கீதாசாரம் என்பது என்ன?

103 views
Skip to first unread message

Balaji Ramanujam

unread,
Sep 26, 2009, 4:00:31 AM9/26/09
to Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com


//பரவலாக காணப்படும் கீதாச்சாரம் என்பது கீதை புத்தகத்தில் இல்லையாமே!?//

கீதாச்சாரம் என்பது summary of the book என்று வைத்துக்கொள்ளுங்கள். சாரம் என்றாலே தொகுக்கப்பட்டது என்பது தான் பொருள். கீதையில் இருக்கும் மொத்தக்கருத்துக்களையும் வடிகட்டி அதன் அடிப்படை அம்சங்களில் தற்காலத்திற்கு தேவையான விஷயங்களை உபதேசிப்பவர்கள் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரனமாக அலுவலகத்தில் நீங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய ரிப்போர்டை சுருக்கமாக பார்த்தவுடன் புரியும்வகையில் சம்மரி தயாரித்து வெளிப்படுத்துவது இல்லையா. அப்படித்தான் கீதாச்சாரம் என்பதும். அது விளக்கமாகப் புரிய வேண்டுமானால் முழுகீதையையும் நீங்கள் படித்துப்பாருங்கள்.

//அப்படியானால் கீதை என்பது பலரால் புனைந்து எழுதப்பட்டதா!?//

கண்டிப்பாக புனைவு எதுவுக் இதில் கிடையாது என்பது உண்மை. ஏனென்றால் புனைவு என்றாலே பொய் புரட்டுக்களைச் சேர்த்தல் என்று பொருள் படுகிறது. அது நிஜ வாழ்கையில் பயனளிக்காமல் போகலாம். ஆனால் கீதையில் உள்ள யாவும் வாழ்க்கைத் தத்துவங்கள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வயதிலும் வாழ்ந்து பார்க்கும் போது அதன் உண்மைகளைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியும். எனவே நாம் வாழும் வாழ்க்கையே கீதைக்கான நிரூபானம் ஆகும்.

கீதோபதேசம் என்பது ஸ்ரீக்ருஷ்னர் போதித்தது என்பதையும் அர்ஜுனனுக்கும் ஸ்ரீக்ருஷ்னருக்கும் நடந்த உரையாடலில் சிதறிய முத்துக்கள் என்றும் நான் மனதார நம்புகிறேன். நான் நிஜப் பகுத்தறிவாளன் ஆகையால் சொல்கிறேன் என் கொல்லுப்பாட்டன் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக அவருக்கும் ஒரு பாட்டனார் இருந்தே இருப்பார். அந்தப் பாட்டனாருக்கும் ஒரு பாட்டனார் இருந்திருப்பார். இப்படி கண்டிப்பாக எல்லைகளை கற்பனை செய்ய முடியாத ஒரு மூலத்திலிருந்து தான் என் வரை தோற்றங்கள் நிகழ்ந்திருக்கும் இல்லையா.

இப்படி கண்ணுக்குத் தெரியாத நம் பாட்டனார்களை எப்படி நாம் நம்புகிறோமோ அப்படித்தான் நான் ஸ்ரீ க்ருஷ்ணரையும் நம்புகிறேன். யார் கண்டார். நான் கூட ஸ்ரீ க்ருஷ்ணரின் பல தலைமுறை தாண்டிய கொல்லுப்பேரனாகக் கூட இருப்பேன். நீங்கள் கூட இருப்பீர்கள். (டாவின்சி கோட் மாதிரி ஏதாவது புதிர் இருந்தால் கண்டுபிடிக்கலாமோ?) நம்பிக்கை தான் என்று சொல்வதற்கு நான் வெட்கப்படப்போவதும் இல்லை. நல்லதை கேள்வி இல்லாமல் நம்புவதில் தவறில்லை என்பது என் கருத்து. எது நல்லது என்பதை புரிந்து கொள்ளத்தான் பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் தவறில்லை.

ஆனால் எல்லாமே மூடநம்பிக்கை என்று பரிகாசிப்பதும் பகுத்தறிவிற்கு முரனானது என்பதையும் குறிப்பிட விரும்பிகிறேன். எனவே வால் அவர்களே, நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் நீங்கள் தைரியமாக கீதையை நம்புங்கள். ஒன்றும் குறைந்து போகாது.

//அப்படியே இருந்தாலும் போர் முனையில் கிருஷ்ணன் பண்ணிய அட்வைஸை யார் கூட இருந்து நோட்ஸ் எடுத்தது,

பயங்கரமா லாஜிக் இடிக்குதே!//

கருனாநிதி பேசுவதை எல்லாம் நோட்ஸ் எடுக்க பின்னாடியே வருஷக்கனக்கா ஒருவர் இருக்கிறாரே பார்த்ததிலையா? அற்ப மானிடருக்கே இப்படி ஒருவர் இருப்பாரென்றால், சர்வவல்லமை பொருந்திய பகவானும், துவாரகாபுரி அரசனுமான ஸ்ரீ க்ருஷ்னர் பேசுவதை நோட்ஸ் எடுக்க போர் முனையானாலும் பரவாயில்லை நான் எழுதுகிறேன் என்று சொல்ல ஒரு விசுவாசி கூடவா இருந்திருக்க மாட்டார்? லாஜிக் இடிக்கவே இல்லையே!.

மேலும் விதுரர் தன் ஞான த்ருஷ்டி மூலமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே திருதிராஷ்டிரனுக்கு போர்முனையில் நடந்தவைகளை உரைக்கவில்லையா? அவரே கூட நோட்ஸ் எடுத்திருக்க முடியாதா என்ன. இதெல்லாம் ஜுஜுபி மேட்டரு. மேலும் வியாசர் இந்த நோட்ஸையெல்லாம் பிள்ளையாருக்கு டிக்டேட் பண்ண எழுதினவர் பிள்ளையார் என்பதும் மகாபாரத வரலாறு தானே.

//மொத்த மகாபாரதமும் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட பெரிய நாவல்!//

அதான் சொன்னேனே பிள்ளையாரால் எழுதப்பட்டது என்று. சமீபத்தில் நடந்த அரசியலை புத்தகமாக்கினால் அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் வரலாறு. மகாபாரதமும் வரலாறே. சுமார் ஐயாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதிகாசம் என்றால் என்றால் என்ன தெரியுமா? இது நடந்தது என்று பொருள். சமஸ்கிருதத்தில் சொன்னதால் உங்களுக்கு புரியவில்லை அவ்வளவுதான்.

துவாரகாபுரி இருந்ததையும் நீரில் மூழ்கிய அதன் அழகான நகரங்களையும் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கண்டுபிடிப்பின் காலகட்டமும் மகாபாரதக் காலகட்டமும் ஒத்துப்போவதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்

நன்றி - பகுத்தறிவு
--
பாலாஜி
நீயே கல்...! நீயே உளி...! நீயே சிற்பி...!
Reply all
Reply to author
Forward
0 new messages