets
கட்சி துவங்கலாமா? மக்களிடம் ஹசாரே கேள்வி #ஓரு ஹோட்டல் தொடங்குங்க இப்பலாம் நிறைய உண்ணாவிரதம் நடக்குது.
***

@thoatta
ஜாக்பாட்டில் குஷ்பூ ஜாக்கெட் போட்டு வந்தார், சிம்ரன் பனியன் போட்டு வருகிறார்
***

@vinoth_tweets
நிலக்கரி விவகாரத்தில் வாயை திறந்தார் பிரதமர் #நல்ல காய்ச்சலாம் தெர்மாமீட்டர் வைக்க வாய திறந்தாறாம் நீங்க வேற..
***

@Rocket_Rajesh
வீட்டில், ஆண் ஆணியம் பேசினால் சாப்பாடும், பெண் பெண்ணியம் பேசினால் சாப்பாட்டிற்கு அரிசியும் கிடைக்காது!
***

@greatsure
வேலை செய்ய தெரிந்தவர்கள் சம்பளம் பெறுகிறார்கள், 'யாருக்கு' வேலைசெய்ய வேண்டுமென தெரிந்தவர்கள் 'அதிக' சம்பளம் பெறுகிறார்கள்!
***

@su_boss2
சாய்னா நேவாலை பார்த்து கற்றுகொள்ளுங்கள்: இளம் வீரர்களுக்கு சச்சின் அட்வைஸ் #முதல்லநீங்க டிராவிட் லட்சுமணன பாத்து கத்துக்குங்க
***

@baamaran
பணக்காரனாகனும் ஏழை நெனச்சா அது பேராசையாம்.. அதுவே பணக்காரன் கோடீஸ்வரனாக நெனச்சா அது முன்னேற்றமாம்! #என்ன நியாயம்டா!
***

@pesubavan
நாகரீகம் பற்றி பேசுபவர்கள் முதலில் செல்லை சைலன்டில் போடுங்கள் இழவு வீடுகளில்!!
***

@covaialtu
யாரிடமும் விவாதம் செய்யாதே.. அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய்.. ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்.
***

@naiyandi
தனியார் பஸ்களே ஆம்புலன்ஸை முந்துகின்றன!
***

@ak_nirmal
எங்க பிளக் பாயிண்ட் பாத்தாலும், உடனே சார்ஜ் போடத்தோணுது #ஆன்ட்ராய்ட் அவஸ்தைகள்
***

@thiru_Tamizh
போன வாரம் காதலி அணிந்திருந்த உடை நினைவிலிருக்கிறது. காலையில் அம்மா அணிந்திருந்த புடவையின் நிறம் ஞாபகமில்லை #ச்சே
***

@udanpirappe
பாராட்டுனா சிரிக்ககூடாது, ஓ....ன்னு அழனும்ங்கிறதை, இந்த டிவி நிகழ்ச்சிகள்', தமிழ் மக்களுக்கும் கற்றுத்தந்திருக்கிறது
***

@ak_nirmal
இன்னமும், இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்னு நம்புனிங்கனா, தமிழ்நாட்டை விட்டு எங்கயும் நீங்க போனதில்லைன்னு அர்த்தம்!
***

@mrithulaM
பல்லியின் வால் மீண்டும் முளைத்துவிடும் என்று எத்தனை முறைக் கூறியும் பல்லியின் வால் அறுந்துவிட்டதற்காக அழும் மகளை பார்த்து மகிழ்ந்தேன்.
***

@ipokkiri
பிரபாகரன் இருந்திருக்கலாம் என்றெண்ணும் ஒரு நிலை இந்தியாவுக்கு விரைவில் வரும். #கார்ட்டூன் அதன் துவக்கம்தான்.
***

@jeganjeeva
ஹோட்டலில் கைய சுத்தமா கழுவிட்டு உக்காந்தேன். டோக்கன் வாங்கிட்டு வாங்கன்றாரு வெயிட்டர். #சுத்தம் சோறு போடலை. :(
***

@freeyavudu
'நேத்து நைட் ஏம்ப்பா என்கிட்ட இங்கிலீஷ்லேயே பேசினீங்க'ன்னு பையன் கேக்கிறான். 'பிராண்ட் மாறிப்போச்சு'ன்னு சொன்னா புரியுமா?
***

@covaialtu
வந்தவர்: யோ தரகரே.. கல்யாணம் ஆகி 2 மாசமாகல, பொண்ணுக்கு 5 மாசமா இருக்குயா? தரகர்: நான்தான் அப்பவே சொன்னனே 18 வயசு 3 மாசம்'னு.
***

@_santhu
ஒன்றின் இழப்பை விட அது வேறொருவருக்கு சொந்தம் ஆவதுதான் வேதனையளிக்கிறது.
***

@powshya
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பல உண்மைகளை பேச வழியிருந்தால் கள்ள ரகசியங்களுக்கு இடமிருக்காது.
***

@minimeens
நல்ல நண்பனிடம் எல்லாக் கதைகளையும் சொல்ல முடிகிறது. உற்ற நண்பனோ அந்த எல்லாக் கதைகளிலும் இருந்திருக்கிறான்.!
***

@aidselva
ஒண்ணுமே இல்லாத ஒன்றை, விவாத பொருளாக மாற்றக்கூடிய வல்லமை பெண்களால் மட்டுமே சாத்தியம்..
***

@ArasuTweets
பெண்களின் உரிமை அவர்களது பிறந்த வீட்டில் மறுக்கப்படும் பொழுது அது பெரிதுபடுத்தப்படுவதில்லை.
***

@pmr31
புறநகர் பகுதிக்கு குடி போறவுங்க தயவுசெய்து ஏதாவது பேமிலி சாங் வச்சிக்கங்கப்பா!அட்ரஸ் கண்டுபுடுக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோகுது
***

@PizhaiThiruthi
எல்லார்கிட்டயும் தமிழ்லதானே பேசுறீங்க, என்னை மட்டும் எதுக்குப்பா இங்க்லீஷுல பேசச்சொல்றீங்க? #மகளுக்கு என்ன பதில்சொல்ல?
***

@Rocket_Rajesh
ஹீரோவைச் சரியாகக் குறிபார்த்துச் சுடும் வில்லன் கிடைக்காமல் தமிழ்சினிமா பலகாலமாய் அல்லாடுகிறது!
***

@altappu
மன்மோகன்சிங்கின் அடுத்த ராஜதந்திரம்.. நம்மள மாதிரியே மக்களும் பேசாம இருந்தா நாடு முன்னேறிடும். #twitblock
***

@Ajit_karthi
வரலாற்று சிறப்பு மிக்க 100வது ராக்கெட்டாச்சே, அதை சிறப்பிக்க பிரதமரும் அதுல ஏறி போவார்னு எதிர்பார்த்தேன். போகலையா!!
***

@vandavaalam
பேச்சிலர்களோட மேட்சிங் துணி, எந்த துணி முதல்ல காயுது என்பதை பொருத்து அமையும்!
***

@covaialtu
Wyf: ஏங்க, நான் மாசமா இருக்கேங்க!
Hus: உன் அப்பா, அம்மாகிட்ட சொன்னியா?
Wyf: போங்க, நான் காலேஜ் படிக்கும்போது சொன்னதுக்கே அடிச்சாங்க.
***

@thangavel111
கொடுப்பவன் கடவுள் என்றால், உண்டியலில் காசு போடுபவன் யாருக்கு கடவுள்?
***

@Nattu_G
நேற்று உங்களை செருப்பால் அடித்ததை உணர்வோடு அணுகாது ஆட்டுத் தோல் மனித தோலை தொட்டது என்று எண்ணுங்கள்.
***

@Navalyuuraan
எதையும் நாம் அளவுக்கு அதிகமாக செய்தால், அது நாளடைவில் அலுப்படித்து விடுவது இயற்கையாகும்!
***

@ipokkiri
எம்ஜியார் எதப் போட்டாலும் ஸ்டிராங்கா இருக்கும்யா?! #அண்ணாஆர்ச்
***

@iDiesh
ஹிந்தியில் பொண்ணுங்க பேசத் தொடங்கும் போதெல்லாம் கலைஞரை திட்டத் தொடங்கி விடுகிறேன்...
***

@iDiesh
ஓர் ஆணை விமர்சிக்கும் பெண்,விரைவில் பிரபலமடைகிறாள் இந்த சமுகத்தில்..
***

@pmr31
இப்டி பக்கத்துல வந்து உக்காருனு ஒரு பெருசு கூப்பிட்டா நம்ம காது பஞ்சர் ஆகப்போகுதுனு அர்த்தம்.
***

@covaialtu
நான் மாற்றுத் திறனாளி அல்ல., இந்தியாவின் தலைவிதியை மாற்றும் திறனாளி. #ஒரு மாற்றுத் திறனாளியின் கவிதை
***

--
Vinoth J.S


vinoth j s

unread,
Oct 26, 2012, 1:06:22 PM10/26/12
to [MinTamil], [Tamilamutham], [VALLUVANPAARVAI], [பண்புடன்], {காதல் நினைவுகள் !!}

@su_boss2
கருணாநிதி முன்னின்று நடத்திய எதுவும் விளங்கியதில்லை-கேப்டன்#அட பக்கி பயலே. உன் கல்யாணத்தகூட நான் தான் நடத்தி வெச்சேன்(கருணாநிதி)
***

@vambukku
மனைவி என்பவள் "வா.. உனக்கு ஒரு தங்க செயின் வாங்கி தரேன்"என நாம் அழைக்கும் பொழுது"வேணாம்க சமையல் வேலை நெறைய இருக்கு" என கூறுபவள் தான்..
***

@Rocket_Rajesh
ரோட்டுல அக்குல்ல கட்டி வந்தது மாதிரியே எவனாவது நடந்தா.. அவன் ஜிம்முக்கு செல்கிறான் என அர்த்தம் கொள்க.
***

@prabhamaha
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை... "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது" "வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"
***

@theesbala
செருப்பு தைப்பவர் கண்கள் அனைவரின் கால் நோக்கும். #அவதானிப்பு
***

@gpradeesh
ஏலச்சீட்டு, ரியல் எஸ்டேட், இன்சுரன்ஸ், டியூசன்.. இதுக்கு நடுவுல அப்பப்ப வாத்தியார் வேலைக்குப் போறாங்க இன்றைய ஆசிரியர்கள்!
***

@MayakaDoctor
ஏன் ஆண்களுக்கு புத்திசாலியானபெண்களை விட அழகான பெண்களை பிடிக்கின்றது?
***

@ senthilcp
ஏன் பெண்களுக்கு புத்திசாலியான ஆண்களை விட வசதியான ஆண்களை பிடிக்கின்றது?
***

@CarbonKaradi
பிறக்கும் போதே ஒரு குவாட்டர் சொல்ல முனைந்தேன்... திக்கு வாயால் சொல்ல முடியாமல் போயிற்று! #குவா குவா குவா!
***

@iSankarS
உன் தாயின் அழுகைக்கு என்று நீ காரணமாகிறாயோ அன்றே நீ பாதி செத்துவிட்டாய் என்று தான் அர்த்தம்!
***

@g_for_Guru
அந்த 50 பேருக்கும் ஒத்தடிப்பாதைக்கும் பல பேர் புழங்குன பாதைக்குமா வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியவில்லை.. வெட்ககேடு. #சஹானா
***

@Araikurai
ஓங்கி அறைந்தது மரணம் அதன்பின் ஒருபோதும் வலிக்கவில்லை வாழ்க்கை!
***

@senthilcp
காலைல எந்திரிச்சதும் பேப்பர் படிக்க டீக்கடைக்கோ, சலூனுக்கோ போகும் பழக்கத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துனதே சம்சாரங்க தான் என அவதானிக்கிறேன்.
***

@143di
ஏன் அப்பாக்கள் காதலை எதிர்க்கிறார்கள் என்றாள். படைப்பாளியின் படைப்பை திருடினால் கோபம் வரத்தானே செய்யும் என்றேன்.
***

@sallai7
பட்டாசுகளையே தவிர்த்துவிடலாம் போல தோன்றுகிறது. #குழந்தைதொழிலாளர்கள்.#விபத்துகள்#முதலாளித்துவம்.#சுற்றுசூழல்.
***

@am_jamal
நிரந்தர முகவரி!!! நிரந்தர முகவரி!!! விண்ணப்பத்தில் இதை நிரப்பும் போதெல்லாம் வலித்தது வாடகை வீட்டில் குடி இருப்பவனின் மனம்..
***

@devaseema
"பெற்றோரின் இறப்பில் கூட இறுகி இருந்து காரியம் ஆற்றி விட்டு பின் தனியே அழும் ஆண்களின் கண்ணீர் உன்னதம்"
***

@R_sasikumar
கைபேசியின் காண்டாக்ட் லிஸ்டை உருட்டும் ஒவ்வொரு முறையும் வந்து வந்து உறுத்துகின்றான் பிரிந்து போன நண்பன் அழிக்கப்படாத அவனது எண் அதே இடத்தில.
***

@covaialtu
எல்லாப் பெண்களும் தங்கள் கணவருக்கு ராணியாக இருப்பதில்லை. ஆனால், அவர்கள் என்றும் தங்கள் அப்பாவிற்கு இளவரசி தான்!
***

@icn5
புருசன்கிட்ட சண்டைய போட வேண்டியது, அங்க திட்ட முடியாட்டி இங்க வந்து ஆண்வர்க்கத்தையே தெருவுக்கிழுக்குறது, கேட்ட பெண்ணியம்ங்கிறது. #முடியல
***

@thangavel111
கருணாநிதி, சிதம்பரம், சோனியா, சரத்பவார், அம்பானி, டாட்டா, பில்கேட்ஸ்.. ஒண்ணா குந்தவச்சி நக்கலா ஒரேஒருசிரிப்பு #ifworldendin2012
***#***#***
Reply all
Reply to author
Forward
0 new messages