சங்கமம் லைவ் :: செய்திகள்

68 views
Skip to first unread message

sangamam live

unread,
Aug 26, 2009, 4:24:10 PM8/26/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


சிறப்புப்பகுதி
செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? : முரசொலி கேள்வி
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது.

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா.  அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.  
மேலும் படிக்க…


இலங்கை



கல்வி / வேலை வாய்ப்பு



விளையாட்டு



சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வசுந்தராவுக்கு கெடு
புதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் முதல்வர் வசந்தரா ராஜேவுக்கு பா.ஜ.மேலிடம் 3 நாள் கெடு விதித்துள்ளது.
 

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு, சென்னை பயணிகள் தப்பினர்
சென்னை, நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ் விமான இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது . உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.
 

நாடு முழுவதும் 22 போலி பல்கலை கழகங்கள் யுஜிசி எச்சரிக்கை
நாகர்கோவில், அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு தாங்கள் சேரும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் யுஜிசியின் இணையதளத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் முழுமையான பட்டியல் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 29 உள்ளன.
 

கொடைக்கானல் பல்கலை வெள்ளி விழா முதல்வர் கருணாநிதி பங்கேற்பு
கொடைக்கானல், கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் முழுஉருவ சிலையை அக்டோபர் 15-ல் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என துணைவேந்தர் அருணா சிவகாமி கூறினார்.
 

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது
திருவள்ளூர், 'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

அணுசக்தி பிரச்சனை : அமெரிக்காவுக்கு வடகொரியா அழைப்பு
சியோல், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அணுசக்திப் பிரச்சனை பற்றி விவாதிப்பதற்கு அடுத்த மாதம் பியாங்யாங்குக்கு வருகை தருமபடி அமெரிக்க தூதருக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது.

சிஐஏ அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை
வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் அதிகார துஷ்பிரயோகத்தின் வாயிலாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் வழக்களை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று நீதித்துறையின் அறநெறி அலுவலகம் அட்டர்னி ஜெனரல் எரிக்ஹோல்டருக்குப் பரிந்துரை செய்துள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் திங்களன்று கூறினார்.
     

மதுரை வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : சாமித்துரை வெற்றி
மதுரை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2009-10 ஆண்டுக்கான தேர்தலில், இந்திய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த கு. சாமிதுரை தலையிலான அணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
       

பாஜக தலைமையை : ஆர்எஸ்எஸ் கைப்பற்றா வேண்டும் -அருண்ஷோரி
புதுடெல்லி, ஜஸ்வந்த் சிங்கை அடுத்து பாஜக தலைமையைக் கடுமையான எதிர்க்கும் வகையில் அருண்ஷோரி, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்றத்திற்கு அட்வகேட் ஜெனரல் நியமனம்
சென்னை, சென்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுரை கிளையில் சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றிய வி.செல்லம்மாள் மூர்த்தி, கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

அவர் பதவியை ஏற்கும் நாளில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பொறுப்பு வகிப்பார் எ‌ன்று‌ம் அவ‌ர் தமிழக அரசின் அனைத்துத்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளையும் கவனிப்பார் எ‌ன்று‌ம் த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் கூறப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வருக்கு : 'எப்டிஐ ஆசியன் பெர்சனாலிட்டி' விருது
காந்திநகர்: பைனான்சியல் டைம்ஸ் குழுமத்தின் இதழான எப்டிஐ, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எப்டிஐ ஆசியன் பெர்சனாலிட்டி விருதுக்காக தேர்வு செய்துள்ளது.

உலகம் முழுவதும் அரசியல் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருதினை எப்டிஐ இதழ் வழங்கி வருகிறது.

மழைக்காலம் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் : சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை,- மழைக்காலத்தில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவவாய்ப்பு உள்ளதாககருதி அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சுகா தாரத்துறை மேற்கொள்கிறது.

“ஸ்வைன்புளு” என்று அழைக்கக் கூடிய பன்றிக்காய்ச்சல் தமிழத்தில் பரவிவருகிறது. இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் தொற்றக்கூடியது.

மழைக்காலங்களில் இந்நோய் கிருமி மிக எளிதாக தாக்கும். அடைமழை, வெள்ளம், குளிர் ஆகிய வற்றின் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவும் என்று கூறப்படுகிறது.

 இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறிய தாவது:-
 

காக்னிஸன்ட் : கோவையில் ரூ.180 கோடி திட்டத்தில் புதிய வளாகம் உருவாக்கம்
 
        கோயம்புத்தூர் , தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கீரநத்தம் கிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய வளாகம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
 

இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது: கி.வீரமணி எதிர்ப்பு
சென்னை, மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பன்றிக் காய்ச்சல் ஹஜ் பயணம் : சவூதி கட்டுப்பாடு
டெல்லி: பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

விநாயகர் ஊர்வலம் : முஸ்லிம்கள் வரவேற்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக, 12 ஆண்டுகளுக்கு பின்பு விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்தது. முஸ்லிம் பிரமுகர்கள் வரவேற்றனர்.

வி.ஐ.பிக்கள் பாதுகாப்பு குறைப்பு : ப.சிதம்பரம் அதிரடி
புதுடெல்லி,- டெல்லி போலீசாருக்கு பணி சுமை அதிகரித்துள்ளதால் வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு குறைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறி இருந்தார். அதன்படி நடிகர் கோவிந்தா உள்பட 20 பேரின் பாதுகாப்பை விலக்கி உத்தரவிட்டுள்ளார்.

வருண்காந்தி உள்பட சிலரின் பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பா.ஐ.க. தலைவர் அத்வானிக்கு மட்டும் 258 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி - நடிகர் விஜய் சந்திப்பு
புதுடில்லி : நடிகர் விஜய் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாக தெரிகிறது. இதுபற்றி விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. விஜய்யும், ராகுலும் அடிக்கடி இ-மெயிலில் பேசிக் கொள்வார்கள், என்றார். ஏற்கனவே நடிகர் விஜய் இலவச கம்ப்யூட்டர் மையம், ரத்ததானம் என்று பல்வேறு சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் டில்லி அரசியிலி்ல் முக்கிய பிரமுகரான ராகுலை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய கூடைப்பந்து : கோவையில் துவக்கம்
கோவை: அகில இந்திய அளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி கோவையில்  துவங்கியது.முதன்முறையாக இந்தியாவிலேயே 25 லட்சம் ரூபாய் செலவில், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட செயற்கை தளம் அமைக்கப்பட்டது.

தவணையில் ஜீன்ஸ் ஆடைகள்
பெங்களூர் : வீடு, கார் ஆகியவற்றை தவணைமுறையில் சுலபமாக வாங்குவதைப் போன்று ஜீன்ஸ் ஆடைகளையும் இனி வாங்கமுடியும். 1980களில் நீலநிற டெனிம் துணியில் ஜீன்ஸ் ஆடையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய லெவிஸ், தற்போது 3மாத வட்டியில்லா சுலபத்தவணை திட்டத்தில் ஜீன்ஸ்ஆடைகளை வாங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. 

ரூ.18 ஆயிரம் கோடி சம்பள நிலுவை, 50 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக வழங்க மத்தியஅரசு ஏற்பாடு
புதுடெல்லி: ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய இரண்டாவது சம்பள நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் இந்தப் பணம் கிடைக்கும். இதன் மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள். மத்திய அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

2015 உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு - பிளின்டாப் அறிவிப்பு
லண்டன், 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிளின்டாப் கூறியிருக்கிறார்.

ஆஷஸ் வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் 31 வயதான பிளின்டாப், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். இந்த நிலையில் டெஸ்டின் போது மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு அவர் நேற்று முன்தினம் ஆபரேஷன் செய்து கொண்டார். இதனால் ஆண்டு இறுதிவரை எந்த சர்வதேச போட்டியிலும் ஆட முடியாத நிலையில் அவர் உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

மெரினா நீச்சல்குளம் : ரூ.70 லட்சத்தில் புதுப்பிப்பு
சென்னை, மெரினா நீச்சல்குளம் ரூ.70 லட்சம் புதுப்பிக்கப்படுவதை சென்னை மாநகராட்சி மேயர் திரு.மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்

லஞ்சம், ஊழல் எதிர்ப்பு மாநாடு: பிரதமர் துவக்கி வைப்பு

         புதுடில்லி
: மத்திய புலனாய்வுத் துறையினரின், லஞ்சம், ஊழல் எதிர்ப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாட்டை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைக்கிறார்.

 

சாம்பியன் டிராபி தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

                கொழும்பு
: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பண்டாரா, வாஸ் நீக்கப்பட்டுள்ளனர்.
 

சிபிஎஸ்ஈ பள்ளி : பாஸ், பெயில் முறைக்கு பதில் தரவரிசைமுறை விரைவில் அறிமுகம்


பா.ஜ.க. - மத்திய அமைச்சர் மோதலில் ஆர்எஸ்எஸ் தலையிடாது: ராம் மாதவ் தகவல்
     
   புதுடெல்லி, பாஜக தலைமைக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் ஆர்எஸ்எஸ் தலையிடாது என்று அவ்வமைப்பின் தொடர்பாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

சர்க்கரை கையிருப்பு அளவு குறைவு: அரசு அதிகாரி தகவல்

       புதுடெல்லி
, இந்தியாவில் சர்க்கரை கையிருப்பு மிகக்குறைந்த அளவில் உள்ளது என்றும் வரும் திருவிழாக் காலம் வரை போதிய அளவாக 45 லட்சம் டன்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மும்பை பங்குச் சந்தை : பீ.எஸ்.இ-ஐ.பி.ஓ. குறியீட்டு எண் அறிமுகம்

            மும்பை
, ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த பங்குச் சந்தை என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தை சென்ற திங்கள்கிழமை அன்று புதிதாக ‘பீ.எஸ்.இ., ஐ.பி.ஓ. குறியீட்டு எண்’ ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இலங்கை போர் குற்றம் : தமிழர் கொடூர கொலை
 
       லண்டன், வன்னியில் தமிழர்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இலங்கை ராணுவம், மனித குலமே வெறுக்கும் வகையிலான கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

 

அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி : மரணம்
            வாஷிங்டன் , அமெரிக்க செனட்டரும், முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் சகோதரருமான எட்வர்ட் கென்னடி மரணமடைந்தார். அவருக்கு வயது 77.
























 

நீதிபதியை மாற்றும்வரை நீதிமன்றத்திற்க்கு செல்வதில்லை : வழக்கறிஞர் உண்ணாவிரதம்

     கோவை, கோவை மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
 

துணைவேந்தர் பதவிகாலம் 5 வருடமாக்க முயற்சி
 
          சென்னை,
துணைவேந்தர் பதவிகாலத்தை 3 வருடத்தில் இருந்து 5 வருடங்களாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் தெரிவித்தார்.
 

6-வது சம்பள கமிஷன் : 60 சத நிலுவைத்தொகை

புதுடெல்லி
, 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதி 60 சதவீத நிலுவைத்தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

குண்டாக இருப்பதால் 2 டிக்கெட் வாங்கவேண்டும்: விமானத்தில் ஏற அனுமதி ம்றுப்பு
           ரோம் , இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் அன்னா டெல்லுசி. 55 வயதான இந்த பெண்ணின் உடல் எடை 98 கிலோ ஆகும். உடல் குண்டான அவர் பாரி என்ற இடத்தில் இருந்து ரோம் நகருக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த ஊழியர், இவர் உடல் குண்டாக இருந்ததால், 2 டிக்கெட் வாங்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.

 

குண்டாக இருப்பதால் 2 டிக்கெட் வாங்கவேண்டும்: விமானத்தில் ஏற அனுமதி ம்றுப்பு
           ரோம் , இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் அன்னா டெல்லுசி. 55 வயதான இந்த பெண்ணின் உடல் எடை 98 கிலோ ஆகும். உடல் குண்டான அவர் பாரி என்ற இடத்தில் இருந்து ரோம் நகருக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த ஊழியர், இவர் உடல் குண்டாக இருந்ததால், 2 டிக்கெட் வாங்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.

 

முடிவெட்டிக்கொள்ள ரூ.10 லட்சம் செலவு செய்யும் புருனே மன்னர்
              புருனே, உலகக் கோடீசுவரர்களில் ஒருவர் புரூனே நாட்டு மன்னர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.84 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவர் முடிவெட்டிக்கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் ரூ.10 லட்சம் செலவிடுகிறார்.

சட்டத்தை மீறிய முஸ்லிம் பெண்ணுக்கு பிரம்படி தண்டனை தள்ளிவைப்பு
              கோலாலம்பூர்,  மலேசியாவில் பொது இடத்தில் முஸ்லிம் பெண்கள் மதுபானம் குடிப்பது இஸ்லாமிய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்த குற்றத்தை செய்த கார்த்திகா தேவி சாரி சுகர்னோ என்ற முஸ்லிம் பெண்ணுக்கு அந்த நாட்டுச்சட்டப்படி பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.

ஐ.ஓ.சி பொன்விழாவில் அதிகாரி தகவல் : 3 ஆண்டுகள் காத்திருந்ததன் பலன் காஸ் 2 சிலிண்டர் இணைப்பு


                சென்னை
, பதிவு செய்து 3 ஆண்டுகள் காத்திருந்த இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு 2 சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இண்டேன் அதிகாரி கூறினார்.

 

சென்னையில் செப்டம்பர் 17, 18 ஆம் தேதி கலெக்டர் மாநாடு
 சென்னை,- சென்னையில் செப்டம்பர் 17, 18 தேதிகளில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.

  
தமிழகத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்திய கடலோர பாதுகாப்புப்படை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா பேட்டி
 சென்னை,- இந்திய கடலோர மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்புக்காக புதிய கப்பல்கள், விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்திய கடலோர பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல், வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா கூறினார்.

 

வெள்ள அபாயம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம்
புதுடெல்லி, வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிய ஆறுகளின் நீர்த்தேக்கங்களில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப்போவதாக மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

தமிழக ஐஏஎஸ் அடிமைகள் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒப்புதல்
 திருநெல்வேலி : தாழ்த்தப்பட்ட தேவேந்திர குல இன மக்களைப் போல, ஐஏஎஸ் அதிகாரிகளும் அடிமைகளாகத்தான் செயல்படுகிறோம் என்று சுடுகாட்டுக் கொட்டைகை ஊழலை புதைகுழியில் இருந்து வெளியே கொண்டு வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக சிறுசெமிப்புத்துறை இயக்குனருமான உமாசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடு அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்
சென்னை,: ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீட்டு வசதிகளை வழங்குவதில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்தித் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

 

சட்ட நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெயந்தி நடராஜன்
புது தில்லி,: சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்படவுள்ளார். தற்போது இக்குழு தலைவராக இருக்கும் சுதர்சன நாச்சியப்பன் மாற்றப்படவுள்ளார்.

"தட்கல்" ரயில் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1 முதல் கட்டணக் குறைப்பு
சென்னை,: நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்ய "தட்கல்' முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டணக் குறைப்பு சலுகை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

விதை மானியம் ரூ. 288 கோடியாக மத்திய அர்சு அதிகரிப்பு
 புது டில்லி,: பருவ மழை குறைவாக பெய்துள்ள காரணத்தால் விதைக்காக வழங்கப்படும் மானியத்தை ரூ. 288 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
 

விளையாட்டு நிர்வாகிகளுக்கு முதல்வர் விளையாட்டு விருது
சென்னை,: விளையாட்டு நிர்வாகிகள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், நடுவர்கள், ஆட்ட நடுவர்களுக்கு முதல்வர் விளையாட்டு விருதுகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விசைத்தறி ஜவளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
கோவை,: தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

              

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் பன்றிக் காய்ச்சல்
சென்னை,: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

                 அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சுயநிதி மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் 28 காலியிடம்
  சென்னை,: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 28 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

                 எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் சென்னையில் செவ்வாய்க்கிழமை முடிந்தது.
 

ஊரமானியம் ஊர கம்பெனிக்கல்ல ஏழை விவசாயிகளுக்கே அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி
 சென்னை விவசாயிகளுக்கான பல அயிரம் கோடியை ஊரமானியம் ஊர அலை அதிபர்களிடம் கொடுக்காமல் நேரடியாக ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கும் திமுக திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் வழங்கி பாராட்டியுள்ளார் என்று மத்திய ஊர மற்றும் இரசாயணத்துறை அமைச்சரும், தென்மண்டல திமுக செயலாளருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

 

விவசாய பயிர்க் காப்பீடு இழப்பீடு அரசு அறிவிப்பு
  நாகப்பட்டினம்,: 2008-09-ம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை, நிகழ் சம்பா பருவப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்கும் என மாநில வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
 

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி ஆட்சியர் அறிவிப்பு
  விழுப்புரம்: விழுப்புரம் மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் தொடங்குவதற்கு ஏற்ப தேவையான கட்டுமானப் பணிகள் 2010 மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என்று ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 

சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம், கிள்ளுக் கீரையான தமிழன் - வெளிச்சமிடும் சேனல் 4
கொழும்பு, விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது தமிழர்களின் கண்கள் மற்றும் கைகளை கட்டி இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகளை இங்கிலாந்ததைச் சேர்ந்த சேனல்-4 டி.வி. ஒளிப்பரப்பியது.
 
விடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.


 

ஜெயலலிதாவின் தவறுக்கு, சவுக்கடி தண்டனை நிச்சயம் : மு.க.அழகிரி
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்நாள் தவறு தேர்தல் புறக்கணிப்பு என்றும் தவறு செய்தவருக்கு சவுக்கடி நிச்சயம் என தென் மண்டல திமுக அமைப்பின் செயலாளரும் மத்திய அமைச்சருமான முக.அழகிரி கூறியுள்ளார்.

`சுவிஸ்' வங்கி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை தொடங்கிது - பட்டியல் தயாரிப்பு
புதுடெல்லி, `சுவிஸ்' வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள், தங்கள் கறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக போட்டு வைத்துள்ளனர். இந்த பணத்தின் அளவு ரூ.70 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த பணத்தை மீட்பது பற்றி வலுவான கோரிக்கைகள் எழத்தொடங்கி உள்ளன.
 

`மாவோ' தீவிரவாதிகள் வன்முறை: ஒரிசாவில் ரெயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு
ரூர்கேலா, ஒரிசா மாநிலத்தில், ரெயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்த்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், ரெயில் நிலைய அதிகாரி உள்பட 3 ஊழியர்களை கடத்திச் சென்றனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மேலிட குழு தலைவர்களான அனில், கார்த்திக் ஆகியோர் பீகாரில் கைது செய்யப்பட்டதை கண்டித்து 2 நாள் முழு அமைப்பு (பந்த்) அறிவிக்கப்பட்டு இருந்தது. பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் முதல் நாளான நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. செல்போன் கோபுரத்துக்கு தீவைக்கப்பட்டது. போராட்டத்தின் 2-வது நாளான நேற்று, ஒரிசா மற்றும் பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தி திணிப்பு நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் - ராமதாஸ்
சென்னை, அண்ணா நூற்றாண்டு விழாவில் இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பதுங்கியிருக்கும் `இந்தி திணிப்பு' என்கிற பூதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைகாட்ட தொடங்கிவிடுகிறது.

``விவாகரத்துக்கு காரணம் கருத்து வேறுபாடுதான்''- டைரக்டர் செல்வராகவன் பேட்டி
``சோனியா அகர்வாலும், நானும் விவாகரத்து செய்துகொள்வதற்கு காரணம், கருத்து வேறுபாடுதான். வேறு எதுவும் இல்லை'' என்று டைரக்டர் செல்வராகவன் கூறினார்.

நடிகை சோனியா அகர்வால், சண்டிகாரை சேர்ந்தவர். செல்வராகவன் டைரக்டு செய்த `காதல் கொண்டேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளாமல், சில வருடங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

ஆண் - பெண் இரு பாலருக்கும் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்ற பிறகே திருமணம் -நடிகை மனோரமா கோரிக்கை
சென்னை, ஆண்மை குறைவு, எய்ட்ஸ் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஆண், பெண் இருவரும் திருமணம் செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நடிகை மனோரமா கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நடிகை மனோரமா முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 

அண்ணா நூற்றாண்டு விழா, திமுக இளைஞரணி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி-கட்டுரைப்போட்டி
சென்னை,  தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறும் என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

காங்கிரஸுடன் கூட்டணி ?- விஜயகாந்த் பேட்டி
சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.அப்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் நேரிலும், போனிலும் விஜயாகந்திற்கு வாழ்த்து கூறினார். இதனால் அவர் விரைவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடினார்.

 

செப் 17, 18 ல் கலெக்டர்கள் மாநாடு
சென்னை, சென்னையில் செப்டம்பர் 17, 18 தேதிகளில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும், மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்டு, உரிய ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

 

தலைமை மீது விமர்சனம்: அருண் ஷோரியிடம் விளக்கம் கேட்கிறது, பா.ஜனதா
புதுடெல்லி, பா.ஜனதா தலைமையை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் மத்திய மந்திரி அருண்ஷோரியிடம் விளக்கம் கேட்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

Click here to end all Your subscriptions


  சங்கமம் செய்திகளை SMS ல் பெற இங்கே கிளிக் செய்யவும்

(This is an autogenerated news mail, please do not respond )

sri balamurali

unread,
Aug 27, 2009, 2:47:47 PM8/27/09
to tamila...@googlegroups.com
ராகுல் காந்தி - நடிகர் விஜய் சந்திப்பு
புதுடில்லி : நடிகர் விஜய் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாக தெரிகிறது. இதுபற்றி விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. விஜய்யும், ராகுலும் அடிக்கடி இ-மெயிலில் பேசிக் கொள்வார்கள், என்றார். ஏற்கனவே நடிகர் விஜய் இலவச கம்ப்யூட்டர் மையம், ரத்ததானம் என்று பல்வேறு சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் டில்லி அரசியிலி்ல் முக்கிய பிரமுகரான ராகுலை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக.. ஒரு செய்தி கேள்விப் பட்டேன்..
என்னத்தைச் சொல்ல...
ஆயிரம் தலைவர்களின் கேலிக் கூடாரத்துக்குள்ளே நடுவே ஒரு தளபதியா?
ஹெஹ்ஹே..!

sangamam live

unread,
Aug 27, 2009, 4:11:55 PM8/27/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறும் பயிற்சிகள்

இறைச்சிப் பொருள்


 

                நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட்-27 ம் தேதி இறைச்சிப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்

                தொடர்புக்கு : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04288-266345, 266244.
 
கம்ப்யூட்டர் பயிற்சி 31ம் தேதி மாணவர் சேர்க்கை
 
        சென்னை
, சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் சான்றிதழுடன் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.

 
பகவத் கீதை வகுப்புகள் 30 ஆம் தேதி துவக்கம்
                
         சென்னை
: பகவத் கீதையின் ரகசியத்தை அறிய, இஸ் கான் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) "தன்னை அறியும் விஞ்ஞானம்' என்ற தலைப்பில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோருக்கு ஏழு நாள் வகுப்புகள் நடத்துகிறது. இந்த வகுப்புகள், வரும் 30ம் தேதி துவங்குகிறது
பொது கல்வி வாரியம் அமைப்பது பற்றி நாளை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சென்னை, தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் தலைமையில் நடந்த உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாநில பாடத்திட்ட கல்வி முறை, மெட்ரிக்குலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, ஓ.எஸ்.எல்.சி கல்வி முறை என்று நான்கு பிரிவுகளின் கீழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. இவை மாணவர்களிடையே வேறுபாட்டை உருவாக்குகிறது. அதனால் மேற்கண்ட நான்கு கல்வி முறைகளையும் ஒன்றாக இணைத்து அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்ட சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரவேண்டும். மேற்கண்ட நான்கு கல்வி முறைகளில் வேறுபாட்டை உண்டாக்கும் காரணிகளை நீக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்தனர். அதை ஒரு கோரிக்கையாகவே அரசுக்கு கொடுத்தனர்.
 
500 ரூபாய் லேப்டாப் விரைவில் அறிமுகம் - அமைச்சர் தகவல்
ஐதராபாத், ரூ.500க்கு லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணியில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.
 
வறுமை கொடுமையால், குழந்தையை உயிருடன் புதைத்த தாய்
கோவை, வறுமை கொடுமையால் குழந்தையை உயிருடன் புதைத்த தாய் போலீசில் சிக்கினார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி புதுப்புதூர். இங்குள்ள சுடுகாட்டில் 2 நாட்களுக்கு முன்பு முகம் தவிர உடல் முழுவதும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் 2 மாத பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையின் முகத்தில் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன. காலைக்கடன் கழிக்கச் சென்ற பெண்கள், குழந்தை அழுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்தியா முழுவதும் 7 ஐ.ஐ.எம் கள் தொடங்க மத்திய அமைச்சரவை முடிவு
புதுடெல்லி, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் புதிய ஐ.ஐ.எம் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ராய்பூரிலும், தமிழகத்தில் திருச்சியிலும், அரியானாவில் ரோஹ்தக் என்ற இடத்திலும் புதிய ஐ.ஐ.எம்கள் அமைக்கப்படுகின்றன. உத்ரகாண்ட், காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்னும் இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு ஐ.ஐ.எம்-ஐ உருவாக்க சுமார் ரூ.250 கோடி செலவாகும். மொத்தம் 7 ஐ.ஐ.எம்.களை உருவாக்க ரூ.1,750 கோடி செலவிடப்படுகிறது.
 
மூத்த பத்திரிகையாளர் அண்ணா சக்தி காலமானார்
சென்னை., மூத்த பத்திரிகையாளர் அண்ணா சக்தி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நிறுவனராக இருந்த அண்ணா நாளிதழில் பணியாற்றியவர் மு.சக்தி. தாய் வார இதழ் நம் தினமதி உள்ளிட்ட நாளேடுகளிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சக்தி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக தனியார் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு மணைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அண்ணா சக்தியின் மறைவுச் செய்தி அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சக்தியின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை வடபழனியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து தியாகராயநகர் கண்ணம்மாபேட்டைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
தேயிலை விளைச்சல் குறைவு, டீ, காபி விலை உயரும்
  கோவை : சர்க்கரை, தேயிலை, காபித் தூள் விலை உயர்வை தொடர்ந்து, டீ, காபியின் விலையும் உயரலாம் எனத் தெரிகிறது
அமெரிக்க போதைபொருள் கடத்தல்காரர்கள் ஆண்டு வருமானம் 63 பில்லியன் டாலர்
சிடாட் ஜாரஸ்: தென் அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு வருடத்திற்கு கிடைக்கும் வருமானம் சுமார் 63 பில்லியன் டாலர்கள் ( சுமார் 3,02,000 கோடி ரூபாய் ) என்று மெக்ஸிகோவின் உயர் அதிகாரி ஜெனரோ கார்சியா லூனா தெரிவித்திருக்கிறார்
“ராங் நம்பர்" : அடித்து உதைத்து நிர்வாணமாக்கி ஊர்வலம்
பிவானி,- அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள தனி ரம்ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கடந்த திங்கட்கிழமை அவர் தொழில் விஷயமாக வெளியூருக்கு போன் செய்து கொண்டிருந்தார். சுரேஷ் சற்று கவனக்குறைவாக டயல் செய்ததால், பக்கத்து ஊரைச்சேர்ந்த தரம்சிங் என்பவருக்கு போன் அழைப்பு சென்றது. பேசத் தொடங்கிய உடனேயே தன் தவறை உணர்ந்த சுரேஷ், சாரி சார். ராங் நம்பர் என்று கூறி தொடர்பை துண்டித்தார்.
 
நீதிபதி சொத்து விவரம் : வீரப்பமொய்லி பாராட்டு
 
        புதுடெல்லி,
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் சொத்து மதிப்பை வெளியிட எடுத்துள்ள முடிவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்பமொய்லி வரவேற்றுள்ளார்
ஏழை மாணவ-மாணவிகளுக்கு தொழில் பயிற்சி: கட்டணம் ரூ.145 மட்டுமே

                சென்னை,
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழுடன் தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
துபாய் : 13வ‌து திருக்குர்ஆன் மாநாடு மற்றும் விளக்கவுரை 200 வது வாரவிழா

        துபாய்,
துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13வ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200வ‌து வார‌ விழாவை இன்று (27ம் தேதி) த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி (கோட்டை) ப‌ள்ளியில் ந‌டத்துகின்றன.

 
வேலைவாய்ப்பு பதிவு : அவகாச‌ம் நீட்டிப்பு

                சென்னை,
கடந்த ஆண்டு விடுபட்டுபோன வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ள 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 
பிச்சைக்காரர்களைக் கண்டால் போலீசார் கைது

பிச்சை எடுத்தால் இனி குற்றமாகக் கருதப்படும். மேகாலயா மாநிலத்தில் இது அமல்படுத்தப்பட உள்ளது.
 
தாஜ்மகால் உட்பட ஆக்ராவிலுள்ள சுற்றுலாத்தலங்கள் தூய்மைபடுத்த திட்டம்

        புதுடில்லி
: மத்திய சுற்றுலா அமைச்சகமும், உ.பி., மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து, தாஜ்மகால் உட்பட ஆக்ராவிலுள்ள சுற்றுலாத் தலங்களை தூய்மைப்படுத்த முடிவு செய்துள்ளன.

 
பாக்.கில் மீண்டும் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை பிடிக்க முஷரப் திட்டம்
இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் ராணுவ புரட்சி மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க முஷரப் ரகசிய திட்டம் தீட்டி இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்து முஷரப் தொடர்ந்து 9 ஆண்டுகள் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலகினார்.இவருக்கு பின் அதிபராக வந்த சர்தாரி முஷரப் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
 
முஷரப் மீது ராணுவ புரட்சியை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்து வருகின்றனர்.
பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் 29-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, அண்மையில் அறிவிக்கப்பட்ட பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
காங்கிரசில் சேர விஜய், பிரபுவுக்கு அழைப்பு: சோனியா முன்னிலையில் இணைப்பு விழா
சென்னை,  தமிழக காங்கிரசை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
 
இந்த நிலையில் விஜய்யை டெல்லிக்கு அழைத்து ராகுல் காந்தி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.
 
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவக்கி அரசியலில் ஈடுபடுவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்.
கண்களை கட்டி ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: இந்திய அரசு விசாரணை ; எஸ்.எம். கிருஷ்ணா
புதுடெல்லி,  இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சக்கட்ட சண்டை நடந்த போது சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத்தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள்.  அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.
 
முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்கள ராணுவத்தினர், அவர்களை கடத்திச்சென்று படுகொலை செய்கிறார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அனைவரையும் சிங்கள ராணுவம் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டது.
 
ஈழத் தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - வைகோ
சென்னை, ஈழத் தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.
 
அதிகார துஷ்பிரயோகம் புகார், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலகுவாரா?
சென்னை, கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தற்காலிக பணிநீக்கம் செய்வது குறித்து அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை, இரட்டை கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
சென்னை, இரட்டை கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை உடனே தொடங்கி விட்டது. நேற்று மாலை கொலை நடந்த வீட்டில் டி.ஐ.ஜி. தலைமையில் அதிகாரிகள் விசாரித்தார்கள்.
 
தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை
சென்னை, அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்விமுறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழிவகுப்போம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

அதன்படி தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பல்வேறு கல்வி முறைகளான நர்சரி கல்வி முறை, மெட்ரிகுலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ-இந்தியன் கல்வி முறை, ஓரியண்டல் கல்விமுறை, மாநில வாரியக் கல்வி முறை ஆகியவற்றை ஆய்வு செய்து அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்திட 8-9-2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் முதல்-அமைச்சர் கருணாநிதியால் குழு அமைக்கப்பட்டது.
 
அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி : மரணம்
வாஷிங்டன் , அமெரிக்க செனட்டரும், முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் சகோதரருமான எட்வர்ட் கென்னடி மரணமடைந்தார். அவருக்கு வயது 77. 

sri balamurali

unread,
Aug 28, 2009, 12:19:12 PM8/28/09
to tamila...@googlegroups.com
(This is an autogenerated news mail, please do not respond )
இது ஏன் இப்படி?
இதை கவனிக்காமதான் நான் ரிப்ளை பண்னிட்டிருக்கேனா?
:)

2009/8/28 sangamam live <edi...@sangamamlive.in>

sangamam live

unread,
Aug 28, 2009, 4:18:15 PM8/28/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? : முரசொலி கேள்வி
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது.

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா.  அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.  
மேலும் படிக்க…


இலங்கை



கல்வி / வேலை வாய்ப்பு



விளையாட்டு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் 8 ம் ஆண்டு விழா
தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா - சென்னையில் வரும் 30.8.2009 அன்று நடைபெற உள்ளது. சென்னை, மயிலாப்பூரில் உள்ள கே.என்.சண்முகசுந்தரம் அரங்கில் நடைபெறும் இந்த விழா பிற்பகல் 2 மணிக்கு  துவங்குகிறது. விழாவில் எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி முன்னிலை வகிக்கின்றார். தமிழ் எழுத்தில் மரபு எனும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணனும், புதிய விழிப்பின் முன்னோடி ஜி.சுப்ரமணிய அய்யர் எனும் தலைப்பில் பெ.சு.மணி அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னுலகப் பணிகள் எனும் தலைப்பில் நரசய்யாவும், மின்னாக்கம்; செய்முறை வழிமுறைகள் எனும் தலைப்பில் மருத்துவர் தி.வாசுதேவனும், மின் செய்தி தயாரித்தல் எனும் தலைப்பில் சுகுமாரன் ஆகியோரும் உரைநிகழ்த்த உள்ளனர்.
 
மழை நின்றுபோன இரவு - ஆபிரகாம்

உறுப்பு தானம் ; ஸ்டாலின் உறுதிமொழி
சென்னை,- உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார்.

 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின் இதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அந்த மருத்துவமனையின் உறுப்பு தான விழிப்புணர்வுத் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், தனது உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழிப் பத்திரத்தில் முதல் நபராக கையெழுத்திட்டார்.
 
இரட்டை கொலை வழக்கு : விஜயகாந்துக்கு சி.பி.சி.ஐ.டி.,சம்மன்
சென்னை : சென்னை பனையூரில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தனக்கு தெரிந்த விபரங்களை நேரில் வந்து தெரிவிக்குமாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்திற்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; அந்த கொலையை செய்தவரும் இறந்திருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஜஸ்வந்த் சிங்கை நீக்கியது தவறு - யஷ்வந்த் சின்கா கண்டனம்
புதுடெல்லி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்கியதற்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் அமைச்சருக்கு பிடி வாரன்ட்
ஈரோடு,ஈரோடு மாவட்டம், பெருந்துறை முள்ளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக, அவரது மாமனார் பழனிச்சாமி, மாமியார் மலர்விழி, மைத்துனர் சிவபாலன் ஆகியோரை சிலர் கடத்தி, சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அப்போதைய கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
கிராம பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மத்திய அமைச்சரவை அனுமதி
புதுடெல்லி, கிராம பஞ்சாயத்து பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களான பீகார், உத்தரகண்ட், இமாசல பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 
சாப்ட்வேர் இன்ஜினியர் வீடுகளை குறிவைத்து லேப்டாப் திருட்டு - டிரைவர் கைது
சென்னை,சாப்ட்வேர் இன்ஜினியர் வீடுகளை குறிவைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை திருடிவந்த டிரைவர் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
ஹஜ் செல்ல வயது தடையில்லை - தமிழ்நாடு ஹஜ் குழு அறிவிப்பு
சென்னை,  தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியா செல்லவிருக்கும் சமயங்களில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளை சவூதி அரேபிய அரசு தடை செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
 
சென்னை ரயில் தடம் புரண்டது , தீவிரவாதிகள் சதி?
கோவை, சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை அருகே நேற்று அதிகாலை தடம் புரண்டது. டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை கவிழ்த்து நாச காரியம் ஏற்படுத்த விஷமிகள் சதி செய்தனரா என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 
நாமம் அணிந்த டி.ஜி.பி யால். : சர்ச்சை
பாட்னா: பீகார் காவல் துறை தலைவர், நாமம் அணிந்து வருவதற்கு போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பீகார் டி.ஜி.பி.,யாக, கடந்த 2ம் தேதி ஆனந்த் சங்கர் பொறுப் பேற்றார். பதவி ஏற்பதற்கு முன், அலுவலகத்தில் 3 மணி நேரம், பூஜை போட்டார். பின், நெற்றி நிறைய சந்தன நாமம் போட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தினமும், சீருடையுடன், சந்தன நாமம் அணிந்து பணி செய்கிறார். டி.ஜி.பி.,யின் இந்த நடவடிக்கைக்கு, போலீஸ் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போலீஸ் சங்கத் தலைவர் ஜித்தேந்திர நாராயண் சிங் குறிப்பிடுகையில், "சுபால் போலீஸ் சரகத்தில் டி.எஸ்.பி., ஒருவர் கான்ஸ்டபிளை அடித்து விட்டார்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலமும் கணக்கிட்டு பென்ஷன் வழங்க அரசு உத்தரவு
சேலம், பணி நிரந்தரம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
பதவி விலக வசுந்தரா மறுப்பு: சிக்கல் நீடிப்பு
புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவுக்கு படுதோல்வி ஏற்பட்டது. இதற்கு பொறுப்பேற்று முன்னாள் முதல்-மந்திரி வசுந்தராராஜேயை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும்படி கட்சி மேலிடம் கட்டளையிட்டது. ஆனால் வசுந்தரா இதை ஏற்க மறுத்தார். அவர் கட்சி மேலிடத்துக்கு 3 நிபந்தனைகளை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் பதவி விலக தயாராக இருப்பதாக கூறினார்.
 
`ஜகன் மோகினி' படப்பிடிப்பு, 400 பயணிகளுடன் கப்பலில் நமீதா பயணம்
ஜெயமாலினி நடித்து, 1978-ம் வருடம் திரைக்கு வந்த `ஜகன் மோகினி' என்ற படத்தை, 31 வருடங்களுக்குப்பின் மீண்டும் தயாரித்து வருகிறார்கள். ஜெயமாலினி நடித்த வேடத்தில், நமீதா நடிக்கிறார்.

புதிய `ஜகன் மோகினி' படத்தின் டைரக்டர் என்.கே.விஸ்வநாதன், தயாரிப்பாளர் எச்.முரளி ஆகிய இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அவர்கள் கூறியதாவது:-
இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது - இல.கணேசன் குற்றச்சாட்டு
சென்னை,  இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியதன் மூலம் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்று இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புலிகளுக்கு ஆதரவு, தமிழக அரசு புது முயற்சி
சென்னை, தமிழக வனப்பகுதிகளில் புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசின் நிதியுதவியுடன், `டைகர் பவுண்டேஷன்' என்னும் புதிய பிரிவை மாநில அரசு தொடங்குகிறது. வனத்துறையின் இத்திட்டத்துக்கு நிதித்துறை விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

இது தொடர்பாக தமிழக வனத்துறை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று கூறியதாவது:-
 
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்வோர் ரூ.500-க்கு மேல் வைத்திருக்கக்கூடாது - அரசு உத்தரவு
சென்னை, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்வோர்,இனி 500 ரூபாய்க்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச புகார்கள் அதிக அளவு வந்ததன் காரணமாக, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனைகளில், கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதும், உயர் அதிகாரிகள் சிக்குவதும் தொடர்கதையாகிவிட்டது. இதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
 
பாடச் சுமைகளிலிருந்து விடுதலை பெறும் மாணவர்கள், சமச்சீர் கல்வி முழு விவரம்
சென்னை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைக்கு வருவதையடுத்து, தனியார் பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமை பாதிக்கு பாதியாக குறையும் நிலை உருவாகியுள்ளது. பாடங்களின் எண்ணிக்கை 10ல் இருந்து ஐந்தாக குறைய உள்ளது. மெட்ரிக் பத்தாம் வகுப்பிற்கு அமலில் உள்ள செய்முறைத் தேர்வுகளை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பனையூர் இரட்டைக் கொலை, அமைச்சர் பரிதி இளம்வழுதி தம்பிக்கு தொடர்பு?
சென்னை: பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் உங்கள் தம்பிக்கு தொடர்பா என்று செய்தியாளர் கேட்டபோது, ஆத்திரமடைந்த அமைச்சர் பரிதி இளம்வழுதி அதை மறுத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா கோயம்பேட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு முகாமை தொடக்கிவைத்தார்.
த‌ஞ்சாவூ‌ர் சாலை விபத்து : 10 பே‌ர் பலி
செ‌ன்னை, த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌ம் ஆடுதுறை அருகே இ‌ன்று காலை அரசு பேரு‌ந்து‌ம், வேனு‌ம் மோ‌தி‌க் கொ‌ண்ட கோர ‌விப‌த்த‌ி‌ல் 3 பெ‌ண்க‌ள், 2 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 10 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.
ஏழை மாணவர்களின் வங்கி கடன் வட்டி முழுவதும் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, "என்ஜினீயரிங், மருத்துவ படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களின் வங்கி கடன் வட்டி முழுவதும் ரத்து செய்யப்படும்'' என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய மந்திரி சபையின் பொருளாதார விவகார கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட மத்திய மந்திரிகள் கலந்து கொண்டார்கள்.
 
கேப்டன் பதவி வேண்டாம்.. பான்டிங்
சிட்னி, இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் தொடரை பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. இங்கிலாந்து மண்ணில் 123 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியா 2 டெஸ்டில் தோற்றுள்ளது.

அடுத்து 7 ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடவேண்டிய நிலையில் பான்டிங் அவசரமாக சிட்னி திரும்பியுள்ளார். . இந்நிலையில் சிட்னியில் அவர் அளித்த பேட்டி:
 

sangamam live

unread,
Aug 29, 2009, 4:31:57 PM8/29/09
to tamila...@googlegroups.com
சர்வதேச அளவில் காணாமல் போனோர் : இலங்கையில் அதிகம்
உலகில் அதிகளவு காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2000மாம் ஆண்டு முதல் பல நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் ஆணையர் பேட்டி
நெல்லை, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன், நெல்லை மண்டல நகராட்சிகளின் இணை இயக்குனர் மோகன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பு.மு.கா. மீண்டும் காங்கிரஸுடன் இணைந்தது;
புதுவை:பாராளுமன்ற தேர்தலின் போது புதுவை அரசியலில் கூட்டணி மாற்றங்கள் நடந்தது. காங்கிரஸ் அணியில் இருந்து பா.ம.க. வெளியேறி அ.தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணியில் இருந்து கண்ணனின் கட்சியான பு.மு.கா. வெளியேறி காங்கிரசுக்கும் இடம் மாறியது. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமிக்கு பு.மு.கா. நிறுவன தலைவர் கண்ணன் தீவிர பிரசாரமும் செய்தார். இதற்கு பிரதிபலனாக கண்ணனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு கடிதம் : கருணாநிதி பேட்டி
சென்னை: இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான் அனைத்து உடனடி உதவிகளையும் பிரதமர் மன்மோகன் சிங் கால தாமதமின்றி நிறைவேற்றுவார் என்று நம்புவதாக முதலமைச்சர் கருணாநிதி உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு மற்றும் நிவாரண வாழ்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் கூறியது;
புதுவைக்கு மாநில அந்தஸ்து : கலைஞரிடம் வைத்தியலிங்கம் வலியுறுத்தல்
சென்னை, தமிழக முதல்வர் கருணாநிதியை புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து தர ஆதரவு அளிக்குமாறு முதல்வர் கருணாநியை புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் கேட்டுக்கொண்டார்.
கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, பல்கலைகழகம்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
முதல் -அமைச்சர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
 
பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து தக்க பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட அலுவலர் குழு ஒன்றை அரசு நியமித்தது.
 
இந்தியாவின் அணுகுண்டு சோதனை சர்ச்சை ; பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
ராம்சர், பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது அந்த சோதனை குறித்த சர்ச்சைகள் தேவையில்லாதது என பிரதமர் மன்மோகன்சிங் இன்று ராஜஸ்தான் மாநிலம் ராம்சர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறினார்.
 
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகிறார் அருண்ஜெட்லி !!
புதுடெல்லி, பா.ஜ.வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் நிலைமையை சமாளிப்பது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்துடன் எல்.கே.அத்வானி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ராஜ்நாத்துக்கு பதிலாக அருண்ஜெட்லியை கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெய்வேலி என்எல்சி ஏஐடியூசி அலுவலகங்கள் மீண்டும் சீல் வைப்பு
நெய்வேலி, ஏஐடியூசி அலுவலகம் ஐகோர்ட் உத்தரவுப்படி இன்று காலை திறக்கப்பட்டது. ஆனால், என்எல்சி நிர்வாகம் மீண்டும் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்ததால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இனி கல்யாணத்திற்கும் இன்சூரன்ஸ்
மும்பை, திருமணத்தின்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத அசம்பாவிதங்களை சமாளிக்க, திருமணத்தை முன்கூட்டி இன்சூரன்ஸ் செய்யும் வசதி வந்து விட்டது.
 
ஆக 31-ல் சென்னை,ராஜாஜி பவனில் புத்தக கண்காட்சி
சென்னை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டு பிரிவு சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடக்கும்.
 
அக்.20 முதல் அம்பானி சகோதரர்கள் வழக்கு இறுதி விசாரணை
புதுடெல்லி, அம்பானி சகோதரர்கள் இடையிலான எரிவாயு சர்ச்சை வழக்கில் அக்டோபர் 20ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது.
ஜின்னாவைப் புகழ்ந்து நூல் எழுதிய ஜஸ்வந்த் சிங்கிற்கு பாகிஸ்தானில் கவாலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதற்காக, முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைப் பாராட்டி பாகிஸ்தான் பாடகர் வங்காய் மியான் கவாலி பாட்டு எழுதியிருக்கிறார்.
பன்றி காய்ச்சல்: உலகம் முழுவதும் 2100 பேர் பலி
ஜெனீவா, உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2100 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை : நோர்வே வலியுறுத்தல்
லண்டன்,  லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே வெறியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வேக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விஷயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் மூன்றரை மணி நேரத்தில் 14 ஆபரேஷன் சர்ச்சை- டீன் விளக்கம்
மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு மூன்றரை மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்று நோயை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர். இதை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
10 ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்காமல் டிப்ளமோ, பட்டம் பெற்று அரசு பணியில் சேர தடை
கோவை, திரைப்படக் கல்லூரி முதல்வர் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடரப்பட்டது.
 
5 ஆண்டு பணி புரிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பிஎட் படிக்க விடுப்பு - அரசு உத்தரவு
சென்னை, தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பிஎட் பட்ட படிப்பை நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இரட்டை கொலை வழக்கு விசாரணையை விரைவில் முடிப்போம் -சிபிசிஐடி கூடுதல் டிஜிபி
சென்னை, கப்பல் கேப்டன் கொலை வழக்கை விரைவில் முடிப்போம்என்று சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா கூறினார்.
ரூ.3 கோடி சுங்கவரி ஏய்ப்பு, தனியார் நிறுவனத்தின் குட்டி விமானம் பறிமுதல்
சென்னை, டெல்லியில் ‘ஜார் ஏர் ஏவியேஷன் பி லிமிடெட்’ என்ற தனியார் விமான நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து 8 சீட் கொண்ட ஒரு குட்டி விமானத்தை ரூ.12 கோடியே 84 லட்சத்துக்கு வாங்கியது. அது ‘டீச் கிராப்ட் சூப்பர் கிங் 200Õ ரக விமானம். சொந்த பயன்பாட்டுக்கு வாங்கியதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் நிறுவனத்தினர் கூறியிருந்தனர்.
 
எக்ஸ் பிரிவில் உள்ள 30 வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு ரத்து - மத்திய அரசு முடிவு
புதுடெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் உட்பட 30 வி.ஐ.பி.களுக்கு அளிக்கப்படும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

sangamam live

unread,
Aug 30, 2009, 4:29:14 PM8/30/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பு சார்பாக வேலூர் எம்பிக்கு பாராட்டுவிழா
துபாய் : வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் துபாய் - அமீரகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரிமைந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் அப்துல் ரஹ்மான் அவர்களின் தமிழ்ப் புலமையினை பாராட்டினார்.
 
துபாயில் இந்திய சமூக நல அறக்கட்டளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : துபாயில் இந்திய சமூக நல அறக்கட்டளை ( INDIAN COMMUNITY WELFARE COMMITTEE – ICWC under the patronage of Consul General of India )  இஃப்தார் நிகழ்ச்சியினை இந்திய கன்சலேட் அரங்கில் நடத்தியது.
சுவிஸ் வங்கிகளில் ரூ.7 லட்சம் கோடி கருப்புபணம் பதுக்கல் : அரசு ரகசிய விசாரணை
புதுடெல்லி, இந்திய தொழில் அதிபர்கள் பலர் சுவிஸ் வங்கிகளில் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரகசிய கணக்குகள் மூலம் இந்த கருப்பு பணம் முடங்கிக் கிடக்கிறது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்தது. ஆனால் சுவிஸ் வங்கி கூட்டமைப்பு இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டது.
 
ஈராக்கில் குண்டு வெடிதப்பு; 19 பேர் பலி
திக்ரித், ரம்ஜான் நோன்பு தொடங்கிய பின்னரும் கூட ஈராக்கில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். திக்ரித் நகரில் அல்-ஷர்ஹாத் பகுதியில் தற்கெலை படையினர், நேற்று கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
 
மத்திய கல்வி நிறுவனங்களில் கிரேடு முறை அமல்
புவனேஸ்வர், மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய சொல்லவில்லை. மாநில அரசுகள் அவற்றின் விருப்பபடி கல்வித் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் என்றுமனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
 
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.5 ஆயிரம் கோடி நிதி
புதுடெல்லி, நிதிநெருக்கடியால் தள்ளாடும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை காப்பாற்ற, மத்திய அரசு ரூ.5,000 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வாசன் வழங்கினார்.
'சந்திரயான்' திட்டம் வெற்றி : அப்துல் கலாம் கருத்து
பெங்களூர், சந்திரயான் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, முன்னாள் ஜனாதிபதியும், மூத்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியதாவது:
சினிமா பங்கு மதிப்பு 70 - 80 சதம் சரிவு
மும்பை, நடப்பு ஆண்டில் பாலிவுட் திரைப்பட உலகிற்கு சோதனை காலமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்ட பல படங்கள் எதிர்பார்த்த வசூலை பெற்றுத் தரவில்லை. இதனால் திரைப்பட நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்து போயுள்ளது. இதனையடுத்து, சென்ற 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையிலான காலத்தில் இந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ஒட்டுமொத்தத்தில் 70-80 சதவீதம் சரிவடைந்துள்ளது.
15 நிறுவனங்கள்
அதிமுகவினர் ஆவேசம் : அரசு மருத்துவருக்கு அடி உதை
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று மதியம் 1 மணிக்கு மாரியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்த 55வயது பெரியவர் உடல்நிலை சரியில்லை என்று சிகிச்சைக்காக சென்றார்.
சமச்சீர் கல்வி முறையை நீதி மூலம் தடுப்போம் - மெட்ரிக் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை, சமச்சீர் கல்வி முறையை நீதிமன்றத்தின் மூலம் தடுப்போம் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிஜேபி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி ? ஆர்எஸ்எஸ் தலைவருடன் அத்வானி : சந்திப்பு
 புது தில்லி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இது தொடர்பான அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் டாக்டர் மற்றும் கல்லூரி மாணவர் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
கோவை, கோவையில் டாக்டர், கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரை புத்தக திருவிழா : தொடக்கம்
மதுரை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 4-வது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.       
100வது நாள் நிறைவு : காங்கிரஸ் ஆட்சியின் சாதனையும், வேதனையும்
புது தில்லி, மத்தியில் 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 100 நாள்களை சனிக்கிழமை நிறைவு செய்துள்ளது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக : கிடா வெட்டு பூஜை, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏவின் திடீர் பக
திருவண்ணாமலை, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், காளியம்மனுக்கு ஆடு பலி கொடுத்து யாக பூஜை நடத்தினார்.
சவால்களை சந்தித்து ஆட்சிக்கு வருவோம் -விஜயகாந்த்
சென்னை,  காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அனகை முருகேசன் - செல்வரதி தம்பதி மகள் பிரவீணா-செந்தில்வேல் முருகன் திருமணம் இன்று அனகாபுத்தூரில் நடந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி விஜயகாந்த் பேசியதாவது:-
 
தென்மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அதிரடி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி
புதுடெல்லி,  இந்தியாவின் வளர்ச்சியால் பொறாமை அடைந்துள்ள பாகிஸ்தான் அடிக்கடி தன் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை தூண்டி விட்டு, இந்தியாவில் வெடிகுண்டு தாக்கு தல்களை நடத்துகிறது. பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி கொடுத்து இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது.
 
கடந்த ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. இருப்பதை இந்திய அதிகாரிகள் ஆதாரங்களுடன் நிரூபித்தனர். என்றாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை. இந்தியாவில் மும்பை சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டினார்கள்.
 
பன்றிக் காய்ச்சல் பலி 98 உயர்வு
புது தில்லி, கர்நாடகத்தில் மூன்று வயது குழந்தை உள்பட புதிதாக நான்கு பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானதையடுத்து இந்நோய் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

 
ஆந்திராவில் 2 இடங்களில் சிரஞ்சீவி தர்ணா போராட்டம்.
நகரி,  ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, கோதாவரி ஆற்றில் இயற்கை எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை தனியார் நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்து கண்டுபிடித்துள்ளது. இந்த இயற்கை எரிவாயுவில் 50 சதவீதத்தை ஆந்திரா மாநில தேவைக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்தார்.
 
காஞ்சீபுரம்-விழுப்புரம் மாவட்டஅ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்; ஜெயலலிதா நடவடிக்கை
சென்னை, காஞ்சீபுரம்,விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட, காஞ்சீபுரம் அ.தி.மு.க. நகர துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.பி.ஸ்டாலின் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். காஞ்சீபுரம் நகர செயலாளராக என்.பி.ஸ்டாலின், நகர துணை செயலாளராக லயன்மா.அன்பு, மாவட்ட பிரதிநிதியாக இ.கணேசன், காஞ்சீபுரம் நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக என்.மனோகரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக எஸ்.ரங்கநான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் இளநிலை கால்நடை உதவி மருத்துவர்கள் விரைவில் நியமனம் - மு.க.ஸ்டாலின்
சென்னை, தமிழகத்தில் 444 இளநிலை கால்நடை உதவி மருத்துவர் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனுக்கு வட்டி கிடையாது - சிதம்பரம்
சிவகங்கை, மாதம் ரூ.35 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் பெறும் கல்விக்கடனுக்கு வட்டி கிடையாது என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
 
ஜெகத்ரட்சகன்-நெப்போலியனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா
சென்னை, மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன்-நெப்போலியன் ஆகிய இருவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டு பாராட்டி பேசுகிறார்.
 
இரட்டை கொலை வழக்கு எனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது -விஜயகாந்த்
சென்னை, இரட்டை கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருக்கு அவர் எழுதியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 
முத்தூட் அதிபர் மகன் கொலையில் நடிகை பாவனாவிற்கு தொடர்பு?
சென்னை,``முத்தூட் நிதி நிறுவன அதிபர் மகன் கொலைக்கும், நடிகை பாவனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று, பாவனாவின் மானேஜர் அஜய் கூறினார்.

கேரளாவை சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான முத்தூட் குரூப் அதிபர் முத்தூட் எம்.ஜார்ஜின் மகன் பால் எம்.ஜார்ஜ் கடந்த வாரம் ஆலைப்புழை அருகே நடு ரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல்? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கனவு பலிக்காது - அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் க
சென்னை, "தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்ன ஜோசியம் பலிக்காது. அப்படியே நடந்தாலும் அவரது பகல் கனவு பலிக்காது'' என்று வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
பால் விலை உயர்வு கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, பால் விலை உயர்வை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து : 2 பேர் பலி
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் தற்போது தீபாவளி பட்டாசுத் தயாரிப்பு மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சமீபத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
பன்றிக் காய்ச்சல், இந்தியா முழுதும் : 93 பேர் பலி
டெல்லி : இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி விட்டது. இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். புனேவில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 139 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

sri balamurali

unread,
Aug 31, 2009, 6:32:00 AM8/31/09
to tamila...@googlegroups.com
சவால்களை சந்தித்து ஆட்சிக்கு வருவோம் -விஜயகாந்த்
இதே ஃபார்ம்லேயே தொடர்ந்து இருங்க..

2009/8/31 sangamam live <edi...@sangamamlive.in>

sangamam live

unread,
Aug 31, 2009, 4:18:35 PM8/31/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


சிறப்புப்பகுதி
செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? : முரசொலி கேள்வி
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது.

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா.  அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.  
மேலும் படிக்க…


இலங்கை



கல்வி / வேலை வாய்ப்பு



விளையாட்டு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பெண் போலீசாருக்கு பயிற்சி
சென்னை, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதை கையாளும் முறை குறித்து பெண் போலீசாருக்கான 8 நாள் பயிற்சி முகாம் சென்னையில் இன்று தொடங்கியது.

சென்னை மாநகர காவல்துறை மற்றும் தமிழ்நாடு சமூகநல வாரியமும் இணைந்து 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் - அதை கையாளும் முறை' என்ற தலைப்பில் பெண் போலீசாருக்கான பயிற்சி முகாமை நடத்துகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய பயிற்சி வகுப்பு, 8 நாட்கள் நடக்கிறது. பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் ரவி பேசியதாவது:
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை, பார்கவுன்சில் தலைவர் பதவியை பறிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதன் தலைவர் சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன் பதவியை பறிக்கக்கோரி வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
 
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து
திருவனந்தபுரம், கொல்லம் அருகே பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அன்வர்ரஷீத் மற்றும் அவரது தாயை ரவுடிகள் கும்பல் வீடுபுகுந்து கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ராஜமாணிக்கம், அண்ணன் தம்பி மற்றும் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர் அன்வர் ரஷீத் (32). 
திருச்செங்கோட்டில் கொள்ளையரை கைது செய்ய மறுத்த போலீசை கண்டித்து பொதுமக்கள் மறியல்
திருச்செங்கோடு,  திருச்செங்கோடு அருகே வழிப்பறி திருடர்களை மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவு என்பதால் கைது செய்ய முடியாது என போலீசார் மறுத்ததால் ஆத்திரமடைந்த மக்கள் ஸ்டேஷன் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பரபரப்பு ஏற்பட்டது.
 
கோவையில் பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்து 4 பேர் பலி
கோவை, கோவையில் இன்று காலை பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் தண்ணீர் லாரி பாய்ந்ததில் பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.
 
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
நடிகை ரோஜா காங்கிரசில் ஐக்கியம்
நகரி, தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியும் நடிகையுமான ரோஜா நேற்று ஐதராபாத்தில் முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம்  தெலுங்கு தேசம் கட்சியையும், அக்கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடுவையும் கடுமையாக தாக்கி பேசினார். முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டியை புகழ்ந்தார். இதனால் அவரிடம் நிருபர்கள் காங்கிரசில் சேரப்போகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.
 
இந்நிலையில் ரோஜா 2-ந்தேதி காங்கிரசில் சேர இருப்பதாக அவரது ஆதர வாளரும் நகரி தெலுங்கு தேசம் பிரமுகருமான ஜலபதி தெரிவித்தார்.
 
கோவை அண்ணா பல்கலை துணை வேந்தர் ராதாகிருஸ்ணன் சஸ்பெண்ட் - அரசு தகவல்
சென்னை, பல்வேறு ஊழ‌ல் கு‌ற்ற‌ச்சா‌ட்டுகளுக்கு உள்ளான  கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த‌ர் ராதா‌கிரு‌ஷ்ண‌ன் தற்காலிக பணிநீக்கம் செய்ய‌ப்ப‌ட்டு இரு‌ப்பதாக த‌‌மிழக அரசு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தில் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் சிவனாண்டி பொதுநலன் கருதி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ராதாகிருஷ்ணன் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் புதிய பொறி‌யிய‌ல் கல்லூரி தொடங்க திட்டத்தை வகுத்து தனது மனைவி, மாமியார் அறங்காவலர்களாக உள்ள அறக்கட்டளைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
"ஐ.பி.எஸ்." அதிகாரி மீது லஞ்சப் புகார் : அரசு உத்தரவு
சென்னை,:  சென்னை மாநகரப் போலீஸ் கூடுதல் கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தலைமைச் செயலர், உள்துறை செயலர், கண்காணிப்பு ஆணையர் ஆகியோரைக் கொண்ட உயர் நிலைக் குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்த விவரம்:
வசுந்தரா ராஜினாமா செய்ய முடிவு: வெங்கையாநாயுடுவுடன் சந்திப்பு
புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவுக்கு படுதோல்வி ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று முன்னாள் முதல்- மந்திரி வசுந்தராராஜே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் இதை வசுந்தரா ஏற்கவில்லை. 3 நாள் கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் பதவியை ராஜினாமா செய்யமறுத்தார்.
 
ஆனால் வசுந்தரா கட்சி மேலிடத்துக்கு 3 நிபந்தனைகளை விதித்தார். அதை ஏற்றுக்கொண்டால் விலகதயாராக இருப்பதாக கூறினார். 
தமிழ் ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது; வைகோ
சென்னை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வளசரவாக்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இசக்கிமுத்து விளக்க உரையாற்றினார்.இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
(வீடியோ)பார்முலா1 கார்பந்தயம் : போர்ஸ் இந்தியா சாதனை
ஸ்பா, பார்முலா1 கார்பந்தயத்தில் முதல்முறையாக புள்ளிகள் பெற்று போர்ஸ் இந்தியா அணி சாதனை படைத்திருக்கிறது.

இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடந்து வருகிறது. இதன் 12-வது பந்தயமான பெல்ஜியம் கிராண்ட்பிரிக்ஸ் அந்த நாட்டில் உள்ள ஸ்பா-பிரான்கோர்சாம்ஸ் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 44 சுற்றுகள் கொண்ட பந்தயத்தின் மொத்த தூரம் 308.052 கிலோமீட்டர் ஆகும்.
இணையதள எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்களுக்கும் தனி அடையாளம் தேவை -எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
மதுரை,:   இணையதள எழுத்துக்கு தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் 10 நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை ஓராண்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை:

இணையத்தில் எழுதும் பழக்கத்தை மறைந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மேற்கொண்டபோது தேடிச் சென்று அதை அறிந்தவன் நான்.
இந்தியாவை நோக்கி பாக் ஏவுகணைகள், போர் அபாயம் - அமெரிக்கா கடும் கண்டனம்
புதுடெல்லி, அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 165 ஏவுகணைகளில் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை குறி வைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன.இதனால் இந்தியா பாகிஸ்தானிடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
தீவிரவாத அச்சுறுத்தல்: திருப்பதி மலை பகுதியில் விமானங்கள் பறக்க தடை
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி மலைப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல் பட்டேல் கூறினார்.

 
விமானத்தில் தப்ப முயன்ற தீவிரவாதி கைது
திருவனந்தபுரம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில், ஒரு பயங்கர தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். விமானத்தில் குவைத்துக்கு செல்ல இருந்த போது, விமானத்தை போலீசார் சுற்றி வளைத்து, தீவிரவாதியை பிடித்தனர். அவன் சென்னைக்கு வந்து சென்றானா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, குவைத் நாட்டுக்கு செல்லும் குவைத் ஏர்வேஸ் விமானம், விமான நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும், வழக்கமான சோதனைகளை முடித்துக்கொண்டு, விமானத்தில் இருந்தனர்.
 
``அ.தி.மு.க.-2' ஆக செயல்பட எஸ்.வி.சேகர்' விருப்பம்
மதுரை, சட்டசபையில் அ.தி.மு.க.-2 என்று செயல்பட அனுமதிக்கும்படி சபாநாயகரை கேட்டுக் கொள்வேன் என்று எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. கூறினார்.

மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது வீட்டில் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் சந்தித்தார். இருவரும் சுமார் 1/2 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இலங்கை தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை காப்பாற்றக்கோரி சென்னையில் ரெயில் மறியல் போராட்டம்
சென்னை, இலங்கை தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி சென்னையில் வருகிற 2-ந் தேதி தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இது குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
விநாயகர் சிலை ஊர்வலத்தில், ராமகோபாலன் திடீர் மறியல்
சென்னை,  சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது திடீர் மறியல் நடத்திய இந்து முன்னணி தலைவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
தமிழகத்தில் இலவச திட்டங்கள் தொடரும் -கருணாநிதி உறுதி
சென்னை, தமிழகத்தில்ட் தற்போது நடைமுறையில் உள்ள இலவச திட்டங்கள் தொடரும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது-நவீன் சாவ்லா
சென்னை, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது என இந்திய தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா கூறினார்.

இந்திய தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா சென்னையில் இருந்து நேற்று மாலை டெல்லிக்கு செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு  வந்தார்.
 

sri balamurali

unread,
Sep 1, 2009, 2:10:05 PM9/1/09
to tamila...@googlegroups.com
நடிகை ரோஜா காங்கிரசில் ஐக்கியம்
அவரும??????????????????
ஹூம்ம்ம்ம்....

sri balamurali

unread,
Sep 1, 2009, 2:10:33 PM9/1/09
to tamila...@googlegroups.com


2009/9/1 sri balamurali <nagaisrib...@gmail.com>
நடிகை ரோஜா காங்கிரசில் ஐக்கியம்
அவருமா??????????????????

sangamam live

unread,
Sep 1, 2009, 4:36:29 PM9/1/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


சிறப்புப்பகுதி
செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? : முரசொலி கேள்வி
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது.

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா.  அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.  
மேலும் படிக்க…


விளையாட்டு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

செப்.3 ல் சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் - ஜெ அறிவிப்பு
சென்னை,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை:
விலைஉயர்ந்த நகைகள் மாயம்? , ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் மீண்டும் சர்ச்சை
திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. இதன் ஜீயர் புருஷோத்தம லட்சுமண ராமானுஜரை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
 
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற அறிக்கை வெளியிட அமெரிக்கா முடிவு.
நியூயார்க், இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி சண்டையின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் தனது அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இலங்கை ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்டன என லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கை அரசிடம் பத்மநாதன் சரண்டர்?
கொழும்பு, விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் ஆயுதம் மற்றும் பணம் திரட்டி கொடுக்கும் மிக முக்கிய பணியை செல்வராசா பத்மநாதன் செய்து வந்தார். கே.பி. என்றழைக்கப்பட்ட அவர் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த 2-வது இடத்தில் இருந்தார்.
 
கடந்த மே மாதம் நடந்த உச்சக்கட்ட சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதும் தலைவர் பொறுப்பை பத்மநாதன் ஏற்றார். அவரை கடந்த ஆகஸ்டு மாதம் கோலாலம்பூரில் இலங்கை போலீசார் கைது செய்தனர்.
"மது" மல்லையா - "விளையாட்டு'' கில் மோதல்
புது தில்லி:   ஃபார்முலா ஒன் மோட்டார் ரேஸ் பந்தயம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில்லுக்கும், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

 ஃபார்முலா ஒன் மோட்டார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் விஜய் மல்லையா. இவர் சமீபத்தில் ஃபோர்ஸ் இந்தியா என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஃபார்முலா ஒன் கிராண்ட்ப்ரீ மோட்டார் பந்தயங்களில் அந்த அணியை பங்கேற்கச் செய்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெல்ஜியம் கிராண்ட்ப்ரீ மோட்டார் பந்தயத்தில் விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா அணி முதல் 3 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்தது.
ஈவிஎம் பரீட்சை பாமக "பெயில்" நவீன் சாவ்லா அறிவிப்பு
 சென்னை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடுகளையும் செய்ய முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முறைகேடு நடப்பதாக கூறி வந்த பா.ம.க அதனை நிரூபிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு (2010-11) முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என மத்திய மனிதவள மேம்பாடு மந்திரி கபில்சிபல் தெரிவித்தார். வேறு படிப்புகளில் சேரும் மாணவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம்.

இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், `கல்வி கற்கும் உரிமை சட்டத்தை' மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், உள்கட்டமைப்பு தரம், ஆசிரியர்களின் கடமை, மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் போன்றவற்றையும் அந்த சட்டம் வலியுறுத்துகிறது.
 
ஆந்திர ஐகோர்ட்டில் பயங்கர தீவிபத்து
ஐதராபாத், ஆந்திர ஐகோர்ட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நீதிபதிகளின் அறைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் பழமையான கட்டிடத்தில் ஐகோர்ட்டு செயல்படுகிறது. அதன் அருகிலேயே புதிய ஐகோர்ட்டு கட்டிடமும் உள்ளது. பழைய கட்டிடத்தில் நீதிபதிகளின் அறைகள், மாநாட்டு கூடங்கள், வரலாற்று சிறப்புமிக்க நூலகம், பார் கவுன்சில் அலுவலகம் ஆகியவை உள்ளன.

 
இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப தடைவிதிக்க கோரி - மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
மதுரை, சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தும் நிலையில் இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை லேக் ஏரியா டி.டி.சி நகரை சேர்ந்தவர் ஏ.ஜோயல் பவுல்அந்தோணி, ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
 
போலி வாக்காளர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு: அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை
மதுரை, போலி வாக்காளர்களை சேர்த்ததாக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏற்கனவே பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் இருந்தும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விரும்புபவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களை பெற்று அரசியல் கட்சியினர் மொத்தமாக அளிக்கலாம் என்று அறிவித்தது.
 
ஜாலியாக இருக்க ரூ.50 ஆயிரத்துக்கு 10 மாத குழந்தையை விற்ற தந்தை கைது
திருநெல்வேலி, 10 மாத குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்டனர் அப்போது மின்நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
சென்னையில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
சென்னை, சென்னையிலிருந்து ஐதராபாத்திலிருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள `கேட்டமின்' போதைப்பொருளுடன் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாரிமுனை லிங்கிசெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திருட்டு வி.சி.டி.கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
 
ஊட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம், போலீசார் தடியடியடியில்-22 பேர் காயம்
கோவை, ஊட்டியில் நேற்று நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது திடீரென்று ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் போலீசார் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
 
அம்பத்தூர் கேபிள் டிவியில் : கந்தசாமி தரிசனம்
ஆவடி, அம்பத்தூர் பகுதி கேபிள் டிவியில் கந்தசாமி படம் ஒளிபரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கோவை அண்ணா பல்கலை துணை வேந்தர் ராதாகிருஸ்ணன் சஸ்பெண்ட் - அரசு தகவல்
சென்னை, பல்வேறு ஊழ‌ல் கு‌ற்ற‌ச்சா‌ட்டுகளுக்கு உள்ளான  கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த‌ர் ராதா‌கிரு‌ஷ்ண‌ன் தற்காலிக பணிநீக்கம் செய்ய‌ப்ப‌ட்டு இரு‌ப்பதாக த‌‌மிழக அரசு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தில் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
சென்னை, வங்கக் கடலில் ஆந்திரா அருகே மழை மேகம் சூழ்ந்துள்ளதை அடுத்து தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பகல் நேரத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்தது.
 
தரக்குறைவான கவுன்சிலரால் நகராட்சி கூட்டத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறிய அதிகாரி
சென்னை, ஆலந்தூர் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் தரக்குறைவாக பேசியதால் சுகாதார அதிகாரி கண்ணீருடன் வெளியேறினார். மற்ற வார்டு உறுப்பினர்கள் தனது வார்டில் தலையிடுவதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

sangamam live

unread,
Sep 2, 2009, 4:13:58 PM9/2/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


விநோத திருமணம், மணமகளுக்கு மாப்பிள்ளையின் தங்கை மாலைமாற்றி திருமணம்
திருவனந்தபுரம், துபாயில் இருந்து மணமகன் வர தாமதமானதால் மணமகளுக்கு மாப்பிள்ளையின் தங்கை மாலை அணிவித்த விசேஷ திருமணம் கேரளாவில் நடந்தது.
 
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழக வீரர் மரணம்
சென்னை, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழக வீரர் வீர மரணம் அடைந்தார். 
ஆந்திர முதல்வர் பத்திரமாக உள்ளார்?
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரைக் மோசமான வானிலை காரணமாக காணவில்லை. ரெட்டியுடனான தகவல் தொடர்பும் துண்டித்துப் போயுள்ளது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முதல்வர் வீட்டை படம் எடுத்த இளம்பெண்னால் பரபரப்பு
சென்னை, முதல்வர் வீட்டை இளம்பெண் படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
1100 தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவை எதிர்த்து வழக்கு
சென்னை, கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த சிவகுமார் (40) ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சீர்காழி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக் அன்ட் எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்துள்ளேன். கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1988 ஜூன் மாதம் பதிவு செய்தேன். மாநில பதவி மூப்பு பட்டியலில் 26வது இடத்தில் உள்ளேன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் கடந்த 19 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
திறந்து கிடந்த தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி
சென்னை, திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை இறந்தது. இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
 
ரயில் மறியல் திகவினர் கைது
சென்னை, ஈழத்தமிழர் வாழ்வுரிமையை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தி.க. சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
டிஎன்பிஎல் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் -ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்) பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை மறுநாள் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவெடுத்து விட்டார். நவம்பர் 8 முதல் டிசம்பர் 25க்குள் அவர் பதவி விலகுவார் என்று தெரிகிறது.
சென்னை ஒரே பள்ளியில் 9 மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல்
சென்னை, பன்றி காய்ச்சலுக்கு பெரும்பாலும் மாணவ- மாணவிகளே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரையும் இந்நோய் தாக்கி வருகிறது.

இதுவரை பன்றிகாய்ச்சல் அறிகுறி இருந்தவர்களுக்கு சோதனை செய்ததில் 482 பேருக்கு “பாசிட்டிவ்” இருப்பது தெரியவந்து பன்றிகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்தோனேசியா பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று சுமார் 7.4 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதையடு்த்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் இன்று காலை சுமார் 11.55 மணிக்கு சுமார் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது தாசிகாமாலாயா நகரில் இருந்து சுமார் 142 கிமீ தொலைவில் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
கார், இரு சக்கர வாகனம் : விற்பனை அதிகரிப்பு
புதுடெல்லி., நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் கார்கள் விற்பனை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு 40 கிலோவில் தங்க விமானம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 40 கிலோ தங்கத்தால் விமானம் அமைக்கும் பணி செப்.,7ம் தேதி துவங்கவுள்ளது.

அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:"புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் சன்னதி கோபுர விமானத்தில் ஆறு அடி உயரத்திற்கு தங்க விமானம் அமைக்கும் பணி நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் நடக்கவுள்ளது.
உபி, பசி பட்டினி : 6 பேர் சாவு
அலகாபாத்: உ.பி.,யில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட்டுகளுக்கு, மாவோயிஸ்ட்களால் அச்சுறுத்தல்
கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மாவோயிஸ்ட்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர்; கட்சியில் இருந்து வெளியேறவும் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் சமீபகாலமாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் சந்தேக "கேஸ்கள்" : ராமதாஸ் உறுதி
சென்னை:""விரிவான தொழில்நுட்ப நிபுணர்களுடன் மீண்டும் தேர்தல் கமிஷனை அணுகி, மின்னணு ஓட்டு இயந்திரத் தில் தவறு செய்ய முடியும் என்பதை நிரூபிப்போம்,'' என ராமதாஸ் கூறினார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியது:

ஓட்டுப் போடும் வாக்காளர் தனது ஓட்டு யாருக்கு பதிவாகி உள்ளது என தெரிந்து கொள்வது அவரது அடிப்படை உரிமை. அதற்கு, தற்போதைய இயந்திரத்தில் வழி இல்லை.
டில்லி பிரஸ் கிளப்பில் பூசல் : தர்மசங்கடத்தில் சோனியாகாந்தி
புதுடில்லி :காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி பத்திரிகையாளர் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இதற்கு சங்கத்தின் ஒரு பிரிவு நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததால், அதை சோனியா நிராகரித்தார்.பிரதமரிடம் கோரிக்கை வைப்பதை விட காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேறும், என்பதை உணர்ந்த டில்லி பிரஸ் கிளப் நிர்வாகிகள் கடந்த வாரம், சோனியாவை சந்தித்து பேசினர்.
 
எஜுசாட் கருவி : வீணாகும் அவலம்
சென்னை: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், வட்டார வள மையங்களில் வழங்கப் பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய கருவிகள், எவ்வித பயனுமின்றி வீணாகி வருகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவும், திட்ட நடவடிக் கைகளை ஒருங்கிணைக்கவும், தமிழகம் முழுவதும், 412 வட்டார வளமையங்கள் உருவாக்கப் பட்டன.
ஊழல், ஊதாரி, ஊர்சுற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் : இந்திய தணிக்கைத்துறை தலைவர் கண்டனம்
சென்னை. ஐஏஎஸ் பணி விதிகளை அறியாமல், இந்திய அரசின் அறிவுரைகளை அறியாமல், 140 ஐஏஎஸ் அதிகாரிகள் 172 சம்பவங்களில் சட்டத்தை மீறி-தவறாகச் செயல்பட்டு தமிழக அரசிடம் 40 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளனர், அவர்களிடமிருந்து உடனடியாக 40.52 லட்ச ரூபாயை தமிழக அரசு வசூல் செய்ய வேண்டும் என்று இந்திய தணிக்கைத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை மார்ச் 31, 2008ம் இண்டு முடிவுக்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அம்பானிகள் வழக்கு : சுப்ரீம் கோர்டில் அரசு மனு
புதுதில்லி,: எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் புதிய மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

புதிய மனுவில் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கம்:
என்னை மிரட்டவே போலீஸ் சம்மன்-விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை, என்னை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு சார்பாக இலவசமாக வழங்கப்பட்ட கலர் டிவிகள் ஒரு மருத்துவமனையில் உள்ளது என்று நான் சொன்னேன். அது எந்த மருத்துவமனை என்று முதல்வர்கேட்டிருக்கிறார். அதை நான் தெரிவித்தால், அவர்கள் அந்த டிவியை மாற்றி விடமாட்டார்களா? என்னை அறிவிக்கச் சொல்வது அந்த மருத்துவமனைக்கு உதவியது போல் ஆகாதா?
 
வறட்சியை எளிதாக சமாளித்து விடலாம் - மன்மோகன்சிங் நம்பிக்கை
புதுடெல்லி, நாட்டில் 5 கோடி டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதால் வறட்சியை சமாளித்து விட முடியும் என பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை ஆய்வு செய்வதற்காக, பிரதமரும், திட்ட கமிஷன் தலைவருமான மன்மோகன்சிங் திட்ட கமிஷன் கூட்டத்தை கூட்டினார். அக்கூட்டத்தில் மன்மோகன்சிங் பேசியதாவது:-

 
பாகிஸ்தானில் அணுகுண்டு தயாரிக்க புதிய தொழிற்சாலைகள்
புதுடெல்லி, பாகிஸ்தான் அணுகுண்டுகள் தயாரிக்க புதிய தொழிற்சாலைகளை அமைத்து வருவதாகவும் அதன் வசம் தற்போது 90 அணு குண்டுகள் இருப்பதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
எல்லையில் பாக். ராணுவம் சுட்டதில் இந்திய வீரர் பலி
ஜம்மு, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ரேடார் கருவி பழுது, 20 விமானங்கள் தாமதம், பயணிகள் அவதி
சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரேடார் கருவி திடீரென பழுதானதால், விமானங்கள் இறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
 
டிவி தொகுப்பாளர் முகத்தில் ஆசிட் வீச்சு
சென்னை, வீட்டில் தனியாக இருந்த டிவி பெண் தொகுப்பாளரை, கூரியர் என்று கூறி வெளியில் அழைத்து முகத்தில் ஆசிட் வீசிவிட்டு வாலிபர் தப்பினார். இதில் அவரது கண்ணும், வாயும் சிதைந்தன. காதல் விவகாரத்தில் ஆசிட் வீசப்பட்டதா என்று ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் பாஸ்போர்ட் முடக்கம்
கோவை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி, சஸ்பெண்ட் ஆன கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் பாஸ்போர்ட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல்
திருவனந்தபுரம், கேரளாவில் கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன

கேரளமாநிலம் பத்தனம்திட்டையில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் கடந்த சிலமாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர், கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்தனர்.
 
நடிகை ஸ்ரேயா தற்கொலை? திடீர் வதந்தி
சென்னை,சமீபகாலமாக நடிகைகளை பற்றி வதந்தி பரப்புவது, அதுவும் நள்ளிரவு நேரங்களில் வதந்தி பரப்புவது அதிகரித்து வருகிறது.

டைரக்டர் செல்வராகவனை பிரிந்து, விவாகரத்துக்கு மனு செய்திருக்கும் நடிகை சோனியா அகர்வால் பற்றி சில நாட்களுக்கு முன் வதந்தி பரப்பப்பட்டது. சோனியா அகர்வால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக நள்ளிரவில் யாரோ வதந்தியை பரப்பி விட்டார்கள்.
மத்திய அரசு பணிக்கான தேர்வில் இந்தி திணிப்பு தேர்வு எழுத முடியாமல் தமிழக மாணவர்கள் திணறல்
சென்னை, மத்திய அரசு வேலைக்கான போட்டித்தேர்வில் இந்தியில் கேட்கப்பட்டிருந்த கட்டாய வினாக்களால் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலானது மத்திய அரசுக்கு சொந்தமானது ஆகும். இதற்கு சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம். (சி.எல்.ஆர்.ஐ.) காரைக்குடி `சிக்ரி' உள்பட நாடு முழுவதும் பல்வேறு ஆய்வகங்கள் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில் துறை தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 
சாக்கடைகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதை தடுப்பது எப்படி? குழு அமைத்து ஆராய ஐகோர்ட் உத்தரவு
சென்னை, பாதாள சாக்கடையை மனிதர்கள் சுத்தப்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆராய 13 பேர் கொண்ட குழுவை சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது.
 
மாணவியிடம் சில்மிஷம்,வார்டனை நீக்க கோரி மாணவர்கள் போராட்டம்: வேலூரில் பரபரப்பு
வேலூர், மாணவியிடம் சில்மிஷம் செய்த விடுதி வார்டனை நீக்கக்கோரி வேலூரில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் செய்தனர். மாணவர்களின் கல்வீச்சில் கல்லூரியில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன.

வேலூர் டவுனில் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரி உள்ளது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் அந்தக்கல்லூரியில் தற்போது 2,500 பேர் படித்து வருகிறார்கள். அந்தக் கல்லூரிக்கான விடுதி வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ளது. பெண்கள் விடுதியில் சேலத்தை சேர்ந்த பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி உள்பட 13 பேரும், ஆண்கள் விடுதியில் 65 பேரும் உள்ளனர். அந்த விடுதிகளுக்கு பேராசிரியர் மணிவண்ணபாண்டியன் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
சென்னையிலலிருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 9 சாமி சிலைகள் மீட்பு
சென்னை, சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 9 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீஸ் ஐ.ஜி. ராஜேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
மேட்டூரில்,இலங்கை தமிழர்களுக்காக கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் - பெரியார் தி.க வழக்கு
சென்னை, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஏ.அண்ணாதுரை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

sri balamurali

unread,
Sep 3, 2009, 2:14:01 PM9/3/09
to tamila...@googlegroups.com
வறட்சியை எளிதாக சமாளித்து விடலாம் - மன்மோகன்சிங் நம்பிக்கை
விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல்..
வறுமையினை அனைவருக்கும் பரவிடச் செய்யும்..இவர்களின் வெற்றுப் பேச்சுகள்தான்..மீதமாகப் போகிறது..

sangamam live

unread,
Sep 3, 2009, 4:31:04 PM9/3/09
to tamila...@googlegroups.com
பெண் மந்திரிக்கு காதல் கடிதம் கொடுத்த அதிகாரி சஸ்பெண்டு
ராவல்பிண்டி, பாகிஸ்தானில் பெண் மந்திரிக்கு காதல் கடிதங்கள் எழுதிய அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் மந்திரியாக இருப்பவர் சாசுய் பலிஜோ. இவர் அதிபர் சர்தாரி தலைமையிலான மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். அதே மாநிலத்தில் தோட்டக்கலைத்துறையில் அதிகாரியாக இருப்பவர் இலியாஸ் ஹூலிகோ. இவர் பெண் மந்திரி அழகில் மயங்கினார். அவரிடம் காதல் கொண்டார்.
12 புதிய கார்கள் : தீபாவளிக்கு அறிமுகம்
புதுடெல்லி, பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் 12-க்கும் மேலான அளவில் புதிய மாடல்களை வெளியிட தயாராகி உள்ளன. இந்த கார்கள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய சாலைகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டிலும், செப்டம்பர்-நவம்பர் மாத காலத்தில் கார்கள் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்படும். இவ்வாண்டிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ராஜசேகர ரெட்டிக்கு : சனிக்கிழமை இறுதிச் சடங்கு
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் இன்று பிற்பகல் கர்னூல் கொண்டு வரப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இன்று காலை மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரெட்டி உள்ளிட்ட ஐவரின் உடல்களும் கருகிப் போயிருந்தன. இதையடுத்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
அத்வானியே தோல்விக்கு காரணம் : ஆர்எஸ்எஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுடெல்லி, மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு அத்வானி தான் முழு  பொறுப்பு என கூறி RSS தனது பங்கிற்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

RSS -ன் பத்திரிக்கையான "பன்சஜன்யா" வில் கட்டுரை எழுதியுள்ள RSS-ன் மூத்த தலைவரும், சித்தாந்தவாதியுமான தேவேந்திர ஸ்வரூப், அத்வானியை கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவித்தது தவறு என்றும், கட்சியின் தேர்தல் பிரச்சாரம், அத்வானியை மையம் கொண்டு செயல்பட்டதையும் சாடியுள்ளார்.
பன்றிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் கர்ப்பிணி பெண் பலி - இதுவரை இந்தியாவில் 108 பேர் பலி
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 7 மாத கர்ப்பிணி ஒருவர் பலியாகியுள்ளார். நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் பாவ்யா தாவே என்ற 23 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது.
திமுக கொடி 3 நாள் அரைக்கம்பம்பத்தில் பறக்கும் : அன்பழகன்
சென்னை., ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஒ.எஸ்.ஆர். தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் நிலநடுக்கம்
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று இரவு 11.45 மணிக்கு வீடுகள் அதிர்ந்தன. 3 விநாடிகள் வரை நீடித்த இந்த அதிர்வால் உளுந்தூர்பேட்டை, பச்சையப்பன்நகர், அண்ணாநகர், அன்னை தெரசா நகர், கந்தசாமிபுரம் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடுகளை விட்டு தெருவுக்கு ஓடிவந்த அவர்கள் சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அரசு உயர்நிலைப்பள்ளி எச்.எம்.களுக்கு பதவி உயர்வு
சென்னை,அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசின் புதிய உத்தரவுப்படி, 40:35 என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவு - கருணாநிதி இரங்கல்
சென்னை, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவு குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் செய்தியில் கூறியிருப்பது:
ஆந்திர தற்காலிக முதல்வராக ரோசய்யா பதவியேற்பு
ஆந்திர மாநிலத்தின் இடைக்கால முதல்வராக நிதியமைச்சர் கே. ரோசையா இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும், மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி, மத்திய அமைச்சர் பிரித்வி ராஜ் சவான், எம்.பி-க்கள், மாநில காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆந்திர அரசு 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஹெலிகாப்டர்
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் ஆந்திர அரசுக்கு சொந்தமானது. கடந்த 1999ம் ஆண்டு ஜனவரியில் வாங்கப்பட்ட இந்த பெல் 430 ரக ஹெலிகாப்டரில் 8 பேர் பயணம் செய்யலாம். விடி-ஏபிஜி என்ற பதிவு எண்ணை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் 2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மொத்த எடை 4 ஆயிரத்து 82 கிலோ.
போலீஸ் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மாநில பாதுகாப்பு ஆணையம் -ப.சிதம்பரம்
புதுடெல்லி, போலீஸ் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

போலீஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
தமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய விருது - 354 ஆசிரியருக்கு மாநில விருது
சென்னை, ஆசிரியர் தினம் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிறந்த கல்வி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ராஜசேகர் ரெட்டியின் உடலை அடையாளம் கண்ட 4 ஜவான்கள்
ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மாயமான கர்னூல் மாவட்டம் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நேற்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, மீட்பு பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் நடந்த தேடுதல் வேட்டை, மோசமான வானிலை காரணமாக நள்ளிரவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலையில் மீண்டும் தேட தொடங்கினர்.
 
ராஜசேகர் ரெட்டி உயிரிழப்பு - மேலும் 4 பேரின் சடலம் கண்டுபிடிப்பு
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலி. மேலும் அவருடன் பயணம் செய்த 4 பேரும் பலி ஆனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
இந்தோனேசியா பூகம்பம் 44 பேர் பலி
ஜகார்தா, இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவில் பாங்கலேன் என்ற இடத்தின் அருகே நேற்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. எனவே, இதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பூகம்பம் பாதிப்புகள் ஏற்பட்டன.
 
பூகம்பம் ஏற்பட்ட ஜாவா தீவு மக்கள் தொகை அதிக முள்ள பகுதியாகும். இந்த பூகம்பத்தின் போது கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். அலுவலகங்களில் பணி புரிந்தவர்களும் வெளியே ஓடி வந்தனர்.
ராஜசேகரின் ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துகுள்ளானது
(நான்காம் பதிவு)

ஆந்திரமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரை இந்திய விமானப்படை விமானங்கள் கண்டுபிடித்துள்ளன. கர்ணூலில் இருந்து 40 நாட்டிங்கால் தொலைவில் உள்ள வெள்ளிகுண்ட்டா மலை உச்சியில் உள்ள அந்த ஹெலிகாப்படர் இருக்கும் இடம் நோக்கி 2 இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களில் துணை ராணுவப்படையின் சென்றடைந்துள்ளனர்.இந்நிலையில் ஆந்திர மாநில உள்துறை அமைச்சகம் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துகுள்ளானதாகவும் இதில் பயணம் செய்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் அறிவித்துள்ளது.


ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டலும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்து தக்வல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இவர்களை தேடுவதற்காக பெங்களூரில் இருந்து அதிநவீன மீட்பு கருவிகளுடன் 80 பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணி பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலிருந்து விரைந்த காமாண்டோ படை வீரர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்றடைந்தனர்.

கூடுதல் தகவல் பெற சங்கமத்துடன் இணைந்திருங்கள்.....
`சந்திரயான்-1' அனுப்பிய படங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்கள்
பனாஜி, நிலவின் மேற்பரப்பை `சந்திரயான்-1' விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களில் பல்வேறு தகவல்கள் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து நிலவுக்கு முதன் முதலாக `சந்திரயான் -1' விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் வரை நிலவை சுற்றி வந்து தகவல்களை அனுப்பும் வகையில் அது உருவாக்கப்பட்டது. எனினும், 10 மாதங்களிலேயே அதன் செயல்பாடுகள் முடங்கி விட்டன. அந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக `இஸ்ரோ' அறிவித்து விட்டது.
பட அதிபர்களுக்கு கட்டுப்பாடு இனி வாரம் 3 படங்கள் மட்டுமே `ரிலீஸ்' ராம.நாராயணன்
சென்னை, இனிமேல் ஒரு வாரத்திற்கு 3 படங்கள் மட்டுமே `ரிலீஸ்' செய்யவேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பட அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிக தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் ஏறக்குறைய 100 நேரடி தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் உள்ள நான்கு மாதங்களில் வெளியிட நிறைய படங்கள் தயாராகி வருகின்றன''.
 
திருப்பதி கோவிலில் மின்சாரம் தாக்கி தமிழக பக்தர் பலி
திருப்பதி, திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை அருகே உள்ள பின்னம் பட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் திருப்பதி சென்றிருந்தனர். திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் இருந்து நேற்று அதிகாலையில் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது சாலையின் மேலே உயரத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி `திடீர்' என அறுந்து அந்த பக்தர்கள் மீது விழுந்தது.
 
தி.மு.க-காங். கூட்டணி விமர்சனம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கே.வி.தங்கபாலு சூடு
சேலம், தி.மு.க-காங். கூட்டணி பற்றி விமர்சிக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உரிமை இல்லை என்று கே.வி.தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிகளும் வருமாறு:-
 
ராஜசேகர ரெட்டியின் கதி என்ன? தேடும் பணியில் 7 ஆயிரம் பேர்
ஐதராபாத், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ஆந்திர போலீசாருடன் 5 ஆயிரம் துணை ராணுவப்படையினருடன் 800 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும். சிவிலியன்சஸும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். புறப்பட்டு சென்ற 1 மணி நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் திடீரென்று மாயமாகி விட்டது. கர்னூல் மாவட்ட வனப்பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த போதுதான் ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ராஜசேகர ரெட்டி மாயம்:ஆறுதலான செய்தி கிடைக்கும் - கருணாநிதி நம்பிக்கை
சென்னை,ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

sri balamurali

unread,
Sep 4, 2009, 2:06:31 PM9/4/09
to tamila...@googlegroups.com
பட அதிபர்களுக்கு கட்டுப்பாடு இனி வாரம் 3 படங்கள் மட்டுமே `ரிலீஸ்' ராம.நாராயணன்
அப்படியே உருப்படாத படம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு..தடை விதித்தால் நன்றாக இருக்கும்...

sangamam live

unread,
Sep 4, 2009, 4:42:31 PM9/4/09
to tamila...@googlegroups.com
தமிழகம்


சிறப்புப்பகுதி
செல்வி ஜெயலலிதாவா? திருமதி சோபன் பாபுவா? : முரசொலி கேள்வி
சென்னை, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, செல்வியா? திருமதியா? என்ற சர்ச்சை தமிழக அரசியலில் தீவிரமடைந்து வருகிறது.

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா.  அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.  
மேலும் படிக்க…


இலங்கை



கல்வி / வேலை வாய்ப்பு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

அம்பத்தூர் பகுதிகளில் ரூ.ஒரு கோடி அரசு நிலம் மீட்பு
சென்னை,அம்பத்தூர் தாலுகா பகுதிகளில் அரசு நிலம் மற்றும் ஏரியை ஆக்கிரமித்து முள்வேலி, குடிசை அமைக்கப்பட்டிருந்தது. இவற்றை தாசில்தார் அதிரடியாக அகற்றி, ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளார்.
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் புதிய நடைமுறை பின்பற்ற உத்தரவு
சென்னை, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள், செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய சிறைகளில் மோப்பநாய் பிரிவு
திருச்சி, தீயணைப்பு துறையைத் தொடர்ந்து மத்திய சிறைகளிலும் மோப்பநாய் பிரிவை துவக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
சென்னை, கோடம்பாக்கம் கோபால் மேனன் தெருவில் வசித்து வருபவர் நடிகர் தலைவாசல் விஜய். “தலைவாசல்” என்ற படத்தில் அறிமுகமான இவர் “காதல் கோட்டை”, “தேவதை” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மும்பை நிலச்சரிவில்; 12 பேர் பலி
மும்பை, மும்பையில் உள்ள அந்தேரி புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது இதில் சகினாகா என்ற இடத்தில் எல்.பி.எஸ். நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
 
பாமகவுடன் கூட்டணி - கருணாநிதி பேட்டி
சென்னை- தமிழ்நாட்டில் 2011 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணியில் இணைய விரும்பினால், அது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று தமிழக முதல்வரும், திமுக-வின் தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி அளித்துள்ள பேட்டி:
மும்பையிலிருந்து ரியாத் சென்ற விமானத்தில் தீ -213 பயணிகள் மீட்கப்பட்டனர்

மும்பை, மும்பை சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை ரியாத்திற்கு புறப்பட்டது. விமானத்தில் 213 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

கரு கலைப்பது, குழந்தை பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை - உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, கருவை கலைத்துக் கொள்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் பெண்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
 
ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து விசாரணை துவங்கியது
புதுடெல்லி, ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையை தொடங்கி விட்டது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் டெல்லியில் நேற்று கூறியதாவது:
 
பணி நிரந்தரம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலர் கைது
நாகர்கோவில்,ஆசிரியரை பணி நிரந்தரம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப் பட்டார்.
 
தமிழகம் முழுவதும் புதிதாக 2500 ஆசிரியர் நியமிக்க அரசு முடிவு
கோவை, தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2009-10ம் கல்வி ஆண்டில் 831 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 
அரசு கலைக் கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உத்தரவு
சேலம், தமிழகம் முழுவதும் 62 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இதில் 50 கல்லூரிகள் இடப்பற்றாக்குறை காரணமாக 2 ஷிப்டுகளாக செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.15 வரை முதல் ஷிப்ட் வகுப்புகளும், மதியம் 1.25 மணி முதல் மாலை 5.30 வரை 2வது ஷிப்டு வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
இந்திய மாணவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு - ஆஸ்திரேலிய துணை பிரதமர் தகவல்
சென்னை, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் ஜப்தி
சென்னை, விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.
 
நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்
சென்னை, நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கு:நளினிக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் தடா கோர்ட்டு உத்தரவு
சென்னை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக விதிக்கப்பட்டது. வேலூர் மத்திய பெண்கள் சிறைச்சாலையில் நளினி கடந்த 18 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
 
பிரபுதேவா நல்ல நண்பர் ``பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்வேன்'' - நயன்தாரா
நடிகை நயன்தாரா-நடிகர் பிரபுதேவா ஆகிய இருவரிடையே ஏற்பட்டுள்ள காதல் விவகாரம், தமிழ்-தெலுங்கு-மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பிரபுதேவாவை, நயன்தாரா திருமணம் செய்துகொள்வார் என்று ஒரு தரப்பினரும், இருவரும் திருமணம் வரை செல்ல மாட்டார்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி நயன்தாரா அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முன்ஜாமீன் கேட்டு மனு
சென்னை, ஊழல் புகார் தொடர்பாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
 
விடுதலைப்புலிகள் ஆதரவு கூட்டம் கூட்டம் நடத்த அரசு விதித்த தடையை நீக்க கோரி வழக்கு
சென்னை, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசவோ, கூட்டம் நடத்தவோ, அவர்களது படம், கொடி, பேட்ஜ்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும், விளம்பரப்படுத்தக்கூடாது என்றும் தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பை மீறினால் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்றும், இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
 
இன்று நடைபெற இருந்த குரூப்-2 நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
சென்னை, தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் துறை உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளில் 2500 காலி இடங்களை நிரப்ப அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி முதல் நேர்முகதேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
 
ராஜசேகர ரெட்டிக்கு தமிழ் சினிமா துறையினர் அஞ்சலி
மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ் திரைப்பட உலகில் உள்ள அனைவரும் இன்று(வெள்ளிக்கிழமை) கறுப்பு `பேட்ஜ்' அணிகிறார்கள்.
 
அக்31 க்குள், சென்னை ஐகோர்ட்டு நீதிபாதிகள் சொத்து கணக்கைகாட்ட முடிவு
சென்னை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் சொத்து கணக்கை காட்ட முடிவு செய்துள்ளதாக தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
 
ஒரேநாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது
சென்னை, தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages