
--
--
தாய்மொழி தமிழினை தழைத்திடச் செய்வோம்..
வாய்மொழி வழக்கில் பிறமொழி தவிர்ப்போம்..!
அரும்பல கலைகளை தமிழினில் படைப்போம்..
வரும்தலை முறைக்கு அதை வளமுறக் கொடுப்போம்..!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் அமுதம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilamutham...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On Friday, August 30, 2013 2:40:56 AM UTC-7, கதிரவன் wrote:...இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே...
அன்புடன்,
கதிரவன்...அன்பு கதிரவன்... இது தொடர்பான நான் எழுதிய கட்டுரை ஒன்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்........... தேமொழிஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின்வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவைநோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்),· 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில்பயன்பாட்டில் உள்ளன· 22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும்செல்கின்றன· 35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலைதேக்கமடைந்துள்ளது· 21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில்இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளையதலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது· 13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனைபயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும்திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால்இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.இந்த 7105 உலக வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்காநாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிஃபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிகஎண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பியநாடுகளிலும் உள்ளன. அத்துடன் அதிக மொழிகள் அழியக்கூடிய ஆபத்தில் இருப்பதுஅமெரிக்க நாடுகளில். வாழும் மொழிகளில் பல நல்ல பயன்பாட்டில் இருப்பதுஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஆஸ்திரலிய/பசிஃபிக் பகுதியில் உள்ள நாடுகளில். ஐரோப்பிய நாடுகளில் மொழிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பலமொழிகள் நல்ல மேன்மையான நிலையில் பயன்பாட்டில் உள்ளன.இது போன்ற மொழிகளைப் பற்றிய புள்ளி விபரங்களைத் தருவது 'எத்னலாக்' (Ethnologue - http://www.ethnologue.com/). எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை(comprehensive language catalogue). உலகளவில் மொழியியல் வல்லுனர்களுக்கும்,மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஒருஇன்றியமையாதப் பட்டியல். பொதுவாக மதத்தினை பரப்பும் பொருட்டு தங்கள் மறைநூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்கு பெரும் பொருளைச் செலவுசெய்ய எண்ணும் மதநிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்டமொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்ப பொருட் செலவு செய்வதைப்பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும்இப்படியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும்.இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு 'தி சம்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப்லிங்க்விஸ்டிக்ஸ்' (The Summer Institute of Linguistics - SIL) என்ற மொழியியல்நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. பல மொழியியல் வல்லுனர்களாலும்ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப் பட்டது இந்த விரிவான மொழி அட்டவணை.இப்பட்டியல் உலகில் உள்ள அனைத்து புழக்கத்தில் உள்ள மொழிகளையும், 1951 ஆம்ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல்களஞ்சியம். இப்படியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத்தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கட்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை,உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலைபோன்ற தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட 'எத்னலாக்' பதிப்பு வெளியிடப்படுகிறது.தற்பொழுது வெளிவந்துள்ள இப்புதிய பதிப்பின்படி 1950 ஆம் ஆண்டு வழக்கில் இருந்தமொழிகளில் 375 மொழிகள் மறைந்துவிட்டது தெரிய வருகிறது.இந்த அண்டு மார்ச் மாதம் (மார்ச் 2013) வெளிவந்துள்ள 'எத்னலாக்'கின் புதிய 17 ஆம்பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுனர்கள் மட்டுமின்றி,மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில்வெளியிடப்பட்டுள்ளது. இதன் நூல் வடிவம் இந்த ஆண்டின் பிற்பகுதியில்வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுளள்ளது. இப்புதிய பதிப்பில் ஒவ்வொருமொழிக்கும் மூன்றெழுத்திலான ஒரு குறியீடு (ISO-codes, three-letter language identifier codes) அளிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சர்வதேச தரநிர்ணய அமைப்பின்(International Organization for Standardization, ISO 639-3) முறையினை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட மூன்றெழுத்துக் குறியீடுகள் ஆகும். இதில் தமிழுக்காகஒதுக்கப்பட்ட குறியீடு tam (http://www.ethnologue.com/language/tam). பொதுவாக ஒருமொழியை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நிலை இருக்கும்பொழுது இந்தசீரான குறியீட்டு முறை குழப்பத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக,சமஸ்கிரதம் என்பது சான்ஸ்க்ரீட் என்றும் வடமொழி என்றும் அறியப்படும் பொழுது'san' என்னும் அதன் குறியீடு குழப்பத்தைத் தவிர்க்கிறது(http://www.ethnologue.com/language/san). கவனத்தைக் கவரும் பக்க குறிப்பு ஒன்று:இந்த அட்டவணை தரும் தகவலின்படி சமஸ்கிரதம் ஒரு செம்மொழி (Classical language)எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.இப்பட்டியல் தமிழ் மொழியைப் பற்றி அளிக்கும் தகவல்: தமிழ் உலகளவில் 68மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைகணக்கெடுப்பின்படி அதில் 60 மில்லியன் தமிழர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இதுதமிழகப்பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் தமிழ் ஆட்சிமொழியாக அன்றி இரண்டாம் நிலையில் ஒரு மாநிலத்தின் மொழியாக உள்ளது(Language Status - 2 /Provincial). இளநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில்பயிற்றுவிக்கப் படுகிறது. 1727 ஆம் ஆண்டு முதல் தமிழ் விவிலியத்தின்முழுமையான பதிப்பு வழக்கில் உள்ளது. அத்துடன் உலகில் மற்ற எந்தெந்த நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது என்றும், எத்தனை வட்டார வழக்குகள் உள்ளனஎன்றும் குறிபிடப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர், மரைட்டஸ், ஸ்ரீலங்காநாடுகளில் தமிழின் நிலை பற்றிய மேலதிகத் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது. அவற்றில் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் ஆட்சி மொழியின் நிலையிலும் (நிலை 1),மற்ற பிற நாடுகளில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் நிலையிலும் (நிலை 4)இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.மொழிவாரியாகவும், உலகின் பகுதிவாரியாகவும், நாடுகள் வாரியாகவும்தகவல்கள்கள் வழங்கப் பட்டுள்ளன (http://www.ethnologue.com/statistics). குறிப்பாகஇந்தியாவில் மொழிகளின் நிலையைப் பற்றி அறிய விரும்பினால், இத்தளம்வழங்கும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை விளக்கும்வரைபடங்கள் (http://www.ethnologue.com/country/IN/maps), மற்றும் இந்திய மொழிகளின்நிலையைப் பற்றிய தகவல்கள் (http://www.ethnologue.com/country/IN) ஆகியவற்றின்துணை கொண்டு அறிந்து கொள்ளலாம். இந்திய மொழிகள் எனப் பட்டியலிடப் பட்ட 461மொழிகளில் 447 மொழிகள் மட்டுமே தற்பொழுது புழக்கத்தில் உள்ளன,14 மொழிகள்முற்றும் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. அவ்வாறு இருக்கும் 447மொழிகளிலும் 55 மொழிகள் ஆபத்தான நிலையிலும், 12 அழிவுப் பாதையிலும் சென்றுகொண்டுள்ளன, 380 மொழிகள் மட்டுமே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன.மொழியின் அளவுகோல்:இவ்வாறு பற்பல தகவல்களை திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின்வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம்மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். இப்புதிய பதிப்பில்அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 'மொழிமேகம்' (Language Cloud) என்ற விளக்கப் படம் ஒரு'மொழிவளர்ச்சி அளவுகோல்' ஆகும். ஒரு மொழியின் தற்கால வளர்ச்சி நிலையைஉலகில் உள்ள மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வண்ணம்வரைபடமாகவும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அளவீடுகள் மிகவும்பயனுள்ளது. மொழியின் உபயோக நிலையை பல்வேறு வர்ணங்களால் குறியிட்டுவிளக்கப்படுவதால் இம்முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.இந்த அளவிடும் முறை EGIDS (Expanded Graded Intergenerational Disruption Scale) என்றுகுறிப்பிடப்படுகிறது. 'ஜாஷுவா ஃபிஷ்மேன்' (Joshua Fishman) என்னும் மொழியியல்வல்லுநர் (linguist) 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட 'ரிவர்சிங் லாங்குவேஜ் ஷிஃபிட்' (Reversing Language Shift) என்னும் நூலில் அவர் உருவாக்கியிருந்த GIDS (Graded Intergenerational Disruption Scale) என்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு, அதனைமேலும் விரிவுபடுத்தியதாக இம்முறை விளங்குகிறது. 0 முதல் 10 வரை உள்ளஅளவுகளில் குறிக்கப்படும் இந்த அளவுகோளின்படி, 0 என்னும் நிலை ஆங்கிலம்போன்ற ஒரு பன்னாட்டு மொழியையும், 10 என்பது மறைந்துவிட்ட மொழியையும்குறிக்கும். மேலும் இந்த 0 - 10 வரை உள்ள மொழியின் வளர்ச்சி நிலையை மேலும்தெளிவாக வகைப்படுத்த, மொழிகளைப் பலப் பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்குஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது.ஊதா = (EGIDS 0-4) — நிலைபடுத்தப்பட்டுவிட்ட மொழி - மொழி நன்கு வளர்ச்சி அடைந்தநிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளதுநீலம் = (EGIDS 5) — வளரும் மொழி - மொழி பயன்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்ந்துவளர்ச்சியை நோக்கியும் செல்கிறதுபச்சை = (EGIDS 6a) — உயிரோட்டமுள்ள மொழி - மொழி நல்ல பயன்பாட்டில் இருக்கிறதுஆனால் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது, ஆனால் பரவலான பயன்பாட்டில்இல்லைமஞ்சள் = (EGIDS 6b-7) — சோதனையைச் சந்தித்துள்ள மொழி - மொழி பேசுபவர்களின்எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கிறது, ஆனால்சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும்பயன்படுத்தப் படுவது மட்டுமே மொழியின் நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையைத்தரும் வகையில் உள்ளதுசிவப்பு = (EGIDS 8a-9) — அழியும் நிலையில் உள்ள மொழி - மொழி அழியும் ஆபத்தானநிலையில் இருக்கிறது, இதனை பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால்சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் மொழியின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில்இருக்கிறது.கருப்பு = (EGIDS 10) — அழிந்துவிட்ட மொழி - யாருமே பயன்படுத்தாத நிலையைஅடைந்து, யாரும் தங்கள் கலாச்சாரப் பின்னணியாகவும் அந்த மொழியை அடையாளம்காட்டாத நிலை (கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள்மேற்கூறப்பட்ட இந்த அளவீடை அடிப்படையாகக் கொண்டது).இந்த அளவிடும் முறைப்படி மொழியின் தற்கால நிலையென (0 விலிருந்து 10வரையான எண்) கணக்கிடப்பட்ட EGIDS அளவு உலகில் அம்மொழியைப்பேசுபவர்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டு, பிறகு இம்மொழியையும் அதனதுபயன்பாட்டு நிலையைக் குறிக்கும் வண்ணத்தில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்புஅல்லது கருப்பு வண்ணத்தில் ஒரு புள்ளியாகக் குறிப்பதால், ஒரே பார்வையில் அந்தமொழியின் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ எளிதில் நாம் புரிந்துகொள்ளலாம். உலகத்தில் உள்ள 7105 மொழிகளும் இந்த வரைபடத்தில் அதன்வளர்ச்சிக்கேற்ப ஒரு புள்ளியாகக் குறிப்பிடப்படுகிறது. நேர் அச்சில்(y axis)மொழியினைப் பேசும் மக்கட்தொகை 'மடக்கை அளவிலும்' (in logarithmic scale, 100 = 1; 102 = 100; 104 = 10,000; 106 = 1,000,000; 108 = 100,000,000), கிடை அச்சில் (x axis) EGIDSஅளவீடான மொழியின் வளர்ச்சியின் அளவும் குறிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்துமொழியின் புள்ளிகளையும் ஒருங்கே பார்க்கும் பொழுது இப்படம் ஒரு மேகம் போலத்தோற்றமளிப்பதால் 'மொழிமேகம்' என்று இந்த வரைபடம் குறிப்பிடப்படுகிறது. அதிகமாகப் பேசப்படும், நன்கு வளர்ச்சியடைந்த மொழி படத்தில் இடது மேற்புறம்ஊதா வண்ணத்திலும் அழிந்துவிட்ட மொழி படத்தில் வலது கீழ்புறத்தில் கருப்புவண்ணத்திலும் இடம் பெறும்.ஒவ்வொரு மொழிக்காகவும் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருப்பது போலவே,ஒவ்வொரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அதன் தனிப் பக்கத்தில்மொழிமேகத்தில் அந்த மொழியின் வரச்சியைக் குறிக்கும் வரைபடமும்கொடுக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், படம் - 1 இல் 'மொழியின்அளவுகோல்'; படம் -2 இல் மொழியின் அளவுகோலைக் கொண்டு உருவாக்கப் பட்டமாதிரி 'மொழிமேகம்’ விளக்கப்படம்'; படம் - 3 இல் 'தமிழின் வளர்ச்சி நிலை' ஆகியவைகொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியின் நிலை தற்கால நிலை:இந்த மொழியின் அளவுகோலின்படி, ஒரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது ஒருமுக்கிய அடிப்படைத் தகுதியாகவும், அளவுக்குறியாகவும் இருக்கிறது. ஒருவருக்குஅவரது தாய்மொழியில் படிப்பதுதான் எளிது என்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில்கொண்டு, உலக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தாய்மொழிக் கல்வியினைவலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி நாளாகக்குறிப்பிட்டு, விழா எடுத்து தாய்மொழியின் முக்கியத்தை உணர்த்தப் பாடுபட்டுவருகிறது. மொழிகளைப் பாதுகாக்க உலகம் தழுவிய முறையில் எடுக்கப்படும்உன்னதமான நடவடிக்கையாக இச்செயல் விளங்குகிறது.இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும் அதுஒரு மாநில மொழி மட்டுமே, இந்தியாவில் தமிழ் ஓர் ஆட்சி மொழியல்ல. தமிழர்களும்தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கெளவரமாகவும், ஆங்கில நூல்களைப்படித்து விவாதிப்பதைப் பெருமையாகவும் பல தலைமுறைகளாகக் கருதிவருகின்றனர். மேலும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அறிவும் குறைவு என்றஆணித்திரமான மனப்பான்மையும் உள்ளவர்கள் பெரும்பாலான தமிழர்கள்.இவ்வாறாக மொழியின் அளவுகோலின்படி மொழியின் மாட்சியான நிலையெனக்குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிளும் தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தமிழின் நிலை இவ்வாறிருக்க, சமீபத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளும்,பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி என்ற நிலைப்பாடும் மொழியின் வளர்ச்சிஅளவுகோலின் பயிற்றுமொழி என்ற தகுதியிலிருந்தும் தமிழை விலக்கிச் செல்லும்முதல் நடவடிக்கையாக இருக்கிறது. இந்த முடிவு சரிதானா என்பதை மொழியின்ஆர்வலர்கள் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகிறது.References:[1] Ethnologue’s newest edition reports vitality of sign languages worldwide. (http://www.sil.org/about/news/ethnologue%E2%80%99s-newest-edition-reports-vitality-sign-languages-worldwide)[2] Assessing endangerment: Expanding Fishman’s GIDS. Revue Roumaine de Linguistique, Paul M. Lewis & Gary F. Simons. 2010. 55.2: 103–20. (http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf)[3] Language development versus language endangerment: Assessing the situation worldwide, Gary F. Simons, SIL International. IAS and GILLBT conference on Language and Culture in National Development, University of Ghana, Legon, 12–13 April 2012. (http://www-01.sil.org/~simonsg/presentation/Ghana%202012.pdf)[4] Expanded Graded Intergenerational Disruption Scale.(http://surveywiki.info/index.php/EGIDS)[4] International Mother Language Day (IMLD). (http://www.un.org/en/events/motherlanguageday/)[5] UNESCO Atlas of the World's Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)[6] Analyzing the role of instructional language in Enhancing scientific cognition of elementary level Students belonging to marginalized communities; Sindh – Pakistan, Dr. Tayyaba Zarif and Dr. Aijaz Ahmed. ISSN: 2186-8492, ISSN: 2186-8484 Print Vol. 2. No. 1. February 2013. (http://www.ajssh.leena-luna.co.jp/AJSSHPDFs/Vol.2(1)/AJSSH2013(2.1-29).pdf)[7] Karuna opposes English in govt schools as medium of instructions, Chennai, May 14, 2013. (http://indiatoday.intoday.in/story/karuna-opposes-english-in-govt-schools-as-medium-of-instructions/1/271024.html)
நன்றி:திண்ணை, June 24th, 2013
_____________________________
On Friday, August 30, 2013 2:40:56 AM UTC-7, கதிரவன் wrote:சில நாட்களுக்கு முன் முகநூலில் படித்தது. இத்தலைப்பிற்கு மிகவும் பொருந்தும்:சரித்திரத்த கொஞ்சம் திருப்பி பாருங்க...அது நமக்கு கத்துகொடுத்தது ஒன்னு தான்...சோறு போடாத எந்த மொழியும் அழிந்துவிடும்...இதுவரைக்கும் இந்த உலகத்தில் ஆங்கிலத்தால் அழிந்த(216+)/அழிந்துகொண்டிருக்கின்ற(தமிழ்,etc) மொழிகள் இதற்கு சான்றுகள்...
தமிழை படித்தால் வேலை இல்லையாம்...தமிழில் படித்தால் வேலை கிடைக்காதாம்...தமிழில் பேசினால் அவமானமாம்...பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனையாம்...காரணம் சோறு போடாத எந்த மொழியும் பிழைத்ததில்லை...அப்படிப்பட்ட மொழியைத்தான் நிறைய பேர் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்...பிழைக்க ஆங்கிலம் வேண்டும் என்றால், ஆங்கிலத்தை எப்படியாவது கற்றுகொள்வார்கள்...பிழைக்க தமிழ் வேண்டும் என்று வரும் போது தமிழை யாரும் சொல்லாமலே கற்றுகொள்வார்கள்...ஒரு மொழி எப்படி அழியும் என்பதை இந்த பக்கத்தில் தெளிவாக கொடுத்துளார்கள்(http://en.wikipedia.org/wiki/Language_death)...(ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டதற்கு மன்னிக்கவும்...)
Language death : This is a sudden event, but a slow process of each generation learning less and less of the language, until its use is relegated to the domain of traditional use, such as in poetry and song. Typically the transmission of the language from adults to children becomes more and more restricted, to the final setting that adults speaking the language will raise children who never acquire fluency. One example of this process reaching its conclusion is that of the Dalmatian language. Language death can be fast, when the children are taught to avoid their parents' language for reasons such as work opportunities and social status.
ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்காமல் அதை அறிவாகக் கற்பது தவறு...அறிவை தாய்மொழியில் மட்டும் கற்க வேண்டும்...ஆங்கிலத்தை மொழியாக மட்டும் கற்க வேண்டும்...அப்போதுதான் சிந்தனைகள் தாய்மொழியில் வளரும்...சிந்தனைகள் தாய்மொழியில் இருந்தால்தான் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்...
1. அதற்கு முதற்படி பாரதி கூறியதைப் போல் பிற நாட்டு நல்அறிஞர்கள் சாத்திரங்கள் நம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தல் வேண்டும்...அப்போதுதான் நாம் அறிவை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் முழுமையாக கற்க முடியும்...
2. தமிழ் மொழியில் கலை சொற்பொருள் அகராதி வேண்டும்...தமிழ் மொழியில் புதிய சொற்களை புதிய கலை சொற்களை காலத்திற்கேற்ப சேர்க்க வேண்டும்...
3. பள்ளிகளில் ஆங்கிலத்தைத் தவிர பிற பாடங்களை தாய்மொழியில்(தமிழில்) கற்றல் வேண்டும்...ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் கற்க வேண்டும்...அப்போதுதான் சிந்தனைகள் தாய்மொழியில் வளரும்...ஒன்றைப் பற்றி எந்த மொழியில் படிகிறார்களோ அந்த மொழியில் தான் அதைப்பற்றி நிறைய புதிய சிந்தனைகள் வரும்...சிந்தனைகள் தாய்மொழியில் இருந்தால்தான் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்...
4. வரலாறு முக்கியம் அமைச்சரே...நாம் நம் வரலாற்றை காக்க வேண்டும்...நம் வரலாற்றை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்...நம் வரலாற்றை முழுமையாக அறிய ஆய்வுகள் நடத்த வேண்டும்...
5. தமிழ் நமது தாய்மொழி...நமது தாய்மொழி தமிழில் பேசவோ எழுதவோ என்றும் வெட்கப்படவோ பயப்படவோ கூடாது...
6. அரசு தமிழைக் கற்போரை தமிழில் கற்போரை ஊக்குவிக்கவேண்டும்...
7. எந்த ஒரு சமூகம் நிறைய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிகிறதோ அது உலகத்தால் வல்லரசாக கருதப்படும்(எ.கா. அமெரிக்கா, இங்கிலாந்து,etc... பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் நாட்டில் உள்ளவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றாலும, அவர்கள் நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் research/phd மாணவர்களால் கண்டுபிடித்தால் அது அந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும்...இதற்காகவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் research/phd மாணவர்களை மற்ற நாடுகளிளிருந்து ஈர்க்கின்றன...யார் கண்டுபிடித்தார் என்பது முக்கியம் இல்லை...எந்த நாட்டை தலைமை இடமாக கொண்ட நிறுவனம் கண்டுபிடித்தது என்பது தான் முக்கியம்...)...புதிதாய் கண்டுபிடிக்க நடக்கும் ஆராய்ச்சிகள் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படவேண்டும் அல்லது தமிழில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்...இந்த பக்கத்தில் ஒரு மொழியை எப்படி வளர்ப்பது பற்றி நிறைய குறிப்புக்கள் உள்ளன(http://en.wikipedia.org/wiki/Language_revival)...
அன்புடன்,
Steps in reversing language shift :
---------------------------------------
Joshua Fishman's model for reviving threatened (or dead) languages, or for making them sustainable,[4][5] consists of an eight-stage process. Efforts should be concentrated on the earlier stages of restoration until they have been consolidated before proceeding to the later stages. The eight stages are as follows:
1. Acquisition of the language by adults, who in effect act as language apprentices (recommended where most of the remaining speakers of the language are elderly and socially isolated from other speakers of the language).
2. Create a socially integrated population of active speakers (or users) of the language (at this stage it is usually best to concentrate mainly on the spoken language rather than the written language).
3. In localities where there are a reasonable number of people habitually using the language, encourage the informal use of the language among people of all age groups and within families and bolster its daily use through the establishment of local neighbourhood institutions in which the language is encouraged, protected and (in certain contexts at least) used exclusively.
4. In areas where oral competence in the language has been achieved in all age groups encourage literacy in the language but in a way that does not depend upon assistance from (or goodwill of) the state education system.
5. Where the state permits it, and where numbers warrant, encourage the use of the language in compulsory state education.
6. Where the above stages have been achieved and consolidated, encourage the use of the language in the workplace (lower worksphere).
7. Where the above stages have been achieved and consolidated encourage the use of the language in local government services and mass media.
8. Where the above stages have been achieved and consolidated encourage use of the language in higher education, government etc.
This model of language revival is intended to direct efforts to where they are most effective and to avoid wasting energy trying to achieve the later stages of recovery when the earlier stages have not been achieved. For instance it is probably wasteful of effort to campaign for the use of the language on television or in government services if hardly any families are in the habit of using the language.
Factors which help an endangered language to progress :
------------------------------------------------------------------
David Crystal, in his book Language Death,[6] proposes six factors which may help a language to progress. He postulates that an endangered language will progress if its speakers:
1. increase their prestige within the dominant community
2. increase their wealth
3. increase their legitimate power in the eyes of the dominant community
4. have a strong presence in the education system
5. can write down the language
6. can make use of electronic technology
மிக பெரிய பட்டியலில் எனக்கு மிக முக்கியம் என்று தோன்றிய சிலவற்றை மட்டும் மேலே பகிர்ந்துள்ளேன்...இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே...
கதிரவன்2013/8/30 Pandiyaraja <pipi...@gmail.com>
மிக மிக அருமையான பகிர்வு - அதிலும் இறுதியில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதி மிக அருமை. சொரணை கெட்ட கூட்டத்துக்குச் 'சுரீர்' என்று தைக்கிறமாதிரி அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். ஒரு கதை (!) சொல்வர்கள்:- தமிழகச் சட்டச்சபையில் அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றித் தன் விவாதத்தைத் தொடங்குகிறார். "சூடான ஒரு பிரச்சினை பற்றி என் விவாதத்தைத் தொடங்குகிறேன்". உடனே அங்கிருந்த அமைச்சர் சுப்பிரமணியன், "இது ஒன்றும் சூடான பிரச்சினை இல்லை" என்றார். அடுத்த நொடியில் அண்ணா வெடித்தார், "சூடு சொரணை உள்ளவர்களுக்கு இது சூடான பிரச்சினைதான்". அவை அதிர்ந்தது. (உண்மையா இல்லையா?) ப.பாண்டியராஜா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.