சங்கமம் லைவ் :: செய்திகள்

79 views
Skip to first unread message

sangamam live

unread,
May 28, 2009, 5:02:06 PM5/28/09
to tamila...@googlegroups.com
இலங்கை


சிறப்புப்பகுதி
ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே! - நாக.இளங்கோவன்
தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று வன்முறையாலும் சூழ்ச்சியாலும் வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள் போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ் நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள் நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான் நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.
 
மேலும் படிக்க…


சினிமா



ஆன்மீகம்



விளையாட்டு



சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

காரணம் அவள்தான்..! - துரை


ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே! - நாக.இளங்கோவன்
தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று வன்முறையாலும் சூழ்ச்சியாலும் வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள் போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ் நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள் நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான் நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.
 

ஸ்ரீபெரும்பதூரில் ஜூன் 5 - 7 ல் இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு
சென்னை , இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு ஸ்ரீபெரும்பதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தில் வரும் ஜூன் 5ம் தேதி துவங்குகிறது.
 

சிவகங்கை, ஈரோடு கலெக்டர்கள் உட்பட : 6 கலெக்டர்கள் மாற்றம்
சென்னை , தமிழ்நாட்டில் 8 மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு, சிவகங்கை உட்பட 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சி தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணை
 

தமிழர் படுகொலைக்காக அமைதிப் பேரணி : வி.சி அஞ்சலி
சென்னை , இலங்கையில் நடந்த போரில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில், அமைதிப் பேரணி நடந்தது.
 

தமிழக மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு
குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் மு.க. அழகிரி, ஆ. ராஜா, ஜி.கே. வாசன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திச்செல்வன், பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதனை ஏற்று அமைச்சர் பொறுப்பேற்க உள்ள தமிழக உறுப்பினர்கள் பதவி பிரமாண உறுதிமொழி எடுக்கின்றனர். -டி.என்.ஐ.
 

மின்னணு வாக்குப்பதிவே நேர்மையானது : தேர்தல் அதிகாரிகள் பேட்டி
சென்னை , மின்னணு இயந்திரத்தின் மூலம் செய்யப்படும் வாக்குப்பதிவை யாராலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது. மின்னணு இயந்திரத்தில் முன்கூட்டியே எந்த தவறுகளையும் செய்ய முடியாது என்று கணினி தொழில்நுட்ப நிபுணர்கள், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் : டிமோதி ரோமர்
வாஷிங்டன் , இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக டிமோதி ரோமரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்காவில் ஒபாமா தலைமையில் ஜனநாயகக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசு உயர்பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் வெளிநாடுகளுக்கான புதிய தூதர்கள் பெயரை தலைநகர் வாஷிங்டனில் நேற்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.
 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கும்பாபிஷேகம் - அறநிலையத் துறை ஆணையர்
திருச்செந்தூர் , தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது என்று இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் தெரிவித்தார்.

விபசார அழகிகளுக்கு தற்காப்பு பயிற்சி
சென்னை , சென்னையில் வறுமை காரணமாகவும், குடும்ப சூழ்நிலையாலும் பெண்கள் விபசார தொழிலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் அரிகரன் கூறியதாவது:
 

சென்னை மாநகராட்சி கூட்டம் : எஸ்.வி.சேகர் பேச்சு
சென்னை , சென்னை மாநகராட்சி கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் சிறப்பு விருந்தினராக திடீரென கலந்து கொண்டார். அவரை எம்.எல்.ஏ. இருக்கையில் அமரும்படி மேயர் கூறினார்.
 

சென்னையில் விளம்பரம் செய்ய தடை : மேயர்
சென்னை , சென்னை நகரில் ஜூன் 10ந் தேதி முதல், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேயர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 

வெளிநாட்டு இந்தியர் வாக்குரிமை : அரசுக்கு நோட்டீஸ்
திருவனந்தபுரம் , வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் வாக்குரிமை அளிக்கும்படி கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
 

உ.பி., குஜராத்தில் மத்திய அரசின் புலனாய்வு கல்லூரிகள்
புதுடெல்லி , இளம்போலீஸ் அதிகாரிகளுக்கு நவீன பயிற்சி அளிப்பதற்காக மேலும் இரண்டு புலனாய்வு கல்லூரிகளை மத்திய அரசு அமைக்கிறது. போலீஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வு மற்றும் விசாரணைகள் பற்றி பயிற்சி அளிப்பதற்காக சண்டிகர், ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் ஏற்கனவே 3 புலனாய்வு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
 

முஸ்லிம் மாணவிகளுக்கு புதிய சலுகை
சென்னை, அரசு வெளியிட்ட அறிக்கை : பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிப்பதற்காக, கடந்த ஆண்டு திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, கோவை, வேலூர் ஆகிய ஊர்களில் மாணவிகள் விடுதியை அரசு தொடங்கியது.
 

நுகர்வோர் பாதுகாப்பு : பிரதிபா பாட்டீல்
புதுடில்லி , நுகர்வோர் பாதுகாப்பு தேசிய அளவிலும் உலக அளவிலும் தீவிரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய ஒரு சட்ட அமைப்பும் மற்றும் ஒரு வலிமையான குறைதீர்ப்பாயமும் தேவை என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 

நக்சல்களை ஆதரிக்கவில்லை : பினாய்க் சென்
சட்டீஸ்கர் , இரண்டாண்டுகள் சட்டீஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது விடுதலையாகியுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் பினாயக் சென், தான் நக்சல் ஆதரவாளர் அல்ல என்று தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றி்ற்குப் பேட்டி அளித்த அவர், தான் நக்சலையும் ஆதரிக்கவில்லை மற்றும் அரசையும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
 

சென்னை பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு : புதிய காவல்துறை ஆணையாளர் பேட்டி
சென்னை , சென்னை பெருநகரத்தின் சட்டம் ஒழுங்கையும், பாதுகாப்பையும் வழுப்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று சென்னை மகாநகர காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்று கொண்டுள்ள ராஜேந்திரன் கூறினார்.
 

இந்திய ரயில்வே வருவாய் : 2.38% அதிகரிப்பு
புதுடெல்லி , இம்மாதத்தின் முதல் 10 தினங்களில், ரயில்வே துறைக்கு இந்த ஆண்டு 2.39 விழுக்காடு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
 

கங்கை - குமரி நீர்வழிச்சாலை திட்டம் விரைந்து நிறைவேற்ற கோரிக்கை
மதுரை , நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கிட கங்கை - குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கங்கை - குமரி தேசிய நீர்வழிச்சாலை இயக்கத்தின் தலைவர் பொறியாளர் ஏ.சி. காமராஜ்யின் பேட்டி :

வட்டியில்லா கடன் : பிரணாப் முகர்ஜி
புதுதில்லி , பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக வங்கிக்கடன் மீதான வட்டியைக் குறைக்கவும், வாடிக்கையாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் தராளமாகக் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடுவண் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
 

காரைக்காலை தனி மாவட்டம் அறிவிக்க கோரிக்கை
சென்னை , புதுவை பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பகுதியைத் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று நடுவண் உற்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை முன்னாள் மக்களவை உறுப்பினர் முனைவர் இராமதாசு கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாகச் சிதம்பரத்திற்கு அவர் எழுதியுள்ள மடல் :
 

திராவிட இனம் கற்பனை அல்ல : கருணாநிதி உறுதி
சென்னை , திராவிட இனம் என்பது கற்பனையல்ல என்றும், திராவிடத்தின் தூதுவர்களாகிய தமிழர்கள் ஆரிய சூழ்ச்சிகளை வெற்றி கொள்வார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட திமுகவின் மிகச்சிறந்த சுயமரியாதைகாரராகவும், சிறந்த தொண்டனாகவும், தூயவனாகவும், தியாகியாகவும், மிசா கைதியாகவும், அஞ்சா நெஞ்சனாகவும் வாழ்ந்து மறைந்த பரசுராமனின் மகனும் தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான கே.சி.பி. சாமியின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி பேசியது : திராவிடர் இனம் என்பது கற்பனை திராவிடர், ஆரியர் என்று ஒரு காலத்தில் எல்லோரும் பேசினர்.

பி.எல்.படிப்பு: வயது வரம்பு நிர்ணயம்
சென்னை , 3 வருட பி.எல்.படிப்பில் சேர அதிகபட்சம் 30 வயது என்றும் 5 வருட பி.எல்.படிப்பில் சேர அதிகபட்ச வயது 20 என்றும் இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
 

ஆயுத ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஒப்பந்தம் ரத்து : அந்தோணி
புதுடில்லி "ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கும் விஷயத்தில் முறைகேடு நடந்தால், அது தொடர்பான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும்' என, ராணுவ அமைச்சர் அந்தோணி எச்சரித்தார். ராணுவ தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கம் டில்லியில் நடந்தது. இதில் ராணுவ அமைச்சர் அந்தோணி பேசியதாவது: ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களில் முறைகேடு நடந்தால், உடனடியாக அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். தனியார் தொழில் துறையினர் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

அமைச்சர்களுக்கு வீட்டில் பணி : முதல்வர் எடியூரப்பா
பெங்களூரு , சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு "ஒர்க் அட் ஹோம்' வசதி இருப்பது போல, கர்நாடக பா.ஜ.,மந்திரிகளும் , வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அனுமதி அளித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்யலாம். அவர்கள் வெளிநாட்டில் பணியாற்றினாலும், வீட்டுக்கு வந்திருந்தால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம்.
 

அரசியலில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது : சுப்ரீம் கோர்ட் அறிவுரை
புதுடில்லி , அரசியலில் மாணவர்கள் ஈடுபடுவது சரியல்ல என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

2,000 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் வங்கி சேவை -ரிசர்வ் வங்கி
சென்னை ''குறைந்தது 2,000 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு லட்சத்து 7,000 கிராமங்களில், 2011ம் ஆண்டுக்குள் வங்கி சேவையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தெரிவித்தார். முன்னோடி வங்கி திட்டத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, தனது வரைவு பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் கூறியதாவது:
 

மருத்துவ படிப்பு: 30, 31-ல் சென்னையில் கண்காட்சி
சென்னை , மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடர்பான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் வரும் 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடர்பான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி, "கேட்ச் 2009' என்ற பெயரில், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடக்கிறது.
 

+1 தொழிற்பிரிவு மாணவர்கள் + 2 தொடர அனுமதி
சென்னை ""கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1 தொழிற்பிரிவில் சேர்ந்த மாணவர்கள், எவ்வித பிரச்னையும் இன்றி அதே பிரிவில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கலாம்,'' என பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

மண்ணின் மைந்தர் சிவசேனை கோரிக்கை, வருமான வரித் துறை ஏற்பு
மும்பை , மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாகும் மத்திய அரசு வேலைகளில் அம்மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
 

கனடா பெண் எழுத்தாளருக்கு புக்கர் விருது
லண்டன் , கனடா நாட்டைச் சேர்ந்த சிறுத்தை பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ (77) இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

தெலுங்கானா மாநிலம்: தெலுங்கு தேசம் நிலையில் மாற்றம் இல்லை - சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத் , தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்ததால் தெலங்கானா தனி மாநிலம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
 

தமிழக மத்திய அமைச்சர் பட்டியல் பலவீனம்
சென்னை , கடந்த முறை மன்மோகன் சிங் அமைச்சரவையில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இந்த முறை 10 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. 2004-ல் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காபினட் அமைச்சர்களாகவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ். ரகுபதி, வேங்கடபதி, ஆர். வேலு ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 2006 ஜனவரியில் ஜி.கே. வாசன் மத்திய இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவியேற்றார்.
 

தமிழகத்தில் 11 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகளுக்குத் தடையில்லா சான்றிதழ்
சென்னை , தமிழகத்தில் புதிதாக 11 பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க முதல் கட்டமாக தமிழக அரசின் சார்பில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு, அரசு உதவி பெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் 343 உள்ளன. இந்த நிலையில் புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க, 117 விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகத்துக்கு வந்தன. இவற்றில் 48 விண்ணப்பங்களுக்கு "தடையில்லா சான்றிதழ்' வழங்கப்பட்டுள்ளது.
 

இலங்கை மனித உரிமை மீறலுக்கு இந்தியா ஆதரவு- பி.யூ.சி.எல் கண்டனம்
சென்னை , மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கையை இந்தியா ஆதரிப்பதற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியது:
 

கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
சென்னை , இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை எம்எஸ்ஓடி மேலாண்மை பள்ளி அறிவித்துள்ளது

விடுதலைப் புலிகள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி கைது
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி ( சுப்பிரமணியம் சிவதாய் என்ற தமிழினி) அகதி முகமொன்றில் வைத்து இராணுவம் கைது செய்துள்ளது.
 

பிரபாகரன் பெற்றோரை இலங்கை இராணுவம் கைது செய்த‌து
கொழும்பு :விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் பெற்றோரை இராணுவம் கைது செய்‌து காவலில் வைத்துள்ளது
 

Click here to end all Your subscriptions
This is an autogenerated news mail, please do not respond

bala murali

unread,
May 28, 2009, 5:38:10 PM5/28/09
to tamila...@googlegroups.com
திராவிட இனம் கற்பனை அல்ல
கத கேளு.. கத கேளு..

 



sangamam live

unread,
May 29, 2009, 5:34:02 PM5/29/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே! - நாக.இளங்கோவன்
தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று வன்முறையாலும் சூழ்ச்சியாலும் வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள் போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ் நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள் நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான் நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.
 
மேலும் படிக்க…

சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

(வீடியோ)இலங்கை இறுதி யுத்தத்தில் 20000 தமிழர்கள் படுகொலை - தி டைம்ஸ் தகவல்
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கனரக ஆயுதங்களைக் கொண்டு இனப்படுகொலை செய்திருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' செய்தி நிறுவனம் இலங்கை அரசை குற்றம் சாட்டியுள்ளது
கண்தானம் : 5,885 கண்கள் சேகரிப்பு
மும்பை , மும்பையில் தேசிய பார்வையற்றோர் கட்டுப்பாட்டு திட்டத்தின் உதவி இயக்குனர் ஆர்.எம்.கும்பார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மராட்டியத்தில் தேசிய பார்வையற்றோர் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 2008-09ம் ஆண்டில் நாங்கள் 5 ஆயிரத்து 885 கண்கள் சேகரித்து உள்ளோம்.
 
முதல்வர் பிறந்த நாள் பரிசு 6000 ஊழியர்கள் பணி நிரந்தரம்
சென்னை , தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
 
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
பெஷாவர் , பாகிஸ்தான் லாகூர் நகரில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் மனிதகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 பேர் பலியானார் கள். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்து உள்ளது.

பெஷாவர் நகரில் மனித குண்டு தீவிரவாதி ஒருவன் அங்குள்ள ராணுவ சோதனை சாவடிக்குள் புகுந்து குண்டை வெடிக்க செய்தார். இதில் 4 வீரர்கள் உயிர் இழந்தனர். இதே பகுதியில் 2 மோட்டார் சைக்கிளில் டைம் பாம் வெடிகுண்டுகள் வைக் கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்து ராணுவத்தினர் அகற்றினார்கள்.
பொறுப்புடன் செயல்படுவேன் : துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
சென்னை , தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான கருணாநிதியின் அறிவுரையின் படி பொறுப்புடன் செயல்படுவேன் என துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் கூறினார்.
 
தமிழக சட்டப்பேரவை : வரும் 17ம் தேதி கூடுகிறது
சென்னை , சட்டமன்ற பேரவை வரும் 17ம் தேதி கூடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக கூடியது. பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு மாநில கோரிக்கைகள் மீதான விவாததங்கள் எதுவும் நடைபெறவில்லை.
 
பி.எப்.க்கு 8.5% வட்டி: அமைச்சகம் உறுதி
புதுடெல்லி , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டில் 8.5 சதவீத வட்டியை தருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது.
 
5,000 பணியாளர்களை பணிக்கு சேர்க்க யூனியன் வங்கி முடிவு
புதுடெல்லி , அரசு துறை வங்கியான யூனியன் பாங்க் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்க்க முடிவு செய்துள்ளது. முதல் முறையாக ஐ.ஐ.எம். மாணவர்களையும் இந்த வங்கி வேலையில் சேர்க்கிறது.
 
இந்திய ஜவுளி ஏற்றுமதி: உயர்கிறது
புதுடெல்லி , கடந்த 2007-08-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 2147 கோடி அமெரிக்க டாலர். 2008-09-ம் ஆண்டு ஏற்றுமதி மொத்த மதிப்பு 2200 கோடி டாலராகும் என மத்திய ஜவுளித் துறை இணைச் செயலாளர் ஜே.என்.சிங் கூறினார்.
 
சென்னையில் ரூ.3,800 கோடியில் ராமானுஜம் ஐ.டி.சிட்டி
மும்பை , சென்னை தரமணி ரெயில் நிலையத்துக்கு எதிரில் ரூ.3,800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஐடி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு ராமானுஜம் ஐடி சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
துணை முதல்வர் ஸ்டாலினுக்கு: தலைமை செயலகம் வாழ்த்து
சென்னை , துணை முதலமைச்சர் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
 
இலங்கையின் இனப்பாகுபாடு: ஐ.நா.கவுன்சில் கண்டனம்
ஜெனீவா , தமிழர்களிடம் இலங்கை அரசு இனப் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
 
இயக்குனர் வழிகாட்டி பயிற்சி: கமல்ஹாசன் வருத்தம்
சென்னை , சினிமாவில் திரைக்கதை எழுதுவத எப்படி? என்பது பற்றி இந்திய தொழில் நுட்ப கழகத்துடன் (ஐஐடி) இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நடத்தும் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியது.
 
மருத்துவம்: ஜூன் 16-ல் கவுன்சலிங்
சென்னை , மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஷீலாகிரேஸ் ஜீவமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:-
மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டப் படிப்பு, டிப்ளமோ, பல் மருத்துவ மேற்படிப்பு மற்றும் எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங்கை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் ஜூன் 16-ம் தேதி முதல் நடத்த உள்ளது. விவரம் அறிய www.tnhealth.org, www.tngov.in இணைய தளங்களை பார்க்கவும்.
 
ஜூலையில் ரெயில்வே பட்ஜெட்
புதுடெல்லி , 2009-10ஆம் நிதியாண்டிற்கான தொடர் வண்டித் துறை நிதிநிலை அறிக்கை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தொடர் வண்டித் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கூறியது.
 
38,000 எக்டேர்: குறுவை சாகுபடி தொடக்கம்
தஞ்சாவூர் , மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் அணையிலிருந்து குறுவை பாசனத்திற்காக வரும் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப் படாது என்பது உறுதியாகி விட்டது. எனவே தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நீர் இறைப்பான்களை நம்பி 38 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ளது. இன்னும் பல ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படலாம் என்றார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் உழவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பால் விலை: லிட்டர் ரூ.20, 22
திருவண்ணமலை , திருவண்ணாமலை பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.
 
அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு
திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
 
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம் இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம், தமிழர்களுக்கான தளம் என்ற ரீதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் சங்கமம் கேட்டுக்கொள்கிறது.

http://www.act-now.info/Site/Online_Appeal.html
மராட்டியம், தமிழ்நாடு: அதிக அமைச்சர்கள்
புதுடெல்லி , மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கும், மராட்டிய மாநிலத்திற்கும் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.
 
அரசு நிதி உதவி பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூல்
ராமநாதபுரம் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, சாயல்குடி, முது குளத்தூர், பரமக்குடி உட்பட பல நகரங்களிலும் கிராமங்களிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன.
 
பயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
விருதுநகர் , வானிலைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து, பயன்பெறக் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து விவசாயக் காப்பீட்டுக் கம்பெனி மண்டல மேலாளர் அன்பரசு பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
 
சென்னையில் வாய்ப் புற்று நோய் இலவச முகாம்
சென்னை , இராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய்ப் புற்றுநோய் அறியும் இலவச முகாம் நாளை நடைபெறுகிறது.
 
ஆசிய மனித உரிமைச் சூழல்: கடும் பாதிப்பு - சர்வதேச மனித உரிமைக் கழகம்
லண்டன் , ஆசிய நாடுகளுக்கு இடையே போரற்று சூழல் நிலவிய போதும், தங்கள் நாட்டு மக்கள் மீது அரசுகள் நடத்தும் ஒடுக்கு முறைகளால் மனித உரிமைச் சூழல் ஆசியக் கண்டத்தில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது என்று சர்வதேச மனித உரிமைக் கழகம் (அம்னஸ்டிக் இண்டர் நேஷ்னல்) கூறியுள்ளது.
 
வேலை உறுதி திட்டம்: ஊராட்சி தலைவர்கள் போர்க்கொடி
பொள்ளாச்சி , கேரள மாநிலத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிக்கு சம்பளத்துடன் மாநிலத்தின் மானியத் தொகை வழங்குவது போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
உள்ளூர் 10 பைசா: வெளியூர் 25 பைசா ராசா தெரிவிப்பு
புதுடெல்லி , உள்ளூர் அழைப்பு நிமிஷத்துக்கு 10 பைசாவாகவும் நாடு முழுவதுக்கும் எஸ்.டி.டி. அழைப்பு நிமஷத்துக்கு 25 பைசாவாகவும் குறையும் என்று மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஆ.ராசா தெரிவித்தார்.
 
காஞ்சி சங்கர மடம் ஸ்ரீகார்யம் காலமானார்
காஞ்சிபுரம் , காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகார்யம் நீலகண்டய்யர் (86) புதன்கிழமை காலமானார். ஸ்ரீசங்கர மடத்தில் 30 ஆண்டுகளாக ஸ்ரீகார்யமாக பணிபுரிந்தவர் நீலகண்டய்யர் (86). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனது வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து புதன்கிழமை இறந்தார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.
 
பி.இ. விண்ணப்பம் அண்ணா பல்கலை சேர்ந்ததா?: இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு
சென்னை , மே 28: பூர்த்தி செய்து அனுப்பப்பட்ட பி.இ. விண்ணப்பங்கள், அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் போய் சேர்ந்து விட்டதா என்பதை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.
 
தமிழக காங்கிரஸை வலுப்படுத்த ராகுல் உறுதி
புது தில்லி , மே 28: தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவேன் என்று அறிவித்தார் ராகுல் காந்தி.
 
மு.க.ஸ்டாலின் துணை முதல்வர்
சென்னை,   திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் எடுத்த ஒருமித்த முடிவின்படி  தமிழக துணை முதலமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.

sangamam live

unread,
May 30, 2009, 5:23:59 PM5/30/09
to tamila...@googlegroups.com
கருணாநிதி இலங்கை தமிழ் எம்.பி.க்கள் : சந்திப்பு
சென்னை, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போர் காரணமாக சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்து அகதிகளாககப்பட்டுள்ளனர். சுமார் 30 இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
அசத்தப்போவது யாரு புகழ் : கோவை ரமேஷ் பலி
காங்கயம் , காங்கயம் அருகே காரும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ‘அசத்தபோவது யாரு‘ புகழ் கோவை ரமேஷ் உள்பட 2 பேர் பரிதாபாமாக இறந்தனர். கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார். சன் டி.வியில் ஒளிப்பரப்பாகும் அசத்தபோவது யாரு நிகழ்ச்சயில் பங்கேற்று வந்தார்.
கவர்னர் பர்னாலா: துணை முதல்வர் சந்திப்பு
சென்னை, கவர்னர் பர்னாலாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
 
வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு 100 பஸ்
திருச்செந்தூர் , வைகாசி விசாக திருவிழாவையொட்டி தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில்கள் இயக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
விவசாய, கட்டுமான தொழில் வாரியம் : தலைவர்கள் நியமனம்
சென்னை , தமிழ்நாடு விவசாயிகள் நல வாரியத் தலைவராக கே.பி. ராமலி்ங்கமும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவராக பொன். குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
குர் ஆன்: சமஸ்கிருத மொழி பெயர்ப்பு
சென்னை, உலகப் பொதுமறை திருக்குர் ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
 
மாநிலங்களவை: 13 இடம் காலி
புதுடெல்லி , ராஜ்ய சபா எனப்படம் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட பல எம்பிக்களும் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சிகளின் சார்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் 13 பேர் வெற்றி பெற்றதால் தற்போது மாநிலங்களவையில் 13 இடங்கள் காலியாக உள்ளன.
 
மின்னணு ஓட்டுக்கு ரசீது: சு.சாமி ஆராய்ச்சி
சென்னை , மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்காளர், தனது வாக்கைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ரசீது தரும் நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றினால் தேர்தல் தில்லுமுல்லுகளை தவிர்க்கலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
 
இந்தியர் வருமானம்: மாதம் ரூ.3000
புதுடெல்லி , இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்தியர்களின் சராசரி மாத வருமானம் 3 ஆயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட தன் பயனாகவே இந்த சாதனை எட்டப் பட்டிருப்பதாக நடுவண் புள்ளியியல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
 
திரிணாமுல் காங்கிரஸ்: டாடாவின் கைக்கூலி அல்ல - மம்தா அதிரடி
கொல்கத்தா , மக்களவைத் தேர்தல் நிதியாக திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு டாடா நிறுவனம் அனுப்பி வைத்த 28 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஆணையிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டாடாவின் கைக்கூலி அல்ல என்றும் மம்தா பானர்ஜயின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும், சர்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
மனித உரிமை மீறல்: ஐ.நாவுக்கு உரிமை கிடையாது - தி டைம்ஸ் கண்டனம்
லண்டன் , இலங்கையில் மனித உரிமை உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்குத் துணை போக ஐ.நா.வுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் தி டைம்ஸ் எடு அதன் தலையங்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள வெற்றி முற்றிலும் அவமானம் என்றும் கூறியுள்ளது.
ஐ.நா. மீதான நம்பகத்தன்மை அழிந்தது
ஜெனிவா , இலங்கை மீதான போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் குழு நடத்திய வாக்கெடுப்பின் முடிவு ஐ.நா.வின் மீதான நம்பகத் தன்மையை மேலும் சீர் குலைத்துள்ளது என்று த பைனான்சியல் டைம்ஸ் என்ற நாளோடு தெரிவித்திருக்கிறது.
 
கமிஷன் கேட்ட உறுப்பினரால் நகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு
தேனி , வளர்ச்சித் திட்டங் களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் அதிகாரிகளுக்கும், தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் கமிஷன் (தரகுத்தொகை) வழங்கப்படுவது போல் தனக்கும் வழங்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் நகராட்சிக் கூட்டத்திலேயே கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தமிழகத்தில் 1,000 மெ.வா: மின் உற்பத்தி நிலையம்
ஐதராபாத் , தமிழகத்தில் வள்ளூரில் தலா 500 மெகா வாட் உற்பத்தி செய்யும் 2 மின்சார நிலையங்கள் நிறுவப்படும். 2010 நவம்பரில் அதில் மின் உற்பத்தி துவங்கும் என தேசிய அனல் மின்சார கார்ப்பரேஷனின் (என்டிபிசி) தென் பிராந்திய நிர்வாக இயக்குனர் அம்பரீஷ் என்.தாவே கூறினார்.
 
சத்யம் கம்ப்யூட்டர்: சம்பள வெட்டு
ஐதராபாத் , சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நிதி நெருக்கடியை தவிர்க்க, கூடுதலாக உள்ள 10,000 ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட உள்ளது. இவர்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதி மட்டும் தான் அவுடுத்த 6 மாதங்களுக்கு கிடைக்கும்.
 
கிராம சுகாதார வசதி: முதல்பணி : குலாம் நபி ஆசாத்
புதுடெல்லி , மத்திய அரசின் கிராம சுகாதாரத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதன் செயல்பாடு குறித்து 6 மாதத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்வேன் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
 
தமிழகம், 9 நகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டம்: தற்காலிக நிறுத்தம்
சென்னை , நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள ஆணை:-
அண்ணா பல்கலை. எம்.பி.ஏ: 95,000 பேர் போட்டி
சென்னை , அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ.ஏ, எம்.சிஏ. படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது 95 ஆயிரம் பேர் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர்.
 
ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு
சென்னை , திருவண்ணாமலையில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடக்க இருக்கிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
பிஏபிஎல் படிப்பு: ஜூன் 1-ல் விண்ணப்பம்
சென்னை , தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல் பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு ஜூன் முதல் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
 
ராஜபக்சே இந்தியா வருகை: வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா
பெங்களூரு , இலங்கை அதிபர் ராஜபக்சே அடுத்த வாரம் டில்லி வருகிறார் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருக்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அடுத்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சே, டில்லி வருவார் என எதிர்பார்க்கிறோம்.
 
டெல்லி- கேரளா: சிறப்பு ரெயில்
புதுடெல்லி , மத்திய மந்திரி சபையில் ரெயில்வே துறை ராஜாங்க மந்திரியாக கேரளாவை சேர்ந்த ஈ.அகமது நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பு ஏற்ற சிறிது நேரத்தில், டெல்லியில் இருந்து கேரளாவுக்கு ஜூன் மாதம் முதல் கோடை கால சிறப்பு ரெயில் விடுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
 
நாடார் சமுதாயம்: புறக்கணிப்பு
சென்னை , "தென் மாவட்டங்களில் காங்கிரஸ் காணாமல் போய் விடும்' என, சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சான்றோர் குலப் பண்பாட்டுக் கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
ஒருவருக்கு ஒரு பதவியை அமலாக்க காங்., திட்டம்
புதுடில்லி: "காங்கிரஸ் கட்சி கட்டமைப்பில் செப்பனிடும் பணி விரைவில் துவக்கப்படும்' என, ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார். "ஒருவருக்கு ஒரு பதவி' என்ற நடைமுறை வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு விட்டது. அடுத்தபடியாக, கட்சியின் உள்கட்டமைப்பை புதுப்பித்து செப்பனிடும் பணியில் காங்கிரஸ் இறங்க உள்ளது.இது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில்
டால்மியா சிமெண்ட்: லாபம் ரூ. 158 கோடி
சென்னை , டால்மியா சிமெண்ட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் (2008-09) ரூ. 158 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.முதலீட்டாளர்களுக்கு 150 சதவீத ஈவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருமானம் ரூ. 1,508 கோடி. முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியுள்ளது.ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஆலை உற்பத்தியைத் தொடங்கியதால் நிறுவன உற்பத்தி 6.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
 
ஆங்கில உச்சரிப்பு: இந்தியச் சிறுமி சாதனை
வாஷிங்டன், ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த காவ்யா சிவசங்கர் (13) முதலிடம் பெற்றார். அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு : மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி , தனியார் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய மனிதவள ஆற்றில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
 
2020-ல் 20 ஆயிரம் மெகாவாட்: அணுசக்தி தலைவர் பேட்டி
கோவை , மே 29: புதிய அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2020-ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.
 
அதிமுகவினருக்கு "உரிமைச் சீட்டு: ஜெயலலிதா
சென்னை , ""உரிமைச் சீட்டு இருந்தால்தான், கட்சித் தேர்தலில் போட்டியிட முடியும்'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
சேது சமுத்திரம்: ஜி.கே.வாசன் உறுதி
புது தில்லி , சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தில்லியில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் கனவுத் திட்டமாகும்.
 
ஜெயலலிதா: கொடநாடு பயணம்
சென்னை , அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை நீலகிரி மாவட்டம், கொடநாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின் தேசிய அரசியல் அரங்கில் ஜெயலலிதா முக்கிய பங்காற்றுவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
 
அண்ணா பல்கலையில் கிளினிக்கல் ஆராய்ச்சி: மேலாண்மை படிப்பு
சென்னை , வங்கிக் கடனுடன் கூடிய "கிளினிக்கல் ஆராய்ச்சி மேலாண்மை' படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி.சி. ஆராய்ச்சி மையம், அப்பல்லோ மருத்துவமனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து, "கிளினிக்கல் சோதனை மேலாண்மை'யில் மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் படிப்புகளை புதிதாக வழங்க உள்ளன
அகர்வால் மருத்துவமனையில் கண் மருத்துவப் படிப்பு
சென்னை , சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் பி.எஸ்ஸி. ("ஆப்டோமெட்ரி') படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேரக்கூடிய இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பை 2006-ம் ஆண்டு முதல் சென்னை கதீட்ரல் சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் - வேதியியல் - உயிரியல் - கணிதம் ஆகிய நான்கு முக்கியப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்த இடங்கள் 20. இந்தப் படிப்பை முடித்து பயிற்சி பெறுவதன் மூலம் "ஆப்டோமெட்ரிஸ்ட்'-ஆகப் பணியாற்றும் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்றார் பயிற்சி நிர்வாகி வி. அழகுவேல். மேலும் விவரங்களை அறிய இணையதளம்: www.dragarwal.com
 
மத்திய அமைச்சரவை: முதல் கூட்டம்
புதுதில்லி , மத்திய அமைச்சரவை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை முதல்முறையாகக் கூடுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த 100 நாள்களுக்கு நிறைவேற்ற வேண்டிய செயல்களுக்கான இலக்குகள் இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தவுள்ள உரை தயாரிக்கப்படும்.

bala murali

unread,
May 31, 2009, 10:05:56 AM5/31/09
to tamila...@googlegroups.com
மின்னணு ஓட்டுக்கு ரசீது: சு.சாமி ஆராய்ச்சி
சென்னை , மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்காளர், தனது வாக்கைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ரசீது தரும் நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றினால் தேர்தல் தில்லுமுல்லுகளை தவிர்க்கலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
 
அட.. இது நல்ல யோசனையா இருக்கே..!

fonio sivakumar

unread,
May 31, 2009, 10:10:53 AM5/31/09
to tamila...@googlegroups.com
சுப்பிரமணியசாமி அவர்களின்  சத்தத்தை காணவில்லை எங்கே அவர். எதேனும் சுவராஷியமான கதை உண்டா?   
fonio



2009/5/31 bala murali <nagaisba...@gmail.com>

bala murali

unread,
May 31, 2009, 10:15:30 AM5/31/09
to tamila...@googlegroups.com
ஏன் காணவில்லை? தேர்தல் நேரத்தில் கூட ஏதோ குரல் கொடுத்தாரே!
--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta

sangamam live

unread,
May 31, 2009, 6:09:59 PM5/31/09
to tamila...@googlegroups.com
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை - தமிழன் வேணு
தமிழ் இலக்கிய மேடை : ஒலிப்பதிவு சாதனை
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையே ‘திரு‘ அரங்கமாய் அமைந்துள்ள ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வருகிறது. செண்பகத் தமிழ் அரங்கு. இதுவரை 916 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதும், அத்தனை சொற்பொழிவாளர்களது பேச்சுகளும் முழுமையாகப் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் இந்த அரங்சின் சிறப்பு.
73 வயது நிரம்பிய வழக்குரைஞர் க. இராசவேலு செண்பகவல்லி இந்த அரங்கின் நிறுவனர். இவரது மகன் இராசஇளங்கோவன் இதன் பொறுப்பாளர். தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏதாவதொரு தலைப்பில் சொற்பொழிவு, ஒவ்வோர் ஆண்டும் ஒரு தமிழறிஞருக்கு ‘தமிழ் மாமணி விருது‘ - இது செண்பகத் தமிழ் அரங்கின் பணிகள். இந்தாண்டு முதல் ‘தொல்காப்பியர் விருதும்‘ வழங்கப்படுகீறது. இதுபற்றி இராசவேலு செண்பகவல்லி கூறியது :
 
சேது திட்டம் : வாசன் உறுதி
சென்னை , சேதுசமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய கப்பல் வழி போக்குவரத்து துறை அமைச்சர் ‌ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்ற ஜி.கே. வாசன், அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
கின்னஸ் : நடராஜர் சிலை
தஞ்சாவூர் , ஒன்றரை ஆண்டு உழைப்பில் மூன்று பஞ்சலோக சிற்பிகளின் கை வண்ணத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களின் உதவியோடு உருவாகியுள்ளது இந்த நடராஜர் சிலை.
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு, 6 வது சம்பள கமிஷன் சிபாரிசு விரைவில் அமல்!
சென்னை, 6வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் பலன்களை தமிழக அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் பெற உள்ளனர். இதற்கான உத்தரவில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டுள்ளதாக நிதித்துறை செயலர் இன்று அறிவித்தார். ஜூன் மாத சம்பளத்தில் இந்த உயர்வு வழங்கப்படும். பென்ஷனர்களுக்கு 40 சதவீத உயர்வு கிடைக்கும். 2006ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த சிபாரிசுகள் அமலுக்கு வருகிறது. நிலுவைத் தொகை 3 தவணையாக வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 30ம் தேதி வழங்கப்படும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒரு கிராமம் விற்பனை
இங்கிலாந்து , வீடு விலைக்குக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு கிராமமே விலைக்கு வருகிறது, இங்கிலாந்தில்! விலை வெறும் 22.5 மிலியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்தான்!
 
அமெரிக்கா:பெர்னார்ட் மேடாஃப்னின் ஏமாற்றுக்கலை
அமெரிக்கா , பெர்னார்ட் மேடாஃப். இந்தப் பெயர் சமீபகாலமாக செய்திகளில் அடிபட்ட பெயர். இந்த அமெரிக்கர் மாபெரும் பணக்காரர். முதலீட்டுத்துறையில்பல கம்பெனிகளுக்குச் சொந்தகாரர். பொதுமக்களின் பணத்தை தனது பல்வேறு கவர்ச்சித் திட்டங்களால் ஈர்த்தவர்.
 
சவூதி அரேபிய விபரீதம்
சவூதி , சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றோ, இரவு கேளிக்கைகளோ, சூதாட்ட விடுதிகளோ அல்லது மேற்கத்திய நாடுகளை போன்ற வித்தியாசமான அம்சங்களோ கிடையாது.இதன் காரணமாக ரொம்பவும் போர் அடித்துப் போயிருக்கும் சவூதி இளைஞர்கள் இப்போது ஓர் ஆபத்தான் விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கிருஸ்து மதம் அழிந்து வருவதாக ஆய்வில் தகவல்
அமெரிக்கா , அமெரிக்கர்களின் மதம் சார்ந்த கண்ணோட்டம் பற்றி விரிவானதொரு ஆய்வினை கனெக்டிக்ட், ஹார்ட் ஃபோர்டில் உள்ள ட்ரினிடி காலேஜ் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
 
பனை தொழிலாளர் கோரிக்கை : கருணாநிதி பரிசீலனை
சென்னை , முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தென்னை- பனைத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை விரிவாக ஆய்வு செய்து, சட்டப்படி ஆவன செய்வதற்கு அரசுத் தரப்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பின் வருமாறு குழு அமைக்கப்படுகிறது.
 
அனைவருக்கும் ஐ.ஏ.எஸ் படிப்பு - அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர் தகவல்
பெங்களூர் , தேவையான பதவியை பயன்படுத்தி சட்டத்துக்கு உட்பட்டு உதவி செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் திட்ட அலுவலராக இருக்கும் செல்வகுமார் கூறியுள்ளார்.
 
வீராணம் சென்னை குடிநீர் : நிறுத்தம்
சிதம்பரம் , ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 77 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது.
 
பீடி, சிகரெட் : இன்று முதல் தடை
புதுடில்லி , புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கைவிடும் வகையில், அவற்றின் மீது படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படுவது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
 
வருமானவரி, மாத வருமானம் பெறுபவர்களுக்கு பிரணாப் சலுகை
புதுடில்லி , வருமான வரிக்குரிய வருமானத்தில் இருந்து, நிலையான கழிவு முறையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ள முழு பட்ஜெட்டில், இச்சலுகை மீண்டும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.அப்படி அமலானால், மாத வருமானம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பயனளிக்கும்.
 
தனியார் மருத்துவ கல்லூரி : அரசு எச்சரிக்கை
சென்னை , "தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றைக் கண்காணிக்க மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
சுயநிதி கல்லூரிகளில் திறமையில்லை - உயர் கல்வித் துறை செயலர் வருத்தம்
சென்னை , "பெரும்பாலான சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் திறமையான, நல்ல ஆசிரியர்கள் இல்லை. இதனால், தொழில்நுட்பக் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றாலும், பெருமைப்பட முடியவில்லை' என்று உயர் கல்விச் செயலர் கே.கணேசன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் அவர் பேசியது:
 
அனைவருக்கும் குறைந்த விலை வீடு : செல்ஜா
புது தில்லி , மத்திய வீடமைப்பு, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்புத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா சனிக்கிழமை பொறுப்பேற்றார்.

bala murali

unread,
Jun 1, 2009, 3:33:06 PM6/1/09
to tamila...@googlegroups.com
பீடி, சிகரெட் : இன்று முதல் தடை
 
இதுபோல பலமுறை செய்திகள் வந்துவிட்டன..
 
கையெழுத்து போநிஓ சொல்லித் தந்தது..:)

sangamam live

unread,
Jun 1, 2009, 7:03:29 PM6/1/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
வேலூர் கோட்டையில் சந்தன திருடர்கள் : வன அதிகாரிகள் உடந்தை ?
வேலூர் , வேலூர் கோட்டையில் தொடர்ந்து சந்தன மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்படுவதற்கு வன அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்பது குறித்து தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட வன அலுவலர் மஞ்சுநாதன் கூறியுள்ளார்.

விளையாட்டு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

வேலூர் கோட்டையில் சந்தன திருடர்கள் : வன அதிகாரிகள் உடந்தை ?
வேலூர் , வேலூர் கோட்டையில் தொடர்ந்து சந்தன மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்படுவதற்கு வன அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்பது குறித்து தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட வன அலுவலர் மஞ்சுநாதன் கூறியுள்ளார்.
மருத்துவ டிப்ளமோ படிப்பு : ஜூலை 1 ல் விண்ணப்பம்
நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் ஜூலை 1-ம் தேதி துவங்குகிறது.
 
சென்னை கார்ப்பரேஷன் ஸ்கூல்: மாணவர்களுக்கு இலவச ஷூ, டிக்ஷ்னரி வழங்கல்
சென்னை , மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 94 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை நடந்தது. பாட புத்தகங்களை வழங்கி மேயர் பேசியது:
 
77 எஸ்.ஐ.: பதவி உயர்வு
நெல்லை , தமிழகத்தில் 77 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 
எச்-1பி விசா கட்டுப்பாடு: அமெரிக்கா பின்னடைவு
வாஷிங்டன், எச்-1பி விசாவக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவில் திறமையான ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று விப்ரோ செயல் தலைவர் அசீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளனர்.
 
தமிழக அரசு ஊழியர் ஊதிய உயர்வு விவரம்
மத்திய நிதிக்குழு : தமிழகம் வருகை
சென்னை , சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் கூறியது: மத்திய அரசின் 6வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவதால் அதிக நிதி தேவைப்படும். இதைச் சமாளிக்கும் வகையில 2009-2010ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னைக்கு வரும் 4,5 ந் தேதிகளில் மத்திய நிதிக்குழு அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட உள்ளனர். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
 
தாசில்தார் : புதிய சம்பள விகிதம்
சென்னை, தமிழக அரசின் 6வது ஊதியக்குழு பரிந்துரையில வட்டார வளர்ச்சி அதிகாரி, (பி.டி.ஓ.) , தாசிலதார் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய சம்பள விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது- இதன்படி, அவர்களின் தற்போதைய சம்பளவிகிதம் (6500-10500) திருத்தியமைககப்பட்டு 7500-250-12000 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபால், அமைச்சுப் பணிகளில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களின் தற்போதைய சம்பள விகிதமானது (5700-9200) மாற்றியமைக்கப்படடு 7000-225-11500 என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
பொன் மாணிக்கவேலுக்கு சீனியர் எஸ்.பி. அந்தஸ்து
சென்னை, தமிழகத்தில் 6 எஸ்.பி.க்களுக்கு சீனியர் எஸ்.பி. அந்தஸ்து (தேர்வுநிலை) வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் எஸ்.பி.கக்களாக பணியாற்றி வரும் திருஞானம் (அடையாறு துணை கமிஷனர்), பொன் மாணிக்கவேல் (பழனி சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட்), சண்முகராஜேஸ்வரன் (போலீ்ஸ் பயிற்சி எஸ்.பி., தூத்துக்குடி), அமல்ராஜ் (விழுப்புரம் எஸ்.பி), சங்கர், ஜெயராமன் ஆகிய 6 பேருக்கும் சீனியர் எஸ்.பி. அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனியர் எஸ்.பி. ஆகியுள்ள அவர்கள் வருகிற ஜனவரி மாதத்திற்குள் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ்: காலமானார்
திருவனந்தபுரம் , புகழ் பெற்ற எழுத்தாளரான கமலா சுரையா ஞாயிறன்று புனே மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75. கேரளாவில் பிறந்த கமலாதாஸ் இஸ்லாமுக்கு மாறிய பின் கமலா சுரையா என்று பத்தாண்டுகளுக்கு முன் பெயர் மாற்றம் செய்து கொண்டார். அவரது ஆங்கில மற்றும் மலையாளப் படைப்புகள் மிகப் புகழ் பெற்றவை கவிதைகளை மற்றும் சிறு கதைகளை அவர் படைத்திருந்தார். மலையாளத்தில் அவர் மாதவிக்குட்டி என்ற புனை பெயரில் நிறைய சிறு கதைகள் எழுதியுள்ளார். மை ஸ்டோரி என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு பல மொழிகளில் மொழியாக்கப்பட்டது.
 
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி : தடை சாத்தியம் அல்ல - குலாம்நபி ஆசாத்
புதுடெல்லி, சினிமாவில், புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளை தடை செய்வது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
 
பாப் கட்டிங் சீக்கிய மாணவிக்கு: மருத்துவ சீட் கட்டிங்
சண்டிகர் , தலை முடியை பாப் கட்டிங் வெட்டியதால் சீக்கிய பெண்ணுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க சீட் மறுக்கப்பட்டது சரிதான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீக்கியர்கள் முடியை வெட்டவோ, மழிக்கவோ கூடாது.அதையும் மீறி, அழகுக்காக தலை முடியை வெட்டிக் கொள்பவர்கள், மீசை, தாடி, புருவத்தை டிரிம் செய்து கொள்பவர்கள் கூட சீக்கியரே அல்ல என்று மதத் தலைவர்கள் அறிவித்துவிடுவார்கள்.
தங்கம் விலை : இந்தியா தீர்மானிக்கும்
புதுடெல்லி, தங்கத்தின் விலையை இந்தியா விரைவில் தீர்மானிக்கும் என்று தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவனம் (என்எஸ்இஎல்) தெரிவித்துள்ளது.
ரூ.30,000 கோடியில் இளைஞர் முன்னேற்றம் - மல்லிகார்ஜுன் கார்கே
பெங்களூர் , இளைஞர்களின் பன்முக திறனை வளப்பதற்காக ரூ.30,000 கோடியில் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்‘ கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
 
சலுகை சினிமா மக்களுக்கு கிடைக்காதது ஏன்? : முதலமைச்சர் ஆராய்ச்சி
சென்னை , தமிழ்நாடு அரசின் சார்பில் சினிமாத் துறைக்கு வழங்கப்படும் சலுகைகளின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதே இல்லையே அது ஏன்? என்பது குறித்து ஆராய குழு ஒன்றை முதலமைச்சர் கருணாநிதி நியமனம் செய்துள்ளார்.
துணை முதலமைச்சரருக்கான அரசு செயலர்கள் நியமனம்
சென்னை, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கான அரசு துறைகளை நிர்வாகம் செய்வதற்கான துறை செயலாளர்களை அரசு நியமனம் செய்துள்ளது.
 
பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் லேப்டாப் : தமிழக அரசு முடிவு
சென்னை , தமிழ்நாட்டில் உள்ள 10ம் வகுப்பு முதல் எம்.ஏ. வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குறைந்த விலையில் லேப்டாப் வழங்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை கூறியுள்ளார்.
நிகர்நிலை பல்கலை.: அங்கீகாரம் அவசியம்
புதுடெல்லி , நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒரு சில பல்கலைக் கழகங்களின் முறைகேடான போக்கைத் தடுக்கும் வகையில், அவை பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தைக் கண்டிப் பாகப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
 
திருவண்ணாமலையில் 100 நாள் வேலைத் திட்ட மோசடி
திருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம் சவ்வாது மலையில் உள்ள ஊராட்சிகளில் நடந்து வரும் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையீடுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ரமேஷ் முக்கிய போலி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளார். இதையொட்டி மோசடியில் ஈடுபட்டுள்ள ஊராட்சிமன்ற தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் தமிழ் பெண் போட்டி
லண்டன், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் லண்டன் தொகுதியிலிருந்து இங்கிலாந்து வாழ் தமிழ்ப் பெண்மணியான ஜனனி ஜனநாயகம் போட்டியிடுகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடும் போதிலும் ஜனனி தனி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
 
சாப்பாட்டுச் சண்டை: மூவர் மண்டை உடைப்பு
தாம்பரம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் வசிக்கும் இவரது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குடும்பத்துடன் வந்திருந்தார்.
 
என்ஜினீயரிங் படிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பம் - துணைவேந்தர் தகவல்
சென்னை , அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் என்ஜினீரிங் படிக்க சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
 
தமிழக அரசு இணையதளத்தில் அன்பழகனுக்கு 2-ம் இடம்
சென்னை, அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் வரிசையில் நிதியமைச்சர் அன்பழகனுக்கு மீண்டும் இரண்டாம் இடம் அளிக்கப்பட்டது. முன்னதாக, அவருக்கு மூன்றாம் இடம் அளிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதியின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டது.
 
இலங்கை தமிழர்களுக்கு உதவ விசுவ ஹிந்து பரிஷத் ஆர்வம்
மதுரை, இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் தயாராக உள்ளது என்று அதன் அகில இந்திய பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.
தொகாடியா கூறியது:-
 
விவேகானந்தர் மண்டபம் : அமிதாப்பச்சன் ரூ. 11 லட்சம் நன்கொடை
கன்னியாகுமரி , கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பராமரிப்புப் பணிக்காக பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ரூ. 11 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைவருக்கும் கல்வி உரிமை மசோதா நிறைவேற்றம் : கபில் சிபல் உறுதி
புது தில்லி, ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைவருக்கும் கல்வி உரிமை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசிற்கு ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு, பணி்கள் பாதிக்கும் அபாயம்
சென்னை, அரசு கட்டுமானப் பணிகளுக்கான பொருள்கள் மற்றும் கூலி தொடர்பாக தமிழக அரசு விலைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. இது இப்போதைய சந்தை நிலவரத்துக்கு சற்றும் பொருந்தாத வகையில் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
விளையாடத் துடிக்கும்: விளையாட்டுப் பல்கலை
சென்னை , புதிய இடத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க நிதி, நிலம் வழங்கப்பட்டும், தனி வளாகம் அமைக்கும் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே விளையாட்டுத் துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைக்கழகம் இயங்குகிறது.
 
தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் புதிய அறிவியல் படிப்புகள்
சென்னை , தமிழ்நாட்டில் 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் புதிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளன.தமிழ்நாட்டில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 353 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 548 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.இந்தக் கல்லூரிகள் சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
 
வெற்றி பெற்றோர்: வேலூர் விஜயம்
வேலூர் , வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் முதல் முதலாக அரக்கோணம் தொகுதிக்கு வருகை தந்தார். இவருக்கு வேலூர் மாவட்ட எல்லையான ஓச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் எம்.எட். படிப்பு
சென்னை , தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துணை வேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.11.54 கோடியில் புதிய வளாகம் கட்ட அதன் முன்னாள் துணை வேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி காலத்தில் திட்டமிடப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இருப்பினும் அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் இருந்தது. இந்த நிலையில் அதன் பணிகள் ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
 
நவரத்தினப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
சென்னை, நவரத்தினம் மற்றும் வைரக் கற்கள் தரம் பிரித்தல், கண்டறிதல் பயிற்சி திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் மேம்பாட்டு மையம் இந்தப் பயிற்சியை நடத்துகிறது.
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை: போப் வருத்தம்
ஜெருசலேம் , மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக போப் பெனிடிக்ட் கவலை தெரிவித்துள்ளார்.
 

bala murali

unread,
Jun 2, 2009, 2:19:48 PM6/2/09
to tamila...@googlegroups.com
தங்கம் விலை : இந்தியா தீர்மானிக்கும்
புதுடெல்லி, தங்கத்தின் விலையை இந்தியா விரைவில் தீர்மானிக்கும் என்று தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவனம் (என்எஸ்இஎல்) தெரிவித்துள்ளது.
 
மகிழ்ச்சி!
 
ஒரு சந்தேகம்!
பொதுவாகவே பல பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தினமும் தங்கம் விலை விபரம் சொல்கிறார்களே.. அது ஏன் எல்லோரும் தினமும் தங்கமாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்களா..என்ன?

bala murali

unread,
Jun 2, 2009, 2:22:43 PM6/2/09
to tamila...@googlegroups.com
சாப்பாட்டுச் சண்டை: மூவர் மண்டை உடைப்பு
:)

bala murali

unread,
Jun 2, 2009, 2:25:45 PM6/2/09
to tamila...@googlegroups.com
தமிழக அரசு இணையதளத்தில் அன்பழகனுக்கு 2-ம் இடம்
சென்னை, அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் வரிசையில் நிதியமைச்சர் அன்பழகனுக்கு மீண்டும் இரண்டாம் இடம் அளிக்கப்பட்டது. முன்னதாக, அவருக்கு மூன்றாம் இடம் அளிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதியின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டது.
 
இதிலே கூடவா?

sangamam live

unread,
Jun 2, 2009, 4:24:19 PM6/2/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
வேலூர் கோட்டையில் சந்தன திருடர்கள் : வன அதிகாரிகள் உடந்தை ?
வேலூர் , வேலூர் கோட்டையில் தொடர்ந்து சந்தன மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்படுவதற்கு வன அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்பது குறித்து தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட வன அலுவலர் மஞ்சுநாதன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க…


விளையாட்டு
சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

சென்னையில் சுயம்வரம்
சென்னை, சென்னை கிறிஸ்தவ வெள்ளாளர் சங்கத்தின் சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) சுயம்வரம் நடைபெறுகிறது.
 
கொஞ்சம் திரும்பிப்பார் - துரை

(வீடியோ) பிரான்ஸ் விமானம் கடலில் விழுந்தது - 228 பயணிகள் பலி?
பிரான்ஸ் : பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி வந்த ஏர்-பிரான்ஸ் நிறுவன விமானம் ஒன்று ரேடார் எல்லையில் இருந்து மறைந்தது.

இதையடுத்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
சென்னையில் கடத்தப்பட்ட குழந்தைகள் 1 மணிநேரத்தில் மீட்பு: சென்னை போலீஸ் சாதனை
சென்னை , மீனம்பாக்கத்தில் நேற்றிரவு கடத்தப்பட்ட சிறுவன்,சிறுமி ஆகியோர் ஒரு மணிநேரத்தில் மீட்கப்பட்டனர். அவர்களை காரில் கடத்திய ஆசாமியை போலீஸ்காரர் ஒருவர் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மலேசிய இளவசரன் செக்ஸ் கொடூறன் : மாடல் அழகி குற்றச்சாட்டு
ஜகர்தா , மலேசியா நாட்டில் உள்ள கலேந்தான் மாநில ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் முகமது பாக்ரி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மனோகரா ஒதிலியா என்ற 16 வயது மாடலிங் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் தங்கி இருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டார்.
 
கருணாநிதி ‘86‘ : பிறந்தநாள் நிகழ்ச்சிநிரல்
சென்னை, முதல்- அமைச்சர் கருணாநிதியின் 86-வது பிறந்தநாள் நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நாளை காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
 
தடை செய்த ஆயுதம் பயன்படுத்தி இலங்கையில் தமிழர்கள் படுகொலை
வாஷிங்டன், இலங்கையில் நடந்த இறுதி கட்ட போர் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “அமெரிக்கா” என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வன்னி பகுதியில் இறுதிக்கட்ட போரின் போது கடைசி சில நாட்களில் மட்டும் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே தபால் வேன் விபத்து : 4 பேர் பலி
மதுராந்தகம் ,அச்சிறுப்பாக்கம் அருகே பஞ்சரான லாரி மீது ஸ்பீட் போஸ்ட் வேன் பயங்கரமாக மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோர விபத்து குறித்து கூறப்படுவதாவது: ஆந்திராவிலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி நோக்கி, ஒரு கம்பெனியைச் சேர்ந்த லாரிகள் சென்று கொண்டிருந்தன. இன்று அதிகாலை அச்சிறுப் பாக்கத்தையடுத்த தொழுப்பேடு என்னும் இடத்தில் ஒரு பாலத்தின் அருகே, லாரிகளில் ஒன்று திடீரென பஞ்சரானதாக கூறப்படுகிறது.
 
பள்ளி செல்வோம் பிரச்சாரம் : பாப்புலர் ஃப்ரண்ட் தீவிரம்
சென்னை, பாப்புலர் ஃப்ரணட் மே மாதத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை பல மாநிலங்களில் நடத்தி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் கல்வி விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்டின் கேரளா, தமிழ்நாடு, கோவா, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரின் மாநில கமிட்டிகள் செயல்படுத்தி வருகின்றன.
 
கோவை,பன்றிக்காய்ச்சல் : பீதி அடைய வேண்டாம்: மருத்துவ நிபுணர்
கோவை , அமெரிக்காவில் இருந்து கோவை வந்த மூவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காய்ச்சல் மேலும் பரவாதபடி தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர்ந்தபட்சம் ஏழு நாட்களுக்குள் இவர்கள் பூரண நலம் பெறுவார்கள் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் குமரன் தெரிவித்துள்ளார்.
 
ஆசைக்கு இணங்க ஆப்கன் திருமண சட்டம்
ஆப்கானிஸ்தான் , ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு புதிய திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வொரு 4 நாட்களுக்கும் ஒரு முறை மனைவியானவள் கணவனின் ஆசைக்கு இணங்கவேண்டும். உடல்நலம் இல்லாமல் இருந்தாலோ அல்லது காயம் அடைந்து இருந்தாலோ மட்டும் இந்த விதிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
நாளை தமிழ்ப்பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசு
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில பெயர் வைத்தால் தங்க மோதிரத்தை பரிசாக பெரும் வாய்ப்பினை சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்ரமணியன் உருவாக்கியுள்ளார்.
 
எம்.கே. நாராயணன் பதவி காலம் நீட்டிப்பு
புதுடெல்லி , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் பிரதமர் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரின் பதவி காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையின் பேரில் மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமரின் சிறப்பு பிரதிநிதி சியாம்சரணின் பதவி காலத்தையும் ஓராண்டு காலம் நீண்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டி.என்.ஐ
 
ஜெனரல் மோட்டார்ஸ் : திவால்
நியூயார்க் , உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், திவால் நோட்டீஸ் அளித்தது. அதன் 60 சதவீத பங்குகளை கையகப்படுத்தி நிறுவனத்தை அமெரிக்க அரசு கட்டுப்பாட்டில் எடுக்கிறது. வில்லயம் சி துரந்த் என்பவரால் தொடங்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் 101 ஆண்டு பழமையானது.
 
மக்களவை தலைவர் மீராகுமார்: கருணாநிதி பாராட்டு
சென்னை, நாடாளு மன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் வடிவம் பெற போகிற அருமையான காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில் தலைவராக ஒரு பெண்மணி பொறுப்பு ஏற்க இருப்பது எல்லோரும் பாராட்டி மகிழக்கூடிய நிகழ்வு என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
திருச்சி மாநகர மேயர்: வேட்பாளர் எஸ்.சுஜதா லோகன சுரேஷ்
சென்னை , திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமதி எஸ்.சுஜதா அதிகாரப்பூர்வமாக போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திருச்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தரார். இதைத் தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தல் நாளை திருச்சியில் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தியின் ஒப்புதலுடன் திருமதி எஸ்.சுஜதா வேட்பாளராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
 
கணிதப் புதிர்: ஈராக் மாணவன் சாதனை
ஸ்டாக்ஹோம், கடந்த 300 ஆண்டுகளாக பெரும் வல்லுனர்களால் கூடக் கண்டறிய முடியாத ஒர கணிதப் புதிருக்கான விலையை ஸ்வீடனுக்கு அகதியாய்ச் சென்று குடியேறிய ஒரு 16 வயது ஈராக் மாணவன் அறிந்துள்ளான்.
 
ஊடகத்துறை பிரச்சனை: அம்பிகா சோனி
புதுடெல்லி , ஊடகத் துறை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் அந்தத் துறையினருடன் கலந்து பேசி தீர்க்கப்படும் என்று மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியிருக்கிறார்.
 
செய்தித்துறை அமைச்சர், பத்திரிகையாளர் குழு சந்திப்பு
சென்னை , தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியை சென்னை கோட்டையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து பத்திரிகையாளருக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
 
இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்: 1.18 கோடி உயர்வு
சென்னை , சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் 1.18 கோடி பேர் புதிதாக தொலைபேசி சேவையை பெற்றுள்ளனர். இருப்பினும், இத சென்ற மார்ச் மாதத்தில் அதிகரித்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையான 1.59 கோடியைக் காட்டிலும் குறைவானதாகும்.
 
அகில இந்திய கைப்பந்து: ரூ.2 1/4 லட்சம் பரிசு
சென்னை , ரூ. 2 1/4 லட்சம் பரிசுத் தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில்  தொடங்குகியது.
 
அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்: அரசு எச்சரிக்கை
சென்னை , ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தென்மண்டல இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணாரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
60 நாளில் புதிய குடும்ப அட்டை தமிழக அரசு ஏற்பாடு
சென்னை , புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாள்களில் வழங்க வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
 

bala murali

unread,
Jun 3, 2009, 2:01:34 PM6/3/09
to tamila...@googlegroups.com
கருணாநிதி ‘86‘ : பிறந்தநாள் நிகழ்ச்சிநிரல்
சென்னை, முதல்- அமைச்சர் கருணாநிதியின் 86-வது பிறந்தநாள் நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நாளை காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
 
வரவர 24ம் புலிகேசி நாட்டில் வாழ்வது போல தோணுது
இன்று  அவர்கள் டிவியில் லைவ் நிகழ்ச்சி வேறு..
கூத்துதான் போங்க...

sangamam live

unread,
Jun 3, 2009, 4:23:28 PM6/3/09
to tamila...@googlegroups.com
கரண்டு எப்போ போவும்..........? - துரை
தமிழறிஞர் இரா.திருமுருகனார் மறைவு
புதுவை: தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இன்று (03.06.2009.) மாலை அன்னாரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது .
பகை, விரோதம் வேண்டாம் : கருணாநிதி வேண்டுகோள்
சென்னை, தேர்தலில் தோற்றவர்கள் பகை பாராட்டாமல் வீணான விரோதம் கொள்ளாமல் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் தங்களது அரசியல் பணிகளை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணாநிதி ‘86’: கோலாகல விழா
சென்னை, திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் 86-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ இல்லமான கோபாலபுரத்தில் இன்று அதிகாலை தனது 86 வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது பெற்றோர்களின் உருவப் படங்களை வணங்கியப் பின்னர் தனது அரசியல் ஆசானான பேரறிஞர் அண்ணா சமாதி, தந்தை பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று அஞ்சலி செய்தார்.
தூத்துக்குடி மோசடி :பாதிரியார் மீது வழக்கு
தூத்துக்குடி, திருமண்டலப் பணத்தைக் கையாடல் செய்ததாகப் பாதிரியார் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
மதுரை விமான நிலைய விரிவாக்கம் : 353 ஏக்கர் நிலம் எடுப்பு
மதுரை, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
 
ராமநாதபுரம் : கருணாநிதி, ஸ்டாலின் வருகை
ராமநாதபுரம் , ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதியும் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வரும் 11ம் தேதி ராமநாதபுரம் வருகின்றனர் என்று குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன் கூறினார்.
 
ஐ.பி.எல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு தடை - பால்தாக்கரே கோரிக்கை
மும்பை, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பால் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
 
டாஸ்மாக்கில் ‘ஐஸ் பீர்’ அறிமுகம்
நாகர்கோவில், மது பிரியர்களை குளிர்விக்க ‘ஐஸ் பீர்’ என்ற புது வகை பீர் டாஸ்மாக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
தரமற்ற குடிநீர்: 22 ஆலைகளுக்கு நோட்டீஸ்
சேலம், தரமற்ற குடிநீர் உற்பத்தி செய்த 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் இளங்கோ கூறினார்.
 
சாதனை மாணவர்: சவுமியா அன்புமணி பாராட்டு
தருமபுரி, தருமபரி மாவட்டம் சோலைக் கொட்டாயில் உள்ள மருத்துவர் ராமதாஸ் பள்ளி 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு முழு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சாதனை மாணவர்களுக்கு பசுமைத் தாயகத் தலைவர் சவுமியா அன்புமணி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
 
ஐ.டி. துறை பெண்களிடம் அதிகரிக்கும் சிகரெட் பழக்கம்
திருவனந்தபுரம் , தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிக்கிறது என்று நுரையீரல் மருத்துவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
 
68 லட்சம் பேருக்கு வேலை இல்லை: 68 வயதுக்கு பணி நியமனம்
திண்டுக்கல் , தமிழ்நாட்டில் 68 லட்சம் இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் உள்ள பணியிடங்களை 68 வயதான பென்சன்தாரர்களைக் கொண்டு தமிழக அரசு நிரப்புகிறது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் வேதனை தெரிவித்தார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற பொது மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியது.
 
8 மணி நேர வேலை: டாஸ்மாக் ஊழியர் டிமாண்ட்
விருதுநகர், 8மணி நேர வேலை மற்றும் வாரவிடுப்பு, குறைந்த பட்ச ஊதியம், பண்டிகை கால விடுமுறை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12.6.09 அன்று மாவட்ட அளவில் தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ரிலையன்ஸ் பிக் டி.வி: 10 புதிய சேனல்கள் அறிமுகம்
சென்னை, ரிலையன்ஸ் ஏ.டி.ஏ குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் பிக் டி.வி. தனது டி.எச்.எச் சேலையில் மேலும் 10 புதிய சேனல்களை கடந்த 1-ந் தேதி முதல் வழங்கி வருகிறது. இதில் கொரியாவின் கே.பி.எஸ். வார்னா பிரதர்சின் புதிய பொழுது போக்குச் சேனலும் அடங்கும்.
 
ஊழல் எதிர்ப்பு கமிட்டி: நடிகை மனோரமா நியமனம்
சென்னை, ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் அகில இந்திய மகளிர் அணிசெயலாளராக நடிகை மனோரமா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு புது எம்.டி
தூத்துக்குடி , தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராக நாகமால் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
 
விதிமுறை மீறிய கோவை அண்ணா பல்கலை மீது வழக்கு
சென்னை , கோவை அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி பல என்ஜினீயரிங் கல்லூரிகளில், புதிய பாட வகுப்புகளை நடத்த அனுமதித்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
அதிக அளவு விளம்பரம் மூலம் லாபம் - சாதித்த நிறுவனங்கள்
புதுடெல்லி, பொருளாதார மந்த நிலையை எதிர் கொள்ளும் வகையில் அதிக அளவில் விளம்பரங்களை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் செயல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், விளம்பர செலவினத்தை குறைத்து கொண்டுள்ள நிறுவனங்களின் லாப வளர்ச்சி சரிவடைந்துள்ளது. 500 நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
 
வருமான வரி: வசூல் குறைந்தது
சென்னை, சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட 9 பெரிய நகரங்களில், சென்ற 2008-09-ம் தேதி ஆண்டில் தனி நபர் வருமான வரி வசூலில் சரிவ ஏற்ப்டடுள்ளது. சென்ற நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 8 சதவீதம் உயர்ந்துள்ள போதும் தனி நபர் வருமான வரி வசூல் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
 
ஜூலை 8-ல் ரெயில்வே பட்ஜெட்
புதுடெல்லி , ரெயில்வே பட்ஜெட், ஜூலை 8-ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக கூறியதாவது:-
 
ஆன்-லைன் மூலம் மின் கட்டணம்
சென்னை , மின் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் வங்கிகளின் பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்தள்ளது.

இத குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
 
வங்கிகளில் சில்லறை மெஷின் நிறுவ ரிசர்வ் வங்கி முடிவு
புதுடில்லி, ஒவ்வொரு வங்கியும் தங்கள் வங்கி கிளையில், சில்லறை இயந்திரங்களை நிறுவ வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சில சமயங்களில் சில்லறை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இவர்களின் குறையைப் போக்கும் விதத்தில், வங்கி வளாகத்தில் சில்லறை இயந்திரங்களை நிறுவும் படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 
தீவிரவாதி சயீத் விடுதலை: பாகிஸ்தானின் அலட்சியம் இந்தியா கருத்து
புது தில்லி, ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹஃபீஸ் முகமது சயீத்தை விடுதலை செய்தது, மும்பை தாக்குதல் விவகாரத்தைக் கையாளுவதில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு அலட்சியமாக உள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
 
வெளிநாட்டுக் கல்வி குறித்த தகவல்கள் : அரசு தொகுப்பு
திருவனந்தபுரம் , வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பினை அரசு தயார் செய்ய உள்ளது.இத்தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலவாழ்வு அமைச்சர் வயலார் ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த சில போலி நிறுவனங்கள் மாணவர்களை வெளிநாடுகளில் படிப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன.
 
வெளிநாட்டுக் கல்வி குறித்த தகவல்கள் : அரசு தொகுப்பு
திருவனந்தபுரம் , வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பினை அரசு தயார் செய்ய உள்ளது.இத்தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலவாழ்வு அமைச்சர் வயலார் ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த சில போலி நிறுவனங்கள் மாணவர்களை வெளிநாடுகளில் படிப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன.
 
கருணாநிதியை வாழ்த்துவது ஏன்? - அன்பழகன் விளக்கம்
சென்னை, தமிழ் இனமும், மொழியும் வாழ வேண்டும் என்பதற்காகவே நாம் முதல்வர் கருணாநிதி வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம் என நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா சென்னையில்  நடைபெற்றது. அவ்விழாவில் அன்பழகன் பேசியது:கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றபின் சென்னை வந்த கருணாநிதிக்கு வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. அதில் நான்தான் அவரை வாழ்த்திப் பேசினேன்.
 
கருணாநிதி பிறந்த நாள் : இடதுசாரிகள் வாழ்த்து
சென்னை , முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வெளியிட்ட அறிக்கையில், "அரசியலில் நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டு தமிழகத்தை 5-ம் முறையாக ஆண்டு வரும் முதல்வர் கருணாநிதிக்கு 86-வது பிறந்தநாள் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
 
(வீடியோ) பிரான்ஸ் விமானம் கடலில் விழுந்தது - 228 பயணிகள் பலி?
பிரான்ஸ் : பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி வந்த ஏர்-பிரான்ஸ் நிறுவன விமானம் ஒன்று ரேடார் எல்லையில் இருந்து மறைந்தது.

இதையடுத்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

bala murali

unread,
Jun 4, 2009, 2:45:00 PM6/4/09
to tamila...@googlegroups.com
டாஸ்மாக்கில் ‘ஐஸ் பீர்’ அறிமுகம்
நாகர்கோவில், மது பிரியர்களை குளிர்விக்க ‘ஐஸ் பீர்’ என்ற புது வகை பீர் டாஸ்மாக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இது இப்போ நாட்டுக்கு ரொம்ப தேவையா ..?

sangamam live

unread,
Jun 4, 2009, 4:50:43 PM6/4/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
வேலூர் கோட்டையில் சந்தன திருடர்கள் : வன அதிகாரிகள் உடந்தை ?
வேலூர் , வேலூர் கோட்டையில் தொடர்ந்து சந்தன மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்படுவதற்கு வன அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்பது குறித்து தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்ப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட வன அலுவலர் மஞ்சுநாதன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க…

சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

சுபயோக சுபதினத்தில்.... துரை
இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு - பிரதீபா பட்டீல்
புதுடெல்லி :இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் அறிவித்துள்ளார்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்க தேவையான நிதியுதவியையும் இந்தியா அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வணங்காமண் கப்பல் இலங்கை வந்தது.
 இலங்கை போரில் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்காக புலம் பெயர்வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களைளுடன்  வந்த வணங்கா மண் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழைந்தபொழுது  இலங்கைக் கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இலங்கை கடற்கரையில் இருந்து 86 மைல் தொலைவில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றிருந்த வணங்கா மண் கப்பலை இலங்கைக் கடற்படையினர் சுற்றிவளைத்து அதனைச் சோதனையிட்ட பின்னர் கட்டியிழுத்து இலங்கைக் கடற்பரப்பினுள் கொண்டுசென்றுள்னர்.
 
உயர் நீதிமன்றம் : 1 நிமிட செலவு ரூ.6 ஆயிரம்
புதுடெல்லி, புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் விசாரணைக்காக, நிமிடத்துக்கு ரூ.6000 செலவழிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ரூ.19,93,180 செலவரிக்கப்படுகிறது என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
வடகொரிய அதிபர் கிம்ஜாங் ரகசியம் அம்பலம்
டோக்கியோ , வடகொரியாவில் அதிபர் கிம்ஜாங்-2 சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.அவர் பக்கத்து நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றை மிரட்டி வருகிறார். அணு குண்டு, ஏவுகணை சோதனை நடத்தி, சர்வதேச நாடுகளுக்கும் அதிர்ச்சி அளிக்கிறார்.
 
50 சத பங்கு : கருணாநிதி ‘கறார்‘
சென்னை , மத்திய அரசு, மாநிலங்களில் இருந்து வசூலிக்கும் வரியில் 50 சதவீத பங்கை மாநிலங்களுக்கு பகிர்ந்து தர வேண்டும் என்று மத்தியநிதி குழுவிடம் முதல்- அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். மத்திய 13-வது நிதிக்குழு தலைவர் விஜய்கேல்கர் உறுப்பினர்கள் இந்திரா ராஜாராமன், சஞ்சீவ் மிஸ்ரா சென்னை வந்தனர்.
 
அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பிரச்சனைகளை பெரிதுபடுத்துகின்றன : நரேஷ் குப்தா
சென்னை, மி்ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறன், நம்பத்தன்மை ஆவண ரேசன் கார்டுகள் குறித்தும் அரசியல் வாதிகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு வேலை : டி.டி.பி. 400 பதவி
புதுடெல்லி், மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (ஆடிட்டர் ஜெனரல்) அலுவலகத்தில் 400 டேட்டா என்ட்ரி ஆபரோட்டர் பணியிடங்கள் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வு மூலம் நிரப்பட்ட உள்ளன.
 
திருக்குர்ஆன் : குஜராத்தில் கரை இறக்க அனுமதி மறுப்பு
முந்த்ரா(குஜராத்), குஜராத்த மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத்துறை அனுமதி மறுத்துள்ளனர். கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது.
 
அபுதாபியில் நர்ஸ் பணி : 50 ஆயிரம் சம்பளம்
சென்னை , அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக அரசு நிறுவனமாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு ஆட்கள் தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
மத்திய அமைச்சர்களுக்கு சலுகையோ! சலுகை!!
புதுடெல்லி, மத்திய அமைச்சரவயில் கேபினெட் மந்திரிகள், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் எண் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 பிரிவு மந்திரிகளுக்கும் அதிகாரங்கள், வசதிகள் வேறுபட்டு வழங்கப் படுகிறது.
 
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் : 2012ல் முடியும்
தர்மபுரி , ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் அக்டோபர் மாதம் துவங்கும் என்று திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு லைவர் வெங்கடேஸ்வரன், 8 ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
கருணாநிதி பிறந்த நாள் பரிசு : ரூ.4.58 லட்சம் நிவாரண நிதியில் சேர்ப்பு
சென்னை, முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவின்போது மாலைக்கு பதிலாக தொண்டர்கள் வழங்கிய நிதி ரூ.4 லட்சத்து 58 ஆயிரம், முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
 
கோவை அருகே ரயில் மோதி : 2 யானைகள் பலி
கோவை, கோவை அருகே ரயில் மோதி பெண் யானையும் குட்டியும் பரிதாபமாக இறந்தன. சென்னையில் இருந்து ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு கேரள, தமிழக எல்லையான வாளையார் - கஞ்சிக்கோடு இடையே காட்டுப்பதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஒரு பெண் யானை தன் குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.
 
புதிய புயல் சின்னம் : உருவாகிறது
கொல்கத்தா, மேற்கு வங்காளம் அருகே வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
விஐடி பல்கலை.: கவுன்சலிங் தொடங்கியது
வேலூர் , வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பில் 2,043 மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு எழுத ஒரு லட்சத்து 48,735 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
 
இந்தியாவில் தீவிரவாதிகள் நாசவேலைக்கு சதி: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
தீவிரவாத தலைவனான ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிரான புதிய தாக்குதல் சதி திட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபடக்கூடும் என்று அமெரிக்க  உளவுத்துறை இந்தியாவை எச்சரித்துள்ளது.
 
ஏழை மக்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி: ஜனாதிபதி அறிவிப்பு
புதுடெல்லி: பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
 
உள்ளூர் காசோலைகளுக்கு ஒரே நாளில் பணம் தர ரிசர்வ் வங்கி உத்தரவு
மும்பை, உள்ளூர் காசோலைகளை ஒரே நாளிலும், வெளியூர் காசோலைகளை 14 நாட்களுக்குள்ளும் கிளியர் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுககு வங்கள் வட்டி தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது-
 
சென்செக்ஸ் : 15,000 ஐ தொட்டது
மும்பை, மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று 15,000 புள்ளிகளைத் தொட்டது. எனினும், முடிவில் 4 புள்ளிகள் சரிந்து 14,871 புள்ளிகளில் முடிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்செக்ஸ் 15,000 புள்ளிகாள இருந்தது.
 
சென்னையில் : மருத்துவ கருத்தரங்கு
சென்னை, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது குறித்த தொடர் விழிப்புணர்வு கருத்தரங்கை அஸ்ட்ராஸெனகா நிறுவனம் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடத்தியது.
 
பொறியியல் வேலை : தகுதியானர் 6% மட்டுமே
சென்னை, பொறியியல் மாணவர்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே நிறுவனங்களில் இன்றைய தேவையை பூர்த்தி செய்யும்வகையில், வேலைக்கு தகுதி உடையவர்களாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
 
ஆன்லைன் வேலை : இக்னைட் பயிற்சி
சென்னை, ஆன்லைன் மீடியா துறையில் இக்னிஷன் என்ற டிஜிட்டல் தீர்வு பயிற்சியை இக்னைட் டிஜிட்டல் சொலுஷன்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது.
 
பெங்களூரு : நாளை மின்சாதன கண்காட்சி
சென்னை, மின்சாதன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி ‘எல்கா பவர் இன்டர்நேஷனல் 2009‘ என்ற பெயரில் பெங்களூரில் நாளை தொடங்குகிறது.
 
எம்.பி.ஏ., எம்.சி.ஏ விண்ணப்பம் : 11 முதல் விநியோகம்
சென்னை, தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு : தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்சேர்க்கை நடக்க உள்ளது.
 
செய்தித்தாள் பதிவு பதிவாளர் தேர்வு
சென்னை, இந்திய செய்தித்தாள் பதிவு அலுவலகத்தில் புதிய உதவி பதவியாளராக பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
பொதுப்பணி பொறியாளர் தேர்வு : 8ம் தேதி பணி ஆணை
சென்னை , தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் பொதுப்பணித்துறைக்கு உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் வளாகத்திலுள்ள பொதுப் பணித்துறை அலவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் வழங்குகிறார்.

இந்த பணி நியமன ஆணையை பெறுபவர்கள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு சேப்பாகத்தில் ஆஜராக வேண்டும் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
 
ஏப்ரல், மே ல் 179 ரெயில் பெட்டிகள் தயாரித்து: ஐசிஎப் சாதனை
சென்னை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 179 ரெயில் பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் சாதனை படைத்துள்ளது.இது குறித்து பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டித் தொழிற்சாலையின் (ஐசிஎப்) மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:-
 
ஆசிரியர் தேர்வு வாரிய புதிய இயக்குனர் வசந்தி ஜீவானந்தம்
சென்னை , அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப் பட்டார். டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் பல்வேறு துறைகளில் 4 துறைகளை சேர்ந்த இயக்குனர்கள் அந்தப் பதவிகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவு அரசு வெளியிட்டது.
 
பிரதமர் மன்மோகன்: தமிழகம் வருகிறார்
சென்னை, இந்தியாவின் பிரதமராக 2-வது முறையாகப் பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார். திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள பாரத மிகுமின் நிறுவனத்தின் 2-வது தொழிற்சாலையைத் திறந்து வைக்க மன்மோகன் சிங் வரவிருப்பதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இந்தியத் தேர்தல்: ரூ.900 கோடி செலவு
லண்டன், 15-வது மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.900 கோடி செலவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியிருக்கிறார். இந்திய தேர்தல் குறித்து இலங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய குரேஷி, இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். 60 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் மக்களைத் தேர்தலை நடத்தி முடிக்க ஒட்டு மொத்தமாக ரூ.900 கோடி தான் செலவாகியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.
 
6-வது ஊதிய குழு பரிந்துரை ஏற்று அரசாணை நாளை வெளியீடு
சென்னை , மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழக அரசும், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க முடிவு செய்தது. 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், 3 ஆண்டுகால நிலுவைத் தொகையையும் 3 தவணைகளில் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்திய தொலை நிலை கல்வி மன்ற உறுப்பினர் நியமனம்
சென்னை, இந்திய தொலை நிலைக் கல்வி மன்றத்தின் (டெக்) உறுப்பினராக, தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கல்யாணி அன்புச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
உ.பி. மாநில சமாஜ்வாதி தலைவராக: முலாயமின் மகன் நியமனம்
லக்னோ , சமாஜவாதி கட்சியின் உத்தரப் பிரதேச மாநில தலைவராக கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
 
சென்னையில் ஐ.ஏ.எஸ் படிப்பு : இலவச கருத்தரங்கு
சென்னை, ஐ.ஏ.எஸ். தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவசக் கருத்தரங்கு சென்னை திருமங்கலம் போஃக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடக்கிறது. இது குறித்து அகாதெமியின் ஆலோசகர் சங்கரவடிவேலு புதன்கிழமை விடுத்த அறிக்கை:
 
சயீத் விவகாரம்: யு.எஸ். தூதர் கண்டிப்பு
இஸ்லாமாபாத், ஜமாத்-உத்-தவா இயக்கத் தலைவர் ஹஃபீஸ் முகம்மது சயீத் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்த அமெரிக்க சிறப்புத் தூதர் ரிச்சர்டு ஹால்பரூக், தற்போது தனது விமர்சனத்தை மாற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது: வைகோ
சென்னை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யானை பாதுகாப்பு: குழு உறுப்பினர் நியமனம்
சென்னை, மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத்தின் முறைப்படுத்தும் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிவியல் தொழில்நுட்ப மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள யானைகள் பாதுகாப்புத் தொடர்பாக மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: தேர்ச்சி பட்டியல் வெளியீடு
சென்னை , டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) குரூப் 1 தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. துணை ஆட்சியர்கள் 25 பேர் உள்பட மொத்தம் 172 பேர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர் கல்வி: உதவி தொகை அறிவிப்பு
சென்னை , ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
நடுநிலை பிறழாமல் பணி : 'மேடம் ஸ்பீக்கர்' மீரா குமார்
புதுதில்லி , மக்களவைத் தலைவராக புதன்கிழமை போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரா குமார் . அரசமைப்புச்சட்ட உயர் பதவிகளில் ஒன்றான இந்த பதவியை அடைந்த முதல் பெண்மணி, அதுவும் தலித் பெண்மணி என்கிற பெருமை பெற்று சரித்திரம் படைத்துவிட்டார். நடுநிலை பிறழாமல் நின்று அவையை நடத்திச் செல்வேன் என்று நிருபர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் நம்பிக்கை காலம் இது: ராஜபக்ஷே பேச்சு
கொழும்பு , நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தான் என் அடுத்த இலக்கு என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், கொழும்பில் விழா நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷே பேசியதாவது:-
 
தற்கொலை செய்ய கியூ: ஒரு தற்கொலையின் நேரடி காட்சிகள்
லண்டன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தற்கொலை கிளினிக்கில், சாவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 800 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள் ளது, "டிக்னிடாஸ்' என்ற பிரபல மருத்துவமனை. கேன்சர் உட்பட உயிரைப் பறிக்கும் பயங்கர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுயவிருப்பத்தின் பேரில் தற்கொலை செய்து கொள்ள இந்த மருத்துவமனை, சட்டப்படி ஏற்பாடு செய்துவருகிறது.பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கின்றனர். ஆனால், அவர்களை, சட்ட நிபுணர்களும், டாக்டர்களும் தீர விசாரித்த பின் தான், அவர்கள் சாவதற்குத் தகுதியானவர் என்று சான்றளிக்கின்றனர்.
 
தமிழக விவசாயிகள்: இஸ்ரேல் பயணம் - வேளாண் அமைச்சர் தகவல்
சென்னை, ""வேளாண்மையில் கையாளப்படும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த 25 விவசாயிகள் அடங்கிய குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்,'' என்று தமிழக விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.இஸ்ரேல் நாட்டின் இந்தியத் தூதர் அர்ணா சகிவ், சென்னையில் நேற்று தமிழக விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இஸ்ரேல் நாட்டில் விவசாயத்தில் கையாளப்படும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
 
சென்னை விமான நிலையத்திற்கு : புதிய கஸ்டம்ஸ் கமிஷனர்
சென்னை , சென்னை விமான நிலையத்தின் புதிய கஸ்டம்ஸ் கமிஷனராக தமிகத்தைச் சேர்ந்த பெரியசாமி பொறுப்பேற்றுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு என தனியாக ஒரு கஸ்டம்ஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.
 
பி.வி.எஸ்சி., பட்டதாரிகளுக்கு : வளாக வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில், இன்று முதல் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், பால் மற்றும் கோழிப்பண்ணைத் துறையில் பணிபுரிய 45 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
 
பாரத தரிசன சுற்றுலா: மதுரையில் புறப்பாடு
சென்னை , இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் இந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் யோகா, வேத தியானம்: புது வகுப்பு ஆரம்பம்
சென்னை, செ ன்னையில், பல ஆண்டாக சுவாமினி சத்யவ்ரதானந்தா சரஸ்வதி நடத்தி வரும் யோகா, வேத தியான புதிய வகுப்புகள் துவங்க உள்ளன.
 
முதுகுளத்தூர் அருகே எருது கட்டு திருவிழா - ஒருவர் காயம்
முதுகுளத்தூர், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் பாரம்பரிய எருது கட்டு திருவிழா நடந்தது.
 
ஊனமுற்றோர் பஸ் பாஸ் , கேன்சர் பாஸ் என அழைக்கப்படுவதால் ஊனமுற்றோர் வேதனை
மதுரை : ஊனமுற்றோர் அரசு பஸ்களில் சலுகை முறையில் பயணம் செய்ய வழங்கப்படும் டிக்கெட்டுகளில் "கேன்சர் பாஸ்' என குறிப்பிடப்படுகிறது.
 
புலிகளுக்கு எதிரான போர் காரணமாக மீன்கள் சாவு
ராமநாதபுரம், மீன்பிடித் தடைக்குப் பின் மன்னார் வளைகுடாவில் மீன்வளம் குறைந்து காணப்படுவதற்கு இலங்கையில் நடந்த போர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
உவர் நீர் இறால் பண்ணைகள் பதிவு முக்கியம் - தவறினால் நடவடிக்கை
விழுப்புரம் , உவர்நீர் இறால் பண்ணை உரிமையாளர்கள் அல்லது நீண்ட காலக் குத்தகையாளர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
ஸ்டெர்லைட் சார்பாக இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடி , தூத்துக்குடியை மையமாக் கொண்டு இயங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பாக இலவச மருத்துவ முகாம் சாமுவேல் புரத்தில் நடைபெற்றது.
 
நரேஷ் குப்தா மீது வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
மதுரை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை பணி நீக்கம் செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் பெரியார் நூல்களுடன் ஆன்மீக நூலகம்
சென்னை, தமிழகம் முழுவதும் பெரியார் நூல்களுடன் கூடிய 114 ஆன்மீக நூலகம் திறக்கப்பட்டுள்ளது என்று இந்து அற நிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
 
திருத்தணி முருகன் கோவில் தலை முடிகாணிக்கை: ரூ.15 கோடிக்கு ஏலம்
திருத்தணி, திருத்தணி முருகன் கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட முடி ரூ.1 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி சேகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டுக்கான முடி ஏலம் கோயில் அலுவலகத்தில்நேற்று நடந்தது. கோயில் இணை ஆணையர் தனபால்,சோளிங்கர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் வீரபத்திரன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், ரூ.1 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரத்துக்கு முடி ஏலம் எடுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட ரூ.60 ஆயிரம் அதிகம்.
 
பன்றிக்காய்ச்சல் பீதி 'எஸ்கேப்' ஆன மத்திய மந்திரி!
கோவை, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நோயாளிகளை பார்வையிட இருந்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் கோவை பயணத்தை திடீரென ரத்து செய்தார்.
 
கோவையில் 6 பேருக்கு பன்றிக் காய்சல் - டாக்டருக்கும் தொற்றியது.
கோவை, உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் மகன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சிகிச்சையளித்த பயிற்சி டாக்டருக்கும் இந்நோய் தொற்றியுள்ளது டாக்டர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
 

bala murali

unread,
Jun 5, 2009, 3:35:55 PM6/5/09
to tamila...@googlegroups.com
உயர் நீதிமன்றம் : 1 நிமிட செலவு ரூ.6 ஆயிரம்
புதுடெல்லி, புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் விசாரணைக்காக, நிமிடத்துக்கு ரூ.6000 செலவழிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ரூ.19,93,180 செலவரிக்கப்படுகிறது என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

அடேங்கப்பா...???

sangamam live

unread,
Jun 5, 2009, 8:21:41 PM6/5/09
to tamila...@googlegroups.com
சிறப்புப்பகுதி
பிரபாகரனும், சார்ளஸும் உயிருடன்..!!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ளஸ் ஆன்டனி மரண விஷயத்தில் இப்படியும்  இருக்குமா? விறுவிறுப்பான தமிழ் சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

சில தமிழ் படங்களில் கதாநாயகன்கள். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பார்களே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ளஸ் ஆண்டனிக்கள் இருக்கிறார்களாம்!
 

இலங்கை



ஆன்மீகம்



விளையாட்டு



சங்கமம் லைவ் செய்திகள்

இன்றைய செய்திகள்

ஈழமும் தமிழனும்.... முகமூடி
கச்சத்தீவில் இலங்கை ராணுவ முகாம் - தமிழக மீனவர்கள் கவலை
சர்ச்சைக்குரிய கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க இலங்கை அரசு முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அப்படி ராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தனியார் கல்லூரிகள் கல்விக் கொள்ளை: புகார் தெரிவிக்க அரசு கோரிக்கை
சென்னை, தனியார் மருத்துவக் கல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்தால், பொது மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகம் மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
ரெனால்ட் நிசான் கார்: அடுத்த ஆண்டு உற்பத்தி
சென்னை , ரெனால்ட் நிசான் கூட்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் கோலின் டோஜி தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியது:
அதிக கட்டணம் புகார், தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ்
புதுடெல்லி, மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 
புதுக்கோட்டைக்கு புது கலெக்டர்
சென்னை , புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக ஏ.சுகந்தி, நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
மேலும் 6 ஐஏஎஸ் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கண்ணொளி திட்டம்: 24 லட்சம் மாணவர்கள் பயன்
சென்னை, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8 வகுப்பு மாணவ, மாணவிகள் 24 லட்சம் பேருக்கு சுமார் ஐந்தரைகோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச கண் கண்ணாடிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
சமூகநலவாரிய தலைவி: சல்மா உறுப்பினராக தேர்வு
சென்னை, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
என்ஜினியரிங் கல்வி: என்.ஆர்.ஐக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு
சென்னை , சுயநிதி மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ.) இடஒதுக்கீடு உண்டு. என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் என்.ஆர்.ஐ. மாணவர்களை ஒவ்வொரு பிரிவிலும் 15 சதவீதத்திற்கு மேல் சேர்க்கக் கூடாது. மார்க் அடிப்படையில் தான் சேர்க்க வேண்டும்.

என்.ஆர்.ஐ. மாணவர்கள் என்.ஆர்.ஐ. சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது அந்த சான்றிதழில் இந்திய தூதரகத்தின் முத்திரை இருக்க வேண்டும்.
 
பிரபாகரனும், சார்ளஸும் உயிருடன்..!!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ளஸ் ஆன்டனி மரண விஷயத்தில் இப்படியும்  இருக்குமா? விறுவிறுப்பான தமிழ் சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

சில தமிழ் படங்களில் கதாநாயகன்கள். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பார்களே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ளஸ் ஆண்டனிக்கள் இருக்கிறார்களாம்!
 
தமிழறிஞர் இரா.திருமுருகனார் மறைவு
புதுச்சேரி, இலக்கணப் பெருங்கடலும், தமிழிசை புலவரும், செழிதமிழ் சிறப்பு ஆசிரியருமாகிய, புதுவை தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் அமைப்பாளருமாகிய இரா.திருமுருகன் (81) அவர்கள் 3.6.2009 அன்று இயற்கை எய்தினார். தமிழ் தேசிய சிந்தனையாளரும், தமிழீழ ஆதரவாளருமான ஐயா அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. புதுச்சேரி அரசு அவருக்குத் தமிழ்மாமணி விருதையும், தங்கப் பதக்கத்தையும், பொற்கிழியையும் வழங்கியது. அப்போது அவர் புதுச்சேரி அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் புதுச்சேரி அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பமிடாததால் அவர் புதுச்சேரி அரசு தனக்கு அளித்த விருதுகளை திருப்பி கொடுத்து விட்டார்.

பன்றிக்காய்ச்சல் பீதி 'எஸ்கேப்' ஆன மத்திய மந்திரி!
கோவை, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நோயாளிகளை பார்வையிட இருந்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் கோவை பயணத்தை திடீரென ரத்து செய்தார்.
 

கோழிப் பண்ணையில் தீ விபத்து 9 ஆயிரம் கோழிகள் கருகி சாவு
திண்டுக்கல், திண்டுக்கல் அருகே ஒரு கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 ஆயிரம் கோழிகள் கருகி செத்தது.
இன்டர்நெட்டில் அமெரிக்க அணுசக்தி ரகசியம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அணுசக்தி தொடர்பான விஷயம் இன்டர்நெட்டில் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. இதனால், ஆபத்து ஏதும் இல்லை என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
 
ரூபாய் ஒரு கோடி மின் திருட்டு: தொழிலதிபர்களுக்கு சிறை
புதுடில்லி , மின் திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபர்களான தந்தை - மகன் இருவருக்கும் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேற்கு டில்லியில், பிளாஸ்டிக் சைக்கிள் சக்கரங்களை உருவாக்கும் தொ ழிற்சாலையை வைத்திருப்பவர், பூனம் சந்த்.
 
நாய் பயம்: அறைக்குள் பதுங்கிய 85 ஆடுகள் மூச்சுத் திணறிசாவு
மரக்காணம், மரக்காணம் அருகே ஆட்டு பட்டிக்குள் நுழைந்த நாய்கள் கடித்துக் குதறியதால் பயந்து போன 85 ஆடுகள், அறைக்குள் பதுங்கிய போது மூச்சுத் திணறி இறந்தன.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி கோடீஸ்வரி(30). விவசாயக் கூலித் தொழிலாளிகளான இவர்கள் 88 ஆடுகள் வளர்த்து வருமானம் ஈட்டி வந்தனர்.கோடீஸ்வரி சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்து, பின்னர் தனது வீட்டின் அருகேயுள்ள கொட்டகையில் அடைத்து விட்டு, கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றார்.
 
திருப்பூர் மாவட்டத்தில் 250 மதுக்கடைகள்
திருப்பூர் , புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 250 அரசு மதுக்கடைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது திருப்பூர் மாவட்டத்தில் இப்போது அடங்கியுள்ள பகுதிகளில் ஏற்கனவே இருந்த கடைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
கோவில்பட்டியில் வேலை உறுதி: கூலி குறைப்பு தொழிலாளர்கள் கொதிப்பு
தூத்துக்குடி, கோவில் பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி குறைத்து வழங்கப்பட்டதைக் கண்டித்து கோவில் பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய நட்புறவு: ஒபாமா உறுதி
வாசிங்டன் , உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கெய்ரோவில் பேசியதைத் திசை திருப்பவே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இப்போது வெறுப்பைத் தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
நீதிபதி இட ஒதுக்கீடு முடியாது - வீரப்பமொய்லி
புதுடெல்லி , நீதித்துறையில் முழைுமையான இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று கடந்தவாரம் கூறியிருந்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இப்போது உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பணியிடங்களில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு: கூடுதலாக 6 மதுபான கம்பெனிகள்
சென்னை, தமிழ்நாட்டிலும் மேலும் 6 மது உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கு இசைவு அளிப்பது குறித்து நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் இந்த மது ஆலைகளுக்கு இசைவு அளிக்கப்படக் கூடும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
 
மாநகராட்சி ஐடிஐ: விண்ணப்பம் விநியோகம்
சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

bala murali

unread,
Jun 6, 2009, 2:55:50 PM6/6/09
to tamila...@googlegroups.com
தமிழ்நாடு: கூடுதலாக 6 மதுபான கம்பெனிகள்
சென்னை, தமிழ்நாட்டிலும் மேலும் 6 மது உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கு இசைவு அளிப்பது குறித்து நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் இந்த மது ஆலைகளுக்கு இசைவு அளிக்கப்படக் கூடும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
 
இருப்பது போதாதோ...??
:(

sangamam live

unread,
Jun 6, 2009, 5:35:53 PM6/6/09
to tamila...@googlegroups.com
அபுதாபியில் இன்னிசை மாலை
அபுதாபியில் இன்னிசை மாலை நிக‌ழ்ச்சி 12.06.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு அபுதாபி ம‌த்திய‌ பேருந்து நிலைய‌ம் அருகில் உள்ள‌ அல் வாஹா ரெஸ்டாரெண்ட் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.
 
100 நாட்களுக்குள் மகளிர் மசோதா: திராவிடர் கழகம் உறுதி
சென்னை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக நீதியை உள்ளடக்கிய பாலியியல் நீதியுடன் கூடிய மகளிர் மசோதாவை வரும் 100 நாட்களுக்குள்ளாக சட்டமாக்குவதற்கு திமுகவும், இந்தியாவின் சமூக நீதியில் ஆர்வமுடைய அரசியல் தலைவர்களும், ஓரணியில் திரளவேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை: வரலாறு புத்தகம்
சென்னை , ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கை வரலாறு புத்தக மாகிறது. காமினி மித்தாஸ் என்பவர் இதை எழுதுகிறார்.
 
சென்னை விமான நிலையத்தில் மோதல்: அழகிரிக்கு சோதனை
சென்னை , மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை உயர் ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய உயரதிகாரிக்கும் ஏற்பட்ட மோதலால் மத்திய அமைச்சர் அழகிரி, காரிலிலேயே காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முத்துவேலர்.கருணாநிதி அழகிரி, அமைச்சர் பொறுப்பேற்றப்பின்னர் நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அதிகாலை 6 மணி அளவில் மதுரை மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
தென் மாவட்ட வளர்ச்சி குறித்து அழகிரி பேட்டி
மதுரை , தென்மாவட்டங்களில் வளர்ச்சிக்காக ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரான பின்னர், மதுரைக்கு இன்று காலை வந்து சேர்ந்த மு.க.அழகிரி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்,பொது மக்கள் அளித்த அன்பான வரவேற்பினை பெற்றுக் கொண்டார்.
 
மெக்ஸிகோ தீ விபத்து - 30 குழந்தைகள் பலி
சோனோரா (மெக்சிகோ): வட மேற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தி்ல 29 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தன.

சோனாரா மாகாணத்தின் ஹெர்மோசில்லா என்ற இடத்தில் ஏபிசி டேகேர் சென்டர் எனப்படும் அந்தக் காப்பகம் அரசால் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். வேலைக்குப் போவோர் தங்களது குழந்தைகளை இங்கு விட்டுச் சென்று மாலையில் திரும்ப அழைத்துச் செல்வது வழக்கம்.
 
பாமக லிருந்து பேராசிரியர் ராமதாஸ் விலகல்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் பாமக எம்.பியும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரருமான ராமதாஸ் திடீரென பாமகவிலிருந்தும், அரசியலிருந்தும்  விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாமகவின் முக்கிய கொள்கைகள் வகுத்தலில் பங்காற்றியவர் பேராசிரியர் ராமதாஸ். பாமகவின் பிரபலமான மாதிரி பட்ஜெட்டுக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
 
இலங்கையின் மறு சீரமைப்பு: சீனா அறிவிப்பு
கொழும்பு, இலங்கையின் பொருளாதார மறு சீரமைப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சீனாவின் வர்த்தக அமைச்சர் லியாங்வென்டோ தெரிவித்துள்ளார்.
 
5773 ஆசிரியர் நியமனம்: தென் மாவட்டத்தில் பணி காலி இல்லை
சென்னை , இடைநிலை ஆசிரியர்களுக்கு தென் மாவட்டங்களில் காலி இடம் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5,773 இடை நிலை ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் முதல் முதலாக இடைநிலை ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை பணிநியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல். தேர்வு: இணையதளத்தில் ரிசல்ட்
சென்னை, பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி தொழில் நுட்ப உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தேர்வு முடிவு சென்னை கீழ்ப் பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள சென்னை டெலிபோன்ஸ் பொது மேலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப் பட்டுள்ளது. மேலும், சென்னை பிஎஸ்என்எல் இணையதளத்திலும் (www.chennai.bsnl.co.in) தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
 
தமிழக அரசு ஊழியர் படி உயர்வு: அரசு ஆணை வெளியீடு
சென்னை, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து படி உள்ளிட்ட பல்வேறு படிகளை (அலவன்ஸ்) உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
கண்ணகிக்கு காப்புரிமை: கேரளாவில் சர்ச்சை
திருவனந்தபுரம், வியாபாரத்துக்கு முக்கியமான டிரேட் மார்க் சின்னத்தைப் பதிவு செய்து, வர்த்தகக் காப்புரிமை வாங்கலாம். ஆனால், எல்லாராலும் அம்மனாகக் கும்பிடப்படும் கண்ணகிக்குக் காப்புரிமை வாங்க முடியுமா? இப்படி ஒரு சர்ச்சை, கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்கி ஊழியர்கள்: ஜூன் 12-ல் ஸ்டிரைக்
சென்னை , வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் ஜூன் 12-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் சி.எச். வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவில் 3.5 லட்சம் பேர் வேலை இழப்பு
வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 9.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நிலையற்றதன்மையும்தான் இந்த நிலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. கட்டுமானத் துறை, சேவைத் துறை, தொழில் துறை ஆகியவற்றில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
 
மருத்துவக் கல்வி அதிக நன்கொடை: பல்கலைக்கழக மானியக் குழு விசாரணை
புது தில்லி , தமிழகத்தில் உள்ள இரு தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் நன்கொடை கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இரு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடமிருந்து ரூ.12 முதல் 20 லட்சம் வரை நன்கொடை கேட்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
 
அண்ணாமலைப் பல்கலை: பி.இ,எம்.பி.பி.எஸ் சேர்க்கை தேதி நீட்டிப்பு
சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விற்பனை தேதி வருகிற ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
 
பால் பற்றாக்குறை போக்க ஆவின் நிர்வாகம் ஏற்பாடு
சென்னை, சென்னையில் பால் தேவையைச் சமாளிக்க, பாலைக் கையாளும் திறனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று "ஆவின்' நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது
எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் 3 நாளில் 12,500 விநியோகம்
சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களில் 12,500 எம்.பி.பி.எஸ். சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக மருத்துவக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
குடிகார டிரைவர் கைது: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
Reply all
Reply to author
Forward
0 new messages